பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 2
குர்ஆன் பைபிள் ஒப்பீடு பாகம் 2
பாகம்1 இன் தொடர்ச்சி
உள்ளடக்கம்- ஆபேல் காயின் கதை
குர்ஆன்
மேலும், (நபியே!) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! அவ்விருவரும் குர்பானி (பலி)யை (அல்லாஹ்வின் பால் சமர்ப்பித்து) நெருக்கமாக வைத்த சமயத்தில் அவ்விருவரில் இருந்து அது அங்கீகரிக்கப்பட்டது, மேலும், மற்றவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படவில்லை, ஆகவே, “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (அங்கீகரிக்கப்படாதவர்) கூறினார், (அதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்) அவர் “அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் அங்கீகரிக்கப்பட்டது. பயபக்தியுடையவர்களிடம் இருந்துதான்” என்று கூறினார்.( அல்குர்ஆன் : 5:27)
(மேலும்) “நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னைக் கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல, (ஏனென்றால்) நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.) ( அல்குர்ஆன் : 5:28)
“என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்து கொண்டு (அல்லாஹ்விடம்) வருவதையே நிச்சயமாக நான் நாடுகிறேன், அவ்வாறாயின் நீ நரகவாசிகளில் உள்ளவனாகிவிடுவாய், இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்”, எனவும் கூறினார்.
(அல்குர்ஆன் : 5:29)
(இதன் பின்னரும்) அவர், தன் சகோதரரைக் கொலை செய்துவிடுவதையே அவருடைய மனம் அவரை எளிதாக்கியது, ஆகவே, அவரைக் கொலை செய்து விட்டார், அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் (உள்ளவராக) ஆகிவிட்டார். அல்குர்ஆன் : 5:30)
பின்னர், பூமியைத் தோண்டக்கூடிய ஒரு காக்கையை தன் சகோதரனின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்குக் காண்பிப்பதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான், (அது பூமியைத் தோன்றிற்று, இதனைக் கண்ட) அவர் “என்னுடைய கேட்டே இந்தக் காகத்தைப் போல் ஆவதற்குக் கூட இயலாதவனாக நான் ஆகிவிட்டேனா? அவ்வாறு (நான் இருந்திருந்தாலும்) என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேன்” என்று (அழுது) கூறி கைசேதப்படக்கூடியவர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார்.
(அல்குர்ஆன் : 5:31)
இதன் காரணமாகவே “எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தி(னைத் தடை செய்த)ற்காகவோ தவிர, (அநியாயமாக மற்றொருவரை) கொலை செய்கிறார்களோ அவர், மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போலவர் என்றும் எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழவைக்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவர் போவார். ” என்றும் இஸ்ரயீலின் மக்களின் மீது நாம் விதியாக்கப்பட்டு விட்டோம், மேலும், நமது தூதர்கள் பலர் நிச்சயமாக அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள், அப்பால் நிச்சயமாக அவர்களால் பெரும்பாலோர், இதற்குப்பின்னரும் பூமியில் வரம்பு கடந்தவர்களாய் இருந்தனர்.
(அல்குர்ஆன் : 5:32)
இங்கு குர்ஆன் அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வையும் அதன்காரணமாக இஸ்ராயீலின் பிள்ளைகள் மீது விதிக்கப்பட்ட சட்டத்தையும் பேசுகிறது.
1.மகன்கள் இருவரும் இறைவனுக்கு பலி செலுத்தினர். ஒருவர் பயபக்தியாளராக இருந்தார். அதனால் அவரிடமிருந்து பலியை ஏற்றுக்கொண்டான்.
2.பலி ஏற்றுக்கொள்ளப்படாத நபர், பொறாமைப்பட்டு தன் சகோதரனை கொல்லப்போவதாக அவரிடமே சொன்னார்.
3.அதற்கு அவர், நான் என்னை கொல்ல முயற்சித்தாலும், நான் அவ்வாறு உனக்கு செய்யமாட்டேன் என்றும், இவ்வாறு நீ செய்தால் உன் பாவத்தோடும் என் பாவத்தோடும் வந்து நரகவாசியாகிவிடுவாய் என்று கூறினார்.
4.ஆனாலும் அவர் தன் நல்ல சகோதரனை கொன்று விட்டார். அவர் மூலமாக வரும் முழு சந்ததிகளுமே முடிவு கட்டிவிட்டார்.
5.அப்போது இரு ஆண்கள் மட்டுமே இருந்ததால் (சிறந்த ஆதமும் அவரது கொலைகார மகனும்), தன் சகோதரனின் உடலை புதைத்து ஒரு காகத்தை அனுப்பிவைத்து குழிதோண்டி புதைக்கும் விதத்தை கற்பித்தான் இறைவன். அந்த மனிதனும் கைசேதப்பட்டவனாக ஆகிவிட்டார்.
6.இதன்காரணமாக தான், இஸ்ராயீலின் பிள்ளைகளுக்கு ஒரு உயிரை அநியாயமாக கொல்பவன் முழு மனிதர்களையும் கொன்றவன் போலவான் என்றும் ஒரு உயிரை வாழவைத்தவன் முழு மனிதர்களையும் வாழவைத்தவன் போலவான் என்ற சட்டத்தையும் வழங்கினான்.
பைபிள்
காயீன் முதலாவதாக ஆதாமுக்கு பிறந்தார்-ஆதி 4:1
பிறகு ஆபேல் பிறந்தார். அவர் ஆட்டுடையார் ஆனார். காயீன் விவசாயி ஆனாரம்-ஆதி4:2
பிறகொருநாள் காயீன் கனிகளையும், ஆபேல் சிறந்த ஆடுகளையும் பலியாகக் கொண்டுவந்தனர்.ஆபேலையும் ஆபேலின் காணிக்கையையும் கடவுள் ஏற்றுக்கொண்டார்.-ஆதி 4:3-4.
காயீனையும் அவனது காணிக்கையையும் கடவுள் ஏற்கவில்லை. இதனால் அவன் எரிச்சலடைந்தார்-ஆதி 4:5
கடவுள் அவனுக்கு, நன்மை செய்தால் மேன்மை உண்டு. நன்மை செய்யாவிட்டால் பாவம் உன் வாசல்படியிலிருக்கும். பாவத்தின் ஆசை உனக்காக இருக்கும். அதையே நீ ஆண்டுகொள்ள வேண்டும் என அட்வைஸ் பண்ணினார்- ஆதி 4:7
காயீன் ஆபேலை கொன்றுவிட்டார்-ஆதி 4:8
கடவுள் காயீனிடம் உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்று கேட்க , அவன் கடவுளையே கலாய்க்குற விதமாக பேசுறார்.. அதாவது நான் அவனுடைய காவலாளியோ என கடவுளிடமே கேட்டாராம்- ஆதி 4:9
தன் சகோதரனை அவர் கொன்றதற்காக கடவுள் அவரை சபிக்கிறார்,விவசாயத்திலும் அடிவிழும் என்கிறார். அத்தோடு நாடோடியாக இருப்பாய் என்றும் சாபம் கொடுத்தார்-ஆதி 4:11-12
அதற்காக காயீன், தன்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் தன்னைக் கொன்றுபோடுவான் என்று பயந்தானாம்- கர்த்தரும் காயீனை கொல்பவனுக்கு ஏழு பழி விழும் என்றதோடு, காயீனை கண்டுபிடிக்கிற எவனும் கொன்றுபோடாதபடி அவனுக்கு அடையாளத்தை கொடுத்தாராம் -ஆதி 4:14-15
¹⁴ "இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் இருந்து அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்."
¹⁵ அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
அடடே, இருந்ததே மூன்று ஆண்கள். ஆதாம் , காயீன், ஆபேல். இதில் ஆபேலை போட்டுத்தள்ளி விட்டார். இருக்குறது தகப்பனும் இவரும் மட்டும் தான். அப்படி இருக்க தன்னை இன்னொருத்தன் போட்டுத்தள்ளுவான் என்று பயந்தானாம். கடவுளும் அடையாளம் வேறு கொடுத்தாராம் அவனை கொல்லாதபடிக்கு. கொல்றதுக்கு தான் ஆளே கிடையாது.
அடுத்து கொலைக்கு கொலை செய்ய வேண்டும் என்ற சட்டம் வழங்கப்பட்டதே மோசேயிற்கு தான். பைபிள் பிரகாரம் இந்நிகழ்விற்கு 2600+ வருடங்களுக்கு பின்னால் தான் இத்தகைய சட்டமே கொடுக்கப்பட்டது..
தோராவின் பிரகாரம் அவனை கொல்வதற்கு தோராவே அப்போதிருக்கவில்லை. வரலாற்றை சரியாக படிக்காத ரபீ ஒருவரே இதை இவ்வாறு எழுதியிருக்க வேண்டும்.
¹⁶ "அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்."
¹⁷ "காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்." (ஆதி 4:16-17)
கர்த்தர், காயீன் பூமியில் நிலையற்றவனாக இருப்பான் என சாபமிட்டார். ஆனால் அவனோ நோத் தேசத்தில் குடியிருந்து, தன் மகனின் பெயரில் ஒரு பட்டணத்தையே உருவாக்கிவிட்டாராம்.
இதன்படி பைபிள் விழாவாரியாக கதைகூற முற்பட்டு, ஆளே இல்லாத இடத்தில் தன்னை இன்னொருத்தன் கொல்லுவான் என்றும் பழிவாங்கும் சட்டத்திற்கு இல்லாத 2600 வருடங்கள் முன்பே அது குறித்து பயப்பட்டாராம். அப்போது கர்த்தரும் ஆளே இல்லாத போது அவனை யாரும் கொல்லாதபடிக்கு அடையாளம் கொடுத்தாராம். ஆனால் வேடிக்கையாக அந்த சட்டம் வந்ததே எகிப்திலிருந்து மோசேயும் இஸ்ரவேலர்களும் புறப்பட்டபின்னால் தான்.
அத்தோடு, நாடோடியாக இருப்பாய் என்று சொன்னதும் நிறைவேறாமல் போனதாக இது சித்தரிக்கிறது .
இக்கதையிலே பைபிளில் நல்ல பாடங்கள் இருந்தாலும், இதே கதைவிசயத்தில் அறிவீனமும் கலந்திருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக