ஆதியாகமம் தொடர்- 4

 ஆதியாகமம் பாகம் 4

பாகம்3 இன் தொடர்ச்சி

உள்ளடக்கம்

12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார்.

13.சரீர மரணமா ஆத்ம மரணமா?



12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார் என கூறும் ஆதியாகமம். 

இதன்மூலம் ஆதாமின் பாவத்தினால் மரணம் பூமியில் நுழைந்ததாக கூறும் கிறிஸ்தவம் பொய்யாக்கப்படுகிறது.


¹⁷ ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதி 2:17


-இந்த பழத்தை சாப்பிட்டால் சாப்பிடும் நாளிலேயே மரணம் ஏற்படும் என தேவன் எச்சரிப்பதன் மூலம், மரணம் என்றால் என்ன என்று ஆதாம் அறிந்திருக்க வேண்டும். 

-அத்தோடு , மரணிக்கக்கூடியவனாக ஆதாம் படைக்கப்பட்டிருக்கிறார். அதனால் மரணத்தை குறித்து எச்சரிக்கப்படுகிறது.. மரணமற்றவனாக படைக்கப்பட்டிருந்தால், பழத்தை சாப்பிடுவதால் மரணம் ஏற்படப்போவதில்லை.

(உதாரணமாக சாவே இல்லாதவன் விசத்தை சாப்பிட்டால் இறப்பானா? நீ விசத்தை சாப்பிட்டால் இறப்பாய் என்று சொன்னால் அவன் மரணமற்றவனாக இல்லை என்று புரிகிறது.)


-மேலும் இதை தெளிவாக்கும் விதமாக, ஆதாம் மரணமற்ற வாழ்வை பெற வேண்டுமானால், ஜீவ மரத்திலிருந்து சாப்பிடவேண்டும் என்று ஆதி 3:22 கூறுகிறது.


“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"” — ஆதி 3:22 


-உயிர்த்தெழுதலின்பின்பு கூட ஜீவ மரத்திலிருந்து சாப்பிட்டால் தான் , மரணமற்ற வாழ்வை பெற முடியும் என யோவான் எழுதின வெளிப்படுதல் கூறுகிறது. அதாவது ஜீவ மர கனியை இயேசு வாக்களிக்கிறாராம் -வெளி 2:7

ஆனால் பவுலோ ஆதாமின் பாவத்தினால் தான் சகலரும் மரணிக்கிறார்கள் என்று எழுதிவைத்திருக்கிறார்- ரோமர் 5:12-14


ஆகவே கிறிஸ்தவத்தின் அடிநாதமே தப்பாக இருக்கிறது.


13.ஆத்மீக மரணமா சரீர மரணமா?


ஆதாம் பழத்தை சாப்பிட்டார்-ஆதி 3:6

கர்த்தர் சொன்னது போல (ஆதி 2:17) அதே நாளில் சாகவில்லை. மாறாக 930 வருடங்கள் வாழ்ந்து மரணித்தார் ஆதாம்- ஆதி 5:5.


ஆத்மீக மரணம் என்பது தேவசாயலை இழப்பதை குறிக்கும் என கருதினால், நோவா காலத்திலும் தேவசாயலில் தான் இருந்துள்ளனர்.(ஆதி 9:6)

“"மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது."”-ஆதி 9:6

  முதல் மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்ட படியினால், பிறப்பவர்கள் அனைவரும் தேவசாயலிலேயே பிறப்பார்கள். அதனால் தான் பிற்காலத்தில் பிறந்த மனிதனை குறித்தும் இவ்வாறு சொல்லப்படுகிறது.



தேவனோடிருந்த உறவை இழப்பதை குறிக்கும் என்று கருதினால், அப்போது கூட காயீனுடனும் கூட பேசிக்கொண்டிருந்தார்.(ஆதி 4:6-14)


பாவம் செய்யாத இயல்பை குறிக்கும் என்று கருதினால், அப்போது கூட அது தப்பாக தான் முடியும். தேவன் மனிதனை நன்மை, தீமை இரண்டையும் செய்யக்கூடியவிதமாக தான் படைத்திருந்தார். அதனால் தான் ஆதாம் தீமை செய்தார் . இல்லாவிட்டால் பாவம் செய்திருக்க மாட்டார்.


ஆதாமின் ஆத்துமா மரணமடைந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!


அப்படியாயின் சரீரம் மரணமடைந்ததா?

தேவனிடம் தவறு செய்துவிட்டு திருந்தி ஜெபம் செய்தால், தான் செய்ய நினைத்ததை செய்யாமல் மனதை மாற்றிக்கொள்பவராகவே பைபிள் சித்தரிக்கிறது.


¹³ "உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்."

¹⁴ அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்ளுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். (யாத்திராகமம் 32:13-14)

⁷ "பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,"

⁸ "நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்." (எரேமியா 18:7-8)


இவ்வாறே எசேக்கியா ராஜாவிடமும், நீ பிழைக்கமாட்டாய் இறந்துவிடுவாய் என்று சொன்ன போது , அவரும் ஜெபம் செய்தபோது , மேலதிகமாக 15 வருட ஆயுளை நீடிப்பித்தார்.- 2 இராஜாக்கள் 20:1-6, ஏசாயா 38:1-5.


இதுபோன்று ஆதாமும் மனந்திருந்தி மன்னிப்பு கேட்டதால் தான் ஆதாமின் ஆயுளும் நீடிக்கப்பட்டிருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவில்லை.


-உதாரணமாக சர்ப்பத்திற்கும் மனிதனுக்கும் ஏன் பகை ஏன் அது மனிதனை வஞ்சிக்க நினைத்தது என்பதெல்லாம் எப்படி இடம்பெறவில்லையோ அது போன்றே இதுவும்.


தேவன் ஆதாமின் மேல் கோபத்தில் நிலைத்திருக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக , தேவன் அவர்களுக்கு தோல் ஆடைகளை அணிவித்ததை கூறலாம்-ஆதி 3:21


ஆகவே சரீர மரணத்தையே தேவன் எச்சரித்தார். ஆனாலும் அது அதே நாளில் நிகழவில்லை.


பாகம்5

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்