பிணத்துடன் உடலுறவா?- மதவெறி மடையர்களுக்கு மறுப்பு

 பிணத்துடன் உடலுறவா?- மதவெறி மடையர்களுக்கு மறுப்பு 


ஒரு மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியார் சகரியா என்பவர் முகம்மது நபி அவர்கள் பிணத்துடன் உடலுறவு கொண்டார் என்று காமப்பிதற்றலை உலரினார். அது உலரப்பட்டு தசாப்தம் ஆன பின்பும் இன்றும் மதவெறி கும்பல்களால் இச்செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

முதலில் அச்செய்தி என்ன என்பதையும், அதை அவ்வாறு காமத்தனமாக புரிந்துகொள்ள என்ன காரணம் என்பவற்றை காண்போம்:


1.அந்த ஹதீஸ் என்ன என்று பார்ப்போம்: (அதன் தரம் ஆராயப்பட வில்லை)


- لمّا ماتت فاطمةُ أمُّ عليِّ بنِ أبي طالبٍ خلَع النَّبيُّ ﷺ قميصَه وألبَسَها إيّاه واضْطَجع في قبرِها فلمّا سُوِّي عليها التُّرابُ قال بعضُهم يا رسولَ اللهِ رأَيْناك صنَعْتَ شيئًا لم تصنَعْهُ بأحدٍ فقال إنِّي ألبَسْتُها قميصي لتُلْبَسَ مِن ثيابِ الجنَّةِ واضْطَجَعْتُ معها في قبرِها خفف عنها مِن ضَغْطةِ القبرِ إنَّها كانت مِن أحسنِ خَلْقِ اللهِ إليَّ صنيعًا بعدَ أبي طالبٍ

الراوي: عبدالله بن عباس • الهيثمي، مجمع الزوائد (٩/٢٦٠) • فيه سعدان بن الوليد ولم أعرفه وبقية رجاله ثقات‏‏ • أخرجه الطبراني في ((المعجم الأوسط)) (٦٩٣٥)، وأبو نعيم في ((معرفة الصحابة)) (٢٨٩)، والديلمي كما في ((الغرائب الملتقطة)) لابن حجر (٩٦٢) باختلاف يسير

அபூதாலிபின் மகன் அலீ(ர) அவர்களின் தாய் ஃபாத்திமா மரணித்த போது, நபி(ஸல்) அவர்கள் தமது சட்டையை கழற்றி அதை அவருக்கு (ஃபாத்திமாவுக்கு) அணிவித்து, அவருடைய கப்ரில் (உடல் அடக்கம் செய்யும் குழியில்) படுத்தார்கள். அதன்மீது மண்ணை போட்டு சமப்படுத்தியபோது,  சிலர், "அல்லாஹ்வின் தூதரே!மற்ற யாருக்கும் நீங்கள் செய்யாததொன்றை நீங்கள் செய்ததை கண்டோமே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் , "நான் என் சட்டையை அவருக்கு அணிவித்ததற்கு காரணம், அவருக்கு சுவர்க்கத்து ஆடை அணிவிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆகும். அவருடைய கப்ரில் (அடக்கம் செய்யும் குழியில்) அவருடன் படுத்தேன் அதற்கான காரணம், கப்ருடைய நெருக்கம் அவருக்கு இலகுபடுத்தபடுவதற்காக ஆகும். நிச்சயமாக அவர் (ஃபாத்திமா) அபூதாலிபுக்கு பின் எனக்கு அல்லாஹ்வின் சிறந்த படைப்பாக இருந்தார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ர)

நூல்கள்:ஹைதமீ அவர்களின் மஜ்மஉஸ்ஸவாயித் (9/260), தபரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் (6935), அபூநுஐமின் மஃரிஃபதுஸ்ஸஹாபா 289, .



இதில் கப்ரில் படுத்ததாக தான் உள்ளது. 


2.ஏன் இவ்வாறு கதை கட்டவேண்டும்?

அரபியில் 

اضطجع என்பது சாதாரணமாக சாய்ந்து படுத்தான் என்பது தான் அர்த்தம். எல்லா அரபு அகராதிகளிலும் இது தான் அர்த்தம் 

واضطجعت معها في قبرها என்றால் அவளுடைய கப்ரில் அவளுடன் சாய்ந்து படுத்தேன் என்பது தான் அர்த்தம்.


உடலுறவை குறிப்பதற்கு 

ضاجع என்ற வார்த்தை பாவிக்கப்படும். اضطجع என்பது உடலுறவை குறிப்பது அல்ல!



ஆனால் இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பாதிரியார் இதை "அவளுடன் அவளுடைய கப்ரில் உடலுறவு கொண்டேன்" என்று கேவலமாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.  


அரபியில் இவ்வாறு இல்லாவிட்டாலும் ஏன் இவர் இப்படி லூசுத்தனமாக புரிந்துகொண்டார் என்று பார்க்கும்போது தான் ஆச்சரியம்.  ஏனென்றால் பைபிளில் இந்த வாசகம் உடலுறவை குறிக்க பாவிக்கப்பட்டுள்ளது என்பது தான்.


எபிரேயத்தில் שכב -சாகப் என்றால் படுத்தான் என்று அர்த்தம். இதை அரபு மொழியாக்க பைபிளில் اضطجع என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

இந்த எபிரேய வார்த்தை செக்ஸ் அர்த்தத்திலும் பாவிக்கப்படும். சாதாரணமாக படுத்துக்கொண்டான் என்ற அர்த்தத்திலும் பாவிக்கப்படும்.

ஆனால் அரபு மொழியில் اضطجع என்பது அவ்வாறு அல்ல... அது சாதாரணமாக படுத்துக்கொள்வதை மட்டுமே குறிக்கும். ஆனாலும் பைபிளை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும் போது, அந்த  வார்த்தை உடலுறவை குறிப்பதாக அவருக்கு தென்பட்டதால் லூசுத்தனமாக மதவெறியால் இவ்வாறு புழுகினார்.

 

உதாரணமாக ஆதியாகமம் 19:33

‫اَلتَّكْوِينُ 19:‏33 AVD‬

[33] فَسَقَتَا أَبَاهُمَا خَمْرًا فِي تِلْكَ ٱللَّيْلَةِ، وَدَخَلَتِ ٱلْبِكْرُ وَٱضْطَجَعَتْ مَعَ أَبِيهَا، وَلَمْ يَعْلَمْ بِٱضْطِجَاعِهَا وَلَا بِقِيَامِهَا.


https://bible.com/bible/13/gen.19.33.AVD

அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்: அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

ஆதியாகமம் 19:33

இங்கே மகள்மார் தம் தகப்பனுக்கு மதுபானத்தை குடிக்க கொடுத்து, அவரோடு உடலுறவு கொண்டதை குறிக்க அரபியில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வசனங்களை வைத்து இப்படி அரைவேக்காட்டுத்தனமான முடிவுக்கு வந்துவிட்டார்.

அது பைபிளின் எபிரேய மொழிநடை மட்டுமே.. அரபிய மொழிநடை அல்ல!


ஆனாலும் பைபிளிலும் இவ்வார்த்தை படுத்துக்கொள்வதை (மரணித்தல் ) குறிப்பதற்கும் பாவிக்கப்பட்டுள்ளது 


‫اَلتَّكْوِينُ 47:‏30 AVD‬

[30] بَلْ أَضْطَجِعُ مَعَ آبَائِي، فَتَحْمِلُنِي مِنْ مِصْرَ وَتَدْفِنُنِي فِي مَقْبَرَتِهِمْ». فَقَالَ: «أَنَا أَفْعَلُ بِحَسَبِ قَوْلِكَ».

https://bible.com/bible/13/gen.47.30.AVD

நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.

ஆதியாகமம் 47:30

‫اَلْمُلُوكِ ٱلثَّانِي 4:‏34 AVD‬

[34] ثُمَّ صَعِدَ وَٱضْطَجَعَ فَوْقَ ٱلصَّبِيِّ وَوَضَعَ فَمَهُ عَلَى فَمِهِ، وَعَيْنَيْهِ عَلَى عَيْنَيْهِ، وَيَدَيْهِ عَلَى يَدَيْهِ، وَتَمَدَّدَ عَلَيْهِ فَسَخُنَ جَسَدُ ٱلْوَلَدِ.


https://bible.com/bible/13/2ki.4.34.AVD


எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்து, கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல்கொண்டது.

2 இராஜாக்கள் 4:32-34


இதுபோன்று ידע யதஃ என்ற எபிரேய வார்த்தை "அறிந்தான்" என்று அர்த்தம். அரபியில் "عرف" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதுவும் பைபிள் பாசையில், உடலுறவு கொண்டான் என்ற அர்த்தம் உடையது.

உதாரணமாக ஆதியாகமம் 4:1 இல்,


ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

ஆதியாகமம் 4:1

‫اَلتَّكْوِينُ 4:‏1 AVD‬

[1] وَعَرَفَ آدَمُ حَوَّاءَ ٱمْرَأَتَهُ فَحَبِلَتْ وَوَلَدَتْ قَايِينَ. وَقَالَتِ: «ٱقْتَنَيْتُ رَجُلًا مِنْ عِنْدِ ٱلرَّبِّ».

https://bible.com/bible/13/gen.4.1.AVD

இதை வைத்து அறிந்தான் என்றாலே பாலியல் கலவி என்று புரிந்துகொண்டால் எப்படி இருக்கும்?


எபிரேய மொழி நடையை எபிரேய மொழிக்கு தான் பாவிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வேறு மொழிச் சொல்லுக்கு இது போன்று லூசுத்தனமாக அர்த்தம் செய்வது மடத்தனமாகும்.



.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்