அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்
1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது
--மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான் (குர்ஆன் 76:3)
--மனிதனுடைய ஆத்மாவுக்கு நன்மையையும் தீமையையும் அறிவித்துக் கொடுத்துள்ளான். அதை பரிசுத்தப்படுத்திக்கொள்பவர் வெற்றிபெற்றவர்-குர்ஆன் 91:7-10
-இறைவன் ஒரு கூட்டத்தையும் அவர்களுக்கு நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டியவற்றை தெளிவாக்காமல் வழிதவறச்செய்வதில்லை (குர்ஆன் 9:115)
இதன்படி அனைவருக்கும் நேர்வழி தெளிவாக்கப்பட்டே உள்ளது.
2.அல்லாஹ் வழி தவற செய்வதன் விளக்கம்
-அவர்கள் சத்தியத்தை அறிந்துகொண்டே சறுகியபோது அல்லாஹ் அவர்களது இதயங்களை சறுக செய்தான் (குர்ஆன் 61:5)
-நேர்வழி இன்னதென்று தெளிவான பின்பு இத்தூதருடன் முரண்பட்டு விசுவாசிகளின் வழியல்லாததை எவர் பின்பற்றுகிறாரோ அவனை அவன் திரும்பிய வழியிலேயே திருப்பி விட்டு நரகத்தில் நுழைவிப்போம் (குர்ஆன் 4:115)
-ஸமூது கூட்டத்தினருக்கு நல்வழி காட்டினோம். ஆனாலும் அவர்கள் குருட்டுத்தன்மையை விரும்பினார்கள் (குர்ஆன் 41:17)
இப்படி இறைவன் நேர்வழியை காட்டிய பின்பு, வழி கேட்டை தெரிவு செய்பவனையும், சத்தியத்தை அறிந்துகொண்டே மறுப்பவனையும் இதுபோன்ற குற்றவாளிகளையும் பொய்யர்களையும் இறைவன் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழியிலே விட்டுவிடுகிறான்.
3.இதன் முழு குற்றமும் அத்தகைய செயல்களை செய்யும் மக்களேயன்றி இறைவன் அல்ல.
அதனால் தான் நரகம் செல்லும் பாவிகள் தம் பாவங்களை ஒப்புக்கொள்வதோடு (குர்ஆன் 67:11), நாங்கள் தாம் மறுத்தோம் என்றும் தூதர்கள் சொல்வதை நாம் கேட்டு சிந்தித்தித்திருந்தால் நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் என்றும் (குர்ஆன் 67:9-10), அநியாயக்காரனாகியவன் மறுமையில், நானும் அத்தூதருடன் நேரான வழியை எடுத்திருக்க கூடாதா? என்னை நல்லுபதேசம் வந்த பின் வழிகெடுத்த அவனை நண்பனாக எடுத்திருக்காதிருக்க வேண்டாமா? என புலம்புவான் (குர்ஆன் 25:27-29), அத்தோடு நரகத்தில் முகங்கள் புரட்டப்படும்நாளில் , நாங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! என் கூறுவார்கள் என்றும் நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் (அதிகாரிகளுக்கும்), எங்கள் பெரியவர்களுக்கும் (அறிஞர்கள்/மதகுருக்கள்) கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள் என்றும் கூறுவார்கள் (குர்ஆன் 33:66-67)
விரும்பியவர் ஈமான் கொள்ளலாம். விரும்பியவர் நிராகரிக்கலாம். நிராகரிப்பாளர்களுக்கு தண்டனை உண்டு.
ஆகவே முழு குற்றமும் அதை செய்தவர்கள் மீதே
4.இறைவன் வழிகெடுக்கிறான் என்று கூறப்படுவது ஏன்?
-இறைவன் நாடியவர்களை வழிகெடுக்கிறான் என்பது இறைவனே சர்வக்தியுடையவன் என்பதாலும் அவன் அறியாமல் அனுமதிக்காமல் எதுவுமே நடக்காது என்பதாலும் அவனே சுயதேர்வை கொடுத்து வழிகேட்டை தெரிவு செய்யும் உரிமையும் வழங்கி , அதனை செயற்படுத்த ஆற்றலையும் வழங்கியிருக்கிறான் என்பதினாலாகும். மற்றபடி அவன் யாரையும் நிர்ப்பந்தித்து வழி கேட்டை திணிப்பதில்லை.
அத்தோடு படைப்பதற்கு முன்பே யார் நேர்வழி பெறுவார் யார் வழிகெடுவார் என்று அறிந்து கொண்டே படைத்தான். தான் அறிந்துள்ளபடியே வழிகெடுபவர்களை வழிகெடுபவார்கள் என்று அறிந்தே படைத்ததையும் இது உள்ளடக்கும்.
இங்கே இறைவனது முன்னறிவின்படியான விதி, சட்டரீதியான விதி என இரண்டு உள்ளது.
தன் முன்னறிவின் படி வழிகெட்டுப்போகிறவனை வழிகெட்டு போக அனுமதிப்பான். அது அவனது அநீதி அல்ல. ஏனெனில் யாருக்கும் அவன் அநீதி இழைக்க மாட்டான்(குர்ஆன் 4:40,10:44,18:49). தான் விரும்பியோரை நேர்வழியில் செலுத்துவான் என்பது அவனது கருணை.
ஆனால் சட்டரீதியான தீர்மானத்தின்படி நேர்வழியை நோக்கி அழைப்பான் தூதர்களை அனுப்பி நேர்வழி தெளிவாக்குவான்(குர்ஆன் 10:74,16:36, 35:37) அநேக வசனங்கள்).. அதன்படியே குற்றவாளிகளை சிலபோது இம்மையிலும் நிச்சயமாக மறுமையிலும் தண்டிப்பான்.
இதன்காரணமாகவே தன் கருணையில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அனைத்து பாவங்களையும் மன்னித்து விடுவேன் என்று அழைப்பதோடு மறுமை வருமுன் அல்லது அழிவு வருமுன் திருந்தி வருமாறு அழைக்கிறான் (குர்ஆன் 39:53-59), அவன் நேரான வழியில் செலுத்தவும் மன்னிக்கவுமே விரும்புகிறான் (குர்ஆன் 4:26-27).
குற்றவாளிகள் திருந்தி வருவதற்காகவே இவ்வுலகிலே தண்டனை வழங்குவதாகவும் (குர்ஆன் 32:21), இதுபோன்றே ஃபிர்அவ்னும் திருந்தி வரவேண்டும் என்பதற்காகவே அவனிடமும் தூதரை அனுப்பி நளினமாக பேசவைத்து (குர்ஆன் 20:44), அவன் மறுத்து பெருமையடித்தபோதும் திரும்பி வருவதற்காக தண்டனைகளை அனுப்பியதாக (குர்ஆன் 43:48) குர்ஆன் கூறுகிறது .
ஆக வழிகேட்டுக்குத்தகுதியானவனை அவனது சுய தேர்வின் படி வழிகெட்டுப்போவதற்கு அனுமதிக்கிறார்.
நேர்வழியில் இருப்பவரை அநீதமாக வழிகெடுப்பதில்லை. அவனாக தப்பான வழியை தேர்ந்தெடுக்கும் போது அவனை வழிதவற செய்கிறான். அதற்கு முன்பு அவன் மீது வழிகேட்டை திணிப்பதில்லை!
5.இறைவன் தான் சைத்தானை வழிகெடுத்தானா?
சைத்தானை வழிகெட செய்ததும் அவ்வாறே. அவன் ஸுஜூத் செய்யுமாறு கட்டளையிடப்பட்டு சோதிக்கப்பட்டபோது, அவன் தன் சுய தேர்வின் படி மறுத்தான் பெருமையடித்தான்.(2:34, 7:11-12, 15:29-31, 17:61, 18:50, 20:116)
இறைவன் அவ்வாறு நடக்கும் என அறிந்தும் கட்டளையிட்டான். இதன்மூலம் அவனது வழிகேடு வெளிரங்கமானது. அதனாலே சைத்தான் இறைவனிடம் நீ என்னை வழிதவறி செய்தாய் என்று சொன்னான். காரணம் முழு அதிகாரமும் ஞானமும் இறைவனிடமே உள்ளது என்பதாலும் இவன் வழிதவறுவான் என அறிந்தும் சிரம்பணியுமாறு கட்டளையிட்டான் என்பதையும் அவன் வழிகெடுவான் அறிந்தே படைத்தான் என்பதையும் குறிக்கிறது.
ஆனாலும் இங்கே அவன் தன் சுய இச்சையை பின்பற்றியதாலேயே இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்தான்.
6.கர்த்தர் வழிகெடுக்கிறாரா இல்லையா?
1 பேதுரு 3:9 இலே இயேசுவின் வயுகை லேட் ஆக காரணம், எல்லோரும் திருந்தவேண்டும் என கர்த்தர் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளார் பேதுரு.
கர்த்தர் வர தாமதிப்பதே அதிகமான மக்கள் நரகம் செல்வதற்கு காரணமாக இருக்கிறது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமலேயே இதைஎழுதியுள்ளார் .
கிபி 70இற்கு முன் இயேசு வந்திருந்தால், அவிசுவாசிகள் அப்போது இருந்தது சொற்பமாக இருந்திருப்பார்கள். இப்போதோ அவர்கள் தொடக்கம் இன்றுவரை பல ஆயிரம் மடங்கு அவிசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிய இருக்கிறது. இதன்படி நரகத்தையும் நிரப்பும் அளவுக்கு தாமதிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது
-வேடிக்கையாக இயேசுவின் வாக்குறுதி பொய்யானது என இதனாலே நம்பி அவிசுவாசியாக கெட்டுப்போகிறவர்கள் இன்னும் அதிகரிக்கின்றனர்
-தேவன் அவிசுவாசிகள் விசுவாசிப்பதற்காக பரிசுத்த ஆவியை அவர்கள் மீது அனுப்புவதில்லை.. மாறாக பொய்யை விசுவாசிக்கும்படி வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12 (இங்கே வழிகெடுப்பதற்காக வஞ்சகத்தை அனுப்புபவரே தேவன் என பவுல் சொல்கிறார்)
இது தான் தேவன் ஒருவரும் கெட்டுப்போகாதபடி தாமதிப்பது.
-இஸ்ரவேலரை நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தியதும் அவரே எசேக்கியேல் 20:26. இது தான் கெட்டுப்போகாதபடி தாமதிப்பது- (இங்கே இஸ்ரவேலர் தம் பிள்ளைகளை நரபலி கொடுத்ததை, நானே செய்வித்தேன். நானே அவர்களை தீட்டுப்படுத்தினேன் என கர்த்தர் சொல்கிறார்)
-விசுவாசிக்காதபடி இருதயத்தை கடினப்படுத்தி வழி தப்பி போகப் கட்டுவதும் அவரே- ஏசாயா 63:17, யோவான் 12:40 (இங்கே வழி தவற காரணம் தேவன் தான் வழிதவற வைத்தார் என்றும் பயப்படாதபடிக்கு இதயத்தை கடினப்படுத்தினார் என்றும் ஏசாயா ஜெபம் கூறுகிறது 63:17)
-எகிப்திய மக்களின் இதயத்தை வஞ்சனையாக நடக்கும்படி மாற்றியதே தேவன் தான் என சங்கீதம் 105:25 கூறுகிறது.
-பார்வோன் தன் இருதயத்தை கடினப்படுத்தியதையும், வேறு ராஜாக்கள் தம் இதயத்தை கடினப்படுத்தியதையும் தேவன் தான் கடினப்படுத்தினார் என்றே பைபிள் கூறுகிறது (யாத்திராகமம் 9:12, உபாகமம் 2:30)
இப்படி தேவன் தானே வழிகெட்டுப்போகப்பண்ணுகிறார் என தெளிவாக பைபிளே கூறுகிறது.
இது தான் கெட்டுப்போகாதபடி தாமதிப்பது
-தன்னை ஏற்காத யூதர்களை இயேசு திருந்தாமல் மன்னிக்கப்படாமல் இருக்க விரும்பி உவமையாக பேசுவதாக அவரே வாக்குமூலம் கொடுக்கிறார் - மாற்கு 4:11-12
ஆக என்னவோர் நல்லெண்ணம்.
இது போன்றவற்றில் தனக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:
ரோமர் 9:18-23 IRVTam
[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?
https://bible.com/bible/1899/rom.9
.18-23.IRVTam
அதாவது தேவனுக்கு இஷ்டமானபடி படைக்கிறதுக்கு உரிமை உண்டு என்றும் இஷ்டமானபடி நடந்துகெள்வதற்கு உரிமை உண்டு என்றும் அதை கேள்வி கேட்கிற உரிமை மனிதர்களுக்கு கிடையாது என்றும் பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் சமாளிப்பை விட இஸ்லாம் கூறும் விளக்கம் தெளிவாகவே உள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக