யூதர்கள் யார்? -இஸ்லாமும் பைபிளும் கூறுவது என்ன
இஸ்லாமும் பழைய
ஏற்பாடும் புதிய
ஏற்பாடும் யூதர்களை பற்றி என்ன கூறுகிறது
இஸ்லாம்:
1*முகம்மது நபியிற்கு முன்புள்ளவர்களின் மறுமை நிலை:
ஈமான்கொண்டவர்களிலும்
(முஸ்லிம்கள்)
,யூதர்களிலும்,
கிறிஸ்தவர்களிலும்,
ஸாபிஈனிலும் எவர்கள் அல்லாஹ்வையும் மறுமையையும் விசுவாசம் கொண்டு, நற்செயல் செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் நற்கூலி உண்டு.
(மறுமையில்)
அவர்கள் அச்சப்படவும் மாட்டார்கள். கவலைப்படவும் மாட்டார்கள் (2:62&5:69)
முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான சுவர்க்கம் நுழைபவர்கள் மூஸாவின் சமூகம் (யூதர்கள்) தான் என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள். (புகாரி 5705)
2*முகம்மது நபியிற்கு முன்பு, யூதர்கள் முழு மனிதர்களிலும் இறைவனால் மேன்மையாக்கப்பட்டிருந்தார்கள்:
இஸ்ராயீலின் பிள்ளைகளே! உங்கள் மீதான என் அருட்கொடைகளையும்,
நான் உங்களை அகிலத்தார் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்தேன் என்பதையும் நினைவுகூர்ந்துபாருங்கள் (2:47)
3*யூதர்கள் தமக்கு விருப்பமில்லாததை இறைவனின் தூதர்கள் கொண்டுவந்தபோது அவர்களில் சிலரை மறுத்தனர். வேறுசிலரை கொன்றனர்:
மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம்.
அவருக்கு பின் தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். இன்னும் மர்யமின் மகன் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொடுத்தோம். அவரை பரிசுத்த ஆவி மூலம் பலப்படுத்தினோம். உங்கள் மனம் விரும்பாததை ஒரு தூதர் கொண்டுவந்தபோதெல்லாம், நீங்கள் கர்வம் கொண்டீர்கள். மேலும் சிலரை பொய்யாக்கினீர்கள். சிலரை கொன்றீர்கள். (2:87)
(இங்கே அவர்கள் ஒரே இனமாக கருதப்படுகிறார்கள்)
இவ்வாறே இறுதியாக முகம்மது நபியையும் கொல்லுவதற்காக விசம் தடவிய ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக வழங்கினர். (புகாரி 5777)
4*எல்லா யூதர்களும் ஒரே மாதிரி இல்லை:
வேதக்காரரில் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களிடம் நீர் ஒரு (பொற்)குவியலை ஒப்படைத்தாலும்
, அதை உம்மிடம் திருப்பி ஒப்படைப்பார்கள்.
அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களிடம் ஒரு தீனாரை ஒப்படைத்தாலும்
, நீர் அவர்களிடம் அதை தொடர்ந்து கேட்டாலொழிய திருப்பி தரமாட்டார்கள்.
அதற்கு காரணம், "பாமரர்களிடம் நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை"
என அவர்கள் கூறுவது தான். (3:75)
அவர்கள் எல்லோரும் சமம் அல்ல! வேதக்காரர்களில் ஒரு சமூதாயத்தினர் நேர்மையாக இருக்கிறார்கள்
(3:113)
அவர்களில் சிலரைத் தவிர, எப்போதும் ஏதேனும் மோஷடியிலேயே இருந்துகொண்டிருப்பதை காண்பீர். இவர்களை மன்னித்து புறக்கணித்துவிடுவீராக (5:13)
5*யூதர்கள் ஈஸா நபியை கொல்ல திட்டம் தீட்டியதால், யூதர்களைவிட ஈஸாவை பின்பற்றியோர் மறுமை வரை மேலோங்கி இருப்பார்கள்.
(குர்ஆன் 3:55) அத்தோடு அவர்கள் மீது இழிவு, ஏழ்மை அல்லாஹ்வின் கயிற்றையும் மனிதர்களின் கயிற்றையும் கொண்டில்லாவிடில் மறுமை வரை நிலைத்திருக்கும். காரணம் அவர்கள் இறைவனுடைய வசனங்களை மறுத்து நபிமார்களை கொன்றதினால் ஆகும்.(3:112)
அதாவது அல்லாஹ்வின் கயிற்றினை கொண்டு பாதுகாப்பு பெற்றாலோ (இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா கட்டுவதன் மூலம்-அப்படி கட்டினால் இஸ்லாமிய அரசு அவர்களுக்காகவும் போரிடும்
(புகாரி
3052)), மனிதர்களின் கயிற்றினை கொண்டு பாதுகாப்பு பெற்றாலோ தவிர எப்போதும் இழிவு இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் அவர்களின் மனதில் ஏழ்மை இருந்துகொண்டேயிருக்கும்.
இப்போது கூட அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள் போடும் பிச்சையிலேயே அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதன்மூலமும் அவர்கள் மறுத்த அதே ஈஸாவை பின்பற்றியவர்களின் கீழாலேயே இருக்கிறார்கள்.
6*முஸ்லிம்களுடனான பகைமை:
மனிதர்களிலேயே முஃமின்களுக்கு பகைமையால் மிக கடுமையானவர்களாக யூதர்களையும் , இணைவைப்போரையும் காண்பீர்.
அவர்களில் நேசத்தால் மிக நெருக்கமானவர்களாக தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறுவோரை காண்பீர். காரணம் அவர்களில் கற்றறிந்த குருமார்களும் துறவிகளும் இருக்கின்றதாலும் அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள் என்பதாலும் ஆகும் (5:82) -(முறையாக கற்ற குருமார் இல்லாவிட்டால் பெருமைக்காரர்கள் குருமாராக இருந்தால் அப்போது கிறிஸ்தவர்களும் பகைமையை காட்டுபவர்களாகவே இருப்பர்- அதுவே சிலுவைப்போர்களுக்கு காரணம்)
7.யூதர்கள் பூமியில் இரண்டு தடவை குழப்பம் செய்வார்கள் என்றும் என தவ்ராத்தில் விதிக்கப்பட்டது:
முதலில் குழப்பம் செய்தபோது அவர்களுக்கு எதிராக வலிமையான அடியார்கள் (பாபிலோனியர்) ஏவிவிடப்பட்டார்கள். அதன்பின் மீண்டும் யூதர்களுக்கு செல்வமும் பிள்ளைகளும் அதிகமாக கொடுக்கப்பட்டனர்.
இரண்டாவது தடவையாக குழப்பம் செய்த போது முதல்தடவையில் ஆலயத்தில் நுழைந்ததுபோல இரண்டாவது தடவையும் நுழைந்து அதை முற்றாக அழித்துவிட்டனர் (இது ரோமர்களால் நடந்தது.)-17:5-7
இதன்பின் இறைவன் மீண்டும் எச்சரித்தான்: "உங்கள் இறைவன் உங்கள்மீது கருணைபுரியக்கூடும்.
நீங்கள்
(குழப்பத்திற்கு)
திரும்புவீர்களானால் நாமும் (முன்புபோல தண்டிப்பதற்கு) திரும்புவோம். மேலும் காஃபிர்களுக்கு நரகத்தை சிறைச்சாலையாக ஆக்கியுள்ளோம். (17:8)
இவ்வசனத்தில் குறிப்பிட்டது போன்றே,
யூதர்கள் குழப்பம் செய்த போது முஹம்மது நபி மூலம் வரிகட்டுபவர்களாக கீழ்படுத்தப்பட்டார்கள்.
தற்போது 1948 இலிருந்து மீண்டும் பூமியில் குழப்பம் செய்ய தொடங்கியுள்ளார்கள். நபிகளாரின் முன்னறிவிப்பின்படி தஜ்ஜாலின் வருகைக்கு முன்னதாகவே புனித இடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுவார்கள்.
8*யூதர்களின் இறுதி முடிவு:
யூதர்கள் உங்களோடு போர்புரிவார்கள்.அவர்கள்மீது உங்களுக்கு வெற்றியளிக்கப்படும். அப்போது கல், "ஓ முஸ்லிமே! என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். அவனை கொல்" என்று சொல்லும். (புகாரி 3593)
இது இஸ்ஃபஹானிலிருந்து தஜ்ஜாலை பின்பற்றும் 70,000 ஆயுதம் தரித்த யூதர்களை குறிப்பதாக ஸஹீஹ் ஜாமிஉ 7875 இலே விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏனைய யூதர்கள் ஈஸா நபியை முறையாக ஈமான்கொள்வார்கள் (குர்ஆன் 4:159- "வேதக்காரரில் எவரும் (ஈஸாவாகிய) அவரின் மரணத்திற்கு முன் அவரை ஈமான் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்)
ஆக யூதர்களிலுள்ள போர்க்குற்றவாளிகள் இறுதியில் முற்றாக அழிக்கப்படுவதோடு ஏனையோர் முஃமின்களாவார்கள் என்பதே இஸ்லாம் கூறுவது.
(ஆனால் இஸ்லாமிய அரசின் கீழுள்ள மாற்றுமத (யூத/கிறிஸ்தவர்/மஜூஸிகள்)
ஒப்பந்தப்பிரஜையை நியாயமின்றி கொன்றால், கொன்றவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான்-புகாரி 3166
இஸ்லாம் போர்க்களத்திலும் பெண்கள்,சிறுவர்கள் போன்றோரையும் (புகாரி 3014-3015),
போரிடாத கூலியாட்களையும் கொல்லக்கூடாது (அபூதாவூத் 2669) என் இஸ்லாம்
குறிப்பிடுகிறது. )
புதிய ஏற்பாடு:
1*- இயேசுவை ஏற்காத யூதர்களின் நிலை-
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வரும் அநேகர் ஆபிரகாம்,ஈசாக்,யாக்கோபு ஆகியோருடன் பந்தியிருப்பார்கள். ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ (யூதர்களோ) இருளிலே (நரகத்தில்) இருப்பார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத்தேயு
8:11-12) (அதாவது மறுமை நிலை)
*இயேசுவை ஏற்காத யூதர்கள் மோசேயையும் நம்பாத அவிசுவாசிகளே:
யோவான் 5:46-47 IRVTam
[46] நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன்
என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. [47] அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள்
விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள்
என்றார்.
https://bible.com/bible/1899/jhn.5.46-47.IRVTam
*இயேசுவை ஏற்காதவர்கள் தேவனை உடையவர்கள் அல்ல!!
1 யோவான் 2:22-23 IRVTam
[22] இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. [23] குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான்.
https://bible.com/bible/1899/1jn.2.22-23.IRVTam
2*இயேசுவை நம்பாதவன் மீது கடவுளின் கோபம் நிலைநிற்கும்:
யோவான் 3:36 IRVTam
[36] குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
https://bible.com/bible/1899/jhn.3.36.IRVTam
3*இயேசுவை ஏற்காதவன் தன் இனத்திலிருந்து அழிக்கப்படுவான்:
அப்போஸ்தலர் 3:23 IRVTam
[23] அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.
https://bible.com/bible/1899/act.3.23.IRVTam
4* .இயேசுவை ஏற்காத யூதர்கள் முழு மனிதர்களுக்கும் விரோதிகள்,
தீர்க்கதரிசிகளை கொன்றவர்கள். எல்லா காலத்திலும் தம் பாவங்களை நிறைவாக்குவார்கள்-
தேவனது கோபம் அவர்கள் மீது வந்திருக்கிறது:
1 தெசலோனிக்கேயர் 2:15-16 TAOVBSI
[15] அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும்,
எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து, [16] புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்;
இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.
https://bible.com/bible/339/1th.2.15-16.TAOVBSI
லூக்கா 11:49-50 TAOVBSI
[49] ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்.
[50] ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
https://bible.com/bible/339/luk.11.49-50.TAOVBSI
*இயேசுவை ஏற்காதவர்கள் வஞ்சகர்களும் அந்திகிறிஸ்துவும் ஆவார்கள்:
2 யோவான் 1:7 IRVTam
[7] சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும்,
அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான்.
https://bible.com/bible/1899/2jn.1.7.IRVTam
5.உண்மையான இஸ்ரவேலரும் யூதரும் இயேசுவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளே ஆவார்கள். பிறப்பால் யூதரும் இஸ்ரவேலரும் இதில் இல்லை. (replacement theology- இதுவே ஆர்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கை)- காரணம்: இயேசுவே ஆபிரகாமின் வாக்குத்ததத்தின் சந்ததி
கலாத்தியர் 3:7-9, 16, 18-19 IRVTam
[7] ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். [8] மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது. [9] அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
[16] ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே.
[18] அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே. [19] அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது.
https://bible.com/bible/1899/gal.3.7-19.IRVTam
கலாத்தியர் 3:29 IRVTam
[29] நீங்கள் கிறிஸ்துவுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தினால் வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.
https://bible.com/bible/1899/gal.3.29.IRVTam
ரோமர் 2:28-29 IRVTam
[28] எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை. [29] உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது.
https://bible.com/bible/1899/rom.2.28-29.IRVTam
மத்தேயு 21:43 IRVTam
[43] ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு,
அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
https://bible.com/bible/1899/mat.21.43.IRVTam
இயேசுவை சிலுவையில் அறைந்த பின் யூதர்-யூதரல்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது. மாறாக ஒரே புதிய மனுசனே உண்டு:
கலாத்தியர் 3:28 IRVTam
[28] யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள்.
https://bible.com/bible/1899/gal.3.28.IRVTam & ரோமர் 10:12& 1 கொரிந்தியர் 12:13
கொலோசெயர் 3:10-11 IRVTam
[10] தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. [11] அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.
https://bible.com/bible/1899/col.3.10-11.IRVTam
எபேசியர் 2:14-16 IRVTam
[14] எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, [15] சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி, [16] பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
https://bible.com/bible/1899/eph.2.14-16.IRVTam
6.இஸ்ரவேலர் முற்றாக தள்ளப்படவில்லை. அவர்களிலிருந்தும் விசுவாசிகள் இருந்தனர்.
அவிசுவாசிகளும் இருந்தனர். கடைசியில் இயேசு வந்தபின் ,எல்லோரும் ஏற்பார்கள் என்பதே பவுலின் நம்பிக்கை.
ரோமர் 11:1, 5, 8, 11, 26-32 IRVTam
[1] இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
[5] அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது. (அதாவது தன்னையும் இஸ்ரவேலரான கிறிஸ்தவர்களையும் குறிப்பிடுகிறார் பவுல்)
[8] தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது. (நம்பிக்கை கொள்ளாத யூதர்களை குறித்து பவுல் சொல்கிறார்)
[11] இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
(யூதர்கள் வழிகெட்டது யூதரல்லாதவரை இரட்சிப்பதற்காம்-
அதாவது யூதர்கள் கிறிஸ்தவத்தை
ஏற்காததால்
, புறஜாதிகளிடம் இவர்கள் போதிக்க சென்றனர். அதையே பவுல் இதனுடன் முடிச்சு போடுகிறார்)
[26] இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.
“மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;
[27] நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது,
இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது.
[28] நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். [29] தேவனுடைய கிருபைவரங்களும்,
அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
[30] எனவே,
நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, [31] அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள். [32] எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.
https://bible.com/bible/1899/rom.11.1-32.IRVTam
இதன்படி கடைசியில் எல்லா யூதர்களும் இரண்டாம் தடவையாக இயேசு வந்ததன் பின்பே, மீண்டும் முழுமையாக விசுவாசிப்பார்கள் என்கிறார் பவுல்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படியும்,
இயேசுவின் வருகையுடன் முழு யூதர்களும் அவரை ஈமான்கொள்வார்கள். (குர்ஆன் 4:159, புகாரி
3448)
(ஆனால் தற்போதுள்ள கிறிஸ்தவர்கள் தம் குழம்பிப்போன புதிய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு,
இயேசுவின் இரண்டாம்வருகை நியாயத்தீர்ப்புக்காகவே வருகிறது என நம்புகிறார்கள்.
உண்மையில் பூமியில் அவிசுவாசத்தை நீக்கி தூய்மையான மார்க்கத்தை பின்பற்றவைப்பதற்கே அவர் வருவார் என்பதே பவுலின் இந்த வாசகமும் அமைந்திருக்கிறது)
7*.யூதர்களுக்கும் இஸ்ரவேலருக்கும் இந்த கிறிஸ்தவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமா?
*இயேசுவை முறையாக ஏற்காத கெட்டசெயலையுடைய மக்களுக்கு வாழ்த்து சொல்வதும் கூடாது. வாழ்த்து சொன்னால் அவர்களின் பாவங்களில் இவர்களுக்கும் பங்கு உண்டு என்கிறார் யோவான்:
2 யோவான் 1:7, 9-11 IRVTam
[7] சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும்,
அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான்.
[9] கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். [10] ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால்,
அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும்,
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
[11] அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.
https://bible.com/bible/1899/2jn.1.7-11.IRVTam
இப்படி அந்த யூதர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அவர்களின் அவிசுவாசத்திலும் வஞ்சகத்திலும் பங்குள்ளவர்களே ஆவார்கள்.
*இயேசுவை ஏற்காதோர் மீது கர்த்தரின் கோபம் உண்டு. அவர்கள் தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும் தம் பாவத்தை நிறைவாக்குபவர்களும் ஆவர். -அவர்களை ஆதரிப்பது தேவனை எதிர்ப்பதாகும்.
யோவான் 3:36 IRVTam
[36] குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
https://bible.com/bible/1899/jhn.3.36.IRVTam
1 தெசலோனிக்கேயர் 2:15-16 IRVTam
[15] அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும்,
மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து,
[16] யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்;
அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது.
https://bible.com/bible/1899/1th.2.15-16.IRVTam
இதன்படி யூதர்களாக இயேசுவை மறுத்துக்கொண்டு இருப்பவர்கள் மீது தேவனின் கோபம் இருப்பதால், அத்தகையோரை ஆதரிப்பது
, தேவனது கோபத்தை சுமப்பதற்கு சமமானது.
*தன்னை ஏற்காத யூத தலைவர்கள் திருந்தவோ மன்னிக்கப்படவோ கூடாது என்பது தான் அந்தக்காலத்திலேயே இயேசுவின் ஆசை- அதாவது நலவு நாடவில்லை!!
மாற்கு 4:11-12 IRVTam
[11] அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
[12] “அவர்கள் குணமாகாதபடிக்கும்,
பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது”
என்றார்.
https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam
ஆகவே அவிசுவாசியாகவும் துர்க்கிரியைகளையும் உடையவர்களான தற்போதுள்ள யூதர்களை ஆதரிப்பது அவர்களின் பாவத்திலே பங்குள்ளவர்களே இவர்கள் என காட்டுகிறது. இயேசுவோ அவர்களுக்கு ஆன்மீக நலவை கூட நாடவில்லை!
(மேசியா வந்த பின்பே யூதர்கள் திருந்துவார்கள். அதுவரை அவர்களுக்கு ஆதரவு கூறுவோர் பாவிகளே ஆவார்கள்.)
*இயேசுவின் வருகைக்கு இஸ்ரேல் தேசமாக வேண்டுமா?
சியோனிச அறிவீனத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் , இஸ்ரேல் தளிர்க்கும்போதே இயேசு வருவார் என மத்தேயு 24:32-33 ஐ குறிப்பிடுகிறார்கள்.
காரணம், அத்திமரம் என இஸ்ரவேலரை பழைய ஏற்பாடு சொல்வதால், இங்கே "அத்திமரம் தளிர்க்கும்போது வசந்தாகலம் வந்தாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள்."
உண்மையில் வசந்தகாலத்தின்போது மரங்கள் தளிர்க்கும். அப்படியே அத்திமரம் தளிர்த்தால், அதை வசந்த காலம் என அறிவது போல, இயேசு தன் வருகைக்கான அடையாளங்களாக கூறப்பட்ட கொடூரங்களான கடும் உபத்திரவம் ஏற்படும் என்றும் பிறகு சூரியன் இருளடையும், சந்திரன் ஒளிகொடுக்காதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும் என இயேசு குறிப்பிட்டவை நடக்கும்போது இயேசு வந்துவிட்டார் என்று அறியவேண்டும் என்றே சொல்கிறார். (மத்தேயு 24:29-33). அத்தோடு இதே விசயத்தை லூக்கா சொல்லும்போது, "அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் துளிர்க்கிறபோது வசந்தகாலம் வந்தாயிற்று என அறிவீர்கள்" (லூக்கா 21:29-30)..
அதாவது இங்கே வசந்த காலம் என கூறப்படுவது மரங்கள் தளிர்க்கும் காலத்தையே தான். இவர்கள் உருட்டுவது போல அல்ல! வசந்தகாலத்தின் அடையாளமாக மரங்கள் தளிர்ப்பது போல இயேசுவின் வருகையின் முன் இந்த கொடூர துன்பங்கள் , வானம் பூமியில் கடுமையான அழிவுகள் ஏற்படுவதை இயேசு குறிப்பிடுகிறார். இதிலே இஸ்ரேல் தேசம் உருவாகும் என எதுவுமில்லை!!
8.கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டுமா?
கத்தோலிக்கர்களும் ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் இதிலே நடுநிலையை கையாள்வதை விரும்புகிறார்கள். பரிசுத்த ஆவி தம்மிடம் இருப்பதாக கூறிக்கொள்ளும் பைபிளையே ஒழுங்காக படிக்காத மூடர்களோ இஸ்ரேலுக்கு சொம்பு தூக்குகிறார்கள்.
கத்தோலிக்கர்களும் ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் இந்த இஸ்ரவேலர் பழைய ஏற்பாடு கூறும் ஆவிக்குரியவர்கள் அல்லர் என நம்புவதால் யூதர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியையே தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தற்குரிகளோ, இஸ்ரேல் உருவானது பழைய ஏற்பாட்டு தீர்க்கரிசன நிறைவேற்றம் என நம்புவதால் தான் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதையும் இஸ்ரேல் செழிப்பாக இருப்பதையும் விரும்புகின்றனர்.
இத்தகையோர் யூதர்களின் பாவத்தில் பங்குள்ளவர்கள் என்பது 2 யோவான்
1:7&10-11 தெளிவாக்குகிறது.
பவுலோ ஒருபடி மேல சென்று, குடும்பத்திலே சிலைவணங்கி, திருடன்,கொள்ளைக்காரன்,
விபச்சாரகனாகவோ இருந்தால் அவனோடு ஒன்றாக பழகவோ சாப்பிடவோ கூடாது. அவனை துரத்திவிட வேண்டும் என்கிறார்
1 கொரிந்தியர் 5:11-13 IRVTam
[11] நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது;
அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. [12] சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? [13] வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.
https://bible.com/bible/1899/1co.5.11-13.IRVTam
வெளியிலுள்ளவர்கள் குறித்து, அவர்கள் மீது அதிகாரம் இல்லாததால் நிர்ப்பந்தம் காரணமாக இத்தகையோருடன் கலக்க கூடாது என எழுதவில்லை என்றும் விளக்கியுள்ளார் (1 கொரி 5:10)
ஆனால் இஸ்ரேலிலோ விபச்சாரம்,ஓரினச்சேர்க்கை
,மது எல்லாம் அனுமதிக்கப்பட்டதாகவே உள்ளது. இதை தான் தேவன் விரும்புவாரோ?
ஆனால் முஸ்லிம்களோ, இயேசுவை கிறிஸ்து
(அல்மஸீஹ்-மேசியா)
என்றும்,
இறைவனின் தூதர் என்றும், கன்னியிடம் பிறந்தவர் என்றும், அவரது தாய் உண்மையாளர் என்றும் உலகத்திலுள்ள பெண்களிலே தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் நம்புகிறார்கள்.
கிறிஸ்தவம் இயேசுவை நமக்காக சாபமானார் (கலா 3:13) என்றும் பாவத்தை தண்டிப்பதற்காக பாவ உடலில் இயேசுவை அனுப்பி இயேசுவை பலியாக்கி பாவத்தை தண்டித்தார்
(1கொரி8:3)
என்றும் நரபலியை இஸ்லாம் ஏற்கவில்லை. மாறாக சிலுவையில் அறையப்பட்டவர் இயேசு அல்லாத வேறுநபர் என்றும் இயேசுவை போன்று மக்களுக்கு தோன்றியது என்றும் அவரை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திக்கொண்டான் என்றும் அவரது மரணத்தின்முன் யூதர்கள் அவரை விசுவாசிப்பார்கள்
என்றும் கூறுகிறது (4:156-159).
இவ்வாறு கொள்கை ரீதியில் யூதர்களைவிட முஸ்லிம்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும், குறைந்தபட்சம் நீதியின்படியாவது, அநீதியை ஆதரிக்காமல் இருப்பது அவர்கள் மீதுள்ள கடமை ஆகும்.
மத்தேயு 25:34-46 IRVTam
[34] அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து:
வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,
உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். [35] பசியாக இருந்தேன்,
எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன்,
என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
[36] ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன்,
என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். [37] அப்பொழுது,
நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? [38]
எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?
[39] எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
[40] அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
[41] அப்பொழுது,
இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே,
என்னைவிட்டு,
பிசாசுக்காகவும்,
அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். [42] பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன்,
நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை;
[43] அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன்,
நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். [44] அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும்,
தாகமுள்ளவராகவும்,
அந்நியராகவும்,
ஆடையில்லாதவராகவும்,
வியாதிப்பட்டவராகவும்,
சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
[45] அப்பொழுது,
அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,
அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். [46] அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.
https://bible.com/bible/1899/mat.25.34-46.IRVTam
எளியவர்களான பசியாக இருப்பவர்களுக்கு உணவு செல்ல தடையாக இருந்து, ஆடை செல்ல தடையாக இருந்து, குடிநீரை தட்டுப்பாடாக்கி,
நோயாளிகளுக்கு கூட மருத்துவம் கிடைக்காதபடிக்கு கொடூரங்களை செய்கிறவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதென்பது அவர்களின் அத்துனை துர்க்கிரியைகளிலும் பங்குள்ளவர்களே இந்த பரிசுத்த ஆவி நிறைந்த இந்த அறிவுசூனியங்களாவர்.
ஹமாஸ் செய்வது சரியா?- அமைதியாகவுள்ள மாட்டை துன்புருத்திக்கொண்டே இருந்தால் அது ஒருநாள் முட்டுமல்லவா? மிருகமே இப்படி நடக்கும்போது, 70 வருடங்களாக ஒடுக்கப்பட்டும் துரத்தியடிக்கப்பட்டும் இருப்பவர்கள் எதிர்த்துத்தாக்காமல் இருப்பார்களா?
இஸ்ரவேலர் தாம் குடியிருக்க கொடுக்கப்பட்ட தேசத்திலே சிலவணங்கிகளை உயிரோடு விட்டால் கெட்டுப்போய் விடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஈவிரக்கமின்றி மூச்சுவிடும் எதையும் (குழந்தை+ஆடுமாடு+கழுதை...) உயிரோடு விடாமல் கொன்றொழிக்குமாறு கர்த்தரே சொன்னாரே (உபாகமம் 20:16-18), அமெலேக்கியர் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது எதிர்த்ததற்காக
400 வருடங்கள் கழித்து வாழ்ந்த அவர்களின் சந்ததியினரை ஈவிரக்கமின்றி குழந்தைகள்,பெண்கள்,மிருகங்கள் என அனைத்தையும் கொன்றொழிக்குமாறு கர்த்தர் சொன்னாரே (1 சாமுவேல் 15:2-3), இத்தகைய போதனைகளை சரிகண்டுவிட்டு, ஹமாஸ் செய்வதில் எதையாச்சும் குறை காண முடியுமா?
ஆகவே இந்த சமாளிப்புகளெல்லாம் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு செல்லுபடியாகாது!!
யூதர்களை பற்றி பழைய
ஏற்பாடு
1.மறுமை பற்றியோ சொர்க்கம் போவார்கள் என்றோ பழைய ஏற்பாடு சொல்லவில்லை! மாறாக உலகத்தில் ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை பெறுவார்கள் என்றே சொன்னது:
ஆதி 15:13-16 IRVTam
[13] அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும். [14] இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
[15] நீ சமாதானத்தோடு உன் முன்னோர்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்செய்யப்படுவாய். [16] நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்;
ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார்.
https://bible.com/bible/1899/gen.15.13-16.IRVTam
2.யூதர்களுக்கு இந்த வாக்குறுதி நிபந்தனைக்குற்பட்டது.
உபாகமம் 31:16-18, 20-21, 27, 29-30 IRVTam
[16] யெகோவா மோசேயை நோக்கி: “நீ உன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்படப் போகிறாய்; இந்த மக்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தெய்வங்களை,
விபசாரம் செய்வதுபோலப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடன் நான் செய்த உடன்படிக்கையை மீறுவார்கள். [17] அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் அழிக்கப்படும்படி அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இல்லாததினால் அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள். [18] அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளுக்காகவும் நான் அந்நாளிலே என் முகத்தை நிச்சயமாகவே மறைப்பேன்.
[20] நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தில் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது,
அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பி,
அவர்களை வணங்கி, என்னைக் கோபப்படுத்தி, என் உடன்படிக்கையை மீறுவார்கள். [21] அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்போது,
அவர்களுடைய சந்ததியார் மறந்துபோகாமலிருக்கிற
இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி சொல்லும்; நான் வாக்களித்துக்கொடுத்த தேசத்தில் அவர்களை நுழையச்செய்யாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் எப்படிப்பட்டது என்பதை அறிவேன்” என்றார்.
[27] நான் உன் கலக குணத்தையும் உன் பிடிவாதத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கும்போது, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாகக் கலகம்செய்வீர்கள்!
[29] என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாக உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீமை உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைகளின் செயல்களினாலே யெகோவாவைக் கோபப்படுத்தும்படி, அவருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன்” என்று சொல்லி. [30] இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கேட்க, மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரை சொன்னான்.
https://bible.com/bible/1899/deu.31.16-30.IRVTam
உபாகமம் 32:5-6, 16-17, 19-31, 36-37, 42-43 IRVTam
[5] அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.
[6] விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
[16] அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். [17] அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.
[19] “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து,
அவர்களைப் புறக்கணித்து: [20] என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். [21] தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். [22] என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது,
அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். [23] “தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். [24] அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். [25] வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும். [26] எங்கள் கை உயர்ந்ததென்றும், யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று, [27] நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். [28] “அவர்கள் யோசனை இல்லாத மக்கள், அவர்களுக்கு உணர்வு இல்லை. [29] அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். [30] அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? [31] தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.
[36] யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். [37] அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
[42] கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். [43] “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”.
https://bible.com/bible/1899/deu.32.5-43.IRVTam
எரேமியா 18:7-10 IRVTam
[7] பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு தேசத்திற்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்திற்கு விரோதமாகவும் சொன்ன உடனே, [8] நான் விரோதமாய்ப் பேசின அந்த தேசத்தார் தங்கள் தீமையைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல், மனம் மாறுவேன். [9] கட்டுவேன்,
நாட்டுவேன் என்றும் ஒரு தேசத்தையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு. [10] அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால்,
நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.
https://bible.com/bible/1899/jer.18.7-10.IRVTam
உபாகமம் 30:1-5 IRVTam
[1] “நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய யெகோவாவால் துரத்திவிடப்பட்டு,
எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கும்போது,
நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,
[2] உன் தேவனாகிய யெகோவாவிடத்துக்கே திரும்பி,
இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம்,
நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால், [3] உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார்.
[4] உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய யெகோவா அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, [5] உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய யெகோவா அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார்.
https://bible.com/bible/1899/deu.30.1-5.IRVTam
இதன்படி யூதர்கள் இறைமார்க்கத்தை கடைபிடிக்கும் காலத்திலேயே அவர்களுக்கு ஆசீர்வாதமும்
மீறும் காலத்தாலேயே தண்டனையும் இழிவும் கிடைக்கும்.
3.யூதர்களுக்கான இறுதி வாய்ப்பு 490 வருடங்கள்/ எழுபது வாரங்கள்:
தானியேல் 9:24 IRVTam
[24] மீறுதலைத் தவிர்க்கிறதற்கும்,
பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திசெய்கிறதற்கும்,
நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரை இடுகிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்செய்கிறதற்கும், உன் மக்களின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் ஆகுமென்று குறிக்கப்பட்டிருக்கிறது.
https://bible.com/bible/1899/dan.9.24.IRVTam
70 வருட சிறையிறுப்புக்குப்பின்
490 வருட காலத்தை அவர்களுக்காக மீறுதலை தவிர்க்கவும், பாவங்களை தொலைக்கவும், அவர்களின் அக்கிரமத்தை நிவிர்த்தி செய்துகொள்வதற்கும் அவகாசமாகும்.
அதனோடு நித்தியநீதி ஏற்படுத்தப்படும். அதாவது இஸ்ரேல்-புறஜாதி வேறுபாடு எனும் தற்தாலிக நீதி நீங்குவதோடு, தரிசனங்களும் தீர்க்கதரிசனமும் முத்திரிக்கப்படும். அதாவது அவை முடிவுக்கு கொண்டுவரப்படும். இனி இஸ்ரவேலரில் தீர்க்கதரிசிகள் வரமாட்டார்கள்.
(அதன்படி இஸ்ரவேலரில் கடைசியானவராக இயேசு வந்தார்.),
அதன்பின் அடுத்தடுத்த வசனங்களில் கூறப்பட்டது போல எருசலேம் அழிக்கப்பட்டு ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது.
4.யூதர்களிலுள்ள விசுவாசிகள்
இத்தகைய விசுவாசிகள் ஏனைய விசுவாசிகளுடன் இணைந்து கொள்வார்கள் என்பதாலும், தீர்க்கதரிசிகள் காலத்திலிருந்த ஒரே விசுவாசிகள் யூதர்களாக இருந்தனர் என்பதாலுமே எதிர்கால ஆசீர்வாத தீர்க்கதரிசனங்கள் அவர்கள் புரியும்விதமாக பொதுவாக விசுவாசிகளை யூதர்கள் என்றே கூறப்படுகிறது.
ஆக யூதர்களுக்கு இப்போதுள்ள ஆட்சி ஆசீர்வாதம் அல்ல! அது உலகப்போர்களில் காலணித்துவ ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகமும், தமது குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான தந்திரமுமே இந்த தீர்க்கதரிசன உருட்டுக்கள் ஆகும்.
அவை அக்கால விசுவாசிகளை இறைவன் இரட்சிப்பதாகும். அல்லது இரண்டாம் ஆலய காலகட்டமான எஸ்றா தொடக்கம் இரண்டாம் ஆலய இடிப்புவரையான காலத்தின் இடையிலே உள்ள யூதர்களை/இஸ்ரவேலர்களை குறிப்பதாகும்.
உதாரணமாக
1. ஏசாயா 43:5-7 என்பது பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து வெளிவருவதை
குறிப்பதாகும். அதை அதே ஏசாயா 43:14 தெளிவாக கூறுகிறது. இதை நிறைவேற்றியவர் கோரேசு என்ற பெர்சிய ராஜா (2 நாளாகமம் 36:22-24)
அதேபோல
2. எசேக்கியேல் 37:11-12 கூறுவதும் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து மீள்வதையே
குறிக்கிறது. எசேக்கியேலின் காலத்தில் பாபிலோனிலே அடிமைகளாக யூதர்கள் இருந்தனர்.
3. ஏசாயா 11:11-12 இலே இஸ்ரவேலர் இரண்டாம் முறையாக தம்முடைய மக்களை
மீட்டுக்கொள்வதாக இருப்பதால், முதலாம் முறை பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து
மீள்வதையும் இரண்டாம் முறை 1948இலே மீள்வதையும் குறிக்கும் என அடித்துவிடுவார்கள்.
ஆனால் முதலாம் முறை எகிப்திலிருந்து மீண்டதையே குறிக்கும். அதாவது மோசே காலத்தில்
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து மீட்கப்பட்டனர். இரண்டாவது முறையாக அசீரியர்/பாபிலோனியரிடமிருந்து
மீட்கப்படுவர் என்பதையே இது குறிக்கிறது. வடக்கு ராஜ்யமான இஸ்ரேலாகிய
சமாரியாவிலிருந்தவர்களை வெவ்வேறு நகரங்களுக்கு பிடித்துச்சென்றனர். அவர்களே
காணாமல் போன 10 கோத்திரத்தார்.. இறுதியாக தெற்கு ராஜ்யத்தாரான எருசலேம் யூதா இனத்தாரை
பாபிலோனுக்கு பிடித்து சென்றார்கள். இதிலிருந்து
மீட்கப்படுவதே இரண்டாவது மீட்பு ஆகும். இது
என் சொந்த உருட்டு அல்ல.. அதை தான் அதே ஏசாயா 11:16 கூறுகிறது:
ஏசாயா 11:16 IRVTam
[16] இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு
இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு
பெரும்பாதையிருக்கும்.
https://bible.com/bible/1899/isa.11.16.IRVTam..
அத்தோடு ஏசாயா 11இலே கூறும் பிலிஸ்தியர்கள்,மோவாபியர்கள்,அம்மோனியர்கள்
தற்போது கிடையாது.
4. ஆமோஸ் 9:14-15 முதலாவது இஸ்ரேல்
அசீரியர்களால் அழிக்கப்படுவதற்கு முன்பு கூறப்பட்டதாகும்.. அதாவது முதலில்
அழிக்கப்படுவார்கள். பிறகு ஏதோமில் மீதியானவர்களையும் இஸ்ரவேலரையும் தம்
தேசத்துத்கு வரவைப்பதாகவும் அதன்பின் அவர்கள் பிடுங்கப்படுவதில்லை என்றும்
கூறப்படுகிறது. ஆனால் அதன்பின் மீண்டும் பிடுங்கப்பட்டார்கள். காரணம் தேவன் ஒரு
நாட்டவரை நாட்டுவேன் என்றோ பிடுங்குவேன் என்றோ சொன்னால், அம்மக்கள் மாறும்போது
தேவனும் தன் மனதை மாற்றிக்கொள்வார் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்- எரேமியா 18:8-10
சகரியா தீர்க்கதரிசி கூறும் இறுதிக்கால முன்னறிவிப்பில் , கூறப்படுவதும் இவ்வாறே.. சகரியாவின் காலம் பாபிலோனிலிருந்து விடுதலை பெற்று வந்த ஆரம்ப காலமாகும். அதன்பின் எருசேலைமை சுற்றி எதிரிகள் மீண்டும் வருவார்கள் என்றும் இஸ்ரவேலரை தேவன் பாதுகாத்து தேவனே சண்டைசெய்து துரத்தியடிப்பார் (சகரியா 14) என்று கூறுகிறது. ஆனால் இதன் பின்பு ரோமர்கள் வந்தபோது தேவன் சண்டை போட வரவில்லை. கி.பி. 70 இலே செருபாபேல் கட்டிய ஆலயத்தை பட்டிடிங்கரிங் பார்த்து வைத்திருந்த ஏரோதின் ஆலயமான இரண்டாம் ஆலயம் அடித்து நொருக்கப்பட்டு முஸ்லிம்கள் வரை அது குப்பையாகவே இருந்தது. முஸ்லிம்கள் தான் ஆலய இடத்திலே இறைவனை வணங்குவதற்கு தூய்மைப்படுத்தி ஆலயம் கட்டினார்கள். காரணம் என்னவென்றால் எரேமியா 18:8-10 இலே கூறப்பட்டதுபோல, தேவனது வாக்குத்தத்தம் மக்களின் தீய எண்ணங்களுக்கேற்ப மனமாற்றத்திற்கேற்ப தேவனும் மாற்றிக்கொள்வார்.
எசேக்கியேல் இறுதிப்பகுதியிலும் (39 தொடங்கி 48) இவ்வாறே எசேக்கியேல் பாபிலோனிய சிறையிருப்பில் இருந்தபோது தீர்க்கதரிசனம் உரைத்தார். அதிலே குறிப்பாக ஆலயம் கட்டப்படும் என்றும் மீண்டும் பலிகள் கொடுக்கப்படும் என்றும் ஆசாரியர்கள் எவ்வாறு பலிகொடுக்க வேண்டும் என்னென்ன பலி கொடுக்கவேண்டும் என டிசைன் டிசைனாக கூறப்படுகிறது. (எசேக்கியேல் 44:2-9, 45:15-25, 46:2-20), இவை அனைத்தும் வெறும் 490 வருட கால இடைவெளிக்கானதே என்பதை தானியேல் 9:24-27 தெளிவாக்குகிறது. அதாவது 490 வருட காலத்தில் மீண்டும் ஆலயம் துவம்சம் செய்யப்பட்டு, பலி கொடுப்பது நிறுத்தப்படும் என தானியேல் 9:27 கூறுகிறது.
ஆனாலும் மேசியா அவர்களின் இனத்தை சேர்ந்த தாவீது மகனார் தான். அவர் இரண்டாம் ஆலயம் உடைக்கப்படுமுன்பே தோன்றினார். அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ளாதபடியினால், எரேமியா 18:8-10 இலே கூறப்பட்டது போன்று தேவனும் மனதை மாற்றிக்கொண்டார்.
இதிலே அவர்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.


கருத்துகள்
கருத்துரையிடுக