பைபிளின் வழமை போன்ற கணித பிழை
பைபிளின் வழமை போன்ற கணித பிழை
கணித பிழை இலக்கம் 1
1.இஸ்ரவேலர் 400 வருடம் அடிமையாக இருப்பார்கள
ஆதியாகமம் 15
13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானு}று வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
மேலும், அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:6
2. இஸ்ரவேலர் 430 வருடம் எகுப்திலே தங்கியிருந்தார்கள்.
யாத்திராகமம் 12
40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானு}ற்றுமுப்பது வருஷம்.
இந்த இரண்டிலிருந்தும் வரக்கூடிய முடிவு: இஸ்ரவேலர் 30 வருடம் மட்டுமே , எகிப்தில் சுதந்திரமாக இருந்துள்ளனர்.
3.மோசே 120 வயதில் செத்தார்.
(உபாகமம் 34)
இஸ்ரவேலர் 40 வருடம் அழைந்து திரிந்தனர்.
அப்போதும் மோசே உயிரோடிருந்தான்.
உபாகமம் 2:7
மோசே பார்வோனுடன் பேசியபோது அவனுக்கு 80 வயது.
(யாத்திராகமம் 7:7)
எனவே, மோசேயின் 80வது வயதுவரை மட்டுமே எகிபதில் அடிமையாக தங்கியிருந்தனர்.
எனவே, மோசே பிறக்க முன்பு 400-80=320 வருடங்கள் அடிமையாக இருந்துள்ளனர்.
---
பிரச்சனை:
யாக்கோபு தன் 130வது வயதில் எகிபதுக்கு போனார். அவருடன் 66 பேர் போனார்கள்.
அதில் லேவியும், அவனது மகன் கோகாதும் அடங்கும்.
ஆதி 47;9 46:11
யோசேப்பு 110 வருடம் வாழ்ந்தார்.
ஆதி 50:22&26
இஸ்ரவேலர் அடக்கி ஒடுக்கப்பட்டது, யோசேப்பும் அவனது தலைமுறையும் அழிந்த பின்னாலேயே..
யாத்தி 1
எனவே, அப்போது கோகாத் பெரிய கிழவனாக/ இறந்து இருப்பான்.
*கோகாதின் குமாரன் , அம்ராம். இந்த கோகாத் 133 இல் செத்தார்.
யாத்தி 6:18
*அம்ராமின் குமாரன் மோசே. இந்த அம்ராம் 137 வருடம் வாழ்ந்தான்.
யாத்தி 6:20
ஒரு பேச்சுக்கு, கோகாத் பிறந்ததிலிருந்து எகிப்தில் அடிமையாக இருந்ததாக கருதுவோம்.
அவன் 133 இல் சைத்த படியால், அதிகபட்சமாக அம்ராமை 132வது வயதில் பெற்றதாக கருதுவோம்.
இந்த அம்ராம் 137 இல் செத்தான். ஒரு பேச்சுக்கு அதிக பட்சமாக மோசேயை 136 இல் பெற்றதாக கருதுவோம்.
மோசே 80வது வயதில் எகிப்திலிருந்து புறப்பட்டான்.
எனவே, அதிகபட்சமாக எகிப்தில் அடிமையாக தங்கியிருக்க வாய்ப்பு=
132+136+80=348 வருடங்கள.
மிகுதி 52 வருடங்கள் எங்கே போனது??
இது அதிக பட்சம். இதைவிட மிக குறைவாகவே உண்மை காலம் வர போகிறது.
எனவே, கர்த்தரின் தீர்க்கதரிசனமும் பொய்யாகிறது. யாத்திராகமம் 12:40 உம் பொய்யாகிறது!!
பைபிளே சந்தேகத்திற்குரியதாகிறது!!
******
கணித பிழை இலக்கம் 2
1.இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட 480வது ஆண்டில், சொலமோன் ராஜாவாகி 4வது ஆண்டு.
(1 இராஜாக்கள் 6:1)
எனவே, சொலமோன் ராஜாவனது, எகிபதிலிருந்து புறப்பட்ட 476வது ஆண்டு.
2. 2.இஸ்ரவேலர. எகிப்திலிருந்து புறப்பட்ட பின் 40 வருடம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தனர்.
(யாத்திராகமம் 16:35 எண்ணாகமம் 14:33-34 32:13 உபாகமம் 2:7 8:4 29:5 யோசுவா 5:6)
450 வருடங்கள் நியாயாதிபதிகள் சாமுவேல் வரை.
( அப்போஸ்தலர் நடபடிகள் 13:19-20)
மொத்தம் 490.
சவுல் 40 வருடம் ஆட்சி.
(அப்போஸ்தலர் நடபடிகள் 13:21)
மொத்தம் 530
தாவீது 40 வருடம் ஆட்சி.
(1 நாளாகமம் 29:27)
மொத்தம் 570.
இதன்படி, சொலமோன் ராஜாவானது இஸர்வேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு 570 வது ஆண்டு..
570-476= 94 வருட இடைவெளி உள்ளது.. பைபிளுக்கு கணிதம் தெரியாது.
ஏன் இப்படி??
----
கணித பிழை இலக்கம் 3
1. தேராகு , ஆபரஹாமை 70வது வயதில் பெற்றார்.
(ஆதி 11:26)
2. ஆப்ரஹாம் ஆரானிலிருந்து, கானானுக்கு போனபோது 75 வயதாக இருந்தார்.
(ஆதி 12:4-5)
எனவே, அப்போது அவரது தந்தைக்கு வயது 70+75=145
3. ஆப்ரஹாமுடைய தந்தை மரணித்த பின்பு, அவர் ஆரானிலிருந்து கானானுக்கு வந்தார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:4
இதன்படி, தேராகு 70+75=145 வயதில் மரணித்திருக்கிறார்.
ஆனால், பைபிளோ 205 வயதில் மரணித்தார் என்று தவறாக சொல்கிறது
(ஆதி 11:32)
60 வருடத்தை பைபிள் கூட்டி சொல்கிறது!!
கணிதம் தெரியாட்டி, ஏன் கணித்து சொல்ல முற்படணும்?? வாய மூடிட்டு கெடக்க வேண்டியது தானே??
****
கணிதப்பிழை இலக்கம் 4
1. எஸ்றா 2 இலுள்ள ஜனங்களை கூட்டி சொல்லும் போது,
எஸ்றா 2:64 இல், அவர்கள் 42360 என்கிறது.
ஆனால், அதிலுள்ளோரை கூட்டி பார்த்தால் 29,818 தான் வருகிறது.
2.இதே கதையை நெகேமியா 7:66 இல் கூட்டி சொல்லும் போது, 42,360 என்று சொல்கிறது.
அதிலுள்ளதை கூட்டி பார்த்தால், 31089 தான் வருகிறது.
பைபிளை எழுதினவரை, என்கிட்ட அனுப்புங்க.. கணக்கு சொல்லி கொடுக்கிறேன்.
மேலும், அந்த இரு அதிகாரங்களையும் படிதமால் 30+ முறண்பாடுகள் அங்கேயே வருகின்றன..
நம் பழைய பதிவுகளில் இதை அலசியுள்ளோம்.
******
கணித பிழை இலக்கம் 5
எஸ்றா 1:9-11 இல் கூறப்பட்டதை, கூட்டி சொல்லும்போது
30 + 1000 + 29 +30 + 410 + 1000= 5400
ஆனால் உண்மையில் அதை கூட்டினால் 2499 தான் வருகிறது.
*****
கணித பிழை இலக்கம் 6
யோசுவா 15:21-32 இல் 36 பட்டணங்களின் பெயர்களை கூறிவிட்டு, அவை 29 என்கிறது
***
கணித பிழை இலக்கம் 7
1. நோவா 500 வயதான போது, 3 பிள்ளைகளை பெற்றான்
ஆதியாகமம் 5
32 நோவா ஐந்நு}று வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
2.நோவாவின் 600 வது வயதில் ஜலபிரளயம் ஏற்பட்டது.
ஆதியாகமம் 7
6 ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநு}று வயதாயிருந்தான்.
எனவே, அப்போது, அவனது மகனாகிய சேமின் வயது 100 ஆக வேண்டும்.
ஆனால், ஜலப்பிரளயத்தின்கு 2 வருடங்களின் பின்பே, 100 வயதானதாம்.
ஆதியாகமம் 11
10 சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நு}றுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
100=102 ??
***
கருத்துகள்
கருத்துரையிடுக