கிறிஸ்தவம் விதியை மறுக்கிறதா ?
சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
அவனது சாந்தியும் சமாதானமும் நேர்வழியை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ்வுக்கே புகழனைத்தையும் உரித்தாக்கியவனாய் !
இஸ்லாமிய மார்க்கத்தை ஏளனம் செய்வதாக எண்ணிக் கொண்டு இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் நம்புகின்ற நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களையே மறந்தும் மறுத்தும் கேள்வியெழுப்பி வருகின்றனர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் #விதி !
விதியை குறித்து பைபிளினில் எந்த வசனமும் இல்லை !
விதியை குறித்து கிறிஸ்தவம் போதிக்கவில்லை !
இயேசு அதனை குறித்து எதனையும் சொல்லவேயில்லை !
எனவே விதி என்ற ஒன்று இல்லை என மறுதலிக்கும் கிறிஸ்தவர்களே !
உண்மையில் நீங்கள் மறுதலிப்பது கிறிஸ்தவத்தின் அடிப்படையை தான்!
உதாரணமாக சில வசனங்களை பார்க்கலாம்
• குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.
16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139 :16
• எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை!
பறவை வானில் பறப்பது உட்பட⁉
29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. மத்தேயு 10 :29
• தீர்சனங்களும், தீர்க்கதரிசிகளும் கூட எழுதப்பட்டபடியே நடக்கிறார்கள்
7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10 :7
அவ்வளவு ஏன் விதி உண்டு என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையான சிலுவைபலியே !
ஆம்
தான் கொலை செய்யப்பட வேண்டியது விதி என இயேசு போதித்தார் !
21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். மத்தேயு 16 :21
தீர்மானிக்கப்பட்ட(#விதிப்)படியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். லூக்கா 22 :22
இதைவிட மறுக்கவியலாத வசனம் ஏது ?
• விதிக்கப்பட்ட யாவையும் நிச்சயமாக நடக்கும் என இயேசு கூறுகிறார்
7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள், இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. மாற்கு 13 :7
இதே கருத்து மத்தேயு 24:6லும் சொல்லப்படுகிறது.
தம்முடைய விதியின்படி தாம் செல்லவேண்டிய நேரம் குறித்து இயேசு அறிந்திருந்தார்
1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவான் 13 :1
• இரட்சிப்பு கூட தேவனின் சித்த்ப்படியே முன்னமே குறிக்கப்பட்டது தானே தவிர கிரியைகலினாலே அல்ல!
9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை #இரட்சியாமல், #தம்முடைய_தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1 :9
இரட்சிப்பும் முன்னமே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கே !
12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய #தீர்மானத்தின்படியே, நாங்கள் #முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி #தெரிந்துகொள்ளப்பட்டோம். எபேசியர் 1 :12
தேவனின் சித்தப்படி, தேவனால், தேவன் முன் குறித்தபடியே முன்குறித்தவர்களுக்கே இரட்சிப்பு !
இதனை மனதிற்கொண்டு தான் இயேசு இவ்வாறான பிரார்த்தனையை செய்கிறார்
39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26 :39
பைபிளின் கூற்றுப்படி தான் மரணிக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்ததாக சில வசனங்கள் இருப்பினும் அதனை சித்தமானால் தன் விதியை மாற்றுமாறு பிரார்த்தனை செய்கிறார்(ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது வேறு)
ஆக விதியை குறித்து நீங்கள் என்னவெல்லாம் கேள்வி எழுப்புவீர்களோ அவையனைத்தும் நீங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டியவையே !
இன்ஷா அல்லாஹ்..!
ஆய்வுகள் இனியும் தொடரும்..!
கருத்துகள்
கருத்துரையிடுக