முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ? 1
ஏக இறைவனின் திருப்பெயரால்..!
படைப்புகள் அனைத்தையும் செவ்வையாய் படைத்து பரிபாலித்து போற்றக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்❕
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக❕
பலதாரமணம் செய்வது தவறு,பாவம்
முஹம்மது நபியவர்கள் பலதாரமணம் செய்தார்கள் எனவே அவர் கள்ளத்தீர்க்கதரிசி என அநேக கிறிஸ்தவர்கள் கூற கேட்டுள்ளேன்
அன்பிற்குரியவர்களே!
உங்கள் பைபிள் அப்படி போதிக்கிறதா ?
எது பாவம் ❔
4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3 :4
17 அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
1 யோவான் 5 :17
• பாவம் என்பது தேவன் விதித்த கட்டளைகளை மாம்ச ரீதியாகவோ ஆத்ம ரீதியாகவோ மீறுவதாகும்
∆ 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது,
→ நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.←
ரோமர் 5 :13
↑→ ஒன்றை குறித்த சட்டம் இல்லையேல் அது பாவமாக எடுத்துக்கொள்ளப்படாது.
√ பலதாரமணத்தை தேவன் தடை செய்ததாய் அல்லது பாவம் என குறிப்பிட்டதாய் சட்டமோ வசனமோ பைபிளில் உண்டா ⁉
அவ்வாறில்லாத பட்சத்தில் எதனடிப்படையினில் அதனை விமர்சிக்கிறீர்கள்❓ குற்றமென்கிறீர்கள்❓
16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3 :16-17
இப்படி மனிதனுக்கு தேவையான அனைத்தும் அருளப்பட்ட தேவ ஆவியினால் வழங்கப்பட்ட வசனங்களை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ !?
இன்னும் பலதாரமணம் தவறு அப்படி செய்பவர் கள்ளத்தீர்க்கதரிசி⁉ அவரால் வரும் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பீர்களேயானால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அவர்களின் வெளிப்பாடுகள் அவர்களால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என அனைத்தையும் நிராகரித்து விட்டு முஹம்மது நபியவர்களை விமர்சிக்க வாருங்கள்..!
பலதாரமணத்தை அனுமதிக்கும் சட்டங்கள் கீழ்காணும் வசனங்கள்
பழைய ஏற்பாடு
உபாகமம் 21 : 15 , 15: 17
எண்ணாகமம் 31 : 18, 46
2 சாமுவேல் 12 : 8
1 ராஜாக்கள் 15: 5
நியாயபிரமாணத்தில் உள்ள சட்டங்கள் சரி என்று புதிய ஏற்பாட்டில் பார்க்க:
மத்தேயு 5:17
மத்தேயு 22 : 24 - 26
ரோமர் 7: 12, 16
காலாத்தியர் 3: 21 , 5: 3 , 4 .
கருத்துகள்
கருத்துரையிடுக