திரித்துவம் 1

திரித்துவம் உண்மையானதா?

பாகம் 1
------------------------


திரித்துவம் உண்மையானதா❓❓
--------------------------------------------


திரித்துவம் எனப்படுவது கிறித்தவ மதத்தில் அடிப்படைகொள்கை போல் ஆக்கப்பட்ட வேதாகமத்திற்கே முரணான ஒரு தவறான  நம்பிக்கை!

திரித்துவம் என்பது பிதா,பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய மூன்றும் ஒரே தேவன். பிதா ஒரு தேவன். குமாரன் ஒரு தேவன். ஆவி ஒரு தேவன். மூன்றுபேரும் மூன்று தேவர்கள் அல்ல. ஒரே தேவன். பிதா ,குமாரன், ஆவி இந்த மூன்றும் சமமானவர்கள். சக்தி வல்லமை வயது எல்லாமே இம்மூவருக்கும் சமம் என்பதே இவர்களது நம்பிக்கை.

இதற்காக பைபிளை எவ்வளவு திரித்துகூற முடியுமோ அவ்வளவுக்கு திரித்து கூறி திரித்துவத்தை நியாயப்படுத்த முற்படுவார்கள்.

கடவுள் எத்தனை?

*.பைபிள் என்ன சொல்கிறது??


שְׁמַ֖ע  יִשְׂרָאֵ֑ל  יְהוָ֥ה  אֱלֹהֵ֖ינוּ  יְהוָ֥ה   אֶחָֽד׃

שְׁמַ֖ע-சமா
יִשְׂרָאֵ֑ל-இஸ்ராஏலொ
יְהוָ֥ה-யாவே
אֱלֹהֵ֖ינוּ-எலோஹைனொ
יְהוָ֥ה -யாவே
אֶחָֽד׃-எஹத்

சமா இஸ்ராஏலு! யாவே எலோஹைனு யாவே எஹத்

சமா-கேள் இஸ்ராஏலு- இஸ்ரவேலே
யாவே- கர்த்தர்
எலோஹைனு- எமது தேவன்
எஹத்- ஒன்று

"இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர், கர்த்தர் ஒருவரே!"

உபாகமம் 6:4



கடவுள் ஒருத்தர் தான் என்று சொன்ன பின்னாடி, அவர் எப்படி மூனு நபர்களாக முடியும்? அப்படி ஆகிவிட்டால் மூன்றுகடவுள் என்றாகிவிடும்.

கிறிஸ்தவ போதகரின் கருத்து திரிபு

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமையினால்,  ஒரு கிறிஸ்தவ போதகர் ஒருவர் அரைகுறையாக ஹிப்ருவை படித்துவிட்டு, இதில் உள்ள "எஹத்" என்ற வார்த்தைக்கு வெறும் ஒருவர் என்ற அர்த்தம் இல்லை. மாறாக பன்மையை உள்ளடக்கிய ஒருமை என கருத்துக்கூறி,

ஆதாரமாக, ஆதியாகமம் 1:5 "சாயங்காலமும் விடியற்காலையும் ஆகிமுதலாம் (ஒரு) நாள் ஆகிற்று"

ஆதி 2:24 ,  
24 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 

தொடக்கநூல் 2:24


அதே போல எண்ணாகமம் 13:23

23 பின்னர் அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.

போன்ற வசனங்களை தம் ஆதாரத்திற்கு முன்வைத்து,  

ஒரு குலையில் நிறைய பழம் இருக்கலாம் அல்லவா? ஒரு நாளில் காலை, மாலை இருக்கலாமல்லவா? அதே போன்று ஒரு கடவுள் என்றால் அதற்குள் திரித்துவம் இருக்கவேண்டும். அத்தகைய வார்த்தையையே இங்கு வேதம் சொல்கிறது என்று போலியாக அடித்துவிடுகிறார்கள்.

இங்கே எஹத் என்பது ஒன்றுக்கு மேற்பட்டதை உள்ளடக்கிய ஒருமை. எனவே தேவன் ஒன்றுக்கு மேற்பட்டவரை உள்ளடக்கியவர் என்பதே இந்த போதகர் அடித்துவிட்ட கருத்து!!
--

எஹத் (எகாத்) என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?

நம் பதில்:


உண்மையில் "எஹத்" என்ற வார்த்தைக்கு "ஒன்று", " முதலாவது" என அர்த்தம் தரக்கூடியது.

இந்த போதகர்கள் கல்லத்தனமாக கூறுவது போல அர்த்தமல்ல,

இந்த "எஹத்" என்ற வார்த்தை வெறும் ஒன்று , ஒருவர் என்பதை குறிக்கவே பயன்படும்.

உதாரணமாக,


21 ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். 

தொடக்கநூல் 2:21
11 நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல" என்றனர். 

தொடக்கநூல் 42:11


13 அவர்கள் மறுமொழியாக "உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்" என்றனர். 

தொடக்கநூல் 42:13


16 எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்" என்றார். 

தொடக்கநூல் 42:16


19 நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். 

தொடக்கநூல் 42:19


10 நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்? 

மலாக்கி 2:10

🤞🤞🤞


ஒரு விலா எலும்பு , ஒரே தகப்பன், ஒருவன், ஒரே கடவுள் என்பவற்றில் இந்த எஹத் என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் வெறும் ஒருமையை மட்டுமே காட்டுகிறது. இவர்கள் சொல்வதுபோல அல்ல.


அவர்கள் குறிப்பிட்ட வசனங்களில் கூட, "ஒரு நாள்" என்றால் வெறும் நாளின் எண்ணிக்கை ஒன்று என்பது  தான் அர்த்தம்.

ஒரு குலை என்றால் குலைகளின் எண்ணிக்கை ஒன்று என்பது தான் அர்த்தம்

ஒரே உடல் என்றால், ஆதாமின் உடலிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதால், இருவரும் ஒரே உடலை சேர்ந்தவர்கள். அதாவது ஆதாமின் உடலை சேர்ந்தவர்கள். ஆதாம் கணவன், ஏவாள் மனைவி என்பதால் இதே பிரதிபலிப்பு மற்ற கணவன் மனைவியிடமும் இருக்கும் என்பதே கூறப்படும் அர்த்தம்.

அதே போன்று ஒரே குடும்பம் என்றால் , குடும்பத்தின் எண்ணிக்கை ஒன்று. ஒரு மனிதன் என்றால், கருதப்படும் மனிதனின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.

அதேபோல "ஒரு கடவுள்" என்றால்,  கடவுள் என கருதப்படும் இறைவனின் எண்ணக்கை "ஒன்று" தான். ஒன்றுக்கு மேல் கடவுள் இல்லை. வேறு எவரும் கடவுள் இல்லை என்பதே இதன் அர்த்தம்.

இதை மற்ற வசனங்கள் தெளிவு படுத்துகிறது
👇👇👇👇


2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். 


3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. 


4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 


5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். 
(யாத்திராகமம் 20:2-5)

இங்கே "நானே  கர்த்தராகிய (யகாவா ஆகிய) தேவன் (எலோஹிம்)

என்னை தவிர வேறு தேவர்கள் (எலோஹிம்) இருக்க கூடாது  என்று தெளிவாக கர்த்தர் சொல்கிறார்.

கடவுள் என்பவர் இவர்கள் கூறுவதுபோல பிதா,குமாரன்,ஆவி என இருக்குமாயின், " நாங்களே உன் கர்த்தராகிய தேவன், எங்களை தவிர வேறு தேவர்கள் இருப்பது கூடாது" என வந்திருக்கும்.

ஆனால் ஒருமையில் "நான்" "என்னை தவிர" என பாவிப்பதிலிருந்து அவர் மூவரின் சேர்க்கை அல்ல.. ஒரு குடும்பம் போல அல்ல என தெளிவாகிவிடுகிறது.

அதேபோல இன்னொரு வசனத்தை பாருங்கள்:
👇👇👇

35 "ஆண்டவரே கடவுள், அவரைத் ( הוּא)  தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. 

இணைச் சட்டம் உபாகமம் 4:35


39 மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் (  הוּא)   தவிர வேறு எவரும் இலர்" என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். 

இணைச் சட்டம் உபாகமம் 4:39


இந்த இருவசனங்களிலும் கடவுள் வெறும் தனியான நபர் என தெளிவாக விளங்குகிறது. இவர்கள் போலியாக இட்டுக்கட்டுவது போல அவர் மூவரின் சேர்க்கை என்றால்,  (hu- הוּא means "he") என்ற வார்த்தை பயன்படுத்தியிருக்க முடியாது.

இது வெறும் ஒரு ஆள் தான் ஒரே ஒருவர் தான் கடவுள். அந்த ஒருத்தரை தவிர வேறு கடவுள் இல்லை என்கிறது.

இதன்படி பரிசுத்த ஆவி, மற்றும் குமாரன் அதில் வரமாட்டார்கள்!!**

எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?


*எலோஹிம் என்றது ,  திரித்துவத்திற்கு ஆதாரமா❓

"எலோஹ்-இம்" என்பதன் நேரடி அர்த்தம் "தேவர்கள்" என இருந்தாலும், அது கண்ணியமானவர்களை குறிக்க பயன்படுத்தும்போது ஒருவராக இருந்தாலும் அப்படியே பயன்படுத்தும்.

உதாரணமாக,,


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக (  אֱלֹהִ֖ים-எலோஹிம்) வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான். 

யாத்திராகமம்
விடுதலைப் பயணம் 7:1


இங்கு ஒருவரான மோசேயே அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். காரணம் அது பன்மையை குறிக்கும் நோக்கத்தில் அல்ல. மாறாக கண்ணியத்திற்காக ஆகும்.


கடவுள் ஒருவர் என்பதையும், அவரை தவிர வேறு ஒருவர் இல்லை என்பதையும் ஏற்கனவே பார்த்துவிட்டோம். அங்கே தேவனை ஒருமையாக " அவன் (ஹூ- הוּא - he) என அழைப்பதிலிருந்தும் இதை புரிந்துகொள்ளலாம்!!

வேடிக்கை என்னவென்றால், புதிய ஏற்பாட்டில் தேவனை ஒருமையில் மட்டுமே காண கிடைக்கிறது.

கிரேக்க மொழி மூலபிரதியான Septuagint பிரதிகளில் தியோஸ் என ஒருமையில் தான் உள்ளது. 
 இது ஆதாரமல்ல

*.இயேசு ,பரிசுத்த ஆவி என்போர் யார் என பார்க்க முன்னாடி, குர்ஆன் திரித்துவத்தை போதிக்கிறதா என காண்போம்:

குர்ஆன் திரித்துவத்தை போதிக்கிறதா?

குர்ஆன்:

1. கூறு! அவன் அல்லாஹ் ஒருவனே!
(குர்ஆன் 112:1)

2. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை!
(2:225, 3:2, ......)

3.அவனே அனைவரையும் படைத்தவன். (2:21)

இப்படி பல வசனங்கள் இருக்கின்றன.

இதையெல்லாம் விட்டுவிட்டு, தமக்கு எதுபற்றி அறிவு இல்லையோ, அதில் அறிந்தவர்கள் போல சில வசனங்களை எடுத்துக்காட்டி அப்பாவிகளை வஞ்சிக்கின்றனர்.

அதில் குறிப்பாக,

50:16 "நிச்சயமாக நாமே மனிதனை படைத்தோம்..."

இங்கு "நாம் படைத்தோம்" என்று உள்ளதே. இது பன்மையாக உள்ளதே.. இது ஒரு இறைவனல்ல , ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருக்கவேண்டும் என வாதம் வைக்கிறார்கள்.


உண்மையில், இது அவர்களுக்கு ஆதாரமாகாது. ஒழுங்கான மொழி அறிவுகூட அவர்களுக்கு இல்லை!


ஏனெனில், இறைவனை பற்றி படர்க்கையில் (Third person) கூறும்போது "அவன்/he" என கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் என்றால் "ஹும்" என அதாவது "அவர்கள்/They" என பாவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது அவ்வாறு இல்லை. எனவே அது ஒரே ஒரு இறைவனே

அடுத்தது, இறைவனை முன்னிலையில் (second person) கூறும்போது, "அன்த" அதாவது "நீ" என ஒருமையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது! (உதாரணமாக குர்ஆன் 3:26,27)


ஆனால், தன்மையில் (first person) இல் பயன்படுத்தும்போது,  நேரடியாக பேசும்போது "நான், என்னிடம், எனக்கு" என ஒருமையில் பேசுவான். உதாரணமாக மூசாவோடு பேசிய போது



13. மேலும், "நான் உம்மை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஆகவே, அறிவிக்கப்படுபவைகளை நீ செவிமடுப்பாயாக!

14. நிச்சயமாக நான் தான் அல்லாஹ்;  என்னை தவிர வேறு இறைவன் இல்லை. ஆகவே, என்னையே வணங்குவாயாக! ...
(குர்ஆன் 20:13-14)

 10."... மூஸாவே பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்" 
(குர்ஆன் 27:10)

இவற்றின்படி இறைவன், தன்னை "நான்" என ஒருமையில் பேசுவதே இவர்களின் கூற்றை பொய்யாக்கிவிடும்.


ஆனாலும், சில இடங்களில் இறைவன் தன்னை "நாம்" என பன்மையில் சொல்ல காரணம், அது பேச்சு வழக்கில் உள்ள ஒரு விசயம் என்பதால் ஆகும். 

 

இவ்வாறு, தனிநபர்கள் கூட தன்னை "நாம்" என பன்மையில் கூறிக்கொள்வதுண்டு. அது கண்ணியத்தின் நிமித்தம் அவ்வாறு கூறிக்கொள்கிறார்கள்.

இதை குர்ஆனிலேயே காணலாம்:

மூஸா நபி , ஹிழ்ர் என்ற இறைத்தூதரிடம் சில விடயங்களை கற்றுக்கொள்ள சென்றார்கள். அதில் ஹிழ்ர் அவர்கள் ஒரு வாலிபனை கொன்றுவிட்டார்கள். அதுபற்றி அவர் கூறும்போது கூட, "நாம்" என்றே அவரும் சொல்கிறார். காரணம் பன்மை என்பதால் அல்ல!!

👇👇

80. "(அடுத்து) அந்த இளைஞனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன்  அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.




81. "இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

(18:80-81)


இதே போன்றே , இறைவனும் தன்னை கண்ணியமான முறையில், "நாம்" என சில இடங்களில் கூறுகிறான்.



எனவே இவர்களது வாதம் சுக்குநூறு ஆகிவிடுகிறது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்