திரித்துவம் 2


திரித்துவம் உண்மையானதா?
பாகம் 2

--------------------------------------------


பரிசுத்த ஆவி, இயேசு என்போர் யார்??

--------

1. பரிசுத்த ஆவி ( πνεῦμα- pneuma in greek,  ruach in Hebrew):

---- ----------------------

பரிசுத்த ஆவியை திரித்துவத்தில் ஓர் ஆள் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் பரிசுத்த ஆவி எத்தனை?



I.இறைவன் ஆவியாக இருப்பதாக பைபிள் கூறுவதால்,  இறைவன் சில இடங்களில் ஆவி என அறியப்படுகிறார்.  அதாவது பிதாவாகிய தேவனையே ஆவி என குறிப்பதுண்டு.



II.தேவ தூண்டுதல்கள், வல்லமை (ஆவி-வானலோகதூதர்கள் மூலம்):
 தீர்க்கதரிசிகளுக்கு வரும் தேவ தூண்டுதல்கள் பரிசுத்த ஆவி என பைபிளில் அழைக்கப்பட்டுள்ளது.




3 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.

விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 31:3



17 நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்; உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்; நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள்.
எண்ணிக்கை (எண்ணாகமம்) 11:17




25 பின்னர் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

26 இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை; ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்;
எண்ணிக்கை (எண்ணாகமம்) 11:25-26



34 ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது. அவர் எக்காளம் ஊதி, அபியேசர் குடும்பத்தவரைத் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைத்தார்.
நீதித் தலைவர்கள் (நியாயாதிபதிகள்) 6:34


6 ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை அவர் வெறுங்கையால் கிழித்தார். அவர் தாம் செய்ததைத் தம் தந்தைக்கும் தாய்க்கும் கூறவில்லை.
நீதித் தலைவர்கள் 14:6



13 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 சாமுவேல் 16:13

14 ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.

1 சாமுவேல் 16:14



இப்படி ஆவி தூண்டும், வல்லமை வரும்.
----------------------
----------------------

🛑. எப்படி இந்த ஆவிகள் உண்மையில் தீர்க்கதரிசிகளிடம் வருகின்றன?

👇👇👇


21 இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, 'நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.' என்றது. அதற்கு ஆண்டவர், 'அது எப்படி?' என்றார்.


22 அப்பொழுது அது, 'நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்' என்றது. அதற்கு அவர், 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்' என்றார்.

1 அரசர்கள் (இராஜாக்கள் ) 22:21-22



7 இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பி போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன்" என்றார்.
2 அரசர்கள் (இராஜாக்கள்) 19:7




20 அப்பொழுது ஒர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து, 'நானே போய் அவனை வஞ்சிப்பேன்' என்றது. 'எவ்வாறு?' என் று ஆண்டவர் அதைக் கேட்டார்.


21 அந்த ஆவி, 'நான் போய் அவனுடைய இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் பொய்யுரைக்கும் ஆவியாக இருப்பேன்' என்றது. அதற்கு ஆண்டவர் 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அவ்வாறே செய்' என்றார்.


22 எனவே, இதோ இறைவாக்கினர் இவர்களின் வாயில் ஆண்டவர் பொய்யுரைக்கும் ஆவியை இட்டுள்ளார். உண்மையில் ஆண்டவர் உனக்குத் தீங்கானவற்றையே கூறியுள்ளார்" என்றார்.



23 அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா மீக்காயாவின் அருகில் வந்து, அவரது கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு எவ்வழியாகச் சென்று உன்னிடம் பேசிற்று என்று சொல்" என்றான்.

2 குறிப்பேடு (நாளாகமம்) 18:20-23



வானலோகத்திலுள்ள ஆவிகள் /தேவதூதர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள். அவர்களே இந்த ஆவிகள். இவர்களாலே தூண்டுதல்கள் ஏற்படுகிறதாக பைபிள் சொல்கிறது

7 வானதூதரைக் குறித்து அவர் "தம் தூதரைக் காற்றுகளாகவும் (ஆவிகள்) தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்" என்றார். 

எபிரேயர் 1:7

13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, "நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கூறியதுண்டா? 

எபிரேயர் 1:13

14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா 

எபிரேயர் 1:14

இந்த வசனங்களின்படி , ஆவிகள் எனப்படுவோர் வானலோக தூதுவர்கள் ஆவார்கள் என தெளிவாகிவிடுகிறது. தள்ளப்பட்ட தூதர்கள் சாத்தான்கள் எனவும், தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்ட வானலோக தூதுவர்கள் மிக சிறப்பானவர்கள் என புதிய ஏற்பாட்டிலிருந்து புரிந்து கொள்கிறோம்!!


தீர்க்கதரிசிகளிடம் வரும்  தேவ ஆவிகள் இந்த வானலோக தூதர்கள் தான். அதில் இருவகை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
(1 யோவான் 4:1-3)

------

III. வானலோக தேவதூதர் ஒருவரை பரிசுத்த ஆவி என பவுல் அழைக்கிறார்: - இவர்தான் கிறிஸ்தவர்கள் நம்பும் பரிசுத்த ஆவி!!


IIவது வகையில் வானலோக தேவதூதர்களே ஆவிகள் என கண்டோம். அவர்கள் தான் தூண்டிவிடுகிறார்கள்!!


இனி பவுல் தூய ஆவியானவர் பற்றி என்ன சொல்கிறார் என பாருங்கள்:

----------------------

**பவுல் பரிசுத்த ஆவி பற்றி என்ன சொல்கிறார்?:**

----------------------


26 இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். 

உரோமையர் 8:26

27 உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். 

உரோமையர் 8:27

ஆவியானவர் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார் என இங்கு கூறப்பட்டுள்ளது.  அவர் திரித்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அவர் பரிந்து பேசவேண்டிய அவசியமில்லை.  காரணம் அவர் தேவனாகிய கர்த்தரை விட மிக கீழ்நிலையிலுள்ள ஒரு வானதூதுவரே அவர் என தெளிவாகிறது.

இயேசு மற்றும் பவுல் சீடர்கள் என்போர் சில இடங்களில் பிதா, குமாரன், வானலோக தூதுவர்கள் என கூறுகிறார்கள். அப்படி கூறும்போது பரிசுத்த ஆவி என்று கூறுவதில்லை. காரணம், வானலோக தூதுவர்களில் பரிசுத்த ஆவி உள்ளடங்குவார் என்பதினால் ஆகும்.

சில வசனங்களை காண்போம்:
👇👇

20 பாவம் செய்கிறவர்களை அனைவர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களும் அச்சம் கொள்வர். 

1 திமொத்தேயு 5:20

21 கடவுளின் முன்னிலையிலும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் தேர்ந்துகொள்ளப்பட்ட வான தூதர்களின் முன்னிலையிலும் உனக்கு நான் முன்னெச்சரிக்கையாகக் கூறுவது; நான் சொன்னவற்றைக் கடைப்பிடித்து வா. முன்கூட்டியே முடிவெடுக்காதே. நடுநிலை தவறாதே. 

1 திமொத்தேயு 5:21



இந்த வசனத்தில்,  பவுலடிகளார் இயேசு, கடவுள் (இயேசு கடவுள் அல்ல என இங்கேயே தெளிவாகிறது. ஏனெனில் கடவுள் ஒருவர் மட்டுமே), தேர்ந்துகொள்ளப்பட்ட வானதூதர்கள் முன்னிலையில் கூறுவதாக எழுதுகிறார். 

பரிசுத்த ஆவி வானதூதர்களிலேயே உள்ளடங்கிவிடுகிறார் என்பதால் தான் அவர் அதை குறிப்பிடவில்லை


இயேசு இவ்வாறு கூறுகிறார்:


26 என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும் போது வெட்கப்படுவார். 

லூக்கா நற்செய்தி 9:26
மாற்கு 8:38



இயேசு தனக்கும், பிதாக்கும், தூய வானதூதர்களுக்கும் உரிய மகிமையோடு வருவார் என்று இதிலிருந்து கூறப்படுகிறது.     

இங்கு அவர் பரிசுத்த ஆவிக்குரிய மகிமையோடு வருவார் என இயேசு கூறவில்லை . மாறாக தூயவானதூதர்களின் மகிமையோடு என்கிறார்.  தூயவானதூதர்கள் பரிசுத்த ஆவியைவிட சிறந்தவர்களா?

காரணம், பரிசுத்த ஆவி இந்த தூய வானதூதர்களில் ஒருத்தர் என்பதால் தான் கூறப்படவில்லை. 



அவர் வானதூதர், இயேசு வேறொருவர் என்பதால், உபாகமம் 4:39 கூறுகிறபடி

"வானத்தின்மேலோ, கீழே பூமியிலோ அவரை (hū- he) தவிர வேறு கடவுள் இல்லை "

எனவே வானத்திலுள்ள பரிசுத்த ஆவி, மற்றும் பிதாவின் வலப்பக்கத்திலுள்ள இயேசு என்போர் கடவுள் அல்ல..




----------------------

2.இயேசு

------ ---------------------- ----------------------



இயேசுவிடம் வேத அறிஞன் ஒருவன் வந்து கட்டளைகளில் முதன்மையானது எது என கேட்டார். 

28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார். 


29 அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். 

மாற்கு நற்செய்தி 12:28,29


கடவுள் ஒருவர் என்று இயேசு சொல்கிறார். அதாவது உபாகமம் 6:4 ஐ மேற்கோள்காட்டுகிறார்.

சரி அந்த ஒரே கடவுள் யாரென பழைய ஏற்பாட்டில் பார்த்துவிட்டோம். 


----------------------

**புதிய ஏற்பாட்டில் கடவுள் யாரென இயேசு சொல்கிறார்:**

----------------------


3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. 

யோவான் நற்செய்தி 17:3

இங்கே பிதா தான் ஒரே தேவன் என இயேசுவே சொல்லிவிட்டார்..

----------------------

**இயேசு அந்த பிதாவை தனக்கும் அவரே தேவன் என கூறுகிறார்:

----------------------


17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். 

யோவான் நற்செய்தி 20:17


----------------------

**அதுமட்டுமல்ல, பவுல்கூட இயேசுவுக்கு பிதா தான் கடவுள் என சொல்கிறார்:**

----------------------

3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். 



17 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! 

எபேசியர் 1:3,17


----------------------

**மேலும் அந்த தன் தேவனிடம் தன்னை காக்கும்படி வேண்டினார் இயேசு:**

----------------------

39 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் "என்று கூறி இறைவனிடம் வேண்டினார். 



42 மீண்டும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியேட ஆகட்டும்"இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 


44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 

மத்தேயு நற்செய்தி 26:39,42,44



மேலும் , பைபிளின் படி சிலுவையில் இருக்கும்போது, என் தேவனே! என் தேவனே! என கூப்பிட்டார்:


46 மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தினார். 

மத்தேயு நற்செய்தி 27:46


இதை தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்காக கூறினார் என்று பிதற்றுவோர் கவனத்திற்கு, அப்படி கூறினால் சங்கீதம் 22:1-3 இலுள்ளதன் சிறுபகுதியையே கூறியுள்ளார் மற்றது நிறைவேறவில்லை என்றாகிவிடும். இதனால் அது போலிதீர்க்கதரிசனம் ஆகிவிடும்.

இயேசு இங்கே நாடகமா ஆடுகிறார் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதாக கூறுவதற்கு? ஆனால் அவர் வருத்தப்பட்டு சத்தம்போட்டு கத்துவது சும்மா நடிப்புக்கா?

இவர்களின் இவ்வாதம் மிகவும் தவறு!!


----------------------

**.இயேசுவால் சுயமாக எதுவும் செய்ய முடியாது:**

----------------------

30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன். 

யோவான் நற்செய்தி 5:30


----------------------

**பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே அவர் உள்ளார்**

----------------------

இது இங்கு மட்டுமல்ல,  பரலோகத்திற்கு சென்ற பின்பு கூட அவர் தேவனாகிய பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார்:


34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! 

உரோமையர் 8:34


1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். 


2 நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. 

1 யோவான் 2:1-2

இங்கு அவரால் வெறும் பரிந்துரையே பண்ண முடிகிறது என கூறப்படுகிறது. அதிகாரமிருந்தால் அவரே மன்னித்துவிடுவார்

இவ்வுலகில் மன்னித்தார் என இவர்கள் அடித்துவிடுவார்கள். தேவதூதனும், தீர்க்கதரிசிகளும் பாவங்களை மன்னிப்பார்கள் என பழைய ஏற்பாடு சொல்கிறது. சீடர்கள் பாவத்தை மன்னிப்பார்கள் என இயேசுவே சொல்லியுள்ளார்


----------------------

**அவர் மரணித்த பின்பு கூட பிதாவுக்கு குறிப்பாக கடவுளுக்கு அடிபணிந்திருக்கிறார். :**

----------------------

27 ஏனெனில், "கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார். "ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது. 



28 அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார். 

1 கொரிந்தியர் 15:27-28


----------------------

**இயேசு கடவுளிடமிருந்து கேட்டறிந்ததை அறிவிப்பவரே:**

----------------------
40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை எங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! 

யோவான் நற்செய்தி 8:40


----------------------

**இயேசு கடவுளுக்கும் மனிதனுக்குமான இணைப்பாளர் மட்டுமே!:**

----------------------

5 ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 

1 திமொத்தேயு 2:5



இவற்றின்படி இயேசு தெளிவாக கடவுள் இல்லை என புரிந்துவிடுகிறது.

புதிய ஏற்பாட்டு யோவான் சுவிசேசம் மற்றும் பவுலுடைய கடிதங்கள் மற்றும் ஏனைய கடிதங்கள் மட்டுமே இயேசுவை சாதாரணமான வானலோக ஒருவரின் அவதாரம் போல சித்தரிக்கிறார்கள் அதாவது ஒரு தேவதூதனை போல சித்தரிக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக கடவுள் இல்லை என்பதை தெளிவாக கூறுகின்றன. சில இடங்களில் சாத்தானை எப்படி அழைப்பட்டுள்ளதோ (2 கொரிந்தியர் 4:4) , எரோது அழைக்கப்பட்டானோ அதே போல அழைக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் வைக்கும் வாதங்களுக்கும் ஏற்கனவே பதில் கொடுத்திருக்கிறோம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்