இயேசு கடவுள் அல்ல காரணங்கள் 1- 25

இயேசு ஒருநாளும் கடவுளாக முடியாது!!!

காரணம் என்ன தெரியுமா??
Part 1
--------------------------------------------




1.அவர் ஒருபோதும் தன்னை கடவுள் என கூறவில்லை. அதற்கு மாற்றமாக,  அவரை அனுப்பிய பிதாவையே கடவுளாக வாதிடஇருந்தார்கள்
பிதா ஒருவரே கடவுள் என கூறினார்.


"மெய்யான ஒரே தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்"
(யோவான் 17:3)


*****

2.அவர் அநேக இடங்களில் தன்னை தேவகுமாரனாகவே அறிவிக்கப்பட்டிரிக்கிறார். தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் ஆதிமுதல் ஆரம்பமின்றி இருந்திருக்க முடியுமா?  

மகன் என்றாலே தகப்பனால் உண்டாக்கப்பட்டவன் என்றே அர்த்தம். அதாவது உண்டாக்கப்பட்டவர் கடவுளாக முடியாது.


" அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 
(மத்தேயு  3:17)

இதைப்போன்றே இயேசுவுடன் நாமும் பிதாவிடம் அனந்தரம் கோருவோம் என பவுலடியார் சொல்கிறார்.

****


3.பரிசுத்த ஆவியின் பலத்தை இயேசுமேல் பொழிந்தவரே கடவுள் என்கிறது பைபிள்.  பலத்தை கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் சமமாவார்களா??


" 38 கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 
(திருத்தூதர் பணிகள் 10:38)

*****


4. இயேசு அப்போஸ்தலராகவும் தலைமை குருவாகவும் உள்ளார். கடவுளும் கடவுளின் அப்போஸ்லனும் ஒன்றாக முடியுமா?  தலைமை ஆசாரியன் எனும் குரு தேவனுடைய வீட்டில் ஊழியகாரன். ஊழியகாரனும் எஜமானும் ஒன்றாவதெப்படி?


" 1 எனவே, தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள். 
(எபிரேயர் 3:1)

*****

5. ஒரே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலுள்ள மனிதனான மத்தியஸ்தரே இயேசு ஆவார்.

அந்த ஒரே கடவுள் இவரல்ல என்றாகிவிடுகிறதோடு அவர் மனிதர் என தெளிவாகிறது

" 5 ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 
(1 திமொத்தேயு 2:5)
****


6.இயேசு தேவனால் அனுப்பபட்ட மீட்பர் ஆவார். அனுப்பபட்டவர் அனுப்பியவரோடு சமமாவதெப்படி??


" 14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். (1 யோவான் 4:14)

குறிப்பு: பழைய ஏற்பாட்டிலும் இரட்சகர் எனப்படும் மீட்பர்கள் இருந்தார்கள்


****

7.இயேசுவும் கடவுளால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலரே! அவர் தேவனுக்கு நம்பிக்கைகுரியவராக இருந்தார். அவரும் மோசேயின் வரிசையில் வந்தவரே!



" 2 கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். அவ்வாறே இவரும் தம்மை நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். 
(எபிரேயர் 3:2)
****

8.இயேசு தேவனிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார். கடவுளிடம் பரிந்து பேசுபவரும் , கடவுளும் சமமாக முடயுமா??


33 கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. 
(உரோமையர் 8:33)

34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! 
(உரோமையர் 8:34)

இது இயேசு உயிர்த்தெழுந்ததாக கருதப்படும் கதைக்கு பிறகுள்ள நிகழ்வு ஆகும். அப்போதும் இவரால் பரிந்துபேசவே முடிகிறதெனின் , இவர் எப்படி கடவுளாவார்?


****

9. பெண்ணுக்கு தலைமை ஆண். ஆணுக்கு தலைமை இயேசு. இயேசுவுக்கு தலைமை கடவுள் என்கிறது பைபிள்.

இதன்படி தெளிவாக அவர் கடவுளல்ல என பவுலடியார் கூறுகிறார்


" 3 ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என் விரும்புகிறேன்; ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்குத் தலைவர் கிறிஸ்து; கிறிஸ்துவுக்கோ தலைவர் கடவுள். 
(1 கொரிந்தியர் 11:3)

****

10. பவுல் போன்றவர்கள் கொரிந்தியருக்குரியவர்களாம். கொரிந்தியர்கள் இயேசுவுக்குரியவர்களாம். இயேசு கடவுளுக்குரியவராம்!


கடவுளுக்குரியவர் (கடவுளுக்கு சொந்தமானவர்) எப்படி கடவுளாக முடியும்?


21 எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. 

22 அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. 

23 ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர். 
(1 கொரிந்தியர் 3:21-23)

****

11.ஒரே கடவுளாகிய பிதா அனைவரிலும் பெரியவர், என்னைவிடவும் பெரியவர் என்று சொல்கிறார் இயேசு.


29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 

(யோவான்  10:29)


28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 
(யோவான்  14:28)


இதுவே அவர் கடவுளுக்கு சமமானவரல்ல என்பதை காட்டுகிறது!

****

12. தனக்கு தேவத்துவமே இல்லை என்பதை அவர் மறுத்துவிட்டார். 

 ஒருதடவை "நல்ல போதகரே!" என ஒருவர் அழைத்தார். என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? கடவுள் ஒருவரை தவிர நல்லவர் இல்லை என கூறுவதால் தான் கடவுளே அல்ல என மறுத்துவிட்டார்



16. அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;
17. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
(மத்தேயு 19:16-17)


****

13. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என இயேசு சொன்னதை (யோ 10:30) தவறாக சீடர்கள் புரிந்துகொள்ள கூடாது என்பதற்காக  பிதாவிடம் பிரார்த்தனை செய்து இந்த "ஒன்றாயிருக்கிறோம்" என்பது முரண்பாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதையே குறிக்கும் என்பதை தெளிவாக காட்டி, அதேபோல சீடர்கள் 12பேரும் பிதாவும் இயேசுவும் ஒன்றாக இருக்க வேண்டும் என வேண்டிகொண்டார்!

இது முரண்படு பிரிந்துவிடாதிருக்கும் ஒற்றுமையையே குறிக்கிறது என்பதை தெளிவாக்கினார். தான் கடவுளெனின் அதை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார் அல்லவா?




21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
(யோவான் 17:21-23)

****

14. பிதாவாகியவர் எப்படி சீடர்களுக்கு தேவனோ அதேபோன்று தனக்கும் தேவன் தனக்கும் கடவுள் என கூறி தனக்கு கடவுள் தன்மை இல்லை என மறுத்துவிட்டார்!

இல்லாவிட்டால், அப்படி கூறியிருக்க மாட்டார்!!



17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் 20:17)

****

15.பவுல் கூட இயேசுவை தேவனிலிருந்து பிரித்து, தேவன் என்பவர் எப்படிபட்டவர் என சொல்கிறார்! அவரே பிதா!!



16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


இயேசுவை மக்கள் கண்டனர். பைபிளின் கூற்றுப்படி மரித்தார். அவர் தேவனல்ல

****

16. கடவுள்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள் ஆனால் நமக்கு ஒரே தேவனே உள்ளார். அவர்தான் பிதா என்கிறார் அதே பவுலடியார்.

அதேபோல கர்த்தராக (ஆண்டவராக) இயேசு உள்ளார் என்கிறார்.

கர்த்தர் என்பது கடவுளுக்கு மட்டும் உரிய ஒன்று அல்ல..   இதன் அர்த்தம் ஆண்டவர் என்பதாகும்!


 5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்
(1 கொரிந்தியர் 8:5-6)



இங்கே இயேசுமூலம் சகலதும் உண்டானது என பவுல் தப்பாக புரிந்துகொள்ள காரணம், ,

தேவன் அனைத்தையும் தன் வார்த்தையாகிய "ஆக கடவது" என்று சொல்வதன்மூலம் படைத்தார். (ஆதி 1)

இயேசுவானவர் வார்த்தை மாம்சமானதால் உண்டானவர் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.

வார்த்தை மாம்சமாக முன்பு இயேசு என்ற மனிதர் இருக்கவே இல்லை!!  

அப்படியிருக்க அவர்மூலமாக சகலதும் உண்டானது என கூறுவது அபத்தமாகும். ஏனெனில் அவர் இருக்கவில்லை!! அவர் கி.மு. 4 இல் மரியாளின் கர்ப்பத்தில் படைக்கப்பட்டவர் ஆவார்!!

*****


17. இயேசுவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதே!  கொடுக்கப்பட்டுள்ளது என்றாலே அவராகவே  அதற்கு உரிமையானவர் அல்ல என்று தெளிவாகிறது.


18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(மத்தேயு 28:18) 


இயேசுவுக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஒட்டுமொத்த அதிகாரங்களும் அல்ல.. அவருக்கு தேவையான அவசியமான அதுகாரங்கள் மட்டுமே!!

இதை பைபிளே சொல்கிறது

அவர் இன்றுவரை பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார். இதன்படி அவருக்கு சகல அதிகாரமும் இல்லைனு தெளிவாகிறது.
(1 யோவான் 2:1-2 , ரோமர் 8:34)


****
18. அவர் பிதாவையே தொழுதுகொண்டார் ஜெபித்தார்.  பிதாவிடம் உதவி தேடினார்!


"அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி , இராமுழுதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிகொண்டிருந்தார்."
(லூக்கா 6:12)


"ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு ஏலி!ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர் என்று அர்த்தமாம."
(மத்தேயு 27:46)


"சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்க்ககூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்ததின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்."
(மத்தேயு 26:39)


****

19. பிதாவிடமே ஜெபம் பண்ணும்படியாகவே ஜெபத்தை கற்றுகொடுத்தார்! பிதாவிடம் கேட்டுகொள்ளுங்கள் என்றே சொன்னார்.



யோவான் ஸ்நானன் ஜெபம் பண்ண கற்றுகொடுத்ததது போல எமக்கும் கற்று தாருங்கள் என சீடர்கள் கேட்டபோது,


"அதற்கு அவர்: நீங்கள் ஜெபம் பண்ணும்போது:  பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக, 
(லூக்கா 11:2)

என கற்பித்தார்.


****

20. என் நாமத்தில் பிதாவிடம் கேளுங்கள் என்றே அவர் கற்பித்தார். பிதா தான் தருவார் என்றே போதித்தார். இயேசு போனபின்பு இயேசுவிடம் எதையும் கேட்கமாட்டீர்கள் என சீடர்களக்கு சொன்னார்.




23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 
யோவான் 16:23


*****

21. சத்திய ஆவியை அனுப்புவதற்கு கூட பிதாவிடம் வேண்டிக்கொள்வேன் என்று தான் சொன்னார். 

16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 
யோவான் 14:16

****

22. உண்மையாக தொழுதுகொள்பவர்கள் பிதாவை தான் தொழுவார்கள் என்று சமாரிய பெண்ணிடம் சொன்னார். உண்மையோடும் ஆவியோடும் பிதாவை தான் தொழ வேண்டும்


23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 
யோவான் 4:23


***

23. தேவனாகிய கர்த்தர் ஒருவரை சாஷ்டாங்கமாய் பணிந்து ஆராதனை செய்ய வேண்டும் என்பதே இயேசு சொல்வது!!


9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 
மத்தேயு 4:9

10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 
மத்தேயு 4:10



இதை சொன்னால், இயேசு குழந்தையாக இருந்தபோது சிலர் அவருக்கு பணிந்துகொண்டார்கள், ரோம சிப்பாய்கள் கேலியாக தொழுதுகொண்டார்கள் என்ற வசனங்களை கிறிஸ்தவர்கள் காட்டுகிறார்கள்.


முதலில் இயேசுவை பணிந்துதொழுதுகொண்டார்கள் என்பது proskeneo  என்ற கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தலையை நிலத்தில்வைத்து பணிந்துகொள்வதை தான் குறிக்கிறது.

இதே போல யூதர்கள் தம் ராஜாக்களை புனிதர்களை பணிந்துகொள்வார்கள்.

உதாரணமாக,

20 அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான், அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு, 
1 நாளாகமம் 29:20



அதேபோன்று யாக்கோபு ஏசாவை 7 முறை  வணங்கினான். மனைவி பிள்ளைகளும் வணங்கினர்

3 தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். 
ஆதியாகமம் 33:3

6 அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 
ஆதியாகமம் 33:6

7 லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 
ஆதியாகமம் 33:7



இது அவர்களிடையே சாதாரணமாக இருந்த வணக்கமாகும். இதை மரியாதைக்காக கண்ணியத்திற்காக பணிந்துதொழுநுகொள்வர்.


ஆனால், இறைவனாக பணிந்துகொள்வதே தடுக்கப்பட்டதாகும்!


உதாரணமாக ஒருவன் சிலைக்கு முன்னால் நின்று அதை வணங்கினால், அது மரியாதைக்கான வணக்கமல்ல.. கடவுளாக வணங்குவதாகும்


அதேபோல வேறு மிருகங்களை வணங்கினாலும் இதே போன்று தான் இறைநிராகரிப்பாக இருக்கும்.


அதேபோன்று சூரிய சந்திர நட்சத்திரங்களை வணங்குவதும் இதுபோன்ற கண்ணியத்திற்குரிய வணக்கமன்று. அவை கடவுளாக கருதி வணங்குவதாகும்!


ஆனால், ஒரு உயிரோடுள்ள மனிதனை வணங்குவதென்பது மரியாதைக்கு செய்வதாக தான் இருக்கும்.

அது போன்றே இயேசுவுக்கு செய்யப்பட்டது. 

சாத்தான் தன்னை கடவுளாக வணங்கும்படியே கேட்டுகொண்டான். ஏனெனில் அவன் தன்னை உயர்த்தி தேவனாக்கிகொள்ள நினைத்ததை ஏசாயா புத்தகம் 14, எசேக்கியேல் 28 போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது.


இத்தகைய இறைவனுக்குரிய வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செலுத்தவேண்டும்!!! அதையே இயேசு  உன் தேவனாகிய கர்த்தரை மட்டும் சாஷ்டாங்கமாக  பணிந்து கொள்ளவேண்டும் என எழுதியிருக்கிறதே என கூறினார்.

இங்கும் தனக்கு அத்தகைய வணக்கம் தகாது என மறுத்துவிட்டார்


****

24. சீடர்கள் கூட, பவுல்கூட இயேசுவை தொழுதுகொள்ளாமல் ஜெபம் பண்ணாமல் பிதாவிடமே வேண்டினர்! இயேசுவை ஸ்தோத்திரிக்காமல் பிதாவையே ஸ்தோத்திரம் செய்தனர்!


"நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  மூலமாய. தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்... ".
(ரோமர் 7:25)


" நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,"
எபேசியர் 3:15

****

25.  குமாரனும் தேவதூதர்களும் ஞானத்தில் பூரணமில்லாதவர்கள்.

பிதா ஒருவரே சகல ஞானமும் உள்ளவர்!

"அந்த நாளையும் நாழிகையையும் பிதா ஒருவரை தவிர மற்றொரிவனும் அறியான். பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்!



தொடரும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்