இயேசு இறைமகனா??
இயேசு இறைமகனா??
------------------------------------------------இயேசுவை கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் இது பழைய ஏற்பாட்டில் கடவுளை வணங்கிய இறையடியார்களுக்கு வழங்கப்பட்ட பெயரே ஆகும்.
மற்றபடி வேறு எதுவும் இல்லை.
பல கிறிஸ்தவர்கள் , இயேசு ஆரம்பமே இல்லாமல் இருக்கிறார் என்றும் கடவுள் என்றும் நம்புகிறார்கள்.
ஆனால் இயேசு தன்னை எங்குமே கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை.
மேலும் இயேசு கி.மு. 4வது வருடத்தில் கன்னி மரியாளிடம் பிறந்தார்.
இதைப்பற்றி யோவான் சொல்லும்போது,
"வார்த்தை மாம்சமானது/மனிதரானது" (யோவான் 1:14)
அதாவது இயேசு கி.மு. 4 வரை பூமியிலோ வானத்திலோ எங்குமே இருக்கவில்லை
அதாவது வார்த்தை மாம்சமாக முனஆகும் யேசு என்ற நபரே இல்லை!!
சரி... வார்த்தை என்பது யாது??
இதைப்பற்றி
( http://answeringchristian.blogspot.com/2020/01/blog-post.html) இல் பார்வையிடவும்!
தேவன் தன் கட்டளையான "ஆக-கடவது" என்ற வார்த்தைமூலம் சகலதையும் படைத்தார்.
அதாவது அவர் படைக்க நாடினால், "ஆக கடவது" என்று கட்டளையிடுவார். அது உடனே ஆகிவிடும்.
¤தேவன் வெளிச்சம் உண்டாக கடவது என்றார். அது உண்டாயிற்று.
(ஆதி 1:3)
¤ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாக கடவது என்றும் அது ஜலத்திலிருந்து ஜலத்தை பிரிக்க கடவது என்றார்
(ஆதி 1:6)
இது போன்று ஆதி 1:9 1:11 1:14 இலும் காணலாம். அதாவது பூமி தோன்றியது வானம் தோன்றியதெல்லாம் இப்படி என அங்கே கூறப்பட்டுள்ளது.
மேலும்,
சங்கீதம் 148:5
"அவைகள் கர்தரின் நாமத்தை துதிக்க கடவது. அவர்
#கட்டளையிட அவைகள் படைக்கபட்டது"
சங்கீதம் 33:6 "கர்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனைகளும் உண்டாயின"
இவற்றின்படி பிதாவாகிய ஏக இறைவன் படைக்க நாடியபோது "ஆகக்கடவது" (அரபியில் "குன்" என்று குர்ஆன் சொல்கிறது) என கட்டளையிட்டார்.
அவை உடனே தோன்றிவிட்டன. உண்டாகிவிட்டன.
இந்தபடி இயேசுவை உண்டாக்க நாடிய இறைவன், மரியாளிடம் கர்ப்பமாவதற்கு ஆவியை அனுப்பி செய்யவேண்டியதை கட்டளையிட்ட பின்,
"ஆக கடவது" என்ற கட்டளையை மரியாளிடம் போட்டார். அதாவது கர்ப்பம் தரித்து இயேசு பிறக்கட்டுமாக! என்பதே அதன் அர்த்தம்.
இதனால் இயேசு மரியாளிடம் பிறந்தார்.
இங்கே ஆக-கடவது என்ற வார்த்தை மூலம் மாம்சம்/மனிதர் மரியாளின் வயிற்றில் தோன்றியதால் தான் "வார்த்தை மாம்சமானது/மனிதரானது" என யோவான் 1:14 சொல்கிறது. மேலும் இயேசு இவ்வார்த்தையின் மூலமாக மாம்சத்தில் பிறந்ததால் தான் கடவுளின் வார்த்தை என அழைக்கப்படுகிறார்.
ஆனால் கி.மு. 4 இற்கு முன் இயேசுவோ இயேசுவின் மாம்சமோ இருக்கவில்லை.
-----------------------
இயேசு கன்னியிடம் பிறந்ததால் இறைமகனா??
-----------------------இயேசு கன்னி மரியாளிடம் பிறந்தார்.! ஆண்துனையின்றி மரியாள் கருவுற்றார்.
இதனால் நிறைய பேர் அன்னாரை இறைமகன் என வாதிடுகிறார்கள்.
ஆனால் இதற்காக ஒருவரை இறைமகன் என வாதிடுவது என்பது அர்த்தமற்றது ஆகும்.
ஏனெனில் ஆதாமை இறைவன் தாயும் தந்தையும் இல்லாமல் தன் சாயலில் படைத்தார்.(ஆதி 1:26-27)
ஏவாளை ஆதாம் என்ற ஆணிலிருந்து படைத்தார்.(ஆதி 2:20-24)
அதேபோன்று தான், தன் திட்டப்படி இயேசுவை மரியாளிடம் படைத்தார்.
இதன் அர்த்தமாவது இயேசு கருவில் மரியாளின் தொப்புள்கொடியால் மரியாளின் இரத்ததை உறிஞ்சியே வளர்ந்தவர் ஆவார்.
ஆதாமோ மண்ணினால் உண்டாக்கப்பட்டார். ஏவாளோ ஆதாமின் எலும்பிலருந்து உண்டாக்கப்பட்டார்
அதேபோன்று தான் இயேசு மரியாளிடம் இறைவனால் உண்டாக்கப்பட்டார்.
இக்காரணத்துக்காக அவரை இறைமகன் என சொல்வதானால், அதற்கு மிக தகுதியானவர் ஆதாமே! ஏனெனில் அவரை இறைவன் நேரடியாக படைத்தார். ஆனால் இயேசுவை பெண்ணை கருவியாக ஆக்கி படைத்தார்.
எனவே இதற்காக அவரை இறைமகன் என வாதிடுவது அபத்தம் ஆகும்.... அப்படி வாதிட்டால் ஆதாமே முதலிடம் வருவார்
-----------------------
இறைவனுக்கு மகன் உண்டாக முடியுமா??
------------------------இயேசு என்பவர் உட்பட சகல மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனது படைப்புகளே!
அப்படியிருக்க இறைவனுக்கு மகன் உண்டாக வேண்டுமானால், இறைவனுக்கு மனிதர்களில் மனைவி அவசியம். ஏனெனில் பெண்ணே பிள்ளை பெறுகிறாள். கணவன் அல்ல..
மனைவியிடம் பிறந்தாலே பிள்ளை... இல்லாவிட்டால் அது படைப்பு.
மனைவியே அவனுக்கு இல்லாதபோது எப்படி பிள்ளை/மகன் உண்டாக முடியும்??
நிச்சயமாக முடியாது.
மரியாள் இறைவனது மனைவி அல்லவே... இறைவன் தூய்மையானவன்.
அப்படியிருக்க இயேசு இறைவனுடைய மகன் ஆக முடியாது.
-------------
இயேசுதன்னை இறைமகன் என கூறிய அர்த்தம்?
-------------
பைபிளில் யேசு எந்த அர்த்தத்தில் இறைமகன் (son of god) தன்னை அழைக்கிறார் என்று அவரே சொல்கிறார்.
33 யூதர்கள் மறுமொழியாக, "நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்றார்கள்.
34 இயேசு அவர்களைப் பார்த்து, "'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்" என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?
35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.
36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை " இறை மகன் "என்று சொல்லிக் கொண்டதற்காக "இறைவனைப் பழித்துரைக்கிறாய்" என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
யோவான் 10:33-36
இதில் 36வது வசனத்தில் இயேசு தன்னை இறைமகன் என கூறியது எந்த அர்த்தம் என கூறுகிறார்.
அதாவது,
1. அவர் கடவுளால் அர்ப்பணிக்கப்பட்டார்.
2.கடவுளால் உலகுக்கு அனுப்பப்பட்டார்
(இதேபோல சீடர்களையும் உலகுக்கு அனுப்புவதாக இயேசு சொல்கிறார்.
14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.
16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.
யோவான் 17:14,16,18)
இந்த காரணத்துக்காகவே அவர் தன்னை இறைமகன்/தேவகுமாரன் என தன்னை கூறுகிறார்.
அதாவது தேவனால் அர்ப்பணிக்கப்பட்டு உலகுக்கு அனுப்பப்பட்டதாலேயே.
மற்றபடி எதுவும் அல்ல..
---------
இயேசு மட்டுமா இறைமகன் என அழைக்கப்படிருக்கிறார்??
---------------------*இஸ்ரேல்
22 நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.
(விடுதலைப் பயணம் 4:22
யாத்திராகமம் 4:22)
இங்கே இஸ்ரேலை தன் மகன் என்கிறார்.
*இங்கே இஸ்ரேலை தலைப்பிள்ளை என சொல்லிவிட்டு அதற்கு முரணாக
9 அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.
எரேமியா 31:9
எப்ராயீமை தலைப்பிள்ளை என்கிறார்.
மேலும் இஸ்ரவேலை ஓசியா 11:1-2 இலும் தன் மகன் என்கிறார்.
* ஆதாமையும் கடவுளின் மகன் என்கிறது
38 ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்.
லூக்கா நற்செய்தி 3:38
*விசுவாசிகளை தன் குமாரன் என்கிறார்
18 மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்; நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்" என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.
2 கொரிந்தியர் 6:18
* *தாவீதை தன் மகன் என்றும் பெற்றெடுத்தேன் என்றும் சொல்கிறார்.
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:7
*சொலமோனை தன் மகன் என்கிறார்.
14 நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.
2 சாமுவேல் 7:14
15 உன் முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்று அவனை விலக்கமாட்டேன்.
2 சாமுவேல் 7:15
இப்படி நிறைய பேர் தேவகுமாரர்கள் இறைமகன்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக ஆதியாகமம் 6:2-3
-------
ஏன் தேவ குமாரர்கள் என அழைக்கபடுகிறார்கள்?
---------------------தேவகுமாரர்கள் என அவர்கள் அழைக்கப்பட காரணம், தேவனை அறிந்தவர்கள் அவரை தொழுது கட்டுப்பட்டு வாழந்தவர்கள் என்ற அர்த்தத்தில் ஆகும்.
இதேபோல சிலைகளை தேவதைகளை வணங்கியோரை அவர்களின் பிள்ளைகள் என பைபிள் அழைக்கிறது
11 யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்; இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய தூயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.
மலாக்கி 2:11
யூதா மக்கள் அந்நிய கடவுள்களை வணங்கியோரை திருமணம் முடித்தனர். அதை வேற்று தெய்வத்தின் மகளை மணந்ததாக சொல்லப்படுகிறது.
பேலியாலை வணங்கியோர் பேலியாலின் மகன்கள் பிள்ளைகள் என நியாயாதிபதிகள் 19:22 இல் கூறப்பட்டுள்ளது.
அதே போன்று கடவுளை அறிந்தவர்களையும் கடவுளை வணங்குவோரையும் கடவுளின் பிள்ளைகள்/குமாரரகள் என அழைக்கப்பட்டுள்ளது.
(ஆதியாகமம் 6:2,4 , யோபு 1:6..38:7 உபாகமம் 14:1 )
மேலும் தேவனை நம்பியோருக்கு தேவனை பிதாவாக இயேசு சொல்கிறார்.
48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்
மத்தேயு நற்செய்தி 5:48
*மேலும் இயேசு தேவனை என் பிதா உங்கள் பிதா என் தேவன் உங்கள் தேவன் என்று சொல்கிறார்.
17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார்.
யோவான் நற்செய்தி 20:17
அப்படியிருக்க இயேசுவை மட்டும் இறைமகன் என கூறுவது தப்பு ஆகும்.
--------
இயேசு ஒரே மகனா?
-------------------இயேசு ஒரே மகன் என யோவான் 3:16இல் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மேலே நிறைய பேர் இறைமகன்கள் என கூறப்பட்டுள்ளதை பார்த்தோம்.
அதேபோன்று, இயேசு தன்னை இறைமகன் என எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை யோவான் 10:'33-36 இல் இயேசு சொன்னதை பார்த்தோம்.
இயேசுவை ஒரே மகன் என யோவான் உட்பட பலர் நினைக்க காரணம் என்னவென்றால், பழைய ஏற்பாட்டில் "குமாரன்/மகன்" என்று கூறப்படுவதையெல்லாம் இயேசுவையே குறப்பதாக நம்பினர்.
உதாரணமாக, ஓசியா 11:1-2 இல் இஸ்ரவேலை குறித்து தன் மகன் என சொல்வதை, இயேசுவை குறித்த தீர்க்கதரிசனம் என மத்தேயு எழுதுகிறார்.
சங்கீதம் 2:7 இல் தாவீதை குறித்து சொல்லப்பட்ட வசனத்தை இயேசுவை குறிப்பதாக பவுல் எபிரேயர் 1 இல் கூறுகிறார்.
அதேபோல 2 சாமுவேல் 7:14-15 இல் சொலமோனை குறித்து மகன் என சொல்லப்பட்டதை இயேசுவை குறித்து சொன்னதாக எபிரேயர் 1 இல் எழுதுகிறார்.
இப்படி பழைய ஏற்பாட்டில் தனிநபரையோ தனி இனத்தையோ குறித்து இறைமகன்/தேவகுமாரன் என வரும் வசனங்களையெல்லாம்இயேசுவை குறிப்பதாக இவர்கள் போதிய ஞானமின்றி நினைத்துக்கொண்டனர். (ஆவிதூண்டி எழுதினர் என கிறிஸ்தவர்கள் அடித்துவிடுவர்)
இதனால் தான் இயேசுவை ஒரே குமாரன் என யோவான் 3:16இல் யோவான் கூறுகிறார். இயேசு அல்ல.
ஆனால் இயேசு தன்னை இறைமகன் என சொன்ன அர்த்தம் ,யோவான் 10:33-36 இல் இயேசுவே தன் வாயால் சொல்கிறார்
-----------
தேவ குமாரன் என்பது உவமையே!!
----------------தேவனை வணங்கியோரும் அறிந்தோரும், இயேசுவும் தேவகுமாரர்கள் என அறியப்படுவது உவமையே ஆகும்.
இதேபோன்று கணவன் மனைவி உவமையும் உள்ளது.
அதாவது தேவன் தன்னை கணவனாகவும், அடியார்களை தம் மனைவியாகவும் உருவகித்து பைபிளில் கூறப்பட்டுள்ளது. (ஓசியா 2:2,16-19, எரேமியா 3:7-10)
அதேபோன்று தான் பிதா-குமாரன் என்ற உவமையும் பாவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாம் மற்றபடி நேரடி அர்த்தம் கொள்வது தவறான ஒன்று ஆகும்
--------------
இயேசு இறைவனின் அடியாரே!!
-------------------13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்;துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.
திருத்தூதர் பணிகள் 3:13
26 ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.
திருத்தூதர் பணிகள் 3:26
இறைவனின் ஊழியரை இறைவனின் மகன் என்ற அடையாளத்தை கொண்டு தப்பாக புரிந்துவிட்டவர்கே அதிகமாக உள்ளனர்.
சத்தியத்தை தேடுவோர் அதை கண்டடைவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக