அல்லாஹ் சந்திர கடவுளா? மாட்டு கடவுள் யார்? -மிசநரிகளுக்கு மறுப்பு!
அல்லாஹ் சந்திர கடவுளா?
மாட்டுக்கடவுள் யார்?
------------------------------------------------ஒரு கிறிஸ்தவ மிரசநரி Morey என்பவர் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் சந்திரக்கடவுள் என பிதற்றி தனக்கு சான்றாக அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரேபிய கோவில்களை பற்றி ஆராய்ச்சியாளர்கள் எழுதியவற்றை திரித்து தனக்கு சாதகமாக வளைத்து தன்னை அறிவாளிபோல காட்டவேண்டும் என்பதற்காக புத்தகம் எழுதியிருந்தார்..
இதை அப்படியே காப்பியடிக்கும் கிறிஸ்தவ கும்பல், முஸ்லிம்களிடம் ," நீங்கள் வணங்குவது சந்திர கடவுள் " என கூறி பினாத்துவதுண்டு.
இவர்கள் வாதிடும் இவ்வாதங்களின் அடிப்படையை பார்த்தால்,
முஸ்லிம்களின் பள்ளிகளில் பிறை வடிவ சின்னம் குப்பாக்களில் இஸ்லாமிய சின்னமாக அமைக்கப்பட்டிருப்பதே.
ஆனால் இது ஆரம்பம் முதல் இருந்த ஒன்று அல்ல... பிற்காலத்தில் கட்டிடகலையில் இதை சேர்த்துக்கொண்டார்கள்.
ஆனாலும் முகம்மது நபியிற்கு முன்னால் அரேபியாவில் சில இடங்களில் கோவில்களில் சயின்/சீன் எனும் சந்திரகடவுள் அல்லது சூரிய கடவுள் வணங்கப்பட்டது உண்மையே! ஆனால் அதன் பெயர் "அல்லாஹ்" என்பது அல்ல!!
மாறாக சயின்/சீன் என்பதாகும்... இதுகூட அரேபியாவின் எல்லா இடங்களிலும் இருக்கவில்லை... குறிப்பாக முகம்மது நபி பிறந்த நகரங்களில் இருக்கவில்லை..
மேலும் மக்காவில் பிரபல்யமான முன்னுரிமையளிக்கப்பட்ட விக்கிரகம் இருந்தது.. அது தான் "ஹுபல்" எனும் விக்கிரகம்.
ஆனால் இதுகூட சந்திர கடவுள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!
சிலர் Hazor எனும் பலஸ்தீன எல்லையிலுள்ள கோவிலில் சந்திர கடவுள் வணங்கப்பட்டதாக வாதிடுகிறார்கள். ஆனால் இந்த வாதம்கூட அங்கு பிரார்த்திப்பவர் பிறைவடிவ மாலை ஒன்றை கழுத்தில் அணிந்திருப்பதை அடிப்படையாக கொண்டே ஆகும்.
ஒரு பேச்சுக்கு அந்த பிறை சந்திர கடவுளையே குறிக்கும் என கருதினாலும் இதற்கும் அரேபியர்களின் மதங்களுக்கு சம்பந்தமே இல்லாதது ஆகும்...
ஏனெனில் இவை கானானியர்களின் இடங்கள் ஆகும்... கானானியர்கள் வணங்கியது ஆகும். இதுகூட யோசுவா மூலம் அழிக்கப்பட்டதாக கிறிஸ்தவ மிசநரிகளே கூறுகிறார்கள்.
அதேபோல சேபாவின் இராஜ்ஜியத்தின் வீழ்ச்சி காலத்தில் இருந்த கோவிலில் அதாவது யெமன் பிரதேசத்தில் அல்மகாஹ் (Almaqah) எனும் விக்கிரகத்தை வணங்கியுள்ளனர்.
இது சந்திர கடவுள் என இவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.. தற்காலத்தில் அறிஞர்கள் ஆய்வாளர்கள் இந்த அல்மகாஹ்வை சூரிய கடவுள் என்றே கருதுகிறார்கள்.
பல விக்கிரகங்களை வணங்கிய அரேபியர் சந்திரகடவுளை வணங்கியிருக்கலாம்.
ஆனால் அதற்கும் அல்லாஹ் என்ற பெயருக்கும் தொடர்பே இல்லை!!
அல்லாஹ் என அவை அழைக்கப்பட்டதாகவும் எந்த ஆதாரமும் இல்லை.
மேலும்,
அல்லாஹ் என்பது கடவுளை குறிக்கும் வார்த்தை ஆகும்.
இதே போல ஹிப்ருவில் "எலோஹிம்" அராமிக்கில் "எலாஹா" கிரேக்கத்தில் "தியோஸ்" , தமிழில் "கடவுள்/தேவன்/இறைவன்" , ஆங்கிலத்தில் "God" என கூறப்படும்.
ஆரம்பத்தில் சிலைகளை வணங்கிய தமிழர்கள் "கடவுள்/இறைவன்/தேவன்" என தம் விக்கிரகங்களை தான் அழைத்தனர்.
அதேபோல ஆங்கிலத்தில் , ஆப்ரகாமிய மதங்கள் தோன்ற முன் , "God" என்பது சிலைகளுக்கும் இயற்கைக்கும் தான் பாவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல எபிரேயத்தில்கூட "எலோஹிம்" என்ற வார்த்தை , மோசேக்கு முன்பாக சிலைகளுக்கும் விக்கிரகங்களுகுமே பாவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல "அல்லாஹ்" என்ற கடவுளை குறிக்கும் அரேபிய வார்த்தையில், தாம் வணங்கும் கடவுளை அரேபியர்கள் குறிப்பிட்டிருந்தால்கூட , அவை சிலைகளுக்கு உரிய சொந்தமான பெயர் அல்ல!!
ஆகவே ,
மனிதர்கள் பேசும் மொழியில் தான் இறைவனை பற்றி ஒரு நபியோ ரசூலோ கூறமுடியும்.
அவரது மொழியில் இறைவனை "அல்லாஹ்" என அழைத்திருந்தால், அந்த வார்த்தையால் தான் குறிப்பிட இயலும்.
நாம் இறைவன் என்றோ கடவுள் என்றோ இப்போது பாவித்தால், அது விக்கிரகங்களை குறிப்பதாக அர்த்தமா? இல்லையே!!! ஏக இறைவனையே நாம் அவ்வாறு பாவிப்போம்.
அதேபோல God என நாம் சொன்னால், இதனால் நாடப்படுவது ஆங்கிலேயன் வணங்கிய கடவுள் என்பதா? அல்லது ஏக இறைவனையா??
அதேபோல பைபிளில்,
ஆதியிலே "எலோஹிம்" வானம் பூமியை படைத்தார் .(ஆதி 1:1)
இதனால் எலோஹிம் என நாடப்படுவது அக்கால சிலைகளா?? அல்லது ஏக இறைவனா?
அதேபோல புதிய ஏற்பாட்டில், "தியோஸ்" என கடவுளை குறிக்க பாவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆதி கிரேக்கர்கள் "தியோஸ்" என்ற வார்த்தையை தம் விக்கிரகங்களுக்கு தான் பாவித்தார்கள் என்பதால், புதிய ஏற்பாட்டின் இறைவன் கிரேக்கர்களின் சிலைகள் என அர்த்தமா?
அதேபோல ஒரு கிறிஸ்தவர், "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" (ஆதி 1:1) என கூறினால்,
தேவன் என்பது கிறிஸ்தவம் வர முன்னாடி , இந்துக்கள் தம் சிலைகளை விக்கிரகங்களை அல்லது இயற்கையை குறிக்க பயன்படுத்தியவை ஆகும்.
இதனால், கிறிஸ்தவர்கள் இந்துக்களின் விக்கிரகங்களையே வணங்குகிறார்கள் என ஒப்புக்கொள்வார்களா?
வேடிக்கை என்ன வென்றால்,
அல்லாஹ் என்பது சந்திர கடவுள் என பிதற்றிய மேற்கத்திய கிறிஸ்தவ கும்பலும் அவர்களின் அடிவருடிகளும், அவர்களின் சொந்த பைபிளின் அரேபிய மொழிபெயர்ப்பில்
" ﻓِﻲ ﺍﻟْﺒَﺪْﺀِ ﺧَﻠَﻖَ ﺍﻟﻠﻪُ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻻﺭْﺽَ "
ஆதியாகமம் 1:1
ஃபில் பத்யி ஃகலக #அல்லாஹு அஸ்ஸமாவாதி வல்அர்ள
இவர்களின் பித்தலாட்டப்படி பார்த்தால்,...
ஆதியில் சந்திரகடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார் (ஆதி 1:1) என ஒப்புக்கொள்வதாக ஆகிவிடும்.
இதை ப்போன்றே தமிழை பார்த்தால்
"ஆதியிலே இந்து கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்" (ஆதி 1:1) என கூறவேண்டும்.
ஆங்கிலத்தில் , "வெள்ளக்ககார கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்"..
கிரேக்கத்தில்,
" ஆதியிலே கிரேக்க கடவுள் வானம் பூமியை படைத்தார்" ஆதி 1:1
என இவ்வாறு கூறவேண்டும்.
அதேபோல இயேசுவை கடவுள் என நம்பும் கிறிஸ்தவ கும்பல்கள், அரபு மொழியில் எப்படி சொல்வார்கள்?
இயேசுவை அல்லாஹ் என்று தான் இந்த நிராகரிப்பாளர்கள் கூட அரபுமொழியில் கூறுகிறார்கள்.
இதன் அர்த்தம், அரபு கிறிஸ்தவ கும்பல், இயேசு சந்திரகடவுள் என ஒப்புக்கொள்கிறார்கள் என்று அர்த்தம் வைக்கலாமா???
அதேபோன்று தான் நபிகளாரும் அவர்களை பின்பற்றியோரும் தம் ஏக இறைவனை "அல்லாஹ்" என அரபுமொழியில் குறிப்பிட்டார்கள்.
இதையே நாமும் மொழிபெயர்க்காமல் அப்படி உள்ளதை உள்ளபடியே "அல்லாஹ்" என நாம் பாவிக்கிறோம்.
அதனால் நாடப்பட்ட அல்லாஹ் யாரெனில், அவனே படைத்து பரிபாலிக்கிற இறைவன்.
"அல்லாஹ்வாகிய அவனை தவிர வேறு இறைவன் (இலாஹ்) இல்லை. அவன் என்றென்றும் உயிரோடுள்ளவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை சிறுதூக்கமோ உறக்கமோ பீடிக்காது; வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன.; அவனுடைய அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய இயலும்?; அவற்றுக்கு முன்னால் இருப்பவற்றையும் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான்; அவனுடைய ஞானத்திலிருந்து எதனையும் , அவனுடைய நாட்டமின்றி , எவரும் அறிந்துகொள்ள இயலாது......."
(2:255)
"அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் , அவ்விரண்டுக்கு மத்தியிலுருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்து பின்பு அர்ஷின்மீது நிலைபெற்றான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ பரிந்துரையாளரோ இல்லை. எனவே நீங்கள் சிந்திக்க வேண்டாமா?".
(32:4)
" கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே! அவன் தேவையற்றவன். யாரையும் அவன் பெற்றெடுக்கவுமில்லை, யாராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை! அவனுக்கு நிகராக யாருமில்லை"
(112:1-4)
இவற்றிலே குர்ஆன் கூறும் அல்லாஹ் யார் என மிக தெளிவாக விளங்க முடியும்!
அல்லாஹ் தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்றும் நமக்கு சொல்லி தருகிறான்:
"நீங்கள் 'அல்லாஹ்' என்று அழையுங்கள்! அல்லது 'அர்ரஹ்மான்' என அழையுங்கள்! நீங்கள் எதைக்கொண்டு அவனை அழைத்தாலும், அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன."
(17:110)
இவற்றின்படி குர்ஆனில் அல்லாஹ் என்பது வானத்தையும் பூமியையும் சகல படைப்புகளையும் படைத்த ஒரே இறைவனை குறிக்கும் அரபு சொல் ஆகும்.
முஸ்லிம்கள் ஏக இறைவனையே அழைக்கிறார்கள்.
ஏன் அரபு கிறிஸ்தவர்கள் கூட இறைவனை "அல்லாஹ்" என்று தான் மொழிபெயர்க்கிறார்கள்... அப்படி தான் உபயோகமும் படுத்துகிறார்கள்.
அரபு யூதர்கள் கூட இறைவனை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.
இதெல்லாம் இந்த ஜந்துக்களுக்கு புரிவதே இல்லை!!! காரணம் எவனாவது வாந்தி எடுத்து வைத்தால், உடனே அதை விழுங்கிவிட்டு , நம்முடன் விவாதிக்க ஓடி வருகிறார்கள்... ஓடியும் விடுகிறார்கள்!
இவர்களின் இவ்வாதத்துக்கு செறுப்படி கொடுக்கும்விதமாக, குர்ஆனின் வேறொரு வசனம் இவ்வாறு கூறுகிறது:
"இரவும் ,பகலும் ; சூரியனும் ,சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவை ஆகும். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜூத் செய்யாதீர்கள். அவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூத் செய்யுங்கள்!"
(41:37)
இவ்வசனம் இவர்களின் லூசுத்தனமான வாதத்துக்கே சவுக்கடி கொடுத்துவிடுகிறது
எனவே அல்லாஹ் என குர்ஆன் கூறுவது, சகலதையும் படைத்து பரிபாலிக்கிற ஏக இறைவனை ஆகும்!
------------------------------------------------
மாட்டுக்கடவுள் யார்?
------------24 ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது; அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின; ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
தொடக்கநூல் 49:24
2 அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும்.
3 "ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஒர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 132:2,3
இங்கே யாக்கோபின் வல்லவர் என மொழிபெயர்த்துள்ள இடத்திலுள்ள "வல்லவர்" என்பதற்கான எபிரேய வார்த்தை " אָבִיר" (aabeer) என்பது ஆகும்.
இதற்கு உண்மையான எபிரேய அர்த்தம் காளைமாடு என்பதாகும்.... காளைமாட்டை வல்லமையை குறிக்க பாவிப்பதால், வல்லவர் என மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
இப்படி பார்த்தால், கடவுளை " யாக்கோபின் மாடு " என தான் நேரடி அர்த்தம் வரும்.
அதாவது பைபிள் கடவுள் யாக்கோபின் மாடு ஆவார் என்றே புரியவேண்டி வரும்.
இதனால் தான், காளைக்கன்றின் சிலையை செய்து இதுவே இஸ்ரவேலரினதும் மோசேயினதும் தேவன் என மக்கள் கும்பிட்டனர்.
1 மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனைச் சுற்றிக் கூட்டம் கூடி அவரை நோக்கி, "எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்" என்றனர்.
2 ஆரோன் அவர்களை நோக்கி, "உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் பொற்காதணிகளைக் கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.
3 அவ்வாறே மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,
4 அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், "இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே" என்றனர்.
5 இதனைக் கண்ட ஆரோன் அதற்கு எதிரே ஒரு பலிபீடம் கட்டி, "நாளைய தினம் ஆண்டவரின் விழா" என்று அறிவித்தார்.
யாத்திரகாமம் (Exodus) 32:1-5
இங்கே தெளிவாக ஆரோன் மாட்டு குட்டியின் சிலையை செய்தார் என்றும் அதை கடவுள் என்றும் சொன்னதாக பைபிள் சொல்கிறது!!
ஏன் மாட்டை காட்டியவுடன் சட்டென கீழே விழுந்து கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள்??
எவனாவது "மாட்டை காட்டி இது கடவுள்" என கூறினால், ஆப்ரகாமின் பிள்ளைகள் நம்புவார்களா?
நிச்சயமாக இல்லை!!
அப்படியாயின் ஏன் அப்படி செய்தவுடன் நம்பினர்??
காரணம், பைபிள் அவரை "யாக்கோபின் மாடு" என அழைக்கிறது.
அதனால் தான் மாட்டை செய்தனர்.
இல்லையென்றால் மனிதரை போன்ற உருவம் செய்தோ தேவதூதனை போன்ற உருவமோ செய்து கும்பிட்டிருப்பார்களே!!....
மாட்டை கும்பிட இது தான் காரணம்.
இதேபோல,
ரெயபோம் மன்னன்,
28 இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, "நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!" என்றான்.
29 இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான்.
30 இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர்.
31 மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான்.
1 அரசர்கள் 12:28-31 (1 இராஜாக்கள் 12:28-31)
ஏன் மாட்டு சிலையையே செய்து செய்து கும்பிட்டார்கள்.???
காரணம், கர்த்தரை யாக்கோபின் மாடு என பைபிள் சொல்கிறது.
அதனால் நாடப்படும் அர்த்தம் வல்லவர் என இருந்தாலும், நேரடி அர்த்தம் மாடு என்பதாகும்..
இதனாலேயே மக்கள் மாட்டை வணங்கினர்.
சோ மாட்டு கடவுள் யார் என நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக