இறைவேதம் எது? குர்ஆனா? பைபிளா?

குர்ஆன் & பைபிள் எது இறைவேதம்?

------------------------------------------------


இறைவேதம் என்பது இறைவனால் மனிதர்களுக்கு நேர்வழிகாட்ட தன் மனித தூதர்வழியாக கொடுக்கப்பட்டது ஆகும்.


ஆகவே ஒரு புத்தகம் இறைவேதம் என சொல்வதானால், அவற்றுக்கான இலக்கணங்களை பார்ப்போம்:


1.அதை போல அல்லது அதைவிட சிறந்ததை மனிதனால் இயற்ற முடியாதிருக்க வேண்டும்.


2.அந்த வேதத்திலேயே அது இறைவனுடைய வேதம் என சொல்லப்பட வேண்டும்.

3.அது இறைவனுக்கு மிக சரியான இலக்கணத்தை கூறக்கூடியதாக இருக்கவேண்டும்.


4.அது கூறும் கருத்துக்கள் மிக உண்மையானவைகளாகவும் யதார்த்தமானதாகவும் , சக மனிதனால் அதை கூற முடியாத நிலையில் அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும்.


5.இறைவேதம் இறைவனின் படைப்பின் நோக்கத்தையும், மரணம் வாழ்வு ஆகியவற்றின் நோக்கத்தையும் சரியாக சொல்லகூடியதாக இருக்க வேண்டும்.



6.இறைவனுக்கு அறிவீனமோ மறதியோ இல்லை என்பதால், அந்த வேதத்தில் முரண்பாடுகளும் பிழையான கூற்றுக்களும் இருக்க கூடாது.


7.இறைவன் மிக சிறந்தவர் , அவரை விட சிறந்தவர் இல்லை என்பதால் அவரது வேதத்தில் சிறப்பான வார்த்தைகளே இருக்கவேண்டும். ஒழுக்க கேடுகள் இருக்க கூடாது.


8. இறைவன் அனைவருக்கும் ஒருவராகவும் நேர்மையானவராகவும் இருப்பதால், அவரது வேதத்தில் நேர்மை இருக்க வேண்டும்.


**இறைவேதம் நேரடியாக வராமல் ஒரு இறைதூதர் வழியாகவே வந்தது என்பதால்:


.
9.அந்த இறைதூதர் ஆரம்பம் முதல் உண்மையாளராக இருக்க வேண்டும்.


10.அவரது பிறப்பு சிறந்த பிறப்பாக இருக்கவேண்டும்.



11.மறைவானவற்றை அதாவது சாதாரண மக்களால்  அறிய இயலாததை சரியாக சொல்லியிருக்க வேண்டும்.


12.எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். அவை நிகழக்கூடியதாக இருக்க வேண்டும்.


13. குறிப்பாக அவரது பேச்சுக்கள் கூற்றுக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். (இது ஏனெனில் பிற்காலத்தில் எழுதி திருத்தும் வேலைகள் நடந்தால் அதில் உண்மை தன்மை இருக்காது)



எனவே இவை ஒவ்வொன்றாக காண்போம்:





1. அதை போன்ற அல்லது சிறந்த ஒன்றை ஒருபோதும் கொண்டுவர முடியாது!:





குர்ஆன்:

மேலும், நாம் நமது அடியார் மீது இறக்கிவைத்த (இவ்வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தையாவது நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு உதவி செய்பவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் இதுபோன்று ஓர் அத்தியாயத்தைக் கொண்டுவாருங்கள்.
(அல்குர்ஆன் : 2:23)



இது சொல்லப்பட்டு 1400 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் இதேபோன்று ஒரு அத்தியாயத்தை அரபியில் கொண்டுவர இயலவில்லை.


சிலர் முயற்சி செய்தும் தோல்வியிலேயே முடிந்தது.

வேறுசிலர் குர்ஆனிலுள்ள வசனத்தை எடுத்து,  சில சொற்களை மாற்றி , கொண்டுவந்துவிட்டோம் என காமடி பண்ணுகிறார்கள்.


அவற்றில்கூட பொய்யே மழிந்து உள்ளது.



பைபிள்:

இதைவிட சிறந்த புத்தகங்கள் நிறையவே உள்ளன.

பைபிளின் பல புத்தகங்கள் கதை புத்தகங்களாகவே உள்ளன. அவற்றில் படிப்பினை என எதுவும் இல்லை.


உதாரணமாக ,

* லோத் அவர்களுக்கு  அவரது இரு மகள்களும் மதுபானத்தை குடிக்க கொடுத்து ,  அவருடன் உடலுறவு கொண்டு இரு பிள்ளைகள் பெற்றதாக எழுதப்பட்டுள்ளது. (ஆதியாகமம் 19:30-36)


*யூதா என்பவர் ஆட்டுக்குட்டிக்கு கூலி பேசி தன் மறுமகள் என தெரியாமல் விலைமாதுவுடன் விபச்சாரம் செய்து இரட்டை பிள்ளை பெற்றார் என எழுதப்பட்டுள்ளது.
(ஆதியாகமம் 38:11-30)


*ரூபன் என்ற இஸ்ராயிலின் மகன், தன் தந்தையின் மனைவியுடன் விபச்சாரம் செய்ததாக எழுதப்பட்டுள்ளது.
(ஆதியாகமம் 35:22)

*தாவீது ராஜா தன் படைவீரரின் மனைவியுடன் விபச்சாரம் செய்ததாக எழுதப்பட்டுள்ளது. (2 சாமுவேல் 11:2-4)


*தாவீதின் மகன் அம்னோன் தன் சகோதரியை கற்பழித்ததை வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. (2 சாமுவேல் 13:1-14)

இப்படி அர்த்தமற்ற சம்பவங்களை வீணாக பைபிள் எழுதியுள்ளது.

இவற்றை செய்தவர்களுக்கு கர்த்தர் தண்டித்ததாகவ கூட இல்லை
------------------------------------------------


2.அந்த வேதத்திலேயே இது இறைவேதம் என இறைவனிடமிருந்து வந்தது என கூறப்பட்டிருக்க வேண்டும்:



குர்ஆன்:

"இது வேதமாகும்! இதில் எந்த சந்தேகமும் இல்லை! ".
(குர்ஆன் 2:2)

" உமக்கு  இறக்கிவைத்ததை குறித்து , அல்லாஹ்வே சாட்சி வழங்குகிறான்..."
(குர்ஆன் 4:168)

"அவர்கள் குர்ஆனை சிந்தித்துப்பார்க்கவேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் நிறைய முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்."
(குர்ஆன் 4:82)



பைபிள்:

பைபிளில் எங்குமே முழு பைபிளையும் இறைவனுடைய வேதம் என்றோ வார்த்தைகள் என்றோ சொல்லப்படவில்லை.



ஆனால்,

15 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

16 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
(2 Timothy 3 :15-16)


இது பொதுவாக தேவனுடைய வசனங்களை பற்றி பவுல் எழுதிய கடிதத்தில் பவுல் அவர்கள் சொல்வதாகும்.


அவர் கூறுகிறபடியே , பைபிளில் உள்ளதா?



நான் மேலே குறிப்பிட்ட அந்த கதைகள் நீதியை படிப்பிக்க, உபதேசிக்க , கடிந்துகொள்ள, சீர்திருத்த பிரயோசனமாய் உள்ளனவா?


என்ன உபதேசம் அந்த கதைகளில் உள்ளது?

------------------------------------------------


3.அது இறைவனுக்கு சரியான இலக்கணத்தை கூறக்கூடியதாக இருக்க வேண்டும்:



குர்ஆன்:

"
1.கூறுவீராக! அல்லாஹ் ஒருவனே!
2.அல்லாஹ் தேவையற்றவன்!
3.அவன் ஈன்றெடுக்கவுமில்லை, ஈன்றெடுக்கப்படவுமில்லை!
4.அவனுக்கு சமனாக யாருமில்லை!"
(குர்ஆன் 112:1-4)




அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. (அவன்) ஜீவனுள்ளவன், (என்றென்றும்) நிலைத்திருப்பவன்,  அவனை சிறு துயிலும், உறக்கமும், பீடிக்காது. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்.  அவன் நாடியவையன்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் முற்றிலும் (மற்றெவரும்) அறிந்து கொள்ளமாட்டார்கள். அவனுடைய ‘குர்ஸிய்யு’ வானங்களிலும், பூமியிலும் விசாலமாக (பரவி) இருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது.  மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.
(அல்குர்ஆன் : 2:255)


"என் இறைவன் தவறிழைக்கவும் மாட்டான், மறக்கவும் மாட்டான்"
(குர்ஆன் 20:52)



"அல்லாஹ் தனக்கு எந்த ஒரு பிள்ளையையும் எடுத்துக்கொள்ளவில்லை!  அவனுடன் வேறு  கடவுளும் இல்லை! அவ்வாறு இருந்திருப்பின், ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக்கொண்டு ஒருவர் மற்றவர்களை மிகைத்திருப்பார்கள்! இவர்கள் வர்ணிப்பதைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன்"
(27:91)


"பூமியில் உள்ளவற்றிலிருந்து அவர்கள் தெய்வங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்களே! அவை உயிர்ப்பித்து எழுப்புமா?


(வானம்,பூமி ஆகிய) அவையிரண்டிலும் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால், அவையிரண்டும் சீர்குலைந்து போயிருக்கும்.."
(குர்ஆன் 21:21-22)


"அவன் அறியாமல் ஒரு இலையும் உதிர்வதில்லை"
(குர்ஆன் 6:59)


"நீங்களும் பூமியிலுள்ள அனைவரும் (அவனை) நிராகரித்தாலும் , நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், புகழுக்குரியவன்"
(குர்ஆன் 14:8)


"வானங்களையும் பூமியையும் படைத்து, அவற்றை படைத்ததால் சோர்வடையவில்லையே,  அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்பிக்க ஆற்றலுள்ளவன் என்பதை பார்க்கவில்லையா?.."
(குர்ஆன் 46:33)


"நிச்சயமாக அல்லாஹ் சிறிதளவேனும் அநியாயம் செய்யமாட்டான்" (4:40)


இப்படி நிறைய வசனங்களை காணலாம்,

இவற்றில் இறைவனது பூரணத்துவமான பண்புகளையும் இறைவனது இலக்கணத்தையும் சரியாக கூறப்பட்டுள்ளதை காணலாம்!

அதாவது,

-ஒன்றுக்கு மேல் இறைவன் இருந்தால், உலகம் சீர்குழைந்து அழிந்து போயிருக்கும், அக்கடவுள்களும் ஒருவர் சிலரைவிட மேலோங்க தம் படைப்புகளை எடுத்துக்கொண்டு முயற்சித்திருப்பர்


-மெய்யான இறைவன் ஒருவனே! அவன் என்றென்றும் நிலையானவன். தேவைகளற்றவன்

-சோர்வு அடையாதவன்,மறதி , தவறு இல்லாதவன்

-குறிப்பாக அநீதி இல்லாதவன்.



பைபிள்:

பைபிள் இறைவனை ஒருவர், நல்லவர், சோர்வடையாதவர் என சொன்னாலும்,

வேறு சில வசனங்கள் அதற்கு மாற்றமாக உள்ளன.



"ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்."
(சங்கீதம் 44: 23)


அதாவது தேவன் நித்திரை பண்ணுவதாகவும், ஏன் இப்படி நித்திரை பண்ணுகிறீர் என கேட்பதாகவும் உள்ளது.



"நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."
(எரேமியா 15: 6)

இங்கே கர்த்தர் இளைத்து (களைப்படைந்து) போனதாக கர்த்தரே சொன்னதாக கூறப்பட்டுள்ளது.




5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
(ஆதியாகமம் 6:5-6)

இங்கே கர்த்தர் எதிர்காலத்தை பற்றி அறியாமல் மனிதனை படைத்து, அவனது கெடுதி பெருகியதும் மனிதனை படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டாராம்.

இதேபோல சவுலை ராஜாவாக ஆக்கியதற்காகவும் மனஸ்தாபப்பட்டாராம். (1 சாமுவேல் 15:10-11)


இப்படி எதிர்காலம் பற்றி அறிவில்லாமல் ஒன்றை செய்துவிட்டு, அதற்காக மனஸ்தாபம் கொள்பவராக கடவுளை பைபிள் காட்டுகிறது.



"கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று."
(நியாயாதிபதிகள் 1: 19)

கர்த்தர் யூதாவோடு இருந்தும், இரும்பு தேர்கள் எதிரிகளிடம் இருந்ததால் துரத்த முடியாமல் போனதாக கூறி, கடவுளுக்கு இயலாமையும் உண்டு என பைபிள் கூறுகிறது.






20 இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.

21 பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

22 அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
(எண்ணாகமம் 22:20-22)


இங்கே கர்த்தர் பிலேயாமை போக சொல்கிறார், அவரது சொல்கேட்டு போனதால் கோபம் கொள்கிறார்.

இங்கே கர்த்தர் அநியாயக்காரராக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது கட்டளைக்கு கட்டுப்பட்டதற்கே கோபம் கொண்டாராம்.


அதுமட்டுமின்றி,



"இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது."
(1 கொரிந்தியர் 1: 25)


அதாவது , கடவுளுக்கு இது மட்டுமல்ல.. பைத்தியம் வேறு உள்ளதாம். ஆனாலும் மனித ஞானத்திலும் அந்த பைத்தியம் சுமார் தானாம்.

அதேபோல பலவீனமும் உள்ளதாம்.


இது அல்லாமல் இறைவனுக்கு தப்பான இலக்கணத்தை கொடுக்கும் அநேக பைபிள் வசனங்கள் உள்ளன.

ஒரு இறைவேதம் இறைவனுக்கு தப்பான பொருத்தமற்ற இலக்கணத்தை கொடுக்கும் என்றால், அது இறைவனுடைய வேதமாக இருக்குமா தோழர்களே?
------------------------------------------------


4.வேதம் கூறும் கருத்துக்கள் மிக உண்மையானவைகளாகவும், யதார்த்தமானதாகவும் , சக மனிதனால் அதை கூறமுடியாத நிலையில் அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும்.:



குர்ஆன்:

*அபூலஹப் என்ற நபிகளாரின் பெரியதந்தை நபிகளாரை ஆரம்பத்தில் எதிர்த்தவர்களில் பிரதானமானவர். அவர் நரகமே நுழைவார் என அவர் மரணிப்பதற்கு 10 வருடங்களுக்கு முன்பே குர்ஆன் சொன்னது.
(குர்ஆன் 111:1-5)


அபூலஹப் இவ்வசனங்களுக்கு பின் முஸ்லிம் போல நடித்திருந்தால் கூட, குர்ஆனை மக்கள் பார்வையில் பொய்ப்படுத்தியிருக்க இயலும்.

ஆனால் அதுவும் அவரால் இயலாமல், அதே பகிரங்க நிராகரிப்பிலேயே மரணித்தார்.


இது போன்று இறைவேதத்தை தவிர வேறு எதனால் கூறமுடியும்?



*"யார் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நரகத்தில் நுழைவித்துவிடுவோம்.  அவர்களின் தோல்கள் கருகும்போதெல்லாம் , வேதனையை அனுபவிப்பதற்காக , அவையல்லாத தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன்."
(குர்ஆன் 4:56)

இவ்வசனத்தில், தோலை மாற்றுவதன் நோக்கம் நெருப்பின் வேதனையை அனுபவிப்பதற்கு என கூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் தான், வலி உணரிகள் தோலில் தான் உள்ளன என கண்டு அறியப்பட்டது!

தோல் எரிந்து கருகினால், வலி உணரிகள் அழிந்துவிடும் அதன்பின் எவ்வளவு எரித்தாலும் வலிக்காது.

இதை இறைவேதம் அல்லாத வேறு ஒன்றால் எப்படி 1400 வருடங்களுக்கு முன் கூறமுடியும்?



* "... உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்..."
(குர்ஆன் 39:6)

இவ்வசனம் குழந்தை கர்ப்பபையில் மூன்று இருள்களுக்குள் படைக்கப்படுகிறது என சொல்கிறது.

ஆனால் அண்மைய காலத்தில் தான் கர்ப்பப்பை பற்றி ஒழுங்காக அறிவு கிடைத்தது.

இதை இறைவேதத்தை தவிர வேறு எதனால் கூறமுடியும்?


இதேபோன்று நிறைய விசயங்கள் உள்ளன.



பைபிள்:

பைபிள் அடிப்படையில்,

-ஒருவர் தன் இறந்துபோன அண்ணனின் மனைவியை மணந்து உறவுகொண்டு பிள்ளைபெற்றால், அது அண்ணனது சந்ததியாம்:



8 அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

9 அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.

(ஆதியாகமம் 38:8-9)


இந்த வசனத்தின்படி, விந்துக்கு உரியவன் தந்தை இல்லையாம்! முதல் கணவன் யாரோ அவனுக்குரிய சந்ததியாம்!

பழைய காலத்தில் மாதவிடாய் ரத்தத்திலிருந்து பிள்ளை உண்டாகிறது என்ற நம்பிக்கையை கூறுவதாக உள்ளது.

அதாவது ,

எப்போதும் ஒரு குழந்தை பெண்ணுடைய வித்தாகவே சொல்லப்படுகிறது.

உதாரணமாக ஆதியாகமம் 3:15

"உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்."
(Genesis 3: 15)


அதாவது ஏவாள் செய்த குற்றத்துக்கு ஏவாளுக்கும் பாம்புக்கும், ஏவாளின் வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் பகையை மூட்டுவதாக கர்த்தர் சொன்னதாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில் அப்பெண் யாருக்கு மனைவியாக இருக்கிறாளோ, அது சட்டரீதியான முதல் கணவனுக்கும் வித்தாக பைபிள் சொல்கிறது.

அதை தான் ஆதியாகமம் 38:8-9இல் கூறப்பட்டுள்ளது.



-பைபிள் அடிப்படையில் முதல் மனிதன் ஆதாம் படைக்கப்பட்டது இப்போதைக்கு 6134 வருடங்களுக்கு முன்பு ஆகும்.

அதாவது கி.மு. 4114 ஆம் ஆண்டில் ஆகும்.

இதை இவ்வாறு கணிக்கலாம்:


*முதல்மனிதன் ஆதாம் முதல் நோவாவின் 600வது வயது வரை உள்ள காலம் 1656 ஆகும்.
(ஆதியாகமம் 5:3-32 )

*ஜலப்பிரளயத்திலிருந்து ஆப்ரகாமின் பிறப்பு வரை உள்ள காலம் 292 வருடங்கள் ஆகும்.
(ஆதியாகமம் 11:10-26)

*ஆப்ரகாம் 100 வயதில் ஈசாக்கை பெற்றார். (ஆதியாகமம் 21:5)

*ஈசாக்கு 60 வயதில் யாக்கோபையும் ஏசாவையும் பெற்றார். (ஆதியாகமம் 25:26)

*யாக்கோபு தன் பிள்ளைகளான இஸ்ரேலியருடன் எகிப்துக்கு போனபோது அவரது வயது 130
(ஆதியாகமம் 47:9)

*இஸ்ரவேலர் எகிப்தில் 430 வருடங்கள் தங்கினர்.
(யாத்திராகமம் 12:40)

*இஸ்ரேலியர் எகிப்திலிருந்து புறப்பட்ட 480ஆம் ஆண்டு சொலமோன் ராஜாவாகி 4 வருடங்கள்.
(1 இராஜாக்கள் 6:1)

சொலமோனை ராஜாவானது கி.மு. 970 ஆம் ஆண்டு ஆகும்.

இப்போது அனைத்தையும் கூட்டினால்,

கி.மு. 4114 என வரும்.


அதேநேரம், உலகம் முழுவதும் நோவாவின் 600ம் வயதில் வெள்ளம் ஏற்பட்டு எட்டு மனிதர்களும் சில உயிரின சோடிகளுமே எஞ்சியதாக பைபிள் சொல்கிறது.
(ஆதியாகமம் 7:1-2,6-11)


அது இக்கணிப்பின்படி கி.மு 2458ஆம் ஆண்டு ஆகும். (மேலே தந்த தரவுகளை கூட்டுங்கள்).


ஆனால் அக்காலத்தில் சிந்துநதிக்கரை நாகரீகத்தில் மக்கள் தொடர்ந்து இருந்துள்ளனர்.

எகிப்தில் மன்னர்களின் ஆட்சி தொடர்ந்து நடந்துள்ளது.


இவை பைபிள் தப்பாக பிழையாக கூறுவதை நாம் காண்கிறோம்!

இதேபோல நிறைவேறா தீர்க்கதரிசனங்களில் சிலதை தீர்க்கதரிசியின் முன்னறிவிப்பின் கீழ் தருகிறேன்

------------------------------------------------


5. இறைவேதம் இறைவனின்  படைப்பின் நோக்கத்தையும், மரணம் வாழ்வு ஆகியவற்றின் நோக்கத்தையும் சரியாக சொல்லக்கூடியதாக இருக்கவேண்டும்:*



குர்ஆன்:

-மனித படைப்பின் நோக்கம்:

"56.ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.

57.அவர்களிடம் (என்படைப்புகளுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை, அன்றியும் எனக்கு அவர்கள் உணவளிக்க வேண்டும் என நாடவுமில்லை

58.நிச்சயமாக அல்லாஹ் தான் உணவளிப்பவன். பலமிக்கவன், உறுதியானவன்"
(குர்ஆன் 51:56-58)


-வாழ்வு மற்றும் மரணத்தின் நோக்கம்:

"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக , அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்."
(67:2)

-பூமியிலுள்ளவை அலங்காரமாக ஆக்கப்பட்டதன் நோக்கம்:

"அழகிய செயலுடையவர்கள் யார்  என்று அவர்களை சோதிப்பதற்காக, பூமியிலுள்ளவைகளை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம்."
(குர்ஆன் 18:7)


-பூமியிலுள்ளவற்றை படைத்ததன் நோக்கம்:

"அவனே பூமியிலுள்ள சகலதையும் உங்களுக்காக படைத்தான்"
(குர்ஆன் 2:29)


-நம்பிக்கைகொண்டு நற்செயல் செய்வோருக்கு சுவர்க்கமும், நிராகரித்து கெட்டது செய்வோருக்கு நரகமும் கூலியாக கொடுக்கப்படும்.
(குர்ஆன் 2:24-25,39  ; 3:14-15 இன்னும் நிறைய வசனங்கள்)



இவற்றின்படி,

-இறைவன் மறுமையில் கூலி கொடுப்பதற்காக நம்மை இவ்வுலகில் தற்காலிகமாக வாழ்வதற்காக சோதனை வாழ்க்கைகாக மரணத்தையும் வாழ்வையும் படைத்து , பூமியிலுள்ளவற்றை அலங்காரமாக ஆக்கினான்.



பைபிள்:

*தேவன் மனிதரை தன் சாயலில் படைத்தார். சகல பிராணிகளையும் ஆண்டுகொள்ள படைத்தார். (ஆதியாகமம் 1:26-31)

ஆனால் படைத்து 1600 வருடங்களில் அவர்  மனிதனை படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டார். (ஆதியாகமம் 6:5-6)

இங்கே கடவுளுக்கே தெரியவில்லை ஏன் படைத்தேன் என்று.

படைத்ததற்காக மனஸ்தாபம் கொள்கிறார்.

அதாவது இவனை படைத்திருக்கவே கூடாது என நினைக்கிறார்.


*ஆனால் பவுல் கொஞ்சம் வித்தியாசமாக,

-மனிதர்களை நிலையாக வாழ தேவன் படைத்ததாகவும்,   ஆதாம் பழத்தை சாப்பிட்டதால் எல்லோரும் சாகவேண்டி ஏற்பட்டதாகவும், அனைவரும் பாவியானதாகவும இயேசுவை கொன்று உயிர்த்தெழுப்புவதால்  அவரை ஏற்றவர்கள் நீதிமான்களாக ஆகுவார்களாம்."
(ரோமர் 5:12-21)

அதாவது

*கடவுள் மனிதனை நிலையாக வாழ படைத்தார்.

*பிறகு படைத்ததற்காக மனஸ்தாப பட்டார்.

*ஒருவர் செய்த பாவத்தால் எல்லாரும் பாவிகளாகி மரணித்தனர். .

அதேபோல அப்பாவி ஒருத்தரை கொன்று உயிர்ப்பிப்பதால் , அதனை நம்பியோர் நீதிமான்களாம்!


கர்த்தருக்கே நோக்கம் தெரியவில்லை என வெளிக்காட்டுவதாக இது உள்ளது.

ஆதமுக்காக அனைவரையும் தண்டித்தார் என்றால் ,  அவரைவிட அநியாயம் செய்பவர் யார்??  நம்மிடம் கேட்டு ஆதாம் பாவம் செய்தாரா இல்லையே!

------------------------------------------------

6. இறைவனுக்கு அறிவீனமோ மறதியோ இல்லை என்பதால்,  வேதத்தில் முரண்பாடுகளும் பிழையான கூற்றுகளும் இருக்க கூடாது.



குர்ஆன்:

"இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால், அதில் அநேக முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்".
(குர்ஆன் 4:82)


குர்ஆனில் முரண்பாடு என வைக்கப்பட்ட அத்தனை வாதங்களும் , முறையாக வசனங்களை படிக்காததால் வைக்கப்பட்டவை ஆகும்.

குர்ஆன் 23 வருடங்களாக இறங்கியது. அந்த 23 வருடமும் முரண்படாமல் பேசவேண்டுமானால், சகலதும் ஞாபகம் உள்ளவராக இருக்க வேண்டும்!! அது இறைவனால் மட்டுமே சாத்தியம்!!


முரண்பாடு என நீங்கள் வைக்கும் அத்தனை வாதங்களக்கும் பதில்கொடுக்க நாம் தயார்!


பைபிள்:

பைபிளில் அநேக முரண்பாடுகளை காண முடியும்!


அதில் மூன்று முரண்பாடுகளை மட்டும் இப்போதைக்கு பதிகிறேன்.


1. யோயாக்கீன் ராஜாவானபோது அவன் வயது,

18 வயது (2 இராஜாக்கள் 24:8)

8 வயது (2 நாளாகமம் 36:9



2. அகசியா செத்தது எப்படி?

*யெகூ அவனை வெடிப்போடும்படி சொன்னான். அதன்படி அவனை வெட்டினார்கள். அவன் மெகித்தோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்தான்.
(2 இராஜாக்கள் 9:27)

*அகசியாவை சமாரியாவில் கண்டுபிடித்து கொன்று அங்கேயே புதைத்தார்கள்.
(2 நாளாகமம் 22:9)


3.ஒரே அதிகாரத்தில் முரண்பாடு!


ஆசாவின் 31வது வருத்தில் உம்ரா இஸ்ரேலின் ராஜாவாகி 12 வருடம் ஆண்டான்.

(அப்படீன அவனது ஆட்சி முடியும்போது ஆசாவின் 42 அல்லது 43வது ஆண்டு என வரும்).

ஆனால் 38வது ஆண்டில் உம்ரியின் மகன் இஸ்ரேலின் ராஜாவானதாக பைபிள் சொல்லுது.


23 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகிய, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,


28 உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

29 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின் மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
(1 இராஜாக்கள் 16:23,28-29)



இதுபோன்று புதிய ஏற்பாட்டில் மட்டும் 90க்கு மேற்பட்ட முரண்பாடுகளும், பழைய ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட முரண்பாடுகளும் உள்ளன.

பலவீனமான மனிதனது வார்த்தைகளிலேயே தான் இதுபோன்று முரண்பாடு வரும்

------------------------------------------------


7.இறைவன் மிக சிறந்தவர், அவரைவிட சிறந்தவர் இல்லை என்பதால், அவரது வேதத்தில் சிறப்பான வார்த்தைகளே இருக்கவேண்டும். ஒழுக்க கேடுகள் இருக்க கூடாது.:



குர்ஆன்:

"மனிதர்களுக்கு நல்லதையே கூறுங்கள்."(2:83)

" என் அடியார்களுக்கு , அவர்கள் நல்லதையே கூறவேண்டும் என கூறுவீராக"
(குர்ஆன் 17:53)



பாவம் செய்தவர்களை கூட, நல்லமுறையில் விளித்து பேசுவதை குர்ஆனில் காண முடிகிறது!

இஸ்ரேலியர் செய்த காளைகன்று வணக்கத்தை கூட , உள்ளது உள்ளபடியே கூறுகிறது


"..பின்னர் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்தபின்னும் காளைக்கன்றை எடுத்துகொண்டனர்.  அதையும் நாம் மன்னித்தோம்." (4:153)


இப்படி பெரும் பாவம் செய்தவர்களையும் நல்லமுறையில் பேசுவதை காணமுடிகிறது.

அதேபோல சிலருடைய பண்புகள் மிருகங்களை போல இருப்பதை அப்படியே முறையாக சொல்வதை காண முடியும்.

அந்தவிதமாக கண்டித்து, சீர்திருத்துவதாக இவ் வேதம் உள்ளது!


பைபிள்:

எருசலேமில் இருந்த யூதாவினரும், சமாரியாவில் இருந்த இஸ்ரேலியரும் பாபிலோனிய எகிப்தியரின் சிலைகளை வணங்கியது பைபிள் கண்டிக்கும் முறையை எசேக்கியேல் 16:16-24, 23:2-20 ஆகியவற்றில் காண முடியும்.

அவை 18+ விசயங்களாக உள்ளதால் அவற்றை நான் இங்கே பதிவதில்லை!

இங்கே கர்த்தர் பச்சை தூசண வார்த்தைகளை பேசுவதாக எழுதிவைக்கப்பட்டுள்ளது.

அதாவது சிலைவணக்கத்தை விபச்சாரம் உருவகித்து, சிலைவணக்கத்தை வர்ணிக்காமல் விபச்சாரம் செய்யும் முறை வர்ணிக்கப்பட்டுள்ளது.


அதேபோல உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் இரு காதலர்கள் தம் உணர்வுகளை பரிமாரிக்கொள்வது எழுதிவைக்கப்பட்டுள்ளது. அதில் காதலியின் அந்தரங்க உறுப்புகளின் அழகுகள் வர்ணிக்கப்பட்டுள்ளன.
போதாக்குறையாக காதலியின் தங்கச்சி பற்றியும் அவளது மார்பகம் பற்றியும் ஆலோசனை செய்து எழுதப்பட்டுள்ளது.

அவற்றை நான் இங்கே பதியமாட்டேன்.

 (வெறும் 8 அத்தியாயங்கள் என்பதால், உங்களுக்கே படிக்கலாம்! ஆனால் சிறுவர்கள பார்க்காதவாறு  கவனித்துக்கொள்ளுங்கள்!)



நினவேயிலிருந்த ஊர்மக்களை கண்டிக்கும்போது, நினிவேயை வேசியாக உருவகித்து பாவாடையை முகம்வரை தூக்கி அவளது  அந்தரங்க உறுப்பை காட்டிவிடுவேன் என கர்த்தர் சொல்வதாக எழுதப்பட்டுள்ளது.
(நாகூம் 3:5)

இப்படி முறையற்ற நாகரீகமற்ற பேச்சுக்களுக்கு இறைவன் தகுதி இல்லை!!


இது இறைவனுக்கு தகுதியற்றதாக , கண்ணியக்குறைவாக உள்ளது!

நிச்சயமாக இவை இறைவனின் வார்த்தைகளாக வேதமாக இருக்க இயலாது!
------------------------------------------------


8.இறைவன் அனைவருக்கும் ஒருவராகவும், நேர்மையானவராகவும் இருப்பதால், அவரது  வேதத்தில் நேர்மை இருக்க வேண்டும்:



குர்ஆன்:

-மனிதர்கள் அனைவருக்கும் ஒரே பெற்றோரே:

மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களை குலங்களாகவும் , கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.  அல்லாஹ்விடம் உங்களில் கண்ணியமானவர்  மிகவும் பயபக்தி (இறையச்சம்) உடையவரே ஆவார். .."
(குர்ஆன் 49:13)


குலம் என்பது ஒரு குறிப்பிட்ட முன்னோரின் ஒட்டுமொத்த சந்ததிகள்.

கோத்திரம் என்பது, குலத்திலுள்ள ஒரு சிறு கிளை! அதாவது குலத்தை விட சிறியது!


இதெல்லாம் சக மனிதரை அறிந்துகொள்வதற்கான அடையாளம் ஆகும்.

இறையச்சமுடையவரே சிறந்தவர் என இவ்வசனம் கூறுகிறது!


-ஒருவர் செய்த குற்றத்தை இறைவன் இன்னொருவர் மீது சுமத்த மாட்டான். (17:15)


-எவருக்கும் தாங்க இயலாத கஷ்டத்தை இறைவன் சுமத்துவதில்லை.
(2:286)


இவற்றின்படி, நம் அனைவருக்கும் பெற்றோர் ஒருவரே!

ஒருவரின் பாவச் சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார்.

எவருக்கும் தாங்கிகொள்ள இயலாத கஷ்டத்தை இறைவன் சுமத்தவும் மாட்டான்.


இங்கே நேர்மையை காண முடிகிறது.


பைபிள்:

பைபிளிலும் ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்கமாட்டார் என (எசேக்கியேல் 18:4,20) சொல்லியிருந்தாலும்,

ஒருவர் செய்த தப்புக்கு , தப்பு செய்தவனின் குடும்பமே அழிந்த பின்னாலும் தண்டனையை கடவுள் கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது.

உதாரணமாக,

*சவுல் செய்த தப்புக்காக, சவுல் செத்த பின்பு தாவீது ராஜாவின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது


"தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்."
(2 சாமுவேல் 21: 1)


இதேபோல,  அமேலிக்கியர் 400 வருடங்களுக்கு முன் இஸ்ரேலியரை எதிர்த்ததால், 400 வருடங்களுக்கு பின் சம்பந்தமே இல்லாத மக்களுக்கு தண்டனை வழங்கபடுகிறது:


(1 சாமுவேல் 15 )
 ------------
2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

3 இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
(1 சாமுவேல் 15:2-3)



இப்படி சிலர் செய்த தப்பிற்கு அக்காலத்திலேயே யுத்தம் நடந்தது. பின்பு 400 வருடம் கழித்து திரும்பவும் அதேவிசயத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தண்டிப்பது எந்தவித நேர்மை??



-வேசிப்பிள்ளை கர்த்தரின் சபைக்கு வர கூடாதாம்! அவனாக தேர்வு செய்து பிறந்தானா?

அதேபோல ஆணுறுப்பு அறுபட்டவன், காயடிக்கப்பட்டவன் போன்றோரும் வரக்கூடாதாம்!



(உபாகமம் 23 )
 ------------
1 விதையடிக்கப்பட்டவனும், கோசமாறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

2 வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

(உபாகமம் 23:1-3)


இப்படி இங்கே கடவுளை நேர்மையற்றவராக சித்தரப்பதோடு, இப்போதனைகள் நேர்மையற்றவைகளாக உள்ளன!

இது எப்படி இறைவேதமாகும்?

------------------------------------------------



*இறைத்தூதர்:*

இறைவன்  யார்வேண்டுமானாலும் எடுத்துகொள் என்று வானத்திலிருந்து நேரடியாக புத்தகத்தை கீழே போடவில்லை.

மாறாக ஒரு மனிதரை தேர்வு செய்து அம்மனிதரை வழிகாட்டியாக ஆக்கி அவருக்கே வேதத்தை கொடுப்பபான்.

அதனால், அவ் இறைதூதர்



9.அந்த இறைதூதர் ஆரம்பம் முதல் உண்மையாளராக இருக்க வேண்டும்:*



முகம்மது நபி:

-அவரது கடந்த கால வாழ்க்கையை சான்றாக கூறுமாறு குர்ஆனே கூறுகிறது:


 
“(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; *நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?*” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 10:16)


-நபிகளாரை மறுத்த அபூசுப்யான் ஹிர்கல் மன்னனிடம் நபிகளாரை பற்றி கூறியது:


ஸஹீஹுல் புகாரி: அத்தியாயம் :1.இறைசெய்தியின் ஆரம்பம்

ஹதீஸ் எண் 7


ரோம மன்னர்: அவர் (முக்கமதுநபி) இவ்வாறு வாதிப்பதற்கு முன், அவர் பொய் சொல்பவர் என சந்தேகித்ததுண்டா?

அபூ சுப்யான் : இல்லை

கடைசியாக ரோம மன்னர் சொன்னது:  அவர் இவ்வாறு வாதிக்க முன் பொய் சொன்னதாக நீங்கள் சந்தேகித்ததுண்டா? என கேட்டேன். நீர் இல்லை என்றீர்.  மக்களிடம் பொய் சொல்ல துணியாதவர், இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என நான் நம்புகிறேன்!


புகாரி 7


இங்கே நபிகளார் பொய் சொன்னதில்லை என எதிரியாக இருந்தவரே சான்று கொடுத்தார்.

இப்படி பொய் சொல்லாதவர் எப்படி இறைவன் விசயத்தில் பொய் சொல்லுவார்??



பைபிள்:

பைபிளின் முக்கிய தீர்க்கதரிசிகளே பொய் சொன்னவர்களாக பைபிள் சித்தரிக்கிறது:


1. இஸ்ரேலியர் யுத்தம் செய்து உள்ளே போகாததால், மோசே மீதும் கர்த்தர் கோபம் கொண்டார் என மோசே சொல்கிறார்:


(உபாகமம் 1 )
 ------------
34 ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

35 உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,


37 அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;

(உபாகமம் 1:34-35,37)


ஆனால், உண்மையில் நடந்தது என்ன?


(எண்ணாகமம் 14 )
 ------------
11 கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

12 நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

13 மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.


15 ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

17 ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,

18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

20 அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

(எண்ணாகமம் 14:12-20)

மோசே மீது கர்த்தர் இதற்காக கோபம் கொள்ளாதிருக்க, அதாவது மோசேயையும் மட்டும் பெரிய ஜாதியாக ஆக்குவேன் என கர்த்தர் சொல்லியிருக்க மோசே பொய் சொல்லியுள்ளார் என பைபிள் தெளிவாக்குகிறது.


இந்த மோசே அந்த தேசத்தை காணாமல் சாவதற்கு காரணம், மோசே தேவனது கட்டளையை மோசே மீறியதால் தான் என கர்த்தரே சொல்கிறதாக பைபிள் சொல்கிறது:


(உபாகமம் 32 )
 ------------
48 அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:

49 நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்திலேறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;

50 நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,

51 உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.

52 நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.
(உபாகமம் 32:48-52)


வேடிக்கை என்னனா, கர்த்தர் கட்டளையை மோசே மீறவில்லை.. கர்த்தர் இட்ட கட்டளையை செய்ததாக அதே பைபிள் சொல்கிறது


(யாத்திராகமம் 17 )
 ------------
4 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

5 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
(யாத்திராகமம் 17:4-6)


இங்கே மோசே பொய்சொன்னதாக பைபிளும், பைபிள் பொய் சொன்னதாக கர்த்தரும் மாறி மாறி சொல்லி கொள்கிறார்கள்.


ஆரம்ப தீர்க்கதரிசி மோசேயே இப்படி நம்பிக்குரியவர் இல்லை என பைபிள் காட்டூம்போது, அவரை எப்படி நம்புவது?

அவரை பின்தொடர்ந்து வந்த அவரின் வழியில் வந்தோரை எப்படி நம்புவது??


இது அசத்தியம் & அசாத்தியம்!!
------------------------------------------------


10. அவரது பிறப்பு சிறப்பானதாக இருக்க வேண்டும்:*



இது ஏனெனில் சமத்துவம் பேசுவபர் மக்களில் இழிவாக கருதப்படும் பிறப்பாக இருந்தால், அது எடுபடாது.


மக்களில் உயர்வாக கருதப்படும் இடத்தில் பிறந்து, அனைவரும் சமம் என கூறும்போது அது எடுபடும்... ஏனெனில் அது அவரது சொந்த தேவைக்கானது அல்ல என தெளிவாக தெரியக்கூடியதாக இருக்கும்!!



முகம்மது நபி:

இதுபற்றி அபூசுப்யான் சொன்ன கூற்றிலேயே உள்ளது.

புகாரி ஹதீஸ் 7

ரோம மன்னர்: அவரது குலம் உங்களில் எத்தகையது?

அபூசுப்யான்: அவர் எங்களில் சிறந்த குலத்தை சார்ந்தவர்
புகாரி 7.



அப்படி இருந்தும்,  மனிதர்களில் சிறந்தவர்கள் தன் கோத்திரம் என சொல்லவில்லை!

மாறாக பயபக்தி உடையவரே உங்களில் சிறந்தவர்.(குர்ஆன் 49:13)



அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
(நபி(ஸல்) அவர்களிடம்) “இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?“ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், “மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்“ என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், “நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை“ என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர்(ஸல்) (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!“ என்று பதிலளித்தார்கள் அதற்கு மக்கள், “நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை“ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், “அரபுகளின் (பரம்பரையான) கரங்கங்ளைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்“ என்று பதிலளித்தார்கள்.
இது அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஸஹீஹ் புகாரி : 3353.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்





பைபிள்:

மோசேயின் பிறப்பு :
அம்ராம் தன் தந்தையின் சகோதரியை மணந்து அதன் மூலமே ஆரோனையும் மோசேயையும் பெற்றார். (யாத்திராகமம் 6:20) என எழுதப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் இந்த விதத்தில் பிறந்த ஆரோனின் பரம்பரையையே ஆசாரித்துவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


அதிலும், ஊனமுற்றோர் அங்கவீனர்களால் பரிசுத்த குலைச்சல் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது:




(லேவியராகமம் 21 )
 ------------
17 நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.

18 அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,

19 காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,

20 கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.

21 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.

22 அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.

23 ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
(லேவியராகமம் 21:17-23)


அதுவும் கடவுளே சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.

அவனவன் இப்படி தான் பிறக்க வேண்டும் என தேர்வு செய்து பிறக்கிறானா? இல்லையே!


அதேபோல,

(உபாகமம் 23 )
 ------------
1 விதையடிக்கப்பட்டவனும், கோசமாறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

2 வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

(உபாகமம் 21:1-3)


இதன்படி, தேவனுடைய சர்ச்சுக்கு விதை நசுங்கியவன், ஆணுறுப்பு அறுபட்டவன் , வேசிப்பிள்ளை யாரும் நுழைய கூடாதாம்.



இப்படி சமத்துவத்தின் நிலை இது தான்

------------------------------------------------

11. மறைவானவற்றை அதாவது சாதாரண மக்களால் அறிய இயலாததை சரியாக சொல்லியிருக்க வேண்டும்:*




முகம்மது நபி:


அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்“ என்று கூறினார்கள். பிறகு, “1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?“ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்“ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), “வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!“ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது“ என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), “தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்“ என்று கூறினார்கள். பிறகு, “இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்“ என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?“ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்“ என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!“ என்று கூறினார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்“ என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்“ என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3329.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்



ஒரு குழந்தையின் சாயல் எப்படி ஒத்திருக்கும் என்பது அக்கால மனிதர்களால் அறிய முடியாது.

அதனால் தான் யூத அறிஞர் அவ்வாறு கேட்டார்.

இதுபோன்று நிறைய சான்றுகள் உள்ளன.



பைபிள்:

பைபிளிலும் சில வசனங்கள் அப்படி உண்டு. ஆனால் அதைவிட அதிகமானவை தப்பாகவே உள்ளன.


சூரியனையும் சந்திரனையும் நான்காம் நாளில் படைத்ததாகவும் அதற்கு முன்பே பூமி இருந்ததாகவும், மரங்கள் எல்லாம் மூன்றாம் நாளில் முளைத்ததாம். (ஆதியாகமம் 1:10-17)


உலகில் கி.மு. 2458 இல் வெள்ளம் ஏற்பட்டு எட்டு நபர்கள் மட்டுமே எஞ்சினார்களாம்!!

இதுபற்றி ஆரமத்திலேயே சொல்லியுள்ளேன்.



இறைவனின் வேதத்தில் இப்படி 👎 பொய்யானவை  கூறப்படுமா?

------------------------------------------------


12.எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கூறி இருக்க வேண்டும்:*


எதிர்காலத்தில் நடப்பதை இப்படி நடக்கும் என தெளிவான வார்த்தைகளால் முன்னறிவித்திருக்க வேண்டும்.


சாதாரணமாக மனிதனுக்கு மூன்றுவிதமான வெளிப்பாடுகள்/உள்ளுணர்வுகள் ஏற்படும்.


1.இறைவன் புறத்திலிருந்து ஏற்படுத்தப்படும் உள்ளுணர்வு


2.சைத்தான் ரகசியத்தை உட்டுக்கேட்டு மனிதனின் உள்ளத்தில் போட்டுவிடுவது

3.மனிதனின் எதேச்சையான கற்பனைத்திறன்.


இதனால் தான் ஜோசிய காரர்கள் சொல்வது சிலவேளை நடந்துவிடுகிறது.

காரணம், வான ரகசியங்களை உட்டுக்கேட்டு மனிதனின் உள்ளத்தில் போட்டுவிடுவான்.  அந்த ஜோசிய காரனோ அவற்றுடன் தன் கற்பனையில் பொய்களையும் கலந்து சொல்லுவான்.

அதனால் அப்படி நடைபெறுவதுண்டு.


ஆக இறைவன் புறமல்லாமல் இருந்து வரும் முன்னறிவிப்புகளில் பிழைகள் நிறைவேறாமைகள் காணப்படும்.

அத்தோடு , ஒன்று உண்மையாக நடந்தால், அவர் கரெக்டாக சொல்பவர் என்ற மனநிலையினால், அவர் கூறிய சகல பொய்களையும் உண்மையாக்கும்விதமாக காரண காரியங்கள் கூறி, "அவர் சொன்ன அது தான் இது" என உண்மைப் படுத்திவிடுவர்.

இப்படி தான் நாஸ்ட்ரடாமஸ்  உட்பட சகல எதிர்காலத்தை கணித்து கூறியவர்கள் என்போரின் நிலை!!


ஆனால் இறைத்தூதர் அப்படி அல்ல!

அவர் கூற்று பூரணத்துவமானதாக தெளிவானதாக இருக்கும். முன்னறிவிப்பு விசயத்தில்  உவமை கிவமை என இருக்காது!

அவர் சொல்வது ஒருபோதும் பிழைத்து போகாது! ஏனெனில் இறைவனின் புறமிருந்து வந்த செய்தி என்பதாலும், இறைவன் முக்காலமும் அறிந்தவன் என்பதாலும் இப்படி இருக்கும்!


ஆகவே ஒரு சில முன்னறிவிப்புகளை மட்டும் காண்போம்:


*முகம்மது நபி*:



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது. 49
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7118.
அத்தியாயம் : 92. குழப்பங்கள் (சோதனைகள்)


இந்த நிகழ்வு  நபிகளார் சொன்னதுபோன்றே, அவரது மரணத்திலிருந்து 644 வருடங்களின் பின் , அதாவது ஹிஜ்ரி 654வது ஆண்டில் நிகழ்ந்தது.

இதை அக்காலத்தில்  வரலாற்றாசிரியர்கள் பதிவும் செய்தார்கள்.


இதேபோன்று, ஏராளமான முன்னறிவிப்புகள் உள்ளன. அவற்றில் பல நிகழ்ந்துவிட்டன. இன்னும் சிலவை இனி நிகழ இருக்கின்றன.

அதில் ஒன்றை மட்டும கூறுகிறேன்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் நிகழாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில், ஒருவர் தமது செல்வத்திற்குரிய ஸகாத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வார். ஆனால், அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொள்ள ஒருவரையும் அவர் காணமாட்டார். மேலும், அரபுமண் மேய்ச்சல் நிலங்களாகவும் (கரை புரண்டோடும்) வாய்க்கால்களாகவும் மாறாதவரை (யுகமுடிவு நாள் நிகழாது).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1839.
அத்தியாயம் : 12. ஜகாத்



அரேபிய பாலைவனத்தில் ஆறுகள் ஓடும் நிலை ஏற்படும் என இது கூறுகிறது.

காலநிலை மாற்றங்களாலும் பூலோக வெப்பமாதல் காரணமாகவும் இது மிகவும் எதிர்வுகூறப்படும் ஒன்றாக உள்ளது.

அதுமட்டுமின்றி அதன் அரபு வார்த்தையில், அரபுமண் மேலே கூறப்பட்டநிலைக்கு மீளும் என்றே உள்ளது. அதாவது ஆரம்பத்தில் இப்படி செழிப்பாக இருந்த நிலமே அது என்ற கருத்தும் அதில் உள்ளது. அது இன்றைய ஆய்வுகளின் முடிவாகும்.  ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே இது எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதுபோன்று நிறைய உள்ளன...




*பைபிள்:*

பைபிளை பொருத்தமட்டில், முன்னறிவிப்பு என கிறிஸ்தவர்கள் சொல்வதில் அநேகமானவை உண்மையிலேயே முன்னறிவிப்புகள் அல்ல.


உதாரணமாக,

"ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."
(மத்தேயு 2: 15)

ஆனால் இது  தீர்க்கதரிசன நிறைவேற்றம் என்பதுபோல எழுதப்பட்டுள்ளது.


ஆனால் உண்மையில் அது, எகிப்திலிருந்து இஸ்ரேலியரை விடுவித்ததை பற்றி கூறும் வசனம் ஆகும்.



(Hosea 11 )
 ------------
1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.

2 அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.

(ஓசியா 11:1-2)


இஸ்ரேலியரை தனி மனிதனாக உருவகித்து சொல்லும் வசனத்தை இயேசுவை பற்றிய முன்னறிவிப்பு போல பொய்யாக எழுதி உள்ளார்கள்.

 புதிய ஏற்பாட்டிலுள்ள தீர்க்கதரிசன நிறைவேற்றம் என உள்ளவை அனைத்துமே இவ்வாறே பொய்யாக இருக்கின்றன.


உண்மையிலேயே நிறைவேறாத  தீர்க்கதரிசனங்கள் நிறைய உள்ளன.

அவற்றில் மூன்றை மட்டும் பதிகிறேன்:



1. காயீன் பூமியில் நிலையற்று  அலைவான் என கர்த்தர் சொன்னார். ஆனால் காயீனோ தன் குமாரன் பெயரில் ஒரு பட்டணத்தையே உருவாக்கி அதில் குடியிருந்தான்.


(Genesis 4 )
 ------------
9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.


11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.


16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17 காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய எனோக்கின் பேரை இட்டான்.

(ஆதியாகமம் 4:9,11-12,16-17)

இங்கே கர்த்தர் சொன்னது நடக்கவில்லை என பைபிளே சொல்லிவிட்டது.



2.ஆதாம் பழத்தை திண்ணும் நாளிலேயே செத்துப்போவான் என கர்த்தர் சொன்னார். (ஆதியாகமம. 2:17)

ஆனால், ஆதாம் அதை சாப்பிட்ட பின் அந்நாளில் சாகாமல், 930 வருடம் கழித்தே இறந்தார். (ஆதியாகமம் 5:3-5)


3.கோனியா (யோயாக்கீம்)இன் சந்ததியில் யாரும் யூதாவின் நிங்காசனத்தில் அமர்வதில்லை என முன்னறிவிப்பு:

. (எரேமியா 22 )
 ------------
28 கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ ஒருவரும் விரும்பாத பாத்திரமோ அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?


30 இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 22:28,30)



ஆனால் இவனது மகன் யோயாக்கீன் இவனுக்கு பின் மூன்றுமாதம் (அல்லது 3 மாதம் பத்துநாள்) ஆட்சி செய்தான்.

அதாவது அவனது சிங்காசனத்தில. அமர்ந்து ஆண்டான்.

(2 இராஜாக்கள் 24 )
 ------------
6 யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


8 யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.
(2 இராஜாக்கள் 24:6,8)


வேடிக்கை என்னவென்றால்,  இயேசுவும் இந்த எகோனியாவின் வம்சத்தில் வந்தவர் என மத்தேயு 1:10-12 சொல்கிறது.

அதிலும் வேடிக்கையாக இயேசு தாவீதின் சிங்காசனத்தில் அமர்வார் என்றும் சொல்லப்பட்டது.

ஆகவே எரேமியா 22:30 சொன்னது போலி தீர்க்கதரிசனமானது.


இதேபோல 15இற்கும் மேற்பட்ட போலிதீர்க்கதரிசனங்கள் பைபிளில் உள்ளன.


கடவுளிடமிருந்து வந்ததில் நிறைவேறாமல் போகுமா?. போலிதீர்க்கதரிசனம் இருக்குமா??

------------------------------------------------

13.தீர்க்கதரிசியின் கூற்றுக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்:*



முகம்மது நபி:

முகம்மது நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்திகள், அவரது செயல்கள், அங்கீகாரங்கள் அனைத்தும் துல்லியமாக அறிவிப்பாளர்தொடருடன் பாதுகாக்கப்பட்டுள்ளன.


அதாவது முகம்மது நபியிடமிருந்து கேட்டவர் முதல் அதை புத்தகத்தில் பதிவு செய்தவர் வரைக்கும் யார் யார்மூலமாக இது வந்து சேர்ந்தது என பதியப்பட்டிருக்கிறது.


அதேநேரம், அவ் அறிவிப்பாளர்கள் அனைவரும் யார்? , அவர்களின் நம்பகத்தன்மை என்ன?, மனனசக்தி எப்படிப்பட்டது? , அவர்கள் எந்த காலத்தை சேர்ந்தவர்? , குறிப்பிட்ட அறிவிப்பாளரை அவர் சந்தித்தாரா இல்லையா? என அனைத்துமே அக்கால மக்களின் சாட்சியங்களோடு பதியப்பட்டுள்ளன.


நபிகளாரை தொட்டு ஒரு செய்தி ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமானால்,


1.நபிகளாரிடம் செவிமெடுத்தவரிலிருந்து அதை பதிவு செய்தவர் வரை அறிவிப்பாளர் தொடர் இருக்க வேண்டும்.


2.அவ் அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தோராகவும், அறியப்பட்டவராகவும், மனனசக்தியில் உறுதியானவராக இருக்க வேண்டும்.


3.அவ் அறிவிப்பாளர்கள்  , அதாவது கேட்டவர் மற்றும் சொன்னவர் ஆகிய  இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தவர்களாக இருக்க வேண்டும்.


4.மிக பலமான அறிவிப்பாளர்  தொடருடன் வரும் ஹதீஸ்களுக்கு முரண்படாமல் இருக்க வேண்டும்.


இப்படி உன்னதமான நிபந்தனைகளை போட்டு , மிக சரியான முறையில் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன..


அதேபோன்று குர்ஆன் எண்ணற்ற அறிவிப்பாளர்கள் வழியாக மன்னம் வழியாகவும், எழுத்துவடிவிலும் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.



--

*பைபிள்:*

ஒவ்வொரு யூதப்பிரிவும் வெவ்வேறு வித பிரதிகளை பழைய ஏற்பாட்டு விசயத்தில் வைத்திருந்தனர்.

அதில் ஒன்று இன்னொன்றுக்கு மாற்றமான j புத்தகங்களை கொண்டதாக இருந்தன.

இதில் கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த MSS versionஐ அடிப்படையாக வைத்தே இன்றைய பழைய ஏற்பாட்டின் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன.


புதிய ஏற்பாட்டை பொருத்தமட்டில், கி.பி. 404 இல் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி எந்த புத்தகத்தை வேதத்தில் சேர்ப்பது எதை சேர்க்க கூடாது என அவர்களாக தம் நிலைக்கு ஏற்பட தேர்வு செய்து இணைக்கப்பட்டதே ஆகும்.


ஆரம்ப கால கிறிஸ்தவ பிரிவுகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவின் சிலர் எழுதிய கடிதங்கள் , சுயசரிதை, கனவு ஆகியவற்றை  வேதமாக ஆக்கியுள்ளனர்.


இந்த புதிய ஏற்பாட்டுக்கும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
------------------------------------------------



ஆகவே இந்த இரண்டில் எது உண்மைவேதம் என கிறிஸ்தவர்கள் உணர்வார்களாக!!

இறைவன் நம்மை பொருந்திக்கொள்வானாக




http://www.answeringchristian.blogspot.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்