கிறிஸ்தவம் ஓர் அறியாமை

கிறிஸ்தவம் ஓர் அறியாமையா? 
------------------------------------------------



கிறிஸ்தவம் என்பது இறைவன் நம் பாவத்தை மன்னிக்க இயேசுவை சிலுவையில் கழுவேற்றி நமக்காக சாகடித்தார் பின்பு அவரை உயிர்த்தெழுப்பினார்/உயிர்த்தெழுந்தார் என்பதாகும்.


கிறிஸ்தவர்கள் இதை கூறும்போது, கடவுள் நம் பாவத்திற்காக மனிதராக (இயேசுவாக) வந்து நமக்காக இன்னல்பட்டு மரித்தார் என சொல்லி, "பார்த்தீர்களா கடவுளின் அன்பை? எவ்வளவு அன்பு ? இப்படி எந்த கடவுளாவது தன் பக்தருக்காக செத்துப்போவாரா?" என்றெல்லாம் கூறி நம்மைல்லாம் முட்டாள்கள் என கூறுகிறார்கள்.


அதனால் தான் இதை எழுதுகிறேன்.


இதை நாம் சில கோணங்களில் ஆராய்வோம்:

1.கடவுளால் மனிதனாக இயலுமா? தகுமா?

2.கடவுள் மனிதனாக பிறந்து வருவது கடவுளது அறிவீனமா? அறிவாளித்தனமா?



3.இயேசுவை கொன்றது பலியா? பாவமா?


4.இயேசுவை கொன்றது கடவுளின் அன்பா? கொடூரமா? அல்லது ஏமாற்று வேலையா?



5. இப்படிப்பட்டவர் கடவுள் எனின், அவருக்கு நாம் கூறும் ஆலோசனை அல்லது அட்வைஸ் என்ன?

ஆகிய ஐந்து சிறு பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம்:



1.கடவுளால் மனிதனாக வர இயலுமா? தகுமா?:
-----

கிறிஸ்தவர்களை பொருத்தமட்டில், 

கிருஷ்ணர் கடவுள், அவர் மனிதனாக வந்தார், புத்தராக வந்தார்,இராமராக வந்தார் என்றெல்லாம் இந்துக்கள் சொன்னால், அதையெல்லாம் கேலி செய்வார்கள். ஆனால் அதுவே கடவுள் இயேசு மனிதனாக வந்தார் என சொன்னால்,

"பார்த்தீர்களா? நமக்ககாக மரிப்பதற்கு வந்திருக்கிறார். எந்த கடவுளாவது தன் பக்தனுக்காக மரிப்பாரா? எவ்வளவு அன்பு?" அப்படீனு எல்லாம் பீத்திக்கொள்வார்கள்.


முதலில் கடவுள் மனிதனாக வர இயலுமா?



இறைவன் மனிதனாக வருவதாக இருந்தால், ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அது மனிதனை போல மாறு வேசத்தில் வருவது மட்டும் தான்.

அப்படி உலகத்தில் எந்த மதமும் கூறுவதில்லை.

மாறாக மனிதனாக பெண்ணிடம் பிறந்து முலைப்பால் அருந்தி வளர்ந்து பெரியவர்களான மனிதர்களை குறித்தே இறைவன் மனிதனாக வந்தார் என வாதிடுகிறார்கள்.

இது சாத்தியமா????


-இறைவன் என்பவன் சகலதையும் படைத்தவன், மற்றும் படைக்கப்படாதவன், ஆரம்பம் இறுதி அற்றவன்.


-மனிதனை பொருத்தமட்டில் , அவன் ஒரு படைப்பு, ஆரம்பம் முடிவு உள்ளவன்.


மனிதன் ஒரு நாளும் இறைவனாக முடியாது. காரணம் அவன் ஒரு படைப்பு ஆவான். படைப்பு ஒரு நாளும் இறைவனாகாது. மாறாக சகலதையும் படைத்தவனே இறைவன்.




-இறைவன் மனிதனாக பிறந்து வருகிறான் எனின், அதை இரு வகையாக பிரிக்கலாம்.

1.வானத்திலிருக்கிற இறைவன் முழுவதுமாக மனிதனாவது. வானத்தில் இறைவன் அற்றுப்போவது.:

இப்படி நடந்தால், இறைவன் படைப்பாக மாறுவதால், அவரால் திரும்ப இறைவன் எனும் அந்தஸ்த்தை அடைய இயலாது.

ஏனெனில் எந்த ஒரு படைப்புக்கும், மனிதனக்கும் இறைவன் எனும் அந்தஸ்த்தை அடைய இயலாது.

ஆகவே இறைவன் இப்படி பூரணமாக மனிதனானால், அவர் மனிதனாகவே அழிந்து விடுவார். கடவுளே இல்லாமலாகிவிடுவார்.



2.இறைவன் வானத்திலிருந்து கொண்டே பூமியில் மனிதனாக வருதல்:


இந்த கிறிஸ்தவர்கள் உட்பட அத்வைதிகளின் கோட்பாடு கூட இதுவே தான்.

இங்கேயும் பெரிய பிரச்சினை உள்ளது.

மனிதனாக பிறந்து வருவதால், படைப்பாக மாறுகிறார்.

அதாவது இறைவன் தன்னை ஒரு மனிதனாக படைக்கிறார் என்பதாகும். ஏனெனில் மனிதன் ஒரு படைப்பு ஆகும்.


இறைவன் தன்னை போல படைத்தால் என்ன எப்படி படைத்தால் என்ன , அது படைப்பாக தான் இருக்க போகிறது.

படைப்பு படைத்தவன் அல்ல.


ஆகவே இறைவன் வானத்தில் இருக்க, பூமியில் மனிதனாக வருதல் என்பது,,, வானத்திலிருந்து கொண்டு ஒரு மனிதனை படைப்பதாகவே அமைகிறது.

ஆகவே படைக்கப்பட்டவர் தன்னை படைத்தவராக ஒருநாளும் இயலாது



ஆகவே இறைவன் ஒருநாளும் மனிதனாக பிறந்து வர இயலாது.


ஒரே நேரத்தில் படைப்பாகவும் படைத்தவராகவும் இருக்க இயலாது. படைக்கப்பட்டவர் இறைவனாகவும் முடியாது.


*இறைவன் மனிதனாக வந்தார் என முற்கால மக்கள் ஏன் இட்டுக்கட்டினார்கள்??


குறித்த மனிதர்கள் மீதுள்ள அளவுகடந்த நேசத்தாலும் மரியாதையாலும் , "குறித்த மனிதர்களை இறைவனின் அவதாரங்கள் அல்லது இறைவன் தான் மனிதனாக வந்தார்" என இட்டுக்கட்டினார்கள்.


இது போன்ற கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் ஒரே வசனத்தில் தெளிவை கொடுக்கிறது:


"மர்யமின் மகன் தூதுவரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதுவர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உட்கொள்வோராகவே இருந்தனர். பல அத்தாட்சிகளை கொண்டு நாம் அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்குகிறோம் என்பதை கவனிப்பீராக! பின்னர் , அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!"
(5:75)


இவ்வசனத்தில்

-அவர் மர்யமின் மகன் என சொல்கிறது. ஒரு பெண்ணுக்கு பிறந்தவர் படைப்பாகவே இருக்கிறார். இறைவனுக்கு தாய் இல்லை

-அவர் ஒரு தூதுவர். அவர் மட்டும் அல்ல. அவருக்கு முன்னரும் பலர் இருந்துள்ளனர். அதன்படி அன்னாருக்கும் முடிவு உண்டு.

-அவரது தாய் உண்மையாளர். அவருக்கு தாய் உண்டு. ஆகவே ஆரம்பம் உண்டு. மேலும் அவர் படைப்பின் மகன் படைப்பாகவே ஆகுவார்.


-அவ்விருவரும் உணவு உட்கொள்வோராகவே இருந்தனர். அதாவது சாதாரண படைப்பாக அல்லாமல் பலவீனமான இரு படைப்புகளாக அவர்கள் இருந்தனர். உணவு இல்லாமல் சில உயிர்கள் வாழும். ஆனால் இவ்விருவருமோ உணவு உட்கொண்டே வாழ்ந்தனர்.


இப்படி தெளிவாக விளக்கிய பின்னரும், இதற்கு நொண்டி சாக்குபோக்குகளை கூறி அன்னவரை கடவுள் என வாதிடுவோர் பலர் இருப்பார்கள் என்பதையும் தெளிவாக்குகிறது.




ஆகவே மனிதன் இறைவன் அல்ல. மாறாக படைப்பு ஆகும்.

இறைவன் ஒருவரை படைத்தால், குறித்த நபர் படைப்பாகவே இருப்பார். இறைவன் அல்ல.

இறைவனால் மனிதனாக பெண்ணிடம் பிறந்து வர இயலாது. காரணம் இறைவன் அப்படி செய்வது என்பது ஒரு படைப்பாகவே இருக்கும்.


ஆகவே இவ்வாதம் மிகவும் அபத்தமான ஒன்று ஆகும்.
------------------


அடுத்த தலைப்பிற்கு நகர்வோம்
------


2.கடவுள் மனிதனாக பிறந்து வருவது கடவுளது அறிவீனமா? அறிவாளித்தனமா?



முதல் பகுதியில் இறைவன் மனிதனாக வர இயலாது என்பதை பார்த்தோம். ஏனெனில் படைப்பு படைத்தவனாக இருக்க இயலாது. படைப்பும் படைக்கப்பட்டவரும் ஒரே நபராக இருக்க இயலாது.



ஒரு பேச்சுக்கு இவர்களது கற்பனைகளின்படியே கவனித்தால்,

இப்படி வருவது இவர்களின் வேதப்படி அறிவாளித்தனமா? மடத்தனமா?



இறைவன் மனிதனோ மனிதகுமாரனோ அல்ல என எண்ணாகமம் 24:19 , 1 சாமுவேல் 15:29


“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.”
  — 1 சாமுவேல் 15:29 (TAM)



மனிதனை இறைவன் என்று சொல்வது தேவ தூசணம் ஆகும்.



அப்படியிருக்க, தேவன் மனிதனாக வந்தால், மனிதர்கள் பார்வையில் அவர் தன்னை தேவன் என சொல்வது தேவதூசணம். ஏனெனில் அவர் பூமியில் மனிதனாகவே இருக்கிறார் என்பதால்.


தேவன் போதித்த சட்டத்தின்படியே, தேவதூசணம் செய்வோர் கொல்லப்பட வேண்டியவர்கள்.

ஆகவே தேவன் மனிதனாக பூமிக்கு வந்தால், அவர் தன்னை தேவன் என வாதிப்பதாலோ மறைமுகமாக வாதிப்பதாலோ தேவதூசணம் செய்ததால், மரணதண்டனைக்கு உட்படுவார்.


அதாவது, தேவன் மனிதனாக வந்தால் கொல்லப்பட வேண்டும். அவர் என்ன ஆதாரம் கொடுத்தாலும், அவர் தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளாதவரை , மரணதண்டனைக்கு உட்படுவார்.



அவராக வந்து அவரே விதித்த தண்டனைச்சட்டப்படி, அவர் கொல்லப்பட வேண்டியவர்.


இது மற்றவர்களின் பாவத்திற்காக அல்ல. அவர் மனிதனாக வந்த பாவத்திற்காகவே அமையும்.


அதுமட்டுமின்றி தேவனையே கொன்ற பாவம் மனிதர்களுக்கு ஏற்படும். 

ஆனால் கொன்ற மனிதர்களோ, தேவதூசணம் செய்த பாவியை கொன்றோம் என்றும் தேவசித்தத்தை செய்தோம் என்றே கருதுவார்கள்.


ஆகவே இது பச்சை முட்டாள்தனமாகும்.


அதாவது
இவர் மனிதராகி தன்னை தேவன் என சொன்னால், அது தேவதூசணம். தேவதூசணத்தை செய்ததால் அவர் கொல்லப்படுவார். கொன்றவருக்கோ தேவனை கொன்ற பாவம் உண்டு. அதுமட்டுமின்றி கொன்றவனோ தேவனது சித்தப்படி கொலைக்கு பாத்திரமானவனையே கொன்றான் என்பதாக ஆகிவிடும்.


இந்த கதையை தான் இப்போதுள்ள கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.


அதாவது கடவுள் மனிதனாக வந்தாராம்.

அவர் தன்னை தேவனாக வெளிப்படுத்தியதால், அது தேவதூசணம் என யூதர்கள் அவரை கொன்றார்களாம். 



⁶65.⁵ அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.
⁶⁶66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
(மத்தேயு 26:65-66)


தேவ தூசணத்திற்கு மரண தண்டனை என விதித்தது யார்?

இதே தேவன் அல்லவா?


ஆனால், இவரை இப்படி கொல்ல ஒப்படைத்த யூதர்களுக்கு அதிக பாவம் உண்டு என அவரே சொல்கிறார்:


“இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.”
  — யோவான் 19:11 


 
இது பச்சை முட்டாள் தனம் இல்லையா?

இவர் மனிதனாக வந்தால், தன்னை தேவன் என தெளிவாக்க வேண்டும்..

ஆனால் இவரோ தேவதூசணத்தினால் கொல்லப்படுகிறார். அதுவும் அவர் கொடுத்த சட்டப்படி தான்.

அவர் வந்தால் கொல்லப்படுவார்- கொல்லப்பட்டால் கொன்றவனுக்கும் அவனைவிட ஒப்புக்கொடுத்தவனுக்கும் அதிக பாவம் உண்டு என்றால் 

அவர் வந்ததே மனிதர்களை பாவியாக்குவதற்கு தான் என தெளிவாக புரிகிறதல்லவா?

இது பச்சை மடத்தனமான செயல் ஆகும்.



இனி அடுத்த பகுதிக்கு செல்வோம்
-------------


3.இயேசுவை கொன்றது பலியா? பாவமா?
--------------

இவர்களின் நம்பிக்கைப்படி தேவதூசணத்திற்காக கொல்லப்படுகிறார் இயேசு (மத்தேயு 26:65-66)


இது பலி ஆயின், பலி இட்ட யூதர்களுக்கு நன்மை அல்லவா சேரவேண்டும்?


ஆனால் அவரோ,

தன்னை ஒப்படைத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்கிறார்:

“இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.”
  — யோவான் 19:11



இங்கே அவரை கொல்வதை பாவம் என்கிறார்.


பலியாக வந்தால், பலிகொடுப்பது தானே சிறந்தது. அப்படி இருக்க எப்படி பாவமாகும்??


அவரது குற்றமான தேவதூசணத்திற்கு அல்லவா கொல்லப்படுகிறார்? அதுவும் அவர் விதித்த சட்டங்களின்படி தேவதூசணம் செய்பவன் கொல்லப்பட வேண்டியவன்.

அப்படி மரணதண்டனைக்கு உட்பட்டதை பலி என்கிறார்கள்.

ஆனால் அதே பலியை இட்டவர்களை பலியிட்டதால் பாவிகள் என்கிறார்கள்.

இது பச்சை மடத்தனம் இல்லையா?


---------


4.இயேசுவை கொன்றது கடவுளின் அன்பா? கொடூரமா? அல்லது ஏமாற்று வேலையா?
--------



இவர்களின் நம்பிக்கைப்பிரகாரம், இயேசு கொல்லப்பட்டது தேவனின் அன்பு ஆகும்.

ஆனால் உண்மையில் இது அன்பா?


நம் பாவத்தை மன்னிப்பதற்காக இரத்த லஞ்சம் கேட்கிறார். இது அன்பா?

இவர்களின் நம்பிக்கை பிரகாரம், பிதாவோ ஆவியோ சாகவில்லை. மாறாக குமாரன் மட்டுமே கொல்லபடுகிறார்.


பிதா தன் குமாரனை கொல்வதே அன்பு கிடையாதே. அது கொடூரம் ஆகும்.

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு தண்டனை கொடுக்காமல், தன் மகனுக்கு தண்டனை கொடுக்கிறார் என்றால்,

அது அன்பா? அல்லது அநீதியா?

அதே போல கடவுள் தன் நீதியை நிலைநாட்டாமல், அநீதியாக ஒருவரை கொல்கிறார் என்றால் அது அன்பா?

இயேசுவை கொன்றதற்கு பதிலாக பிதா குமாரன் ஆவி மூன்று பேருமே செத்துப்போனால் அதை அன்பு என சொல்லலாம்.


ஆனால் பிதாவோ தன் மகனை கொலை பண்ணுகிறார். மகனை கொலை பண்ணாவிட்டால் மற்ற எல்லாரையும் கொலை பண்ணுவாராம்.


இங்கே தேவன் தன் குமாரனை கொலை பண்ணினால், அங்கேயும் அன்பு இல்லை. கொடூரனாக ஆகிறார்.

 மகனை யாருக்கு பலியிடுகிறார்?

தனக்கு தானே பலியிடுகிறார்? பிறகு எப்படி அன்பாகும்?

அதாவது சொந்த மகனை தனக்கே பலியிட்டுகொல்லுகிறார் என்றால் இது அன்பாக இருக்குமா?

மிகவும் இரத்தவெறி பிடித்தவன் கூட தன் மகனை தனக்கே பலியிட மாட்டான்.

மூட நம்பிக்கையாளன் கூட தன் பிள்ளையை போலிக்கடவுளுக்கு பலியிடுவான்.

ஆனால் இவரோ தன் மகனை தனக்கே பலியிடுகிறார்.

இதைவிட பச்சை பைத்தியகாரத்தனம் வேறு என்ன இருக்க முடியும்?

தேவனே தன்னை பலியாக்கினார் எனின், அப்போதும் தன்னை தனக்கே பலிகொடுக்கிறார்.

இது பச்சை பைத்தியகாரத்தனம் இல்லையா?

இதைவிட வேறு என்ன மூடநம்பிக்கை இருக்க போகிறது????


----
5.இப்படிப்பட்டவர் கடவுள் எனின் நாம் அவருக்கு கூறும் ஆலோசனை அல்லது அட்வைஸ் என்ன?
----------


I.மனிதன் படைக்க முன்பு பாவம் செய்வான் என தேவனுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும் எனின் ஆதாமை பாவம் செய்யாதவனாக படைத்திருக்க இயலுமா இயலாதா?

இயலும் எனின் பாவம் செய்யாத விதமாக படைத்திருக்கலாமே



2.சோதனைக்காக படைத்தார் எனின், திருந்தினால் மன்னிப்பை கொடுக்க நேரடியாக கொடுக்க வேண்டுமே



3.இரத்தம் சிந்தினால் தான் மன்னிப்பு எனின், ஆரம்பத்திலேயே அதற்காக ஒரு தடவை ஆதாமின் கையாலேயே கொன்றிருக்கலாமே


4.சரி உங்களுக்கு ரத்தம் தானே வேண்டும்? அப்படியென்றால் , இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்தபோது வடிந்த ரத்தத்தை ஏன் பாவநிவாரனமாக உங்களுக்கு ஏற்றுகொள்ள இயலாது? கொன்றே ஆகவேண்டுமா?


5.பாவத்துக்கு மன்னிக்க இரத்தம் வேண்டுமாயின், இயேசுவை வெறும் ஆட்டுக்குட்டியாக அல்லது இயேசுவுடன் ஒரு ஆட்டுக்குட்டியை கையில் கொடுத்து அனுப்பி இயேசுவை வைத்தே அந்த ஆட்டுக்குட்டியை உம்முடைய கொடூர இரத்தவெறி ஆசை நிறைவேற்றும்விதமாக அறுத்திருக்கலாமே?

இதெல்லாம் புரிஞ்சுக்க தேவனுக்கு அறிவு கிடையாதா?

 

மனித பலியே வேண்டுமா?


6.இயேசுவின் கையில் ஒரு ஆட்டுக்குட்டியை கொடுத்து அதை அறுத்திருந்தால், அநியாயமாக இயேசுவை கொன்று தேவகொடூரமோ அல்லது கிறிஸ்தவ நம்பிகைப்படி யூதர்கள் மேல் பாவமோ வந்திருக்காது அல்லவா??



ஆகவே இந்த மார்க்கமே ஒரு மார்க்கமாக இல்லையா???

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்