கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி

கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி
  ------------- 



 கிறிஸ்தவத்தை சில வசனங்களில் சொல்வதென்றால், ஆதம் என்ற ஒரு மனிதன் பாவம் செய்தாராம். அதனால் அனைவரும் மரணிக்கிறார்களாம். குற்றமற்றிருந்தும் ஆதமின் பாவத்தினால் மரணிக்கிறார்களாம்.-ரோமர் 5:12-14 


 பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால், அனைவரும் பாவம் செய்வதாலும் செய்யாவிட்டாலும் ஆதமுடைய பாவம் காரணமாக அனைவரும் மரணிக்க வேண்டுமாம். 

இதிலிருந்து காப்பாற்ற இயேசு மரணித்தாராம். பின் மூன்றாம் நாள் எழுந்துவிட்டாராம். 

இதை நம்பினால் மட்டும் இரட்சிப்பு கிடைக்குமாம். இலலைனா நித்திய மரணத்தை அடைவார்களாம்.


 கிறிஸ்தவர்கள் இயேசு வெறும் மனிதரல்ல.. 

அவர் மனித வேசம் போட்ட கடவுள் என்கிறார்கள். 

 ஆகவே நாம் ஒவ்வொன்றாக இயேசு முதல் சிலுவைப்பலி வரை அலசுவோம்:

 தலைப்புகள்: 

 1.இறைவன் மனிதனாக முடியுமா? 


 2.இயேசு இறைவனுடைய மகனா? 


 3.இயேசு தேவ வார்த்தை என்பதனை அலசல்: 

 அ.வார்த்தை என்பது ஒரு நபரா? 

 ஆ.இயேசு இறைவனுடைய வார்த்தை என்பது என்ன? 

 இ. இயேசு சகலதும் உண்டாக முன்பே இருந்தாரா? 


 4.ஆதமுடைய பாவத்தினால் மரணம் உண்டானதா? அவரினால் நாம் மரணிக்கிறோமா? 


 5.பாவத்தின் சம்பளம் மரணம் என்பது உலக மரணமா? நித்திய அக்கினி எனும் மரணமா? 

 6.பாவத்திற்கு இரத்தப்பலி கட்டாயமா? 

 7.இயேசுவை பலியாக்குவது நீதியா? 

 8.இயேசுவா சாத்தானா? 

 9.இயேசு பலியாக இருக்க தகுதியா? 

 10.இந்த சிலுவை நம்பிக்கை எப்படி ஊடுருவி இருக்கும்? 

 ஒவ்வொன்றாக அலசுவோம்:

 ------------------------------------------------ 

 1.இறைவன் மனிதனாக முடியுமா?? 

 ------------------------------------------------ 

 மனிதன் என்பவன் இறைவனது படைப்பு ஆவான். ஒரு பிள்ளை பிறக்கிறது என்றால், இறைவன் அப்பிள்ளையை படைக்கிறான் என்பதாகும். 

 இயேசு மர்யமிடம் பிறந்தார். அதாவது மரியமின் இரத்தக்கட்டி தான் இயேசு.
 ஆகவே இயேசு இறைவனது படைப்பு ஆவார். இறைவன் படைப்பது அவனது அவதாரமோ , இறைவனோ ஆகமுடியாது. 

 கன்னிப்பிறப்பாயினும் கலப்பு பிறப்பாயினும் இறைவனே படைக்கிறான். இராணி தேனீக்கள் கலப்பின்றி (ஆண்-பெண் கலப்பு இல்லாமல்) சிறிய தேனீக்களை உற்பத்தி செய்வதில்லையா? அதே போன்று தான், அன்னை மர்யமிடம் தலைவர் படைக்கப்பட்டார். (சில லூசுகள் குர்ஆன் 27:8 ஐ காட்டி வாதிட முனைவதுண்டு. அங்கே இறைவன் தன் கண்ணியத்திற்கு ஏற்றவாறு நின்ற இடத்தை சூழ நெருப்பு இருந்தது. அவ்வளவே இறைவன் நெருப்பாகவோ நெருப்பிலிருந்து தோன்றவோ இல்லை)

 ஆகவே இறைவனால் படைக்கப்பட்டவர், படைப்பே அன்றி இறைவனாகவோ அவதாரமாகவோ முடியாது 

 ------------------------------------------------ 

 2.இயேசு இறைவனுடைய மகனா?

 ------------------------------------------------

 இறைவனுக்கு மனைவி என யாரும் இல்லை என்பதால், யாரும் இறைவனது மகனாக ஆக முடியாது.. 

 இறைவன் ஒரு பெண்ணிடம் படைத்த ஒரு மனிதர், ஓர் அடியாரே அன்றி மகனாக மாட்டார்.

 (பழைய ஏற்பாட்டில், இறைவனை வணங்குவோர் இறைவனின் பிள்ளைகள் என்றும், பேலியாளை வணங்கியோர் பேலியாளின் பிள்ளைகள் -உபா13:12,நியா19:22- என்றும், அந்நிய தேவதைகளை வணங்கிய பெண்களை அந்நிய தேவதைகளின் குமாரத்திகள் என்றும் -மல்கியா2:11- உவமையாக சொல்லப்பட்டுள்ளன. இதேபோல இறைவனது மனைவி-ஓசியா2:2-19,எரேமியா3:8- என மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அது உவமையே அன்றி நேரடி அர்த்தம் அல்ல!) 


 ஆகவே இறைவனின் மனைவி அல்லாத ஒரு பெண்ணிடம் படைக்கப்பட்டவர், இறைவனுடைய மகனாக ஆக இயலாது. அவர் படைப்பே ஆவார். மேலும் அப்பெண்ணின் மகன் ஆவார் 

 ------------------------------------------------ 


 3.இயேசு தேவ வார்த்தை என்பதை சற்று ஆராய்வோம்


   

அ.வார்த்தை என்பது ஒரு நபரா?:


 வார்த்தை என்பது இறைவனது பேச்சு ஆகும். இறைவனது பேச்சு , இறைவனது பண்பு. அது ஓர் ஆள்தத்துவம் (தனியான நபர்) அல்ல!

 பைபிள் இறைவனது வார்த்தை என அடையாளப்படுத்துவது, இறைவனின் "ஆகு" என்ற கட்டளை ஆகும். 

 பைபிள் அடிப்படையில் இவ்வார்த்தை மூலம் சகலதும் படைக்கப்பட்டது. 

 "தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று" (ஆதியாகமம் 1:3) 

 "பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக் கடவது..... அவைகள் பூமியின் மேல் பிரகாசிக்கும்படி வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று" (ஆதியாகமம் 1:14-15) 

 இதை சுருக்கமாக,

 "அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்" -சங்கீதம் 33:9 


 "அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் #கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது"- சங்கீதம் 148:5 


 ஆகவே, வார்த்தை என்பது இறைவனது " ஆகு" என்ற கட்டளையே அன்றி, ஒரு நபர் அல்ல! 

 இறைவன் "ஆகு" என கட்டளையிடுவார். அது உடனே உண்டாகிவிடும். ஆகவே , இறைவன் இடும் கட்டளை , இறைவனது குமாரனாகவோ, அல்லது நபராகவோ இருக்க முடியாது. அது பேச்சு மட்டுமே
  ---- 


 ஆ. இயேசு இறைவனுடைய வார்த்தை என்பது என்ன?: 




 "வார்த்தை மாம்சமாகியது" என யோவான் 1:14 இல் யோவான் எழுதுகிறார் (அது யோவானின் புரிதல்). 

 வார்த்தை மாம்சமாக முன்பு, இயேசு என்ற ஒரு பொருளே இருக்கவில்லை!

 மாறாக வார்த்தை தான் இருந்தது. இந்த வார்த்தை "ஆகு" என்ற கட்டளை ஆகும் என்பதை மேலே சொல்லிவிட்டோம். 

 இந்த கட்டளை ஒரு படைப்பு அல்ல! மாறாக மர்யம் பெற்றெடுத்த இயேசு ஒரு படைப்பு ஆவார். "ஆகு" என்ற கட்டளையை மர்யமின் மீது போட்டதால், இயேசு மர்யமின் கருவில் படைக்கப்பட்டு விட்டார். 

 அதை தான், வார்த்தை மாம்சமாகியது என அர்த்தப்படுத்த முடியும்.

 இவ் வார்த்தை மூலம் மாம்சமாக ஆக்கப்பட்டதால் தான் , இயேசு இறைவனுடைய வார்த்தை என அழைக்கப்படுகிறார். 

 அதாவது "வார்த்தையின் மூலமாக மாம்சமாக ஆக்கப்பட்டார்" அவ்வளவே! மற்றபடி , இயேசு ஒரு படைப்பே அன்றி வேறில்லை! 

ஏனையோர் ஆண்-பெண் கலப்பு மூலம் படைக்கப்படுகின்றனர். இயேசு பெண்ணில் வார்த்தைமூலம் படைக்கப்பட்டார். இறைவன் தன் வார்த்தை மூலம் படைத்த படைப்பு, இறைவனாகவோ , குமாரனாகவோ , அவதாரமாகவோ ஆக இயலாது. 
 ---- 


 இ. இயேசு சகலதும் உண்டாக முன் இருந்தாரா?: 



 நிச்சயமாக இல்லை! வார்த்தை மாம்சமாக முன் இயேசு இல்லை!
 வார்த்தை என்பது நபரும் அல்ல!! 
அது இறைவனது கட்டளை.


 இறைவனுடைய சித்தத்தில் நாம் எல்லோருமே நாம் உண்டாக்கப்பட முன்பே இருந்தோம். 
அது போன்று தான் இயேசுவும். 

 எரேமியா தீர்க்கதரிசியை குறித்தான வசனத்தை இதற்கு ஓர் உதாரணமாக கருதலாம்! 

 “"நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்."” — Jeremiah எரேமியா 1:5 (TBSI) 

 பிறக்க முன்பே இறைவனது தீர்மானத்தில் அனைவரும் உள்ளோம். அது போன்றே இயேசுவும்!


 ------------------------------------------------ 

 4. ஆதமுடைய பாவத்தினால் மரணம் உண்டானதா? அவரினால் நாம் மரணிக்கிறோமா? பழைய ஏற்பாடு என்ன சொல்கிறது? 

 ------------------------------------------------ 



 ஆதம் மரணிக்க முக்கிய காரணமே, இறைவன் அவரை மரணிக்கக்கூடியவராக படைத்தான் என்பதும், ஜீவ மரத்திலிருந்து அவர் சாப்பிட விடப்படவில்லை என்பதும் மட்டுமே காரணம்! 

 “"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"”
 — Genesis ஆதியாகமம் 3:22 (TBSI)


 அதாவது, ஆதம் ஜீவ மரத்திலருந்து சாப்பிட்டுவிட்டால் என்றென்றைக்கும் உயிரோடு இருந்துவிடுவாராம். அவ்வாறு இருந்து விட கூடாது என்பதற்காக ஏதேனிலிருந்து விரட்டப்பட்டார்.


 இதன் காரணமாக தான், பழைய ஏற்பாட்டின்படி மரணம் ஏற்படுகிறது. பாவத்தினால் அல்ல! 

 ஆகவே இந்த பாவத்தினால் மரணம் ஏற்படுகிறது என கூறுவது பச்சை அபத்தமாகும்.


 இறைவன் ஏற்கனவே மனிதனை மரணிக்க கூடியவனாக படைத்தான்.

 அந்த ஜீவ பழத்தை சாப்பிட்டால் மட்டுமே என்றென்றைக்கும் இருக்க முடியும். ஏற்கனவே இருந்த மரணம் , ஜீவ மரத்திலிருந்து சாப்பிடாததால் இல்லாமல் செய்யப்படவில்லை! அதுமட்டுமின்றி, பைபிள்படி ஏனோக் (ஆதி 5:22,24), எலியா (2இராஜாக்கள்2:11) ஆகியோர் மரணித்ததாக இல்லை! மாறாக வானத்திற்கு உடலுடன் ஏறிவிட்டனர். இவர்களுக்கு பாவம் கடத்தப்படவில்லையா?


 நிச்சயமாக மரணம் பாவத்தினால் உண்டாகவில்லை! இறைவன் மரணிப்போராக மனிதனை படைத்தார் என்பதே பழைய ஏற்பாடு கூறுவது!! 


 ------------------------------------------------

 5.பாவத்தின் சம்பளம் மரணம் என்பது, உலக மரணமா? நித்திய அக்கினி எனும் மரணமா?

 ------------------------------------------------ 



 பழைய ஏற்பாட்டில், மரணம் என்பது நித்திய அழிவு எனும் நரகத்தையும், வாழ்வு என்பது அதிலிருந்து ஈடேற்றம் பெறுவதையுமே குறிக்கும். இவ்வுலக மரணத்தை அல்ல!


 ²¹ "துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை." 

 ²² அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். 

 ²³ துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 

 ²⁴ "நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்." 
 (எசேக்கியேல் 18:21-24) 


 இங்கே துன்மார்க்கனாக இருந்து பிறகு திருந்தி நீதமானாக மாறுபவன் தன் பாவத்தின்படி சாகமாட்டானாம்-21 

 அவன் பிழைத்து கொள்வானாம்-22

  ஆனால் எல்லோரும் மரணிக்கிளார்கள். நீதிமான் இவ்வசனத்தின் படி சாக கூடாதே? 

 ஆகவே இவ்வசனம் சொல்வது, இவ்வுலக மரணத்தை அல்ல! நித்திய அழிவான நரகம் ஆகும். 

 ஆகவே பாவத்தின் சம்பளம் மரணம் என்பது, இவ்வுலக மரணம் அல்ல! மாறாக நீதிமான் பிழைத்துக்கொள்ளும், துன்மார்க்கன் பிழைத்துக்கொள்ளாத மரணம் ஆகும். அதாவது நரகம்.. ஆகவே இதை கிறிஸ்தவர்கள் தம் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுவதே தப்பு!



 ------------------------------------------------ 

 6.பாவத்திற்கு இரத்தப்பலி அவசியமா? -பழைய ஏற்பாட்டு அடிப்படையில்?

 ------------------------------------------------ 



 பைபிள் படி பலி என்பது ஒரு தண்டப்பணம் போல அறவிடப்படும் ஒன்று ஆகும். இதற்காக ஆட்டை பலி கொடுக்கலாம். அல்லது புறாவை பலி கொடுக்கலாம். அல்லது மாவை பலியாக கொடுக்கலாம். 


 ⁶6 "தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்." 

 ⁷7. "ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்." …

 11."இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து," 
 (லேவியராகமம் 5:6-7,11)




 ஆகவே இரத்தப்பலி கட்டாயம் இல்லை! மாவை கூட பலியாக கொடுக்கலாம் . யோனாவின் மக்கள் பாவம் செய்த போது, மன்னிப்பதற்கு பலி கோரப்படவில்லை! மாறாக மன்னிக்கப்பட்டனர்.


 “வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.” — Jonah யோனா 4:11 (TBSI)


 அதுமட்டுமின்றி , தேவனுக்கு இதுபோன்ற பலிகளில் இஷ்டம் இல்லை! 

 “"பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை."” — சங்கீதம் 40:6 (TBSI)


 “"பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல."” — சங்கீதம் 51:16 (TBSI) 


 -தேவன் விரும்பும் பலி நொறுங்குண்ட ஆவி தான். அதாவது மனந்திருந்தி இறைவனிடம் முற்றாக மீண்டுவிடுவதையே தேவன் விரும்புகிறார்: 

 17 "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." .

 19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள். 
 (சங்கீதம் 51:17,19) 



 -மனந்திருந்தி மன்னிப்பு கேட்டால் , இறைவன் மன்னிப்பார் என்றே பைபிள் சொல்கிறது: (புதிய ஏற்பாட்டு கட்டுகதை அல்ல) 


 “"துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்."” 
 — ஏசாயா 55:7 (TBSI) 



 “"அவர்கள் எனக்கு விரோதமாய்க்குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்."” — எரேமியா 33:8 (TBSI)


 “"நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)"” — சங்கீதம் 32:5 (TBSI) 



 “"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."” — 2 நாளாகமம் 7:14 (TBSI)



 மேலும், இஸ்ரேலியர் குற்றம் செய்தபோது கூட, மோசேயின் பிரார்த்தனைப்படி மன்னிக்கப்பட்டனர். இரத்தப்பலி கோரப்படவில்லை! பாவம் மன்னிக்க இரத்தப்பலி அவசியம் என்பது பச்சை பொய் ஆகும்! 



 ------------------------------------------------ 

 7.இயேசுவை பலியாக்குவது நீதியா?

 ------------------------------------------------



 மனந்திருந்தியோரின் பாவத்திற்காக பலியாக இயேசு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. 

 ஒருவரை அவர் செய்யாத பாவத்திற்காக தண்டிப்பது எப்படி நீதி ஆகும்? அவர் தண்டிப்பது கூட , மர்யமின் மகனான இயேசுவின் உடலை ஆகும்! உயிரை அல்ல! 


 ஒரு மனிதனின் பாவத்திற்காக, இன்னொரு மனிதனை தண்டிப்பது அநீதி ஆகும். இதில் அன்பு இல்லை!


 இயேசுவை கொன்றதால், யோக்கியன் இவ்வுலகில் சாகாமல் இருக்கிறானா? இல்லையே!!


 இது நித்திய மரணத்திலிருந்து காப்பாற்ற இயேசுவை கொன்றதாயின், இயேசுவையும் நித்திய மரணத்தில் போட்டு அல்லவா தண்டிக்க வேண்டும்? இங்கேயே லாஜிக் பல்லிளிக்குதே! 




 ------------------------------------------------ 

 8.இயேசுவா சாத்தானா?

 ------------------------------------------------



 இயேசு எனும் அப்பாவியை மற்றோருக்காக தண்டிப்பதற்கு பதிலாக , சாத்தானை தண்டித்தால் எல்லாம் நீதியாக இருக்குமல்லவா? பைபிள் அடிப்படையில், இயேசுவை கொல்லுவதற்கு சாத்தானே திட்டம் தீட்டினான். 


 

 26⁶ "இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்."

 27⁷ "அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். . இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்." இயேசுவை கொல்லுவது சாத்தானின் பிள்ளைகளுடைய வேலை என இயேசுவே சொல்கிறார்: 
(யோவான் 14:26-27)


 40⁰ "தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொள்ளத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே." … 

 44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:40,44)


 இயேசுவை கொல்ல ஒப்படைத்தவர்களுக்கு அதிக பாவம் உண்டு என்றும் சொல்கிறார்:


 “"இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்."” — John யோவான் 19:11 (TBSI)



 இயேசுவை தேவன் பலிகொடுத்தால், எப்படி பாவம் உண்டாகும்? 


சாத்தான் ஏன் கொல்ல விரும்புவான்? சாத்தானின் பிள்ளைகள் ஏன் கொல்வார்கள்? 

 பாவத்திற்கு காரணமான சாத்தானை கொல்லாமல், நீதிமானை ஏன் தண்டிக்க வேண்டும்? 

 அப்படி தண்டிப்பது அநீதி அல்லவா?


 -இதற்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியையோ ஒரு புறாக்குஞ்சையோ அல்லது மாவையோ இயேசுவின் கையோடு கொடுத்து அனுப்பி அதை பலியாக்கலாம் இல்லையா?? 

 ஆகவே இப்பலி மடத்தனம் ஆகும். தேவன் தன் குமாரனின் (இவர்கள் நம்பிக்கைப்படி) ஆவியை கொல்லாமல், மர்யமின் மகனான உடலை அல்லவா பலி கொடுக்கிறார்? அது எப்படி நீதி ஆகும்? 


 ------------------------------------------------ 

 9.இயேசு பலியாக தகுதியானவரா?

 ------------------------------------------------ 


 கிறிஸ்தவ நம்பிக்கைப்படி பாவமற்றவரே பலியாக வேண்டும். 

 ஆதிபாவத்தை இவர்கள் நம்புகிறார்கள். மர்யமின் மூலம் பிறந்தவர் இவர்களின் நம்பிக்கைப்பிரகாரம் மரணமுள்ளவராக தான் பிறக்கிறார்.


 மரணம் என்பது இவர்களின் நம்பிக்கைபிரகாரம் ஆதமின் பாவத்தினால் உண்டானது (இது தவறான கொள்கை என விளக்கிவிட்டோம்). 

ஆக ஆதமின் பாவத்தினால் மரணிக்கக்கூடியவர் அதற்கேற்றாற்போல் பாவத்தோடே பிறந்துள்ளார். அது உண்மையாயின்,


 பாவத்தோடு பிறந்த இயேசு எப்படி பலியாக முடியும்?? 

 இறைவன் நாடினால் பாவம் இல்லாமல் பிறக்கச்செய்ய முடியும் என வாதிட்டால், அது தவறு.


 ஏனெனில் அவர் மரணிக்ககூடியவராக படைக்கப்பட்டார் என்றாலே இந்நம்பிக்கைப்பிரகாரம் பாவத்தோடு தான் பிறந்துள்ளார். ஆகவே அவர் பலியாக இருக்க தகுதியற்றவர். இதற்கு தகுதியாகனும் எனின் , பெண்ணிடம் பிறக்காமல் இருந்திருக்க வேண்டும்.


 ----------------------------------------------- 

 10.இந்த சிலுவை நம்பிக்கை எப்படி ஊடுருவி இருக்கும்? 

 ------------------------------------------------


 இயேசுவை நீதிமானாக இவர்கள் பார்த்தார்கள். ஆனால் நீதிமானான இயேசுவை ரோம சிப்பாய்கள் மூலம் மரத்தில் தொங்கவிட்டனர் என நம்பினர். மரத்தில் தொங்கவிடப்பட்டவனோ சபிக்கப்பட்டவன் என உபாகாமம் 21:23


 “இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம் பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.” — Deuteronomy உபாகமம் 21:23 (TBSI) 


 ஆகவே இயேசு சபிக்கப்பட்டவராக ஆகிவிடுவார். 

 இதை சமாளிக்க தான், இயேசு தன் பாவத்தினால் சாபமாகவில்லை. பாவிகளுக்காக சாபமானார் என எழுதினார் பவுல்- கலாத்தியர்3:13.

 இங்கே இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. இயேசு நீதிமான் என்றால், நீதிமானை கொன்ற பாவம் ரோம சிப்பாய்களுக்கும் பிலாத்துக்கும் ஏற்படுமே. அதை சொன்னால், அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதாக கருதி கொன்றுவிடுவார்களே. 

 அதற்காக முழு பலியையும் யூதன் மேல் போட்டுவிட்டனர் பவுலிய கிறிஸ்தவர்கள். அதாவது சைக்கோ பிளாத்து நல்லவனை போல சித்தரித்து , அவனையும், அவன் மனைவியையும், ரோமர்களையும் இதிலிருந்து விடுவித்தனர்.:



 17. "பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து," 

 18. "அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்." 

 19. "அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்." 

 20."பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்." … 

 22. "பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்." 


 23. "தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்." 


 24. "கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்." 

 25.⁵ அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
 (மத்தேயு 27:17-20,22-25)



 -இயேசுவை தொங்கவிட்டதால் இயேசு சபிக்கப்பட்டவர் என்பதாலும் ரோமர்களை காப்பாற்றவும், அதை சமாளிக்க தேவன் தான் இயேசுவை பலியாக அனுப்பினார் என்றனர்.



 -தேவன் பலியாக ஒரு மனிதனை கொடுப்பதாயின், அம்மனிதனுக்கு விருப்பம் இருக்கவேண்டுமே. அதற்காக இயேசு தன் ஆத்மாவை கொடுக்கவே வந்தார் என எழுதினர். 



 -நரபலி கூடாது இல்லையா? அதை சமாளிக்க இயேசு சாதாரண மனிதர் அல்ல. பரலோகத்திலிருந்து வந்தவர் என எழுதினர்.



 -தேவன் அநியாயமாக ஒருவரை கொன்றுவிட்டார் என தேவனை கேவலமாக சித்தரிப்பதால், மூன்றாம் நாளில் தேவன் அவரை எழுப்பினார் என்றும் அடித்துவிட்டனர்.

 இப்படி தான் இந்த கதை காலத்துக்கு காலம் மாறுதலடைந்து, சுவிசேச கதைகளாக எழுதப்பட்டன. அவற்றை வேறொரு பதிவில் ஆராய்வோம்!! 
 ----------------------------------------------- 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்