இயேசுவை ஏன் கடவுள் அல்ல என்கிறோம்?

 இயேசு கடவுள் இல்லை என்று ஏன் சொல்கிறோம்?


1.அவர் மர்யமின் மகனான ஒரு மனிதர். பிறந்தவர் எப்போதும் ஒரு படைப்பேயன்றி படைத்தவராக முடியாது


2.அவர் கடவுள் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ வாதிடவில்லை. மாறாக தன்னை கடவுள் இல்லை என்று நிரூபித்தார். இதற்கான சான்றாக

அ-பிதா மட்டுமே மெய்யான ஒரே தேவன் என்றார்-யோவான் 17:3

பிதா மட்டுமே மெய்யான ஒரே தேவன் எனின், வேறொரு நபருக்கு இங்கு இடமில்லை!

ஆ-உண்மையாக தொழுது கொள்வோர் பிதாவையே தொழுதுகொள்வர் என்று கூறினார். -யோவான் 4:23

இ-தன்னை நல்ல போதகர் என்று ஒருவர் சொன்னபோது, தேவனை தவிர நல்லவன் இல்லையே என கூறி மறுத்தார்- மத் 19:16-17, மாற் 10:17-18, லூக்கா 18:18-19

ஈ-தேவனிடம் ஜெபம் செய்து பிரார்த்தித்து தன்னை தேவன் இல்லை என நிரூபித்தார்.- மத்தேயு 26:36,39,41,42,44 ; மாற்கு 1:35 ,6:46 , 14:32,39 ; லூக்கா 5:16, 6:12, 9:18,28-29, 11:1, 22:42,44-46

உ-சீடர்களுக்கு பிதாவிடமே ஜெபம் பண்ணுமாறு கற்பித்து , கடவுள் அவர் அல்ல என நிரூபித்தார்.- மத்தேயு 6:9, லூக்கா 11:2

ஊ-பரலோகராஜ்யத்தில் நுழைய பிதாவின் சித்தப்படியே நடக்க வேண்டும் என போதித்து தன்னை கடவுள் இல்லை என போதித்தார்-மத்தேயு 7:21


பிதாவின் சித்தம் அவரை ஆவியோடு தொழ வேண்டும் (யோவான் 4:23), அவரை தவிர வேறு எவரையும் கடவுளாக எடுக்க கூடாது (யாத்தாராகமம் 20:3-5)

இதுவல்லாமலும் சுவிசேஷ கதைகளில் நிறைய காணலாம்!




3.இயேசு கடவுள் என்று இயேசுவே நம்பவில்லை .

அதனால் தான் ஜெபம் செய்தார்.(லூக்கா 6:12, 2.ஈ இல் உள்ள வசனங்களும் பொருந்தும்.

பிதா ஒருவரே மெய்யான தேவன் -(யோவான் 17:3) என கூறி, அவர் தன்னை தேவனாக சிறிதுகூட நம்பவில்லை என நிரூபிக்கிறார்.

பிதாவின் சித்தப்படி செய்வோர் இயேசுவின் சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள் என கூறி ஏனையோரை போன்ற நபரே என போதாத்தார்- மத்தேயு 12:50, மாற்கு 3:35, லூக்கா 8:21


4.அவரை பெற்றெடுத்த தாய் மற்றும் சகோதரர்கள் என எவரும் அவ்வாறு நம்பவில்லை!!

இயேசுவை குறித்து சிமியோன் சொன்னதை கேட்டு யோசேப்பும், மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள்-லூக்கா 2:33

கன்னிப்பிறப்பாக பெற்றெடுத்த மரியாவுக்கு கேப்ரியேல் தூதர் முன்கூட்டியே சொன்னதாகவும், யோசேப்புக்கு தேவதூதன் சொன்னதாகவும் இருக்க, இருவருமே ஆச்சரியப்பட்டார்கள் எனின், அற்புதமாக பிறந்த ஒரு மனிதராக மட்டுமே பார்த்தார்கள் என தெளிவாகிறது.


5.சீடர்கள் அவரை கடவுள் என நம்பவில்லை!

கிறிஸ்து (மெசியா) எனப்படும் ஒரு மனிதராகவே பார்த்தார்கள். -மத்தேயு 16:16, மாற்கு 8:29 , லூக்கா 9:20

அவரை ஒரு வல்லமை மிக்க தீர்க்கதரிசி என்றே நம்பினர்.-லூக்கா 24:18

தேவன் தான் இயேசுவை கிறிஸ்துவாக (மெசியாவாக) மற்றும் ஆண்டவராக ஆக்கினார் என்றே நம்பினர்-அப்போஸ்தலர் 2:36 

இயேசுவை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர் என்றே கூறினார்கள்-அப்போஸ்தலர் 2:22 (தமிழ் மொழிபெயர்ப்புகளில் மனிதர் என்பதை விட்டுள்ளனர்.. ரோமன் கத்தோலிக்கர்கள் உள்ளபடி மொழிபெயர்த்துள்ளார்.)

இயேசு இரகசியமாக தன்னை மெசியா என்றே அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.-மத்தேயு 16:20



6.யேசுவை வழிமொழிந்த யோவான் ஸ்நானன் இயேசுவை கடவுள் என நம்பவில்லை. 

இவரை எலியா என இயேசு சொன்னார். ஆனால் இவருக்கு இயேசு தான் வரவேண்டிய மெசியாவா என்பதையே சந்தேகித்தார். -மத்தேயு 11:2-3 


7.இயேசுவின் பேச்சுக்களையும், அற்புதங்களையும் கண்ட மக்கள் கூட, இவரை தீர்க்கதரிசி என்றும் தேவனால் வல்லமை கொடுக்கப்பட்டார் என்றுமே நம்பினர்.- 9:8

"“"ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்."”

  — Matthew 9:8 (TBSI)

மத்தேயு 16:13-14, மாற்கு 8:27-28, லூக்கா 9:18-19


8.தேவகுமாரன் என்பது கூட எந்த அர்த்தத்தில் என இயேசு தெளிவுபடுத்தி, புதிய ஏற்பாட்டில் அவரை அவ்வாறு அழைப்பதில் தெய்வீகம் இருக்க இயலாது என நிரூபித்தார்.

யோவான் 10:34-36

வேதவசனங்களை பெற்ற தீர்க்கதரிசிகள் தேவர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தேவனால் அனுப்பப்பட்டும் , பரிசுத்தம் பண்ணப்பட்டும் இருப்பதாலேயே தன்னை தேவகுமாரன் என சொன்னதாக கூறி அவருக்கு தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.


9.இயேசு கடவுளான விதம்: பிற்காலத்தில் இயேசுவின் வாயிலும், சீடர்களின் வாயிலும் போலி எழுத்தாளர்கள் பொய்யை கிறுக்கி, அவருக்கு தெய்வீகம் உண்டு என கூற முற்பட்டனர். சுவிசேஷ கதைகளில் எழுதினர். பிற்காலத்தில் ஓட்டுப் போட்டு இயேசுவை கடவுளாக அறிவித்தனர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்