புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 2

 பாகம் 1 தொடர்ச்சி


உள்ளடக்கம்

4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்?

5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை

6.ஞானஸ்நானம் நடந்த பின் நிகழ்ந்த நிகழ்வு

7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாள்களிலா? நாப்பது நாள் முடிந்த பின்பா?

8.பேதுரு சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும்




4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்?

மத்தேயு -

 இயேசு மகா ஏரோதின் காலத்தில் பிறந்ததால், பெற்றோர் அவனுக்கு பயந்து அவன் சாகும்வரை எகிப்துக்கு போய் வாழ்ந்தனர். ஏரோது செத்த பின் அவனது மகன் ஆட்சிக்கு வந்ததால், அவனுக்கும் பயந்து நாசரேத்துக்கு வந்தார்கள்.


¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,"

¹⁵ "ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."

¹⁹ "ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:"

²⁰ "நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்."

²¹ அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.

²² "ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,"

²³ "நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. "

 (மத்தேயு 2:13-15,21-23)


லூக்கா

இயேசு மகா ஏரோது இறந்த பின்பு பிறந்ததால் (சிரேனியு தேசாதிபதியாக இருந்தபோது), பெற்றோருக்கு பயம் கிடையாது. அவர்கள் எருசலேம் ஆலயத்திற்கு போனார்கள்.அங்கே நியாயப்பிரமாணப்படி செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்பிப் போனார்கள்.

²¹ "பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்."

²² "மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,"

²³ "முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,"

²⁴ "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்."


³⁹ "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்." (லூக்கா 2:21-24,39)


அதாவது மத்தேயுவின்படி , பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு ஓட்டம். அங்கிருந்து நசரேத்தில் குடியமர்நதனர். இதன்படி அவர்கள் நாசரேத்தை சொந்த ஊராக கொண்டவர்கள் அல்ல என்று புரிகிறது.


லூக்காவின்படி பெத்லகேமிலிருந்து எருசலேம் ஆலயத்திற்கு போய் பிறகு சொந்த ஊரான நாசரேத்துக்கு திரும்பி போனார்கள்.


----

5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை


மத்தேயு

எருசலேம் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு மலையின் மேல் ஏற்றி ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு சாத்தானுக்கு அப்பாலே போ சாத்தானே என்று கூறினார். சாத்தான் போய்விட்டான்.


⁵ "அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:"

⁶ "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்."

⁷ அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

⁸ "மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:"

⁹ "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;"

¹⁰ "அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."

¹¹ "அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்." (மத்தேயு 4:5-11)


லூக்கா

 முதலில் மலைக்கு மேல் ஏற்றி ராஜ்யத்தை காட்டினான். தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். அதற்கு இயேசு தனக்கு பின்னாக போ சாத்தானே என்றார். பிறகு எருசலேம் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு சோதனை முடிந்ததால் அவன் சென்றுவிட்டான்.


⁵ "பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:"

⁶ "இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்."

⁷ நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.

⁸ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."

⁹ "அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்."

¹⁰ "ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,"

¹¹ "உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்."

¹² அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

¹³ "பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்."

(லூக்கா 4:5-13)


இதன்படி மத்தேயுவின்படி முதலில் ஆலயத்தின் கூரையின் மேலிருந்து குதிக்க சொன்னான் பிறகு மலைக்குமேல் ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு அப்பாலே போ சாத்தானே என்று இதற்கு சொன்னபோது அவன் போய்விட்டான்.

லூக்காவின்படியோ முதலில் மலைக்கு மேல் ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு தனக்கு பின்னாக போகுமாறு சாத்தானுக்கு சொன்னார். சாத்தானோ மறுபடியும் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு சோதனை முடிந்ததால் அவன் சென்றுவிட்டான். 

இங்கே ஒழுங்கு வரிசை முரண்படுவதோடு, இயேசு அப்பாலே போ என்று சொன்னதும் போனதாக மத்தேயுவும், பின்னாக போ என்று சொன்னபோது மீண்டும் கூரையிலிருந்து குதிக்க சொன்னதாக லூக்காவும் குறிப்பிடுகிறார்.


மாற்கு இந்த சோதனைகளை குறிப்பிடவில்லை. யோவானோ நடக்கவில்லை என்பதை நிரூபிக்கிறார். இது அடுத்த முரண்பாடாக பதிகிறேன்.


--------------------


6.ஞானஸ்நானம் நடந்த பின் நடந்த நிகழ்வு எது?

மாற்கு

ஞானஸ்நானம் பெற்று முடிந்ததும் உடனே ஆவியானவர் வனாந்தரத்துக்கு (காட்டுக்குள்) போக சொன்னார். அங்கே நாப்பது நாள் சோதிக்கப்பட்டார்

⁹ "அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்."

¹⁰ "அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்."

¹¹ "அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று."

¹² உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.

¹³ "அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்."

(மாற்கு 1:9-13)


மத்தேயு

ஞானஸ்நானத்தை முடித்தார். பிறகு சாத்தானால் சோதிக்கப்பட ஆவியானவர் கொண்டு சென்றார்.

¹³ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

¹⁷ "அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. "

¹ அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

² "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று." (மத்தேயு 3:13,17, 4:1-2)


லூக்கா-

ஞானஸ்நானம் முடிந்ததும் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராக ஆவியானவரால் வனாந்தரத்துக்கு கொண்டுபோகப்பட்டு நாப்பது நாள் சோதிக்கப்பட்டார்.

¹ "இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,"

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. (லூக்கா 4:1-2)

யோவான்

யோவானின் படி இயேசு 40 நாட்கள் சாத்தானால் சோதிக்கப்படவில்லை. மூன்றாம் நாளிலேயே கானாவில் திருமணத்துக்கு போனார்.


²⁸ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

²⁹ "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."

³¹ "நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்."

³² "பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்."

³³ "நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்."

 …  

³⁵ "மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது," (யோவான் 1:28-29,31-33,35)

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.”

  — (யோவான் 2:1 )

யோவானிடம் இயேசு வந்த அடுத்த நாள் யோவானும் அவனது இரண்டு சீடரும் இருக்கும் போது ஒரு நிகழ்வு நிகழ்கிறது. மூன்றாம் நாள் கானாவுக்கு திருமணத்திற்காக போய்விட்டார்


ஆகவே மத்தேயு மாற்கு லூக்கா ஆகியோர் ஞானஸ்நானம் முடிந்ததும் 40 நாள் வனாந்தரத்தில் இருந்தார் என்கிறது. யோவானோ மூன்றாம் நாளே கானாவில் திருமணத்துக்கு போனார் என்கிறது.அதன்படி சாத்தானால் இயேசு சோதிக்கப்படவில்லை என்று யோவான் கருதுகிறார். ஞானஸ்நானம் கொடுத்ததாக கூட யோவான் குறிப்பிடவில்லை.


--------------------


7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாட்கள் இருந்தபோதா? அல்லது நாப்பது நாள் முடிந்த பின்பா?

மாற்கு

நாப்பது நாட்களிலேயே அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார்


“"அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்."”

  — மாற்கு 1:13 (TBSI)


மத்தேயு

சோதிக்கப்படுவதற்காக அழைத்தசெல்லப்பட்டாலும் நாப்பது நாள் உபவாசத்தின் பின்பே சோதிக்கப்பட்டார்.

         

¹ அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

² "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று."

³ "அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்." (மத்தேயு 4:1-3)

லூக்கா-

 நாற்பது நாளுமே பிசாசால் சோதிக்கப்பட்டார். அது முடிந்ததும் பசி ஏற்பட மீண்டும் சோதிக்கப்பட்டார்

¹ "இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,"

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

³ "அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்." (லூக்கா 4:1-3)


யோவானோ இயேசுவை யாராலும் சோதிக்கப்பட இயலாத நபராக நம்புவதால் அவர் அவ்வாறு நடந்ததாக எழுதவில்லை.

ஆகவே மாற்கு நாப்பது நாள் சோதிக்கப்பட்டதாகவும், மத்தேயு நாப்பது நாள் முடிந்ததும் தான் சோதனைக்காரனே வருகிறான். லூக்காவின்படியோ நாப்பது நாள் சோதிக்கப்பட்டதோடு, அதன்பின்பும் சோதிக்கப்படுகிறார்.

---------

8.பேதுருவை சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும்


மத்தேயு, மாற்கு

இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்துபோகையில் ,பேதுருவும் அந்திரேயாவும் கடலில் வலை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தெரிவு செய்யப்பட்டார்


¹⁶ "அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்."

¹⁷ "இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்."

¹⁸ "உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(மாற்கு 1:16-18)


¹⁸ "இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:"

¹⁹ "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்."

²⁰ "உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(மத்தேயு 4:18-20)


லூக்கா

- கெனேசரேத்து கடலருகில் பேதுருவின் படகில் ஏறி போதகம் செய்த பின் பேதுரு தெரிவு செய்யப்பட்டார். அவரோடு அந்திரேயா இருக்கவில்லை மாறாக செபதேயுவின் குமாரரான யோவானும் யாக்கோபுமே இருந்தனர்.


¹ "பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்."

³ "அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்."

⁸ "சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்."


⁹ "அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்."

¹⁰ "சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்."

¹¹ "அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(லூக்கா 5:1,3,8-11)


யோவான்

அந்திரேயா என்ற பேதுருவின் சகோதரன் யோவான் ஸ்நானனின் பேச்சை கேட்டு இயேசுவிடம் போகிறார். பிறகு தன் சகோதரனான பேதுருவை அழைத்து செல்கிறார்


⁴⁰ "யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்."

⁴¹ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

⁴² "பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்." (யோவான் 1:40-42)


இதன்படி, மத்தேயுவும் மாற்கும் கலிலேயா கடலோரத்தில் அந்திரேயாவுடன் பேதுரு சீடனானதாகவும், லூக்கா கெனேசரேத் கடலோரத்தில் செபதேயுவின் குமாரரோடு பேதுரு சீடராகிறார். யோவானின்படியோ யோவான்ஸ்நானனின் பேச்சைக்கேட்டு அந்திரேயா இயேசுவிடம் செல்கிறார். பிறகு தன் சகோதரனான பேதுருவை அழைத்து செல்கிறார்..

ஆகவே இது தெளிவான முரண்பாடாகும்.


தொடரும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்