ஈஸா இறைவனது வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

 ஈஸா நபி இறைவனுடைய வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

--------------------------------------------------------------------------------



"கிறிஸ்தவத்தில் வார்த்தையானவர்"

-----------



ஈஸா நபி அவர்கள் காலகட்டத்தில் கிரேக்க தத்துவங்களால் வழிதவறிய யூதரான ஃபைலோ என்ற அறிஞர் இருந்தார். 


 அவர் ஏக இறைவனுக்கு வார்த்தை (லோகோஸ்) என்ற பையன் இருப்பதாகவும், அவர் மூலமாக தான் சகல படைப்புகளையும் ஏக இறைவன் படைத்தார் என்றும் அந்த பையன் கடவுளுக்கும் படைப்புகளுக்கும் இணைக்கும் பாலமாக இருக்கிறார் என்று நம்பினார்.


ஈஸா நபியிற்கு பின் பவுல் போதித்த கிறிஸ்தவத்தால் ஈர்க்கப்பட்ட யோவான் சுவிசேஷ ஆசிரியர் (பைபிளில் பவுலுடைய கடிதங்களாக்கு முன்பாக இவரது நூலை இணைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் பவுல் தான் முதலில் எழுதியவர்.) இவ்வாறு எழுதினார்:


ஆதியிலே வார்த்தை (லோகோஸ்) இருந்தார். அந்த வார்த்தை கடவுளிடம் இருந்தார். (கடவுள் பையனும் கடவுள் தானே அதனால்) அவர் கடவுளாக இருந்தார். அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாகவே உண்டாகின. (யோவான் 1:1-3)


என்று எழுதினார்.


இவர் எழுதியதை வேதவாக்காக நம்பும் கிறிஸ்தவர்களில் அநேகருக்கு தெரியாத ஒரு விடயம் தான் இந்த கருத்து கிரேக்க தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட ஃபைலோவின் கருத்து என்று.



யூதர்களின் வேதத்தில் எங்கேயும் கடவுளுக்கு வார்த்தை என்று ஒரு பையன் இருக்கிறான் என்றோ அந்த பையன் சகலத்தையும் படைத்தான் என்றோ எங்கேயும் சொல்லப்படவில்லை.



இந்த வார்த்தை தான் இயேசு என்கிறார் அத்தோடு கடவுளின் ஒரே பையன் என்கிறார் யோவான் - (யோவான் 1:14,18)



இது தான் கிறிஸ்தவம் நம்பும் கடவுளின் வார்த்தையாகிய இயேசு என்ற நம்பிக்கை.



-----------

இஸ்லாத்தில் அல்லாஹ்வின் வார்த்தையான ஈஸா நபி

----------


இஸ்லாம் ஃபைலோ சொன்ன கருத்தை யோவான் ஏற்றது போல் ஏற்றுக்கொள்ளவில்லை.


இறைவன் ஒருவன் என்றும் அவனுக்கு பையனோ அப்பனோ கிடையாது என்று நான்கு வசன அத்தியாயத்திலேயே சொல்லிவிட்டது.




"கூறுவீராக:

*அல்லாஹ் அவன் ஒருவனே

*அல்லாஹ் தேவையற்றவன்.

*அவன் (யாரையும் குழந்தையாக) பெறவில்லை. அவன் (யாராலும் குழந்தையாக) பெறப்படவில்லை.

*அவனுக்கு நிகராக எவருமில்லை 

(குர்ஆன் 112:1-4)



இனி குர்ஆன் கூறும் ஈஸா நபி பற்றி பார்ப்போம்:



*அவர் அல்லாஹ் (ஏக இறைவன்) அல்ல!


மர்யமின் மகன் தான் அல்லாஹ் என்று கூறுவோர் இறைநிராகரித்து விட்டனர். (குர்ஆன் 5:17,72)


*ஈஸா நபி அல்லாஹ்வின் (ஏக இறைவனின்) பையன் கிடையாது.


யூதர்கள் உஸைரை அல்லாஹ்வின் மகன் என்றார்கள். கிறிஸ்தவர்கள் மஸீஹை (ஈஸாவை) அல்லாஹ்வின் மகன் என்றார்கள். அது வெறுமனே அவர்கள் தம் வாய்களால் கூறும் அவர்களுடைய கூற்றாகும். இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு ஒத்திருக்கிறார்கள். (குர்ஆன் 9:30)


அதாவது யூத கிறிஸ்தவர்கள் தம் இறைவனுக்கு பையன் உண்டாக்கிய கதைகள் எல்லாம் அவர்களுக்கு முன்னிருந்த ஏனைய மதத்தவர்களால் கூறப்பட்ட கடவுளுக்கு பையன் இருப்பதாக கூறும் கதைகளை போன்றது தான் என்கிறது.



*ஈஸா நபியை இறைவனாக எடுக்க கூடாது.


அவர்கள் அல்லாஹ்வையன்றி தம் பாதிரிகளையும் , தம் சந்நியாசிகளையும் , மர்யமின் மகன் அல்மஸீஹையும் இறைவனாக எடுத்துக்கொண்டார்கள். ஒரே இறைவனை வணங்கவேண்டும் என்றே அல்லாமல் அவர்கள் ஏவப்படவில்லை. அவனையன்றி வேறு இறைவன் இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் பரிசுத்தமானவன் - குர்ஆன் 9:31


(கிறிஸ்தவர்கள் இறைவன் தோராவில் தடை செய்தவற்றை பவுலும் ஏனைய அறிசர்களும் துறவிகளும் அனுமதித்தால் அதையே ஏற்பார்கள். உதாரணமாக பன்றிக்கறி. அதேபோல் இறைவன் அனுமதித்ததை இவர்கள் தடை செய்தால் , இவர்களையே ஏற்பார்கள். 

இதுவே அவர்களை கடவுளாக எடுத்துக்கொண்டதாகும்.. மர்யமின் மகன் விசயத்தில் எல்லோரும் அறிந்த விடயமே இங்கு கூறப்படுகிறது).



ஆகவே தெளிவாக இவை ஈஸா நபியை ஃபைலோ கூறும் வார்த்தை நம்பிக்கையை யோவானைப்போன்று குர்ஆன் ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது.



இனி ஈஸா நபி வார்த்தை என கூறப்படுவதை பார்க்கலாம்:




*குர்ஆன் கூறும் ஈஸா நபியாகிய இந்த வார்த்தை சகலத்தையும் படைக்கவில்லை.. மாறாக படைக்கப்பட்டவர்:




(அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:47)



அதாவது என் வார்த்தை உங்களின் பிறப்புறுப்புவழியாக புகுந்து மனிதனாக வெளிப்படும் என்று சொல்லவில்லை..


மாறாக "இவ்வாறு தான் அல்லாஹ் நாடியதை படைக்கிறான்" என்று அன்னை அவர்களுக்கு பதில் கொடுக்கப்படுகிறது.



*குர்ஆன் கூறும் இந்த வார்த்தையின் பெயர் இறைவனது மகன் என்பதல்ல.. மாறாக மர்யமின் மகன்:






 மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகனை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது.

(அல்குர்ஆன் : 3:45)



அதாவது அவர் மர்யமின் மகனாவார். இதன் அர்த்தம் அவருக்கும் இறைவனுக்கும் அப்பன்-மகன் உறவு கிடையாது என்றும், அவருக்கு இருப்பதெல்லாம் மர்யமுடன் அம்மா-மகன் உறவு மட்டுமே என்பதை தெளிவாக சொல்கிறது.


அத்தோடு மர்யமின் மகன் என்பதிலேயே மீண்டும் ஒரு படைப்பு பெற்றெடுக்கும் படைப்பாகிய மகன் என்றும் அதுவே அவரது ஆரம்பம் என்பதையும் காட்டுகிறது.




*குர்ஆன் கூறும் வார்த்தையாகிய ஈஸா நபி ஒன்றும் ஃபைலோ சொல்லுவது போல் இறை மகன் அல்ல:


வேதத்தைஉடையவர்களே (கிறிஸ்தவர்களே)! உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்ல வேண்டாம்! அல்லாஹ்வின் (ஏக இறைவன்) மீது உண்மையை தவிர வேறெதையும் கூற வேண்டாம்.

நிச்சயமாக மர்யமின் மகனாகிய அல்மஸீஹ் ஈஸா அல்லாஹ்வின் தூதரும், அவன் மர்யமின்மீது போட்ட அவனுடைய வார்த்தையும் , அவனிடமிருந்து உள்ள ஓர் உயிரும் ஆவார்.

ஆகவே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். மூவர் என்று கூற வேண்டாம். அதைவிட்டு விலகிக் கொள்ளுங்கள். நன்றாக இருக்கும். 

நிச்சயமாக அல்லாஹ் ஒரே இறைவன் தான். அவனுக்கு மகன் இருப்பதை விட்டும் அவன் பரிசுத்தமானவன் . .. (குர்ஆன் 4:171)



இங்கே ஈஸா நபி இறைவனது வார்த்தை தான் என்று சொல்லும் அதே நேரம் இவர்கள் நம்புவது போன்ற வார்த்தை கிடையாது என்கிறது குர்ஆன். அதாவது இந்த வார்த்தை கடவுளோ கடவுளின் பையனோ அல்ல..


ஆகவே இஸ்லாம் கூறும் வார்த்தையான ஈஸா நபி என்பது ஃபைலோ சொல்லி யோவான் எழுதிய லோகோஸ் அல்ல!!



ஈஸா நபி பற்றி இன்னும் சுருக்கமாக 

1.அவர் அல்லாஹ்வின் அடிமை. மகன் அல்ல. (19:30,35; 43:59, 4:172(171))

2.அவரை கடவுளாக எடுத்துக்கொண்டால் அத்தகையவர் நரகமே புகுவார்-5:72)

3.கிறிஸ்தவம் நம்புவது போல் அவர் நியாயத்தீர்ப்பு நாளில் தீர்ப்ப்பளிப்பவர் அல்ல.. மாறாக விசாரிக்கப்படுபவர்.(5:116-119)

(மேசியா நியாயந்தீர்ப்பார் என்று உலகத்தில் கூறப்படுவதை மறுமையோடு லின்க் பண்ணி விட்டார்கள்)


4.அவரும் மரணிக்கக்கூடியவரே. (குர்ஆன் 19:33, 4:159)


5.அவர் சிலுவையில் அறையப்படவில்லை. கொல்லப்படவுமில்லை. மாறாக அது அவர்களுக்கு ஒப்பாக்கப்பட்டது. அவரை அல்லாஹ் உயர்த்திக்கொண்டான்-4:157-158


6.அவர் நீதமான நீதிபதியாக இறங்குவார்- புகாரி 2476,3448

(இதை ஏசாயா புத்தகம் கூறுகிறது. ஈஸா நபி உலகில் நீதிபதியாக இருக்கவில்லை என்பதால் அவர் மறுமையில் இருப்பார் என்று பவுலின் நம்பிக்கைப்பிரகாரம் சுவிசேசங்களும் எழுதப்பட்டன.)


7.உலகத்தில் கூட சாதாரணமான உணவு உண்போராக தான் இருந்தார்- 5:75....

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்