கடவுள் மனிதனானாரா?

 மனிதனாக வருவது கடவுளின் வல்லமையா? அறிவீனமா?



எங்கள் கடவுள் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்றால் அவர் எம்மை போல குசு விட்டு ஆய் போகிறவராக இருந்தார்.. பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்தார் என்றெல்லாம் சிலர் வாதிக்கிறார்கள். அதை பேரன்பு என்று பெயரிடுகிறார்கள்.


கடவுள் எப்படிப்பா மனிதனாக வருவான் என்று நாமோ அல்லது முஸ்லிம்களால் செம்மையாக்கப்பட்ட யூதனோ கேட்டால், கடவுளால் எல்லாம் கூடும் என்று பதில் சொல்கிறார்கள்.



இதை சற்று பிரித்து நோக்கலாம்.


1.ஒருவன் பூமியில் மனிதனாக பிறத்தல்:


ஒருவன் பூமியில் மனிதனாக பிறந்தால், அவனது உடல் உயிர் இரண்டுமே மனிதனுக்குரியது. அதனால் அவன் பூரண மனிதன். அவன் கடவுளின் படைப்பு. பூரண மனிதன் கடவுளல்ல.



2.மனித உடலில் இறைவன் உயிர்:


ஒருவனது உடல் மனிதன் உயிர் கடவுள் என்றால், அவன் பூரண மனிதனே கிடையாது.. மனிதனாக வேசம் போடுகிறார் என்றாகிவிடும். 


வேசம் போடுவதெல்லாம் ஒரு பொழப்பா? 


 அத்தோடு அவர் செய்யும் எதுவுமே தியாகம் கிடையாது. எல்லாமே ஏமாற்று வேலை.


காரணம் கடவுளுக்கு ஆசாபாசம் கிடையாது. அதனால் பாவத்திற்கும் நன்மைக்குமிடையில் சுயதேர்வே கிடையாது. காரணம் அவர் எப்போதும் நன்மையில் 100% தீமையில் 0% ஆக இருப்பார்.



கடவுள் என்ன நடிகனா? மாற்று உருவம் எடுத்து நடித்து நல்ல பெயர் எடுப்பதற்கு?


ஆகவே இது மடமை ஆகும். 

(ஒரு பேச்சுக்கு அவர் மனிதனாக நடிக்க வேண்டுமானால், பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்து தான் நடிக்க வேண்டுமா?)

தாம் வணங்கும் மனிதரை கடவுளாக்குவதற்காக அவர் ஏற்கனவே கடவுளாக தான் இருந்தார். மனிதனாக பிறந்தார் என்ற கதை .



3.மனிதனாக வராதிருத்தல் என்பது பலவீனமா?


எங்கள் கடவுள் பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்தார். உங்கள் கடவுளால் இயலாதா என்று கேட்கிறார்கள்.


இதே கேள்வியை நாமும் கேட்கலாம்..


உங்கள் மதம் அல்லாத வேறு மதங்களில், கடவுளுக்கு ஒய்ஃப்/மனைவி இருக்கிறாள்.. அவளோடு பரவசப்படுகிறார். இதை நம்பும் ஒருவர் , "எங்கள் கடவுள் பூரண ஆண் வடிவிலும் பெண் வடிவிலும் உள்ளார்கள்... உங்கள் கடவுளுக்கு ஏன் ஒய்ஃப் இல்லை? அவர் என்ன பேடியா? அல்லது ஆண்மை இல்லாதவரா? அல்லது பெண்ணோடு வாழ வக்கில்லாதவரா? அல்லது அவளை திருப்திப்படுத்த இயலாதவரா? அல்லது வானலோகம் gaysகளால் ஆனதா?" என்றெல்லாம் கேட்டால் என்ன சொல்வார்கள்?



கடவுள் நினைத்தால் இதையெல்லாம் செய்யலாம்பா.. ஆனால் அது அவரது கண்ணியத்திற்கு தகாது. அவரது இயல்புக்கு தகாது. என்று தானே சொல்ல முடியும்?


அதேபோல தான் நாமும் சொல்கிறோம்: 

கடவுள் மனிதனாக வேசம் போட்டு வந்து நடித்து எதை சாதிக்க போகிறார்?


அது அவரது கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் மிக இழிவானது.



4.கடவுள் மனிதனாக வந்து எதை செய்து கிழிக்க போகிறார்?


*போதனை செய்யவா? - இதை பூமியில் உள்ளவர் மூலமாகவே செய்யலாமே!


*முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதற்கா?

கடவுள் எப்படி மனிதனுக்கு முன்மாதிரியாக இருப்பார்? அவருக்கு ஆசாபாசம் கிடையாது. இப்படிப்பட்டவர் எப்படி ஆசாபாசமுள்ள நபர்களுக்கு முன்மாதிரியாவார்?

ஒரு சாதாரண நல்ல மனிதரை தான் முன்மாதிரியாக ஆக்க முடியும்.



*பாவங்களுக்காக பலியாகவா ?


இவர் மன்னிப்பதற்கு இவர் பலியாக வேண்டுமா? 


பலியாகும் இவரது உடலும் பாவத்தில் பிறந்தவர்களால் பெற்றெடுக்கப்பட்டால், அவருக்கு இன்னொருவர் பலியாக வேண்டும். அதற்கு பிறகு தான் இவர் பலியாக விட்டு போகலாம்.


அடுத்து பலிப்பிராணி உடல் குறையுள்ளதாக இருக்க கூடாது. அவரது ஆணுறுப்பு ¾ ஆக இருந்தால் இவர் எப்படி குறையில்லாதவராவார்?


(இவர் இவரது படைப்புகளை இவரிடமிருந்து காப்பாற்றுவதற்காக இவரே சாகிறாராம்... சாத்தான் சும்மா தான் இருப்பான்)


*பூமியில் நியாயம் விசாரித்து நீதியை நிலைநாட்டுவதற்கா?


(இரண்டாம் வருகையில் இதை செய்வார் என்கிறார்கள். )


நீதியை நிலைநாட்டுவதற்கு தன் படைப்புகளில் ஒருவருக்கு அதிகாரம் கொடுத்தாலே போதுமானதே..... இந்த சாதாரண அறிவு கூடவா இல்லாமல் இருப்பார்?




5.இந்நம்பிக்கை எப்படி வந்தது?


கிரேக்க ரோம மதத்தவர்களிடம் அவர்களின் கடவுளுக்கு குடும்பம் பிள்ளை இருந்தது.  


இயேசு ரோமர்களால் யூதர்களின் திட்டப்படி சிலுவையில் அறையப்பட்டார் என்று அக்கால மக்களில் பவுலின் கிறிஸ்தவர்களும், யூதர்களும்  நம்பினர்.


-ரோமர்களை இதிலிருந்து காப்பாற்றுவதற்காக, இது முழுமையாக கடவுளின் திட்டம் என்று முதல் படி போட்டனர்.(மத்தேயு 16:21-23, 26:24,39-46, 1 யோவான் 4:10 இன்னும் நிறைய)



-சிலுவை மரணம் ரோமர்களது ஒரு தண்டனை. அதை பெற்றவர் குற்றவாளியா என்று யோசிக்க வேண்டும். அதேநேரம் ரோமர்களது தண்டனையையும் நியாயப்படுத்த வேண்டும். இதற்காக தான் இயேசு பாவிகளுக்காக மரணித்தார். (ரோமர் 5:8) அவரே பாவமானார் (2 கொரி 5:21). பாவிகளுக்காக சாபமானார் (கலாத்தியர் 3:13). என்ற கருத்து


-மற்ற மனிதர்களுக்காக இவரை தண்டித்தால், கடவுள் மீது அநீதியாளர் என்ற குற்றச்சாட்டு வருகிறது. இதை சமாளிக்க தான், கடவுள் வேறொருவரையும் இப்படி செய்யவில்லை.. தன் சொந்த பையனை தான் இப்படி செய்தார் என கட்டினர். (1 யோவான் 4:10).


-சொந்த பையனையே கொன்று போட்டால், கடவுள் மீது இன்னொரு கெட்ட பெயர் வருமே... அதற்கு தான் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். (மத்தேயு 16:21,20:19,அப் 10:40) பிறகு கடவுள் அவருக்கு யாராலும் அடைய இயலாத மிகப்பெரிய அந்தஸ்த்தை கொடுத்தார் என்பதாகும்.(1 பேதுரு 3:22, எபிரேயர் 1:3, பிலிப்பியர் 2:6-11)


-இந்த பையன் சாதாரண பையன் கிடையாது. கிரேக்க தத்துவங்களால் பாதிக்கப்பட்ட யூதரான ஃபைலோ என்பவர் "கடவுளுக்கு வார்த்தை (லோகோஸ்) என்று ஒரு பையன் இருப்பதாகவும் அவர் மூலமே சகலமும் படைக்கப்பட்டது" என்றும் நம்பினார். அந்த வார்த்தை என்ற நபரே இயேசு தான் என்று யோவான் எழுதினார். இதன்படி அவர் தான் எல்லோரையும் படைத்தார் என்றும் எழுதினார்- யோவான் 1:1-3,14,18

இப்படி தான் கடவுள் மனிதனாகி தன் உடலை தனக்கே பலி செலுத்தி நம்மை அவரிடமிருந்து காப்பாற்றினார் என்ற நம்பிக்கையாக மாறிவிட்டது 


ஃபேக் நியூஸ் பரப்பினால் இப்படி தான் நிகழும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்