ஆயிஷா (ர) அவர்களுடனான நபிகளாரின் திருமணம்
நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை முடித்தது பற்றி மிசநரிகளும் ஏனைய நிராகரிப்பாளர்களும் இஸ்லாத்தையும் உயர்வான நபிகளாரையும் கேலி செய்வதை வழமையாக கொண்டிருக்கிறார்கள். அத்தோடு கேலிச்சித்திரங்களையும் வரைந்து தம் மனதை சந்தோசப் படுத்திக் கொள்கிறார்கள்.
1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்படும் காலத்திலேயே நபிகளாருக்கு பேசப்பட்டார்கள்
2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது
3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள் .
4.இத்திருமணத்தால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவில்லை
5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார்
6.படித்த யூதர்கள் இவ்விசயத்தில் கப்சிப்
7.உலகளாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன
8.இஸ்லாம் பருவ வயதை அடையாத பெண்களோடு உறவு கொள்ள அனுமதிக்கிறதா?
9.இறுதியாக
1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே நபிகளாருக்கு திருமணம் பேசப்பட்டது.
கதீஜா (ர) மரணித்த பின்னால் , உஸ்மான் இப்னு மழ்ஊனின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் திருமணம் செய்யக்கூடாதா?" என்றார். "யாரை?" என்றார் நபிகளார். "நீங்கள் விரும்பினால் கன்னியையும், நீங்கள் விரும்பினால் விதவையையும் " என்றார். அதற்கு நபிகளார் "கன்னி யார்?" என்றார். அதற்கு கவ்லா,"உங்களுக்கு அல்லாஹ்வின் படைப்புகளிலேயே நேசத்திற்குரியவரின் மகளான ஆயிஷா பின்த் அபீபக்ர்" என்றார். அதற்கு நபிகளார் "விதவை யார்" என கேட்டார். அதற்கு கவ்லா, "உம்மை விசுவாசித்து நீர் கூறியவற்றில் உம்மை பின்பற்றிய ஸவ்தா பின்த் ஸம்ஆ " என்றார். அதற்கு நபிகளார்,"நீ போய் இருவரிடமும் என்னைப்பற்றி பேசு" என்றார். கவ்லா அபூபக்ரின் வீட்டில் நுழைந்து "உம்முரூமானே! உங்கள் (குடும்பத்தின்)மீது அல்லாஹ் எத்தகைய நலவையும் சுபீட்சத்தையும் அளித்துள்ளான்? என்றார். அதற்கு உம்முரூமான் , "எதை?" என்றார். அதற்கு கவ்லா,"ஆயிஷாவை தனக்கு பெண் பேசி அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பினார்" என்றார். அதற்கு உம்முரூமான் "அபூபக்ர் வரும்வரை காத்திரு" என்றார். அப்போது அபூபக்ர் வந்ததும் கவ்லா," அபூபக்ரே! உங்கள் (குடும்பத்தின்)மீது அல்லாஹ் எத்தகைய நலவையும் சுபீட்சத்தையும் அளித்துள்ளான்? என்றார். அதற்கு அபூபக்ர் , "எதை?" என்றார். அதற்கு கவ்லா,"ஆயிஷாவை தனக்கு பெண் பேசி அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பினார்" என்றார். அதற்கு அபூபக்ர், "அவருக்கு அவள் பொருத்தமாவாரா?" அவள் அவரது சகோதரரின் மகள் தானே" என்றார். கவ்லா திரும்பி நபிகளாரிடம் சென்று அதை நபிகளாரிடம் கூறினார். அதற்கு நபிகளார்,"நீ அவரிடம் திரும்பிச்சென்று , "இஸ்லாத்தில் நான் உம்முடைய சகோதரனும் நீர் என்னுடைய சகோதரனும் ஆவோம். உம்முடைய மகள் எனக்கு பொருத்தமானவரே!" என்று கூறுமாறு சொன்னார். கவ்லாவும் அபூபக்ரிடம் சென்று அதை கூறினார். அதற்கு அபூபக்ர் காத்திருக்குமாறு கூறி வெளியேறினார். உம்மூரூமான் கவ்லாவிடம், "முத்யிம் இப்னு அதீ தன் மகனுக்காக ஆயிஷாவை பெண்கேட்டிருந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் எதை வாக்குக் கொடுத்தாலும் அதற்கு மாறு செய்யமாட்டார். அபூபக்ர் முத்யிம் இப்னு அதீயிடம் அவரது மனைவியான இளைஞனின் தாய் உள்ளபோது சென்றார். அப்போது அவள், "அபூகுஹாஃபாவின் மகனே! நீர் எமது தோழரை (மகனை) உமக்கு திருமணம் முடித்து தந்தால் நீர் இருக்கும் உம் மார்க்கத்தில் அவரை புகுத்திவிடுவாய் " என்றார். அப்போது அபூபக்ர் முத்யிமிடம், "உமது கூற்றும் இது தானா?" என்றார். அவரும் அவ்வாறு தான் என்றதும், அபூபக்ர் அவரிடமிருந்து தன் மீதுருந்த வாக்குறுதியை அல்லாஹ் நீக்கிய நிலையில் வெளியேறி திரும்பி வந்து கவ்லாவிடம், "அல்லாஹ்வின் தூதரை கூப்பிடு" என்றார். அவரும் கூப்பிடவே அவருக்கு திருமணம் முடித்து வைத்தார். அப்போது ஆயிஷா ஆறு வயதுடையவராக இருந்தார். பிறகு ஸவ்தாவிடம் கவ்லா சென்றார்..... (முஸ்னத் அஹ்மத் 25769)
*இதன்படி அன்னை ஆயிஷாவுக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நபிகளாருக்கு பேசப்பட்டது (முஸ்னத் அஹ்மத் 25769)
*நபிகளாருக்கு முன்பே அல்முத்யிம் இப்னு அதீ தன் மகனுக்கு பேசியிருந்தார். பிறகு தன் மகனை அபூபக்ர் மதமாற்றிவிடுவார் என கருதி மறுத்துவிட்டார் (முஸ்னத் அஹ்மத் 25769)
2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது
இத்தகைய திருமணம் அந்த காலத்தில் சர்வசாதாரணமாக இருந்ததொன்றே. 21 வயதில் பாட்டியாகிய பெண்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர் (புகாரி 2664 இற்கு முந்திய தலைப்பு)
3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள்
*நபிகளார் ஆறு வயதில் அன்னை ஆயிஷாவை மணந்தது திருமணம் உடன்படிக்கை மட்டுமே. ஒன்பது வயதில் தான் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.(புகாரி 5133, 5158)
*இல்லற வாழ்க்கை ஏற்ற உடல் தகுதியை அடைய வைப்பதற்காக அதாவது நபியிடம் அனுப்பிவைப்பதற்கு அவரது தாயார் உணவுகளை நன்றாக கொடுத்து தயார் படுத்தினார் என்றும் அது பயனளித்தது என்றும் அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார் (அபூதாவூத் 3903, இப்னுமாஜா 3324)
இதன்படி உடல் தகுதியை அடையும்வரை அவரது தாயிடம் தான் இருந்தார்கள்
*அதன் பின்பே அவரது தாய் அவரை நபிகளாரிடம் அனுப்பிவைத்தார். அப்போது யாரும் இதை தவறாக பார்க்கவும் இல்லை, பரிதாபப்படவுமில்லை.. மாறாக ஆயிஷாவுக்கு நல்வாழ்த்து தான் சொன்னார்கள் ( புகாரி 5156) - காரணம் அது அவர்கள் மத்தியில் சர்வசாதாரணமாக இருந்ததோடு, அதற்கேற்ற தகுதியடைந்த பெண்ணாக ஆயிஷா இருந்தார் என்பதால் தான்.
4.இதனால் ஆயிஷா (ர) பாதிக்கப்படவோ அநீதியிழைக்கப்படவோ இல்லை
*இதனால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவோ உரிமை மறுக்கப்படவோ இல்லை
-மாறாக தன் நண்பிகளுடன் திருமணத்திற்கு பின்பும் விளையாடுபவராக இருந்தார் (புகாரி 6130)
-தான் விரும்பும் அளவு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236)
-நபிகளாரும் அன்னையின் வயதிற்கேற்பவே நடந்து கொண்டார்கள். அவருடன் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வார்கள் விளையாட்டாக நடந்துகொள்வார்கள் (அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979)
-அவரையோ வேறு எந்தபெண்ணையோ நபிகளார் ஒருபோதும் அடித்ததில்லை என அன்னையே கூறுகிறார்கள் ( ,இப்னுமாஜா 1984, அபூதாவூத் 4786)
-நபியவர்களை விட இச்சைகளை கட்டுப்படுத்துபவர் வேறு யாரும் இருக்க முடியாது என சொல்வதும் அன்னை ஆயிஷா அவர்களே (புகாரி 302&1927). அந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் தான் நபிகளார் வாழ்ந்தார்கள்.
5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார்.
-அத்தோடு நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவே இருந்தார். அவரை யாருக்கும் விட்டுக்கொடுக்காதவராகவும் (4789), அவர்விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும் அன்னை ஆயிஷா இருந்தார் (புகாரி 6024&6030, 4789, 6004)
ஆக அன்னை ஆயிஷா அவர்களுக்கோ, அவருடைய தாய் தந்தையருக்கோ, அக்கால மக்களுக்கோ இதில் எந்த பிரச்சினை இருக்கவில்லை என்று இருக்க இந்த தற்குறிகள் ஏன் கதற வேண்டும்?
எல்லாம் வெறுமனே காழ்ப்புணர்ச்சிகளே!
6.தற்குறிகள் இந்த விமர்சனத்தை வைக்கும்போது யூதர்கள் கப்சிப்- காரணம் அவர்களது மூன்று வயது ரிஃப்கா பாட்டியை சேர்ந்த 40 வயது ஈசாக் தாத்தா- கத்தோலிக்கர்களுக்கு பேரிடியான மரியாளின் வயதும்
வேடிக்கையாக அசுத்த ஆவியால் அபிசேகம் பண்ணப்பட்ட முட்டாள் தற்குறிகள் இதை குற்றச்சாட்டாக வைக்கும்போது, யூதர்களோ இந்த விசயத்தில் வாயை திறக்கவே மாட்டார்கள். காரணம் அவர்களது பாட்டியான ரிப்கா (ரெபேக்கா) அவர்களை பாட்டனார் 40 வயது ஈஸாக்கு மணந்தபோது ரிப்கா பாட்டியிற்கு வெறும் மூன்று வயதே என அவர்களது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர்.
ரிப்கா பாட்டியிற்கு மூன்று வயது ( Seder olam rabbah அத்தியாயம் 1, Genesis Rabbah 57:1, ஆதியாகமம் 25:20இற்குரிய Rabbi Rashi அவர்களின் விளக்கம் ,Tosafot on Yevamot 61b)
அத்தோடு மரியாள் கர்ப்பமானபோது அவரது வயது 13or14 என கத்தோலிக் என்சைக்லோபீடியா சொல்கிறது (heading: Mary's Pregnancy becomes known to Joseph (last Paragraph)
7.உலகலாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன.
அ. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.
ஆ.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது
https://www.asahi.com/sp/ajw/articles/14934890
இ.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்
https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent
ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும் மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?
8.இஸ்லாம் பருவமடையாத பெண்களோடு உறவு கொள்ள அனுமதிக்கிறதா?
குர்ஆன் 65:4 இலே விவாகரத்தான பெண்களுக்கு காத்திருப்புக்காலமாக மூன்று மாதவிடாய்காலமும் மாதவிடாய் நின்றுவிட்டவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதவர்களுக்கும் காத்திருப்புக்காலம் மூன்று மாதம் என்கிறது.
இதை வைத்து பருவமடையாதவர்களுடன் குழந்தைகளுடன் உறவுகொள்ள அனுமதிப்பதாக தற்குறித்தனமாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அவர்களின் கலாச்சாரத்தில் திருமண வயதாக நிர்ணயித்த காலமாகியும் மாதவிடாய் ஏற்படாத பெண்களுக்கு அவர்கள் விருப்பத்துடன் திருமணம் நடந்து அதன் பின் தாம்பத்யத்தில் ஈடுபடுவதையே இது குறிக்கும்.
ஏனெனில் -கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம் (5136,6946,6948)
சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும் இருக்க வேண்டும்.
அத்தகைய பெண்ணுடன் அப்பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் முடித்து தாம்பத்யத்தில் ஈடுபடுவது கூடும். மாதவிடாய் ஏற்படுவது தாமதமான பெண்ணானாலும் மாதவிடாய் ஏற்படாமலே போன பெண்ணானாலும் அவர்களையும் திருமணம் முடித்து வாழலாம்.
குறிப்பு: இத்தகைய இளவயது திருமணம் இஸ்லாத்தில் வரவேற்கப்படவோ கண்டிக்கப்படவோ இல்லை.. அது அன்றைய அரேபியரதும் ஏனைய மக்களினதும் கலாச்சாரத்தில் இருந்தவொன்றே. இஸ்லாம் அதை பெண் தரப்பு பாதிக்கப்படாத விதத்தில் மட்டும் அனுமதித்தது.
அவை தற்காலத்தில் நம் கலாச்சாரத்தில் இல்லை!!!!
ஆனாலும் பைபிளோ தகப்பனுக்கு தன் மகளை இதற்காக விற்றுப் போடவும் முடியும் என்று அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:7-10). இஸ்லாமோ பெண்ணின் சம்மதமின்றி திருமணமே செல்லுபடியற்றது என்கிறது (புகாரி 5136,6946,6948).
9.இறுதியாக,
*ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே இத்திருமண ஒப்பந்தம் நிகழ்ந்தது
*குடும்பவாழ்வுக்கு தகுதியான உடலமைப்பை அடைந்த பின்பே அவரது தாயார் அனுப்பிவைத்தார்.
*அக்காலத்திலே 21 வயதில் பாட்டியாக ஆகினவர்களும் இருந்தனர்.
*அண்மைக்காலம் வரை இத்தகைய திருமணங்கள் உலகலாவிய ரீதியில் இருந்தது தான்
*அத்தோடு இஸ்லாம் பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செல்லாது என்கிறது (புகாரி5136,6946,6948), சம்மதம் தெரிவிக்கும் அளவுக்கு புத்தியும் ,உடல் தகுதியும் இருக்கும்போதே திருமணமே செல்லுபடியாகும். (ஆனால் பைபிளோ மகளை விற்பனை செய்து விடவும் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:7-10)
*ஏன் இத்திருமணம் என சிலர் கேட்பர். குடும்பவாழ்வு என்பதோடு சேர்த்து நண்பர்களிடையே உறவை பேணிக்கொள்ளவும் திருமணங்கள் செய்தனர். உதாரணமாக சிஙார் எனும் வகையான திருமணமும் இருந்து வந்தது. அதாவது இரண்டு நபர்கள் ஒருவர் மற்றவரது மகளை மஹரின்றி மாற்றி திருமணம் செய்தும் ஒருவர் மற்றவரது சகோதரியை மஹரின்றி மாற்றி திருமணம் செய்வதும் வந்தனர். இஸ்லாம் இதிலே பெண்ணின் மஹர் கொடுக்கப்படாமையால் தடுத்துவிட்டது.(புகாரி 5112, 6960). இதே போன்று நபியின் மகளை அபூபக்ர் (ர), உமர் (ர) இருவரும் ஒருவர் பின் ஒருவராக பெண் கேட்டார்கள். நபியின் பேத்தியை உமர் (ர) திருமணம் முடித்தார்கள்.
இதிலே அன்னை ஆயிஷா அவர்களுக்கு பிரச்சினை இருக்கவுமில்லை, அன்னை ஆயிஷாவை அதிகம் நேசித்த அவருடைய பெற்றோருக்கும் இதில் பிரச்சினை இருக்கவுமில்லை. , அக்கால மக்களுக்கும் இதிலே பிரச்சினை இருக்கவுமில்லை.. அண்மைக்காலம் வரை இத்திருமணத்தை இஸ்லாத்தை எதிர்க்கக் கூடியவர்கள் கூட விமர்சிக்கவில்லை... தற்காலத்தில் இருந்துகொண்டு விமர்சிப்பதென்பது இஸ்லாத்தின் பக்கம் மக்கள் செல்வதை தடுப்பதற்கான ஓர் உத்தி மட்டுமே... இத்தகையோர் ஈருலகிலும் இழிவடைவர்
கருத்துகள்
கருத்துரையிடுக