பாவிகளை கடவுள் நேசிப்பாரா? - தற்குறிகளுக்கு மறுப்பு
அல்லாஹ் பாவிகளை ,காஃபிர்களை நேசிப்பதில்லை . ஆனால் கர்த்தரோ அப்படி அல்ல.. பாவிகளை நேசிப்பவர் என போதகர்கள் உருட்டுவார்கள்.
1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்
2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்?
3.கர்த்தர் பாவிகளை நேசிக்கிறாரா?
1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்?
அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை (3:57,140) பாவிகளான காஃபிர்களை நேசிப்பதில்லை (2:276, 3:32), வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை (2:190),கர்வமுடையோரை வீண் பெருமையுடையோரை நேசிப்பதில்லை (4:36), கொடும்பாவியான சதிசெய்துகொண்டிருப்பவனை நேசிப்பதில்லை (4:107),குழப்பம் புரிவோரை நேசிப்பதில்லை (5:64), வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (6:141,7:31), துரோகம் செய்வோரை நேசிப்பதில்லை (8:58), பெருமையடிப்போரை நேசிப்பதில்லை (16:23) என குர்ஆன் கூறுகிறது.
இப்படி நேசிக்காமல் இருப்பதுவே நீதியானது. அத்தோடு அவ்வாறு நேசிப்பதில்லை என்று முன்பே அறிவித்து விடுவது தான் உண்மையான நேசம்.
காரணம் இத்தகையோர் நரகத்தில் புகுத்தப்படுவர்.. அதுவே குற்றவாளிகளுக்கான இறைவன் ஏற்படுத்திய தண்டனை எனும் நீதி..
ஆகவே இறைவன் அவர்களை நேசிப்பதாக பொய் கூறிவிட்டு நரகத்தில் தள்ளுவது சரியானதா? அல்லது நேசிப்பதில்லை என முன்பே அறிவித்து, இறைவன் நேசிக்கும் விதமாக வாழுவதற்கு தூண்டுவது நேசமா?
2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? அவனது கருணையின் அளவு
இவ்வாறே இறைவன் யாரை நேசிப்பான் என்பதையும் குர்ஆன் கூறுகிறது.
நன்மை செய்வோரை நேசிக்கிறான் (2:195), பாவத்தை விட்டு மனந்திரும்புவோரையும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான் (2:222), நபியை பின்பற்றுவோரை நேசிக்கிறான் (3:31), இறையச்சமுடையோரை நேசிக்கிறான் (3:76), பொறுமையாளர்களை நேசிக்கிறான் (3:146),இறைவன் மீது பொறுப்புச்சாட்டி முழு நம்பிக்கை வைப்போரை நேசிக்கிறான் (3:159), நீதமாக நடந்துகொள்வோரை நேசிக்கிறான் (5:42), பூமியில் உள்ளோருக்கு இரக்கம் காட்டுங்கள் , வானத்திலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் (அபூதாவூத் 4941), கருணையுடையோருக்கு கருணையுள்ளவனான இறைவன் கருணை காட்டுவான் (திர்மிதீ 1924), இரக்கம் காட்டுங்கள் இரக்கம்காட்டப்படுவீர்கள். மன்னியுங்கள்.மன்னிக்கப்படுவீர்கள் (அதபுல் முஃப்ரத் ஹதீஸ் 380)
இப்படி இறைவனது அன்பை பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகுவதற்கு இறைவன் யாரை நேசிப்பான் என கூறி வழிகாட்டவும்பட்டுள்ளது.
அத்தோடு பாவியானவன் திருந்தி வருவதை குறித்து , பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை மீண்டும் கண்டுபிடிக்கும்போது அடையும் மகிழ்ச்சியை விட அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சியடைகிறான் ( புகாரி 6309, முஸ்லிம் ).
கருணையுள்ள பாலூட்டும் பெண் தன் குழந்தையை நேசிப்பதை விட அல்லாஹ் தன் அடியார்களை நேசிக்கிறான் (புகாரி 5999)
தன் அடியார்களை மன்னிக்கவும் நேர்வழியில் செலுத்தவும் இலேசாக்கவும் விரும்புகிறான் (குர்ஆன் 4:26-28)
பாவம் செய்து தமக்கு தாமே அநீதம் இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அவன் எல்லா பாவங்களையும் மன்னித்துவிடுவான் (39:53)
இவ்வாறு பாவிகளை மனந்திரும்பி வர அழைக்கிறது இஸ்லாம்!
படைப்புகள் தமக்கிடையே அன்புகாட்டிக்கொள்வதற்கு காரணம் அல்லாஹ் படைத்த கருணையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே.(புகாரி 6000) அந்தளவுக்கு இறைவன் படைத்த கருணையும் விசாலமானது, கருணையையே படைத்த கருணையாளனின் கருணை விசாலமானது. இதனால் தான் அல்லாஹ்வின் கருணையை அறிந்த காஃபிர் கூட சுவர்க்கத்தில் அவநம்பிக்கை கொள்ளமாட்டான் (புகாரி 6469) அதாவது அவனையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவித்துவிடுவான் என்று எண்ணுமளவுக்கு கருணையுள்ளவன்.
3.இந்த தற்குரிகள் கூறுவது போல கர்த்தரோ இயேசுவோ பாவிகளை நேசிப்பார்களா?
1.புறஜாதிகள் பாவம் செய்ததாலும் தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினாலும் அவர்களை நேசிக்கவில்லை. அவர்களின் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (1 சாமுவேல் 15:2-3, உபாகமம் 20:16-18)
2.தான் தேர்வுசெய்த மக்களில் எவராவது தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினால் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (உபாகமம் 13:6-10,12-16, 17:2-5)
குறிப்பாக சாலமோன் தேவனின் கட்டளையை மீறியதாக பைபிள் கூறுகிறது. அத்தோடு தேவன் அவன்மீது கோபமானார் என 1 இராஜாக்கள் 11:10
3.இயேசு தன்னை ஏற்காதோரை தேவன் மன்னித்துவிடவும் கூடாது அவர்கள் திருந்திவிடவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.(மாற்கு 4:11-12)
4.சிலைவணங்கிளை நரகத்தில் போட்டு கொல்லுவார் (வெளி 21:8)
5.ஏசா பிறந்து தீமை செய்ய முன்பே அவனை தன் தம்பிக்கு ஊழியம் செய்வான் என தீர்மானித்து கர்த்தர் வெறுத்தார் என்கிறார் பவுல் (ரோமர் 9:11-13)
6.அக்கிரமக்காரரை கர்த்தர் வெறுக்கிறார் (சங்கீதம் 5:5)
7.துன்மார்க்கரை கர்த்தரின் உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:5)
8.குடும்பத்திலுள்ள சிலைவணங்கிகள் மற்றும் பாவிகளோடு ஒன்றாக சாப்பிடவோ பழகவோ கூடாது. அவர்களை துரத்தி விட வேண்டும் (1 கொரிந்தியர் 5:11-13)
9.இயேசுவை மக்கள் நம்பாததற்கு காரணம், தேவன் அவர்களின் கண்களை குருடாக்கி இருதயத்தை கடினப்படுத்தியமையே (யோவான் 12:40)
10.அப்படி இயேசுவை நம்பாதோரின்மீது தேவனின் கோபம் இருக்கும் (யோவான் 3:36) அத்துடன் அவன்மீது ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகும் (யோவான் 3:18)
அதாவது அவிசுவாசிமீது தேவனுக்கு அன்பு கிடையாது... மாறாக கோபமே இருக்கும் என பைபிளே சொல்லிவிட்டது (யோவான் 3:36)
இயேசு பாவிகளை மனந்திரும்புவதற்கு அழைக்கவே வந்தார்.. மனந்திருந்தாதோரை நேசிக்கவில்லை. மாறாக அவர்கள் மன்னிக்கப்பட கூடாது என்ற கடுமையானவராக தான் இருந்தார் (மாற்கு 4:11-12)
ஆகவே இயேசு பாவிகளை நேசித்தார் என்பது மனந்திருந்தாத பாவிகளை அல்ல.. மனந்திருந்துவோரை மட்டுமே.
ஆகவே இதுவும் தற்குரித்தனமான குற்றச்சாட்டே.
கருத்துகள்
கருத்துரையிடுக