ஒரே இரவில் நபிகளார் தம் அனைத்து மனைவியரிடமும் சென்றதும் கர்த்தரின் செயலும்

 -ஒரே இரவில் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்களா?



நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள். அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268


நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர்.


இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது:


ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218)


இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள்:


"நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும் என ஆயிஷா (ர) கூறுகிறார்கள்- புகாரி 267,270


அதாவது இஹ்ராம் அணிவதற்கு முன் தன் அனைத்து மனைவியருடனும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.


வழமையாக நடப்பது போன்று (كان يدور /كان يطوف ) என்று உள்ளதும் அந்த ஒரு நாளில் ஒரு தடவை நிகழ்ந்தது என்பதையே இங்கு (அபூதாவூத் 218 -طاف ذات يوم -ஒரு நாள் <மனைவியர் அனைவரிடமும்> வலம்வந்தார்) குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக புகாரி 267 இலும் அன்னை ஆயிஷா (ர) மணம் பூசிவிட்டதை குறிப்பிடுவதற்காகவும் (كنت أطيب) என்று இதே "كان" என்பதையே பாவித்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு தடவை நடந்ததே என புகாரி 270 காட்டுகிறது (தமிழ் மொழிபெயர்ப்பில் சற்று தவறியுள்ளார்கள். அரபியில் (أنا طيبت-நான் மணம்பூசிவிட்டேன்") என்றே உள்ளது.


இது ஆபாசமா?- நிச்சயமாக இல்லை.. இக்காலத்தில் நீலப்பட (2சாமு12:11-12) கலாச்சாரத்தில் ஊறி இருப்பதால், உடலுறவு என்பதே நீலப்படம் என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையில் அது கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன்மீதுமுள்ள உரிமை.. பல நாட்களுக்கு மீண்டும் தாம்பத்யத்தில் ஈடுபட கிடைக்காது என்பதால் அவர்களுக்குரிய உரிமையை நபிகளார் பூரணமாக நிறைவேற்றினார்கள். அது தவறு அல்ல... நீதி.


-வழமையாக எப்படி நடப்பார்கள்?


வழமையாக நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தினமும் வருவார்கள் என்றும் ஆனாலும் அவர்களை தீண்ட மாட்டார்கள் என்றும் இறுதியாக யாருடன் இரவு தங்கும் நாளுக்குரியதோ அவரோடே தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள் என அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்- அபூதாவூத் 2135


மனைவியரில் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) ஒதுக்கி வைக்கலாம் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை உங்களுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை (குர்ஆன் 33:51) இறங்கிய பின்பும், ஒரு மனைவியுடைய நாளில் மற்ற மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்குமாறு அனுமதி கேட்பார்கள் என்கிறார் அன்னை ஆயிஷா (புகாரி 4789)


நபிகளாரிடம் ஒன்பது மனைவியர் இருந்த காலத்தில் ஒரு மனைவியிடம் சென்றால் மீண்டும் அவரிடம் செல்வதற்கு ஒன்பது நாட்கள் எடுக்கும். அதனால் அனைத்து மனைவியரும் அந்த நாளுக்குரிய மனைவியின் வீட்டில் இரவில் ஒன்று கூடுவர். ஆயிஷா (ர) அவர்களின் வீட்டில் ஸைனப் (ர) அவர்களை அன்னை ஆயிஷா என நினைத்து நபிகளார் அவரிடம் கையை நீட்டினார்கள். அப்போது அன்னை ஆயிஷா,"இவர் ஸைனப்" என்றார்கள். உடனே நபிகளார் கையை விலக்கிக் கொண்டார்கள்.. முஸ்லிம் 2898 (1462 ஆங்கில அரபு)


இதன்படி அந்த இரவுக்குரிய மனைவியல்லாதவரை தொடவும் மாட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது.


இது சம்பந்தமாக இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. 



ஆகவே தன் மனைவியரின் உரிமைகளை நீண்ட நாட்கள் கழித்தே கொடுக்கவேண்டிய நிலை இருக்கும்போது அனைவரிடமும் ஒரே இரவில் சென்று வந்தார்கள். அது அவர்களது நீதியை தான் காட்டுகிறது.


நீலப்பட (2 சாமுவேல் 12:11-12) ஆதிக்கத்தினால் இது ஆபாசமாக தென்படுகிறது:


தாவீதின் அனைத்து மனைவியரையும் ஒரே ஆணுக்கு சப்லை செய்து இஸ்ரவேலர் முன்பாக பட்டப்பகலில் உறவுகொள்ள வைப்பேன் என கர்த்தர் சொன்னது குறித்து வெட்கமே இல்லை:


2 சாமுவேல் 12:11-12 IRVTam

[11] யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். [12] நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/2sa.12.11-12.IRVTam 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்