கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல
கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல
————
கலாத்தியா எனும் ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக இது கருதப்படுகிறது.
1.இயேசு என்பவர் தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர். தேவன் என்பவரே பிதா.. சொ இயேசு வேறு தேவன் வேறு
¹ “மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,” (கலாத்தியர் 1:1)
——-
2.இயேசு வேறு தேவன் வேறு.. பிதா தான் தேவன். அந்த தேவனுடைய சித்தப்படி தான் இயேசு கிறிஸ்தவர்களின் பாவத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்தாராம்.
…
³ “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;”
⁴ அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலாத்தியர் 1:3-4)
———.
3.இயேசு என்பவர் தேவனுடைய குமாரன் என்பதே பவுலின் நிலைப்பாடு.. அதாவது தேவன் இயேசு அல்ல!
…
¹⁶ “தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;” (கலாத்தியர் 1:16)
——-
4.இயேசுவுக்கு சகோதரர் உண்டு என்பதே பவுலின் நம்பிக்கை
…
¹⁹ “கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.” (கலாத்தியர் 1:19))
———-
5.இயேசு என்பவர் ஆபிரகாமின் ஒரு சந்ததி என்பதே பவுலின் நிலைப்பாடு.
¹⁶ “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.”(கலாத்தியர் 3:16)
தேவன் ஒன்றும் ஆபிரகாமின் சந்ததியுமல்ல.. தேவன் தான் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணியவர். இயேசு என்பது அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி என்பதே அவரது கருத்து
——
6.தேவன் என்பவர் ஒருவரே என்பதே பவுலின் நம்பிக்கை
²⁰ “மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். (கலாத்தியர் 3:20)
அந்த தேவன் இயேசு அல்ல. பிதா என்பவரே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை
———
இயேசு என்பவர் பெண்ணிடம் பிறந்தவரும், நியாயபிரமானத்துக்கு கீழானவர். அவர் தேவனுடைய மகனாம்.. அவரை தேவன் அனுப்பினாராம்.
சோ தேவன் வேறு இயேசு வேறு என்பதே பவுலின் நம்பிக்கை
⁵ “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.” (கலாத்தியர் 4:5
————
8.கலாத்தியரும் பிள்ளைகளாக இருப்பதால், குமாரனுடைய ஆவியை தேவன் அவர்களது இதயத்தில் அனுப்பினாராம். இதனால் இயேசு மூலமாக கலாத்தியரும் தேவனது வாரிசாம்… (அதாவது தேவன் செத்து போனால் , கலாத்நியருக்கு பங்கு கிடைக்கும் போல). இதன்படி இயேசு வேறு தேவன் வேறு!!
⁶ “மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.”
⁷ “ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். (கலாத்தியர் 4:6-7)
கருத்துகள்
கருத்துரையிடுக