பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல
பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல
———————-
பிலிப்பி என்ற ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது
1.பிலிப்பியரினதும் பவுலினதும் பிதாவே தேவனாம்.. இயேசு என்பவர் கர்த்தராம்
² நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (பிலிப்பியர் 1:2)
இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
———
2.இயேசுவின் நீதியின் கரிகால் தேவனுக்கு மகிமை, துதி உண்டாகுமாம். அதாவது இயேசு வேறு தேவன் வேறு.
¹⁰ “தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி. (பிலிப்பியர் 1:10)
————-
3.இயேசு தேவனுடைய ரூபமாம். ஆனாலும் தன்னை தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தன்னை தாழ்த்தினாராம்.
அதனால், தேவன் அவரை உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்தினார் என்பதே பவுலின் நம்பிக்கை.
அதாவது இயேசு கடவுளல்ல… கடவுளால் அந்தஸ்து உயர்த்தப்பட்டவர் என்கிறார். காரணம் அவர் தன்னை தாழ்த்தினாராம்.
⁵ கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
⁶ “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,”
⁷ “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.”
⁸ “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”
⁹ “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,”
¹⁰ “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,”
¹¹ “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர் 2:5-11)
—————
3.இயேசு வேறு தேவன் வேறு.பிதாவே தேவன் என்பது பவுலின் நம்பிக்கை
¹⁹ என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
²⁰ நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (பிலிப்பியர் 4:19-20)
——————-
கருத்துகள்
கருத்துரையிடுக