சட்டத்தை/வசனத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்

சட்டத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்!!

------------------------------------------------



முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இறைவினிடம் கேட்கும் பிரார்த்தனை என்னவென்றால்,

"எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!  நீ யார் மீது அருள்புரிந்தாயோ அத்தகையோரின் வழியில். (அது) உன் கோபத்திற்குள்ளானவர்களினதும் வழிதவறியவர்களினதும் வழியில் அல்ல!"
(1:6-7)



இதில் இறைவனின் கோபத்திற்குள்ளானவர்கள் யூதர்கள் ஆவர்..  வழிதவறியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர். அவர்களை போன்றவர்களும் இதில் அடங்குவர்.



கிறிஸ்தவர்களை வழிதவறியோர் என கூற காரணம், அவர்களின் அறியாமையாலும் தெளிவின்மையாலும் நேரான வழியைவிட்டும் விலகிவிட்டனர் என்பதாலேயே ஆகும்.



இவர்களின் இவ் அறியாமையே அவர்களை நேர்வழியிலிருந்து விலக்கிவிட்டது.

அவ் அறியாமையை அறிவு என்பதாக நினைத்தும்விடுவதுண்டு.




அந்த வகையில் இறைவன் பல சட்டங்களை காலத்துக்கு காலம் மாற்றியுள்ளான். இது சாதாரண வேத அறிவு உள்ள ஒருத்தனால் இலகுவாக புரிந்துவிடும்.

ஆனால் இந்த கிறிஸ்தவர்களோ , தமக்கு அதில் அறிவு இல்லாததால் அப்படியொன்றே நடக்கவில்லை என அடித்துகூறுவார்கள்.

முகம்மது நபி இறைவனின் அனுமதிகொண்டு ஒரு சட்டத்தை காலத்திற்கேற்ப அனுமதிகொடுத்து பின் அதை தடுத்துவிட்டாலோ அல்லது  இறைவன் குர்ஆனில் ஒரு வசனத்திற்கு பதிலாக இன்னொரு வசனத்தை மாற்றினாலதலோ, உடனே அறிவற்றவர்களாக இவர்கள் மாறிவிட்டு இதை கேலி செய்வார்கள்.

இறைவன் பூரண ஞானமுள்ளவன் என்பதால் தான் இவ்வாறு நடக்கிறது.

உதாரணமாக ஒரு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் சொல்கிறார்,

உம் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுங்கள்.. திடமான உணவுகளை கொடுக்காதீர் என கூறுகிறார்.


அக்குழந்தை வளர்ந்தவுடன்,

அப்பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்காதீர்... மாறாக திட உணவுகளை கொடுங்கள் என கூறுகிறார்.


இதை சாதாரண மனிதன் பார்த்தால், டாக்டர் கரக்டாக தானே சொல்கிறார் என புரிந்துகொள்வான்.


ஆனால் டாக்டர் அறிவு உள்ளவர், இப்போது ஒரு கிறிஸ்தவர் இதை பார்த்தால்,

"இந்த டாக்டர் என்ன கிறுக்கனா? ஒரு காலத்துல பால கொடுனு சொல்றான், இன்னொரு காலத்துல பால கொடுக்காதனு சொல்றான்.. உருப்படியான அறிவுகூட இல்லை" என்று தான் சொல்வாங்க போல.


அதே போன்று தான், உன்னதமான ஞானமுள்ள இறைவன் சில வசனங்களை தற்காலிகமாக இறக்குகிறான்.. அது அக்காலத்துக்கு மிக சிறந்ததாக அதுவே மிக பொருத்தமாக இருக்கிறது.

அதன் பின் அவ்வசனத்தை விட சிறந்ததை கொண்டு அல்லது அதைபோன்றதை கொண்டு அதை மாற்றிவிடுகிறான்..

இது இறைவனின் பூரண ஞானத்தின் வெளிப்பாடு ஆகும்.. அவன் நாடியதை செய்கிறான்.

இதே போன்றே சில சட்டங்களை ஒரு காலத்திற்கு கொடுப்பான்.. அக்காலத்திற்கு அதுவே மிக சிறந்ததாக இருக்கும்.

பின் ஒரு காலத்தில் அதைவிட சிறந்த சட்டத்தை அதற்கு மாற்றீடாக கொடுக்கிறான்.



இறைவனே தீர்ப்பு சொல்ல , தான் நாடியதை நிறைவேற்ற பூரண ஆற்றலுள்ளவன்.

அத்தகைய இறைவனை கேள்விகேட்க நாம் யார்?


தன் பூரண ஞானத்தினால் காலத்திற்கு தகுந்தாற்போல் சட்டங்களையும் வசனங்களையும் இறக்கினான்.

பின்பு, கடைசியாக எதிர்காலத்திற்கு என்றும் பொருந்தும்விதமாக இறுதி சட்டத்தை நிலைநாட்டிவிட்டான்... அதற்கு பின் எந்த மாற்றமும் இச்சட்டத்திலோ வசனங்களிலோ இல்லை!!


அதை தான் 2:106 வசனம் கூறுகிறது.

இவற்றை மறுக்கும் கிறிஸ்தவர்கள் தமக்கு அறிவு இல்லாததால் தான் இப்படி மறுக்கிறார்கள்.

அக்கால யூதர்கள் கூட ஈசா நபியையும் முகம்மது நபியையும் மறுக்க காரணம், தவ்ராத் என்றும் நிலையானது என நம்பினார்கள்.

இறைவன் சட்டத்தை மாற்றமாட்டான் என அவர்கள் வாதிட்டனர்.


இவ்வாதமே தப்பு என்பதை பைபிளை படித்தாலே புரிந்துவிடும்.


சில சட்டங்களை பார்ப்போம்:
-----------------------------------------



1. ஆரம்பத்தில் உடன் பிறந்த சகோதரியை மணப்பதை கர்த்தர் அனுமதித்தார். அச்சட்டத்தை சரிகண்டு அதற்கேற்ற விதத்தில் ஆதாமுக்கு பிள்ளைகளை கொடுத்து அவர்களை தமக்குள்ளே திருமணம் முடிக்க வைத்து ஜனத்தை பெருக்கினார்.


அதேபோல ஆப்ரஹாம் தன் தந்தைவழி சகோதரி சாராவை மணந்து பிள்ளை பெற்றார். அப்பிள்ளையையே கர்த்தர. வாக்குதத்தமாக ஆப்ரகாமுக்கு கொடுத்தார். (ஆதி 20:12 18:9-18)



அதேபோல அம்ராம் தன் தகப்பனின் சகோதரியை (அத்தையை) மணந்து மோசேயையும் ஆரோனையும் பெற்றார். (யாத்திராகமம் 6:20)



இப்படி அத்தையை மணப்பதை சொந்த சகோதரியை மணப்பதை எல்லாம்  தடை இல்லாமல்  அனுமதித்து சட்டம் போட்டிருந்தார்.


பின்பு மோசேயின் 80 வயதுக்கு பின்னால் ,

 சகோதரியை மணக்க கூடாது (லேவியராகமம் 18:9)

என்று சட்டம் போட்டு முந்திய சட்டத்தை மாற்றினார்.


இந்த சின்ன விசயம் இவர்களுக்கு தெரியல.. அல்லது புரிந்து கொள்ள இயலவில்லை!!


இவர்கள் வாதப்படி , இறைவனுக்கு ஒரு காலத்தில் சகோதரியை முடிப்பது ஓகே , இன்னொரு காலத்தில் அது ஓகே இல்லையாம்!!


இவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்வியை இங்கே தமக்கு தாமே கேட்டுக்கொள்ளட்டும்.

-----


2. நோவா காலத்தில் எல்லா நகரும் உயிரினங்களும் சாப்பாடாக சட்டம் போடுகிறார். (ஆதியாகமம் 9:1-3)


பின்பு மோசே காலத்தில் பன்றி மாமிசம் கூடாது, ஒட்டக மாமிசம் கூடாது, காக்கை கறி கூடாது, முயல்கறி கூடாது என்று லிஸ்ட் நீண்டுட்டே போகுது.
(லேவியராகமம் 11:3-42 உபாகமம் 14)


ஆரம்பத்தில் நோவா காலத்தில் காக்கை இருக்கலயா? (இருந்துது என ஆதியாகம் 8:7) அதுவும் சாப்பிடலாம் (ஆதி 9:3)

பின் அந்த காகம் கூடாது (லேவி 11:15) என சட்டம் போடுகிறார்.


ஒட்டகம் நோவா காலத்தில் இருக்கலயா? பன்றி நோவா காலத்தில் இருக்கலயா?

அதாவது கி.மு 2457 இல் அவை இருக்கலயா?

இருந்தது.. அவற்றை தேவன் அப்போது நோவாவுக்கும் அவரை தொடர்ந்து வருவோருக்கும் பூமியிலிருக்கும் சகல மிருகங்களும் சாப்பாடாக அனுமதித்தார்.

ஆனால் மோசே காலத்தில் சட்டத்தை மாற்றி, பன்றி கூடாது, ஒட்டகம் கூடாது, முயல் கூடாது என சட்டம் போடுகிறார்.

இது போதாது என்று, இயேசு சிலுவையில் அறையப்பட்டதால், எல்லா மாம்சமும் சாப்பிடலாம் என இவர்களே நம்புகிறார்கள் என்பது வேடிக்கை.

அப்படினா கடவுள் சட்டத்தை மாற்றியுள்ளார்.


இவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்வியை தம்மை பார்த்தே கேட்டுக்கொள்ளட்டும்

------


3. ஆசாரியன் கன்னி பெண்ணை மட்டுமே மணக்க வேண்டும். விதவையை மணக்க கூடாது (லேவியராகமம் 21:13-14)

என்று சட்டம் போட்டுவிட்டு,

எசேக்கியேல் காலத்தில்,

ஆசாரியனின் விதவை மனைவியை மணக்கலாம் என சட்டத்தை மாற்றுகிறார்.
(எசேக்கியேல் 44:22)

இங்கே கர்த்தர் தன் சட்டத்தையே மாற்றியிருக்கிறார்...

ஏன் மோசே காலத்திலேயே , ஆசாரியனின் விதவை மனைவியை மணக்கலாம் என சட்டம் போட தெரியாமல் போய்விட்டதா???

-----


4. கொலை செய்யாதிருப்பாயாக! (யாத்திராகமம் 20:13)

இப்படி சொல்லிட்டு, இந்த சட்டத்தையே மீறி,,

கர்த்தர் சொத்தாக கொடுக்கும் நாடுகளிலுள்ளோரை ஒட்டுமொத்தமாக கொல்ல சொல்கிறார்.

ஏனெனில் அவர்கள் உயிரோடிருந்தால் சிலைவணங்க தூண்டுவார்களாம் (பாவம் இவர்கள் எதுவும் அறியாத பச்ச மண்ணுகள்)


16 ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாபமல் விடாதே.


17 இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எப+சியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.


18 அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள்.

(உபாகமம் 20:16-18)


இங்கே கர்த்தர் கொலைசெய்யாதே என்று சொன்ன சட்டத்தை மாற்றி , சிறு குழந்தைகளுட்பட மூச்சு விடும் எதையும் விட்டுவிடாதே என்கிறார்.. நல்லவேலை மரங்களும் மூச்சுவிடும் என்பது அவருக்கு தெரியல..
----


5. தந்தையர்களின் பாவத்துக்காக பிள்ளைகளை கொல்ல வேண்டாம் என கர்த்தர் சட்டம் போடுகிறார்.


16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

உபாகமம் 24:16


ஆனால்  இதை மாற்றிவிட்டு,


அமேலிக்கியர் 400 வருடங்களுக்கு முன் செய்த தப்பிற்காக அவர்களின் பிள்ளைகளையும் மிருகங்களையும் கொல்ல சொல்கிறார்.


2 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழி மறித்ததற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன்.

1 சாமுவேல் 15:2

3 ஆகவே சென்று அமலேக்கியரை தாக்கி, அவர்கள் உடைமைகளை அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இறக்கம்காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும் ".

1 சாமுவேல் 15:3




சட்டத்தை அடிக்கடி மாத்துறார்..


நியாயமான சட்டத்துக்கு பதிலாக இன்னொரு நியாயமான சட்டத்தை கூறினால் பரவாயில்ல.. ஆனால் மிக அநியாயத்தை அல்லவா
-----


6. சிலை செய்யாதே என யாத்திரகாமம் 20:1-6 உபாகமம் 5:1-10 லேவியராகமம் 19:3 26:1 இல் கூறுகிறார்.

பின்பு சட்டத்தை மாற்றி,  கெரூபீன் சிலை பாம்பு சிலை என்பவற்றை செய்ய சொல்கிறார்.
(யாத்திரகாமம் 25:1-40, 37:1-9 26:1-20..)
----

7. விபச்சாரம் செய்தால் கொல்ல வேண்டும் என சட்டம் போடுகிறார்.


10 அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.

லேவியர் 20:10



தாவீது இதை செய்தவுடன் (2 சாமுவேல் 11:2-4) சட்டத்தை மாற்றி,

தாவீதின் மனைவிகளை விபச்சாரம் செய்விப்பதாக கூறி பிறந்த பிள்ளையை கொலைசெய்தார்.
(2 சாமுவேல் 12:7-19)


தாவீதுக்காக தன் சட்டத்தையே மாற்றியுள்ளார்.

----


8. இது மட்டுமா?? வாக்கை கூட மாற்றுவார்.


ஏசேக்கியா பிழைக்கமாட்டான் செத்துப்போவான் என தீர்க்கதரிசிக்கு வாக்கு சொல்கிறார்.

பின் ஐந்து நிமிடத்தில் அதை மாற்றியும் விடுகிறார்.



1 அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்" என்றார்.




4 எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று;


5 "நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, 'உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.

6 உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்' என்று சொல். "

2 அரசர்கள் 20:1,4-6


இதென்ன software updatingஆ??

---



9. வாக்கை மட்டுமா மாற்றுவார்??? கட்டளையையும் மாற்றுவார். பிறகு அவர் கட்டளையை நிறைவேற்றியதற்காகவே கோபமும் படுவார்.


12 கடவுள் பிலயாமிடம், "நீ அவர்களோடு போக வேண்டாம்; அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர்கள் ஆசி பெற்றோர்" என்று கூறினார்.

எண்ணிக்கை 22:12
20 கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், "இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ; ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்" என்றார்.

எண்ணிக்கை 22:20
22 ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது; ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.

எண்ணிக்கை (எண்ணாகமம்) 22:22



அங்கே கர்த்தர் முதல் நாள் போகாதே என்கிறார். மறுநாள் போ என்று தன் கட்டளையை மாற்றுகிறார். பின்பு போனதுக்காக கோபமும் கொள்கிறார்.


என்னப்பா இது??

----

10. இதுமட்டுமா?? நான் ஏதாவது நல்லது கெட்டது சொல்லிவிட்டு பிறகு வருந்தி மாற்றிக்கொள்வேன் என அவரே வாக்கு கொடுக்கிறார்.


7 ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம்.

எரேமியா 18:7
8 எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன்.

எரேமியா 18:8
9 அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம்.

எரேமியா 18:9
10 மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன்.

எரேமியா 18:10
----

11. ஒருத்தன் தப்பு செய்தால் மற்றவர்களையும் கர்த்தர் தண்டிப்பாராம்.


7 இக்கணக்கெடுப்பு கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதால், அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.

1 குறிப்பேடு 21:7
8 தாவீது கடவுளிடம், "நான் இந்தச் செயலைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். உம் அடியேனை மன்னியும், மதியீனமாய்ச் செயல்பட்டேன்" என்று சொன்னார்.

1 குறிப்பேடு 21:8
10 "நீ தாவீதிடம் சென்று, 'ஆண்டவர் கூறுவது இதுவே; நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்; அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்; அவ்வாறே உனக்குச் செய்வேன்' என்று சொல்" என்றார்.

1 குறிப்பேடு 21:10
11 காத்து தாவீதிடம் சென்று "ஆண்டவர் கூறுவது இதுவே; 'நீயே தேர்ந்துகொள்;

1 குறிப்பேடு 21:11
12 மூன்று ஆண்டுப்பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள்முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் தூதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா?' இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும்" என்றார்.

1 குறிப்பேடு 21:12
14 எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர்.

1 குறிப்பேடு 21:14



தாவீது செய்த தப்பிற்காக , சும்மா இருந்த மக்களை கர்த்தர் கொன்றார்.

பின்பு சட்டத்தை மாற்றி,


பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் என மாற்றிக்கிட்டார். (எசேக்கியேல் 18:20)

---

12. மோசே மூலம் உண்டான விவாகரத்து சட்டத்தை இயேசு மாற்றுகிறார். (மத்தேயு 5:31-32)


13.மோசே மூலம் நிறைய உணவுகள் தடுக்கப்பட்டன. (லேவியர் 11:7-20)

ஆனால் இயேசு அதையெல்லாம் மாற்றியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர..
(மாற்கு 7:14-23 ரோமர் 14:1-6)


இப்படி பல சட்ட மாற்றங்களும் வசன மாற்றங்களும் வாக்கு மாற்றங்களும் கர்த்தரால் செய்யப்பட்டுள்ளன.


இதையெல்லாம் அறியாமலேயே இந்த அறிவீனர்கள் பிதற்றுகிறார்கள்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்