மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல?
மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாற்குவின்படி இயேசு ஒரு சாதாரண நல்ல மனிதர். இவரை தேவன் தனது பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு பூமியில் சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு, ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்..
இயேசுவை மாற்குவின்படி கடவுளாக காட்ட கிறிஸ்தவர்களால் ஒருபோதும் இயலாது!!
(மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல என ஏற்கனவே எழுதியிருந்தேன்.)
1.இயேசு தேவனுடைய குமாரனாம்! குமாரன் என்றாலே தேவனுக்கு பின்னால் தோன்றியவர். சோ கடவுளல்ல.
¹ தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
(மாற்கு 1:1)
தேவனுக்கு பல குமாரர்கள் உண்டென பைபிள் சொல்கிறது.
இஸ்ரேல் தேவனுடைய குமாரன்-யாத்தி 4:22, ஓசியா 11:2
சொலமோன் தேவனுடைய குமாரன்- 2 சாமுவேல் 7:14-16
இயேசு தேவனால் அனுப்பப்பட்டதாலும், தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே தேவகுமாரன் என்றார் என இயேசு சொன்னதாக யோவான் 10:34-36 கூறுகிறது.
2.இயேசு கர்த்தரால் அனுப்பப்படுபவர். அவருக்கு முன்பாக யோவான் அனுப்பப்பட்டார்.
அனுப்பப்பட்டவர் கடவுளல்ல. அனுப்பியவரே கடவுள்!
² "இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;" (மாற்கு 1:2)
3.கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்ற சத்தம் யோவானை குறிக்கிறதாம்! இதிலுள்ள கர்த்தர் இயேசு அல்ல! ஒரு பேச்சுக்கு அப்படி வச்சுக்கிட்டாலும், ஏசாயாவும் கர்த்தர் (யாவே) என அழைக்கப்படுகிறார் (ஏசாயா 7:10)
³ "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;" (மாற்கு 1:3)
4.இயேசு யோவானிலும் பெரியவராம்!
⁷ "அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல."
(மாற்கு 1:7)
யோவானே ஸ்திரிகளிடம் பிறந்தவர்களில் மிகப்பெரியவன் என இயேசு சொல்கிறார்-(மத்தேயு 11:11)
இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர். சோ இயேசுவின் வார்த்தைப் படி யோவானே இயேசுவிலும் பெரியவர்.
சோ அவர் கடவுளாக இயலாது.
5.வானத்திலிருந்து சத்தமுண்டாகி நீர் என்னுடைய நேசகுமாரன் என்றதாம்-மாற்கு 1:11
சாலமோனையும் அவன் என் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன் என கூறியதாக எழுதப்பட்டுள்ளது-2 சாமேவேல் 7:14-16
6.இயேசு பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டவர்.
¹² உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
(மாற்கு 1:12)
ஏவப்படுபவர் கடவுளல்ல.. பரிசுத்த ஆவியிலும் இவர் தாழ்ந்தவர் என இது காட்டுகிறது.
7.இயேசு சாத்தானால் சோதிக்க பட்டாராம்- மாற்கு 1:13
சாத்தானால் சோதிக்க படுபவர் கடவுளல்ல! சாத்தானிலும் வல்லமை குறைந்தவர்.
8.அசுத்த ஆவி இயேசுவை தேவனுடைய பரிசுத்தர் என்றதாம்-மாற்கு 1:24
.ஆரோனும் கர்த்தருடைய பரிசுத்தன்- சங்கீதம் 106:16
இதில் தெய்வீகம் இல்லை
9.இயேசு பிசாசை போ என விரட்டினாராம். அது உடனே போய்விட்டதாம்! மாற்கு 1:25-26
கடுகு அளவு விசுவாசம் இருந்தால் மலையை பார்த்து இவ்விடம் விட்டு அப்புறம் போ என்றாலும் போய்விடுமாம்-மத்தேயு 17:20
அதே மலையை பார்த்து கடலில் போய்விழு என சொன்னாலும் போய் விழுந்துவிடுமாம்-மத்தேயு 21:21 , மாற்கு 11:23
விசுவாசமிருப்பதால் இயேசு இதை செய்தார் தெய்வீகத்தால் அல்ல!
மேலும் இயேசு மூலம் அற்புதம் செய்ததே தேவன் தான் -அப்போஸ்தலர் 2:22.
சோ இதில் நோ தெய்வீகம்!
10.மேலும் நோயாளிகளை சுகப்படுத்தி பிசாசுகளையும் விரட்டினாராம்- மாற்கு 1:30-34
இதற்கு குறிப்பு 9 இல் பதில் உள்ளது
.
11.காட்டுக்குள் போய் இயேசு ஜெபம் செய்தார்-மாற்கு 1:35
இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ, அவரே கடவுள். இயேசு அல்ல!
12.இயேசு குஷ்டரோகியை சுத்தமாகு என்றதும் சுகமாகி விட்டதாம்- மாற்கு 1:40-42
இதற்கு பதிலும் குறிப்பு 9 இல் உள்ளது.
13.பாரிசவியாதிகாரனை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொன்னார். பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்றார்-மாற்கு 2:5,10
இதை கண்ட மக்கள் தேவனை மகிமைப்படுத்தினார்கள்-மாற்கு 2:12
மை கமெண்ட்:
*இயேசு தன்னை மனுஷகுமாரன் என சொல்லி , தான் ஒரு மனுஷனே ஆவேன். கடவுள் அல்ல என்கிறார்.
*.இதை கண்ட மக்கள் கூட, இவரை தேவன் என நம்பவில்லை.. இது போன்ற மனுசனுக்கு அதிகாரத்தை கொடுத்ததே தேவன் தான் என்பதால், தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
*இயேசுவுக்கு எல்லா பாவத்தையும் மன்னிக்க பூமியில் அதிகாரமில்லை.. பாரிசவாதத்துக்கு காரணமான பாவம் (??), அதை தான் மன்னிக்க முடிந்தது.
ஆனால் இயேசுவை கொல்ல பார்த்த பாவத்தை இயேசுவால் மன்னிக்க முடியல.. பிதாவிடம் மன்னிக்க வேண்டினார் என எழுதப்பட்டுள்ளது.(லூக்கா 23:34
*தீர்க்கதரிசிகளுக்கு பாவத்தை மன்னிக்க இயலும் என்பதே பைபிள் கூறுவது. அதனால் தான் சவுல் தன் பாவத்தை மன்னிக்க சாமுவேல் தீர்க்கதரிசியிடம் வேண்டினார். 1 சாமுவேல் 15:25
இயேசு தீர்க்கதரிசி என்பதால் இது முடிந்தது. அது கூட தேவன் கொடுத்ததே.
*இயேசுவின் கூற்றுப்படி, பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு பாவத்தை மன்னிக்க இயலுமாம். சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்,
"“"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்."”
— John 20:23 (TBSI)
சோ, பரிசுத்த ஆவி வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரமாக இது பார்க்கப்படுகிறது.
*இயேசுவுக்கு ஆதிமுதல் பரிசுத்த ஆவி இருக்கவில்லை.. மாறாக ஞானஸ்நானம் பண்ணிய பின்னே பரிசுத்த ஆவி வழங்கப்பட்டது.(மத் 3:16-17)
*பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்பு கூட, இயேசு பாவம் செய்வோரை மன்னிப்பவராக இல்லாமல், அவர்களுக்கு பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார் என யோவான் எழுதுகிறார். 1 யோவான் 2:1
சோ, இதுவெல்லாம் இயேசு என்ற மனிதனை கடவுளாக்காது.
14.வேதபாரகர் மனதில் நினைத்ததை அறிந்தார்-மாற்கு 2:7-10
மை கமெண்ட்:
பைபிள் படி தீர்க்கதரிசிகளுக்கு தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால், அறிந்திருப்பார்கள்.
*அனனியா என்பவன் தன் சொத்துக்களை விற்று சிலதை தனக்கு வைத்துக்கொண்டு, சீடர்களிடம் மற்றதை கொடுக்கிறான். பேதுரு இதை அறிந்திருந்தான் என கூறப்படுகிறது.
அப்போஸ்தலர் 5:1-3
*தீர்க்கதரிசிகள் மறைவான விடயங்களை (தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால்) அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.
"இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்"-லூக்கா 7:39
* கேயாசி நாகமானிடம் செய்த செயல்களை பார்க்காமலேயே எலீஷா அறிந்திருந்தான் என கூறப்படுகிறது. 2 இராஜாக்கள் 5:19-26
சோ, தீர்க்கதரிசி இப்படி இருப்பதால் தெய்வீகமெல்லாம் இல்லை!!
15.பழைய ஏற்பாட்டை தவறுதலாக இயேசு படித்துவிட்டு பேசுகிறார்:
²⁵ "அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது,"
²⁶ "அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்."(மாற்கு 2:25-26)
அபியத்தாரை பிரதான ஆசாரியராக இயேசு இங்கே சொல்கிறார்
ஆனால் அக்காலத்தில் பிரதான ஆசாரியன் அகிதூபின் மகனான அகிமெலேக்கு என்பவரே. இவரிடம் தான் தாவீது பரிசுத்த அப்பம் சாப்பிட்டார்- 1 சாமுவேல் 21:1-6
அகிமெலேக்கின் மகனே அபியத்தார்.-1 சாமுவேல் 22:16,20,;23:6, 30:7
அதே பழைய ஏற்பாடு அபியதாரின் மகன் அகிமெலேக் என்றும் அகிதூபின் மகன் சாதூக் என்றும் சொல்கிறது-2சாமுவேல் 8:17
அபியத்தார் என்பது ஆசாரியர்களின் ஒரு கூட்டம் என்றும் சொல்கிறது- 2 சாமுவேல் 15:35, 17:15
அபியத்தார் என ஆசாரியர் கூட்டமே இருப்பதால், அகிமெலேக்கு என்ற ஆசாரியனை அபியத்தார் என கன்பீஸாகி கூறிவிட்டார் போலும்!
இப்படிப்பட்டவர் கடவுளாக இயலுமா??
16. ஓய்வுநாள் மனுஷனுக்கா உண்டாக்கப்பட்ட து. அதனால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராம்!
²⁷ "பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;"
²⁸ ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
(மாற்கு 2:27-28)
-முதலாவது ஓய்வு நாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்ட து
-இயேசு மனுச குமாரன். மனுசகுமாரன் ஒரு மனிதனே.
-இயேசுவை ஆண்டவராக தேவனே ஆக்கினார்- அப்போஸ்தலர் 2:36
இயேசுவை ஆண்டவராக ஆக்கியவரே கடவுள். இயேசு வல்ல!
17.சூம்பின கையுடையவனை சுகப்படுத்தினார். ஆவிகளை விரட்டினார்-மாற்கு 3:3-5,11-12
இயேசு மூலமாய் தேவனே அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22
18.தன் சீடர்களுக்கு வியாதிகளை குணமாக்க அதிகாரம் கொடுத்தாராம்- மாற்கு 3:15
இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்டவரே- மத்தேயு 28:17
சாத்தானுக்கும் அதிகாரம் ஒப்புக்கொடுக்கப்பட்டதாம்- லூக்கா 4:6
இயேசுவுக்கு அதிகாரம் கொடுத்தவரே தேவன். இயேசு அல்ல!
19.இயேசு பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர்- பரிசுத்த ஆவியை திட்டினால் ஒருபோதும் மன்னிப்பு இல்லை. மற்றவர்களை திட்டினால் மன்னிக்கப்படலாம்- மாற்கு 3:28-29
இங்கே மனுஷகுமாரன் என இல்லாவிட்டாலும் மத்தேயு மனுஷகுமாரன் என்பதையும் சேர்த்து சொல்கிறார்-மத்தேயு 12:32
²⁸ "மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;"
²⁹ "ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்." (மாற்கு 3:28-29)
20. தேவனுடைய சித்தப்படி செய்வோர் இயேசுவுக்கு சகோதரரும் சகோதரியும் தாயுமாக இருப்பார்கள்..
³⁵ "தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார். "மாற்கு 3:35
இயேசுவின் சகோதரராக இருப்பார்களே தவிர, இயேசு அவர்களுக்கு தேவனாக அல்ல!
21.கடலில் காற்று. பலமாக வீசிய போது இயேசு கடலையும் காற்றையும் அதட்டினாராம். உடனே அவை அமைதலாகிவிட்டனவாம்! மாற்கு 4:37-40
³⁷ "அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று."
³⁸ "கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையைவைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள்."
³⁹ "அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று."
⁴⁰ அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
விசுவாசம் இல்லாததால் தான் சீடர்களால் இதை செய்ய இயலவில்லை.
விசுவாசம் இருந்தால், மலையை பார்த்து கடலில் போய் விழச்சொன்னாலும் அது நடக்குமாம்- மத்தேயு 21:21
சோ இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.
குறிப்பாக இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவனே. அப்போஸ்தலர் 2:22
22.இயேசுவை தொட்டவுடன் 12 வருடம் நோயாக இருந்த பெண் சுகம் பெற்றாளாம்- மாற்கு 5:25-34
இயேசு மூலம் தேவனே அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22
எலீஷாவின் இறந்து போன உடல் எலும்பில் ஒரு பிணம் பட்டவுடன் அவனும் உயிர்பெற்று எழுந்து போனானாம்-
“"அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்."”
— 2 Kings (இராஜாக்கள்) 13:21 (TBSI)
இதை விட சின்ன அற்புதமே இங்கு இயேசுவினால் நடந்துள்ளது.
23.யவீருவின் மகளை கையை பிடித்து "தாலீத்தாகூமி" என்றாராம். அவளும் உயிர்பெற்று எழுந்தாளாம்!
⁴¹ "பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு ு உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்."
(மாற்கு 5:41)
இயேசு மூலம் தேவனே அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22
இதற்கு எலீசாவின் இறந்த எலும்பில் பட்ட பிணம் எழுந்தது என்பதை இதைவிட பெரிய வல்லமையான கருதலாம்!
24.இயேசு ஒரு குருடனை பார்வௌயடையச்செய்ய அற்புதம் செய்தபோது, முதல் தடவையில் சரியாக சுகமாகவில்லை. இரண்டாம் தடவையில் அவன் சுகமடைந்தான்.
²³ "அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்."
²⁴ அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
²⁵ "பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்."
(மாற்கு 8:23-25)
இதை ஏன் சொல்றேன் என புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
25.இயேசுவை அக்கால மக்கள் கடவுளாக பார்க்க வில்லை!
²⁷ "பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்."
²⁸ "அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்."
²⁹ "அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்."
³⁰ அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
(மாற்கு 8:27-30)
இங்கே பேதுரு இயேசுவை வெறும் கிறிஸ்த்து என சொன்னதாக எழுதப்பட்டுள்ளது. மத்தேயு ஒருபடி மேலே போய் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என சொன்னதாக எழுதியுள்ளார். மிகவும் பழைய சுவிசேஷம் மாற்கு தான்.
26. இயேசுவுக்காக சிறு குழந்தையை ஏற்றுக்கொள்பவன் இயேசுவை ஏற்றவனாவான். இயேசுவை ஏற்றவன் இயேசுவை அனுப்பியவரை ஏற்றவனாவான்.
…
³⁶ "ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:"
³⁷ "இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்."
(மாற்கு 9:36-37)
இதன்படி இயேசு அனுப்பப்பட்ட நபரே.
அதாவது வானத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என்று அல்ல!!
யோவான் ஸ்நானனும் தேவனால் அனுப்பப்பட்டவன் என சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் யோவான் இயேசுவை வானத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என கூறுகிறார்.. அதை யோவான் சுவிசேஷ கமெண்டில் எழுதுகிறேன்.
சோ.. அனுப்பியவரே தேவன்.. அனுப்பப்பட்ட இயேசு அல்ல!
27.ஒருத்தன் இயேசுவின் பெயரால் பிசாசு விரட்டினானாம்.
³⁸ "அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்."
³⁹ அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். மாற்கு 9:38-39
இயேசு என்ற பெயரை காட்டி விரட்டினான் என்பதல்ல.. இயேசுவுக்கு கொடுக்க பட்ட வல்லமையை வைத்து இதை செய்தார்
இயேசுவின் மூலமாய் அற்புதம் செய்தது தேவனே..- அப்போஸ்தலர் 2:22
இயேசு ஆவிகளை விரட்டியது பரிசுத்த ஆவியால் தான்- மத்தேயு 12:28
இயேசுவுக்கு பரிசுத்த ஆவி கொடுக்க பட்டதே.. வானத்திலிருந்து புறா வடிவில் ஆவி அவர் மீது இறங்கினார் என எழுதப்பட்டுள்ளது.
28.மோசே தள்ளுதல்சீட்டு சட்டத்தை யூதர்களின் இதயக்கடினத்தின் நிமித்தம் எழுதிக்கொடுத்தாராம். அதாவது தீர்க்கதரிசிக்கு சட்டத்தை கொடுக்க அதிகாரம் உள்ளது.
³ அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
⁴ "அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுக்கொடுத்திருக்கிறார் என்றார்கள்."
⁵ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
⁶ "ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்."
⁷ இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
⁸ அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
⁹ "ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்."
(மாற்கு 10:3-9)
இது போன்றே இயேசுவும் சிறு சட்ட மாற்றம் செய்தார்.
29.தேவன் தான் மனிதனை படைத்தார். இயேசு அல்ல!(மாற்கு 10:6)
இயேசு மூலம் தேவன் படைத்தார் என யோவான் சொல்வதை குறித்து யோவானில் ஆராய்வோம். அங்கே அவர் வார்த்தை என்பதுடன் இயேசுவை கன்பீஸாக்கிக்கொண்டுள்ளார்.
ஆனால் இங்கு இயேசு நேரடியாக சொன்னதாக உள்ளது. அதாவது தேவன் தான் படைத்தார் என்று.
30.அடுத்து தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என இயேசு விவாகரத்தை குறித்து சொல்கிறார்-மாற்கு 10:9
ஆதாம் ஏவாளை தேவன் இணைத்தது உண்மையே..
ஆனால் ஏனைய கணவன் மனைவியரை மனிதன் தான் இணைக்கிறான். மனிதன் இணைத்ததை மனிதன் பிரிப்பதில் தவறில்லையே.. இங்கு சிறு தவறை இயேசு விட்டுவிட்டதாக தென்படுகிறது.
இப்படி பிழை விடுபவர் கடவுளல்லவே.. அதுமட்டுமின்றி, அவர் இணைந்ததாக கூறாமல் தேவன் இணைந்ததாக கூறி வேறொருத்தரே தேவன் என தெளிவாக்கி விட்டார்.
31. ஒருவன் இயேசுவை நல்ல போதகரே என கூப்பிடுகிறார்.. உடனே இயேசு, தேவன் ஒருவரே நல்லவர்.. என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? என கேட்டு அவனுக்கு தவறை உணர்த்தி, இயேசு தேவனல்ல என உறுதிப்படுத்தினார்.
¹⁷ "பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்."
¹⁸ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
(மாற்கு 10:17-18)
32.செபதேயுவின் குமாரர்கள் இயேசுவுக்கு வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் அமர வேண்டினர். அதற்கு இயேசு, எவர்களுக்கு அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கு தவிர அதை என்னால் கொடுக்க இயலாது என கூறி, தீர்மானிப்பவர் அவரல்ல என தெளிவாக்கினார்.
³⁵ "அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்."
³⁶ அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
³⁷ "அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்."
³⁸ "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்."
³⁹ "அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்."
⁴⁰ "ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்."
(மாற்கு 10:35-40)
33.இயேசுவிடம் அற்புத சுகத்தை நாடி வந்தவர்கள்கூட இயேசுவை தேவன் என கூறவில்லை!
இயேசுவை தாவீதின் குமாரன் என்றே குருடர் அழைத்தார்.-மாற்கு 10:47,48
34.இயேசு கர்த்தரின் நாமத்தில் வந்தார்- மாற்கு 11:9-20
⁹ முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
¹⁰ கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
(மாற்கு 11:9-10)
தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் தான் வருவார்கள்.
தாவீது கர்த்தரின் நாமத்தில் போனார்-1 சாமுவேல் 17:45
காத் தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தில் பேசினார்-1 நாளாகமம் 21:19
35.இயேசுவுக்கு பசி ஏற்பட்டுவிட்டது.
அத்திமர சீசன் அல்லாத காலத்தில் பழம் இருக்கும் என எதிர்பார்த்து போய், அங்கே பழம் இல்லாததை கண்டார்.
¹² "மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று."
¹³ "அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை."
மாற்கு 11:12-13
இயேசுவுக்கு அத்திபழ சீசனே இங்கே மறந்துபோயுள்ளது. இவர் மனிதரேயன்றி இறைவனால்ல!
36.அத்திமரத்திடம் ஏமாந்து விட்ட பின், இயேசு அதை சபித்ததும், அது பட்டுப்போய்விட்டது.மாற்கு 11:14,20-21
¹⁴ அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.
…
²⁰ "மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்."
²¹ "பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்."
மாற்கு 11:14,20-21
இதெல்லாம் தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பதால் கிடைப்பதே. தேவனிடம் விசுவாசமாக இருந்தால் மலையை பார்த்து கடலில் விழஸசொன்னாலும் நிகழுமாம்
²² இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
²³ "எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
மாற்கு 11:22-23
37.பரலோகத்தில் இருக்கிற பிதாவே சகல பாவங்களையும் மன்னிப்பவர். இயேசு அல்ல!
²⁵ "நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்."
²⁶ "நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்."
(மாற்கு 11:25-26)
மனுஷகுமாரன் மன்னிக்கிற விசயம் குறிப்பு 13 இல் பார்க்கவும்.
38.கற்பனைகளில் பிரதானமானது, நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் என்பதாகும் என இயேசு கூறினார்
²⁹ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்."
மாற்கு 12:29
ஒரே தேவன் பிதா மட்டுமே-யோவான் 17:3
39.தேவன் ஒருவரே. அவரை தவிர வேறொரு தேவன் இல்லை என வேதபாரகன் சொன்னபோது, அவன் சொன்னதை இயேசு உறுதிப்படுத்தினார்
அதன்மூலம் இயேசு கடவுளல்ல என இயேசுவே காட்டினார்.
³² "அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை."
³³ "முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்."
³⁴ அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை.
(மாற்கு 12:32-34)
40.புரிதலில் குறைபாடுள்ள இயேசு.
தாவீது மெசியாவை ஆண்டவர் என சொல்லியிருப்பதால், அவர் எப்படி தாவீதின் குமாரனாக இருக்க முடியும் என கேட்கிறார்!
³⁵ "இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?"
³⁶ நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
³⁷ "தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்."
(மாற்கு 12:35-37)
முதலில் சங்கீதம் 110:1 தாவீது மெசியாவை பற்றி பாடியதல்ல.. தாவீதை பற்றி பாடகர் பாடியது ஆகும்.
ஒரு பேச்சுக்கு மெசியாவை குறித்து தாவீது பாடியிருந்தால், மெசியா தாவீதின் குமாரனில்லை என ஆகிவிடுவாரா?
ஆரோன் தன் தம்பியான மோசேயை ஆண்டவன் என சொல்லவில்லையா?? யாத்திராகமம் 32:22
அண்ணன் தன் தம்பியை ஆண்டவனே என கூறியிருக்க முடியுமாயின், தாவீதை விட பெரிய ராஜாவான மெசியாவை தாவீது அப்படி கூறுவதில் ஆச்சரியம் இல்லையே..
இதில் இயேசு சிறு புரிதல் குறைபாட்டை விட்டுள்ளார். இறைவனுக்கு இப்படி நிகழாது. (இது மத்தேயுவிலும் இடம்பெற்றுள்ளது.. நான் அதை மத்தேயு பற்றிய ஆக்கத்தில் குறிப்பிடவில்லை!)
41.ஆலயத்தின் ஒரு கல் இன்னொரு கல்மீது இல்லாதவாறு இடிபட்டு போகும் என இயேசு தவறுதலாக கூறிவிட்டார்.
இன்றுவரை மேற்குச்சுவர் இருந்துகொண்டே உள்ளது.
² "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்."
(மாற்கு 13:2)
42.உலகத்தை படைத்தது தேவன் தான். இயேசு அல்ல!
¹⁹ "ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்."
(மாற்கு 13:19)
43.இயேசு வரும் நாளை இயேசுவுக்கே தெரியாதாம்.. தேவ தூதர்களுக்கும் தெரியாதாம்! பிதாவுக்கு மட்டுமே தெரியுமாம்!
³² "அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்."
(மாற்கு 13:32)
தனக்கு தெரியாது என தெளிவாக சொல்லிவிட்ட மனிதரை கடவுள் என்பது அறியாமையின் உச்சம்!!
44.தேவனுடைய ராஜ்யத்திலும் இயேசு சாப்பிட்டு குடிப்பவராகவே உள்ளார்!
அதாவது மனிதனாகவே உள்ளார்.. கடவுளாக அல்ல!
²⁵ நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(மாற்கு 14:25)
45.கெத்செமனே தோட்டத்தில் தன்னை சிலுவை மரணமெனும் பாத்திரத்திலிருந்து காப்பாற்றுமாறு தேவனிடம் ஜெபம் செய்தார்!!
³² பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
³⁵ "சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:"
³⁶ "அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்."
³⁹ அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
(மாற்கு 14:32,35,36,39)
இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ, அவரே கடவுள்!! இயேசு அல்ல!
46.இயேசு பயந்து போய்விட்டார்..
³³ "பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்."
³⁴ "அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,"
(மாற்கு 14:33-34)
இப்படி பயப்படும் நபர் கடவுளா??
47.இயேசுவை சிக்கவைக்க ஆசாரியன் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நீ தானா என கேட்டானாம். அதற்கு இயேசு ஆம் என சொல்லி தேவனது வலது பக்கத்துல உட்காருவதையும், மேகத்தில் வருவதையும் காண்பீர்கள் என்றாராம்!
⁶¹ அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
⁶² "அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்."
(மாற்கு 14:61-62)
இயேசு தேவனுக்கு வலது பக்கத்துல உக்கார்ந்ததை யாருமே பார்க்கல..
இயேசு யாருக்கு வலது பக்கத்தில் உக்கார்வேன் என்றாரோ, அவர் தான் தேவன்
.. இவரல்ல!!
இதேபோல் இயேசுவுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உக்காருவதற்கும் சிலருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இயேசு சொல்லியிருக்கிறார்- மாற்கு 10:37-40
அடுத்து நானே அவர் என்று சொன்னது ஆதாரமா என்று பார்த்தால், குருடனும் இதே வார்த்தையை பாவித்திருக்கிறார்-யோவான் 9:9
நானே என்பது தெய்வீகமா பார்க்க
48.இயேசுவை சகலருமே கேலி செய்து அடித்து உதைத்தனராம். கடைசியில் என் தேவனே என் தேவனே என் என்னை கைவிட்டீர் என கூறினாராம்!
.
.
³⁴ "ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்."
(மாற்கு 15:34)
இவர் எப்படி கடவுளாவார்?
தேவன் இவரை கைவிட்டுவிட்டதாக கூறுகிறார்.. ஏன் கைவிட்டீர் என கேட்கிறார்... தேவனால் கைவிடப்பட்ட நபர் இறைவன??? சிந்திக்க வேண்டும்!!
(இது சங்கீதம் 22:1 இன் தீர்க்கதரிசனம் என கூறி தப்பிக்க பார்ப்பார்கள்.
உண்மையில் அது தாவீது கூறியதாகவே எழுதப்பட்டுள்ளது..
இயேசுவும் தேவனால் கைவிடப்பட்டதாக இடம்பெறுவதால் தான் , இயேசு சொன்னதாக எழுதப்பட்டுள்ளது)
49.விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்கள் என இயேசு சொன்னவற்றை விசுவாசிகளால் செய்ய முடியாமல் உள்ளது.
¹⁷ விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
¹⁸ "சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்."
(மாற்கு 16:17-18)
விசத்தை குடித்தவர் செத்து போகிறார்.. நலமான பாசை என கூறி ஜிப்ரிஷில் உலருகிறார்கள்.இதை உண்மைப் படுத்த நாடகங்களையும் அரங்கேற்றுகிறார்கள்..
கடைசியில் தீர்க்கதரிசனம் தான் பிழைத்துக் போனது.
50.இயேசு மறுரூபமாகி எல்லாம் முடிந்தபின்பு கூட, வானத்துக்கு அவராக ஏறிச்செல்லவில்லை!! அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார். இதிலும் வல்லமை குறைபாடு.
அடுத்து அவர் தேவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தாராம்!
சோ அந்த தேவன் இவரில்ல!! இவர் தேவனுமில்லை!!
¹⁹ "இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்."
(மாற்கு 16:19)
இதெல்லாம் இயேசுவை தகுதிக்கு மீறி போலியாக எழுதியவைகளே!
குறிப்பாக மாற்கு 16:8 உடன் பழைய பிரதிகள் முற்றுபெற்றுவிட்டது.
பிற்காலத்தில் மற்ற சுவிசேசக்கதைகளை வாசித்த நபர்கள் புதிதாக சொருகியது தான் இவை!!
ஆனாலும் இவற்றின் படி இயேசு ஒரு நல்ல மனிதராக இருந்து, தேவனால் தத்தெடுக்கப்பட்டு, அதிகாரம் கொடுக்கப்பட்டவராக இவை சித்தரிக்கிறதேயன்றி கடவுளாக அல்ல!!
இவை கூட பொய்களே
கருத்துகள்
கருத்துரையிடுக