பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1
பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1
பைபிளும் குர்ஆனும் பல விசயங்களை தம்மிடையே உடன்பட்டும் முரண்பட்டும் கூறுகின்றன. ஆகவே அவை பற்றி ஒரு தொகுப்பை செய்யலாம் என்று நினைக்கிறேன்.
இதில் இரண்டு விசயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்ப்போம்.
1.மனித படைப்பின் நோக்கம்
2.முதல் மனிதரின் வரலாறு
1.மனித படைப்பின் நோக்கம்
குர்ஆன்
*இறைவனுக்கு அடிபணிந்து வணங்குவதற்கு படைக்கப்பட்டனர்- 51:56
*செயல்களால் யார் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்- 67:2
*இறைவனை நம்பி நற்செயல் செய்தவர்கள் மறுமையில் சுவர்க்கத்தில் நுழைவார்கள்- 2:25,82 ; 3:15,134-136......79:40-41...85:11...
*இதேபோல் இறைவனை நம்பாமல் நிராகரித்து பெருமையடித்து, தீய செயல்களை செய்தவர்கள் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்கள். 2:39, 81, 175,....3:10....79:37-39
பைபிள்
மற்ற மிருகங்களை ஆண்டுகொள்ள படைத்தார்- ஆதியாகமம் 1:26,28
அதாவது, மிருக மேய்பாலனாக படைத்தார்
பிறகு படைத்துவிட்டு, தோட்டவேலைக்கு வைத்தாராம்- ஆதியாகமம் 2:15.
கடைசியில் இவர்களை பேசும் பாம்பு எனும் மிருகம் மேய்த்து விட்டது.(ஆதியாகமம் 3:1-15)
*இதிலிருந்து 1600 வருடங்கள் கழித்து, மனிதனை படைத்தற்காக மனஸ்தாபப்படுகிறார்- அதாவது இவனை படைத்திருக்கவே கூடாது என உணர்கிறார்- ஆதியாகமம் 6:5-7
தான் அறியாமல் படைத்துவிட்டு பிறகு கைசேதப்படுவதாக இது சித்தரிக்கிறது. தான் படைத்த நோக்கம் தனக்கே தெரியாதா என்ன?
2.முதல்மனித படைப்பின் வரலாறு
குர்ஆன்
*இறைவன் பூமியில் ஒரு தலைமுறையை படைக்க போவதாக தன் வானதூதர்களிடம் கூறினான்- 2:30
*அதற்கு அவர்கள் பூமியில் குழப்பம் செய்து , இரத்தம் சிந்துவோரையா படைக்க போகிறாய்? நாங்களோ உன்னை உன் புகழைக்கொண்டு துதித்து, தூய்மைப்படுத்துகிறோம் என்றனர்- அதற்கு இறைவனோ, "நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன் என்றான்- 2:30
*இறைவன் மனிதனை படைத்து , அவனுள் தன் ரூஹிலிருந்து (உயிரிலிருந்து) ஊதியவுடன் மனிதனுக்கு சிரம்பணியுங்கள் என்று இறைவன் தன் வானதூதர்களிடம் கூறினான்- 15:29, 38:72, 7:11, 2:34
அவர்கள் மத்தியிலுருந்த ஜின் இனத்தை சேர்ந்த இப்லீஸோ தனக்கும் கட்டளையிடப்பட்டிருந்தும் மறுத்து பெருமையடித்தான். அதனால் இழிவடைந்தான். (7:11-13, 15:30-35, 38:73-77, 2:34, 18:50, 20:116, 17:61)
*தன் இழிவுக்கு காரணமாக ஆதமை கருதிய இப்லீஸ் அவரையும் அவர் சந்ததியையும் வழிகெடுப்பேன் என கூறினான். அதற்கு இறைவனும் மறுமைவரை அவகாசம் வழங்கினான். ஆனால் இறைவனுடைய நல்லடியார்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை- (7:14-18, 15:34-43, 38:77-85)
*பிறகு இறைவன் ஆதமுக்கு சகல பெயர்களையும் கற்பித்து, தன் வானதூதர்களிடம் அவற்றின் பெயர்களை கூறுமாறு கூறினான். அவர்களோ, தமக்கு கற்றுத்தரப்பட்டதை தவிர வேறு எதுவும் தெரியாது என கூறினர்.
ஆதமிடம் அவற்றின் பெயர்களை வானவர்களுக்கு அறிவிக்குமாறு கூறினான். அவரும் அவ்வாறே செய்தார். இறைவன் வானதூதர்களிடம் "வானங்களிலும் பூமியிலும் மறைவானவற்றை நான் அறிவேன் என்றும் நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் மறைப்பவற்றையும் நான் அறிவேன் என்றும் உங்களுக்கு கூறவில்லையா?" என கேட்டான் -2:31-33
இதன்மூலம் வானவர்களுக்கு அறிவிக்கப்படாத , அவர்கள் அறியாத விடயங்கள் மனிதனை பற்றி உள்ளன என இறைவன் வானவர்களுக்கு உணர்த்தினான்.
*பிறகு ஆதமை சுவர்க்கத்தில் அவருடைய மனைவியோடு வசிக்க செய்தான். இப்லீஸை காட்டி , "இவன் உன் எதிரி" என்றும் "இவன் உங்கள் இருவரையும் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டாம்" என்றும் அறிவித்தான்- 20:117
*சுவர்க்கத்தில் அவர்களுக்கு ஒரே ஒரு மரத்தை மட்டும் இறைவன் தடை செய்தான். (7:19, 2:35)
*இறைவனால் ஆதமுக்கு எதிரி என யாரை இறைவன் அறிவித்தானோ, அவன் அவ்விருவருக்கும் நிலையான வாழ்வை பெற உதவும் மரமே இது என கூறினான். நீஙகள் இருவரும் இதை சாப்பிட்டால்,வானதூதர்களாக ஆகிவிடுவீர்கள் அல்லது நிரந்தரமாக இருந்துவிடுவீர்கள் என்பதற்கு தான் இறைவன் இதை தடுத்தான் என பொய்கூறி அவர்களை சாப்பிட வைத்தான்- 7:20-21, 20:120)
*அதனால், அவ்விருவரும் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்- 2:36, 7:24-25
*ஆதம் தன் இறைவனிடமிருந்து சில (பாவமன்னிப்பிற்காக) வார்த்தைகளை பெற்று கொண்டார். மன்னிப்பு கேட்டார்- 2:37, 7:23
*இறைவன் அவரை மன்னித்து , நேர்வழிகாட்டினான்- 2:37, 20:122
இதன் மூலம் ஆதமுக்கு இப்லீஸாகிய சைத்தான் எப்படிப்பட்ட எதிரி என்பதை உணர்த்தினான். பாவம் செய்தால் திருந்தி மன்னிப்புக் கேட்டால் இறைவன் மன்னிக்கிறான் என்பதையும் உணர்த்தினான்.
-இறைவன் மன்னித்தால், மீண்டும் ஏன் சுவர்க்கத்தில் விடப்படவில்லை?
இறைவன் அவர்களை பூமியில் தலைமுறையாக ஆக்குவதையே தீர்மானித்தான்- 2:30
சைத்தானுக்கு கட்டுப்பட்டு இறைவனுக்கு மாறு செய்தால் சுவர்க்கத்தை இழக்க நேரிடும் என்பதை அனுபவ ரீதியாக உணர்த்தினான்.
மறுமையில் நல்லவர்களுக்கு சுவர்க்கமும், கெட்டவர்களுக்கு நரகமும் கொடுக்கப்படும்.
*ஆதம் மன்னிக்கப்பட்டிருந்தால் மறுமையில் ஏன் பயப்பட வேண்டும்?
மன்னித்ததாக இறைவன் தெளிவாக சொல்லிவிட்டான்-2:37,20:122
மறுமையின் கொடூரத்தினால் தான் அவர் தன் மன்னிக்கப்பட்ட பாவத்தை நினைத்தும் அஞ்சுவார்.அவர் மட்டுமல்ல ஈசா நபியும் கூட அஞ்சுவார்- புகாரி 4712
கடைசியில் இறைவன் அவரை அழைத்து அவருடைய சந்ததிகளில் நரகவாசிகளை வேறுபடுத்த உத்தரவிடுவான்-புகாரி 4741,6529
ஆகவே பயப்படுவார் என்பதால் மன்னிக்கப்படவில்லை என்றாகாது. இறைவனோடு முதன் முதலாக போய் பேச எல்லோருமே பயப்படத்தான் செய்வார்கள்.
-மூஸாவுக்கும் ஆதமுக்குமான விவாதம்:
சுவர்க்கத்திலிருந்து ஆதமுடைய பிள்ளைகள் வெளியேற்றப்பட ஆதம் தான் காரணம் என்பதுபோல மூஸா நபி கூறினார்.
அதற்கு ஆதம் , நான் படைக்கப்பட முன்பே என்மீது விதிக்கப்பட்ட காரியத்திற்கு என்னை பழிக்கிறீரா என கேட்டார்! (புகாரி 6614)
அதாவது ஆதம் நபி தான் செய்த பாவத்திற்கு பொறுப்பாக இருந்தாலும், அவர் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அவர் கிடையாது. அது இறைவன் ஏற்கனவே தீர்மானித்தது. குர்ஆன் 2:30 இல் கூறப்பட்டது போல.
பைபிள்
*தேவன் ஆறாம் நாளில் மனிதனை மிருகங்களை ஆளுவதற்காக படைப்போம் என்று கூறி ஆறாம் நாளில் மனிதனை தன் சாயலில் படைத்து மிருகங்களை ஆளுவதற்காக ஆசிர்வதித்தார்- ஆதியாகமம் 1:26-28
*பிறகு தான் படைத்த மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, வேலை செய்ய வைத்தார்- ஆதியாகமம் 2:8,15
*அங்கே இரண்டு மேஜிக் மரங்களான ஜீவமரம், நன்மைதீமை அறியத்தக்க மரம் ஆகியவற்றை முளைப்பித்து, இரண்டாவது மரத்திலிருந்து சாப்பிடாதே. சாப்பிட்டால் அதே நாளில் செத்துப்போவாய் என்று எச்சரித்தார் - ஆதியாகமம் 2:9,17
ஆனால் முதலாவது மரத்திலிருந்து சாப்பிட்டால், மரணமற்ற வாழ்வு கிடைக்குமாம்- ஆதியாகமம் 3:22
அதேநேரம் இரண்டாம் மரத்திலிருந்து சாப்பிட்டால் நன்மைதீமை அறியலாம்- அவ்வாறே ஆதாம் சாப்பிட்ட பின் அறிந்தார்-ஆதியாகமம் 3:22
இதிலிருந்து ஆதாம் மரணிப்பவராக தான் தேவன் படைத்திருக்கிறார் என்றும் அவர் மரணமற்ற வாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவமரத்திலிருந்து சாப்பிட வேண்டும் -ஆதியாகமம் 3:22 மூலம் தெளிவாகிறது..
*மிருகங்கள் பறவைகளை மண்ணால் படைத்து அவற்றுக்கு ஆதாமை பெயரிட வைத்தார்-ஆதியாகமம் 2:19-20
*பின்பு மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என நினைத்த தேவன் , அவனை தூங்க வைத்து அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அந்த இடத்தை சதையால் அடைத்து பெண்ணொன்றை படைத்து அவனிடம் கொடுத்தார்- ஆதியாகமம் 2:18,22
*ஆதம் அவளுக்கு இஷ்ஷா (பெண்) என்று பெயரிட்டார்- ஆதியாகமம் 2:23
*அவர்கள் நிர்வாணிகளாக அம்மணமாக இருந்தும் வெட்கப்படாதவர்களாக இருந்தனர்- ஆதியாகமம் 2:25
*காட்டு மிருகங்களை விட தந்திரமான மிருகமாக பாம்பு எனும் சர்ப்பம் இருந்தது. அது எபிரேய பாசை தெரிந்த பேசும் பாம்பு. அது பெண்ணிடம் போய், தேவன் பழங்கள் சாப்பிட கூடாது என்று சொன்னாரா என கேட்டது- ஆதியாகமம் 3:1
*பெண்ணோ, இல்லை. ஒரே ஒரு மரத்தின் கனியை தான் சாப்பிட கூடாது என்று தேவன் சொன்னார். அதை சாப்பிட்டால் அதே நாளில் செத்துப்போவீர்கள் என்றும் சொன்னதாக பாம்பிடம் சொன்னாள்- ஆதியாகமம் 3:2-3
*அதற்கு பாம்பு, அப்படி சாகமாட்டீர்கள்.
அதை சாப்பிட்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும். நன்மை தீமை அறிந்து தேவர்களை (எலோஹீமைப்போல)போல ஆவீர்கள் என்றது. ஆதியாகமம் 3:4-5
(எலோஹீம் என்பது தேவதூதர்களையும குறிக்கும் - சங்கீதம் 8:5)
*அதை சாப்பிட்டவுடன், பாம்பு சொன்னது போல கண்கள் திறக்கப்பட்டன- ஆதி 3:7
*நன்மை தீமை அறிந்து நம்மில் ஒருவரை போல ஆகிவிட்டான் என்று தேவனே ஒப்புக்கொள்கிறார்- ஆதியாகமம் 3:22
அப்படியென்றால், பாம்பு பொய் சொல்லவில்லை என்று இது காட்டுகிறது.
கேள்வி:
அவர்கள் இருவருக்கும் பாம்புக்கும் என்ன பிரச்சினை?
அது ஏன் தேவனது கட்டளையை மீறவைக்க உண்மையை பேச வேண்டும்?
*இவர்கள் தாம் அம்மணமாக உள்ளோம் என அறிந்து, அத்தி இலைகளை தைத்து தம் உடலை மறைத்து, தேவனது சத்தம் கேட்டதும் ஒளிந்து கொண்டனர். தேவன் இவர்களிடம் எங்கே இருக்கிறாய் என்பதை கேட்டு அவர் கொடுத்த பதிலையும் வைத்து பழத்தை சாப்பிட்டதை அறிந்து கொண்டார்- ஆதியாகமம் 3:7-10
*உடனே ஆதாம் தன்னை காப்பாற்றிக்கொள்ள, நீர் கொடுத்த பெண் தான் பழத்தை என்னிடம் கொடுத்தார் என தன் மனைவியை தேவனிடம் மாட்டிவிட்டார் . மனைவியோ பாம்பு தான் என்னை வஞ்சித்தது என பாம்பை மாட்டிக்கொடுத்தாள்- ஆதியாகமம் 3:12-13
*இதனால் பாம்பின் மீது கோபப்பட்ட தேவன் பாம்பை சபித்து , வயிற்றால் ஊர்ந்து ,மண்ணை திண்பதை சாபமாக கொடுத்தார்- ஆதி 3:14
மேலும் பெண்ணுக்கும் பாம்புக்கும், பெண்ணின் வித்துக்கும் (மனிதர்களுக்கும்) பாம்பின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் என்றும் பெண்ணின் வித்து பாம்பின் தலையை நசுக்குவார் என்றும் பெண்ணின் வித்தின் காலை பாம்பு நசுக்கும் என்றும் சாபமாக கொடுத்தார்- ஆதியாகமம் 3:15
(இதை வெட்கமே இல்லாமல் இயேசுவை குறிப்பதாக கிறிஸ்தவர்கள் கூறுவர். வித்து என்பது ஒருமையிலேயே பயன்படுத்தப்படும் என்பதை கூட அறியாமல். மேலும் பெண் பெற்றெடுத்ததை அவளுடைய வித்து என அதே பைபிளேயே இருக்கிறது. உதாரணமாக இஸ்மவேலை குறித்து "உன் வித்து/சந்ததி" என்கிறார்-ஆதி16:10
ஈசாக்கின் சந்ததியை குறித்து ரெபேக்காவை நோக்கி "உன் வித்து" என ஒருமையில் தான் சொல்கிறார்கள். மூலமொழியில் ஒருமையில் தான் உள்ளது- ஆதி 24:60)
பாம்புக்கும் மனிதனுக்கும் பகைக்கு இதுதான் காரணமாம் .
ஆரம்பத்தில் பாம்பு மனிதனை நாசமாக்க ஏன் நினைக்கவேண்டும்? இதற்கு பதில் பைபிளில் இல்லை
*பெண் செய்ததற்காக அவர் கர்ப்பவதியாக இருக்கும் போது வேதனையை பெருகப்பண்ணுவேன் என்கிறார். கணவன் அவளை ஆண்டுகொள்வான் என்பதை சாபமாக கொடுக்கிறார்- ஆதி 3:16
மலட்டு பெண்களுக்கு இப்பிரச்சினை இல்லை. சிறிய ஓட்டை வழியாக பெரிய பொருள் வரும்போது வலி ஏற்படுவது சகஜம் தானே.
கோழி முட்டை போடும்போது கூட அதுவும் வலியில் கத்த தான் செய்கிறது. இதனால் பெண்கோழிக்கும் இந்த சாபமா? இது மடமை நம்பிக்கை நிறைந்த யூத போதகர் விளக்கமாக எழுதியது பிறகு வேதத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்!
*ஆதாம் செய்ததற்காக பூமியை சபித்து , முட்களை முளைப்பித்து பயிர்களை வியர்வை சிந்தி சாப்பிடுவதை சாபமாக கொடுத்தார்-ஆதியாகமம் 3:17-19
இதன்மூலம் விவசாயிகள் மட்டும் இந்த சாபத்தை பெருகிறார்கள் போலும்.
*பின்பு தேவன் ஆதாமுக்கும் அவருடைய மனைவிக்கும் தோல் ஆடைகளை அணிவித்தார் -ஆதியாகமம் 3:21
*மனிதன் நம்மில் ஒருவரை போல் நன்மைதீமை அறிகிறவனாக மாறிவிட்டதால், அவன் ஜீவ மரத்திலிருந்து சாப்பிட்டு என்றென்றும் உயிரோடிருக்க கூடாது என்பதற்காக அவனை மண்ணை பண்படுத்த ஏதேனிலிருந்து அனுப்பி, அந்த மரத்துக்கு போகும் வழியை காவல் காக்க கெரூபீன்களை வைத்தார்- ஆதியாகமம் 3:22-24
*ஆதாம் பழத்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் பாம்பு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
மற்றபடி வேறு ஏதும் இதிலிருந்து தெரிவதில்லை
தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக