ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) உடனான திருமணமும்,ஜாஉனிய பெண்ணும், ஒழுக்கமாக நடந்த நபிகளாரும்- கிறிஸ்தவ காமப்போதகர்களின் உலரல்களுக்கு மறுப்பு

 கிறிஸ்தவ காமுக போதகர்கள் தம்மை ஒழுக்கசீலர்களாக காண்பித்துக் கொண்டு முகம்மது நபியை கொச்சைப்படுத்துவதற்காக இவர்களின் காமம் சொட்டும் விளக்கங்களை நுழைவித்து கொச்சையாக பேசுவதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.

அதிலே வழமையாக ஆயிஷா (ர) அவர்களை மணந்ததற்கு அடுத்ததாக கீழ் குறிப்பிடும் செய்திகளை ஆசையோடு எடுத்து வைப்பார்கள்

1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்

2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ்

3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ் 

இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்:


1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்

புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில்

*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிய வைப்பதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.

*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 3212)

இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி ஸைத் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.

*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)

இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார் 

*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:

"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" (33:37)

அதாவது சொந்த மகனின் விவாகரத்து செய்த மனைவியரையோ அவனுடைய விதவையான மனைவியரையோ மகனின் தந்தை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை செய்வித்து காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.

*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420). 

எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?

இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.

(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.

இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)


இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!

!


நமது எதிர்வாதம்:

*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV

[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். 

https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV

(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :

ஆதி 16:5 IRVTam

[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக” என்றாள். 

https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam

(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)

*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24

2 சாமு 12:14-15, 24 IRVTam

[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது. 

[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார். 

https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam 

இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது 

இதற்காக தேவனோ தாவீதின் மனைவியை பக்கத்திலிருப்பவனுக்கு கொடுத்து இஸ்ரவேலர் பார்க்க பட்டப்பகலில் விபச்சாரம் செய்விப்பதாக சொல்கிறார் (2 சாமுவேல் 12:11-12)-ஃபிலிம் எடுக்கிறாரா?

இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)

இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா 

அத்தனைக்கும் ஆவியானவர் இறங்கிய பின் விபச்சாரம் செய்ததும், ஆவியையுடைய தேவனே அவரது மனைவியரை விபச்சாரம் செய்விப்பேன் என சொல்வதும் எதையோ சொல்கிறது. ஆவி தானே பிரச்சினை 


2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ் புகாரி 5255

அதற்கு முந்திய ஹதீஸிலே அந்த பெண் நபியின் மனைவி என தெளிவாக உள்ளது (புகாரி 5254). அந்த பெண்ணின் மனம் மாறி விருப்பமில்லாத போது கூறிய வார்த்தைகளே புகாரி 5255 இலே உள்ளது. அப்போது அவரை சமாதானப்படுத்துவதற்கு தொட போனார். அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவே நபிகளார் விட்டுவிட்டார்கள் அத்தோடு இரண்டு சணல் ஆடைகளை நன்கொடையாக கொடுத்தார்கள். இதை இமாம் புகாரி விவாகரத்து எனும் தலைப்பின் கீழ் தான் கொண்டு வருகிறார். அதாவது இது விவாகரத்து தான். குறிப்பாக அங்கே அந்த பெண்ணின் செவிலித்தாயும் இருந்தார்.

இந்த ஹதீஸ் நபிகளாரின் முன்மாதிரிக்கு தான் ஆதாரம்.
 அவர் அவளை பலவந்தப்படுத்தியிருந்தால் அதை விமர்சிப்பதற்கும் யாரும் இல்லை என்றிருக்க நபிகளார் மிகவும் ஒழுக்கமாக அப்பெண்ணிற்கு நன்கொடை கொடுத்து அனுப்பினார். ?

நம் எதிர்வாதம்

 பைபிள் பிரகாரம், கன்னியை பலவந்தப்படுத்தி புணர்ந்தாலே அவளை மனைவியாக்கிக் கொள்ளலாம் என காண்பிக்கப்படுகிறது (உபாகமம் 22:28-29). இது போன்று நபிகளார் நடக்கவில்லை 

ஆனால் பைபிளிலோ உரியாவின் மனைவியை இரண்டாவது தடவையாக புணர்ந்ததை கர்த்தர் சரி கண்டு அதில் பிறந்த குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24)  . விபச்சாரம் நிகழ்ந்ததே தாவீதின் மீது ஆவியானவர் இறங்கிய பின்பு தான்(1 சாமுவேல் 16:13, 2 சாமுவேல் 11:2-4)

3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ் -முஸ்லிம் 2718

*இஸ்லாம் பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறே கூறுகிறது (குர்ஆன் 24:30-31)

*எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும், அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் என்றே நபிகளார் கூறினார்கள் (முஸ்லிம் 4363 (2159 ஆங்கிலம் அரபு), அபூதாவூத் 2148)

*எதேச்சையாக பார்வை விழுவது தப்பு அல்ல. மாறாக அதை இரண்டாவதாகவும் பார்ப்பதே தப்பு என்கிறது இஸ்லாம் (அபூதாவூத் 2149)

*இப்படி பார்வை தற்செயலாக விழுந்து அதனால் ஈர்க்கப்பட்டால், அந்த ஈர்ப்புக்கு காரணம் ஹோமோன்கள் தான். அது அந்த நபரின் சக்திக்கு அப்பாற்பட்டது.
ஆனாலும் தன் சக்திக்குட்பட்டதான பேச்சையோ வேறு தவறான செயலையோ செய்தாலே விமர்சனத்திற்குரியதாக மாறும்.

ஆனால் நபிகளாரோ , தன் இச்சையை கட்டுப்படுத்திக்கொண்டு, தன் மனைவியிடம் சென்று அவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார்கள் .
இதுவே சிறந்த முன்மாதிரியுமாகும்.

(உடனே திருமணமாகாதவன் எங்கே போக வேண்டும் என்று தற்குறித்தனமாக கேட்டால், அவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணமானவனோ தன் உணர்வை மனைவியிடம் தீர்த்துக் கொள்ளலாம்)

நம் எதிர்வாதம் 

* பைபிளிலே கர்த்தரின் தீர்க்கதரிசி (அப்போஸ்தலர் 2:30) என்றும் இதயத்திற்கேற்ப செம்மையாக நடந்தவன் (அப்போஸ்தலர் 13:22) என கூறும் தாவீதோ அழகான பெண்ணை கண்டபோது கள்ளத்தனமாக விபச்சாரம் செய்தார்:

2 சாமுவேல் 11:2-4 IRVTam
[2] ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள். [3] அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். [4] அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள். 

(அத்தனைக்கும் தாவீதுக்குள் பரிசுத்த ஆவி இறங்கியிருந்தார்- 1 சாமுவேல் 16:13, சங்கீதம் 51:11.... )

*சிம்சோன் என்ற நியாயாதிபதி வேசிகளோடு உறவு வைத்தார் அவரிடமும் ஆவியானவர் பலமாக இறங்குவார். (நியா 14:6,19& 15:14) யெகோவா அப்போதும் அவனோடு கூட இருந்தார். ஆனால் தலைமுடியை வெட்டியவுடன் யெகோவா போய்ட்டார்:

நியாயாதிபதிகள் 16:1, 4, 19-20 IRVTam
[1] பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்
[4] அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான். 
[19] அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது. [20] அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். 

(இவனை புகழ்ந்து எபிரேயர் 11:32 பேசுகிறது)
இவர்மீது ஆவியானவர் இறங்கி ஏவத்தொடங்கியவுடன் பிலிஸ்திய பெண்ணின் மீது காதலில் விழுந்தார்.  அதுல பைபிள் வச்சுது ட்விஸ்டு. அது கர்த்தர் போட்ட ஸ்கெட்ச்

நியா 14:3-4 IRVTam
[3] அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான். [4] அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது யெகோவாவின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.



*உடனே இந்த தீர்க்கதரிசிகளும் நியாயாதிபதிகளும் கர்த்தர் கூட இருந்தாலும் ஆவியானவர் உள்ளே இருந்தாலும் விபச்சாரம் செய்வார்கள் தான். ஆனால் எங்களுக்கு அவர்கள் முன்மாதிரி இல்லை.. இயேசு தான் முன்மாதிரி என கதை விடுவார்கள் .

இவர்கள் பார்வையில் இயேசு கடவுள். கடவுள் மனிதனாக வந்தால் அவர் பாவம் செய்வாரா? 
அவருக்கு பாவம் செய்யும் இச்சை இருக்குமா?
 இப்படி இச்சையே இல்லாத நபர் இச்சையுள்ள மனிதர்களுக்கு எப்படி முன்மாதிரியாக இருப்பார்?

கர்த்தர் தேர்வு செய்த தீர்க்கதரிசியும் நியாயாதிபதியும் பரிசுத்த ஆவி அருளப்பட்டவர்களும் யெகோவா கூட இருந்தும் இப்படி தரங்கெட்ட செயலில் ஈடுபடுகிறார்களே. அப்படியானால் அவர்களை அறியாமல் தேர்வு செய்தாரா? அறிந்தே தேர்வு செய்தாரா? அப்போ முழு தவறும் கர்த்தர் மீது தானே விழுகிறது.

(ஆனால் முகம்மது நபியோ உடன்படிக்கை எடுக்கும்போது கூட எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை (புகாரி 7214,2713). அத்தோடு எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்து, ஹோமோன்கள் (hormones) காரணமாக ஈர்ப்பு ஏற்பட்டபோது கூட தன் சொந்த மனைவியிடமே சென்றார்.(முஸ்லிம் 2718). அனைவரும் தன் சொந்த மனைவியிடமே செல்லவேண்டும் என்றும் வழிகாட்டினார் (முஸ்லிம் 2719). தற்செயலாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும் அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் (முஸ்லிம் 4363) என்றெல்லாம் வழிகாட்டினார்.

ஆனால் இயேசுவோ மற்ற பெண்கள் தன் காலை முத்தமிட வைத்து தலைமுடியால் வருட அனுமதித்து தைலமும் பூச அனுமதித்தார்- லூக்கா 7:38
வழிகாட்ட முன்மாதிரியாக வந்தவர் மற்ற பெண்களை தொட அனுமதித்தால், தற்காலத்தில் பரிசுத்த ஆவி இறங்கிய போதகர்கள் இவ்வாறு செய்ய வழிகாட்டலாக தானே இருக்கும்.  ஆவியானவர் இறங்கியிருந்த தாவீதும் ஆவியானவர் ஏவத்தொடங்கிய சிம்சோனும் என்ன செய்தனர் என்பதை பைபிளே கூறிவிட்டது. பிறகு பரி.ஆவி இறங்கினால் இத்தகைய போதகர்கள் ஆபாசமாக பேசுவதில் நபிகளாரை கொச்சைப்படுத்துவதில் மாற்றான் பொண்டாட்டிகளை படுக்கைக்கு கூப்பிடுவதில் ஆச்சரியம் இல்லையே. இத்தகையோரும் ஒருநாள் சிக்குவர். அப்போது இருக்கு..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்