சுவர்க்கமும் மதுவும் ஹூருல் ஈனும் வேலைக்கார சிறுவர்களும்
சுவர்க்கத்தின் மது
சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)
சிறுவர்கள் வேலைக்காரர்கள்
உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை...
உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?..
இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும்
??
கண்ணழகிகள்
-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)
-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)
வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது.
மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும். ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை..
இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.
இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு

கருத்துகள்
கருத்துரையிடுக