தேற்றவாளர் முகம்மது நபியே ஆவார்!
தேற்றவாளர் முகம்மது நபியே ஆவார்
----------------------
புதிய ஏற்பாட்டில் யோவான் 14:16-17,26 ; 15:26, 16:6-7,12-14 ஆகிய இடங்களில் தேற்றவாளர் எனும் நபரின் வருகை பற்றி இயேசு முன்னறிவித்ததாக இடம்பெற்றுள்ளது.
அந்த நபர் பெந்தகோஸ்து ஆவி என கிறிஸ்தவர்கள் வாதிடுகிறார்கள். அவர்களின் வாதம் உண்மை இல்லை என்பதையும் , அந்நபர் முகம்மது நபியை தவிர வேறோரு நபர் அல்ல என்பதை அதை படித்தால் புரிய இயலும்!
இதை சில உப தலைப்புகளாக பிரித்து பார்ப்போம்!
1.புதிய ஏற்பாடு பற்றிய நம் நிலைப்பாடு
2.வேறொரு தேற்றவாளன் என ஏன் கூற வேண்டும்?
3.தேற்றவாளன் என்றென்றும் இருப்பாரா?
4.தேற்றவாளனை இயேசு ஏன் ஆவி என்று கூறுகிறார்?
5.தேற்றவாளனை உலகம் காணாது. அவர் உங்களுக்குள் இருக்கிறார் என்பது என்ன?
6.இயேசுவின் நாமத்தில் தேற்றவாளன் வருவார் என்பது என்ன?
7.தேற்றவாளனை இயேசு அனுப்புவாரா?
8.தேற்றவாளர் சுயமாக பேச மாட்டார். கேள்விப்பட்டதையே பேசுவார்.
9.அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார்.
இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்:
-----------------------------------------------------------------------------
1.புதிய ஏற்பாடு பற்றிய நம் நிலைப்பாடு:
----------------------------------------------------------------------------
புதிய ஏற்பாட்டில் ஒவ்வொருவரும் தமக்கு கேள்விப்பட்டதை எழுதியுள்ளார்கள். அதில் அக்காலத்தில் இயேசுவை பற்றி மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு அமைய பல விதமான புத்தகங்கள் எழுதப்பட்டன.
பிற்காலத்தில் நான்காம் நூற்றாண்டின் பின்னர் அரசியலில் மேலோங்கி இருந்த கிறிஸ்தவ பிரிவு தம் நம்பிக்கைக்கு பொருத்தமான புத்தகங்களை மட்டும் வேதமாக அறிவித்தது. அதுவே புதிய ஏற்பாடாக தற்போது உள்ளது.
இதில் உண்மை பொய் ஆகிய இரண்டும் கலந்தே உள்ளன.
இவை நமக்கு ஆதாரம் அல்ல என்றாலும், அதை நம்புவோருக்கு பயன்படுவதற்காக அதிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்.!
----------------------------------------------------------------------------
2.வேறொரு தேற்றவாளன் என ஏன் கூற வேண்டும்?
---------------------------------------------------------------------------
¹⁶ "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."
¹⁷ "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்."
…
²⁶ "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்."
(யோவான் 14:16,17, 26)
இயேசு தேவனை வேண்டுவாராம்.. அப்போது தேவன், என்றென்றைக்கும் அவர்களுடன் (விசுவாசிகளுடன்) இருக்கும் படியாக சத்திய ஆவியாகிய #வேறொரு தேற்றவாளனை அவர் தருவார் என்கிறார்.
தேற்றவாளர் (παράκλητος -paráklētos) யார் என கூறும்போது, அவர் வேறோரு தேற்றவாளர் என சொன்னதாக கூறப்படுகிறது.
அது பரிசுத்த ஆவியை குறிக்கும் எனின், ஒன்றுக்கு மேற்பட்ட பரிசுத்த ஆவிகள் உண்டா??
ஒரே ஒரு பரிசுத்த ஆவி மட்டுமே உள்ளபோது, வேறொரு தேற்றவாளர் என்பது பரிசுத்த ஆவியை குறிக்க முடியாது.
ஏன் வேறொரு தேற்றவாளர் என கூறப்படுகிறது??
காரணம், இயேசுவும் ஒரு தேற்றவாளரே (παράκλητος -paráklētos). இயேசுவும் கூட பரிந்து பேசுபவர் (தேற்றவாளர்) என 1 யோவான் 2:1 இல் கூறப்படுகிறது..
அந்தவகையில் வேறொரு தேற்றவாளர் அதாவது இயேசுவை போன்ற ஒரு மனிதர் வருவார் என்றே இயேசு கூறுகிறார்... வேறொரு பரிசுத்த ஆவியை அல்ல!!
----------------------------------------------------------------------------
3.தேற்றவாளன் என்றென்றும் இருப்பாரா?
----------------------------------------------------------------------------,
அந்த தேற்றவாளர் என்றென்றைக்கும் விசுவாசிகளுடன் இருப்பார் என இயேசு கூறுகிறார்!
"அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படி க்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்கு தந்தருளுவார்" -யோவான் 14:16
அதாவது இந்த தேற்றவாளரே என்றென்றைக்கும் இருப்பார்.. இயேசு அல்ல என இங்கே இயேசு கூறுகிறார்..
இது உவமையாக கூறப்படுவதாகும்! இது எப்படி எனில்,
இறந்துபோன மோசேக்கும், இறந்துபோன தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடுக்குமாறும் அவர்கள் யூதர்கள் மத்தியில் இன்றும் இருப்பது போன்றும் ஆப்ரகாம் சொன்னதாக கூறப்படுகிறது.
²⁷ "அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,"
²⁸ நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
²⁹ "ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்."
³⁰ "அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான்."
³¹ "அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். "
(லூக்கா 16:27-31)
மோசேயும் தீர்க்கதரிசிகளும் இறந்துபோன பின்பு, அவர்கள் யூதர்களுக்கு உண்டு என்றும், அவர்களுக்கு செவிகொடுக்குமாறும் ஆப்ரகாம் சொன்னதாக இயேசு சொல்கிறார்..
அவர்களின் போதனைகள் வேதங்கள் இருப்பதையே இது குறிக்கிறது.
அது போன்றே, தேற்றவாளர் வந்து மரணித்தாலும், அவர் போதனைகள் என்றென்றும் மக்கள் மத்தியில் எஞ்சியிருக்கும்.. அவரது பேச்சுக்கள் என்றும் இருக்கும் என்பதையே இது கூறப்படுகிறது..
வேறொரு பரிசுத்த ஆவியை அல்ல!!
-----------------------------------------------------------------------------
4.தேற்றவாளனை ஏன் ஆவி என்று கூறுகிறார்?
----------------------------------------------------------------------------
-அடுத்து அவரை சத்திய ஆவி என்றும் பரிசுத்த ஆவி என்றும் கூறப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே ஆவி என்ற கருத்தில் அல்ல! மாறாக தீர்க்கதரிசிகளை ஆவிகளாக கூறப்படும் வழக்கம் உள்ளது.
உதாரணமாக, இயேசுவை கூட பவுல் ஆவியானவர் என்கிறார்.
அதாவது "கர்த்தரே ஆவியானவர்" (2 கொரிந்தியர் 3:17)
இங்கே கர்த்தர் என் பவுல் கூறுவது இயேசுவை என முன்பின் வசனங்களை படித்தால் புரிந்து விடும்.
அதேபோன்று,
யோவான் கூட தீர்க்கதரிசிகளை ஆவிகள் என கூறுகிறார்:
“"பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்."”
— 1 John 4:1 (TBSI)
இது போன்று தான், சத்திய ஆவி என்றும் பரிசுத்த ஆவி என்றும் தேற்றவாளனை குறித்து கூறுகிறார்.
இயேசு எப்படி ஆவியும் தேற்றவாளனுமாக இருந்தாரோ, அதேபோல வேறொரு தேற்றவாளன் சத்திய ஆவியுடையவர் வருவார் என்றே இயேசு கூறுகிறார்!
இதற்கு இன்னொரு உதாரணம் தான் எலியாவுடைய விசயம்.
யோவானை எலியாவின் ஆவியுடைவனாக தேவதூதன் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.
“"பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்."”
— Luke லூக்கா 1:17 (TBSI)
எலியாவின் ஆவியுடையவனான இவரை தான் எலியா என இயேசு சொல்கிறார்:
¹¹ "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்."
…
¹⁴ "நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்." (மத்தேயு 11:11,14)
¹² "ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்."
¹³ அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
(மத்தேயு 17:12-13)
அதுபோன்றே தேற்றவாளனது ஆவி பரிசுத்தமானதாகவும் சத்தியமாகவும் இருக்கும்... அதனால் தான் தேற்றவாளனை பரிசுத்த ஆவி என்றும், சத்திய ஆவி என்றும் கூறுகிறார்.
--------------------------------------------------------------------------
5.தேற்றவாளனை உலகம் காணாது. அவர் உங்களுக்குள் இருக்கிறார் என்பது என்ன?
--------------------------------------------------------------------------
-அடுத்து உலகம் அவரை காணாது என்றும் விசுவாசிகளுக்கு மத்தியில் அவர் இருப்பதால் அவரை அறிவார்கள் என்று இயேசு கூறுகிறார்:
"உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரை பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்"
-யோவான் 14:17
சீடர்கள் மத்தியில் பரிசுத்த ஆவி இயேசு இதை கூறிய சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை!!
சிலுவை சம்பவத்தின் பின்னரே பரிசுத்த ஆவியை பெற்றதாக காண கிடைக்கிறது
²¹ "இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,"
²² அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
(யோவான் 20:21-22)
சீடர்கள் மத்தியிலும் அவர்கள் உள்ளத்திலும் இருந்த ஆவி என்பது இயேசு எப்படி அவர்கள் உள்ளத்தில் இருந்தாரோ அதே போன்று வேறொரு தேற்றவாளரை பற்றி இயேசு கூறியதால் அவர்கள் அறிந்து எதிர்பார்த்திருப்பார்கள்.. அந்நம்பிக்கை அவர்களுடனே இருக்கும் என்ற அர்த்தத்தில் ஆகும்.
உதாரணமாக இயேசுவுக்கு பிதா கொடுத்த கட்டளைகளை கேட்டு நடப்பவனுக்கு மத்தியில் அதை கொடுத்த பிதாவும் அதை கூறிய இயேசுவும் வாசம் பண்ணுவதாக கூறியது போன்றே இந்த தேற்றவாளர் விசயமும்!
²⁰ "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்."
…
²³ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்."
(யோவான் 14:20,23)
--------------------------------------------------------------------------
6.இயேசுவின் நாமத்தில் தேற்றவாளன் வருவார் என்பது என்ன?
-------------------------------------------------------------------------
-அடுத்து அந்த வேறோரு தேற்றவாளனான பரிசுத்த ஆவியாகிய சத்திய ஆவியாகிய அந்த நபர், இயேசுவின் நாமத்தில் வருவார் என இயேசு கூறுகிறார்:
"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனே உங்களுக்கு போதித்து , நான் உங்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்"
(யோவான் 14:26)
நாமம் என்பது அந்தஸ்த்தை குறிக்கவும் பயன்படுத்த பட்டிருப்பதை மத்தேயுவில் காண இயலும்.
⁴¹ தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
⁴² "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். "
(மத்தேயு 10:41-42)
தீர்க்கதரிசி எனும் நாமத்தின் நிமித்தம் என்பது தீர்க்கதரிசி எனும் அந்தஸ்த்தில் நிமித்தம் என்பதாகும்.
அதேபோல் தேற்றவாளனும் இயேசுவின் அந்தஸ்தில் வருவார்.. அதாவது இயேசுவை போல் ஓரு தீர்க்கதரிசியாக இருப்பார்..
அவரை பிதா அனுப்புவார்.
மேலும் அந்த தேற்றவாளன், அவர்களுக்கு போதனை செய்வார் என்றும், இயேசு சொன்னவை அனைத்தையும் ஞாபகப்படுத்துவார் என்றும் இயேசு சொல்கிறார்!!
இது போன்று இவர்கள் நம்பும் பெந்தகொஸ்ட் ஆவி போதனை செய்யவில்ல!! இயேசு சொன்னதை நினைப்பூட்டவும் இல்லை!!
மாறாக அதை செய்தவர் முகம்மது நபி மட்டுமே!!
------------------------------------------------------------------------
7.தேற்றவாளனை இயேசு அனுப்புவாரா?
------------------------------------------------------------------------
-அடுத்து அந்த தேற்றவாளரை இயேசு அனுப்புவார் என்றும் கூறப்படுகிறது , அவர் பிதாவிடமிருந்து வருவார் என கூறப்படுகிறது!
“"பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்."”
— John 15:26 (TBSI)
இயேசு அனுப்புவது எப்படி எனில், அவர் பிதாவிடம் வேண்டிக் கொள்வார். அதை யோவான் 14:16 இல் இயேசு கூறுகிறார்.. இயேசு வேண்டிக் கொண்டதால், பிதா அனுப்புவதால் அவ்வாறு கூறப்படுகிறது!
மேலும் தேற்றவாளருக்கு இறைச்செய்திகள் பிதாவிடமிருந்தே வருவதால் அவர் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவராவார்.
மேலும் அவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுப்பார்..
முகம்மது நபியைவிட இயேசுவை குறித்து சாட்சி கொடுத்த நபர் வேறு எவரும் இருக்க முடியாது!!
---------------------------------------------------------------------------
8.தேற்றவாளர் சுயமாக பேச மாட்டான். கேள்விப்பட்டதையே பேசுவார்!
-------------------------------------------------------------------------
-அடுத்து அந்த சத்திய ஆவியாகிய தேற்றவாளர் சுயமாக பேசமாட்டார்.
மாறாக இறைவனிடம் கேள்விப்பட்தையே பேசுவார்!:
¹² "இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்."
¹³ "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்."
(யோவான் 16:12-13)
இவ்வசனம் மிக தெளிவாக அந்த ஆவியானவர் ஒரு மனிதரே என தெளிவாக்குகிறது. ஏற்கனவே அதை உதாரணங்களுடன் கூறிவிட்டேன்.
மேலும் அவர் வரப்போகிற காரியங்களை அவர் கூறுவார் என கூறப்படுகிறது.
முகம்மது நபி மறுமை நெருங்கும்போது அதன் அடையாளங்களை முன்கூட்டியே கூறி சென்றுவிட்டார்கள்.
-------------------------------------------------------------------------
9.அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார்!
-------------------------------------------------------------------------
¹⁴ அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.(யோவான் 16:14)
அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார். இயேசுவை இயேசுவை பற்றிய விசயங்களை சரியாக அறிவிப்பதன் மூலமே மகிமைப்படுத்துவார்.
பிறப்பு முதல் சகலதும் அற்புதமான ஒரு நபராக இயேசு இருந்தார் என்பதை புதிய ஏற்பாட்டை விட மகிமைப்படுத்தி கூறியது முகம்மது நபி மட்டுமே!
புதிய ஏற்பாட்டில், கன்னி பெண் கர்ப்பமான கதை வெளி மக்களுக்கு தெரிந்ததாக கூறப்படவில்லை!! அப்படி இருந்தால் அதில் அற்புதமும் இல்லை!
அப்படி கூறப்பட்டிருப்பின், மக்கள் கூறிய அவதூறுகளிலிருந்து மரியாள் தூய்மைப்படுத்தப்பட்டார் என்றும் இல்லை!!! காரணம் அது செவிவழி செய்திகளாக கூறப்பட்டு வந்த கதைகளை வைத்து எழுதியதால் ஆகும்!!
ஆகவே இந்த தேற்றவாளர் ஒரு மனிதரே!! அவரே முகம்மது நபி.. அவர் கிறிஸ்தவர் கூறுவது போல பெந்தகோஸ்து ஆவி அல்ல!!
அவர் முகம்மது நபி அல்ல என கூறுபவர்கள் யார் அந்த தேற்றவாளன் என ஆதாரத்துடன் கூற வேண்டும்!
கருத்துகள்
கருத்துரையிடுக