இயேசு இறைதூதரான நபியேயன்றி வேறில்லை
இயேசு ஒரு நபியும் (தீர ககதரிசி) ரசூலுமே (அனுப்பபட்ட இறைதூதர்) அன்றி வேறு இல்லை
------------------------------------------------இஸ்லாம் இயேசு எனும் ஈசாவை பற்றி அவர் ஒரு இறைதூதர் என்றும் அவரது தாய் உண்மையாளர் என்றும் சொல்கிறது.
நாம் ஒவ்வொன்றாக காண்போம்:
1.(அ).இயேசு ஒரு தீர்க்கதரிசி (நபி) என இயேசுவின் சாட்சி:
56 இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
57 அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
(மத்தேயு 13:56-57)
இங்கே தன் இனத்தவர்களே தன்னை ஏற்றுக்கொள்ளாதபோது, ஒரு தீர்க்கதரிசி தன் ஊரிலும் வீட்டிலும் தான் கனவீனமடைகிறான் என கூறினார்.
இதே வசனம் மாற்கு 6:4 ,லூக்கா 4:24 இலும். இடம்பெற்றுள்ளது.
மேலும்,
"இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக, நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்."
(Luke 13: 33)
இங்கேயும் தன்னை தீர்க்கதரிசி என சாட்சி கொடுக்கிறார்.
(ஆ). கிலெயோப்பாவின் சாட்சி:
"அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள். நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்."
(லூக்கா 24: 19)
(இ). சமாரிய பெண்ணினது சாட்சி:
19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
…
44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
(யோவான் 4:19, 44)
(ஈ). குருடனின் சாட்சி:
"மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்."
(யோவான் 9: 17)
(உ). பொதுமக்களின் சாட்சி:
11 அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
…
46 அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
(மத்தேயு 21:11,46)
மேலும் குறிப்பாக பேதுரு , மோசே கூறிய தீர்க்கதரிசி இயேசு தான் என கூறினார். (அப்போஸ்தலர் 3:22-24)
குறிப்பு: மோசேயை போன்ற தீர்க்கதரிசி யார் என வேறொரு பதில் பார்ப்போம்!
------------------------
2.பைபிள் அடிப்படையில் தீர்க்கதரிசி என்பவர் யார்?
. பைபிள் அடிப்படையில் தீர்க்கதரிசி என்பவர் மனிதராக இருந்தும் நடக்கயிருப்பதை முன்கூட்டியே ஆவியில் காண்பவரை குறிக்கும்.
அது கனவில் காணுவதாகவும் இருக்கலாம், அல்லது விழிப்பில் காண்பதாகவும் இருக்கலாம்.
அதாவது ஆவிதூண்டி காட்சியில் காண்பவர்கள்.
புதிய ஏற்பாட்டில் நிறைய இதுபோன்ற தீர்க்கதரிசிகளை பற்றி கூறப்பட்டிருக்கின்றன.
(லூக்கா 2:36 - அன்னாவை தீர்க்கதரிசி என கூறப்பட்டுள்ளது)
ஆனால் மோசே , ஆரோன் ,தானியேல், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்றவர்கள அப்படியானவர்கள் அல்ல..
இவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து மக்களுக்கு கூறவேண்டிய போதனைகள் கொடுக்கப்பட்டவர்கள்.
அந்த வகையில் வந்தவரே இயேசு...
அதாவது மோசே, எசேக்கியேல், எரேமியா , ஏசாயா போன்றோரை போல மக்களுக்கு போதிக்கவேண்டிய போதனைகளை இறைவனால் விசேசமாக கொடுக்கப்பட்டவர்களின் வரிசையில் வந்தவர் ஆகும்.
(இவர்களை தான் முஸ்லிம்கள் நபி என்கிறார்கள். காட்சி காட்டப்படுபவர்களை அவ்வாறு கருதுவதில்லை)
-----------------------
3.(அ). இயேசு சுயமாக வரவில்லை. பிதாவே அனுப்பினார் என இயேசுவின் சாட்சி:
28 அப்பொழுது இயேசு தேவாலயத்தீல் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியதீருக்கிறீர்கள்.
(யோவான் 7:28)
"இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்துவந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்."
(யோவான் 8:42)
இங்கே இயேசு , நான் சுயமாக என் இஷ்டத்துக்கு வரவில்லை.. மாறாக பிதாவே அனுப்பினார் என வாக்குமூலம் கொடுக்கிறார்.
அவரது போதனைகள் வானத்திலிருந்து வந்தன.
(ஆ). எனக்கு சித்தமானதை தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்கு சித்தமானதை நான் தேடுகிறேன் , சுயமாக எதுவும் செய்வதில்லை என்று சாட்சி:
"நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்கு சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது."
(யோவான் 5:30)
இங்கே இயேசு, நான் சுயமாக எதுவும் செய்வதில்லை .. பிதாவுக்கு சித்தமானதையே செய்வதாக சொல்கிறார்.
(இ).இயேசுவின் உபதேசம் தேவனால் உண்டானது , இயேசு சுயமாய் பேசியது அல்ல என்று சாட்சி:
17.அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ நான் சுயமாய் பேசுகிறேனோ என்று அறிந்து கொள்வான்.
18.சுயமாய் பேசுகிறவன் தன் சுய மகிமையை தேடுகிறான், தன்னைஅனுப்பினவரின் மகிமையை தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
(யோவான் 7:17-18)
இங்கே இயேசு தன் போதனை தேவனால் உண்டானது என்கிறார்.
(ஈ). பிதா கற்பித்தபடியே நான் சொன்னேன் என்று சாட்சி:
28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
(யோவான் 8:28)
இங்கே அவர் சொன்னது பிதா போதித்தபடியே ஆகும் என்கிறார்.
(உ). பேசவேண்டியதையும் , உபதேசிக்கவேண்டியதையும் பிதாவே கட்டளையிட்டார் என்று சாட்சி:
"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்."
யோவான் 12: 49)
"அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்."
யோவான் 12: 50)
(ஊ).இயேசு செய்வதும் பிதா கட்டளையிட்டபடியே என்று சாட்சி:
"நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு , கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும் , உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்."
(யோவான் 14:31)
இங்கே இயேசு செய்வதெல்லாம் பிதாவின் கட்டளைப்படியே என சாட்சியம் வழங்கியுள்ளார்.
இவற்றின்படி, இயேசுவின் போதனைகள், பேச்சுக்கள், செய்கைகள் எல்லாமே தன் சுய விருப்பத்தின்படி அல்லாமல் பிதாவின் சித்தப்படி கட்டளைப்படியே செய்தார் என அவரே கூறிய சாட்சிகளை பார்த்தோம்!!
------------------------
4.இயேசு தன்னை தேவகுமாரன் என சொன்னதன் அர்த்தம் பற்றி இயேசுவின் சாட்சி:
32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
35."தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,"
36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
(யோவான் 10:32-36)
இதன்படி, உலகில் தேவர்கள் (கடவுள்கள்) என்று கூட மக்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக தேவனின் வசனங்களை பெற்றுக்கொண்டவர்கள் (இறைதூதர்கள்) தேவர்கள் (கடவுள்கள்) என கூறப்பட்டிருக்கிறது. இவைகள் தப்பு இல்லை
என்று இயேசு கூறிவிட்டு,
தேவ வசனத்தை பெற்றுக்கொண்ட தன்னை தேவகுமாரன் என சொல்லும் காரணத்தை கூறும்போது,
1. பிதாவினால் பரிசுத்தப்படுத்தப்பட்டிருக்கிறேன்
2.உலகத்தில் அனுப்பபட்டிருக்கிறேன்.
இந்த இரண்டிற்காக தான் தன்னை தேவ குமாரன் என சொன்னதாக இயேசு சொல்கிறார்.
இயேசு பிதாவால் அனுப்பபட்டவர் என முன்பே பார்த்தோம்!!
மற்றபடி அவர் தேவகுமாரன் என்பதற்கு வேறு தேவ தூசண அர்த்தம் இல்லை.
------------------------
5. தேவன் இயேசுவுக்கு மட்டுமே பிதாவா?:
"ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்."
(மத்தேயு 5: 48)
"பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்."
(மத்தேயு 23: 9)
17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் 20:17)
இவற்றின்படி, கடவுள் எல்லோருக்கும் பிதாவாகவும், இயேசுக்கும், எல்லோருக்கும் தேவனாகவும் இருக்கிறார் என இயேசு தெளிவுபடுத்துகிறார்.
------------------------
6.இயேசுவின் யதார்த்தமான போதனைகள்:
இயேசு தன்னை கடவுள் இல்லை என்பதை தன் வாயாலேயே உணர்த்தினார்! நேரடியாகவே சொன்னார்.
உதாரணமாக,..
(அ). உண்மையான கடவுள் ஒருவரே! அவரே அந்த பிதா என்று இயேசு தன் வாயாலேயே கூறுகிறார்:
3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3
ஒரே உண்மைக்கடவுளே உள்ளார். அவரே பிதா எனும்போது, இயேசு உண்மைக்கடவுள் அல்ல என்று தெளிவாகிறது. இது இயேசு நேரடியாக சொன்ன வார்த்தை!
பவுலடிகளார் கூட , தேவர்கள் என அநேகர் இருந்தாலும், நமக்கு பிதா எனும் ஒரே கடவுளே உள்ளார் என்கிறார். (1 கொரிந்தியர் 8:5-6)
பிதா ஒரே ஒரு உண்மை கடவுளாக இருக்க, இயேசு உண்மைக்கடவுளாக முடியாது
--------
(ஆ). இயேசு பிதாவிடமே (உண்மைக்கடவுளிடமே) ஜெபம் செய்தார், பிரார்த்தித்தார்.
39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
மத்தேயு 26:39
12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக்கா 6:12
இதன்மூலம் ஜெபம் செய்யப்படவேண்டியவர் பிதா ஒருவரே என வாழ்ந்து வழிகாட்டினார்.
-------
(இ). பிதாவிடமே ஜெபம் செய்ய வேண்டும் என ஜெபத்தை கற்பித்தார்:
1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
லூக்கா 11:1
2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக,
லூக்கா 11:2
இங்கே நாம் ஜெபிக்க வேண்டியது பிதாவாகிய உண்மை தேவனை நோக்கி தான் இருக்க வேண்டும் என இங்கே கற்பிக்கிறார். அவர் ஜெபித்து முடிந்த பின்பே , சீடர்களுக்கு கற்பித்தார்.
-----
(ஈ). உண்மையாக தொழுதுகொள்பவர்கள் பிதாவையே தொழுதுகொள்வார்கள் என்றும் பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும் என்றும் கூறினார் கூறினார்:
23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:23
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
யோவான் 4:24
இங்கே உண்மையான தொழுகையாளிகள் பிதாவை தான் தம் ஆவியோடு தொழுவார்கள் என்பதன்மூலம் பிதாவை தொழுதுகொள்வோரே உண்மையான தொழுகையாளிகள் என கூறுகிறார். அதன்மூலம் தான் தொழுகொள்ளப்பட கூடாது என்பதை எவ்வளவு தெளிவாக கூறுகிறார் என பாருங்கள்
------;
(உ). பிதாவின் சித்தப்படி செய்வோரே பரலோகத்தில் நுழைவார்கள் என்றும் இயேசுவை நோக்கி வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" என கூறுவோர் நுழையமாட்டார்கள் என்றார்:
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:22
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:23
இங்கே பிதாவின் சித்தப்படி செய்யாமல் இயேசுவை கர்த்தாவே! கர்த்தாவே என அழைப்போரும், இயேசுவின் பெயரால் அற்புதம் செய்வோரும் அதில் நுழைவதில்லை என்கிறார்.
பிதாவின் சித்தம் என்ன??
1. பிதாவாகிய அவரை ஆவியுடன் உண்மையாக தொழ வேண்டும். (யோவான் 4:23)
2. பிதாவாகிய அவரை தவிர வேறு யாரையும் நமஸ்கரிக்கவோ தொழவோ கூடாது!
3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
யாத்திராகமம் 20:3
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
யாத்திராகமம் 20:4
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:5
இங்கே பிதா, வானத்திலுள்ளவர்களைப்போலவோ பூமியிலுள்ளவர்களை போலவோ யாரையுமே வணங்க வேண்டாம் என்கிறார்.
குறிப்பாக அவரை தவிர வேறு தேவர்கள் உண்டாயிருக்கவே கூடாது என்கிறார்.
இயேசு பிதா அல்ல என எல்லோருக்குமே தெரியும். அப்படியிருக்கும்போது அவரை தேவனாக ஆக்கி அவரிடம் ஜெபம் செய்வது மிகப்பெரிய தவறாகும்.
அப்படி செய்தால் , அவர் இயேசுவை ஆண்டவராக மெசியாவாக ஏற்றவராக இருந்தாலும் அவர் பரலோகம் போக மாட்டார் என்றே இயேசு சொல்கிறார்.
அப்படியிருக்க அவரை கடவுளாக தொழுதுகொண்டு நரகம் போகவேண்டுமா?????
------
(ஊ). ஒரு யூதர் இயேசுவை நல்ல போதகர் என்கிறார். அப்போது இயேசு, "என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? தேவன் ஒருவரை தவிர நல்லவர் இல்லையே" என கூறி தனக்கு தெய்வீகமெல்லாம் இல்லை என தெளிவாகவே கூறிவிட்டார்:
17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
மாற்கு 10:17
18 அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
மாற்கு 10:18
19 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
மாற்கு 10:19
இப்படியிருக்க அவரை வணங்கினால் நிச்சயம் நரகம் போகவேண்டும்!! (அதையே இயேசு மத்தேயு 7:21ல் சொன்னார் மேலே பார்க்கவும்).
எனவே நரகத்தில் வீழ்ந்துவிடாதிருக்க இயேசுவை கடவுளாக வணங்குவதை விட்டு விலகியிருங்கள்!!
இதை தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்,
*நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எனவே அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி ஆகும் (என ஈசா கூறினார்.)"
(3:51)
"நிச்சயமாக அல்லாஹ் தான் மர்யமின் குமாரன் மஸீஹ் என கூறியோர் நிராகரித்துவிட்டனர். இன்னும் மஸீஹோ , " இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்றுகூறினார். "
(5:72)
--------------
இவற்றின்மூலம் இயேசு இறைவனின் தூதை எத்திவைக்க வந்த மனித தூதரே ஆவார் என மிக தெளிவாக புரிந்துவிடுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக