பழைய ஏற்பாட்டு தேவகுமாரன் vs புதிய ஏற்பாட்டு தேவகுமாரன்

பழைய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் புதிய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் உள்ள வித்தியாசம் 

--------------------------------------


பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள், பைபிள் எங்களை தேவனது பிள்ளை என சொல்கிறது. ஆனால் அல்லாஹ்வோ அடிமை என்கிறார். ஆகவே அல்லாஹ் உண்மையான தேவனாக இருக்க முடியாது (என்னென்ன கம்பிகட்டுற காரணங்களை சொல்றாங்க!) என்கிறார்கள்.


ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என்பது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அடிமைகளையே குறிக்கிறது என்பதை உணராமலும் , புதிய ஏற்பாட்டில் தேவகுமாரன் எனும் வரும் கருத்தை அங்கே சொருகி திரிக்கிறார்கள்.


அதை இங்கே பிரித்து அலசுவோம்.


***உப பிரிவுகள்***


1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள்.

2.பழைய ஏற்பாடு கூறும் தேவனது அடிமைகள்

3.தேவனது குமாரன் என பாவித்ததன் அர்த்தம்

4.புதிய ஏற்பாட்டு தேவகுமாரர்கள்

5.தங்களை தேவனது பிள்ளை என வாதிடுவோருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில்


இனி ஒவ்வொன்றாக பார்ப்போம் 


******************************************1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள்

******************************************



பழைய ஏற்பாட்டில் தேவனது இயல்புகளென அறியப்படுபவைகளில் சிறிய அளவேணும் சில நபர்களுக்கு இருக்குமாயின் அவர்களை தேவனது பையன் என சொல்லப்பட்டிருக்கும். அதேபோல தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், தேவனை அறிந்தவர்களையும் தேவ குமாரர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறது.



உதாரணமாக,


1.வல்லமை உடையவர்கள்


வல்லமையுடைய காமுகர்களையும் தேவனது குமாரர்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.



"“"தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்."”

  — ஆதியாகமம் 6:2 & 6:4



இங்கே வல்லமையிருந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் தேவகுமாரர்கள் என சொல்லப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி இவர்கள் யோக்கியர்கள் அல்ல.. 





2.தேவனை அறிந்தவர்கள் (தேவதூதர்கள், சாத்தான்)



“"ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்."”

  — யோபு 1:6 & 2:1



3.தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.



அ.இஸ்ரேல்-

இஸ்ரேல் என்னுடைய குமாரன் (யாத்திராகமம் 4:22, எரேமியா 31:9, ஓசியா 11:1)


“"கர்த்தர் அதைக்கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:"”

  — உபாகமம் 32:19 (TBSI)



ஆ. சொலமோன்


“"நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்."”

  — 2 சாமுவேல் 7:14 



இ.தாவீது


20.“என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன்.”

26 "அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்."

27 "நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்." (சங்கீதம் 89:20,26-27)


“"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, ;நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;"”

  — சங்கீதம் 2:7 



இப்படி தேவனால் தெரிவு செய்யப்பட்டவர்களை தேவனது குமாரன் என அழைக்கப்பட்டிருக்கின்றனர்.





4.தேவன் நல்லவர் என்பதால் நல்லவர்களை அவரது பிள்ளை என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கெட்டவர்கள் அவரது பிள்ளைகள் அல்ல என சொல்லப்பட்டிருக்கிறது-



“"அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்."”

  — உபாகமம் 32:5



ஆகவே இப்படிப்பட்ட நபர்களை தேவனது பையன் என சொல்லப்பட்டிருக்கின்றன.


******************************************

2.பழைய ஏற்பாடு கூறும் தேவனது அடிமைகள்

******************************************



தேவன் யாரையெல்லாம் தன் பிள்ளைகள் , குமாரன் உன்னை ஜெனிப்பித்தேன் என்று சொன்னாரோ அவர்களை தன் அடியார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.



அத்தோடு தேவனது அடியார்கள் என்றே அடிக்கடி பாவிக்கப்பட்டிருக்கின்றன.



1.ஏசாயா தீர்க்கதரிசியை என் ஊழியக்காரன் (ஏபேத்) என்கிறார் -ஏசாயா 20:3


2.என் தாசனாகிய (ஏபேத்) இஸ்ரேலே! என அழைக்கிறார்- (ஏசாயா 41:8,9,; 44:1-2,21; 48:20; 49:3)



3.மேசியா

 மேசியாவை குறித்து சொல்லப்பட்டதாக சுவிசேசங்கள் கூறும் வசனம்:


"இதோ , நான் ஆதரிக்கிற என் தாசன்"- (ஏசாயா 42:1)


இங்கே இவர்கள் நம்பிக்கைப் படியே மெசிய்வையும் தன் அடியார் என்றே சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.



4.தாவீதை தேவனுடைய தாசன் (ஏபேத்) என கூறப்பட்டுள்ளது.


தம்முடைய தாசனாகிய தாவீதை தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்- சங்கீதம் 78:70, மேலும் 89:3,20




5.இஸ்ரவேல் மக்களை தம் ஊழியக்காரர்கள் என்கிறார் (சங்கீதம் 105:25)


6.மோசேயை தாசன் என்கிறார்


தம்முடைய தாசனாகிய மோசேயையும், தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்- (சங்கீதம் 105:26)




இப்படி தேவனது அடிமைகளாக தேவன் தான் நேசித்தவர்களை சொல்கிறார்.



இதே அர்த்தத்திலேயே குமாரன் என்பதும் பழைய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளது.


******************************************

3.தேவனது குமாரன் என பாவித்ததன் அர்த்தம்

******************************************



 அக்கால மரபுப்படி, பிள்ளை என்பவன் தகப்பனின் சொத்து என்பதாலும் அடிமை என்பவனும் எஜமானது சொத்து என்பதாலும் நல்லவர்கள் தேவனது சொத்துக்கள் எனும் கருத்துப்படவே பிள்ளை என்றும் அடிமை என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.


இதனால் தான் தேவனை விட்டு விலகும்போது, அவர்களை விற்பனை செய்து போட்டார் என கூறப்பட்டிருக்கிறது


“"அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்."”

  — நியாயாதிபதிகள்          2:14 (TBSI)


“"கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்."”

  — நியாயாதிபதிகள்          3:8 (TBSI)


“ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.”

  — நியாயாதிபதிகள்          4:2 (TBSI)

“"அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்."”

  — நியாயாதிபதிகள்          10:7 (TBSI)


இதன்மூலம்  சொத்து எனும் கருத்துப்படவே இவர்கள் குமாரர்கள் என்று அழைக்கப்படுகிறது . அதனால் தான் தேவன் தன் சொத்தை விற்றுப் போட்டதாக சித்தரிக்கிறது.


நம் காலத்தில்  தன் பிள்ளையை விற்றுப்போடுவாங்களா?? பிள்ளைகள் தகப்பனின் சொத்தை பெறுபவர்கள். அவர்களை தகப்பன் விற்க இயலாது.  


பொதுவாக எல்லோருமே தேவனது சொத்துக்களாக இருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனும் அர்த்தத்தில் நல்லவர்களுக்கும் சிலரது சந்ததிகளுக்கும் இவ்வார்த்தை பிரயோகம் பாவிக்கப்பட்டுள்ளது.





இதனால் தான் யாக்கோபு என் பங்கு என்றும் என் சுதந்தரம் (வாரிசுச்சொத்து) சொல்லப்பட்டுள்ளன.



“என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று; அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.”

  — எரேமியா 12:8 (TBSI)


“"அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார். "”

  — ஏசாயா 19:25 



இதே போன்று தேவனையும் சுதந்தரம் என்றும், பங்கு என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் தேவன் மட்டுமே எனக்கு இருக்கிறார் என்ற தேவன் மீது வைக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும்.



இவ்வாறே பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என்பது பாவிக்கப்பட்டுள்ளது.



******************************************

4.புதிய ஏற்பாட்டு தேவகுமாரர்கள்.

******************************************





புதிய ஏற்பாட்டில் முதல் மூன்று சுவிசேசங்களில் இயேசு சொன்னதாக வரும் தேவ புத்திரர் , குமாரர் என்பன பழைய ஏற்பாட்டோடு பொருந்திப்போவதாக உள்ளன.


உதாரணமாக, 

“சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.”

  — மத்தேயு 5:9



ஆனால் இதை கடந்து நாம் பார்த்தோமானால், பவுல் உட்பட மற்றவர்கள் இதற்கு கொடுக்கும் அர்த்தம் வேறுபட்டதாகவே இருக்கின்றது.



அவர்கள் தேவனது சுதந்தரவாளி எனும் அர்த்தத்திலேயே தேவகுமாரன் என்பதை புரிந்து வைத்துள்ளனர். அதாவது தேவனது சொத்து என்பதல்ல.. தேவனது சொத்தையே வாரிசாக பெறும் பிள்ளைகள் என்பதாகும்.




அதாவது தகப்பனது சொத்துக்கு எப்படி குமாரன் தகப்பனை தொடர்ந்து வாரிசாவானோ, அதே போன்றே தேவனை தொடர்ந்து தேவனது சொத்துக்களை இவர்கள் பெற்று தேவனுக்கு வாரிசாக ஆவார்கள் என்பதே இவர்களின் நம்பிக்கை ஆகும்.





அதாவது இயேசு என்பவர் தேவனது மடியில் இருந்த பையன் , அதாவது சொந்த பையன் என்பதே புதிய ஏற்பாடு கூறுவதாகும்.


அதையே யோவான் 1:18,3:16 ஆகியன கூறுகின்றன.



கிறிஸ்தவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதால், தேவன் அவர்களை பிள்ளைகளாக தத்தெடுத்துக் கொண்டார் . இதன்மூலம் இயேசு மூலமாக இவர்களும் தேவனுக்கு சுதந்தரவாளிகள் என்கின்றனர்.


இதை சற்று பிரித்து பார்ப்போம்.




1.இயேசுவை குமாரன் என்பதால், அவரை சகலதுக்கும் சுதந்தரவாளியாக வைத்தார் என நம்புகின்றனர்.


“"இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."”

  — எபிரேயர் 1:2 (TBSI).




2.இயேசுவை ஏற்றதால் இவர்களும் தேவனுக்கு குமாரர்களாக தத்தெடுக்கப்பட்டனராம்.



“"தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி (தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாகும்படி) முன்குறித்திருக்கிறார்."”

  — எபேசியர் 1:6 (TBSI)



“"அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் (தத்துப் பிள்ளையின்) ஆவியைப் பெற்றீர்கள்."”

  — ரோமர் 8:15 (TBSI)




3.இப்படி தத்தெடுக்கப்பட்டதால், இவர்கள் தேவனுக்கே சுதந்தரர்களாக ஆவார்களாம். (அதாவது தேவனது அத்தனை சொத்தையும் பெற்றுக்கொள்வார்களாம்)



⁶ "மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்."

⁷ "ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்."

கலாத்தியர் 4:6-7





எப்படி கிரேக்க ரோம மதங்களில் தேவனது பிள்ளை எப்படி தேவனுக்கு வாரிசாக இருப்பானோ, அதே போன்றே இவர்களும் இயேசு எனும் தேவனது சொந்த பையனை ஏற்றதால், தேவனது தத்துப் பிள்ளைகளாக மாறி, இயேசுவோடு தேவனுக்கு வாரிசாக ஆவோம் என்று கருதுகிறார்கள்.




யூதர்களது கால மொழிமரபை அறியாத பவுலும் (இவரை பரிசேயன் என போலியாக புழுகப்பட்டிருக்கிறது), ஏனைய எழுத்தாளர்களும் அவர்கள் கால மொழிமரபின் படி , நேரடி அர்த்தம் கொடுத்துவிட்டனர்.



இப்போதுள்ள பாமரர்களோ , அவர்களது முன்னோர் யூதமரபறியாமல் எழுதிய நூல்களை வேதமாக நம்பி, அல்லாஹ் எங்களை பையன் என சொல்லவில்லை என்கிறார்கள்.


******************************************

5.தங்களை தேவனது பிள்ளை என வாதிடுவோருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில்

******************************************




பழைய ஏற்பாட்டில் தேவனது சொத்து எனும் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டதை, தேவனது சொத்தை பெற போவதாக நம்பி வாதிடுவோருக்கு இறைவன் கொடுத்த பதில்:



"யூதரும் கிறிஸ்தவரும் நாம் அல்லாஹ்வின் பிள்ளைகளும் அவனது நேசத்திற்குரியவர்களுமாவோம் என்கிறார்கள். அப்படியாயின், "உங்கள் பாவங்களிற்காக ஏன் உங்களை தண்டிக்கிறான்" என்று கேட்பீராக! மாறாக நீங்கள் அவன் படைத்த மனிதர்களில் உள்ளவர்கள் தான். அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை தண்டிக்கிறான்........" -5:18



(அல்லாஹ் எங்கள் கடவுளல்ல என கூறிவிடுவார்கள். அல்லாஹ் என்றாலே மெய்யான கடவுளை தான் அரபியில் குறிக்கும். இதனால் தான் அரேபிய மொழியாக்கத்தில் மெய் தேவனை குறிக்க பாவிக்கும் இடத்தில் மட்டும் அல்லாஹ் என பாவிக்கப்பட்டிருப்பதை அவர்களே காணலாம்!)



இவ்வாதத்தை அக்காலத்தில் நேர்வழியில் இருந்தவர்களோ, அல்லது இவர்களது மனசாட்சியோ அக்காலத்திலேயே கேட்டுள்ளனர்.


இதனால் , அதற்கு பதில் எழுதுவதாக எழுதியுள்ளனர். சைத்தான் அப்போதும் அவர்களை விடவில்லை!


“எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.”

  — எபிரேயர்         12:8 (TBSI)


ஆனால் தகப்பனானவன் தன் மகனை விற்று தண்டிப்பானா? சொத்தை தான் விற்பான்!


எந்த தகப்பனாவது தன் குழந்தைகளை மோதியடித்து கொல்லவைத்து மகளை எதிரியை தூண்டி கற்பழிக்க வைப்பானா? (ஏசாயா 13:16)


எந்த தகப்பனும் தன் குழந்தையை சாகடிக்க மாட்டான். 


தன் பிள்ளையை கண்டிப்பான் தகப்பன். ஆனால் கேவலமாக தண்டிக்க மாட்டான்.


ஆகவே தேவனது சொத்து எனும் அர்த்தம்பட தேவனால் தெரிந்துகொள்ளும் பட்டவர்கள் என்பதையே பழைய ஏற்பாடு குமாரன் என்பதை கருதுகிறது.


ஆனால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களோ, அதை ரோம் கிரேக்க மதங்களது மரபில் அதை விசுவாசிக்கிறார்கள்.


அது மிகவும் தவறானதாகும்!




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்