அடிமைப்பெண்களும் முத்ஆ திருமணமும்
உள்ளடக்கம்
1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்
2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?
3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்
4.முத்ஆ திருமணம்
1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்
*இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது (குர்ஆன் 17:32).
*விபச்சாரத்தில் விழுந்துவிடாதிருக்க,,
-முதலில் ஆண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் (குர்ஆன் 24:30), பின் பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் தம் அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்த கூடாது என்றும் மறைத்து வைத்துள்ள அலங்காரம் வெளிப்படுவதற்காக கால்களை தட்டி நடக்க வேண்டாம் என்றும் (குர்ஆன் 24:31), ஒரு பெண் அந்நிய ஆணுடன் பேசும்போது குளைந்து குளைந்து கவர்ச்சியாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் , மனதில் நோயுள்ளவன் ஆசைப்படுவான் என்றும் (குர்ஆன் 33:32), ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆண் அல்லது கணவன் அல்லாதவர்) தனித்திருக்க கூடாது (புகாரி 5233,3006), என்றும் தனியாக உள்ள பெண்ணிடம் கணவனின் சகோதரன் செல்வதை கூட மரணத்துக்கு ஒப்பானதாக பார்க்கிறது (புகாரி 5232), அத்துடன் அந்நியச் பெண்ணை (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட உறவினரான பெண் அல்லாதோர் அல்லது மனைவி,தன் அடிமைப்பெண் அல்லாதோர்) தொடுவதை விட இரும்பு ஊசியால் தலை துளைக்கப்படுவது சிறந்தது என எச்சரித்துள்ளது (அல்ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா 226)
*அத்தோடு விபச்சாரம் செய்துவிட்டால், நிரூபிக்கப்படும் போது திருமணமானவராயின் கல்லெறிவதன் மூலம் மரண தண்டனையும், திருமணமாகாதவராயின் நூறு கசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும் தண்டனையாக கிடைக்கும் (புகாரி 6633,6634).
இவ்வாறு இஸ்லாம் விபச்சாரத்திலிருந்து தற்காத்துக்கொள்ள சகல வழிமுறைகளையும் வழங்கியுள்ளது
2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?
இஸ்லாம் ஆண்களுக்கு இரண்டுவிதமான பெண்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட அனுமதிக்கிறது. 1.தன் சொந்த மனைவியர் 2.தன்னுடைய வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட அடிமைப்பெண்கள் (குர்ஆன் 23:5-7, 70:29-31). இதுவல்லாதவை விபச்சாரமாக கருதப்படும்.
3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்
தன்னுடைய அடிமைப்பெண் அல்லாத அடிமைப்பெண்ணோடு குடும்பம் நடாத்த வேண்டுமானால் அவர்களை மஹர் கொடுத்து திருமணம் முடித்தே வாழ முடியும் (குர்ஆன் 4:25),
அவள் தன் மனைவியின் அடிமைப்பெண் என்பதால் திருமணம் செய்யாமல் உறவு கொண்டால் அதுவும் விபச்சாரமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் (புகாரி 2290) ..
அத்தோடு தன் அடிமைப் பெண்ணை வேறொரு அடிமைக்கு திருமணம் செய்துகொடுத்தால், எஜமானுக்கு அவளது மறைவுறுப்புகளை பார்ப்பதை இஸ்லாம் தடுக்கிறது. அதாவது அவளோடு உடலுறவு கொள்ள முடியாது (அபூதாவூத் 496,, மிஷ்காத்துல் மஸாபீஹ் 3111). அவளை விவாகரத்து செய்யும் முழு உரிமையும் அவளது அந்த கணவனையே சாரும்.(முஅத்தா பாடம் 29 ஹதீஸ் 51) அதாவது எஜமானுக்கு அதை தீர்மானிக்க முடியாது.
(பைபிளிலும் அடிமையானவனுக்கு எஜமான் திருமணம் செய்து வைத்திருந்தால், அவன் விடுதலைபெற்று போவதானால் தனியாக தான் போகவேண்டும். அவனது மனைவியும் பிள்ளைகளும் எஜமானையே சாரும் (யாத்திராகமம் 21:4).
அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது.
இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....
அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).
இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)
ஆனாலும்
* தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)
ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.
பைபிளும் வைப்பாட்டிகளும்
*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.
*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))
*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)
இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.
இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?
இஸ்லாம் அடிமைகளை நடாத்தும்விதம்
4.முத்ஆ விசயம்
முத்ஆ என்பது அரபுகள் தூர பயணங்களின் போது கடைபிடித்துவந்த திருமண முறையாகும்.
சொந்த ஊரல்லாத வேறு ஊரில் தற்காலிகமாக இருக்கும் காலத்தில் தற்காலிகமாக அங்கே குறித்த பெண்ணின் சம்மதத்தோடு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்து கொள்வர். பிறகு தன் தேவை முடிந்து ஊரிலிருந்து வெளியேறும்போது மனைவியிடமிருந்தும் பிரிந்து விடுவர்..
இதை நபிகளார் கைபர் யுத்தத்தின்போது தடை செய்தார்கள் (புகாரி 5115,5523,6961 முஸ்லிம் 2738,2739,2740-2741,3920).
பிறகு அவ்தாஸ் போரின்போது மூன்று நாட்களுக்கு மட்டும் இத்திருமணத்தை அனுமதித்தார்கள் பிறகு அதை தடை செய்தார்கள்.(முஸ்லிம் 2727) மக்கா வெற்றியின் போது மக்காவிற்கு சென்றவர்களுக்கு சில நாட்களுக்கு அனுமதித்தார்கள். பிறகு தடை செய்துவிட்டார்கள் (முஸ்லிம் 2728,2729),
குறிப்பாக அப்போது இத்திருமணத்தை மறுமைவரைக்கும் அல்லாஹ் தடைசெய்து விட்டான் என அறிவித்தார்கள் (முஸ்லிம் 2730 &2733-2735,2737)
சில நபித்தோழர்களுக்கு இறுதியாக தடைசெய்த தகவல் கிடைக்காததால், அது கூடும் என கருதி செய்துவந்தனர் (முஸ்லிம் 2724,2725.)
அதுவும் நிர்ப்பந்தமான நிலையில் தான் என்றே கருதினர் (புகாரி 5116, முஸ்லிம் 2736 )
அதை உமர் (ர) தன் ஆட்சியில் மீண்டும் தடைசெய்தார்கள் (முஸ்லிம் 2725,2726 ).
அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆட்சிக்காலத்தில், அவ்வாறு செய்தால் விபச்சாரமாக கருதப்பட்டு கல்லெறி தண்டனை வழங்குவேன் என அப்துல்லாஹ் கூறினார் (முஸ்லிம் 2736).
இதை நன்கு அறிந்த அபூஅம்ரா எனும் நபித்தோழர் இதுபற்றி கூறும்போது ,இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவர்களுக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம்,பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டது போன்று தான் முத்ஆவும் அனுமதிக்கப்பட்டது என்றும், பிறகு அல்லாஹ் இம்மார்க்கத்தை உறுதியாக்கியதும் தடைவிதித்து விட்டான் என்றார்கள் (முஸ்லிம் 2736).
அத்துடன் முத்ஆ சம்பந்தமான அறிவிப்பை பதித்துவிட்டு இமாம் புகாரி, இந்த திருமணத்திற்கு அனுமதி மாற்றப்பட்டு விட்டது என அலீ (ர) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் என புகாரி 5119 இலே இறுதியில் கூறியுள்ளார்கள்.
ஆகவே இது விபச்சாரம் செய்யாமலிருக்க குடும்பத்தவர்களை விட்டும் தூரமாக உள்ளவர்களுக்கு நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஒரு மாற்று வழியாக தற்காலிக திருமணம் நடைமுறையில் இருந்தது. அதை நபிகளார் இறுதியில் தடைசெய்துவிட்டார்கள்
பைபிள் வைப்பாட்டி வைத்தால் கொள்வதையே தடைசெய்யாதபோது, அதைவிபச்சாரமாக கருதாத போது , தற்காலிகமாக திருமணம் செய்ததை விமர்சிக்க தகுதி உண்டா?
அத்தோடு கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் கூட , தகப்பனுக்கு இஷ்டமில்லாதபோது கன்னியின் மஹரை கொடுத்துவிட்டு போக வேண்டும் என யாத்திராகமம் 22:16-17 சொல்கிறது. விபச்சாரம் செய்த கன்னிப் பெண்ணுக்கு தண்டனையும் கிடையாது. மாறாக உடலுறவுக்கான கூலியை பெற்றுக்கொள்ள சொல்லி , இந்தக்கால விலைமாதுகளின் நடத்தையான போதனையை வழங்கியுள்ளது பைபிள்.
ஆனால் இஸ்லாமோ விபச்சாரம் செய்தால் திருமணமாகாதவராக இருந்தால் நூறுகசையடிகளும் (குர்ஆன் 24:2) திருமணமானவராயின் கல்லெறி தண்டனையும் வழங்குகிறது (புகாரி 6633-6634). இதிலே எது ஒழுக்கமானது? குறைசொல்ல தகுதியுண்டா?
கருத்துகள்
கருத்துரையிடுக