இஸ்லாமும் பெண்களும் பைபிளும்

  1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843). ஆனால் பைபிள் பெண்ணோ விற்பனை பொருளாக பார்க்கிறது. அதாவது தகப்பனுக்கு தன் மகளை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு (யாத்திராகமம் 21:7-10)

2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631))

ஆனால் பைபிளோ பெண் குழந்தையை பெற்றெடுத்தால் ஆண்குழந்தையை பெறுவதைவிட இருமடங்கு தீட்டு ஏற்படும் (லேவியராகமம் 12:1-5)


3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946)

ஆனால் பைபிளில் தகப்பனுக்கு அவளை விற்றுப்போடும் உரிமையே உண்டு(யாத்திராகமம் 21:7-10)

அத்தோடு அவளை கற்பழித்தவனுக்கோ காலம் முழுதுமே மனைவியாக இருக்க வேண்டும் என அவளை பாழ் கிணற்றிலேயே தள்ளுகிறது (உபாகமம் 22:28-29)


4.விதவை பெண்ணை அவளது மரணித்த கணவனின் குடும்ப சொத்து போல கருதி தம் இஷ்டப்படி நடத்திய காலத்தில், அவளை நிர்ப்பந்தித்து அடைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று குர்ஆன் கண்டித்தது-(குர்ஆன் 4:19, புகாரி 6948)

பைபிளோ விதவை பெண்ணை அவளது கணவனின் சகோதரன் தான் முடிக்க வேண்டும் என நிர்ப்பந்தமான சட்டத்தை போடுகிறது (உபாகமம் 25:5-6). இங்கே அவளும் மனுசி தானே அவளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டுதானே என பைபிள் பார்க்கவில்லை.


5.தான் பராமரிக்கும் அநாதைப்பெண்களின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவர்களை திருமணம் முடிப்பதையும், அவர்களுக்கு குறைவான மணக்கொடையை கொடுத்து முடிப்பதையும் இஸ்லாம் தடுத்தது-புகாரி 2763.

பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. அவளை கற்பழித்ததற்கு நஷ்டயீடான ஐம்பது வெள்ளிக்காசுகளை கூட தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:29) . அவள் மீது விபச்சார அவதூறு கூறினால் கூட அபராதமாக நூறு வெள்ளிக்காசுகளை அவளது தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:19)


6.பெண்குழந்தைகளுக்கும் மனைவிக்கும்,தாய்க்கும், சகோதரிகளுக்கும் என பெண்களுக்கு இறந்தவர் விட்டுச் செல்லும் செல்வத்தில் சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியது.(குர்ஆன் 4:7,11,12,176)

ஆனால் பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. தகப்பனுக்கு ஆண்குழந்தை இல்லாது போனால் மட்டும் தான் அவர்களுக்கு சொத்து கிடைக்கும்.(எண்ணாகமம் 27:8)

(பெண்ணுக்கு ஆணின் சொத்தின் பாதி தானே இஸ்லாத்தில் கிடைக்கும் என நினைக்கலாம். காரணம் ஆண் மீதே குடும்பச் செலவை இறைவன் விதியாக்கியுள்ளதாலும் (குர்ஆன் 4:34), ஆணே தன் மனைவிக்கு மணக்கொடையை கொடுக்க வேண்டும் என்பதாலும் (குர்ஆன் 4:4), அவள் நஷ்டயீடு செலுத்தவேண்டி ஏற்பட்டாலும் அவளது தந்தைவழி உறவினரே (சகோதரன் போன்றோர்) அதை செலுத்தவேண்டும் என்பதாலும் (புகாரி 6730) இவ்வாறு இஸ்லாம் வழங்கியது நியாயமானதே!)


7.தன் மனைவியின் மீது விபச்சாரம் செய்துவிட்டாள் என குற்றச்சாட்டு வைத்தால், அவ்வாறு செய்யவில்லை என எதிர்த்து அவனுக்கு சமமாக சாட்சி கூறும் உரிமையை இஸ்லாம் வழங்கியது (குர்ஆன் 24:6-9).

ஆனால் பைபிளோ அவள் முதலிரவிலே கன்னியாக இல்லை என கூறினால், அதற்கு உடலுறவில் வரும் இரத்தம் தேய்ந்த துணியை ஆதாரமாக அவளது பெற்றோர் காட்டவேண்டும். இல்லாவிட்டால் அவள் விபச்சாரி என தற்குரித்தனமான சட்டம் கூறுகிறது (உபாகமம் 22:14-21). சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. இதுபோன்ற அப்பாவிகளை அவதூறு கூறும் தற்குரித்தனமான போதனையை பைபிள் கூறுகிறது.

அத்தோடு தன் மனைவி மீது சந்தேகம் வந்தால் கூட அவளை தான் மண்கலந்த கசப்பு நீரை குடிக்க வைத்து ஆசாமி கூறும் சாபவார்த்தைகளுக்கு ஆமென் மட்டுமே கூற முடியும்.மறுக்கும் உரிமை கிடையாது (எண்ணாகமம் 5:14-24)


8.இஸ்லாம் கர்ப்பிணி பெண்களை மதிக்கிறது. அவள் பிள்ளை பெற்றெடுக்கும் போது மரணித்தால் அவளை உயிர்த்தியாகி என்கிறது (நஸாயீ 1846,3194, அபூதாவூத் 3111)

ஆனால் பைபிளோ கர்ப்பவேதனையை கடவுள் அதிகரிப்பார் காரணம், பெண் பாம்பிடம் ஏமாந்ததற்காக கடவுள் கொடுத்த சாபம் என்கிறது (ஆதி 3:16)


9.மாதவிடாய் பெண்களை இஸ்லாம் மதிக்கிறது. அது அல்லாஹ் ஆதமின் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திய காரியம் (புகாரி 294) என்றும், அதன்போது உடலுறவை தவிர அனைத்து விசயங்களிலும் அவளை சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம் (முஸ்லிம் 507 (302) புகாரி 295-297,299-303,) ஒரே போர்வைக்குள் தூங்கலாம் (புகாரி 298) 


ஆனால் பைபிளிலோ மாதவிடாய் பெண்ணின் முழு உடலுமே தீட்டு. அவளை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவள் படுக்கும் இடமும் அமரும் இடமும் தீட்டுப்படும். அவளது படுக்கையை ,அமரும் ஆசனத்தை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவளது ரத்தம் ஒர்த்தன் மேல் பட்டால் அவன் ஏழுநாட்களுக்கு தீட்டுப்படுவான். எவ்வளவு காலம் ரத்தம் வந்துகொண்டிருந்தாலும் அத்தனை காலத்திற்கும் இப்படி அவள் தீட்டுப்படுவாள். இரத்தம் நின்று ஏழாம் நாள் தான் அவள் சுத்தமாவாள் (லேவியராகமம் 15:19-28) இப்படி அவளை ஒட்டுமொத்த அசுத்த பிராணியாக ஆக்கியுள்ளது பைபிள். பன்றி போன்ற அசுத்தமான பிராணிகளை தொட்டால் தோராவின்படி மாலைவரை தீட்டுள்ளது போல இந்த பெண்ணை தொட்டாலும் மாலைவரை தீட்டு.


10.ஆணோ பெண்ணோ அவர்களின் நற்செயலை வீணாக்க மாட்டான். ஒருவர் மற்றவரிலிருந்து உள்ளவர்களே (குர்ஆன் 3:195), ஆணோ பெண்ணோ விசுவாசம் கொண்டு நற்செயல் செய்தால் அவர்கள் சுவர்க்கம் நுழைவார்கள். சிறிதும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்.(குர்ஆன் 4:124 இதேபோல் 16:97, 40:40)


11..இஸ்லாம் திருமணமான பெண்களின் நிலையை சிறைக்கைதிகளுக்கு ஒப்பிடுகிறது. அதாவது திருமணத்தின் மூலம் அவர்களால் இன்னொரு ஆணை விரும்ப முடியாது கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள் போன்றவற்றினால். ஆகவே அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள் என்கிறது (இப்னுமாஜா 1851), அத்துடன் உங்களில் சிறந்தவர் தம் மனைவயரிடம் சிறந்தவரே ஆவார் (இப்னுமாஜா 1978,1977, திர்மிதீ 3895). அத்துடன் பெண்களுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள் ஏனெனில் பெண்ணானவள் (மனிதகுல தாயான ஹவ்வா) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார். அதன் மேல் பகுதியே மிகவும் வளைந்தது. அதை நேராக்க நினைத்தால் உடைத்துவிடுவாய் (புகாரி 3331). அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் , நீங்கள் ஒன்றை வெறுக்க கூடும் ஆனால் அதிலே அநேக நலவுகளை இறைவன் ஏற்படுத்தக்கூடும் (குர்ஆன் 4:19)

இஸ்லாம் மனைவியர் கணவனுக்கு கட்டுப்படுவதற்கான காரணமாக பெண்களை குற்றப்படுத்தவில்லை . மாறாக ஆண்கள் மீதே செலவளிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கியதாலும் , சிலரைவிட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியதாலும் (உடலாலும் மனதாலும் வேறு விதமாகவும்) தான் (குர்ஆன் 4:34). அனைவரும் ஒரே நிலையில் இருந்தால் குடும்பம் இயங்காது.

ஆனால் பைபிளோ பெண் செய்த பாவத்தினாலே இந்த நிலைமை என்கிறது. அதனாலே அவள் ஆணுக்கு அடங்க வேண்டும் என்கிறது.:

"உன் ஆசை உன் புருஷன் மீதிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்வான்"-ஆதி 3:16) 

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

1 தீமோத்தேயு 2:11-14



12.மனைவியரை அடிப்பது குறித்து, குர்ஆன் 4:34 மனைவியரை அடிக்க அனுமதிக்கிறது என்பதை குறித்து இவர்கள் குற்றம்சாட்டுவர். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ வேறு மதத்தவர்களோ தம் மனைவியரை அடிப்பதில்லையா? இஸ்லாம் அடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.

*இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது:

அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905)

இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள்.

கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்)

அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146)..

 ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது.

பைபிளிலோ பெண் ஒரு அடக்கப்பட்டே இருப்பதாலும் உரிமைகள் இல்லாதவளாக இருப்பதாலும் அவள் கணவனை எதிர்ப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. காரணம் எஜமானுக்கு அடிமைப்பெண் எப்படி நடப்பாளோ அதுவே பைபிளில் அவளது நிலை.

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

1 பேதுரு 3:5-6

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

எபேசியர் 5:22-24



அத்துடன் அவள் அமைதியாகவே அடக்கத்தோடு இருக்க வேண்டும் (1 பேதுரு 3:4, 1 தீமோத்தேயு 2:11-12, 1 கொரிந்தியர் 14:34). இப்படி உரிமை பறிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் அவள் மேலே வரவே மாட்டாள். அத்துடன் அவர்களை அடிக்க கூடாது என்று பைபிளில் எங்கேயும் குறிப்பிடவில்லை.... மனைவியரை அடிக்கும் காலத்தில் அதை பற்றி மௌனமாக இருப்பதென்பதே அதை அனுமதிப்பதாகிவிடும்.

ஆகவே இவர்களுக்கு இந்த நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதியேயில்லை.


13.இஸ்லாம் பெண்களில் அதிகமானோர் நரகவாசிகளாக நபிகளார் கண்டதாக கூறும் ஹதீஸிலே அப்படி நரகம் போவதற்கான காரணம் கூறப்படுகின்றது 

எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தனர் ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர் என்று நபிகளார் சொன்னார்கள். "அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்" என கேட்கப்பட்டது. அதற்கு, "கணவனை நிராகரிக்கிறார்கள், உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்கு நீ காலமெல்லாம் நன்மையே செய்து கொண்டிருந்து, பின்னர் (அவளுக்கு பிடிக்காத ஒன்றை) கண்டுவிட்டால், உன்னிடம் ஒருபோதும் எந்த நன்மையையும் கண்டதில்லை என்று பேசி விடுவாள்" என பதில் கூறினார்கள்.(புகாரி 29)

வேறொரு ஹதீஸில் அவர்கள் அதிகம் சபிப்பதும் கணவனை நிராகரிப்பதும் என கூறப்பட்டுள்ளது (புகாரி 304)

அதாவது இந்த செயல்களினால் நரகம் போகிறவர்களில் அதிகமானோராக பெண்கள் காட்டப்பட்டனர். அவர்கள் பெண்ணாக இருப்பதால் அல்ல.. மாறாக செயலினாலே அவ்வாறு நிகழுகிறது.

இதன்மூலம் அதிகமாக சபிப்பதையும் கணவனை நிராகரிப்பதையும் கைவிட்டு நரகம் போகாதிருப்பதற்கு நபிகளார் வழிகாட்டுகிறார்கள். 


14.இஸ்லாம் பெண்களின் நலன்கருதி வீட்டிலே இருக்கும்படி கட்டளையிடுகிறது. ஆனாலும் தேவைகளுக்காக அவர்கள் வெளியே செல்லலாம் (புகாரி 147), தன் கால்நடைகளை பராமரிப்பதற்காக உணவு கொண்டுவருவதற்காக தனியாகவும் வெளியே செல்லலாம் (புகாரி 5224), இதன்படி ஆண்-பெண் தனித்திருத்தல் நிலை இல்லாமலும் (புகாரி 3006, 5224) முறையாக ஆடை அணிந்த நிலையிலும் (குர்ஆன் 33:59, 24:31) ,ஆண்களோடு குளைந்து பேசாமலும் (குர்ஆன் 33:32) அனுமதிக்கப்பட்ட தொழில்களில் வேண்டியதை பெண் செய்யலாம்.. பெண் தன் குடும்பத்திற்கு செலவளிப்பதும் தர்மமே அதற்கு இறைவனிடம் கூலி உண்டு.(புகாரி 1466,5369). கணவன் செலவுக்கு தராத போதுகூட அவனது அனுமதியின்றி நியாயமான அளவை எடுத்துக்கொள்ளும் உரிமையும் மனைவிக்கு உண்டு (புகாரி 5359,5364,5370)

ஆனால் பைபிளின் படி வயோதிப பெண்கள் இளவயது பெண்களுக்கு போதிக்கலாம். எதை போதிக்க வேண்டும் என்றால் அவர்கள் வீட்டிலே இருக்கவேண்டும் என்றும் போதிக்க வேண்டும் என்கிறார் பவுல்:

தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.தீத்து 2:4-5


15.பெண்ணிடம் துர்ச்சகுனம் இருப்பதாக சொன்னதன் விளக்கம்:

இது இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது,

1.துர்ச்சகுனம் ஒன்றில் இருப்பதாக இருந்தால், மனைவி வீடு குதிரை ஆகிய மூன்றிலுமே இருந்திருக்கும் (புகாரி2859, 5094,5095,)- இதன் அர்த்தம் எதிலுமே துர்ச்சகுனம் கிடையாது. அவ்வாறு இருப்பதென்றால் இந்த மூன்றிலும் தான் இருக்கும். ஏனெனில் ஒரு ஆணுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது மனைவியும் அவன் தங்கும் வீடும் அவன் ஏறிச்செல்லும் வாகனமும் தான்.

2.துர்ச்சகுனம் மூன்று விசயங்களிலேயே இருக்கும். மனைவி ,வீடு , குதிரை (புகாரி 2858,5093,..) இதன் அர்த்தம் ஒரு மனிதனுக்கு கெடுதி ஏற்படுவதெல்லாம் இவர்களால் என்பதல்ல.. ஏனெனில் அனைத்து நலவும் கெடுதியும் இறைவனிடமிருந்தே வரும் (குர்ஆன் 4:78) . மனிதனுக்கு வீடு குறுகலாகவும் அயலவர்கள் தீங்கிழைப்பவர்களாகவும் இருந்தாலோ, மனைவி அதிகம் சண்டைக்காரியாக தீங்கிழைப்பவளாக இருந்தாலோ, வாகனம் அதிக செலவை ஏற்படுத்துவதாகவும் பயனற்றதாகவும் இருந்தால் அதுவே துர்ச்சகுனமென கூறப்படுகிறது. இதற்காக அவற்றை விட்டு அவன் முறையாக பிரிந்துவிடலாம்.. வீட்டையும் வாகனத்தையும் விற்று வேறு வீடும் வாகனமும் வாங்கலாம். மனைவியை விவாகரத்து செய்து வேறு திருமணம் முடிக்கலாம். அம்மனிதனை நிர்ப்பந்தித்து துன்பத்திலேயே இரு என்று கூறுவது நியாயமல்லவே.    

இதுவல்லாமல் நல்ல மனைவி குறித்து, உலகம் பயனளிக்கும் செல்வங்களே. இப்பயனளிக்கும் செல்வங்களிலேயே மிகவும் மேலானது நல்ல மனைவியே (முஸ்லிம் 2911 (715k)), செல்வங்களிலேயே சிறந்தது இறைவனை நினைவுகூறும் நாவும், நன்றி செலுத்தும் உள்ளமும், ஈமான்விசயத்தில் உதவிசெய்யும் முஃமினான மனைவி (திர்மிதீ 3094). மனைவியாகிய அவர்கள் உங்களின் ஆடை. நீங்கள் அவர்களின் ஆடை (குர்ஆன் 2:187). ஆகவே இதிலே ந்லல மனைவி குறித்து விமர்சனம் எதுவுமில்லை.

பைபிளிலும் தீய மனைவி குறித்து,

9.சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

19.சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

நீதிமொழிகள் 21:9, 19


நீதிமொழி 27:15 TCV

[15] சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்;

https://bible.com/bible/2730/pro.27.15.TCV

*பெண்களின் புத்திக்கூர்மையான ஆலோசனையை மதித்தல்- இஸ்லாத்தில் முகம்மது நபியே மனிதர்களில் ஞானத்தில் உயர்ந்தவராக கருதப்படுகிறார். ஆனாலும் அன்னவர்களே தன் மனைவியின் ஆலோசனைப்படி செயல்பட்டுள்ளார்கள்_ ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது (புகாரி 

2731,2732)

*அத்தோடு கணவனின் அருவருப்பான தோற்றம், பாலியல்ரீதியாக திருப்திப்படுத்த இயலாத நபர், ஒழுக்கமில்லாதவர், நியாயமின்றி அடிப்பவர், உணவும் உறையுளும் தராதவர் போன்று அல்லது நியாயமான காரணங்களுக்காக விவாகரத்தை கேட்டுப்பெறும் உரிமையை இஸ்லாம் அன்றே வழங்கியுள்ளது.  இன்றும் நடைமுறையில் உள்ளது... பைபிளில் கற்பழித்தவனுக்கே கழுத்தை நீட்ட வேண்டும் (உபாகமம் 22:28-29)

*கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்து, அதனால் அவன் கோபமுற்றவனாக இரவை கழித்தால், வானவர்கள் அவளை சபிக்கிறார்கள் என்ற ஹதீஸை குறித்து,  திருமணத்தின் நோக்கமே விபச்சாரத்தில் விழாமல் இருப்பதற்கு தான் என்றிருக்கும்போது அவள் வீம்புக்காக மறுத்தால் அதற்குரிய நிலையே இது. தகுந்த காரணங்களுக்காக அதை தெளிவு படுத்தி மறுப்பதற்குரிய தண்டனை அல்ல.. அது கூடும்

இதுபோன்று இன்னும் நிறையக் கூற முடியும். இவர்கள் எதை குற்றச்சாட்டாக வைப்பார்களோ அதுவே பைபிளில் கடுமையானதாக கூறப்பட்டிருக்கும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்