இஸ்லாம் அடிமைகளை நடாத்தியவிதம்

 இஸ்லாம் அடிமைகளை கண்ணியப்படுத்துகிறதோடு அவர்களை நல்லமுறையில் நடத்துமாறு வழிகாட்டுகிறது 

*அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662)

*அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585)

*அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) -

ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27)

*அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார், உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்மீது அதிகாரம் உள்ளது என எச்சரித்தார்கள். இதனால் அவர் இனிமேல் அடிமைகளை அடிக்க மாட்டேன் என உறுதி பூண்டார் (முஸ்லிம் 3413 (1659a)) இன்னொரு அறிவிப்பில், நபிகளாரின் எச்சரிப்பை கேட்ட தோழர் தான் அடித்த அடிமையை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன் என கூறினார். அப்போது நபிகளார் அவ்வாறு செய்யாதிருப்பின் உன்னை (மறுமையில்) நரகம் எரித்திருக்கும் என்றார்கள் (முஸ்லிம் 3414 (1659c)

ஆனால் பைபளோ அடிமையை கடுமையாக தாக்கி ஒரு நாளோ இருண்டு நாளோ கழித்து அவன் செத்தாலும் அவனுடைய சொத்து என்பதால் எந்த தண்டனையும் இல்லை. அதே நாளில் செத்தால் மட்டுமே தண்டனை உண்டு (யாத்திராகமம் 21:21-22)

*தன் அடிமை மீது அவதூறு சொன்னவருக்கு மறுமையில் கசையடி தண்டனை நிறைவேற்றப்படும் (புகாரி 6858) என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

*அடிமையை நியாயமின்றி அடித்தால் மறுமையில் அவர் பழிவாங்கப்படுவார் (அதபுல் முஃப்ரத் 181,182,185,186)

*அடிமையின் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும், நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு உணவும் நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு ஆடையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேதனை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 188, 199) அவர்களுக்கு இயலாத வேலையை அவர்கள்மீது சுமத்த கூடாது என்றும் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 192)

*பெற்றோர் உறவினர் அயலவருக்கு நலவான உபகாரம் செய்யுமாறு குர்ஆன் கூறுவதில் அடிமைகளையும் இணைத்து அவர்களுக்கும் நல்லுபகாரம் செய்யுங்கள் என்கிறது (குர்ஆன் 4:36

*அடிமைப்பெண்களுக்கும் அடிமை ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்குமாறு எஜமான்களுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது (குர்ஆன் 24:32)...  தோராவும் இந்தவிசயத்தை அனுமதிக்கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் காயடித்து விடுவார்கள்.  அத்தோடு எவருமே  திருமணம் செய்யாது துறவிகள் போல இருப்பதே நலம் என்கிறது (மத்தேயு 19:10-12, 1கொரிந்தியர் 7:26,28,37,38)

*அடிமைகளை விடுதலை செய்வதை சிறப்பித்து, அவ்வாறு விடுதலை செய்யுமாறும் (புகாரி 1054,2503,6715) ,சம்பாதித்து தன் பெறுமதியை செலுத்தி விடுதலை பெற விரும்பும் அடிமைகளுக்கு அதற்காக வாய்ப்பளிக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டுகிறது (புகாரி 2492)  ஆண் அடிமை பெண் அடிமை இருவருக்குமே இது பொதுவானது

.. அத்தோடு குற்றப் பரிகாரங்களில் ஒன்றாக அடிமைவிடுதலையை இஸ்லாம் ஆக்கியுள்ளது (உதாரணமாக குர்ஆன் 4:92)

இஸ்ரேலியரான ஆண் அடிமைகள் மட்டும் ஆறு வருடம் அடிமையாக இருந்துவிட்டு விடுதலை பெறலாம் என பைபிள் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:1-6)

*அடிமையாக இருப்பவர் இறைவனுக்குரியவற்றையும் தன் எஜமானுக்குரியவற்றையும் சரிவர நிறைவேற்றினால் அவருக்கு இரண்டு நற்கூலி உண்டு என்பதாக நபிகளார் கூறியுள்ளார்கள். இதை அறிவிக்கும் நபித்தோழர் இதன் சிறப்பினால் ஜிகாது செய்வதும் தாயுக்கு உபகாரம் செய்வதும் இல்லையென்றால் நானும் அடிமையாக இருப்பதை விரும்பியிருப்பேன் என்கிறார் (புகாரி 2548)

*தன் அடிமைப்பெண்ணுக்கு கற்பித்து விடுதலை செய்து அவளை திருமணம் செய்துகொண்டால், அவருக்கு இறைவனிடம் இரு நன்மைகள் உள்ளன என ஊக்குவிக்கிறது (புகாரி 97)

ஆனால் பைபிளோ சொந்த மகளையே அடிமையாக விற்றுப் போடும் உரிமையை தகப்பனுக்கு வழங்கியுள்ளது (யாத்திராகமம் 21:7-10)

*ஆனாலும் அடிமைகள் எஜமானின் சொத்துக்கள் என்பதால், அவர்களை வாங்குவது விற்பது கூடும்.

பைபிளும் புறஜாதியார்களை காலம் காலமாக அடிமைகளாக வாங்கி விற்று அடிமையாக வைத்துக்கொள்ளலாம் என்கிறது (லேவியராகமம் 25:44-46)

ஆகவே பைபிளை விட இஸ்லாம் அடிமைகள் விசயத்தில் சிறப்பாகவே போதிக்கிறது.


மேலும் வாசிக்க இஸ்லாமும் அடிமைப்பெண்களும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்