ஆதியாகமம்-தொடர் 3


தொடர்2 இன் தொடர்ச்சி 


உள்ளடக்கம்

7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் பூமியில் உண்டாகிவிட்டதாம்

8.சூரியனை படைக்க முன்பே தாவரங்களை படைத்துவிட்டாராம்.

9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலங்களும் மூன்று காலைப்பொழுதுகளும் ஏற்பட்டு முடிந்து விட்டதாம்.

10.நமது ரூபம், நமது சாயல் என்று தேவன் பன்மையில் பேசுவது திரித்துவத்திற்கு ஆதாரமா?

11.அனைத்து மிருகங்களும் மனிதனும் தாவரவுண்ணிகளாக படைக்கப்பட்டதாம்! (அதாவது 6000 வருடங்கள் முன்பு உணவு சங்கிலி கிடையாதாம்!)




7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் 


தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.""

  - ஆதி 1:3,5 


பகலானது முதலில் தேவனால் படைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதற்கு ஒளி வழங்கும் சூரியனோ நான்காவது நாளில் படைக்கப்பட்டதாம்.


¹⁶ "தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்."

¹⁸ "பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்."(ஆதி 1:16,18)


பகலுக்கு காரணமே சூரியனாக தான் உள்ளது. சூரியன் மறைந்துவிடும்போது ஒளி போய்விடுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் போது இருளாகி விடுகிறது. சூரியன் வெறும் ஆளுகை தான் செய்கிறதென்றால், பூரண சூரிய கிரகணம் ஏற்படும் போது இருளாக கூடாது. ஆகவே இவ்வசனம் புரிதலற்ற மனித வார்த்தை என்று புரிகிறது.


இதை சமாளிக்க நவீன கிறிஸ்தவர்களோ, உண்டாக்கினார் என்பதிலுள்ள எபிரேய வார்த்தை "ஆசா- עשׂה" என்பதாகும். இது புதிதாக உண்டாக்குவதை குறிக்காது. ஏற்கனவே இருந்த ஒன்றை செயற்பாட்டுக்கு கொண்டுவருவதை குறிக்கும் என்று பொய்யாக பைபிள் மொழியறிவின்றி வாதிக்கிறார்கள்.


ஆனால் இவ்வார்த்தையும் புதிதாக உண்டாக்குவதையே குறிக்கிறது. ஏனெனில் 1:14இல் சுடர்கள் ஆகாய விரிவில் உண்டாகக்கடவது என்று சொல்கிறார். அதன்பின்பு தான் அவை உருவானது.

இதே ஆசா எனும் வார்த்தையை தான் மனிதனை உண்டாக்குவோம் (ஆதி 1:26) என்று சொல்வதற்கும் இதே வார்த்தை தான் பாவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதன் இருந்து அவனை செயற்பாட்டுக்கு கொண்டுவருவோம் என்பதா இதன் அர்த்தம்? இதற்கு பின்பு தானே மனிதனை தேவன் படைக்கிறார்- ஆதி 1:27

ஆகவே இது தவறான சமாளிப்பாகவே உள்ளது.

---


8.சூரியனை படைக்க முன்பே கனிமரங்களை படைத்தாராம் 


¹¹ "அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களின் விதையையுடைய கனிகளைத் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

¹² "பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் ஜாதியின்படியே தங்கள் விதையை கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைத்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்."

¹³ சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.(ஆதியாகமம் 1:11-13)


இதிலிருந்து மரங்களுக்கு சூரியன் அவசியமில்லை என்பதை தெரிவிக்கிறது. ஆனால் சூரிய ஒளி படாமல் இருக்கும்போது மரங்கள் வாடி போய்விடுகின்றன

.

சூரியனுக்கு முன்பே தேவன் ஒளியை படைத்துவிட்டார் தானே என்று இவர்கள் வாதிடலாம். அப்படி பூமியில் ஒரு ஒளி இருக்குமாயின் சூரிய கிரகணம் ஏற்படும் போது அந்த ஒளி எங்கே போகிறது? அதுகூட பகலை தான் குறிக்கிறது. (1:5). ஆகவே பூமியில் பகல் போன்ற வெளிச்சத்திற்கு சூரியனே காரணமாக அமைவதால், இதுகூட பேதமை கொண்ட ரபீக்களின் எழுத்தாக இருக்க வேண்டும்.


-----

9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலம், மூன்று விடியற்காலை உண்டாகியிருக்கிறது- ஆதி 1:5,8,13


சூரியன் உதிப்பதால் தான் விடியற்காலையே தோன்றுகிறது. இது தெளிவாக இதை எழுதியவரின் அறிவீனத்தை வெளிப்படுத்துகிறது.


-----

10.நமது சாயல், நமது ரூபம், உண்டாக்குவோம் என்பன திரித்துவத்திற்கு ஆதாரமா?


""பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.""

  — ஆதி 1:26 


தேவன் தன் மகிமையை நிலைநாட்டும்விதமாக தான் இங்கே "நமது ரூபம், நமது சாயல்", "உண்டாக்குவோமாக" என்று கூறியவை அமைகின்றன.

ஏனெனில் அடுத்த வசனத்திலேயே,

""தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.""

  — ஆதி 1:27 


இதிலே தெளிவாக "தம்முடைய சாயலாக - அவனுடைய உருவத்தில்" "சிருஷ்டித்தார் - அவன் படைத்தான்" என்றும் தெளிவாக உள்ளது. தங்களுடைய சாயல் என்றோ சிருஷ்டித்தார்கள் என்று கூறப்படவில்லை. இதிலிருந்து தன் மகிமையை வெளிக்காட்டும் விதமாக தான் இது கூறப்பட்டுள்ளது என்று புரிகிறது.


அதுமட்டுமின்றி ஏசாயா 45:12இல் தெளிவாக,


"""நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதன்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்."”

  — ஏசாயா 45:12 


நான் தான் மனுஷனை படைத்தேன் என்கிறார். நாங்கள் படைத்தோம் என்று கூறவில்லை. காரணம் ஒரே நபரான தேவன் தானே படைத்தார்.


ஆகவே ஆதி 1:26 பன்மையை குறிக்கிறது என்று கூறுவது அதற்கு அடுத்த வசனத்திற்கும் முரணாகவே அமைகிறது.


இதேபோல் பன்மையில் ஏசாயா 6:8 இல் "நமது காரியம்" என்று கூறப்படுகிறது.


அப்படியென்றால் அவர் யாரிடம் அவ்வாறு சொன்னார்?


மனிதனை படைக்க முன்பே தன் தூதர்களை அவர் படைத்துவிட்டார். அதனால் தான் மனிதன் பழத்தை சாப்பிட்டவுடன், கெரூபீன் என்று அறியப்படுகிற தூதர்களை ஏதேன் தோட்டத்தில் காவலுக்கு வைத்தார் - ஆதி 3:24

தேவன் அனைத்தையும் தன் இஷ்டப்படி செய்தாலும் அதை தன் தீர்க்கதரிசிகளுக்கு தெரிவிக்காமல் செய்யமாட்டார் என்று ஆமோஸ் 3:7 சொல்கிறது.. 

தீர்க்கதரிசிகளுக்கே இந்த நிலைமை என்றால், முழுமையாக கட்டுப்பட்டு சுயவிருப்பு இன்றி இருக்கும் தன் வானதூதர்களுக்கு அறிவிக்காமல் இருப்பாரா?

அதையே ஏசாயா 6:1-8 கூறுகிறது. தேவ சபையில் தேவன் பேசுவதை அவை கூறுகிறது.

அதை தான் ஆதி 1:26 சொல்கிறது.

இந்நிகழ்வை தான் குர்ஆன்,

"உமது இறைவன் வானவர்களிடம், நான் பூமியில் ஒரு தலைமுறையை உண்டாக்க போகிறேன் என்று சொன்னபோது.." குர்ஆன் 2:30 நான் சொல்கிறது.

-------

11.அனைத்து மிருகங்களையும்,மனிதனையும் தாவரவுண்ணிகளாக தேவன் படைத்திருக்கிறார் போலும்


“"பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;"”

  — ஆதி 1:29 


""பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்; அது அப்படியே ஆயிற்று.""

  — ஆதி 1:30 


ஆரம்பத்தில் உணவுச்சங்கிலி இருக்கவில்லை போலும். இந்த காலம் 6000 வருடங்கள் முன்பானது என கூறப்படுகிறது. அதை ஆதியாகமம் 5ம் அதிகாரத்தில் வைத்து கூறுகிறேன்.

அதன்படி, 6000 வருடங்கள் முன்பு பூமியே வெஜிடேரியன்களால் நிறைந்திருந்தது. அனைத்தும் இயற்கை மரணத்தையே அடைந்துள்ளது போலும்.

தொடர்4

இது தெளிவான பிழையாகும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்