நபியின் பிறப்பை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு


💎💎நபியின் பிறப்பை இழிவுப்படுத்தும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு💎💎





✍இயேசு விபச்சார சந்ததியில் இருந்து வந்தவர் என்று பைபிள் இயேசுவை இழிவுப்படுத்துவதை முஸ்லிம்கள் சுட்டிக்காட்டியதும், தங்களது இயலாமையை போக்க முஹம்மது நபியின் பிறப்பை குற்றப்படுத்தி கிறிஸ்தவர்கள் பேசி வருகின்றனர். அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.


✍நபியின் பிறப்பை குற்றப்படுத்த கீழேயுள்ள ஹதிஸையும் ஆதாரமாக காட்டுகின்றனர். ஆனால் அந்த ஹதிஸ் அவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இல்லை. அந்த ஹதிஸை திரிவுப்படுத்தும் வேலையை தான் கிறிஸ்தவர்கள் செய்துள்ளனர்.


⭐2375. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், 'ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்' என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, 'நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார். நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்களிடம், 'திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா(ரலி)) எடுத்தார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துச் சென்றார்' என்று கூறினார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 42.


✍குடிப்போதையில் இருந்த ஹம்ஸா (ர) அவர்கள் நபியை பார்த்து மட்டும் நீங்கள் என் மூதாதையர்கள் அடிமைகள் தானே என்று சொல்லவில்லை. பொதுவாக பன்மையில்  அவ்வாறு சொல்கிறார். அதாவது நபியையும், அலியையும் சேர்த்தே அவர் அவ்வாறு கூறுகிறார். இந்த விசயம் எந்த விதத்திலும் நபியின் தாயாகிய ஆமினாவுடன் சம்பந்தப்பட்டது இல்லை. 
அவ்வாறு இருந்தால் அதற்கான ஆதாரத்தை கிறிஸ்தவர்கள் தரட்டும்.


💎அப்துல்லாஹ் தனது மனைவியுடன் முஹம்மது மூன்று நாட்கள் மட்டும் தான் இருந்தாரா?💎



✍நபியின் தந்தையாகிய அப்துல்லாஹ் அவரது மனைவியுடன் மூன்று நாட்கள் மட்டுமே இல்லற வாழ்வு வாழ்ந்தார் என்பது கிறிஸ்தவர்களின் இட்டுகட்டாகும். மூன்று நாட்கள் மட்டும் அப்துல்லாஹ் அவரது மனைவியுடன் தனது மனைவியின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதன் பிறகு மனைவியுடன் மக்காவிற்கு சென்றார் என்றே வரலாற்று நூல்கள் சொல்கின்றன். 
திருமணம் முடித்து மூன்று நாட்கள் பெண்ணின் வீட்டில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் சடங்காக இருந்தது. ஆதாரம்: கிதாப் மின் இப்னு கதீர் தபாகத் இப்னு சாத்சாத்


✍அப்துல்லாஹ் தனது மனைவியுடன் மக்காவில் இல்லற வாழ்க்கையில் ஈட்பட்டு சில மாதங்களுக்கு பிறகே வியாபார நிமித்தமாக ஷாம் சென்றார் என்று இஸ்லாமிய வரலாற்று நூல்கள் சொல்கின்றன. ஆதலால் இதன் மூலம் மூன்று நாட்கள் மட்டுமே அப்துல்லா தனது மனைவியுடன் இல்லறம் நடத்தினார் என்ற கிறிஸ்தவ குற்றச்சாட்டு போலியானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.


💎முஹம்மது நபி பிறப்பதற்கு நான்கு வருடங்கள் முன்பே அப்துல்லாஹ் மரணித்து விட்டாரா?💎



✍முஹம்மது நபி பிறப்பதற்கு சில மாதங்கள் முன்புதான் அப்துல்லாஹ் மரணித்தார் என்று இப்னு கதிர் தனது தப்ஸீர் நூலில் சொல்கின்றார்.

✍அல் பைஹீகி தனது நூலில் நபி கருவுற்று 7வது மாதத்தில் அப்துல்லாஹ் இறந்தார் என்று சொல்கிறார்.

وقال بعضهم: مات أبوه وهو ابن سبعة أشهر.”
said: He passed away when he was seven months”
அவர்களில் சிலர்  கூறுகிறார்கள்: அவர்  ஏழு மாத பிள்ளையாக இருந்த நிலையில் அவரது தந்தை மரணித்தார்.

  ✍சில ஆதாரங்களின் படி முஹம்மது நபி பிறந்து இரண்டு வருடங்கள் கழித்து தான் இறந்தார் என்று சொல்கிறது.

✍இப்னு இஸ்ஹாக் தனது நூலான நபிவிய்யா மின் இப்னு இஸ்ஹாக்கில் முஹம்மது நபி பிறந்து 28 மாதங்களுக்கு பிறகு தான் அவரது தந்தை அப்துல்லாஹ் இறந்தார் என்று குறிப்பிடுகிறார்.

ويقال : إن عبد الله هلك والنبي صلى الله عليه وسلم ابن ثمانية وعشرين شهرا.
“And it is said, that Abdullah passed away when the Prophetsaw was of twenty eight months”
மேலும் சொல்லப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் 28 மாதங்களை அடைந்த பிள்ளையாக இருந்தநிலையில் அப்துல்லாஹ் இறந்தார்.


✍இப்னு ஷாத் எழுதிய நூலான கிதாப் அல் தபாகத் அல் கபீரும் அதே செய்தியை குறிப்பிடுகின்றது.


قالا: توفي عبد الله بن عبد المطلب بعدما أتى على رسول الله صلى الله عليه وسلم ثمانية وعشرون شهرا، ويقال: سبعة أشهر.
“ said: The death of the father of the Holy Prophetsaw was after twenty eight months after the birth of the Prophetsaw, and it is also said seven months”


✍ஆதலால் முஹம்மது நபி பிறப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே அப்துல்லாஹ் மரணித்து விட்டார் என்ற கிறிஸ்தவர்களின் கூற்று பொய்யானது.


⭐இன்னும் முஹம்மது நபிக்கும் அவரது சித்தப்பா ஹம்ஸாக்கும் 4 வயது வித்தியாசம் உள்ளது என்ற செய்தி பலவீனமான செய்தி என்று இப்னு சயீத் கூறி அதனை மறுக்கிறார். ஏனெனில் அதே நூலில் அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தாமல் அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன் என்று சொல்லி முடிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஷயீத் )


⭐முஹம்மது நபியை எதிர்த்தவர்களும் அவரது பிறப்பை கண்ணியப்படுத்துதல்⭐

✍இவற்றை எல்லாம் காட்டிலும் முஹம்மது நபியை எதிர்த்தவர்கள் முஹம்மது நபி அப்துல்லாஹ்வின் மகன் தான் என்பதற்கு சாட்சியம் பகர்ந்துள்ளனர். தாங்கள் வணங்கும் சிலை தெய்வங்களை வணங்கக் கூடாது என்று சொல்லி தங்களோடு யுத்தம் செய்யும் முஹம்மது நபி எதாவது தவறு செய்யாமாட்டாரா.... அவ்வாறு தவறு செய்தால் அதனை கொண்டு அவரை இழிவுப்படுத்தலாம் என்று இருந்த இஸ்லாமிய விரோதிகளும் நபியின் பிறப்பை குற்றம் சொல்லவில்லை. ஹூதைபியா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி என்று எழுதுவதற்கு சம்மதிக்காத இஸ்லாமிய எதிரிகள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுத சொன்னார்கள். முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்த நபியின் எதிரிகளும் நபியின் பிறப்பை குற்றம் சாட்டவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.


💎3655. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டபோது, "முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கலாம்; நகருக்குள் உறையிலிட்ட வாளுடன்தான் நுழைய வேண்டும்; மக்காவிலிருந்து திரும்பிச் செல்லும்போது மக்காவாசிகளில் யாரையும் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. அவர்களுடன் வந்திருப்பவர்களில் மக்காவிலேயே தங்கிக்கொள்ள விரும்பும் யாரையும் தடுக்கக்கூடாது" ஆகிய நிபந்தனைகளின் பேரில் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நமக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்வருமாறு எழுதுவீராக:
"அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்ட ஒப்பந்த பத்திரம்..." என்று கூறினார்கள். உடனே இணைவைப்பாளர்கள், "நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின், நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போமே! மாறாக, "அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத்" என்று எழுதுங்கள்" என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுமாறு கூறினார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் அழிக்கமாட்டேன்"என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இடத்தை எனக்குக் காட்டுவீராக!" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அந்த (வாசகம் இருந்த) இடத்தைக் காட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (தமது கரத்தால்) அழிந்துவிட்டார்கள். மேலும், "அப்துல்லாஹ்வின் புதல்வர்" என்று எழுதச் செய்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 32. 


முஹம்மது நபியின் முக்கிய எதிரியான அபூசூப்யானிடம் ரோம் அரசர் ஹெராக்ளியஸ் முஹம்மது நபியின் நபித்துவத்தை விசாரிப்பதற்காக அவரது குடும்ப பாரம்பரியத்தை பற்றி கேட்கும் போது, எங்களில் சிறந்த குடும்ப பாரம்பரியத்தை உடையவர் முஹம்மது என்று அபூசூப்யான் கூறினார். முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்த அவரது முக்கிய விரோதியான அபூசூப்யானே முஹம்மது நபியின் பிறப்பை கண்ணியப்படுத்தி பேசுவதில் இருந்து நபியின் குடும்ப பாரம்பரியத்தின் சிறப்பை புரிந்து கொள்ளலாம். நபியின் காலத்தில் வாழ்ந்தவர் எவரும் நபியின் பிறப்பை பற்றி சந்தேகப்படவில்லை என்பதே உண்மை.



4553. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து 'திஹ்யா அல் கல்பீ' அவர்கள் கொண்டு வந்து, 'புஸ்ரா'வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) 'தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கிறார்களா?' என்று கேட்டதற்கவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். எனவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?' என்று கேட்டதற்கு நான், 'நான் (தான் நெருங்கிய உறவினன்)' என்று சொன்னேன். எனவே, அவரின் முன்னிலையில் என்னை அமர்த்தினர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினர். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்' என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்துவிடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன். பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், 'உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள்' என்று கூறினார். நான், 'அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவராவார்' என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் 'அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கிறாரா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் கூறினார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை' என்று சொன்னேன். 'அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; பலவீனமானவர்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்' என்றேன். அவர், 'அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?' என்று கேட்டார். நான் 'இல்லை; அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்' என்று சொன்னேன். அவர், 'அவரின் மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை' என்று சொன்னேன். அவர், 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'உண்டு' என்று சொன்னேன். அவர், 'அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?' என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்' என்று சொன்னேன். அவர், 'அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது' என்று சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. (பிறகு) அவர், 'இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை 'நபி' என) வாதித்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை' என்று சொன்னேன். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: 'அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவரின் குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். நான் உம்மிடம் அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை' என்றீர். அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், 'தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒருவர் இவர்' என்று கூறியிருப்பேன். 'மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?' என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணியா)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் 'அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு 'இல்லை' என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்துவிடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் 'அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா?' என்று கேட்டேன், நீர் 'அதிகரித்தே வருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்). மேலும், உம்மிடம் நான் 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள் தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். 'அவர் வாக்கு மீறுகிறாரா?' என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், 'அவர் வாக்கு மீறுவதில்லை' என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை. நான் 'இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?' என்று உம்மிடம் கேட்டபோது நீர் 'இல்லை' என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், 'தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கிற ஒருவர் இவர்' என நான் சொல்லியிருப்பேன்' என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ், 'என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ், 'அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர் தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரின் ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரண்டு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்' என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை



இவ்வாறு நபியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நபியின் பிறப்பை பற்றி சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். முஹம்மது நபியின் பிறப்பை குற்றப்படுத்தும் கிறிஸ்தவர்களிடம் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு ஒன்றே ஆதாரமாக இருக்கிறது. முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய விரோதிகளும் முஹம்மது நபியின் குலப்பெருமையை அறிந்து அவரை கண்ணியப்படுத்தியுள்ளனர் என்பதே வரலாற்று உண்மை.




Credits : சத்தியத்தை நோக்கி FB page

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்