பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 2 (லேவியர்-எண்-உபாகமம்)

 பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது?

 பாகம் 2

லேவியர்-உபாகமம்


(பாகம் 1)


1.தான் படைத்ததையே அறியாதவர்.


குழிமுயலும், முயலும் வாயை அசைப்பதால், அது அசைபோடுவதாக நினைத்து , அவை அசைபோடும் மிருகம் என்கிறார்- லேவியராகமம் 11:5-6




2.பெண் பிள்ளையை இழிவாக பார்க்கிறார்


ஆண்பிள்ளையினால் வரும் தீட்டின் இருமடங்கு பெண் பிள்ளையால் வரும் என்கிறார்-லேவியராகமம் 12:2-5



3.அங்கவீணனை இழிவுபடுத்துகிறார் தேவன்.


அங்கவீணன் பரிசுத்தஸ்தலத்தினுள் போனால் பரிசுத்தக்குளைச்சல் ஏற்படுமாம்.(லேவியராகமம் 21:23)



4.நரபலியையும் ஆதரிக்கிறார் தேவன்.


மனிதனை காணிக்கையாக நேர்ந்து கொடுத்தால், அந்த மனிதனை மீட்க முடியாதாம். அவனை கொல்லவே வேண்டுமாம்- லேவியராகமம் 27:28-29


அந்நிய தேவர்களுக்கு தான் நரபலி கொடுப்பதை தேவன் தடுத்துள்ளாரோ? தனக்கென வரும்போது நரபலி காணிக்கையையும் ஏற்கிறார் போலும் 😅.


இவ்வாறே யெப்தா என்பவர் தன் மகளை தேவனுக்கு பலியாக கொடுத்தார்- நியாயதிபதிகள் 11:40



5.கர்த்தர் அடிக்கடி கோபப்படுகிறார்


ஜனங்கள் முறையிட்டதால் கோபப்படுகிறார்- எண்ணாகமம் 11:1


ஜனங்கள் கூடார வாசலில் இறைச்சி வேண்டும் என அழுததால் மீண்டும் கர்த்தர் கோபப்படுகிறார் - எண்ணாகமம் 11:10


பிறகு கர்த்தர் காடைகளை குவியலாக கொடுக்கிறார். அவர்கள் சேர்த்து, திண்ற போது மீண்டும் கோபப்படுகிறார். -எண்ணாகமம் 11:32-33




6.மோசே எவ்வளவு சுமை தாங்குவார் என அறியாமல்

மோசேயால் சுமக்க இயலாத சுமையை கர்த்தர் கொடுத்துள்ளாராம்.


கர்த்தர் முழு பாரத்தையும் மோசேக்கே கொடுத்துவிட்டார். மோசே அதை தன்னால் சுமக்க முடியாது .. வேண்டுமானால் என்னை கொன்றுபோட்டுவிடும் என்கிறார். பிறகு தேவன் 70 பேருக்கு அந்த ஆவியை பிரித்து கொடுக்கிறார்- (எண்ணாகமம் 11:14-17)



மோசேயால் இவ்வளவு தான் சுமக்க முடியும் என்றும் தெரியாதவரா இவர்?



அதுவும் மோசே சொல்லி இந்த முடிவை எடுக்கிறார்..



7.தேவனது பட்சபாதம்


ஆரோனும் மிரியாமும் சேர்ந்து மோசேக்கு விரோதமாக பேசினார்களாம். ஆனால் கர்த்தர் மிராயாமை மட்டுமே தண்டித்து அவளை குஷ்டரோகியாக்கினார்- எண்ணாகமம் 12:1,9-10)




8.மீண்டும் கர்த்தருக்கு அட்வைஸ் பண்ணிய மோசே.



மக்கள் யுத்தம் பண்ண மறுத்ததால், கர்த்தர் அவர்களை கொள்ளைநோயால் வாதிப்பதாக சொல்கிறார்


உடனே மோசே, அப்படி செய்தால் எகிப்தியர் இதை கேள்விபடுவான்.


புறஜாதியார், தேவனுக்கு தேசத்தை கொடுக்க முடியாததால் கொன்று போட்டார் என்பார்கள் என்று தேவனது அவசரத்தை தடுக்க காரணம் சொன்னார்- எண்ணாகமம் 14:13,15-16



9.தேவனை பரிசுத்தம் பண்ணாத, விசுவாசிக்காத மோசேயை தவறுதலாக தெரிவு செய்தாரா தேவன்?



மேரிபாவில் இஸ்ரேலியர் தண்ணீர் கேட்ட போது , தேவன் கோலை எடுத்துக்கொண்டு போய் மலையிடம் பேச சொல்கிறார். அப்போது தண்ணீர் வரும் என்றார். ஆனால் மோசே இந்த மலையிலிருந்து தண்ணீரை புறப்பட பண்ணுவோமா என கேட்டு , தன் தடியால் அடித்து தண்ணீர் வரவைத்தார். 


(தேவன் அடிக்க சொல்லாமல் அடித்ததால்), அவர்களிருவரும் தேவனை பரிசுத்தம் பண்ணும்படி விசுவாசிக்கவில்லையாம். அதனால் ஆரோனும் மோசேயும் வாக்களிக்கப்பட்ட தேசத்தினுள் போவதில்லை என தண்டிக்கிறார். (எண்ணாகமம் 20:1-7,8-12, 24)



தன் சொந்த தீர்க்கதரிசியையே சரியாக தெரிவு செய்ய இயலாதவரா தேவன்?




10.தன் கட்டளையை செய்ததற்காக கோபப்படும் கர்த்தர்



பிலேயாமை போக சொல்கிறார் கர்த்தர். அவன் போனதால் அவர் கோபப்படுகிறார்- எண்ணாகமம் 22:20-22


பிறகு தேவதூதனும் வந்து அவனை அவர்கள் கூட போகும்படி தான் சொன்னார்.(எண்ணாகமம் 22:34-35)


தேவனது சொல்படி அவன் போனான். அதற்காகவுமா கோபப்படுவது? கொஞ்சமாவது நீதி வேண்டாமா?




11.பொய்கார அநீதியான தேவனா? அல்லது அறியாமை தேவனா?



இஸ்ரேலியர் யுத்தம் செய்து தேசத்தினுள் நுழைய மறுத்த போது, தேவன் கோபம் கொண்டார்.


இம்மக்கள் நிமித்தமாக மோசே மீதும் கோபம் கொண்டு , அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்றாராம். (உபாகமம் 1:31-36 & 37)



சம்பந்தமே இல்லாமல் மோசேயின் மீது கோபப்பட்டதாக இது காட்டி, தேவன் அநீதியாளர் என சித்தரிக்கிறது.



ஆனால் எண்ணாகமம் 14:12 இல் தேவன் மோசே மீது கோபப்படாமல், அவரை பெரிய ஜாதியாக ஆக்குவதாகவும் ஏனையோரை கொல்லுவதாகவுமே சொல்கிறார்.


இப்போது தான் மோசே அட்வைஸ் பண்ணினார்- (குறிப்பு 8)



ஆனால் மோசே மீது கோபப்பட காரணம், தேவன் மலைக்கு அடிக்க சொல்லாமலே அடித்து தண்ணீர் வரவைத்தார் என்பது தான் (எண்ணாகமம் 20:1-7,8-12,24)



ஆக மோசே தேவன் மீது அவதூறு சொல்கிறார்.


 அதாவது ,மேரிபாவில் தேவனை பரிசுத்தம் பண்ணாததாலும் , விசுவாசிக்காததாலும் தான் அவர் அந்த தேசத்தினுள் நுழைவதில்லை என எண்ணாகமம் 20:12, உபாகமம் 32:50-52 சொல்கிறது.


ஆனால் மோசேயோ, இஸ்ரேலியர் தேசத்திற்குள் யுத்தம் செய்ய போகவில்லை என்பதால் தன் மீது தேவன் கோபப்பட்டார் என்கிறார்.



அதாவது தேவன் தன்னை பரிசுத்தம் பண்ணி விசுவாசிக்காதவரையும், தன்மீதே அவதூறு சொல்லுபவரையும் அறியாமல் தெரிவு செய்து விட்டாரோ?



இதில் இரண்டில் ஒன்று உண்மையாகும்.


மோசே சொன்னது உண்மையானால், தேவன் அநீதியாளரும், பொய்யரும் ஆவார்! (காரணம் அவர் வேறு காரணம் சொன்னார் -உபா 32:50-52, எண் 20:12)



தேவன் உண்மையாளர் என்றால், தேவன் மீது அவதூறு சொல்லும் பொய்யரை தெரிவு செய்ததாக ஆகிவிடும்.



12.ஆண், பெண், பிள்ளைகளை கொல்லுவதற்காக ராஜாவின் இதயத்தை கடினப் படுத்துபவர்.




சீகோன் ராஜாவின் இதயத்தை கடினப் படுத்தி , அதன்மூலம் ஆண், பெண் , பிள்ளைகளையும் கொலைபண்ண வைத்தார். (உபாகமம் 2:30-34)



அத்தோடு மிருகஜீவன்களோடு கொள்ளையும் அடித்துள்ளனர் -உபாகமம் 2:35




13.எதிர்காலமும் கடந்தகாலமும் அறியாத கர்த்தர்



ஏதோமின் ராஜா இஸ்ரேலியருக்கு பயப்படுவார்கள் என்றும் அவர்களது தேசத்தை எடுக்காமல் கிரயம் கொடுத்து உண்டு குடியுங்கள் என சொன்னதாகவும், அவ்வாறு செய்ததாக சீகோனிடம் மோசே சொல்கிறார் - (உபாகமம் 2:2-7,. 27-29)



ஆனால் உண்மையில் , கர்த்தர் சொன்னதுபோல் அவர்கள் நடக்கவில்லை.


மாறாக ஜனங்களை திரட்டி அவர்களோடு யுத்தம் செய்ய தயாராகிவிட்டான். கிரயம் கொடுப்பதாக சொன்னதற்கும் அவன் மறுத்துவிட்டான். உடனே இவர்கள் அவர்கள் வழியாக கடந்து போகவே இல்லை! (எண்ணாகமம் 20:14-21)



ஆக நடக்காததை நடப்பதாக தேவன் சொல்ல, அதையே மோசேயும் உபாகமத்தில் சொல்லியுள்ளார்.



14.தேவன் எதிரியையும் நேசிப்பவர் என்பர் கிறிஸ்தவர்.


ஆனால் தேவன் தன்னை பகைக்கிறவனின் அக்கிரமத்தை நான்காம் தலைமுறைவரை விசாரிப்பவரே அவர்.


தன்னிடம் அன்புகூறுவோருக்கே 1000 தலைமுறைக்கு இரக்கம் காட்டுகிறவர்- உபாகமம் 5:9-10

மேலும் உபாகமம் 7:9-10


சோ, போலியாக தேவன் தன்னை பகைக்கிறவனையும் நேசிக்கிறார் என கதைவிட வேண்டாம்




15.தேவன் பட்சமாக இல்லை என்பர். ஆனால் செத்ததை பரதேசிக்கு சாப்பிட கொடுக்கலாமாம். அந்நியனுக்கு விற்றும் போடலாமாம்

 (உபாகமம் 14:21)



16.தன் சபைக்கு பாலியல் குறைபாடு உள்ளவர்களும் (ஆணுறுப்பு அறுபட்டவன், காயடிக்கப்பட்டவன்), வேசிப்பையனும் அவனது பத்தாம் தலைமுறை வரை உள்ளோரும் வர கூடாதாம். (உபாகமம் 21:1-3)



பாலியல் குறைபாடு இருந்தால் என்ன தப்பு?


வேசிப்பிள்ளை தன்னை வேசியிடம் பிறக்க வையும் என வேண்டினானா?


ஆகவே இது அநீதி



17.தேவன் பழிவாங்க கூடாது என்கிறார் என்பர் கிறிஸ்தவர்கள். ஆனால்


மோவாபியரும் அம்மோனியரும் சாப்பாடு தண்ணீர் கொடுக்காததாலும் , பிலேயாமை வைத்து சபிக்க பார்த்ததாலும், அவர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அவர்களுக்கு நன்மையோ சமாதானமோ செய்ய கூடாது என கண்டிப்பாக கட்டளையிட்டார். (உபாகமம் 23:4-6)


இவ்வாறு அமேலிக்கியர் ஒரு தடவை செய்ததற்காக , வானத்தின் கீழ் அவர்களது பெயர் இல்லாமல் ஆகும்விதமாக யுத்தம் செய்து அழிக்கும் படி கூறுகிறார்- உபாகமம் 25:17-19



18.பட்சபாதம் மீண்டும்.


இஸ்ரேலியனிடம் வட்டி வாங்க கூடாது. அந்நியனிடம் வட்டி வாங்கலாம் - உபாகமம் 23:19-20





19.அந்நியனுக்கும் சுதேசிக்கும் (இஸ்ரேலியருக்கும்) ஒரே சட்டமா?



யாத்திராகமம் 12:49, எண்ணாகமம் 9:14 , லேவியராகமம் 24:22 ஆகியவற்றில் சுதேசிக்கும் (இஸ்ரேலியருக்கும்) அந்நியருக்கும் ஒரே பிரமாணம் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது .



அதைவைத்து கிறிஸ்தவ போதகர்கள் தேவன் எவ்வளவு நீதியானவர் பார்த்தீர்களா என்றெல்லாம் நம்மிடமே கேட்கிறார்கள்.




உண்மையில் இவர்களது அந்நியன் என்பது மாற்று மதத்தவர் அல்ல.. மாறாக தம் மதத்தையே பின்பற்றும் நபராவான்.


அவன் வேறு சிலைகளுக்கு பலி கொடுத்தால், அவனுக்கும் மரணதண்டனை கொடுக்கும்படியே சொல்லப்படுகிறது (லேவியராகமம் 20:22)



ஆகவே வேறு மதத்தவனை குறித்து இங்கே கூறப்படவில்லை.


வேறு மதத்தவர்களது சிலைகளை உடைத்துப்போடவும் , அவர்களது கடவுள்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்கவுமே கட்டளையும் இடப்பட்டுள்ளது. (யாத்திராகமம் 34:11-14, 23:24, எண்ணாகமம் 33:52, உபாகமம் 7:5, 12:3)



எந்த மனிதனாவது இஸ்ரேலியனுக்கு கொடுக்கும் தேசத்தில் வேறு கடவுளை வணங்கினால் , அவர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும் (உபாகமம் 17:2-5)



ஆகவே இது இவர்களது மதத்தை பின்பற்றுபவர்களையே குறிக்கிறது. அந்நியனது மதத்தை மதிக்கவோ அவனை மதிக்கவோ கூறவில்லை!



அடுத்து , ஒரே பிரமாணம் (சட்டம்) இருக்க வேண்டும் என எதை சொல்கிறது?


இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை சொல்கிறதா ?? நிச்சயமாக கிடையாது!!



மாறாக


1.யாத்திராகமம் 12:49, எண்ணாகமம் 9:14 ஆகியன பஸ்காவை ஆசரிப்பவன் சுன்னத்து செய்யப்பட வேண்டும் என்கிறது. அது அனைவருக்கும் பொது என்று சொல்லுவதாகும்.



2.லேவியர் 24:22 , குற்றம் செய்த விசயத்தில் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்கிறது. அதாவது ஒரே மதத்தவராக உள்ளவர்கள் இவர்கள்... அவர்களில் அந்நியன் சுதேசி என பார்க்காமல் குற்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறது.




ஆனால், இஸ்ரேலியனும் அந்நியனும் சமனாக மாட்டார்கள் என்றே இந்த புத்தகங்கள் சொல்கின்றன.



1.வட்டியை இஸ்ரேலியனான சகோதரனிடம் வாங்க கூடாது. ஆனால் அந்நியனிடம் வாங்கலாம் (உபாகமம் 23:19-20)



2.இஸ்ரேலியனை அடிமையாக விற்கவோ வாங்கவோ கூடாது. அவன் சதாகாலமும் அடிமையாக இருக்க கூடாது. ஆனால் அந்நியனை அப்படி செய்துகொளளலாம்- லேவியராகமம் 25:42-46




3.செத்துப்போனதை இஸ்ரேலியர் உண்ண கூடாது. ஆனால் அந்நியனுக்கு உண்ண குடுக்கலாம். விற்கவும் செய்யலாம். (உபாகமம் 14:21)




4.அந்நியன் ஒருபோதும் அவர்கள் மேல் ராஜாவாக கூடாது. (உபாகமம் 17:15)




ஒரே மதத்தவராக இருந்தும்கூட பாரபட்சம் காட்டப்பட்டே உள்ளது.



குற்றவியல் சட்டங்கள் பலிக்குறிய சட்டங்கள் போன்றவற்றில் தான் ஒரே சட்டம் என கூறப்பட்டுள்ளது.


இருவரும் சமனானவர்களாக எங்கும் கூறப்படவில்லை!!



இப்படிப்பட்ட அந்நியனை ஒடுக்காமல், சுதேசியை நேசிப்பது போல அவனையும் நேசிக்கும் படியும் கூறப்பட்டுள்ளது!! அது நல்ல விடயமே..


ஆனால் சகலதிலும் ஒரே சட்டம் என கூறுவது அறியாமை வாதமாகும்.. அதுவும் சொந்த மதத்தை பின்பற்றுபவனுக்கே ஆகும்..



சிலைவணங்காக்கோ வேறு கடவுளை வணங்குபவனுக்கோ அல்ல!!


நாஸ்திகனுக்கும் அல்ல!

தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்