1 & 2 தீமோத்தேயு, தீத்து, பிலோமோன் படி இயேசு கடவுள் அல்ல

1 தீமோத்தேயு படி இயேசு கடவுள் அல்ல

—————————-

இது பவுல் தீமோத்தேயு என்ற கிறிஸ்தவருக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது


1.தேவன் வேறு , இயேசு வேறு ன பிரித்து கூறுகிறார் பவுல்.. அதாவது பிதாவே தேவன், இயேசு கர்த்தர்


¹ “நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,”

² விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

(1 தீமோத்தேயு 1:1-2)


இயேசுவுக்கும் பிதாவே தேவன் – எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை.

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

—————



2.என்றென்றும் காணப்படாதவரான ஒருவரே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை



¹⁷ “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தேயு 1:17)


—————-



3.தேவன் ஒருவரே. இயேசு என்பவர் மனிதர். அவர் தேவனுக்கும் மனிதனுக்குமான இடைத்தரகர் என்பதே பவுலின் நம்பிக்கை




⁵ "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே."


⁶ எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்குகிறது.“”

(1 தீமோத்தேயு 2 :5-6)

——————————



4.தேவன் மனுஷனாதாக பால் நம்பினாரா?



அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். ""

— 1 தீமோத்தேயு 3:16 (TBSI)


இது பிற்கால பிரதிகளில் இடைச்செருகப்பட்டதாகும்.. பழைய பிரதிகளில் hos / ho (அவர்) என்றே இருந்தது. எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டு பிரதிகளில் தான் தியோஸ் (தேவன்) என காணப்படுகிறது. இது திரித்துவ கிறிஸ்தவ எழுத்தாளர்கள் தங்கள் வேலையை காட்டியுள்ளார்கள்.


பவுலின் நம்பிக்கை என்னவெனில்,


இயேசு என்பவர் தேவனல்ல.. அவரது பையன் என்றும் அந்த பையன் சகல படைப்புகளுக்கும் முன்பே இருந்தவர் என்பதாகும். அப்படியிருக்க பவுல் தேவன் மாம்சமானார் என சொன்னார் என இட்டுக்கட்டுவது அபத்தம் ஆகும்.



பவுலின் நம்பிக்கை பிரகாரம், தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் (எபேசியர் 1:17), இயேசுவுக்கு சகலத்தையும் கீழ்படுத்தி கொடுத்தவரே தேவன் என்றும், அவருக்கு யேசு இன்றும் அடிபணிவதாகவும், வலது பாரிசத்தில் இருந்து தேவனிடம் பரிந்து பேசுவது மாக இருக்கிறார் என்பதே.


ஆகவே இதில் பவுல் சொல்வது, தேவனை அல்ல!! இயேசு மனுசனானார் என்பதாகும்.


அதனால் தான் மகிமையிலே ஏறெடுத்துப் கொள்ளப்பட்டார் என சொல்கிறார்.. அதாவது வேறு ஒருவரால் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதாகும்.


————


5.இயேசு வேறு தேவன் வேறு என்பதை மீண்டும் வேறுபடுத்தி பவுல் எழுதுகிறார்



“”நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.””

— 1 தீமோத்தேயு 5:21

——–


6.தேவன் என்பவர் மனுசரால் காணப்படாதவரே.. அவர் ஒருவரே என்பதே.. பவுலின் நம்பிக்கை



¹⁵ “அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,”


¹⁶ “ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தேயு 6:15-16)


————————–






2 தீமோத்தேயு படி இயேசு கடவுள் அல்ல

——————–



இது பவுல் தீமோத்தேயு என்ற கிறிஸ்தவருக்கு எழுதிய இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது





1.பிதாவே தேவன், இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை


பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக

— 2 தீமோத்தேயு 1:2


அதாவது இயேசுவுக்கும் பிதா தான் தேவன் -எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை


———



2.தேவன் வேறு , நியாயந்தீர்க்க போகிற இயேசு வேறு என்பதே பவுலின் நம்பிக்கை


“”நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:””

— 2 தீமோத்தேயு 4:1


———-


3.இயேசு மரித்தோரிழுந்து எழுப்பப்பட்டவர் என்பதே பவுலின் நம்பிக்கை.. அதாவது தேவன் எழுப்பினார்


“தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.””

— 2 தீமோத்தேயு 2:8



———————




தீத்து படி இயேசு கடவுள் அல்ல

——————–


இது தீத்து என்ற கிறிஸ்தவருக்கு பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது



1.தேவன் வேறு இயேசு வேறு.. பிதா தான் தேவன் என்றும் , இயேசு என்பவர் கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை



¹ “தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:”


² “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.” (தீத்து 1:1-2)



அதாவது இயேசுவுக்கு தேவனும் பிதா தான்-எபேசியர் 1:17

————————






2.இயேசுவை மகாதேவன் என பவுல்  சொல்கிறாரா?



¹³ “நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.” (தீத்து 2: 13)


இங்கே இயேசுவை மகாதேவன் என மொழிபெயர்த்துள்ளார்கள். இது பவுலுடைய கொள்கைக்கே முரணானதாகும்.


ஏனெனில் பவுலுடைய கொள்கை பிதாவே தேவன் என்பதும் (1:1), அவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் (எபேசியர் 1:17) என்பதோடு, இயேசு வேறு தேவன் வேறு என்பதாகும்.


அப்படியிருக்க பவுல் இயேசுவை தேவன் என எங்குமே அறிமுகப்படுத்தாதிருக்க, இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்ப்பது தவறாகும்.


பவுலுடைய நம்பிக்கைப் படி இயேசு என்பவர் தேவன் அல்ல! மாறாக தேவனுடைய கிருபை, தேவனுடைய மகிமை , தேவனது குமாரன் என்பதாகும்.


தீத்து 2:11 இல் , இயேசுவின் முதல் வருகையை குறித்து , தேவனது கிருபை பிரசன்னமானது என்கிறார்:


“”ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,””

— தீத்து 2:11 ,



அதே போன்றே இரண்டாம் வருகையை குறித்து , மகாதேவனதும் இரட்சகரதும் மகிமையான இயேசுவின் பிரசன்னமாதலுக்கு காத்திருக்கிறோம் என்றே அவர் கூறுகிறார்.


அதாவது appearing of the glory (doxes) of the great God and Our Saviour, Jesus Christ.


மகாதேவனும் இரட்சகருமானவருடைய மகிமையான இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாதல் என்பதே இது குறிப்பதாகும்.


ஏனெனில் இயேசுவின் இரண்டாம் வருகையில் பிதாவுடைய மகிமையில் வருவதாகவே சுவிசேஷ கதைகள் கூறுகின்றன.


மேலும் இயேசுவை பவுல் இரட்சகர் என கூறுவது போல தேவனையும் பலதடவைகள் இரட்சகர் என குறிப்பிடுகிறார் (தீத்து 1:4, 2:9), அதாவது இவ்வசனங்களுக்கு சற்று முன்பு கூட தேவனை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

.


பவுலின் நம்பிக்கைப் படி, இயேசு தேவனால் இரட்சகராக எழுப்பப்பட்டவர் என்பதாகும். (அப்போஸ்தலர் 13:23).


சோ, தீத்து 2:13 இயேசுவை மகாதேவன் என பவுல் சொல்வதாக கூறுவது பவுலின் கருத்துகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகும்.


———-


3.தேவன் வேறு இயேசு வேறு.. பரிசுத்த ஆவி என்பவர் வேறு.. இயேசு மூலமாக பரிசுத்த ஆவியை தேவன் பவுலுக்கும் தீத்துவுக்கும் பொழிந்தாராம.


⁷ “அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். (தீத்து 3:7)

———-




———————


பிலோமோன் படி இயேசு கடவுள் அல்ல


——————-


இது பிலோமோன் என்ற கிறிஸ்தவருக்கும் அவரது சபையாருக்கும் ஒநேசிம் அடிமையை சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டி பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது.



1.பிதாவே தேவன், இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை


.”””நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.””

— பிலோமோன் 1:3 (TBSI)

அவரே இயேசுவுக்கும் தேவன் – எபேசியர் 1:17

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்