1 & 2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

 1 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

—————————

இது பவுல் தெசலோனிக்கியேர் சபைக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது



1.தேவன் வேறு இயேசு வேறு.. தேவன் என்பவர் பிதாவே.. கர்த்தர் என்பவர் இயேசு என்பதே பவுலின் நம்பிக்கை



¹ “பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.”


² “தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,”

(1 தெசலோனிக்கேயர் 1:1-2)


இயேசுவுக்கும் அவர் தான் தேவன் (எபேசியர் 1:17),

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


—————



2.இயேசு என்பவரை தேவன் தான் மரித்தோரிலிருந்து எழுப்பினார் ன்பதே பவுலின் நம்பிக்கை.. அவர் வேறு தேவன் வேறு


¹⁰ “அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. ” (1 தெசலோனிக்கேயர் 1:10)


——————

3.மீண்டும் இயேசுவை கர்த்தராம், பிதாவை தேவனாம்.. இதற்கு குறிப்பு 1 போதுமானது.


¹¹ நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. (1 தெசலோனிக்கேயர் 3:11)


———


4.பிதாவே தேவன் என்கிறார். அதனால் மீண்டும் யேசு வேறு தேவன் வேறு என தெளிவு


¹³ “இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. ” (1 தெசலோனிக்கேயர் 3:13)


————


5.இயேசு இறந்த பின் எழுந்தது போல, தேவன் கிறிஸ்தவர்களையும் எழுப்புவாராம். பிறகு மேகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களாம்.. இயேசுவோடு இருப்பார்களாம்.



¹⁴ இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.


¹⁶ “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.”


¹⁷ “பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” (1 தெசலோனிக்கேயர் :14,16-17)


இயேசுவை தேவனே எழுப்பியதால், இயேசு மரணித்த பின் எழுந்துள்ளார் என்பதே பவுலின் நம்பிக்கை…

சோ தேவன் வேறு இயேசு வேறு

——————————-




2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

————————————–


இது பவுல் தெசலோனிக்கியேர் சபைக்கு எழுதிய இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது



1.பிதாவே தேவன்.. இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை.. சோ இயேசு வேறு தேவன் வேறு



¹ “பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:”

² நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

(2 தெசலோனிக்கேயர் 1:1-2)


பிதா தான் இயேசுவ்கும் தேவன் -எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

——————-



2.இயேசு வேறு தேவன் வேறாக பிரித்து பவுல் எழுதுகிறார்


¹¹ “ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;” (2 தெசலோனிக்கேயர் 1:11)




“”நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,””

— 2 தெசலோனிக்கேயர் 2:16


சோ இயேசு வேறு தேவன் வேறு!!!!!



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்