எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

 எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

————

இந்த புத்தகம் யாரென்று அறியப்படாத நபர் மூலமாக எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம்


1.இதை எழுதிய ஆசிரியர் தேவன் வேறு இயேசு வேறு என வித்தியாசப்படுத்துகிறார்.


அதாவது இயேசவை தன் வாரிசாக தேவன் நியமித்தார் என்கிறார். அதாவது சொந்த பிள்ளை என்கிறார். இயேசு மூலமாக தேவன் உலகங்களை படைத்தார் என்கிறார். சோ இயேசு வேறு தேவன் வேறு.


¹ “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,”


² “இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.” (எபிரேயர் 1:1-2)

———–



2.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என வேறு பிரிக்கிறார். இயேசு தேவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தாராம்! குறிப்பாக தேவன் இனப்பெருக்கம் செய்த குழந்தை இயேசு என்பதாக இவர் கருதுகிறார்.


³ “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.” (எபிரேயர் 1:3)


——



3.இயேசு தேவனால் ஜனிப்பிக்கப்பட்ட (பெற்றெடுக்க பட்ட) பையன் என்பதே இவரது கருத்து.


இதற்காக தாவீதை குறித்து தேவன் சொன்னதாக கூறப்படும் வசனத்தையும் (சங் 2:7), சொலமோனை குறித்து தேவன் சொன்ன கருத்தையும் (2 சாமு 7:14-15) மிக்ஸ் பண்ணி, இயேசுவை குறித்து சொன்னதாக கதைவிடுகிறார்.


⁵ “எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?” (எபிரேயர் 1:5)


எது எப்படியோ, இயேசு வேறு தேவன் வேறு என இவரும் வேறுபடுத்துகிறார்.

———–


4.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என்கிறார். அதாவது இயேசு என்பவர் தேவனுடைய மூத்த மகனாம்.


⁶ “மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.” (எபிரேயர் 1:6)


இப்படி ஒரு வசனம் பழைய ஏற்பாட்டில் இல்லை… சும்மா அடித்து விடுகிறார். ஆனாலும் இயேசு வேறு தேவன் வேறு என பிரிக்கிறார்.

———–



5.அதிகாரமுள்ள ராஜாக்களை தேவன் என சொல்லும் வழக்கம் பழைய ஏற்பாட்டில் உள்ளதால், சங்கீதம் 45 இல் ராஜாவை குறித்து அவரது ஊழியர்கள் கூறியதை, அப்படியே இயேசுவை குறித்து சொன்னதாக கதைவிடுகிறார். (அதில் அந்த ராஜாவுக்கு தகப்பன்மாரும், மகன்களும், மகளும், மனைவியும் இருப்பதோடு மட்டுமல்ல, அவருக்கு தோழர்களும், அவருக்கு ஒரு தேவனும் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது)


⁸ “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.”


⁹ “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;” (எபிரேயர் 1:8-9)


இந்த வசனத்தில் கூட, குமாரன் எனப்படுபவருக்கு தேவன் இருப்பதாகவும், அந்த தேவன் தான் அவரை அவரது தோழர்களை விட மேன்மையாக்கி வைத்ததாகவும் கூறுகிறார்.. சோ இயேசு வேறு தேவன் வேறு என்பதே இவரது கொள்கை (1:9)


—————–


6 .இயேசு மூலமாக தேவன் படைத்தார் என்று நம்பிக்கையுடைய இவர், நோயாளி தேவனிடம் தன்னை பாதி வயதிலேயே சாகடித்து விட வேண்டாம் என ஜெபிக்கும் வசனத்தை , அப்படியே இயேசுவை குறிப்பதாக அவர் கதைவிடுகிறார்.


அத்தோடு இயேசுவை தேவன் பெற்ற மகன் என இவர் கருதுவதால், அவரும் பெற்றெடுத்த பின் நிலையாக உள்ளார் என்பதை கூறுவதற்கு இவ்வசனங்களை புகுத்துகிறார்.


¹⁰ “கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;”


¹¹ அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்;


¹² “ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.” (எபிரேயர் 1:10-12)


——————


7.குமாரனுடைய எதிரிகளை குமாரனது காலடியில் தேவன் போடும் வரை, தன் வலது பக்கத்தில் உட்கார சொன்னாராம்.


¹³ “மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?” -எபிரேயர் 1:13)


இவ்வசனங்களில் இயேசு தேவதூதரை விட மேலானவர் என்பதை காட்ட, இவ்வாறெல்லாம் திரித்து எழுதிய இவர், இயேசு வேறு தேவன் வேறு என்றே கருதுவதோடு, இயேசுவுக்கும் அந்த தேவன் தேவனாக இருக்கிறார் (1:9) என்கிறார்

————–


8.இயேசுவை தேவதூதரிலும் சற்று சிறியவராக்கினாராம். பிறகு அவரை முடிசூட்டினாராம்.இயேசு என்ற இரட்சிப்பின் அதிபதியை உபதிரவங்களால் பூரணப்படுத்தினாராம்.


⁹ “என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”(எபிரேயர் 2:9-10)


¹⁰ “ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.”


சோ இயேசுவை தேவனின் லிருந்து வித்தியாசப்படுத்தியே இவரும் எழுதியுள்ளார்

————-



9.மீணாடும் இயேசு வேறு தேவன் வேறு என வேறுபடுத்துகிறார்.


அதாவது தேவனது நாமத்தை இயேசு தன் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவே தேவனை துதிபாடுவாராம். (2:12)


அதேபோல தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்பாராம்… நான் வேறு தேவன் வேறு பிரித்து சொன்னதாக சொல்கிறார் (2:13)


இயல்பிலே அவர் தேவனது பிள்ளை என்பதே இவரது கருத்து.. ஆனாலும் தேவன் இயேசுவுக்கும் தேவன் என்பதும் இவரது கருத்து

¹² “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;”


¹³ “நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்

¹⁴ “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், (எபிரேயர் 2:12-14)

சோ இயேசு வேறு தேவன் வேறு


—————–


10.இயேசு என்பவரும் தேவனது வீட்டில் மோசேயை போல ஏற்படுத்தப்பட்டவர் என்பதே இவரது கருத்து. அதாவது இயேசு வேறு தேவன் வேறு




² “மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.”

⁴ “ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரேயர் 3:2,4)

————



11.இயேசு என்பவர் தேவனது மகனாம்.. அவர் பிரதான ஆசாரியனாம். அவர் எபிரேயரை போல் பரிதவிக்கும் பிரதான ஆசாரியராம்..


ஆசாரியர் வேறு தேவன் வேறு..குமாரன் வேறு தேவன் வேறு.


¹⁴ “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.”

¹⁵ “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”

(எபிரேயம் 4:14-15)

—————–


12.இயேசு ஒன்றும் தானாக ஆசாரியனாக ஆகவில்லையாம்… தேவன் தான் அவரை அவ்வாறு உயர்த்தி ஏற்படுத்தினாராம்..

சோ தேவன் வேறு இயேசு வேறு என்பதே அவரது கருத்து




⁴ “மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.”

⁵ “அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.”

⁶ அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (எபிரேயர் 5:4-6)

—————


13.இயேசு பூமியில் மனுசனாக உள்ள வேளையில் கூட தேவன் ஒருவர் இருந்துள்ளார்.. அவரிடமே இயேசு ன்னை இரட்சிக்குமாறு வேண்டினார் என இவர் எழுதுகிறார். ஆனாலும் அவர் அந்த தேவனோட பையன் என்பதே இதன் கருத்து.

⁷ “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,”

⁸ “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,” (எபிரேயர் 5:7-8)

————-



14.பிரதான ஆசாரியன் என்ற நாமத்தை இயேசுவுக்கு கொடுத்ததே தேவன் தான் என்கிறார் இவர். அதாவது இயேசு வேறு தேவன் வேறு

¹⁰ மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். (எபிரேயர் 5:10)

———–


15.இயேசு எப்போதுமே கிறிஸ்தவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்கிற ஆசாரியர் என்றே இதை எழுதியவர் கூறுகிறார்



²⁵ “மேலும், தமது மூலமாய்  தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”


²⁶ “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.” (எபிரேயர் 7:25-26)


சோ, தேவனிடம் வேண்டுதல் செய்பவர் தேவனல்ல…இயேசு வேறு தேவன் வேறு

————




16.இயேசு மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்தில் உட்காருகிறவராம்.. அதாவது தேவனுடைய ஆசனத்தில் அல்ல என்பது இவரது கருத்து.


இயேசு ஆசாரியன் ஊழியத்தை பெற்றவர்.


சோ அவரு வேறொரு நபர்.. தேவனல்ல


¹ “மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,”


² “பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.”


⁶ “இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.” (எபிரேயர் 8:1-2,6)

———–


17.இயேசு தன்னை தேவனுக்கு பலியாக செலுத்தினாராம். மேலும் இயேசு என்பவர் மத்தியஸ்தர் என்பதே இவரது கருத்து


¹⁴ நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!


¹⁵ “ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” (எபிரேயர் 9:14-15)


————–


18.தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கொள்கை.. அதுமட்டுமின்றி யேசுவுக்கும் அந்த தேவனே தேவனாக இருக்கிறார் என்பதே இவரது கொள்கை



⁵ “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;”


⁶ “சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.”


⁷ “அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.”

⁹ “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.” (எபிரேயர் 10:5-7,9)


இயேசுவுக்கு உடலை ஆயத்தம் செய்தவர் தேவன், இயேசு அந்த தேவனை என் தேவனே என அழைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்

—————-




19.இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணினவர் தான் தேவன் என்கிறார்..


²⁰ “நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,” (எபிரேயர் 13:20)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்