எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

 எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

—————–


எபேசு பட்டணத்து கிறிஸ்தவ மக்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக இது கருதப்படுகிறது.



1.இயேசு வேறு தேவன் வேறு.. பிதாவே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை.



² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.”


³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 1:1-2)


————-

2 .எபேசியரும் இயேசு மூலமாக தேவனது வாரிசு பிள்ளைகளாம்.. இதன்படியும் யேசு வேறு தேவன் வேறு என்பதே தன் நிலைப்பாடென உறுதிபடுத்துகிறார்



⁶ “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” (எபேசியர் 1:6)

———–


3.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் என்பதே பவுலின் நம்பிக்கை (எபேசியர் 1:17)

அவரே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாராம்.


¹⁷ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,”


¹⁸ “தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;”


¹⁹ “தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” (எபேசியர் 1:17-19)


——————


4.இயேசுவின் அந்தஸ்தை உயர்த்தியதே தேவன் தான், அவரை தன் வலது பக்கத்தில் உட்கார செய்ததும் தேவன் தான், சகலத்தையும் இயேசுவுக்கு கீழ் படுத்தி கொடுத்துவரும் தேவன் தான், சபைக்கு தலைவனாக இயேசுவை ஆக்கியதும் தேவன் தான் என்பதே பவுலின் நம்பிக்கை


²⁰ “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,”


²¹ “அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,”


²² “எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,”


²³ எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்

(எபேசியர் 1:20-23)


———


5.பவுல் பிதாவிடமே வேண்டுதல் செய்கிறார்


.

¹⁵ “நம்முடைய கர்த்தாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,”

¹⁶ “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், (எபேசியர் 3:15-16)

———-


6.எல்லோருக்கும் தேவன் ஒருவரே என்பதே பவுலின் நம்பிக்கை.. அதுவே

⁵ “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,”


⁶ “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.” (எபேசியர் 4:5-6)

அவரே இயேசுவுக்கும் தேவன் என அவரே குறிப்பிடுகிறார் (எபேசியர் 1:17)

————-



7.எபேசியரை இயேசுவுக்குள் மன்னித்தது தேவன் தான் என்கிறார் பவுல்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு


.

³² “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)


————


8.இயேசு தன்னை தேவனுக்கு பலியிட்டாராம்…சோ இயேசு வேறு தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை


² “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:2)

————


9.பவுல் இயேசுவின் பெயரால் தேவனை ஸ்தோத்திரிக்கிறாராம்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு


²⁰ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,” (எபேசியர் 5:20)

————–


10.பிதாவே தேவன்.. இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை


““”பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.””

— எபேசியர் 6:23

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


சோ இயேசுவை கடவுள் என அடம்பிடிப்பதை நிறுத்தவும்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்