ஈஸா நபியின் கன்னிப் பிறப்பு - ஏன் எப்படி? இஸ்லாமும் கிறிஸ்தவமும்
ஈஸா நபி கன்னியிடம் பிறந்தார் - எப்படி? ஏன்? இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம் -------------------------- இஸ்லாம் கூறுவது என்ன? எப்படி என்பதற்கான பதில்: (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது .” (அல்குர்ஆன் : 3:47) இதன்படி அல்லாஹ் படைப்பதன் மூலம் தான் உண்டானார் என்பதை தெளிவாக சொல்கிறது. ஆகு என்ற கட்டளையிடுவதன் மூலம் அவர் படைக்கப்பட்டார். எப்படி மர்யம் கர்ப்பமானார்? இறைவன் தன் தூதரான ரூஹ் மூலம் மர்யமின் மீது ரூஹை (உயிரை) ஊதியதன் மூலம் உண்டானார். அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அல்குர்ஆன் : 19:17) (அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் ...