சனி, 11 ஏப்ரல், 2026

யூதர்கள் யார்? -இஸ்லாமும் பைபிளும் கூறுவது என்ன

 


இஸ்லாமும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் யூதர்களை பற்றி என்ன கூறுகிறது

 

இஸ்லாம்:

1*முகம்மது நபியிற்கு முன்புள்ளவர்களின் மறுமை நிலை:

 ஈமான்கொண்டவர்களிலும் (முஸ்லிம்கள்) ,யூதர்களிலும், கிறிஸ்தவர்களிலும், ஸாபிஈனிலும் எவர்கள் அல்லாஹ்வையும் மறுமையையும் விசுவாசம் கொண்டு, நற்செயல் செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் நற்கூலி உண்டு. (மறுமையில்) அவர்கள் அச்சப்படவும் மாட்டார்கள். கவலைப்படவும் மாட்டார்கள் (2:62&5:69)

முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான சுவர்க்கம் நுழைபவர்கள் மூஸாவின் சமூகம் (யூதர்கள்) தான் என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள். (புகாரி 5705)

2*முகம்மது நபியிற்கு முன்பு, யூதர்கள் முழு மனிதர்களிலும் இறைவனால் மேன்மையாக்கப்பட்டிருந்தார்கள்:

இஸ்ராயீலின் பிள்ளைகளே! உங்கள் மீதான என் அருட்கொடைகளையும், நான் உங்களை அகிலத்தார் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்தேன் என்பதையும் நினைவுகூர்ந்துபாருங்கள் (2:47)

3*யூதர்கள் தமக்கு விருப்பமில்லாததை இறைவனின் தூதர்கள் கொண்டுவந்தபோது அவர்களில் சிலரை மறுத்தனர். வேறுசிலரை கொன்றனர்:

மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின் தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். இன்னும் மர்யமின் மகன் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொடுத்தோம். அவரை பரிசுத்த ஆவி மூலம் பலப்படுத்தினோம். உங்கள் மனம் விரும்பாததை ஒரு தூதர் கொண்டுவந்தபோதெல்லாம், நீங்கள் கர்வம் கொண்டீர்கள். மேலும் சிலரை பொய்யாக்கினீர்கள்.  சிலரை கொன்றீர்கள். (2:87)

(இங்கே அவர்கள் ஒரே இனமாக கருதப்படுகிறார்கள்)

இவ்வாறே இறுதியாக முகம்மது நபியையும் கொல்லுவதற்காக விசம் தடவிய ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக வழங்கினர். (புகாரி 5777)

4*எல்லா யூதர்களும் ஒரே மாதிரி இல்லை:

வேதக்காரரில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீர் ஒரு (பொற்)குவியலை ஒப்படைத்தாலும் , அதை உம்மிடம் திருப்பி ஒப்படைப்பார்கள். அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு தீனாரை ஒப்படைத்தாலும் , நீர் அவர்களிடம் அதை தொடர்ந்து கேட்டாலொழிய திருப்பி தரமாட்டார்கள். அதற்கு காரணம், "பாமரர்களிடம் நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை" என அவர்கள் கூறுவது தான். (3:75)

அவர்கள் எல்லோரும் சமம் அல்ல! வேதக்காரர்களில் ஒரு சமூதாயத்தினர்  நேர்மையாக இருக்கிறார்கள் (3:113)

அவர்களில் சிலரைத் தவிர,  எப்போதும் ஏதேனும்  மோஷடியிலேயே இருந்துகொண்டிருப்பதை காண்பீர். இவர்களை மன்னித்து புறக்கணித்துவிடுவீராக (5:13)

 

5*யூதர்கள் ஈஸா நபியை கொல்ல திட்டம் தீட்டியதால், யூதர்களைவிட ஈஸாவை பின்பற்றியோர் மறுமை வரை மேலோங்கி இருப்பார்கள். (குர்ஆன் 3:55)  அத்தோடு அவர்கள் மீது இழிவு, ஏழ்மை அல்லாஹ்வின் கயிற்றையும் மனிதர்களின் கயிற்றையும் கொண்டில்லாவிடில் மறுமை வரை நிலைத்திருக்கும். காரணம் அவர்கள் இறைவனுடைய வசனங்களை மறுத்து நபிமார்களை கொன்றதினால் ஆகும்.(3:112)

அதாவது அல்லாஹ்வின் கயிற்றினை கொண்டு பாதுகாப்பு பெற்றாலோ (இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா கட்டுவதன் மூலம்-அப்படி கட்டினால் இஸ்லாமிய அரசு அவர்களுக்காகவும் போரிடும் (புகாரி 3052)), மனிதர்களின் கயிற்றினை கொண்டு பாதுகாப்பு பெற்றாலோ தவிர எப்போதும் இழிவு இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் அவர்களின் மனதில் ஏழ்மை இருந்துகொண்டேயிருக்கும்.

இப்போது கூட அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள் போடும் பிச்சையிலேயே அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதன்மூலமும் அவர்கள் மறுத்த அதே ஈஸாவை பின்பற்றியவர்களின் கீழாலேயே இருக்கிறார்கள்.

 

6*முஸ்லிம்களுடனான பகைமை:

மனிதர்களிலேயே  முஃமின்களுக்கு பகைமையால் மிக கடுமையானவர்களாக யூதர்களையும் , இணைவைப்போரையும் காண்பீர். அவர்களில் நேசத்தால் மிக நெருக்கமானவர்களாக தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறுவோரை காண்பீர். காரணம் அவர்களில் கற்றறிந்த குருமார்களும் துறவிகளும் இருக்கின்றதாலும் அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள் என்பதாலும் ஆகும் (5:82) -(முறையாக கற்ற குருமார் இல்லாவிட்டால் பெருமைக்காரர்கள் குருமாராக இருந்தால் அப்போது கிறிஸ்தவர்களும் பகைமையை காட்டுபவர்களாகவே இருப்பர்- அதுவே சிலுவைப்போர்களுக்கு காரணம்)

7.யூதர்கள் பூமியில் இரண்டு தடவை குழப்பம் செய்வார்கள் என்றும்  என தவ்ராத்தில் விதிக்கப்பட்டது:

முதலில் குழப்பம் செய்தபோது அவர்களுக்கு எதிராக வலிமையான அடியார்கள் (பாபிலோனியர்) ஏவிவிடப்பட்டார்கள். அதன்பின் மீண்டும் யூதர்களுக்கு செல்வமும் பிள்ளைகளும் அதிகமாக கொடுக்கப்பட்டனர். இரண்டாவது தடவையாக குழப்பம் செய்த போது முதல்தடவையில் ஆலயத்தில் நுழைந்ததுபோல இரண்டாவது தடவையும் நுழைந்து அதை முற்றாக அழித்துவிட்டனர் (இது ரோமர்களால் நடந்தது.)-17:5-7

இதன்பின் இறைவன் மீண்டும் எச்சரித்தான்: "உங்கள் இறைவன் உங்கள்மீது  கருணைபுரியக்கூடும். நீங்கள் (குழப்பத்திற்கு) திரும்புவீர்களானால் நாமும் (முன்புபோல தண்டிப்பதற்கு) திரும்புவோம். மேலும் காஃபிர்களுக்கு நரகத்தை சிறைச்சாலையாக ஆக்கியுள்ளோம். (17:8)

இவ்வசனத்தில் குறிப்பிட்டது போன்றே, யூதர்கள் குழப்பம் செய்த போது முஹம்மது நபி மூலம் வரிகட்டுபவர்களாக  கீழ்படுத்தப்பட்டார்கள்.

தற்போது 1948 இலிருந்து மீண்டும் பூமியில் குழப்பம் செய்ய தொடங்கியுள்ளார்கள்.   நபிகளாரின் முன்னறிவிப்பின்படி தஜ்ஜாலின் வருகைக்கு முன்னதாகவே புனித இடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுவார்கள்.

 

8*யூதர்களின் இறுதி முடிவு:

யூதர்கள் உங்களோடு போர்புரிவார்கள்.அவர்கள்மீது உங்களுக்கு வெற்றியளிக்கப்படும். அப்போது கல், "ஓ முஸ்லிமே! என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். அவனை கொல்" என்று சொல்லும். (புகாரி 3593)

இது இஸ்ஃபஹானிலிருந்து தஜ்ஜாலை பின்பற்றும் 70,000 ஆயுதம் தரித்த யூதர்களை குறிப்பதாக ஸஹீஹ் ஜாமிஉ 7875 இலே விளக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏனைய யூதர்கள் ஈஸா நபியை முறையாக ஈமான்கொள்வார்கள் (குர்ஆன் 4:159- "வேதக்காரரில் எவரும் (ஈஸாவாகிய) அவரின் மரணத்திற்கு முன் அவரை ஈமான் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்)

ஆக யூதர்களிலுள்ள போர்க்குற்றவாளிகள் இறுதியில் முற்றாக அழிக்கப்படுவதோடு ஏனையோர் முஃமின்களாவார்கள் என்பதே இஸ்லாம் கூறுவது.

(ஆனால் இஸ்லாமிய அரசின் கீழுள்ள மாற்றுமத (யூத/கிறிஸ்தவர்/மஜூஸிகள்) ஒப்பந்தப்பிரஜையை நியாயமின்றி கொன்றால், கொன்றவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான்-புகாரி 3166

இஸ்லாம் போர்க்களத்திலும் பெண்கள்,சிறுவர்கள் போன்றோரையும் (புகாரி 3014-3015), போரிடாத கூலியாட்களையும் கொல்லக்கூடாது (அபூதாவூத் 2669) என் இஸ்லாம் குறிப்பிடுகிறது. )

 __________________________________________________________________________

புதிய ஏற்பாடு:

1*- இயேசுவை ஏற்காத யூதர்களின் நிலை-

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வரும் அநேகர் ஆபிரகாம்,ஈசாக்,யாக்கோபு ஆகியோருடன் பந்தியிருப்பார்கள். ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ (யூதர்களோ) இருளிலே (நரகத்தில்) இருப்பார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத்தேயு 8:11-12) (அதாவது மறுமை நிலை)

*இயேசுவை ஏற்காத யூதர்கள் மோசேயையும் நம்பாத அவிசுவாசிகளே:

யோவான் 5:46-47 IRVTam

[46] நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. [47] அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.

https://bible.com/bible/1899/jhn.5.46-47.IRVTam

*இயேசுவை ஏற்காதவர்கள் தேவனை உடையவர்கள் அல்ல!!

1 யோவான் 2:22-23 IRVTam

[22] இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. [23] குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான்.

https://bible.com/bible/1899/1jn.2.22-23.IRVTam

2*இயேசுவை நம்பாதவன் மீது கடவுளின் கோபம் நிலைநிற்கும்:

யோவான் 3:36 IRVTam

[36] குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

https://bible.com/bible/1899/jhn.3.36.IRVTam

3*இயேசுவை ஏற்காதவன் தன் இனத்திலிருந்து அழிக்கப்படுவான்:

அப்போஸ்தலர் 3:23 IRVTam

[23] அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.

https://bible.com/bible/1899/act.3.23.IRVTam

4* .இயேசுவை ஏற்காத யூதர்கள் முழு மனிதர்களுக்கும் விரோதிகள், தீர்க்கதரிசிகளை கொன்றவர்கள். எல்லா காலத்திலும் தம் பாவங்களை நிறைவாக்குவார்கள்- தேவனது கோபம் அவர்கள் மீது வந்திருக்கிறது:

1 தெசலோனிக்கேயர் 2:15-16 TAOVBSI

[15] அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து, [16] புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.

https://bible.com/bible/339/1th.2.15-16.TAOVBSI

லூக்கா 11:49-50 TAOVBSI

[49] ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள். [50] ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.

https://bible.com/bible/339/luk.11.49-50.TAOVBSI

*இயேசுவை ஏற்காதவர்கள் வஞ்சகர்களும் அந்திகிறிஸ்துவும் ஆவார்கள்:

2 யோவான் 1:7 IRVTam

[7] சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான்.

https://bible.com/bible/1899/2jn.1.7.IRVTam

5.உண்மையான இஸ்ரவேலரும் யூதரும் இயேசுவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளே ஆவார்கள். பிறப்பால் யூதரும் இஸ்ரவேலரும் இதில் இல்லை. (replacement theology- இதுவே ஆர்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கை)- காரணம்: இயேசுவே ஆபிரகாமின் வாக்குத்ததத்தின் சந்ததி

கலாத்தியர் 3:7-9, 16, 18-19 IRVTam

[7] ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். [8] மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது. [9] அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 


[16] ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே. 

[18] அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே. [19] அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது. 

https://bible.com/bible/1899/gal.3.7-19.IRVTam

கலாத்தியர் 3:29 IRVTam

[29] நீங்கள் கிறிஸ்துவுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தினால் வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.

https://bible.com/bible/1899/gal.3.29.IRVTam

ரோமர் 2:28-29 IRVTam

[28] எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை. [29] உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது.

https://bible.com/bible/1899/rom.2.28-29.IRVTam

மத்தேயு 21:43 IRVTam

[43]  ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.

https://bible.com/bible/1899/mat.21.43.IRVTam

இயேசுவை சிலுவையில் அறைந்த பின் யூதர்-யூதரல்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது. மாறாக ஒரே புதிய மனுசனே உண்டு:

கலாத்தியர் 3:28 IRVTam

[28] யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள். 

https://bible.com/bible/1899/gal.3.28.IRVTam & ரோமர் 10:12& 1 கொரிந்தியர் 12:13

கொலோசெயர் 3:10-11 IRVTam

[10] தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. [11] அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார். 

https://bible.com/bible/1899/col.3.10-11.IRVTam

எபேசியர் 2:14-16 IRVTam

[14] எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, [15] சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி, [16] பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 

https://bible.com/bible/1899/eph.2.14-16.IRVTam

6.இஸ்ரவேலர் முற்றாக தள்ளப்படவில்லை. அவர்களிலிருந்தும் விசுவாசிகள் இருந்தனர். அவிசுவாசிகளும் இருந்தனர். கடைசியில் இயேசு வந்தபின் ,எல்லோரும் ஏற்பார்கள் என்பதே பவுலின் நம்பிக்கை.

ரோமர் 11:1, 5, 8, 11, 26-32 IRVTam

[1] இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.

[5] அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது.  (அதாவது தன்னையும் இஸ்ரவேலரான கிறிஸ்தவர்களையும் குறிப்பிடுகிறார் பவுல்)

[8] தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.  (நம்பிக்கை கொள்ளாத யூதர்களை குறித்து பவுல் சொல்கிறார்)

[11] இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.

 (யூதர்கள் வழிகெட்டது யூதரல்லாதவரை இரட்சிப்பதற்காம்- அதாவது யூதர்கள் கிறிஸ்தவத்தை  ஏற்காததால் , புறஜாதிகளிடம் இவர்கள் போதிக்க சென்றனர். அதையே பவுல் இதனுடன் முடிச்சு போடுகிறார்)

[26] இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். “மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்; [27] நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது. [28] நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். [29] தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. [30] எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, [31] அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள். [32] எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

https://bible.com/bible/1899/rom.11.1-32.IRVTam

இதன்படி கடைசியில் எல்லா யூதர்களும் இரண்டாம் தடவையாக இயேசு வந்ததன் பின்பே, மீண்டும் முழுமையாக விசுவாசிப்பார்கள் என்கிறார் பவுல்.

இஸ்லாமிய நம்பிக்கைப்படியும், இயேசுவின் வருகையுடன் முழு யூதர்களும் அவரை ஈமான்கொள்வார்கள். (குர்ஆன் 4:159, புகாரி 3448)

(ஆனால் தற்போதுள்ள கிறிஸ்தவர்கள் தம் குழம்பிப்போன புதிய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு, இயேசுவின் இரண்டாம்வருகை நியாயத்தீர்ப்புக்காகவே வருகிறது என நம்புகிறார்கள். உண்மையில் பூமியில் அவிசுவாசத்தை நீக்கி தூய்மையான மார்க்கத்தை பின்பற்றவைப்பதற்கே அவர் வருவார் என்பதே பவுலின் இந்த வாசகமும் அமைந்திருக்கிறது)

 

7*.யூதர்களுக்கும் இஸ்ரவேலருக்கும் இந்த கிறிஸ்தவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமா?

*இயேசுவை முறையாக ஏற்காத கெட்டசெயலையுடைய மக்களுக்கு வாழ்த்து சொல்வதும் கூடாது. வாழ்த்து சொன்னால் அவர்களின் பாவங்களில் இவர்களுக்கும் பங்கு உண்டு என்கிறார் யோவான்:

2 யோவான் 1:7, 9-11 IRVTam

[7] சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான்.

[9] கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். [10] ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். [11] அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

https://bible.com/bible/1899/2jn.1.7-11.IRVTam

இப்படி அந்த யூதர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அவர்களின் அவிசுவாசத்திலும் வஞ்சகத்திலும் பங்குள்ளவர்களே ஆவார்கள்.

*இயேசுவை ஏற்காதோர் மீது கர்த்தரின் கோபம் உண்டு. அவர்கள் தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும் தம் பாவத்தை நிறைவாக்குபவர்களும் ஆவர். -அவர்களை ஆதரிப்பது தேவனை எதிர்ப்பதாகும்.

யோவான் 3:36 IRVTam

[36] குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

https://bible.com/bible/1899/jhn.3.36.IRVTam

1 தெசலோனிக்கேயர் 2:15-16 IRVTam

[15] அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து, [16] யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது.

https://bible.com/bible/1899/1th.2.15-16.IRVTam

இதன்படி யூதர்களாக இயேசுவை மறுத்துக்கொண்டு இருப்பவர்கள் மீது தேவனின் கோபம் இருப்பதால், அத்தகையோரை ஆதரிப்பது , தேவனது கோபத்தை சுமப்பதற்கு சமமானது.

 

*தன்னை ஏற்காத யூத தலைவர்கள் திருந்தவோ மன்னிக்கப்படவோ கூடாது என்பது தான் அந்தக்காலத்திலேயே இயேசுவின் ஆசை- அதாவது நலவு நாடவில்லை!!

மாற்கு 4:11-12 IRVTam

[11] அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12]  “அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.

https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam

ஆகவே அவிசுவாசியாகவும் துர்க்கிரியைகளையும் உடையவர்களான தற்போதுள்ள யூதர்களை ஆதரிப்பது அவர்களின் பாவத்திலே பங்குள்ளவர்களே இவர்கள் என காட்டுகிறது. இயேசுவோ அவர்களுக்கு ஆன்மீக நலவை கூட நாடவில்லை!

(மேசியா வந்த பின்பே யூதர்கள் திருந்துவார்கள். அதுவரை அவர்களுக்கு ஆதரவு கூறுவோர் பாவிகளே ஆவார்கள்.)


*இயேசுவின் வருகைக்கு இஸ்ரேல் தேசமாக வேண்டுமா?

சியோனிச அறிவீனத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் , இஸ்ரேல் தளிர்க்கும்போதே இயேசு வருவார் என மத்தேயு 24:32-33 ஐ குறிப்பிடுகிறார்கள்.

காரணம், அத்திமரம் என இஸ்ரவேலரை பழைய ஏற்பாடு சொல்வதால், இங்கே "அத்திமரம் தளிர்க்கும்போது வசந்தாகலம் வந்தாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள்."

உண்மையில் வசந்தகாலத்தின்போது மரங்கள் தளிர்க்கும். அப்படியே அத்திமரம் தளிர்த்தால், அதை வசந்த காலம் என அறிவது போல, இயேசு தன் வருகைக்கான அடையாளங்களாக கூறப்பட்ட கொடூரங்களான கடும் உபத்திரவம் ஏற்படும் என்றும் பிறகு சூரியன் இருளடையும், சந்திரன் ஒளிகொடுக்காதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும் என இயேசு குறிப்பிட்டவை நடக்கும்போது இயேசு வந்துவிட்டார் என்று அறியவேண்டும் என்றே சொல்கிறார். (மத்தேயு 24:29-33). அத்தோடு இதே விசயத்தை லூக்கா சொல்லும்போது, "அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் துளிர்க்கிறபோது வசந்தகாலம் வந்தாயிற்று என அறிவீர்கள்" (லூக்கா 21:29-30).. 

அதாவது இங்கே வசந்த காலம் என கூறப்படுவது மரங்கள் தளிர்க்கும் காலத்தையே தான். இவர்கள் உருட்டுவது போல அல்ல! வசந்தகாலத்தின் அடையாளமாக மரங்கள் தளிர்ப்பது போல இயேசுவின் வருகையின் முன் இந்த கொடூர துன்பங்கள் , வானம் பூமியில் கடுமையான அழிவுகள் ஏற்படுவதை இயேசு குறிப்பிடுகிறார். இதிலே இஸ்ரேல் தேசம் உருவாகும் என எதுவுமில்லை!!

8.கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டுமா?

கத்தோலிக்கர்களும் ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் இதிலே நடுநிலையை கையாள்வதை விரும்புகிறார்கள். பரிசுத்த ஆவி தம்மிடம் இருப்பதாக கூறிக்கொள்ளும் பைபிளையே ஒழுங்காக படிக்காத மூடர்களோ இஸ்ரேலுக்கு சொம்பு தூக்குகிறார்கள்.

கத்தோலிக்கர்களும் ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் இந்த இஸ்ரவேலர் பழைய ஏற்பாடு கூறும் ஆவிக்குரியவர்கள் அல்லர் என நம்புவதால் யூதர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியையே தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தற்குரிகளோ, இஸ்ரேல் உருவானது பழைய ஏற்பாட்டு தீர்க்கரிசன நிறைவேற்றம் என நம்புவதால் தான் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதையும் இஸ்ரேல் செழிப்பாக இருப்பதையும் விரும்புகின்றனர்.

இத்தகையோர் யூதர்களின் பாவத்தில் பங்குள்ளவர்கள் என்பது 2 யோவான் 1:7&10-11 தெளிவாக்குகிறது.

பவுலோ ஒருபடி மேல சென்று, குடும்பத்திலே சிலைவணங்கி, திருடன்,கொள்ளைக்காரன், விபச்சாரகனாகவோ இருந்தால் அவனோடு ஒன்றாக பழகவோ சாப்பிடவோ கூடாது. அவனை துரத்திவிட வேண்டும் என்கிறார்

1 கொரிந்தியர் 5:11-13 IRVTam

[11] நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. [12] சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? [13] வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

https://bible.com/bible/1899/1co.5.11-13.IRVTam

வெளியிலுள்ளவர்கள் குறித்து, அவர்கள் மீது அதிகாரம் இல்லாததால்   நிர்ப்பந்தம் காரணமாக இத்தகையோருடன் கலக்க கூடாது என எழுதவில்லை என்றும் விளக்கியுள்ளார் (1 கொரி 5:10)

 ஆனால் இஸ்ரேலிலோ விபச்சாரம்,ஓரினச்சேர்க்கை ,மது எல்லாம்  அனுமதிக்கப்பட்டதாகவே உள்ளது. இதை தான் தேவன் விரும்புவாரோ?

 

ஆனால் முஸ்லிம்களோ, இயேசுவை கிறிஸ்து (அல்மஸீஹ்-மேசியா) என்றும், இறைவனின் தூதர் என்றும், கன்னியிடம் பிறந்தவர் என்றும்,  அவரது தாய் உண்மையாளர் என்றும் உலகத்திலுள்ள பெண்களிலே தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் நம்புகிறார்கள்.

கிறிஸ்தவம் இயேசுவை நமக்காக சாபமானார் (கலா 3:13) என்றும் பாவத்தை தண்டிப்பதற்காக பாவ உடலில் இயேசுவை அனுப்பி இயேசுவை பலியாக்கி பாவத்தை தண்டித்தார் (1கொரி8:3) என்றும்   நரபலியை இஸ்லாம் ஏற்கவில்லை. மாறாக சிலுவையில் அறையப்பட்டவர் இயேசு அல்லாத வேறுநபர் என்றும் இயேசுவை போன்று மக்களுக்கு தோன்றியது என்றும் அவரை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திக்கொண்டான் என்றும் அவரது மரணத்தின்முன் யூதர்கள் அவரை விசுவாசிப்பார்கள்  என்றும் கூறுகிறது (4:156-159).

 

இவ்வாறு கொள்கை ரீதியில் யூதர்களைவிட முஸ்லிம்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும், குறைந்தபட்சம் நீதியின்படியாவது, அநீதியை ஆதரிக்காமல் இருப்பது அவர்கள் மீதுள்ள கடமை ஆகும்.

மத்தேயு 25:34-46 IRVTam

[34] அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். [35] பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; [36] ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். [37] அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? [38] எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? [39] எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். [40] அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். [41] அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். [42] பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; [43] அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். [44] அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். [45] அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். [46] அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.

https://bible.com/bible/1899/mat.25.34-46.IRVTam

 

எளியவர்களான பசியாக இருப்பவர்களுக்கு உணவு செல்ல தடையாக இருந்து, ஆடை செல்ல தடையாக இருந்து, குடிநீரை தட்டுப்பாடாக்கி, நோயாளிகளுக்கு கூட மருத்துவம் கிடைக்காதபடிக்கு கொடூரங்களை செய்கிறவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதென்பது அவர்களின் அத்துனை துர்க்கிரியைகளிலும் பங்குள்ளவர்களே இந்த பரிசுத்த ஆவி நிறைந்த இந்த அறிவுசூனியங்களாவர்.

 

ஹமாஸ் செய்வது சரியா?-  அமைதியாகவுள்ள மாட்டை துன்புருத்திக்கொண்டே இருந்தால் அது ஒருநாள் முட்டுமல்லவா? மிருகமே இப்படி நடக்கும்போது, 70 வருடங்களாக ஒடுக்கப்பட்டும் துரத்தியடிக்கப்பட்டும் இருப்பவர்கள் எதிர்த்துத்தாக்காமல் இருப்பார்களா?

 

இஸ்ரவேலர் தாம் குடியிருக்க கொடுக்கப்பட்ட தேசத்திலே சிலவணங்கிகளை உயிரோடு விட்டால் கெட்டுப்போய் விடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஈவிரக்கமின்றி மூச்சுவிடும் எதையும் (குழந்தை+ஆடுமாடு+கழுதை...) உயிரோடு விடாமல்  கொன்றொழிக்குமாறு கர்த்தரே சொன்னாரே (உபாகமம் 20:16-18), அமெலேக்கியர் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது எதிர்த்ததற்காக 400 வருடங்கள் கழித்து வாழ்ந்த அவர்களின் சந்ததியினரை ஈவிரக்கமின்றி குழந்தைகள்,பெண்கள்,மிருகங்கள் என அனைத்தையும் கொன்றொழிக்குமாறு கர்த்தர் சொன்னாரே (1 சாமுவேல் 15:2-3), இத்தகைய போதனைகளை சரிகண்டுவிட்டு, ஹமாஸ் செய்வதில் எதையாச்சும் குறை காண முடியுமா?

 

ஆகவே இந்த சமாளிப்புகளெல்லாம் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு செல்லுபடியாகாது!!

 ____________________________________________________________________________________________

யூதர்களை பற்றி பழைய ஏற்பாடு

 

1.மறுமை பற்றியோ சொர்க்கம் போவார்கள் என்றோ பழைய ஏற்பாடு சொல்லவில்லை! மாறாக உலகத்தில்  ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை பெறுவார்கள் என்றே சொன்னது:

 

ஆதி 15:13-16 IRVTam

[13] அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும். [14] இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள். [15] நீ சமாதானத்தோடு உன் முன்னோர்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்செய்யப்படுவாய். [16] நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார்.

https://bible.com/bible/1899/gen.15.13-16.IRVTam

 

2.யூதர்களுக்கு இந்த வாக்குறுதி நிபந்தனைக்குற்பட்டது.

 

உபாகமம் 31:16-18, 20-21, 27, 29-30 IRVTam

[16] யெகோவா மோசேயை நோக்கி: “நீ உன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்படப் போகிறாய்; இந்த மக்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தெய்வங்களை, விபசாரம் செய்வதுபோலப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடன் நான் செய்த உடன்படிக்கையை மீறுவார்கள். [17] அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் அழிக்கப்படும்படி அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இல்லாததினால் அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள். [18] அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளுக்காகவும் நான் அந்நாளிலே என் முகத்தை நிச்சயமாகவே மறைப்பேன்.

[20] நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தில் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பி, அவர்களை வணங்கி, என்னைக் கோபப்படுத்தி, என் உடன்படிக்கையை மீறுவார்கள். [21] அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்களுடைய சந்ததியார் மறந்துபோகாமலிருக்கிற இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி சொல்லும்; நான் வாக்களித்துக்கொடுத்த தேசத்தில் அவர்களை நுழையச்செய்யாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் எப்படிப்பட்டது என்பதை அறிவேன்” என்றார்.

[27] நான் உன் கலக குணத்தையும் உன் பிடிவாதத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கும்போது, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாகக் கலகம்செய்வீர்கள்!

[29] என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாக உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீமை உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைகளின் செயல்களினாலே யெகோவாவைக் கோபப்படுத்தும்படி, அவருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன்” என்று சொல்லி. [30] இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கேட்க, மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரை சொன்னான்.

https://bible.com/bible/1899/deu.31.16-30.IRVTam

உபாகமம் 32:5-6, 16-17, 19-31, 36-37, 42-43 IRVTam

[5] அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். [6] விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?

[16] அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். [17] அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.

[19] “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, அவர்களைப் புறக்கணித்து: [20] என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். [21] தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். [22] என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். [23] “தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். [24] அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். [25] வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும். [26] எங்கள் கை உயர்ந்ததென்றும், யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று, [27] நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். [28] “அவர்கள் யோசனை இல்லாத மக்கள், அவர்களுக்கு உணர்வு இல்லை. [29] அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். [30] அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? [31] தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

[36] யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். [37] அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?

[42] கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். [43] “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”.

https://bible.com/bible/1899/deu.32.5-43.IRVTam

 *தேவனின் வாக்குறுதி மக்களின் மாற்றத்திற்கேற்ப மாறும்

எரேமியா 18:7-10 IRVTam

[7] பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு தேசத்திற்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்திற்கு விரோதமாகவும் சொன்ன உடனே, [8] நான் விரோதமாய்ப் பேசின அந்த தேசத்தார் தங்கள் தீமையைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல், மனம் மாறுவேன். [9] கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு தேசத்தையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு. [10] அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.

https://bible.com/bible/1899/jer.18.7-10.IRVTam 

உபாகமம் 30:1-5 IRVTam

[1] “நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய யெகோவாவால் துரத்திவிடப்பட்டு, எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, [2] உன் தேவனாகிய யெகோவாவிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால், [3] உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார். [4] உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய யெகோவா அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, [5] உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய யெகோவா அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார்.

https://bible.com/bible/1899/deu.30.1-5.IRVTam

இதன்படி யூதர்கள் இறைமார்க்கத்தை கடைபிடிக்கும் காலத்திலேயே அவர்களுக்கு ஆசீர்வாதமும் மீறும் காலத்தாலேயே தண்டனையும் இழிவும் கிடைக்கும்.

 

3.யூதர்களுக்கான இறுதி வாய்ப்பு 490 வருடங்கள்/ எழுபது வாரங்கள்:

 

தானியேல் 9:24 IRVTam

[24] மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திசெய்கிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரை இடுகிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்செய்கிறதற்கும், உன் மக்களின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் ஆகுமென்று குறிக்கப்பட்டிருக்கிறது.

https://bible.com/bible/1899/dan.9.24.IRVTam

70 வருட சிறையிறுப்புக்குப்பின் 490 வருட காலத்தை அவர்களுக்காக மீறுதலை தவிர்க்கவும், பாவங்களை தொலைக்கவும், அவர்களின் அக்கிரமத்தை நிவிர்த்தி செய்துகொள்வதற்கும் அவகாசமாகும்.

 அதனோடு நித்தியநீதி ஏற்படுத்தப்படும்.  அதாவது இஸ்ரேல்-புறஜாதி வேறுபாடு எனும் தற்தாலிக நீதி நீங்குவதோடு, தரிசனங்களும் தீர்க்கதரிசனமும் முத்திரிக்கப்படும். அதாவது அவை முடிவுக்கு கொண்டுவரப்படும். இனி இஸ்ரவேலரில் தீர்க்கதரிசிகள் வரமாட்டார்கள். (அதன்படி இஸ்ரவேலரில்  கடைசியானவராக இயேசு வந்தார்.),

அதன்பின் அடுத்தடுத்த வசனங்களில் கூறப்பட்டது போல எருசலேம் அழிக்கப்பட்டு ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது.

4.யூதர்களிலுள்ள விசுவாசிகள்

 

இத்தகைய விசுவாசிகள் ஏனைய விசுவாசிகளுடன் இணைந்து கொள்வார்கள் என்பதாலும்,  தீர்க்கதரிசிகள் காலத்திலிருந்த ஒரே விசுவாசிகள் யூதர்களாக இருந்தனர் என்பதாலுமே எதிர்கால ஆசீர்வாத தீர்க்கதரிசனங்கள் அவர்கள் புரியும்விதமாக பொதுவாக விசுவாசிகளை  யூதர்கள் என்றே கூறப்படுகிறது.

ஆக யூதர்களுக்கு இப்போதுள்ள ஆட்சி ஆசீர்வாதம் அல்ல! அது உலகப்போர்களில் காலணித்துவ ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகமும், தமது குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான தந்திரமுமே  இந்த தீர்க்கதரிசன உருட்டுக்கள் ஆகும்.

அவை அக்கால விசுவாசிகளை இறைவன் இரட்சிப்பதாகும்.  அல்லது இரண்டாம் ஆலய காலகட்டமான எஸ்றா தொடக்கம் இரண்டாம் ஆலய இடிப்புவரையான காலத்தின் இடையிலே உள்ள யூதர்களை/இஸ்ரவேலர்களை குறிப்பதாகும்.

உதாரணமாக 

1. ஏசாயா 43:5-7 என்பது பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து வெளிவருவதை குறிப்பதாகும். அதை அதே ஏசாயா 43:14 தெளிவாக கூறுகிறது. இதை நிறைவேற்றியவர் கோரேசு  என்ற பெர்சிய ராஜா (2 நாளாகமம் 36:22-24)

அதேபோல 

2. எசேக்கியேல் 37:11-12 கூறுவதும் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து மீள்வதையே குறிக்கிறது. எசேக்கியேலின் காலத்தில் பாபிலோனிலே அடிமைகளாக யூதர்கள் இருந்தனர்.


3. ஏசாயா 11:11-12 இலே இஸ்ரவேலர் இரண்டாம் முறையாக தம்முடைய மக்களை மீட்டுக்கொள்வதாக இருப்பதால், முதலாம் முறை பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து மீள்வதையும் இரண்டாம் முறை 1948இலே மீள்வதையும் குறிக்கும் என அடித்துவிடுவார்கள். ஆனால் முதலாம் முறை எகிப்திலிருந்து மீண்டதையே குறிக்கும். அதாவது மோசே காலத்தில் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து மீட்கப்பட்டனர். இரண்டாவது முறையாக அசீரியர்/பாபிலோனியரிடமிருந்து மீட்கப்படுவர் என்பதையே இது குறிக்கிறது. வடக்கு ராஜ்யமான இஸ்ரேலாகிய சமாரியாவிலிருந்தவர்களை வெவ்வேறு நகரங்களுக்கு பிடித்துச்சென்றனர். அவர்களே காணாமல் போன 10 கோத்திரத்தார்.. இறுதியாக தெற்கு ராஜ்யத்தாரான எருசலேம் யூதா இனத்தாரை பாபிலோனுக்கு பிடித்து சென்றார்கள்.  இதிலிருந்து மீட்கப்படுவதே இரண்டாவது மீட்பு ஆகும்.  இது என் சொந்த உருட்டு அல்ல.. அதை தான் அதே ஏசாயா 11:16 கூறுகிறது:

ஏசாயா 11:16 IRVTam

[16] இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.

https://bible.com/bible/1899/isa.11.16.IRVTam..

அத்தோடு ஏசாயா 11இலே கூறும் பிலிஸ்தியர்கள்,மோவாபியர்கள்,அம்மோனியர்கள் தற்போது கிடையாது.

4. ஆமோஸ் 9:14-15  முதலாவது இஸ்ரேல் அசீரியர்களால் அழிக்கப்படுவதற்கு முன்பு கூறப்பட்டதாகும்.. அதாவது முதலில் அழிக்கப்படுவார்கள். பிறகு ஏதோமில் மீதியானவர்களையும் இஸ்ரவேலரையும் தம் தேசத்துத்கு வரவைப்பதாகவும் அதன்பின் அவர்கள் பிடுங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதன்பின் மீண்டும் பிடுங்கப்பட்டார்கள். காரணம் தேவன் ஒரு நாட்டவரை நாட்டுவேன் என்றோ பிடுங்குவேன் என்றோ சொன்னால், அம்மக்கள் மாறும்போது தேவனும் தன் மனதை மாற்றிக்கொள்வார் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்- எரேமியா 18:8-10


சகரியா தீர்க்கதரிசி கூறும் இறுதிக்கால முன்னறிவிப்பில் , கூறப்படுவதும் இவ்வாறே.. சகரியாவின் காலம் பாபிலோனிலிருந்து விடுதலை பெற்று வந்த ஆரம்ப காலமாகும். அதன்பின் எருசேலைமை சுற்றி எதிரிகள் மீண்டும் வருவார்கள் என்றும் இஸ்ரவேலரை தேவன் பாதுகாத்து தேவனே சண்டைசெய்து துரத்தியடிப்பார் (சகரியா 14) என்று கூறுகிறது. ஆனால் இதன் பின்பு ரோமர்கள் வந்தபோது தேவன் சண்டை போட வரவில்லை. கி.பி. 70 இலே செருபாபேல் கட்டிய ஆலயத்தை பட்டிடிங்கரிங் பார்த்து வைத்திருந்த ஏரோதின் ஆலயமான இரண்டாம் ஆலயம் அடித்து நொருக்கப்பட்டு முஸ்லிம்கள் வரை அது குப்பையாகவே இருந்தது. முஸ்லிம்கள் தான் ஆலய இடத்திலே இறைவனை வணங்குவதற்கு தூய்மைப்படுத்தி ஆலயம் கட்டினார்கள். காரணம் என்னவென்றால் எரேமியா 18:8-10 இலே கூறப்பட்டதுபோல, தேவனது வாக்குத்தத்தம் மக்களின் தீய எண்ணங்களுக்கேற்ப மனமாற்றத்திற்கேற்ப தேவனும் மாற்றிக்கொள்வார்.

 எசேக்கியேல் இறுதிப்பகுதியிலும் (39 தொடங்கி 48) இவ்வாறே எசேக்கியேல் பாபிலோனிய சிறையிருப்பில் இருந்தபோது தீர்க்கதரிசனம் உரைத்தார். அதிலே குறிப்பாக ஆலயம் கட்டப்படும் என்றும் மீண்டும் பலிகள் கொடுக்கப்படும் என்றும் ஆசாரியர்கள் எவ்வாறு பலிகொடுக்க வேண்டும் என்னென்ன பலி கொடுக்கவேண்டும் என டிசைன் டிசைனாக கூறப்படுகிறது. (எசேக்கியேல் 44:2-9, 45:15-25, 46:2-20), இவை அனைத்தும் வெறும் 490 வருட கால இடைவெளிக்கானதே என்பதை தானியேல் 9:24-27 தெளிவாக்குகிறது. அதாவது 490 வருட காலத்தில் மீண்டும் ஆலயம் துவம்சம் செய்யப்பட்டு, பலி கொடுப்பது நிறுத்தப்படும் என தானியேல் 9:27 கூறுகிறது. 

ஆனாலும் மேசியா அவர்களின் இனத்தை சேர்ந்த தாவீது மகனார் தான். அவர் இரண்டாம் ஆலயம் உடைக்கப்படுமுன்பே தோன்றினார். அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ளாதபடியினால், எரேமியா 18:8-10 இலே கூறப்பட்டது போன்று தேவனும் மனதை மாற்றிக்கொண்டார்.

இதிலே அவர்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.

 

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

வெள்ளி, 26 டிசம்பர், 2025

இஸ்லாமும் பலதாரமணமும் விவாகரத்தும்

 இஸ்லாம் அநேக மதங்களை போலன்றி ஆன்மீகத்துடன் இல்லறம் ஆட்சியதிகாரம் சமூக நீதி போன்றவற்றை உள்ளடக்கிய மார்க்கமாக இருப்பதால் வெறும் ஆன்மீகத்தை மட்டுமுடைய மதநம்பிக்கையாளர்களால் குறிப்பாக கிறிஸ்த பிரதர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமாக தீவிரவாதம் என்ற அவதூறுக்கு அடுத்ததாக பலதாரதிருமணத்தையும் விவாகரத்தையும இஸ்லாம் அனுமதிப்பதை குறிப்பிடுவர்.

ஆகவே இதை வெறும் இரண்டு தலைப்புகளின் கீழ் குறிப்பிடுகிறேன்

1.பலதார திருமணம் 

2.விவாகரத்து


1.பலதார திருமணம் 

முகம்மது (ﷺ) வழியாக இஸ்லாம் வருவதற்கு முன்பே பலதாரமணம் உலகிலும் அரேபியாவிலும் இருந்தது.

 இஸ்லாம் அதை செவ்வையாக்கி அதிகபட்சமாக நான்கு வரைக்கும் அனுமதித்ததோடு நிபந்தனையும் விதித்தது. அதாவது மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே அனுமதி (குர்ஆன் 4:3)

*பலதாரமணம் இயற்கைக்கு ஒத்துப் போகிறதும் பயனுள்ளதுமாகும்:

இயற்கையாகவே ஆணுக்கு பலதாரமணம் செய்யும் விதமாகவே மனிதயினம் படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓர் ஆண் ஒரே வருடத்தில் நான்கு மனைவியரோடு சேர்ந்து நான்கு பேரையும் பிள்ளை பெற வைக்க முடியும். 

ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை சேர்ந்தாலும் ஒருத்தனுக்கே பிள்ளை பிறப்பதோடு அதை கண்டுபிடிக்க வேறு பரிசோதனைகளும் செய்ய வேண்டி வரும்..

அத்தோடு குடும்பம் நிலைபெறவும் மனித இனம் நிலைபெறவும் அடிப்படையான அம்சம் இனப்பெருக்கமாகவுள்ளது. இதை விரைவுபடுத்துவதற்கு ஒரு முறையே பலதாரமணம். 

-பலதாரமணத்தினால் முதல் மனைவி பாதிக்கப்படுதலும் பெரு நன்மைக்குள் சிறு தீமையும்:

இதனால் முதல் மனைவியின் கணவன் மீதான உரிமை குறைவடைவதால் பாதிக்கப்படுகிறாள் என தற்குரித்தனமாக பேசுவதாயின், இரண்டாம் மூன்றாம் குழந்தைகளை பெற்றோர் ஈன்றெடுக்கும்போது முதல் குழந்தைக்கு பெற்றோர் மீதான உரிமையும் சொத்தின் மீதான உரிமையும் குறைந்து பாதிப்படைவானே. 

அப்படி பார்த்தால் ஒரு தம்பதியினர் ஒரே குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறவேண்டும் 

அத்தோடு எந்த பெரிய நலவுக்குள்ளும் சிறு கெடுதி இருக்கத்தான் செய்கின்றன. 

உதாரணமாக பிள்ளையை பெற்றெடுக்கும் போது தாய் பெரும் வேதனையை அடைகிறாள். சிலபோது குழந்தை பெறும்போதே உயர்ந்த அன்னை இறக்கிறாள். இதனால் உயர்ந்த தாயினம் பாதிக்கப்படுகிறது என குழந்தை பெறுவதை எந்த தற்குரியாவது நல்லதல்ல என்பானா? 

அதே போன்று தான் பலதாரமணமும் சமூக ஒழுக்கம் கருதி ஒப்பற்ற இறைவன் அனுமதித்தான்.

-பலதாரமணமும் விதவைகளும்:
பலதார மணம் இல்லாத மக்களிடையே விதவை இல்லற மறுவாழ்வு மிகவும் குறைவாகவே காணப்படும். 

இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரித்ததன் மூலம் விதவை மறுவாழ்வை இயல்பானதாக தொடரச்செய்தது.
 பலதாரமணமில்லாத மக்களிடையே விதவையை மணப்பதை ஏதோ ஆணின் தியாகம் போன்று சித்தரித்து விதவையை அற்பமாக கருதக்காரணமாகவுள்ளது

-பலதாரமணமும் விபச்சாரமும்:

விலைமாதுக்களிடம் செல்வோரில் அநேகர் திருமணமான ஆண்களாகவும் இருப்பர். இதிலே ஆண் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை இல்லாததாலும் , அந்த பெண்கள் முறையாக கணவனெனும் ஆணின் கீழே இல்லாததாலுமே அதை தொழிலாக செய்கின்றதோடு ஆண்களும் விரும்பிச் செல்கின்றனர். அதனால் இஸ்லாம் இவற்றை நெறிப்படுத்தும் ஒரு வழியாக பலதாரமணத்தை அனுமதித்தது.

ஆனாலும் நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே பலதாரமணம் கூடும் (குர்ஆன் 4:3)

(இதற்கு மீறிய விபச்சாரத்திற்கு இஸ்லாம் தண்டனை வழங்குகிறது)




2.விவாகரத்து

விவாகரத்தும் முகம்மது நபியிற்கு முன்பேயிருந்துள்ள ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது.

விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க இஸ்லாம் விரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
அதாவது 
*மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332

*அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன் மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228)
அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள்

அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக திருமணம் செய்து வாழலாம்.

இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229). 

ஏனெனில் மனைவியை பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம் செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான சட்டமே இது.


மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2)

முதல் கணவனுக்கு ஆகுமாக திட்டமிட்டு திருமணம் செய்து விவாகரத்து செய்வதை (நிகாஹ் ஹலாலா) சாபத்திற்குரிய செயலாக நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2076)




மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும் பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது 

மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும் மீள எடுக்க கூடாது (4:20)

அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும் போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி ).

 அதற்காக அவள் காரணத்தை சொல்ல தேவையுமில்லை. (எந்த நியாயமான காரணமுமின்றி செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.) 


மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7)

அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில் ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்.. 

அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான கொடையை கணவன் தன் வசதிக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236)

தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும் இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை. (2:236). 

இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255)


*விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பதும் இஸ்லாத்தில் சர்வசாதாரணமானது. ஆனால் புதிய ஏற்பாடு அதையும் விபச்சாரமாக கருதுகிறது.

 *இதன்மூலம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள். 

ஆனால் இஸ்லாம் அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது. 

1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி எடுக்க கூடாது (குர்ஆன் 4:20)

2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233)

3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும்.

4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது.

5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால் பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே

இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ இறந்துவிட்டாலுமோ ஏற்படும்! 

இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம்.

 ஆனாலும் கணவன் மனைவி பிரிவதே சைத்தானுக்கு மிகவும் விருப்பமானது என்றும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5419 (2813b)). 

தகுந்த காரணங்களுக்காக செய்வதை தவிர மற்றையவை வெறுக்கப்பட்டதும் சைத்தானுக்கு விருப்பமானதும் ஆகும்.

பைபிளும் விவாகரத்தும்
தோரா விவாகரத்து செய்வதை அனுமதிக்கிறது -உபாகமம் 24:1-3.
ஆனால் இயேசுவோ விவாகரத்தை விபச்சாரம் அல்லாத காரணத்திற்காக செய்வது விபச்சாரம் என சொன்னதாக மத்தேயு 19:9.  ஆனால் மோசே அதை யூதர்களின் இதய கடினத்தின் காரணமாக அனுமதித்தார் என இயேசு சொல்கிறார் (மத்தேயு 19:8). அப்படியானால் இதய கடினத்திற்காக விபச்சாரம் கூடுமா? வேடிக்கையாக இயேசு காலத்தில் கூட யூதர்களின் இதயம் கடினமாக இருந்ததாக தான் யோவான் 12:40 சொல்கிறது. அப்படி பார்த்தால் இயேசு விவாகரத்தை தடை செய்வதே அறிவீனமாக தென்படுகிறது.

அத்தோடு விபச்சாரம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்று சட்டம் போடும்போது, தன் மனைவியை பிடிக்காது போனவன் தன் மனைவி மீது விபச்சார அவதூறு சொல்லி விவாகரத்து பெறுவதற்கு வழிவகுக்கிறது. ஆனால் இஸ்லாமோ காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் தம்பதியினர் பிரியும்போதும் அவர்களது privacy மீதான அவதூறுகள் கூறும் வாய்ப்பை இதன்மூலம் இல்லாமலாக்கியுள்ளது.



செவ்வாய், 18 நவம்பர், 2025

TNTJ VS YDM விவாதமும் & ரசாது கலீஃபா குரூப் விவாதமும் மறுப்பும

TNTJ vs YDM (2018) பைபிள் கூறும் மெய்யான இறைவன் விவாதமும் மறுப்பும்
text format


 TNTJ vs YDM (2018) குர்ஆன் கூறும் மெய்யான இறைவன் விவாதமும் மறுப்பும்
Text format

 ரசாது கலீஃபா குரூப் விவாதம்- மனிதர்களை நல்வழிப்படுத்தும் வேதம் எது (கடைசி வரை பைபிள் காட்டிய நல்வழி ஒன்றை கூட கூறவில்லை)
text format

ஞாயிறு, 2 நவம்பர், 2025

சுவர்க்கமும் மதுவும் ஹூருல் ஈனும் வேலைக்கார சிறுவர்களும்

சுவர்க்கத்தின் மது

 சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)


சிறுவர்கள் வேலைக்காரர்கள்

உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை...

 உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?.. 

இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும்

??

கண்ணழகிகள்

-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)

அதிலே அவர்களது அந்தரங்க உறுப்புகளை வர்ணித்து எதுவும் கூறப்படவில்லை

78:33 இலுள்ள "கவாயிப்" என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை குறிக்கும்.  அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை. அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே.

அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோது அவர்கள் கூறியதாக வருவதில்" நீங்கள் முகம்மதை கொல்லவும் இல்லை. கவாயிபை (78:33 இலுள்ள வாசகம்)- இளம்பெண்களை சிறைபிடிக்கவுமில்லை. நீங்கள் செய்தது மிகவும் கெட்டது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது

(ولا محمدا قتلتم.

ولا الكواعب أردفتم

(சுனனுல் குப்ரா (இமாம் நஸாயீயுடையது) 11083,தபரானீ (11/247) 11632)

இப்படி இளவயது பெண்கள் மனைவியராக சுவர்க்கத்தில் கிடைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது . உணவு பானங்கள் ஓய்வு என்பதோடு ஆணுக்கு மிகவும் விருப்பமானது பெண் என்பதால் அவர்களையும் சுவர்க்கத்தில் கொடுப்பான்


-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)



வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது.


 மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.


ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும். ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை.. 

இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.

இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு

ஒரே இரவில் நபிகளார் தம் அனைத்து மனைவியரிடமும் சென்றதும் கர்த்தரின் செயலும்

 -ஒரே இரவில் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்களா?



நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள். அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268


நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர்.


இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது:


ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218)


இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள்:


"நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும் என ஆயிஷா (ர) கூறுகிறார்கள்- புகாரி 267,270


அதாவது இஹ்ராம் அணிவதற்கு முன் தன் அனைத்து மனைவியருடனும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.


வழமையாக நடப்பது போன்று (كان يدور /كان يطوف ) என்று உள்ளதும் அந்த ஒரு நாளில் ஒரு தடவை நிகழ்ந்தது என்பதையே இங்கு (அபூதாவூத் 218 -طاف ذات يوم -ஒரு நாள் <மனைவியர் அனைவரிடமும்> வலம்வந்தார்) குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக புகாரி 267 இலும் அன்னை ஆயிஷா (ர) மணம் பூசிவிட்டதை குறிப்பிடுவதற்காகவும் (كنت أطيب) என்று இதே "كان" என்பதையே பாவித்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு தடவை நடந்ததே என புகாரி 270 காட்டுகிறது (தமிழ் மொழிபெயர்ப்பில் சற்று தவறியுள்ளார்கள். அரபியில் (أنا طيبت-நான் மணம்பூசிவிட்டேன்") என்றே உள்ளது.


இது ஆபாசமா?- நிச்சயமாக இல்லை.. இக்காலத்தில் நீலப்பட (2சாமு12:11-12) கலாச்சாரத்தில் ஊறி இருப்பதால், உடலுறவு என்பதே நீலப்படம் என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையில் அது கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன்மீதுமுள்ள உரிமை.. பல நாட்களுக்கு மீண்டும் தாம்பத்யத்தில் ஈடுபட கிடைக்காது என்பதால் அவர்களுக்குரிய உரிமையை நபிகளார் பூரணமாக நிறைவேற்றினார்கள். அது தவறு அல்ல... நீதி.


-வழமையாக எப்படி நடப்பார்கள்?


வழமையாக நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தினமும் வருவார்கள் என்றும் ஆனாலும் அவர்களை தீண்ட மாட்டார்கள் என்றும் இறுதியாக யாருடன் இரவு தங்கும் நாளுக்குரியதோ அவரோடே தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள் என அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்- அபூதாவூத் 2135


மனைவியரில் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) ஒதுக்கி வைக்கலாம் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை உங்களுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை (குர்ஆன் 33:51) இறங்கிய பின்பும், ஒரு மனைவியுடைய நாளில் மற்ற மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்குமாறு அனுமதி கேட்பார்கள் என்கிறார் அன்னை ஆயிஷா (புகாரி 4789)


நபிகளாரிடம் ஒன்பது மனைவியர் இருந்த காலத்தில் ஒரு மனைவியிடம் சென்றால் மீண்டும் அவரிடம் செல்வதற்கு ஒன்பது நாட்கள் எடுக்கும். அதனால் அனைத்து மனைவியரும் அந்த நாளுக்குரிய மனைவியின் வீட்டில் இரவில் ஒன்று கூடுவர். ஆயிஷா (ர) அவர்களின் வீட்டில் ஸைனப் (ர) அவர்களை அன்னை ஆயிஷா என நினைத்து நபிகளார் அவரிடம் கையை நீட்டினார்கள். அப்போது அன்னை ஆயிஷா,"இவர் ஸைனப்" என்றார்கள். உடனே நபிகளார் கையை விலக்கிக் கொண்டார்கள்.. முஸ்லிம் 2898 (1462 ஆங்கில அரபு)


இதன்படி அந்த இரவுக்குரிய மனைவியல்லாதவரை தொடவும் மாட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது.


இது சம்பந்தமாக இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. 



ஆகவே தன் மனைவியரின் உரிமைகளை நீண்ட நாட்கள் கழித்தே கொடுக்கவேண்டிய நிலை இருக்கும்போது அனைவரிடமும் ஒரே இரவில் சென்று வந்தார்கள். அது அவர்களது நீதியை தான் காட்டுகிறது.


நீலப்பட (2 சாமுவேல் 12:11-12) ஆதிக்கத்தினால் இது ஆபாசமாக தென்படுகிறது:


தாவீதின் அனைத்து மனைவியரையும் ஒரே ஆணுக்கு சப்லை செய்து இஸ்ரவேலர் முன்பாக பட்டப்பகலில் உறவுகொள்ள வைப்பேன் என கர்த்தர் சொன்னது குறித்து வெட்கமே இல்லை:


2 சாமுவேல் 12:11-12 IRVTam

[11] யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். [12] நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/2sa.12.11-12.IRVTam 

சனி, 1 நவம்பர், 2025

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) உடனான திருமணமும்,ஜாஉனிய பெண்ணும், ஒழுக்கமாக நடந்த நபிகளாரும்- கிறிஸ்தவ காமப்போதகர்களின் உலரல்களுக்கு மறுப்பு

 கிறிஸ்தவ காமுக போதகர்கள் தம்மை ஒழுக்கசீலர்களாக காண்பித்துக் கொண்டு முகம்மது நபியை கொச்சைப்படுத்துவதற்காக இவர்களின் காமம் சொட்டும் விளக்கங்களை நுழைவித்து கொச்சையாக பேசுவதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.

அதிலே வழமையாக ஆயிஷா (ர) அவர்களை மணந்ததற்கு அடுத்ததாக கீழ் குறிப்பிடும் செய்திகளை ஆசையோடு எடுத்து வைப்பார்கள்

1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்

2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ்

3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ் 

இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்:


1.ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ர) அவர்களை மணந்ததுடன் சம்பந்தப்படும் கதைகள்

புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில்

*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிய வைப்பதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.

*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 3212)

இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி ஸைத் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.

*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)

இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார் 

*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:

"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" (33:37)

அதாவது சொந்த மகனின் விவாகரத்து செய்த மனைவியரையோ அவனுடைய விதவையான மனைவியரையோ மகனின் தந்தை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை செய்வித்து காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.

*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420). 

எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?

இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.

(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.

இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)


இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!

!


நமது எதிர்வாதம்:

*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV

[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். 

https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV

(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :

ஆதி 16:5 IRVTam

[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக” என்றாள். 

https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam

(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)

*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24

2 சாமு 12:14-15, 24 IRVTam

[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது. 

[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார். 

https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam 

இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது 

இதற்காக தேவனோ தாவீதின் மனைவியை பக்கத்திலிருப்பவனுக்கு கொடுத்து இஸ்ரவேலர் பார்க்க பட்டப்பகலில் விபச்சாரம் செய்விப்பதாக சொல்கிறார் (2 சாமுவேல் 12:11-12)-ஃபிலிம் எடுக்கிறாரா?

இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)

இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா 

அத்தனைக்கும் ஆவியானவர் இறங்கிய பின் விபச்சாரம் செய்ததும், ஆவியையுடைய தேவனே அவரது மனைவியரை விபச்சாரம் செய்விப்பேன் என சொல்வதும் எதையோ சொல்கிறது. ஆவி தானே பிரச்சினை 


2.ஜாவ்னிய குலத்து பெண்ணுடன் சம்பந்தமான ஹதீஸ் புகாரி 5255

அதற்கு முந்திய ஹதீஸிலே அந்த பெண் நபியின் மனைவி என தெளிவாக உள்ளது (புகாரி 5254). அந்த பெண்ணின் மனம் மாறி விருப்பமில்லாத போது கூறிய வார்த்தைகளே புகாரி 5255 இலே உள்ளது. அப்போது அவரை சமாதானப்படுத்துவதற்கு தொட போனார். அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவே நபிகளார் விட்டுவிட்டார்கள் அத்தோடு இரண்டு சணல் ஆடைகளை நன்கொடையாக கொடுத்தார்கள். இதை இமாம் புகாரி விவாகரத்து எனும் தலைப்பின் கீழ் தான் கொண்டு வருகிறார். அதாவது இது விவாகரத்து தான். குறிப்பாக அங்கே அந்த பெண்ணின் செவிலித்தாயும் இருந்தார்.

இந்த ஹதீஸ் நபிகளாரின் முன்மாதிரிக்கு தான் ஆதாரம்.
 அவர் அவளை பலவந்தப்படுத்தியிருந்தால் அதை விமர்சிப்பதற்கும் யாரும் இல்லை என்றிருக்க நபிகளார் மிகவும் ஒழுக்கமாக அப்பெண்ணிற்கு நன்கொடை கொடுத்து அனுப்பினார். ?

நம் எதிர்வாதம்

 பைபிள் பிரகாரம், கன்னியை பலவந்தப்படுத்தி புணர்ந்தாலே அவளை மனைவியாக்கிக் கொள்ளலாம் என காண்பிக்கப்படுகிறது (உபாகமம் 22:28-29). இது போன்று நபிகளார் நடக்கவில்லை 

ஆனால் பைபிளிலோ உரியாவின் மனைவியை இரண்டாவது தடவையாக புணர்ந்ததை கர்த்தர் சரி கண்டு அதில் பிறந்த குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24)  . விபச்சாரம் நிகழ்ந்ததே தாவீதின் மீது ஆவியானவர் இறங்கிய பின்பு தான்(1 சாமுவேல் 16:13, 2 சாமுவேல் 11:2-4)

3.பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ் -முஸ்லிம் 2718

*இஸ்லாம் பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறே கூறுகிறது (குர்ஆன் 24:30-31)

*எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும், அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் என்றே நபிகளார் கூறினார்கள் (முஸ்லிம் 4363 (2159 ஆங்கிலம் அரபு), அபூதாவூத் 2148)

*எதேச்சையாக பார்வை விழுவது தப்பு அல்ல. மாறாக அதை இரண்டாவதாகவும் பார்ப்பதே தப்பு என்கிறது இஸ்லாம் (அபூதாவூத் 2149)

*இப்படி பார்வை தற்செயலாக விழுந்து அதனால் ஈர்க்கப்பட்டால், அந்த ஈர்ப்புக்கு காரணம் ஹோமோன்கள் தான். அது அந்த நபரின் சக்திக்கு அப்பாற்பட்டது.
ஆனாலும் தன் சக்திக்குட்பட்டதான பேச்சையோ வேறு தவறான செயலையோ செய்தாலே விமர்சனத்திற்குரியதாக மாறும்.

ஆனால் நபிகளாரோ , தன் இச்சையை கட்டுப்படுத்திக்கொண்டு, தன் மனைவியிடம் சென்று அவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார்கள் .
இதுவே சிறந்த முன்மாதிரியுமாகும்.

(உடனே திருமணமாகாதவன் எங்கே போக வேண்டும் என்று தற்குறித்தனமாக கேட்டால், அவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணமானவனோ தன் உணர்வை மனைவியிடம் தீர்த்துக் கொள்ளலாம்)

நம் எதிர்வாதம் 

* பைபிளிலே கர்த்தரின் தீர்க்கதரிசி (அப்போஸ்தலர் 2:30) என்றும் இதயத்திற்கேற்ப செம்மையாக நடந்தவன் (அப்போஸ்தலர் 13:22) என கூறும் தாவீதோ அழகான பெண்ணை கண்டபோது கள்ளத்தனமாக விபச்சாரம் செய்தார்:

2 சாமுவேல் 11:2-4 IRVTam
[2] ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள். [3] அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். [4] அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள். 

(அத்தனைக்கும் தாவீதுக்குள் பரிசுத்த ஆவி இறங்கியிருந்தார்- 1 சாமுவேல் 16:13, சங்கீதம் 51:11.... )

*சிம்சோன் என்ற நியாயாதிபதி வேசிகளோடு உறவு வைத்தார் அவரிடமும் ஆவியானவர் பலமாக இறங்குவார். (நியா 14:6,19& 15:14) யெகோவா அப்போதும் அவனோடு கூட இருந்தார். ஆனால் தலைமுடியை வெட்டியவுடன் யெகோவா போய்ட்டார்:

நியாயாதிபதிகள் 16:1, 4, 19-20 IRVTam
[1] பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான். 
[4] அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான். 
[19] அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது. [20] அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். 

(இவனை புகழ்ந்து எபிரேயர் 11:32 பேசுகிறது)
இவர்மீது ஆவியானவர் இறங்கி ஏவத்தொடங்கியவுடன் பிலிஸ்திய பெண்ணின் மீது காதலில் விழுந்தார்.  அதுல பைபிள் வச்சுது ட்விஸ்டு. அது கர்த்தர் போட்ட ஸ்கெட்ச்

நியா 14:3-4 IRVTam
[3] அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான். [4] அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது யெகோவாவின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.



*உடனே இந்த தீர்க்கதரிசிகளும் நியாயாதிபதிகளும் கர்த்தர் கூட இருந்தாலும் ஆவியானவர் உள்ளே இருந்தாலும் விபச்சாரம் செய்வார்கள் தான். ஆனால் எங்களுக்கு அவர்கள் முன்மாதிரி இல்லை.. இயேசு தான் முன்மாதிரி என கதை விடுவார்கள் .

இவர்கள் பார்வையில் இயேசு கடவுள். கடவுள் மனிதனாக வந்தால் அவர் பாவம் செய்வாரா? 
அவருக்கு பாவம் செய்யும் இச்சை இருக்குமா?
 இப்படி இச்சையே இல்லாத நபர் இச்சையுள்ள மனிதர்களுக்கு எப்படி முன்மாதிரியாக இருப்பார்?

கர்த்தர் தேர்வு செய்த தீர்க்கதரிசியும் நியாயாதிபதியும் பரிசுத்த ஆவி அருளப்பட்டவர்களும் யெகோவா கூட இருந்தும் இப்படி தரங்கெட்ட செயலில் ஈடுபடுகிறார்களே. அப்படியானால் அவர்களை அறியாமல் தேர்வு செய்தாரா? அறிந்தே தேர்வு செய்தாரா? அப்போ முழு தவறும் கர்த்தர் மீது தானே விழுகிறது.

(ஆனால் முகம்மது நபியோ உடன்படிக்கை எடுக்கும்போது கூட எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை (புகாரி 7214,2713). அத்தோடு எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்து, ஹோமோன்கள் (hormones) காரணமாக ஈர்ப்பு ஏற்பட்டபோது கூட தன் சொந்த மனைவியிடமே சென்றார்.(முஸ்லிம் 2718). அனைவரும் தன் சொந்த மனைவியிடமே செல்லவேண்டும் என்றும் வழிகாட்டினார் (முஸ்லிம் 2719). தற்செயலாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும் அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் (முஸ்லிம் 4363) என்றெல்லாம் வழிகாட்டினார்.

ஆனால் இயேசுவோ மற்ற பெண்கள் தன் காலை முத்தமிட வைத்து தலைமுடியால் வருட அனுமதித்து தைலமும் பூச அனுமதித்தார்- லூக்கா 7:38
வழிகாட்ட முன்மாதிரியாக வந்தவர் மற்ற பெண்களை தொட அனுமதித்தால், தற்காலத்தில் பரிசுத்த ஆவி இறங்கிய போதகர்கள் இவ்வாறு செய்ய வழிகாட்டலாக தானே இருக்கும்.  ஆவியானவர் இறங்கியிருந்த தாவீதும் ஆவியானவர் ஏவத்தொடங்கிய சிம்சோனும் என்ன செய்தனர் என்பதை பைபிளே கூறிவிட்டது. பிறகு பரி.ஆவி இறங்கினால் இத்தகைய போதகர்கள் ஆபாசமாக பேசுவதில் நபிகளாரை கொச்சைப்படுத்துவதில் மாற்றான் பொண்டாட்டிகளை படுக்கைக்கு கூப்பிடுவதில் ஆச்சரியம் இல்லையே. இத்தகையோரும் ஒருநாள் சிக்குவர். அப்போது இருக்கு..

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...