வெள்ளி, 31 ஜனவரி, 2020

கர்த்தரைவிட யாக்கோபு பெரியவரா?

யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாயிருப்பாரோ??
------------------------------------------------



புதிய ஏற்பாட்டு புத்தகங்களின்/கடிதங்களின் ஆசிரியர்களுக்கு போதியளவு பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லை என்பதை இரண்டையும் படிப்போரால் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.



உதாரணமாக பாம்பை நோக்கி , உனக்கும் பெண்ணுக்கும் , உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை ஏற்படுத்துவேன்.(ஆதி 3:15)


இங்கே பெண் எனப்படுபவள் ஹவ்வா  என எபிரேய பெயர்கொண்ட தமிழ் ஏவாள் ஆவார்.

ஆரம்பத்தில் அவருக்கு பெயர் இடப்படவில்லை.. பிறகு தான் ஆதாம் அவரது வாழ்வே இவளாக இருப்பதால் "வாழ்வு" என பொருள்படும் ஹவ்வா (ஏவா) என்ற எபிரேய பெயரை இடுகிறார். (ஆதி 3:20)


பாம்பு ஏவாளை ஏமாத்தியதால் (?) , கர்த்தர் பெண்ணுக்கும் பாம்புக்கும் சண்டைய மூட்டிவிடுகிறார் (இதனால் ரெண்டுபேருக்கும் ஒத்துவராது!! நம்புங்க). அதனுடன் சேர்த்து பெண்ணான ஏவாளின் வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் சண்டைய மூட்டுறார்.

அதாவது பெரிய பாம்பும் பெரிய பெண்ணும் செஞ்சதுக்காக , பாம்பின் குட்டிகளும் பெண்ணின் குட்டிகளும் (பிள்ளைகளும்) பகையாக இருப்பாங்களாம்.

பாம்பின் தலையை பெண்ணின் குட்டி நசுக்குமாம். பெண்ணின் குட்டியின் குதிகாலை பாம்பு நசுக்குமாம் (கொட்டுமாம்!)!

இந்த கதையை அறைகுறையாக படித்த புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள், உடனே பெண்ணின் குட்டி தான் இயேசு என அடித்துவிட்டனர்.

அப்படி பார்த்தால் இயேசு மரியாவின் குட்டி.

ஆனா பிரச்சின ஏவாளுக்கும் பாம்புக்கும் என்பதையே மறந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.

ஏவாளின் குட்டிக்கு தான் பிரச்சினை.. ஆனா சம்பந்தமே இல்லாமல் மரியாளின் குட்டியை இங்கே செருகியிருக்கிறார்கள்.

அப்படிபார்த்தால், பாம்புக்கும் மரியாளுக்கும் தான் பகையை ஏற்படுத்தியிருக்கிறார் கர்த்தர்னு தான் வரும்.

இப்படி போதிய ஞானம் இன்றி பழைய கதைகளை இயேசுவை குறிப்பது அவரை குறிப்பது இவரை குறிப்பது என புதிய ஏற்பாட்டில் நிறைய காணலாம்.


ஆனால் நம் கிறிஸ்தவர்களோ, ஆதி அப்போஸ்தலர்கள் வேதத்தை தாய் மொழியில் படித்து ஆவிதூண்டி புதிய ஏற்பாட்டை எழுதினர் என்பார்கள்.

இவ்வாதத்தை புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் ஒப்பிட்டு படிக்காத மக்களாலேயே கூற முடியும்.





இப்படி தப்பு தப்பாக பழைய ஏற்பாட்டை சொருகி தான் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதி உள்ளது.


அந்த வகையில் எபிரேய புத்தக ஆசிரியர்,




13 ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு,
எபிரேயர் 6:13


என்கிறார்.


அதாவது அவர் பழைய ஏற்பாட்டை அறைகுறையாக படித்துவிட்டு கருத்து கூறும்போது,

ஆப்ரகாமிடம் ஆணையிடும்போது, கர்த்தரைவிட பெரிய ஆள் யாரும் இருக்கவில்லை.


அதனால் தன்மேல் ஆணையிட்டார் என்கிறார் ஆசிரியர்.




இவர் பழைய ஏற்பாட்டை படித்திருந்தால் இவ்வாதத்தை வச்சிருக்கவே மாட்டார்.

இவர்கள் Septuagint என்ற கிரேக்க பழைய ஏற்பாட்டிலிருந்து தான் வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். எபிரேய பைபிளுக்கு சம்பந்தமே இருக்காது.



கிரேக்க பிரதிகளை படித்துவிட்டு ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.


எபிரேயத்தில் படித்திருந்தால், இவரது குட்டு அவருக்கே புரிந்திருக்கும்.



ஏனெனில் கர்த்தர் யாக்கோபின் மகிமையில் ஆணையிட்டுள்ளார்.


🤣🤣🤣


"அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையில் ஆணையிட்டார்"
(ஆமோஸ் 8:7)



இதன்படி பார்த்தால், யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாக இருப்பார் போல என்ற முடிவுக்கு தான் எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் வரவேண்டி இருக்கும்.




உடனே நம்ம விஞ்ஞானிகள், அங்கே யாக்கோபின் மகிமை என்பது கர்த்தரே தான் என்று போலியாக சமாளிக்க பார்ப்பார்கள்.

ஆனால் உண்மையில் அதற்கு செறுப்படியை பைபிளே கொடுத்துவிடும்.




"நான் யாக்கோபின் மேன்மை/மகிமையை வெறுத்து, அவனுடைய அரமனைகளை பகைக்கிறேன். நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புகொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்"
(ஆமோஸ் 6:8)


இதன்படி கர்த்தர் தன்னையையே வெறுக்கிறாரா?? இவர்கள் வாதப்படி கர்த்தர் தன்னை தானே வெறுத்துக்கொள்கிறார் என்ற காமடி தான் வரும்.


எபிரேய பைபிளில் ஆமோஸ் 6:8, 8:7 ஆகியவற்றில் பாவிக்கப்பட்ட "யாக்கோபின் மகிமை/மேன்மை" என்பதற்கு ஒரே வார்த்தைப்பிரயோகமே உள்ளது.


இதன்படி பார்த்தால், கர்த்தர் தன்னை தானே வெறுக்கிறார் என்று வரும்.


யாக்கோபின் மகிமை/மேன்மை என்பது கர்த்தர் அல்ல என தெளிவாகவே புரிந்துவிடும்.

யாக்கோபின் மேன்மை என்பது யாக்கோபின் பண்பு ஆகும்.

யாக்கோபின் பண்பாகிய மகிமை கர்த்தரைவிட பெரிய ஆள் போல..

இதற்கு காரணம் பழைய ஏற்பாட்டில் அறிவின்றி கருத்துச்சொல்ல வந்த எபிரேய புத்தகத்தின. ஆசிரியரே ஆவார்.



இதனோடு இன்னும்ஙசில வசனங்களும் உள்ளன.



"வெறுமையாக்குகறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளை கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையை திரும்பி வரப்பண்ணுவதுபோல்,  இஸ்ரேலின் மகிமையையும் திரும்பி வரப்பண்ணுவார்."
(நாகூம் 2:2)

இழந்த யாக்கோபின் மகிமை திரும்பி வரப்பண்ணுவது போல இஸ்ரேலின் மகிமையையும் வரபண்ணுவதாக சொல்லுது.

பார்த்தவுடனே புரிந்துவுடும், யாக்கோபின் மகிமை என்பது கர்த்தர் அல்ல... மாறாக யாக்கோபின் உயர்வு பண்பு என்று.



அதேபோல ,

"நம் உரிமைச்சொத்தை அவர் நமக்கு தேர்ந்து அளித்தார். அது அவர் அன்புகூறும் யாக்கோபின் மகிமை/பெருமை ஆகும் (சேலா)"
சங்கீதம் 47:4


இவற்றின் படி பார்த்தாலே யாக்கோபின் மகிமை என்பது கர்த்தர் அல்ல என தெளிவாக புரிந்துவிடிம்




பழைய ஏற்பாட்டில் போதிய ஞானமற்ற ஆசிரியர்களே புதிய ஏற்பாட்டை எழுதியதால் தான் இப்படி எழுதியுள்ளார்..

அவருடைய கூற்றுப்படி பார்த்தால், யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆள் என்று தான் முடிவெடுக்க வேண்டவரும்.


ஆப்ரகாமின் பேரனே யாக்கோபு... ஆப்ரகாம் காலத்தில் கர்த்தரைவிட பெரிய ஆள் இல்லாதிருந்திருக்கும். யாக்கோபின் காலத்தில் கர்த்தரைவிட யாக்கோபு பெரியவர் என்பதால் கர்த்தர் யாக்கோபின் மகிமையில் ஆணையிட்டார் என்று முடிவு எடுக்கவேண்டி வரும்.



(கர்த்தரோட சண்டையில் ஜெயிச்சதால் இந்த நிலை வந்திருக்கலாமோ தெரியல. ஆதி 32:24-30)


சிலர் சம்பந்தமே இன்றி உபாகமம் 32:29 ஐ ஆதாரம் காட்டி இதை திசைதிருப்ப பார்ப்பார்கள்.

அவர்களுக்கும் பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லாததே இவ்வாதத்தை வைக்க காரணம்.




ஏனெனில் அதில் கர்த்தரை யாக்கோபின் பட்டயம் (வெட்டுக்கத்தி) என்று தான் சொல்கிறது.


ஆமோஸ் 8:7 "யாக்கோபின் கத்தியின்மேல் ஆணையிடுகிறேன" என்று வந்திருந்தால் இவ்வாதம் நியாயம்.


ஆனால் அப்படி இல்லை.... இவர்களுக்கும் பழைய ஏற்பாட்டில் ஞானமில்லை... இவர்களது அப்போஸ்தலர்களுகும் ஞானமில்லை.


ஆனால் கதைமட்டும் எழுதுவர், யூதருக்கே டஃப் கொடுத்தார் இயேசு  யூதருக்கே டஃப் கொடுத்தார் பவுல் என்று..

ஆனால் கதைகளை படித்தால் காப்பியாகவே உள்ளது இயேசுவின் சில உபதேசங்களை தவிர

புதன், 29 ஜனவரி, 2020

இயேசு இறைமகனா??

இயேசு இறைமகனா??

------------------------------------------------



இயேசுவை கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.


ஆனால் இது பழைய ஏற்பாட்டில் கடவுளை வணங்கிய இறையடியார்களுக்கு வழங்கப்பட்ட பெயரே ஆகும்.

மற்றபடி வேறு எதுவும் இல்லை.


பல கிறிஸ்தவர்கள் , இயேசு ஆரம்பமே இல்லாமல் இருக்கிறார் என்றும் கடவுள் என்றும் நம்புகிறார்கள்.


ஆனால் இயேசு தன்னை எங்குமே கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை.


மேலும் இயேசு கி.மு. 4வது வருடத்தில் கன்னி மரியாளிடம் பிறந்தார்.



இதைப்பற்றி யோவான் சொல்லும்போது,


"வார்த்தை  மாம்சமானது/மனிதரானது" (யோவான் 1:14)

அதாவது இயேசு கி.மு. 4 வரை பூமியிலோ வானத்திலோ எங்குமே இருக்கவில்லை


அதாவது வார்த்தை மாம்சமாக முனஆகும் யேசு என்ற நபரே இல்லை!!



சரி... வார்த்தை என்பது யாது??

இதைப்பற்றி

 ( http://answeringchristian.blogspot.com/2020/01/blog-post.html)  இல் பார்வையிடவும்!



தேவன் தன் கட்டளையான "ஆக-கடவது" என்ற வார்த்தைமூலம் சகலதையும் படைத்தார்.

அதாவது அவர் படைக்க நாடினால், "ஆக கடவது" என்று கட்டளையிடுவார். அது உடனே ஆகிவிடும்.



¤தேவன் வெளிச்சம் உண்டாக கடவது என்றார். அது உண்டாயிற்று.
(ஆதி 1:3)
¤ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாக கடவது என்றும் அது ஜலத்திலிருந்து ஜலத்தை பிரிக்க கடவது என்றார்
(ஆதி 1:6)
இது போன்று ஆதி 1:9 1:11 1:14 இலும் காணலாம். அதாவது பூமி தோன்றியது வானம் தோன்றியதெல்லாம் இப்படி என அங்கே கூறப்பட்டுள்ளது.
மேலும்,
சங்கீதம் 148:5
"அவைகள் கர்தரின் நாமத்தை துதிக்க கடவது. அவர்
#கட்டளையிட அவைகள் படைக்கபட்டது"
சங்கீதம் 33:6 "கர்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனைகளும் உண்டாயின"
இவற்றின்படி பிதாவாகிய ஏக இறைவன் படைக்க நாடியபோது "ஆகக்கடவது" (அரபியில் "குன்" என்று குர்ஆன் சொல்கிறது) என கட்டளையிட்டார்.
அவை உடனே தோன்றிவிட்டன. உண்டாகிவிட்டன.



இந்தபடி இயேசுவை உண்டாக்க நாடிய இறைவன், மரியாளிடம் கர்ப்பமாவதற்கு ஆவியை அனுப்பி செய்யவேண்டியதை கட்டளையிட்ட பின்,

"ஆக கடவது" என்ற கட்டளையை மரியாளிடம் போட்டார். அதாவது கர்ப்பம் தரித்து இயேசு பிறக்கட்டுமாக! என்பதே அதன் அர்த்தம்.


இதனால் இயேசு மரியாளிடம் பிறந்தார்.

இங்கே ஆக-கடவது என்ற வார்த்தை மூலம் மாம்சம்/மனிதர் மரியாளின் வயிற்றில் தோன்றியதால் தான் "வார்த்தை மாம்சமானது/மனிதரானது"  என யோவான் 1:14 சொல்கிறது. மேலும் இயேசு இவ்வார்த்தையின் மூலமாக மாம்சத்தில் பிறந்ததால் தான் கடவுளின் வார்த்தை என அழைக்கப்படுகிறார்.


ஆனால் கி.மு. 4 இற்கு முன் இயேசுவோ இயேசுவின் மாம்சமோ இருக்கவில்லை.



-----------------------

இயேசு கன்னியிடம் பிறந்ததால் இறைமகனா??

-----------------------


இயேசு கன்னி மரியாளிடம் பிறந்தார்.! ஆண்துனையின்றி மரியாள் கருவுற்றார்.


இதனால் நிறைய பேர் அன்னாரை இறைமகன் என வாதிடுகிறார்கள்.


ஆனால் இதற்காக ஒருவரை இறைமகன் என வாதிடுவது என்பது அர்த்தமற்றது ஆகும்.


ஏனெனில் ஆதாமை இறைவன் தாயும் தந்தையும் இல்லாமல் தன் சாயலில் படைத்தார்.(ஆதி 1:26-27)

ஏவாளை ஆதாம் என்ற ஆணிலிருந்து படைத்தார்.(ஆதி 2:20-24)


அதேபோன்று தான், தன் திட்டப்படி இயேசுவை மரியாளிடம் படைத்தார்.

இதன் அர்த்தமாவது இயேசு கருவில் மரியாளின் தொப்புள்கொடியால் மரியாளின் இரத்ததை உறிஞ்சியே வளர்ந்தவர் ஆவார்.


ஆதாமோ மண்ணினால் உண்டாக்கப்பட்டார்.  ஏவாளோ ஆதாமின் எலும்பிலருந்து உண்டாக்கப்பட்டார்

அதேபோன்று தான்  இயேசு மரியாளிடம் இறைவனால் உண்டாக்கப்பட்டார்.

இக்காரணத்துக்காக அவரை இறைமகன் என சொல்வதானால், அதற்கு மிக தகுதியானவர் ஆதாமே! ஏனெனில் அவரை இறைவன் நேரடியாக படைத்தார். ஆனால் இயேசுவை பெண்ணை கருவியாக ஆக்கி படைத்தார்.


எனவே இதற்காக அவரை இறைமகன் என வாதிடுவது அபத்தம் ஆகும்.... அப்படி வாதிட்டால் ஆதாமே முதலிடம் வருவார்


-----------------------

இறைவனுக்கு மகன் உண்டாக முடியுமா??

------------------------



இயேசு என்பவர் உட்பட சகல மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனது படைப்புகளே!


அப்படியிருக்க இறைவனுக்கு மகன் உண்டாக வேண்டுமானால், இறைவனுக்கு மனிதர்களில் மனைவி அவசியம். ஏனெனில் பெண்ணே பிள்ளை பெறுகிறாள். கணவன் அல்ல..

மனைவியிடம் பிறந்தாலே   பிள்ளை... இல்லாவிட்டால் அது படைப்பு.


மனைவியே அவனுக்கு இல்லாதபோது எப்படி பிள்ளை/மகன் உண்டாக முடியும்??

நிச்சயமாக முடியாது.


மரியாள் இறைவனது மனைவி அல்லவே... இறைவன் தூய்மையானவன்.

அப்படியிருக்க இயேசு இறைவனுடைய மகன் ஆக முடியாது.



-------------

இயேசுதன்னை இறைமகன் என கூறிய அர்த்தம்?
------------- 





பைபிளில் யேசு எந்த அர்த்தத்தில் இறைமகன் (son of god) தன்னை அழைக்கிறார் என்று அவரே சொல்கிறார்.





33 யூதர்கள் மறுமொழியாக, "நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்றார்கள்.

34 இயேசு அவர்களைப் பார்த்து, "'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்" என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?


35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.

36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை " இறை மகன் "என்று சொல்லிக் கொண்டதற்காக "இறைவனைப் பழித்துரைக்கிறாய்" என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?

யோவான் 10:33-36


இதில் 36வது வசனத்தில் இயேசு தன்னை இறைமகன் என கூறியது எந்த அர்த்தம் என கூறுகிறார்.



அதாவது,

1. அவர் கடவுளால் அர்ப்பணிக்கப்பட்டார்.

2.கடவுளால் உலகுக்கு அனுப்பப்பட்டார்

(இதேபோல சீடர்களையும் உலகுக்கு அனுப்புவதாக இயேசு சொல்கிறார்.


14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.


16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.

யோவான்  17:14,16,18)





இந்த காரணத்துக்காகவே அவர் தன்னை இறைமகன்/தேவகுமாரன் என தன்னை கூறுகிறார்.

அதாவது தேவனால் அர்ப்பணிக்கப்பட்டு  உலகுக்கு அனுப்பப்பட்டதாலேயே.

மற்றபடி எதுவும் அல்ல..


---------

இயேசு மட்டுமா இறைமகன் என அழைக்கப்படிருக்கிறார்??

---------------------



*இஸ்ரேல்

22 நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.

(விடுதலைப் பயணம் 4:22
யாத்திராகமம் 4:22)


இங்கே இஸ்ரேலை தன் மகன் என்கிறார்.



*இங்கே இஸ்ரேலை தலைப்பிள்ளை என சொல்லிவிட்டு அதற்கு முரணாக


9 அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

எரேமியா 31:9


எப்ராயீமை தலைப்பிள்ளை என்கிறார்.

மேலும் இஸ்ரவேலை ஓசியா 11:1-2 இலும் தன் மகன் என்கிறார்.



* ஆதாமையும் கடவுளின் மகன் என்கிறது


38 ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்.

லூக்கா நற்செய்தி 3:38


*விசுவாசிகளை தன் குமாரன் என்கிறார்


18 மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்; நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்" என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.

2 கொரிந்தியர் 6:18


* *தாவீதை தன் மகன் என்றும் பெற்றெடுத்தேன் என்றும் சொல்கிறார்.



7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:7


*சொலமோனை தன் மகன் என்கிறார்.


14 நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.

2 சாமுவேல் 7:14
15 உன் முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்று அவனை விலக்கமாட்டேன்.

2 சாமுவேல் 7:15



இப்படி நிறைய பேர் தேவகுமாரர்கள் இறைமகன்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உதாரணமாக ஆதியாகமம் 6:2-3
-------


ஏன் தேவ குமாரர்கள் என அழைக்கபடுகிறார்கள்?

---------------------



தேவகுமாரர்கள் என அவர்கள் அழைக்கப்பட காரணம், தேவனை அறிந்தவர்கள் அவரை தொழுது கட்டுப்பட்டு வாழந்தவர்கள் என்ற அர்த்தத்தில் ஆகும்.



இதேபோல சிலைகளை தேவதைகளை வணங்கியோரை அவர்களின் பிள்ளைகள் என பைபிள் அழைக்கிறது




11 யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்; இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய தூயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.

மலாக்கி 2:11



யூதா மக்கள் அந்நிய கடவுள்களை வணங்கியோரை திருமணம் முடித்தனர். அதை வேற்று தெய்வத்தின் மகளை மணந்ததாக சொல்லப்படுகிறது.



பேலியாலை வணங்கியோர் பேலியாலின் மகன்கள் பிள்ளைகள் என நியாயாதிபதிகள் 19:22 இல் கூறப்பட்டுள்ளது.



அதே போன்று கடவுளை அறிந்தவர்களையும் கடவுளை வணங்குவோரையும் கடவுளின் பிள்ளைகள்/குமாரரகள் என அழைக்கப்பட்டுள்ளது.
(ஆதியாகமம் 6:2,4 , யோபு 1:6..38:7 உபாகமம் 14:1 )


மேலும் தேவனை நம்பியோருக்கு தேவனை பிதாவாக இயேசு சொல்கிறார்.


48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்

மத்தேயு நற்செய்தி 5:48



*மேலும் இயேசு தேவனை என் பிதா உங்கள் பிதா என் தேவன் உங்கள் தேவன் என்று சொல்கிறார்.



17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார்.

யோவான் நற்செய்தி 20:17



அப்படியிருக்க இயேசுவை மட்டும் இறைமகன் என கூறுவது தப்பு ஆகும்.



--------

இயேசு ஒரே மகனா?

-------------------


இயேசு ஒரே மகன் என யோவான் 3:16இல் கூறப்பட்டுள்ளது.


ஆனால் மேலே நிறைய பேர் இறைமகன்கள் என கூறப்பட்டுள்ளதை பார்த்தோம்.

அதேபோன்று, இயேசு தன்னை இறைமகன் என எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை யோவான் 10:'33-36 இல் இயேசு சொன்னதை பார்த்தோம்.



இயேசுவை ஒரே மகன் என யோவான் உட்பட பலர் நினைக்க காரணம் என்னவென்றால், பழைய ஏற்பாட்டில் "குமாரன்/மகன்" என்று கூறப்படுவதையெல்லாம் இயேசுவையே குறப்பதாக நம்பினர்.


உதாரணமாக, ஓசியா 11:1-2 இல் இஸ்ரவேலை குறித்து தன் மகன் என சொல்வதை, இயேசுவை குறித்த தீர்க்கதரிசனம் என மத்தேயு எழுதுகிறார்.


சங்கீதம் 2:7 இல் தாவீதை குறித்து சொல்லப்பட்ட வசனத்தை இயேசுவை குறிப்பதாக பவுல் எபிரேயர் 1 இல் கூறுகிறார்.


அதேபோல 2 சாமுவேல் 7:14-15 இல் சொலமோனை குறித்து மகன் என சொல்லப்பட்டதை இயேசுவை குறித்து சொன்னதாக எபிரேயர் 1 இல் எழுதுகிறார்.



இப்படி பழைய ஏற்பாட்டில் தனிநபரையோ தனி இனத்தையோ குறித்து இறைமகன்/தேவகுமாரன் என வரும் வசனங்களையெல்லாம்இயேசுவை குறிப்பதாக இவர்கள் போதிய ஞானமின்றி நினைத்துக்கொண்டனர். (ஆவிதூண்டி எழுதினர் என கிறிஸ்தவர்கள் அடித்துவிடுவர்)


இதனால் தான் இயேசுவை ஒரே குமாரன் என யோவான் 3:16இல் யோவான் கூறுகிறார். இயேசு அல்ல.



ஆனால் இயேசு தன்னை இறைமகன் என சொன்ன அர்த்தம் ,யோவான் 10:33-36 இல் இயேசுவே தன் வாயால் சொல்கிறார்
-----------


தேவ குமாரன் என்பது உவமையே!!

----------------


தேவனை வணங்கியோரும் அறிந்தோரும், இயேசுவும் தேவகுமாரர்கள் என அறியப்படுவது உவமையே ஆகும்.



இதேபோன்று கணவன் மனைவி உவமையும் உள்ளது.


அதாவது தேவன் தன்னை கணவனாகவும், அடியார்களை தம் மனைவியாகவும் உருவகித்து பைபிளில் கூறப்பட்டுள்ளது. (ஓசியா 2:2,16-19, எரேமியா 3:7-10)

அதேபோன்று தான் பிதா-குமாரன் என்ற உவமையும் பாவிக்கப்பட்டுள்ளது.



எனவே நாம் மற்றபடி நேரடி அர்த்தம் கொள்வது தவறான ஒன்று ஆகும்

--------------

இயேசு இறைவனின் அடியாரே!!

-------------------


13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்;துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.

திருத்தூதர் பணிகள் 3:13
26 ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.

திருத்தூதர் பணிகள் 3:26


இறைவனின் ஊழியரை இறைவனின் மகன் என்ற அடையாளத்தை கொண்டு தப்பாக புரிந்துவிட்டவர்கே அதிகமாக உள்ளனர்.


சத்தியத்தை தேடுவோர் அதை கண்டடைவர்.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

காப்பி அடித்தது யார்? எபிரேயர் 1

காப்பி அடித்தது யார்??

------------------------------------------------


கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டில் , யூதர்களின் பழைய ஏற்பாட்டை காப்பியடித்து எழுதியதில்  ஒரு புத்தகத்தின் அதிகாரத்தை பார்ப்போம்.



காப்பி எனப்படுவது யாது என முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்..



ஒரு விசயம் நடந்தது என ஒருத்தர் சொல்கிறார். 10 வருடத்தின் பின் இன்னொருத்தர் அதே நிகழ்வை சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள்.

இதை நம்மால் காப்பி என கூற முடியாது... காரணம் 

நடந்ததை நடந்தபடி தான் சொல்ல இயலும்.

முதல் மனிதன் ஆதாம் என பைபிள் சொன்னால், அதே விசயத்தை நாமும் சொன்னால் அது காப்பி ஆகாது.

ஏனெனில் ஆதாம் தான் முதல் மனிதர் என்று இருக்கும்போது அப்படி தான் சொல்லவேண்டும்.... அதற்கு பதிலாக பாதாம் தான் முதல் மனிதர் என பெயரை மாற்றி சொல்ல இயலாது.


காப்பி என்பது என்னவென்றால்,, பைபிள் முதல் மனிதன் கி.மு 4114இல் படைக்கப்பட்டான், கி.மு 2457 இல் உலகம் முழுவதிம் வெள்ளம் ஏற்பட்டதால், உலகில் வெறுமனே 8 மனிதர்களும் சில மிருக பறவை சோடிகளும் மட்டுமே எஞ்சினர் என பைபிள் வரலாற்றை தப்பாக சொல்லும்போது, அதையும் நாம் கூறினால்  அப்போது அதை காப்பி என கூறலாம்..


வசனங்களை யார் யாருக்கு எத்தருணத்தில் சொல்லப்பட்டது என்பதையே மறந்து அவ்வசனங்களை சம்பந்தமில்லாத இடங்களில் மேற்கோள் காட்டுவது இவ்வகை காப்பி ஆகும்... அதாவது போதிய அறிவில்லாமல் வசனங்களை காப்பி பண்ணி எழுதிவிடுவது காப்பி ஆகும்.



அப்படிப்பட்ட ஒரு காப்பியை பைபிளிலிருந்து பார்ப்போம்.


எபிரேயர் அதிகாரம் 1




5 எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? 

#கமெண்ட்: இந்த இடத்தில் இதை எழுதிய ஆசிரியர் தேவதூதர்களைவிட இயேசு எப்படி சிறந்தவர் என கூறப்போதாக கூறி துவங்கும்போது,,

தேவதூதர்கள் யாருக்கும் "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உமக்கு தகப்பனானேன்" அப்படினு சொல்லல... இயேணுவுக்கு தான் சொன்னார் என்கிறார் ஆசிரியர்.


ஆனால், அப்படி இயேசுவுக்கு சொன்னதற்கு எங்குமே ஆதாரம் இல்லை.... மாறாக தாவீதுக்கு தான் சொன்னார்.

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:7
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; ப+வுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:8


இங்கே முதலாவது பொய்யாகவும் தப்பாக காப்பியும் பண்ணியுள்ளார்.



இரண்டாவதாக,

"நான் அவருக்கு பிதாவாக இருப்பேன். அவர் எனக்கு குமாரனாக இருப்பார்" என்று இயேசுவுக்கு சொன்னதாகவும், தேவதூதர்களுக்கு சொல்லவில்லைனும் சொல்கிறார் ஆசிரியர்.


ஆனால்,,, உண்மையில் அது சொலொமோனுக்கு சொல்லப்பட்டது ஆகும்.


12 உன் வாழ் நாள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். 

2 சாமுவேல் 7:12

13 எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். 

2 சாமுவேல் 7:13

14 நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். 

2 சாமுவேல் 7:14


இங்கே சொலமோனை பற்றி தாவீதிடம் சொன்னதை , இயேசுவை பற்றியது என எவ்வளவு அடித்ததுவிட்டுள்ளார் பாருங்கள்...

கோவிலை கட்டியது சாலொமோன் ஆவார்.


--------------------

6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
(எபி 1:6)

கமெண்ட்: இப்படி ஒரு வசனம் எபிரேய பைபிளில் இல்லை..

ஆனாலும் கிரேக்க செப்டுஆஜின்ட் பிரதிகளிலும் சாக்கடல் பிரதிகளிலும் இவ்வசனம் உபாகமம் 32:43 இல் இடம்பெறுகிறது.


உண்மையில், ஆசிரியர் சொல்வது போல இல்லை... அதாவது பிதா தன் குமாரனை குறித்து சொல்லவில்லை.


மோசே எழுதிய பாடலில், பிதாவாகிய தேவனை குறித்தே மோசே எழுதியுள்ளார்.


உபாகம புத்தகத்தை கடவுளின் வார்த்தை என நினைத்த ஆசிரியர், அதில் மோசே எழுதியதாக வரும் பாடல் வசனத்தை, "பிதா இயேசுவை குறித்து சொன்னதாக" அடித்துவிடுகிறார்.


காப்பி பண்ணும்போது, யார் யாருக்கு எத்தருணத்தில் சொல்லப்பட்டது என்றே இந்த ஆசிரியருக்கு தெரியவில்லை!!


-----------



8 குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. 

9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; 
(எபி 1:8-9)

கமெண்ட்: இவ்வசனங்களையும் தப்பாகவே காப்பி அடித்துள்ளார்.

இது குமாரனை பற்றி பிதா சொன்ன ஒன்று அல்ல..

மாறாக ராஜாவை புகழ்ந்து, பாடலாசிரியர்கள் எழுதியது ஆகும்.


இது சங்கீதம் 45:6-7 இல் இடம்பெறுகிறது.


பழைய ஏற்பாட்டு காலத்தில், அதிகாரமுள்ளவர்களை "தேவன் " என அழைப்பதுண்டு.

உதாரணமாக, "நீங்கள் தேவர்கள் " என சொமொல்லப்பட்டுள்ளது. (சங்கீதம் 82:6 யோவான் 10:34)


மோசேயை பாரோனின் தேவன் என்று (யாத்திராகமம் 7:1) இல் தேவன் சொல்கிறார்.

அதேபோல மோசே ஆரோனின் தேவன், ஆரோன் மோசேயின் தீர்க்கதரிசி என சொல்லப்பட்டுள்ளது (யாத்திராகமம் 4:16)


அந்த வரிசையில் தான், அந்த ராஜாவை "தேவன்" என சங்கீத ஆசிரியர் பாடுகிறார். 


அந்த தேவனை புகழ்ந்துவிட்டு, அடுத்த வசனத்திலேயே "தேவனே! உம்முடைய தூவன் உமது தோழரை பார்க்கிலும் ஆனந்த தைலத்தால் அபிசேகம் பண்ணினார்" (சங்கீதம்45:7 எபி 1:9)

அரசனை தேவன் என அழைத்து, அரசனின் தேவனான கடவுள் அரசரை மற்ற தோழர்களைவிட அபிசேகம் பண்ணினார் என புகழ்ந்து பாடுகிறார் சங்கீத ஆசிரியர்...

கடவுளுக்கு கடவுள் இருக்குமா?? இதில் ஆரம்பத்தில் கூறப்பட்ட தேவன் என்பவர்  அரசன், இரண்டாவதாக "உம்முடைய தேவன்" என கூறப்படுபவர் இறைவனான கடவுள் ஆவார்.


இதை தப்பாக இயேசுவை குறித்து கூறப்பட்டது என எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.


சங்கீத புத்தகத்தில், இவ்வசனத்துக்கு அடுத்து வரும் வசனத்தை பாருங்கள்


9."உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்ததிகள் உண்டு, ராஜஸ்திரீ ஒப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலது பாரிசத்தில் நிற்கிறாள்"
(சங்கீதம் 45:9)

இந்த வசனத்தின்படி அந்த அரசனுக்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்களில் பலர் ராஜாக்களின் மகள்கள்... மேலும் அரசி தங்கம் அணிந்து உள்ளார்.


இயேசுவுக்கு பல மனைவிகள் உண்டா?? அவர்கள் அரசர்களுக்கு பிறந்தவர்களா??


நிச்சயம் இல்லை..

இது அரசனை பற்றி புகழ்ந்து பாடும் அத்தியாயத்திலிருந்து இரண்டு வசனங்களை பிடுங்கி, அது இயேசுவை பற்றி பிதா சொன்னது என அடித்துவிடுகிறார் ஆசிரியர்.
---------------------




10 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது; 

11 அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்;

12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

(எபி 1:10-12)

#கமெண்ட்:

இங்கே ஆசிரியர் மீண்டும் வழக்கம் போன்ற காப்பி பண்ணும் வேலையை செய்துள்ளார்.

இதுவும் பிதா தன் குமாரனை பற்றி சொன்னது என சொல்கிறார் எபிரேய ஆசிரியர்!!!


ஆனால், உண்மையில் இது பிதாவாகிய தேவனைக்குறித்து  நோய்வாய்ப்பட்டு துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதன் எழுதிய பாடல் ஆகும்..


இது சங்கீதம் 102:25-27 இல் வரும் வசனங்கள இவை ஆகும்..


அதற்கு முந்திய வசனத்தை பாருங்கள்,

"அப்பொழுது நான்: என் தேவனே!  பாதி வயதில் என்னை எடுதமுக்கொள்ளாதேயும்! உம்முடைய வருசங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்".
(சங்கீதம் 102:24)

அதனை தொடர்ந்து வரும் தொடர்ச்சியே அவ்வசனங்கள் ஆகும்.

அதாவது தேவனே! நீர் உலகத்தை படைச்சீர்.. நீர் என்றென்றும் நிலைத்திருப்பீர் அப்படியெல்லாம் தேவனை புகழ்கிறார்.


என்னை சின்ன வயதிலேயே சாக வைத்துவிட வேண்டாம் என ஜெபிக்கும் இந்த நோயாளி தேவனை புகழ்வதை எபிரேய ஆசிரியர் தப்பாக புரிந்துள்ளார்.

சங்கீத புத்தகத்தை இறைவார்த்தை என நினைத்த எபிரேய ஆசிரியர் அவ்வாறு புரிந்துள்ளார்.


அதன் தொடர்ச்சியாக

" உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள். அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
(சங்கீதம் 102:28)

இங்கேயே புரிந்துவிடும், இது நோயாளி தேவனிடம் தன்னை சின்ன வயதிலேயே சாகடித்துவிட வேண்டாம் என வேண்டுதல் செய்யும் பிரார்த்தனையில் இடையில் வரும் வசனத்தை மட்டும் பிடுங்கி,, அதை தேவன் சொன்னார் குமாரனுக்கு சொன்னார் என ஆசிரியர் சொல்கிறார்.

அப்படியென்றால், தேவன் குறைமாசத்தில் தன்னை கொன்றுபோட்டுவிட வேண்டாம் என குமாரனிடம் கெஞ்சுவது போன்று தான் அர்த்தம் வரும்.. பரவாயில்லையா??

--------------



13 மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா? 
(எபி 1:13)

#கமெண்ட்:
இவ்வசனம் பிதா தன் குமாரனுக்கு சொன்னார் என்று திரும்பவும் சொல்கிறார்.


இதுவம் சங்கீதம் 110:1 இல் வரும் வசனம் ஆகும்..



குமாரனின் எதிரிகளை அவரது பாதத்துக்கு கீழே போடும்வரை வலது பக்கத்தில் இரும் என சொன்னாராம்.

அப்படியென்றால்,,, குமாரனுக்கு தன் எதிரிகளை எதுவும் பண்ண முடியவில்லை என காட்டுகிறது...

அவ்வளவு வீக் ஆனவராக குமாரன் உள்ளார் என்பதை இது காட்டுகிறது.

.
ஆனால் இதுவும் உண்மையில் தாவீதை பற்றி அவரது பாடகர்கள் புகழ்ந்து பாடியது ஆகும்.....


தாவீது தன் மகன் அப்சலோமால் விரட்டியடிக்கப்பட்டபோது நிறைய எதிரிகள் தாவீதுக்கு உண்டாகின..

அப்போது அவர் ஒழிந்திருத்தார்..

அதை குறித்து தான் தாவீதின் பாடகர்கள் , தாவீது மீண்டும் ராஜாவான பின்பு அவருக்காக பாடினர். 


தாவீது தப்பி ஓடியபோது, தேவன் அவரை பாதுகாத்தார், அவர்கள் பலவீனமடைந்து அழியும்வரை தாவீது வரவில்லை. அதன்பின் தாவீது வந்தார். அந்நிகழ்வை புகழ்ந்து, "அக்காலத்தில் தேவனக்கு வலப்பக்கத்தில் இருந்தார்" என புகழ்ந்து பாடினார்கள்.


இதை அறியாத புதிய ஏற்பாட்டாசிரியர்கள் குழம்பி அதை இயேசுவை குறிக்கும் என ஆக்கி, அதற்கேற்றாற்போல்,, இயேசு தேவனின் வலப்பக்கம் அமர்ந்தார் என கதை எழுதினார்கள்.


அம்புட்டும் தப்புதப்பான காப்பி ஆகுமா 

சனி, 30 நவம்பர், 2019

அன்னை மர்யமுடன் பேசிய மலக்கு ஒருவரா பலரா? - குர்ஆனில் முறண்பாடா?

அன்னை மர்யமுடன் வானவர் பேசியதில் குர்ஆன் முறண்படுகிறதா? -  மொழியறிவற்றோருக்கு பதில்------------------------------------------------



அரபு மொழியில் போதிய அறிவு இல்லாமலும் குர்ஆனிய மொழிநடையில் போதிய அறிவு இல்லாமலும் சில மடையர்கள், "மர்யம் அவர்களுடன் வானவர் பேசிய சம்பவத்தில் முறண்படுகிறது" கூறுகிறார்கள்.

அதாவது, மர்யம் அவர்களிடம் வந்து பேசியது ஜிப்ரீல் (அலை) அவர்களா? (19:17-21), அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மலக்குகளா? (3:42,45-47)  என்று நம்மிடம் கேட்டு, இதை முறண்பாடு என்று பிதற்றுகிறார்கள்.


நம் பதில் என்னவென்றால், மர்யம் அவர்களிடம் அனுப்பபட்டு , அவரோடு பேசியவர் ஒருவர் தான்.. அவர் தான் ஜிப்ரீல். (19:17-21)


அப்படியென்றால், ஏன் குர்ஆன் 3:42,45-47 இல் "இத் காலதில் #அல்மலாயிகது"  என அதாவது "வானவர்கள் கூறிய சமயத்தில்.. (நினைத்துபாரும்!)" கூறுகிறது?


இதற்கு பதில் மிக இலகுவானது...
அரபு மொழியில் பன்மையான வார்த்தைகளின் மூலம் ஒருவரை குறிக்கவும் பாவிப்பதுண்டு..
இந்த விசயம் அறியாததால் தான் இந்த மடையர்கள் இப்படி கதறுகிறார்கள்.

உதாரணமாக,


1. அரபு மொழியில் "மின்மன் ஸமிஃத ஹாஃதல் ஃகபர (minman sami'tha haadhal khabara)" என்றல், "இந்த செய்தியை யாரிடமிருந்து நீ செவிமடுத்தாய்!" என கேட்பதுண்டு.
இதற்கு பதிலாக அவர், "மின் அந்நாஸி (மினன்நாஸி)" என்று அதாவது "மனிதர்களிடமிருந்து" என பன்மையில் சொல்லுவதுண்டு... ம ஆனால் உண்மையில் அவர் செவிமடுத்ததோ ஒரு மனிதரிடமிருந்து தான்.

இதேபோல குர்ஆனில் உள்ள சில வசனங்களை பாருங்கள்,
2."அல்லஃதீன கால லஹும் #அந்நாஸு  இந்நன்னாஸ கத் ஜமஊலகும்......"

-#மனிதர்கள் அவர்களிடம் : நிச்சயமாக மக்கள் உங்களுக்கு விரோதமாக (போர்செய்ய) ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு பயந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். அப்போது அது அவர்களுக்கு விசுவாசத்தை அதிகப்படுத்தியது....(3:173)

இங்கே மனிதர்கள் கூறினார்கள் என கூறப்படுள்ளது... ஆனால் உண்மையில் அங்கு ஒரு மனிதன் வந்து தான் இதை சொன்னார்.. அம்மனிதருக்கு பன்மையில் மனிதர்கள் என கூறப்பட்டுள்ளது.


அதேபோல,
3. "#ஹுமுல்லதீன #யகூலூன லா துன்ஃபிகூ அலா மன் இந்த ரஸூலில்லாஹி....."
#அவர்கள் "அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள் பிரிந்து செல்லும்வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யவேண்டாம்." என்று கூறுகிறார்கள்....(63:7)
#யகூலூன லயிர் ரஜஃனா இலல் மதீனதி..
அவர்கள் #கூறுகிறார்கள : "நாங்கள் மதீனாவுக்கு திரும்பிவந்தால், மிக்க கண்ணியமிக்கவர் மிக இழிவானவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்".(63:8)

இங்கே அவர்கள் கூறினார்கள் என பன்மையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனாலும் இதை சொன்னவன் " அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல்" என்ற நயவஞ்சகன் தான்.

இந்த சம்பவம் திர்மிதி 3312வது ஹதீஸாக  பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவன் சொன்னதை கூட பன்மையில் அவர்கள் சொன்னார்கள் என இந்த வசனம் கூறுகிறது.
காரணம், அரபு மொழி நடைமுறையில் அப்படி சொல்வதுண்டு.

4. அதேபோல 30:33 இலும் ஒருமனிதனை பன்மையில் பாவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல,
5. "Kazzabath qawmu noohin #al-mursaleen"
நூஹுடைய சமூகம் தூதர்களை பொய்ப்பித்தார்கள்.(26:105)
இதேபோல 26:123, 141, 160, 172 ஆகிய வசனங்களிலும் தூதர்கள் (அல்முர்ஸலூன்) என்று உள்ளது.
ஆனால் அந்தந்த சமூதாயங்கள் உதாரணமாக,
நூஹ் நபியின் சமூகம் அவரை பொய்ப்பித்தது.
அதேபோல ஆது என்பவர்கள் ஹூது அவர்களை பொய்பித்தார்கள்.
சமூது என்பவர்கள் ஸாலிஹ் அவர்களை பொய்பித்தார்கள்.
லூத் நபியின் சமூகம், லூத் அவர்களை பொய்ப்பித்தார்கள்.

இந்த விசயங்களை குர்ஆன் பன்மையில் கூறுகிறது.

6. இன்னும் அரபு பேச்சுவழக்கில்,  
ரகிப அர்ரஜுலு அஸ்ஸுஃபுன- அம் மனிதன் கப்பல்களில் ஏறி பயணம் செய்தான்
இங்கே அவன் ஒரு கப்பலில் தான் புறப்பட்டு பயணம் செய்தான்.. ஆனால் அதையே  கப்பல்களில் பயணம் செய்ததாக கூறுவதுண்டு.

இதேபோன்று குர்ஆனில் இன்னும் நிறைய உள்ளன இதுபோன்ற நடை.
7. உதாரணமாக, அல்லாஹ் தன்னை "நாங்கள்" என கூறுவது (2:3 2:23 இன்னும்பல)

அது போன்று தான் ஜிப்ரீல் என்ற ஒருவானவர் வந்து பேசியதை, பன்மையில் வானவர்கள் என குர்ஆன் 3:42-47 இல் கூறப்பட்டுள்ளது.

அரபு மொழி வழக்குகளோ குர்ஆனிய மொழிவழக்குகளோ அறியாததால் தான் இப்படி லூசுத்தனமாக உலறுகிறார்கள்.

குர்ஆனின் ஒரு பகுதி மற்றைய பகுதியை உறுதிப்படுத்தும்விதமாகவே இறக்கப்பட்டுள்ளது.

அந்தபடி 3:42,45-47 இல் கூறப்பட்ட அல்மலாயிகது என்பது ஜிப்ரீல் (அலை) தான் என 19:17-21 கூறுகிறது.!!



எனவே இவர்களின் உலரல்கள் மடத்தனமான வாதங்கள் ஆகும்.. குர்ஆனின் அரபு நடை பற்றி தெரியாததால் இப்படி புலம்புகிறார்கள்!!!

வியாழன், 24 அக்டோபர், 2019

இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

------------------------------------------------------------------------




உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒருசில பிரவினரை தவிர மற்ற அனைவரும் இயேசு கிறிஸ்துவை கடவுள் என நம்புகிறார்கள்.   இயேசு கிறிஸ்து அவர்கள் கடவுளா? என்றால் நிச்சயமாக இல்லை என்பதையே நாம் பைபிளிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

கிறிஸ்தவர்கள் செய்வது என்னவென்றால், பைபிளை தமது தவறான நம்பிக்ககைக்கேற்ப திரித்து படிக்கிறார்களேயன்றி உண்மையை அறிந்துகொள்ள படிப்பதில்லை!!


*இயேசு கடவுளாக இருந்திருப்பாரானால், தன்னை கடவுள் என நேரடியாக "நானே கடவுள்! என்னை தான் நீங்கள் வணங்கி வழிபட வேண்டும்" என கூறியிருப்பார்.

ஆனால் அவர் அப்படி கூறவில்லை..... தன்னை கடவுள் என கூறாத நபரை  , "கடவுள் என்றும், அவரையே வணங்கவேண்டும்" என்று சொல்வதும் மிக அபத்தம்!!!



*இயேசு ஏன் தன்னை கடவுள் என கூறவில்லை??:



இக்கேள்வியை நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது :



"ஒரு மனிதன் தன்னை கடவுளென வாதிட்டால் ஏற்றூக்கொள்வீர்களா? தன்னை கடவுளென வாதிடுபவர்களையெல்லாம் கடவுளென ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்கிறார்கள்.


நம் பதில் என்னவென்றால்,,,

ஒரு மனிதன் கடவுளென சொல்வதானால் அவன் பைத்தியமாக இருப்பான் அல்லது பொய்யனாக இருப்பான்.

ஆனால் இயேசுவோ பொய்யருமல்ல பைத்தியமும் அல்ல!

அதனால் அவர் சொல்வது உண்மையாக தானே இருக்கும்! அப்படிப்பட்டவர் சொன்னால் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.


நாம் ஏன் அவர் வாதிட்டாரா என கேட்கிறோமெனில், 

அவர் தன்னை கடவுளென கூறவேயில்லை என்று நாம் அறிவோம்!! கிறிஸ்தவர்களும் அறிவார்கள்!!




ஒருவர் வெற்றியடைய (நித்தியஜீவனை அடைய) வேண்டுமானால், உண்மையான கடவுளை அறிய வேண்டும்!!! 

பொய்யான கடவுளை வணங்கினால் நிச்சயமாக அடையவே முடியாது!

ஆகவே ஒருவர் நித்தியஜீவனை அடைய உண்மை கடவுளை கட்டாயம் அறிய வேண்டும்!! இயேசு கடவுளெனின் அவர் கடவுளென அறயவேண்டுமா இல்லையா?

இப்படி அத்தியாவசியமான விசயத்தில் வாயை மூடிக்கொண்டு "தன்னை கடவுளென" நேரடியாக அறிவிக்காமல் இருந்தால்  ,   எப்படி நித்தியஜீவனை அடைவது??




எனவே நிச்சயம் அவர் கடவுள் இல்லை என்பதால் தான் , தன்னை கடவுள் என கூறவில்லை!!

  உண்மைக் கடவுளை அறியாதவன் பரலோகம் போகமுடியாது!!  போலியான கடவுளை வணங்குபவனும் போக முடியாது!

இப்படிப்பட்ட விசயத்தில் அவர் தன்னை கடவுளென வாதிடவில்லை எனின் அவர் கடவுள் அல்ல என்ற ஒரே காரணம் தான்!


எனவே அவர் அந்த மெய்க்கடவுள் அல்ல!!

தான் கடவுள் இல்லை என்ற காரணத்தால், தன்னை கடவுள் என கூறாத பணிவான மனிதரை கடவுளாக்கி வணங்குவது மிகப்பெரிய தப்பு ஆகும்!!


இதிலிருந்து விலகிக்கொள்ளவிட்டால் நித்திய அக்கினியில் கருக வேண்டிவரும்!!! தோல் கருகிப்போனதும் புதுத்தோல் தரப்பட்டு நித்தியமாக வேதனை அனுபவிக்க வேண்டிவரும்! 
எனவே எச்சரிக்கையாயிருங்கள்.





*அப்படியென்றால் அவர் தன்னை கடவுள் இல்லை என்றாரா??




ஒருவர் மனிதராக பூமியில் உள்ளபோது , "நான் கடவுளில்லை" என சொல்ல அவசியமே இல்லை!! காரணம் , பார்த்தவுடனே இவர் கடவுளல்ல! மனிதனே ஆவார் என புரிந்துகொள்ள முடியும்



ஆனாலும் இயேசு தன்னை கடவுள் இல்லை என்பதை தன் வாயாலேயே உணர்த்தினார்! நேரடியாகவே சொன்னார்.


உதாரணமாக,..


1. உண்மையான கடவுள் ஒருவரே! அவரே அந்த பிதா என்று இயேசு தன் வாயாலேயே கூறுகிறார்:



3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 
யோவான் 17:3



ஒரே உண்மைக்கடவுளே உள்ளார். அவரே பிதா எனும்போது, இயேசு  உண்மைக்கடவுள் அல்ல என்று தெளிவாகிறது. இது இயேசு நேரடியாக சொன்ன வார்த்தை!


பவுலடிகளார் கூட , தேவர்கள் என அநேகர் இருந்தாலும், நமக்கு பிதா எனும் ஒரே கடவுளே உள்ளார் என்கிறார். (1 கொரிந்தியர் 8:5-6)


பிதா ஒரே ஒரு உண்மை கடவுளாக இருக்க, இயேசு உண்மைக்கடவுளாக முடியாது
--------


2. இயேசு பிதாவிடமே (உண்மைக்கடவுளிடமே)  ஜெபம் செய்தார், பிரார்த்தித்தார்.




39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 
மத்தேயு 26:39



12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 
லூக்கா 6:12



இதன்மூலம் ஜெபம் செய்யப்படவேண்டியவர் பிதா ஒருவரே என வாழ்ந்து வழிகாட்டினார்.

-------

3. பிதாவிடமே ஜெபம் செய்ய வேண்டும் என ஜெபத்தை கற்பித்தார்:




1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். 
லூக்கா 11:1

2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக, 
லூக்கா 11:2



இங்கே நாம் ஜெபிக்க வேண்டியது பிதாவாகிய உண்மை தேவனை நோக்கி தான் இருக்க வேண்டும் என இங்கே கற்பிக்கிறார். அவர் ஜெபித்து முடிந்த பின்பே , சீடர்களுக்கு கற்பித்தார்.

-----


4. உண்மையாக தொழுதுகொள்பவர்கள் பிதாவையே தொழுதுகொள்வார்கள்  என்றும் பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும் என்றும் கூறினார் கூறினார்:



23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 
யோவான் 4:23

24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 
யோவான் 4:24


இங்கே உண்மையான தொழுகையாளிகள் பிதாவை தான் தம் ஆவியோடு தொழுவார்கள் என்பதன்மூலம் பிதாவை தொழுதுகொள்வோரே உண்மையான தொழுகையாளிகள் என கூறுகிறார். அதன்மூலம் தான் தொழுகொள்ளப்பட கூடாது என்பதை எவ்வளவு தெளிவாக கூறுகிறார் என பாருங்கள்

------;



5. பிதாவின் சித்தப்படி செய்வோரே பரலோகத்தில் நுழைவார்கள் என்றும் இயேசுவை நோக்கி வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" என கூறுவோர் நுழையமாட்டார்கள் என்றார்:



21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 
மத்தேயு 7:21

22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 
மத்தேயு 7:22

23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 
மத்தேயு 7:23



இங்கே பிதாவின் சித்தப்படி செய்யாமல் இயேசுவை கர்த்தாவே! கர்த்தாவே என அழைப்போரும், இயேசுவின் பெயரால் அற்புதம் செய்வோரும் அதில் நுழைவதில்லை என்கிறார்.



பிதாவின் சித்தம் என்ன??


1. பிதாவாகிய அவரை ஆவியுடன் உண்மையாக தொழ வேண்டும்.  (யோவான் 4:23)


2. பிதாவாகிய அவரை தவிர வேறு யாரையும் நமஸ்கரிக்கவோ தொழவோ கூடாது!


3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 
யாத்திராகமம் 20:3

4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; 
யாத்திராகமம் 20:4

5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். 
யாத்திராகமம் 20:5



இங்கே பிதா, வானத்திலுள்ளவர்களைப்போலவோ பூமியிலுள்ளவர்களை போலவோ யாரையுமே வணங்க வேண்டாம் என்கிறார்.

குறிப்பாக அவரை தவிர வேறு தேவர்கள் உண்டாயிருக்கவே கூடாது என்கிறார்.

இயேசு பிதா அல்ல என எல்லோருக்குமே தெரியும். அப்படியிருக்கும்போது அவரை தேவனாக ஆக்கி அவரிடம் ஜெபம் செய்வது மிகப்பெரிய தவறாகும்.

அப்படி செய்தால் , அவர் இயேசுவை ஆண்டவராக மெசியாவாக ஏற்றவராக இருந்தாலும் அவர் பரலோகம் போக மாட்டார் என்றே இயேசு சொல்கிறார்.



அப்படியிருக்க அவரை கடவுளாக தொழுதுகொண்டு நரகம் போகவேண்டுமா?????

------

6. இயேசு தன்னை தேவ குமாரன் என சொன்னதன் அர்த்தம்கூட, தன்னை தேவன் அனுப்பினார் என்பதாலும் அவருக்கு அடிபணிந்து இருக்கிறார் என்பதாலும் தான் என அவரே விளக்கமளிக்கறார்!


34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 
யோவான் 10:34

35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 
யோவான் 10:35

36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? 
யோவான் 10:36



தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தேவர்கள் அல்ல..

அதேபோன்றே நானும் என்னை தேவ குமாரன் என்கிறேன். காரணம் தேவன் என்னை பெற்றெடுத்தார் என்பதல்ல.. மாறாக அவர் என்னை அனுப்பினார், பரிசுத்தப்படுத்தினார் என்பதால் தான் என்று கூறி யூதர்களை வாயடைக்க வைத்தார்...

-----

7. ஒரு யூதர் இயேசுவை நல்ல போதகர் என்கிறார். அப்போது இயேசு, "என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? தேவன் ஒருவரை தவிர நல்லவர் இல்லையே" என கூறி தனக்கு தெய்வீகமெல்லாம் இல்லை என தெளிவாகவே கூறிவிட்டார்:



17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 
மாற்கு 10:17

18 அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 
மாற்கு 10:18

19 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். 
மாற்கு 10:19




இப்படியிருக்க அவரை வணங்கினால் நிச்சயம் நரகம் போகவேண்டும்!! (அதையே இயேசு மத்தேயு 7:21ல் சொன்னார் மேலே பார்க்கவும்).



எனவே நரகத்தில் வீழ்ந்துவிடாதிருக்க இயேசுவை கடவுளாக வணங்குவதை விட்டு விலகியிருங்கள்!!




இதை தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்,

*நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எனவே அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி ஆகும் (என ஈசா கூறினார்.)"
(3:51)



"நிச்சயமாக அல்லாஹ் தான் மர்யமின் குமாரன் மஸீஹ் என கூறியோர் நிராகரித்துவிட்டனர்.  இன்னும் மஸீஹோ , " இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்றுகூறினார். " 
(5:72)


--------------

சனி, 17 ஆகஸ்ட், 2019

இயேசு கடவுள் அல்ல காரணங்கள் 1- 25

இயேசு ஒருநாளும் கடவுளாக முடியாது!!!

காரணம் என்ன தெரியுமா??
Part 1
--------------------------------------------




1.அவர் ஒருபோதும் தன்னை கடவுள் என கூறவில்லை. அதற்கு மாற்றமாக,  அவரை அனுப்பிய பிதாவையே கடவுளாக வாதிடஇருந்தார்கள்
பிதா ஒருவரே கடவுள் என கூறினார்.


"மெய்யான ஒரே தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்"
(யோவான் 17:3)


*****

2.அவர் அநேக இடங்களில் தன்னை தேவகுமாரனாகவே அறிவிக்கப்பட்டிரிக்கிறார். தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் ஆதிமுதல் ஆரம்பமின்றி இருந்திருக்க முடியுமா?  

மகன் என்றாலே தகப்பனால் உண்டாக்கப்பட்டவன் என்றே அர்த்தம். அதாவது உண்டாக்கப்பட்டவர் கடவுளாக முடியாது.


" அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 
(மத்தேயு  3:17)

இதைப்போன்றே இயேசுவுடன் நாமும் பிதாவிடம் அனந்தரம் கோருவோம் என பவுலடியார் சொல்கிறார்.

****


3.பரிசுத்த ஆவியின் பலத்தை இயேசுமேல் பொழிந்தவரே கடவுள் என்கிறது பைபிள்.  பலத்தை கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் சமமாவார்களா??


" 38 கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 
(திருத்தூதர் பணிகள் 10:38)

*****


4. இயேசு அப்போஸ்தலராகவும் தலைமை குருவாகவும் உள்ளார். கடவுளும் கடவுளின் அப்போஸ்லனும் ஒன்றாக முடியுமா?  தலைமை ஆசாரியன் எனும் குரு தேவனுடைய வீட்டில் ஊழியகாரன். ஊழியகாரனும் எஜமானும் ஒன்றாவதெப்படி?


" 1 எனவே, தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள். 
(எபிரேயர் 3:1)

*****

5. ஒரே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலுள்ள மனிதனான மத்தியஸ்தரே இயேசு ஆவார்.

அந்த ஒரே கடவுள் இவரல்ல என்றாகிவிடுகிறதோடு அவர் மனிதர் என தெளிவாகிறது

" 5 ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 
(1 திமொத்தேயு 2:5)
****


6.இயேசு தேவனால் அனுப்பபட்ட மீட்பர் ஆவார். அனுப்பபட்டவர் அனுப்பியவரோடு சமமாவதெப்படி??


" 14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். (1 யோவான் 4:14)

குறிப்பு: பழைய ஏற்பாட்டிலும் இரட்சகர் எனப்படும் மீட்பர்கள் இருந்தார்கள்


****

7.இயேசுவும் கடவுளால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலரே! அவர் தேவனுக்கு நம்பிக்கைகுரியவராக இருந்தார். அவரும் மோசேயின் வரிசையில் வந்தவரே!



" 2 கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். அவ்வாறே இவரும் தம்மை நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். 
(எபிரேயர் 3:2)
****

8.இயேசு தேவனிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார். கடவுளிடம் பரிந்து பேசுபவரும் , கடவுளும் சமமாக முடயுமா??


33 கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. 
(உரோமையர் 8:33)

34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! 
(உரோமையர் 8:34)

இது இயேசு உயிர்த்தெழுந்ததாக கருதப்படும் கதைக்கு பிறகுள்ள நிகழ்வு ஆகும். அப்போதும் இவரால் பரிந்துபேசவே முடிகிறதெனின் , இவர் எப்படி கடவுளாவார்?


****

9. பெண்ணுக்கு தலைமை ஆண். ஆணுக்கு தலைமை இயேசு. இயேசுவுக்கு தலைமை கடவுள் என்கிறது பைபிள்.

இதன்படி தெளிவாக அவர் கடவுளல்ல என பவுலடியார் கூறுகிறார்


" 3 ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என் விரும்புகிறேன்; ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்குத் தலைவர் கிறிஸ்து; கிறிஸ்துவுக்கோ தலைவர் கடவுள். 
(1 கொரிந்தியர் 11:3)

****

10. பவுல் போன்றவர்கள் கொரிந்தியருக்குரியவர்களாம். கொரிந்தியர்கள் இயேசுவுக்குரியவர்களாம். இயேசு கடவுளுக்குரியவராம்!


கடவுளுக்குரியவர் (கடவுளுக்கு சொந்தமானவர்) எப்படி கடவுளாக முடியும்?


21 எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. 

22 அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. 

23 ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர். 
(1 கொரிந்தியர் 3:21-23)

****

11.ஒரே கடவுளாகிய பிதா அனைவரிலும் பெரியவர், என்னைவிடவும் பெரியவர் என்று சொல்கிறார் இயேசு.


29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 

(யோவான்  10:29)


28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 
(யோவான்  14:28)


இதுவே அவர் கடவுளுக்கு சமமானவரல்ல என்பதை காட்டுகிறது!

****

12. தனக்கு தேவத்துவமே இல்லை என்பதை அவர் மறுத்துவிட்டார். 

 ஒருதடவை "நல்ல போதகரே!" என ஒருவர் அழைத்தார். என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? கடவுள் ஒருவரை தவிர நல்லவர் இல்லை என கூறுவதால் தான் கடவுளே அல்ல என மறுத்துவிட்டார்



16. அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;
17. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
(மத்தேயு 19:16-17)


****

13. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என இயேசு சொன்னதை (யோ 10:30) தவறாக சீடர்கள் புரிந்துகொள்ள கூடாது என்பதற்காக  பிதாவிடம் பிரார்த்தனை செய்து இந்த "ஒன்றாயிருக்கிறோம்" என்பது முரண்பாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதையே குறிக்கும் என்பதை தெளிவாக காட்டி, அதேபோல சீடர்கள் 12பேரும் பிதாவும் இயேசுவும் ஒன்றாக இருக்க வேண்டும் என வேண்டிகொண்டார்!

இது முரண்படு பிரிந்துவிடாதிருக்கும் ஒற்றுமையையே குறிக்கிறது என்பதை தெளிவாக்கினார். தான் கடவுளெனின் அதை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார் அல்லவா?




21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
(யோவான் 17:21-23)

****

14. பிதாவாகியவர் எப்படி சீடர்களுக்கு தேவனோ அதேபோன்று தனக்கும் தேவன் தனக்கும் கடவுள் என கூறி தனக்கு கடவுள் தன்மை இல்லை என மறுத்துவிட்டார்!

இல்லாவிட்டால், அப்படி கூறியிருக்க மாட்டார்!!



17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் 20:17)

****

15.பவுல் கூட இயேசுவை தேவனிலிருந்து பிரித்து, தேவன் என்பவர் எப்படிபட்டவர் என சொல்கிறார்! அவரே பிதா!!



16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


இயேசுவை மக்கள் கண்டனர். பைபிளின் கூற்றுப்படி மரித்தார். அவர் தேவனல்ல

****

16. கடவுள்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள் ஆனால் நமக்கு ஒரே தேவனே உள்ளார். அவர்தான் பிதா என்கிறார் அதே பவுலடியார்.

அதேபோல கர்த்தராக (ஆண்டவராக) இயேசு உள்ளார் என்கிறார்.

கர்த்தர் என்பது கடவுளுக்கு மட்டும் உரிய ஒன்று அல்ல..   இதன் அர்த்தம் ஆண்டவர் என்பதாகும்!


 5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்
(1 கொரிந்தியர் 8:5-6)



இங்கே இயேசுமூலம் சகலதும் உண்டானது என பவுல் தப்பாக புரிந்துகொள்ள காரணம், ,

தேவன் அனைத்தையும் தன் வார்த்தையாகிய "ஆக கடவது" என்று சொல்வதன்மூலம் படைத்தார். (ஆதி 1)

இயேசுவானவர் வார்த்தை மாம்சமானதால் உண்டானவர் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.

வார்த்தை மாம்சமாக முன்பு இயேசு என்ற மனிதர் இருக்கவே இல்லை!!  

அப்படியிருக்க அவர்மூலமாக சகலதும் உண்டானது என கூறுவது அபத்தமாகும். ஏனெனில் அவர் இருக்கவில்லை!! அவர் கி.மு. 4 இல் மரியாளின் கர்ப்பத்தில் படைக்கப்பட்டவர் ஆவார்!!

*****


17. இயேசுவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதே!  கொடுக்கப்பட்டுள்ளது என்றாலே அவராகவே  அதற்கு உரிமையானவர் அல்ல என்று தெளிவாகிறது.


18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(மத்தேயு 28:18) 


இயேசுவுக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஒட்டுமொத்த அதிகாரங்களும் அல்ல.. அவருக்கு தேவையான அவசியமான அதுகாரங்கள் மட்டுமே!!

இதை பைபிளே சொல்கிறது

அவர் இன்றுவரை பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார். இதன்படி அவருக்கு சகல அதிகாரமும் இல்லைனு தெளிவாகிறது.
(1 யோவான் 2:1-2 , ரோமர் 8:34)


****
18. அவர் பிதாவையே தொழுதுகொண்டார் ஜெபித்தார்.  பிதாவிடம் உதவி தேடினார்!


"அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி , இராமுழுதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிகொண்டிருந்தார்."
(லூக்கா 6:12)


"ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு ஏலி!ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர் என்று அர்த்தமாம."
(மத்தேயு 27:46)


"சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்க்ககூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்ததின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்."
(மத்தேயு 26:39)


****

19. பிதாவிடமே ஜெபம் பண்ணும்படியாகவே ஜெபத்தை கற்றுகொடுத்தார்! பிதாவிடம் கேட்டுகொள்ளுங்கள் என்றே சொன்னார்.



யோவான் ஸ்நானன் ஜெபம் பண்ண கற்றுகொடுத்ததது போல எமக்கும் கற்று தாருங்கள் என சீடர்கள் கேட்டபோது,


"அதற்கு அவர்: நீங்கள் ஜெபம் பண்ணும்போது:  பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக, 
(லூக்கா 11:2)

என கற்பித்தார்.


****

20. என் நாமத்தில் பிதாவிடம் கேளுங்கள் என்றே அவர் கற்பித்தார். பிதா தான் தருவார் என்றே போதித்தார். இயேசு போனபின்பு இயேசுவிடம் எதையும் கேட்கமாட்டீர்கள் என சீடர்களக்கு சொன்னார்.




23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 
யோவான் 16:23


*****

21. சத்திய ஆவியை அனுப்புவதற்கு கூட பிதாவிடம் வேண்டிக்கொள்வேன் என்று தான் சொன்னார். 

16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 
யோவான் 14:16

****

22. உண்மையாக தொழுதுகொள்பவர்கள் பிதாவை தான் தொழுவார்கள் என்று சமாரிய பெண்ணிடம் சொன்னார். உண்மையோடும் ஆவியோடும் பிதாவை தான் தொழ வேண்டும்


23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 
யோவான் 4:23


***

23. தேவனாகிய கர்த்தர் ஒருவரை சாஷ்டாங்கமாய் பணிந்து ஆராதனை செய்ய வேண்டும் என்பதே இயேசு சொல்வது!!


9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 
மத்தேயு 4:9

10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 
மத்தேயு 4:10



இதை சொன்னால், இயேசு குழந்தையாக இருந்தபோது சிலர் அவருக்கு பணிந்துகொண்டார்கள், ரோம சிப்பாய்கள் கேலியாக தொழுதுகொண்டார்கள் என்ற வசனங்களை கிறிஸ்தவர்கள் காட்டுகிறார்கள்.


முதலில் இயேசுவை பணிந்துதொழுதுகொண்டார்கள் என்பது proskeneo  என்ற கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தலையை நிலத்தில்வைத்து பணிந்துகொள்வதை தான் குறிக்கிறது.

இதே போல யூதர்கள் தம் ராஜாக்களை புனிதர்களை பணிந்துகொள்வார்கள்.

உதாரணமாக,

20 அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான், அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு, 
1 நாளாகமம் 29:20



அதேபோன்று யாக்கோபு ஏசாவை 7 முறை  வணங்கினான். மனைவி பிள்ளைகளும் வணங்கினர்

3 தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். 
ஆதியாகமம் 33:3

6 அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 
ஆதியாகமம் 33:6

7 லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 
ஆதியாகமம் 33:7



இது அவர்களிடையே சாதாரணமாக இருந்த வணக்கமாகும். இதை மரியாதைக்காக கண்ணியத்திற்காக பணிந்துதொழுநுகொள்வர்.


ஆனால், இறைவனாக பணிந்துகொள்வதே தடுக்கப்பட்டதாகும்!


உதாரணமாக ஒருவன் சிலைக்கு முன்னால் நின்று அதை வணங்கினால், அது மரியாதைக்கான வணக்கமல்ல.. கடவுளாக வணங்குவதாகும்


அதேபோல வேறு மிருகங்களை வணங்கினாலும் இதே போன்று தான் இறைநிராகரிப்பாக இருக்கும்.


அதேபோன்று சூரிய சந்திர நட்சத்திரங்களை வணங்குவதும் இதுபோன்ற கண்ணியத்திற்குரிய வணக்கமன்று. அவை கடவுளாக கருதி வணங்குவதாகும்!


ஆனால், ஒரு உயிரோடுள்ள மனிதனை வணங்குவதென்பது மரியாதைக்கு செய்வதாக தான் இருக்கும்.

அது போன்றே இயேசுவுக்கு செய்யப்பட்டது. 

சாத்தான் தன்னை கடவுளாக வணங்கும்படியே கேட்டுகொண்டான். ஏனெனில் அவன் தன்னை உயர்த்தி தேவனாக்கிகொள்ள நினைத்ததை ஏசாயா புத்தகம் 14, எசேக்கியேல் 28 போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது.


இத்தகைய இறைவனுக்குரிய வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செலுத்தவேண்டும்!!! அதையே இயேசு  உன் தேவனாகிய கர்த்தரை மட்டும் சாஷ்டாங்கமாக  பணிந்து கொள்ளவேண்டும் என எழுதியிருக்கிறதே என கூறினார்.

இங்கும் தனக்கு அத்தகைய வணக்கம் தகாது என மறுத்துவிட்டார்


****

24. சீடர்கள் கூட, பவுல்கூட இயேசுவை தொழுதுகொள்ளாமல் ஜெபம் பண்ணாமல் பிதாவிடமே வேண்டினர்! இயேசுவை ஸ்தோத்திரிக்காமல் பிதாவையே ஸ்தோத்திரம் செய்தனர்!


"நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  மூலமாய. தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்... ".
(ரோமர் 7:25)


" நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,"
எபேசியர் 3:15

****

25.  குமாரனும் தேவதூதர்களும் ஞானத்தில் பூரணமில்லாதவர்கள்.

பிதா ஒருவரே சகல ஞானமும் உள்ளவர்!

"அந்த நாளையும் நாழிகையையும் பிதா ஒருவரை தவிர மற்றொரிவனும் அறியான். பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்!



தொடரும்

சனி, 27 ஜூலை, 2019

பலதாரமணம் இயல்பான ஒன்றே!!

பலதாரமணம் இயல்பானதே!!!
--------------------------------------------

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில்  இயற்கையான முறைக்கு மாற்றமாகவே பலர் வாழ்ந்துகொண்டுள்ளார்கள்.

மனிதனைவிட மாட்டை நேசிக்கிறார்கள்.. குழந்தையைவிட நாயை கொஞ்சுகிறார்கள்..

விபச்சாரத்தை, ஓரினச்சேர்க்கையை சொந்த உரிமையாக கருதுகிறார்கள்.

இப்படிப்பட்ட காலத்தில் தான் பலதாரமணம் பற்றியும் விமர்சிக்கிறார்கள்.

இது பற்றி சற்று நோக்குவோம்!!

1. உலகில் ஆணும் பெண்ணும் சமவிகிதத்தில் பிறக்கின்றனர். ஆனாலும் பெண்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி ஆண்குழந்தைகளைவிட அதிகமாக இருப்பதால், சிறுவயதுகளில் ஆண்குழந்தைகளே அதிகமாக மரணிக்கிறார்கள். 
இதனால் ஆண் இனத்தின் எண்ணிக்கை பெண்ணினத்தின் எண்ணிக்கையிலும் குறையும் விகிதம் அதிகரித்து செல்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆணும் ஒரே திருமணமே முடிக்கவேண்டும் என்பது மட்டுமே இயற்கையானதாக இருந்திருப்பின்,, ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கை சமவிகிதத்தில் இருந்திருக்கும்.. ஆனால் அப்படி இல்லை!!

இஸ்லாம் அனைவரும் ஆற்றலிருந்தால் திருமணம் முடிக்க வேண்டும் என கட்டளையிடுகிறது.

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணை மட்டுமே மணந்தால், பல பெண்களுக்கு இவ்வாழ்க்கை கிடைக்காது!!

எனவே ஒரு ஆண் பலதாரம் செய்தால் மட்டுமே இது சாத்தியமாகிறது!! 

இது இயல்பானது என்பதற்கு இது ஆதாரமாக அமைகிறது
-------------------

2. பொதுவாக ஆண்கள் முதலாவதாக திருமணம் செய்யும்போது விதவைகளைவிட கன்னிகளுக்கே முன்னுரிமை வழங்குவார்கள் ஒரு சிலரை தவிர!!

இப்படியே சென்றால் இளம் விதவைகள் திருமணம் செய்துவாழ தேவை ஏற்பட்டால்,,  இது சாத்தியமற்றதாகவே ஆகிவிடுகிறது.

இவர்கள் அப்போது எதை செய்வார்கள்??

மனக்கவலையிலேயே காலத்தை கழிப்பதா?

இப்படியானவர்களுக்கு வாழ்வு கிடைப்பதற்கு, பலதார திருமணமே அவசியமாகிறது!!

-------------------

3. விபச்சாரிகளிடம் செல்வோரில் அதிகமானோர் யாரென பார்த்தோமானால், ஏற்கனவே திருமணமான மனைவியுள்ள கணவர்களாகவே இருப்பார்கள். இது யதார்த்தமான உண்மை!!

இவ்விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், சட்டரீதியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை ஆணுக்கு அனுமதிப்பதால் மட்டுமே சாத்தியமாகிறது..

ஏனெனில், இந்த விபச்சாரத்தொழிலில் ஈடுபடுவோரை முறையாக கட்டுப்பட்டுத்தி தன் கீழ் வைத்துக்கொள்ள ஒரு ஆண் இல்லை என்பதால் தான் அவர்கள் பணதேவைக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ ஆசைகளுக்காகவோ இப்பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், இதில் இறங்கியிருக்க மாட்டார்கள்..

அதே நேரம் திருமணமான ஆண்கள் அவர்கள் பக்கமாக போகவேண்டி ஏற்பட்டிருக்காது!!

இதற்கு ஒரே சாத்தியமான முடிவு பலதாரமணம் மட்டுமே!!

--------------------

4. பலதாரமணம் ஏன் ஆணுக்கு மட்டும்?? பெண் செய்யகூடாதா??❓

சிலர் நம்மிடம் கேட்பதுண்டு, உன் மனைவி இன்னொரு ஆணுடன் வாழ்ந்தால் நீ பொருந்திகொள்வாயா?  அதே போன்று தானே அவளுக்கும் இருக்கும் என கேட்கிறார்கள்!!

இது அடிப்படையிலேயே மூடத்தனமான கேள்வி ஆகும்.

ஏனெனில் ஆணுடைய மனநிலையும், உடலமைப்பும் பெண்ணுடைய மனநிலையிலிருந்தும் உடலமைப்பிலிருந்தும் முற்றாக வேறுபட்டதாகும்!!

உதாரணமாக , ஒரு ஆண் கர்ப்பம்சுமந்து சிசேரியன் எதுவுமின்றி இயல்பாக பிள்ளை பெறுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள்!

இப்போது ஒரு ஆண் அந்த வேதனையை உணரும்போது, திரும்பவும் இதேபோல நடக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டான்.

அதுமட்டுமன்றி,  இன்னொரு ஆண் வேதனை அடைவதை பார்த்தாலே, அதிலிருந்து முற்றாக விலகிவிடுவான்.

ஆனால், பெண்ணை பொருத்தவரையில், அவள் சாகிற அளவு வேதனையை அனுபவித்து பிள்ளை பெற்றெடுக்கிறாள்.. பிள்ளையை பெற்றெடுத்தவுடன் அவளது வேதனையையே மறந்து இன்னொரு பிள்ளைக்காக தயாராகிவிடுகிறாள்!!
இது பெண்ணினது மனநிலை

* நம்மிடம் இப்படி கேள்விகேட்கும் இத்தகையவர்களிடம் நாம் கேட்பது என்னவென்றால்,,,,

நீ உன் மனைவியுடைய இடத்திலிருந்து அவள் உன்னை கர்ப்பமாக்கி ஒன்றுக்கு மேல்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்க வைத்தால், நீ ஒப்புக்கொள்வாயா??
குறைந்தது முதல் குழந்தைக்காகவாவது இயல்பான முறையில் பிள்ளைபெற்றெடுக்க ஒத்துகொள்வாயா??

அப்படியிருக்கும்போது பெண்ணை மட்டும் பிள்ளைப்பெற்றெடுக்க சொன்னால் எப்படி நீதமாகும்???

என கேட்டால்,, என்ன சொல்வார்கள்??

ஒன்றேயொன்றைத்தான் சொல்ல முடியும்!!

இயல்புநிலை அவ்வாறு இல்லை என்பது தான்..

ஒரே பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளை இருக்கலாம். 

 இதற்காக பெற்றோரிடம் உங்களுக்கு மட்டும் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள்? 

நமக்கு உங்களுடன் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள்  இருந்தால் ஒத்துக்குவீங்களா? னு கேட்போமா???

இல்லை தானே!

நமக்கு இருப்பது போல அதே சதையும் ரத்தமும் பெற்றோருக்கு இருந்தாலும் நாம் இவ்வாறு கேட்கமாட்டோம்!

அதேபோல ஒரு நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி இருப்பார். ஒரு பிரதமர் இருப்பார்.

அவர்களுக்கு கீழ் பல கோடிக்கணக்கான மக்கள் இருப்பார்கள்!

இதேபோல உங்களுடன் பல ஜனாதிபதிகள் இருந்தால் ஒத்துக்குவீங்களா? உங்களுக்கு கீழ் மட்டும் ஏன் இத்தனை மக்களை வைத்துள்ளீர்கள்? அதேபோல மக்கள் ஒவ்வொருவரும் தமக்குதமக்கு விருப்பமான வெவ்வேறு ஜனாதிபதிகளை வைத்திருந்தால் நீங்கள் ஒப்புகொள்வீர்களா என ஜனாதிபதியிடம் கேட்போமா??

 இல்லை தானே!

இவற்றிற்கெல்லாம் காரணம்,  நிர்வாகம் செய்யும் தலைமை ஒன்று தான் இருக்கவேண்டும் என்பது தான் காரணம். 

அதேபோன்று தான் ஆண்களே பெண்களை நிர்வகிக்ககூடியவர்களாக இறைவன் ஆக்கியுள்ளான்.

ஒரு நிர்வகிக்கும் தலைவனுக்கு கீழ் பலர் இருக்கலாம்.. ஆனால் ஒரேநபருக்கு பல நிர்வகிக்கும் தலைமைகள் இருக்க முடியாது!!

இதற்கேற்ப தான் பொதுவாக ஆண்கள் பெண்களைவிட மிகவும்  ரோசமுள்ளவர்களாக இருக்கிறார்கள்..  
இதனால் ஒருபோதும் சாத்தியமில்லை!
ஒரு குழந்தைக்கு பல பெற்றோர் (பெற்றெடுத்தோர்) இருக்கமுடியாதோ,  அதே போன்று தான் இதுவும்!!


இதற்கு மேலதிகமாக

*ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருந்தால், அவர்கள் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் ,, பாலியல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!!
ஆனால், ஒரு ஆண் பலமனைவிகளை வைத்திருக்கும்போது அப்படி ஏற்படுவதில்லை!!


*ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை வைத்திருந்தால், அவளது குழந்தைக்கு தகப்பன் யார் என்பதை கண்டுபிடிக்கவே பல செலவுகளை செய்யவேண்டி வரும்!!

ஆனால் ஒரு ஆண் பல மனைவிகளை கொண்டிருந்தால்,, குழந்தைக்கு தகப்பன் யார் தாய் யார் என தெளிவாக தெரியும்!!

*பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவள் மனதளவில் மாற்றங்கள் ,பாதிப்புகள் ஏற்படுகின்றன.. இந்த நிலையில் பல கணவர்களை சமாளிப்பது  sorry.com

ஆனால் ஆண்களுக்கு இது சாத்தியம்!!


*மனரீதியாக, தன் கணவனால் சில கெடுதிகள் தனக்கு ஏற்படும்போது, பெண் இலகுவில் தன் கணவனின் உபகாரத்தை மறந்துவிடுவாள்!
இப்போது பல கணவர்கள் இருந்தால், ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தும்போது,, அவளது வாழ்க்கைக்கு sorry.com

எனவே இப்படி கேள்விகேட்பது மிக தவறானது
--------------------

5. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் முதல் மனைவி பாதிக்கபடுகிறாளா??

அதே போன்று தான், ஒரு பெற்றோர் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்கும்போது மூத்த பிள்ளையும் பாதிக்கப்படத்தான் போகிறது.
இதனால் ஒவ்வொருவரும் ஒரே பிள்ளையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்பார்களா?

(அதாவது பெற்றோரின் அன்பு,கவனம்,சொத்து கிடைக்கும் அளவு மூத்த பிள்ளைக்கு வேறு உடன்பிறப்பு வரும்போது குறைகிறது)

அதேபோல தான் கணவனின் நேரம், அன்பு, சொத்து என்பவற்றில் முதல்மனைவிக்கு கிடைக்கும் பங்கில் குறைவு ஏறபட்டாலும்,  இன்னொரு பெண் தப்பான வழிக்கு செல்லாமலிருக்க இது உதவுகிறது என்பதை அவள் சிந்திக்கும்போது அவள் உண்மையில் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்துகொள்வாள்.

அதுமட்டுமின்றி விபச்சாரிகள் உருவாவதை தடுக்கவும், முறையற்ற பாலியல் உறவுகளை தடுக்கவும் இப்பலதாரமணமே உதவ முடியும்..  அப்படி செய்வதால் இவளது கணவனின் கற்பும் பாதுகாக்கப்படுகிறது.

இதை கருதும்போது அவளுக்கு எந்த இழப்பும் இதில் இல்லை!!
------------------

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...