வெள்ளி, 18 நவம்பர், 2022

தவ்ராத் தான் பழைய ஏற்பாடாக?

 தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக பாமர கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை காட்டி இது தான் தவ்ராத் என்றும் புதிய ஏற்பாட்டை காட்டி இது தான் இன்ஜீல் என்றும் கதைவிடுவார்கள்.. பாமர முஸ்லிம்கள் கூட அவ்வாறு நம்பும் நிலையில் தான் உள்ளார்கள் . 


இதில் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் , முகம்மது நபியும் நாமும் தவ்ராத்தை பின்பற்றாதிருக்கிறார்கள் என்று மடத்தனமான வாதத்தையும் சிலபோது முன்வைக்கிறார்கள். உதாரணமாக ஒட்டக இறைச்சி விசயத்தில் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் முஸ்லிம்கள் ஒட்டக இறைச்சி சாப்பிடுவர். ஆனால் யூதர்களுக்கு அது ஹராம் ஆகும். ஆகவே இவற்றை விரிவாக ஆராய்வதற்கு சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம்.


உப பிரிவுகள்

அ.தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி என்ன?

ஆ.இஸ்லாமிய நம்பிக்கை படி தவ்ராத் என்பது என்ன?

இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தோரா என்பது என்ன?

ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா என்ன?

உ.தற்போதுள்ள தோராவின் நிலை.

ஊ.தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்ப வேண்டும்?

எ.தவ்ராத்தை நாம் பின்பற்ற வேண்டுமா?


ஒவ்வொன்றாக பார்ப்போம்:


*****************************************






அ. தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி எது?



யூத நம்பிக்கை பிரகாரம் அவர்கள் தம் வேதத்தை "தநாக் " என கூறுவார்கள்.


அதிலுள்ள "த" என்பது தவ்ராத்தையும், "ந" என்பது நவியீம் (தீர்க்கதரிசிகள்/நபிமார்கள். உதாரணமாக ஏசாயா, எசேக்கியேல்,எரேமியா, சகரியா போன்ற புத்தகங்கள்), "க" என்பது கித்வீம் என்பதை குறிக்கும். அதாவது ஏனைய எழுதப்பட்ட புத்தகங்களை இது குறிக்கும்.




தவ்ராத் என இவர்கள் கூறுவது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை ஆகும்.


அதாவது- ஆதியாகமம் (Genesis) , யாத்திராகமம் (Exodus) , லேவியராகமம் (Leviticus), எண்ணாகமம் (Numbers), உபாகமம் (Deuteronomy) ஆகிய ஐந்து புத்தகங்களை சேர்த்து தவ்ராத் என்கிறார்கள்.


ஆதியாகமம் என்பது உலக படைப்பு முதல் யோசேப்பு வரையான காலம் வரைக்கும் கூறுகிறது. அதாவது இஸ்ரேலியர் எகிப்தில் குடியேறும் வரையான கதையை கூறுகிறது.


யாத்திராகமம் என்பது , இஸ்ரேலியர் எகிப்தில் ஒடுக்கப்பட்டதையும் அங்கே மோசே தோன்றி இஸ்ரேலியர்களை இரட்சித்து எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்றபோது நடந்த நிகழ்வுகளையும் கூறுகிறது. இடையிடையே சட்டங்கள் கூறப்படுகின்றன.


லேவியராகமம் இதில் பெரும்பாலும் பலிகள் பற்றி கூறப்படுகின்றது. இடையிடையே சட்டங்கள் அதிகமாக கூறப்படுகின்றதோடு சில நிகழ்வுகளும் கூறப்படுகின்றன. அவை கூட சட்டங்களோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.



அடுத்து, எண்ணாகமம், இதில் இவர்களது எண்ணிக்கை தொடர்பாக கூறப்பட்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே நிகழ்வுகள் சிறு மாற்றங்களோடும் முரண்பாடுகளோடும் இதிலும் எழுதப்பட்டுள்ளது. யாத்திராகமத்தில் சொல்லப்படாத நிகழ்வுகளும் இதில் எழுதப்பட்டுள்ளன.


உபாகமம்- இதுவே தோராவின் கடைசி புத்தகம். இதில் மோசே மரணித்து அடக்கம் செய்யப்பட்டது வரை கூறப்பட்டுள்ளது. இது யாத்திராகமம் , எண்ணாகமம் கூறிய நிகழ்வுகளை சுருக்கமாக கூறுவதோடு முரண்பட்டும் கூறுகிறது. இதிலும் அதிக சட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

*****************************************


ஆ. இஸ்லாமிய நம்பிக்கை பிரகாரம் தவ்ராத் என்பது என்ன?




தவ்ராத் என்பது மூஸா நபி அவர்களுக்கு இறைவனால் எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும். (புகாரி 4476,6614, 4736,

அதாவது தவ்ராத் என்பது இறைவனால் மூசா நபியிற்கு எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும்.

அதில் நேர்வழியும் ஒளியும் உண்டு.(5:44)

*****************************************




இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தவ்ராத் 



இதை நியாயப்பிரமாணம் என சொல்வார்கள்.. எபிரேய பாசையில் தோரா எனப்படும்.



1.தேவன் எழுதி கொடுத்தது


“"அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்."”

  — 2 இராஜாக்கள் 17:37 (TBSI)


இதன்படியும் தோரா என்பது தேவன் எழுதி கொடுத்தது ஆகும்.



2.மோசே மூலமாக தேவன் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டதாகும்.


“"நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்."”

  — 2 நாளாகமம் 33:8 (TBSI) மேலும் 34:14

நெகேமியா 8:1, 1:29


3.அது கர்த்தருடைய தோரா -எஸ்றா 7:6, நெகேமியா 8:8



4.முதலில் மோசே இதை எழுதினார். பிறகு அதை யோசுவா பேர்த்து எழுதினார்.


“இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.”

  — Joshua 8:32 மேலும் 24:26




இதன்படி தேவன் எழுதிக் கொடுத்ததை, மோசே பேர்த்து எழுத பிறகு யோசுவா பேர்த்தெழுதினார் என்று தெளிவாகிறது.


*****************************************


ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா 


பவுல் இதை தேவன் நேரடியாக கொடுத்ததாக நம்பவில்லை.. தேவதூதன் மூலமாக மத்தியஸ்தனாகிய மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்கிறார்.


“"அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது."”

  — கலாத்தியர் 3:19 (TBSI)


ஸ்தேவானும் ஆவி தூண்டி இவ்வாறு சொன்னதாகவே அப்போஸ்தலர் சொல்கிறது


“"தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்."”

  — அப்போஸ்தலர் 7:53 (TBSI)



இதன்படி நியாயப்பிரமாணமாகிய தோரா என்பது தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்பதே புதிய ஏற்பாட்டு நம்பிக்கை



உ. தற்போதுள்ளது தோராவின் நிலைப்பாடு





 மோசேயிற்கு தேவன் எழுதிக் கொடுத்த அல்லது புதிய ஏற்பாட்டு பிரகாரம் தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டதாக இது இருக்கிறதா?



நிச்சயமாக இல்லை.. மாறாக மோசேயை சம்பந்தமில்லாத நபர் போல் படர்க்கையிலேயே அதிகமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மோசேயின் மரணமும் அவர் அடக்கம்ஜபண்ணப்பட்டதும், மக்கள் துக்கம் கொண்டாடியதும் கூட எழுதப்பட்டுள்ளது (உபாகமம் 34)


ஆக அநேகமானவை மோசே அல்லாத நபர் மூலமாக மோசேயோடு சம்பந்தப்பட்ட வரலாறே இதில் எழுதப்பட்டுள்ளது.



தோராவுக்கு விளக்கமாக எழுதப்பட்ட பகுதிகளும் தோராவில் இணைக்கப்பட்டுள்ளது என்பதே இதிலிருந்து தெளிவாகிறது.


யூத போதகர்களது விளக்கங்களும் அவர்கள் அறிந்துவைத்திருந்த கதைகளும் இதில் புகுந்துள்ளது.




ஆனாலும் உண்மைக்கு வழிகாட்டுவதாக அது உள்ளது.. அதாவது இறைவனது தவ்ஹீதை பேசக்கூடியதாக இன்றும் அது இருக்கிறது. இதிலுள்ள குறைபாடு இறைவன் மோசேயிற்கு கொடுத்து மோசே எழுதி பின் யேசுவா எழுதியதற்கும் பின் வேறு மக்கள் எழுதியதிலேயே அவரவர் தம் குறிப்புகளாக தமக்கு தெரிந்ததை விளக்கமாக தமது பிரதிகளில் எழுதியிருக்கலாம். 


அடிவாங்கி உதைவாங்கி திரிந்த இவர்கள் அதுவும் தேவன் மோசேயிற்கு சொன்னதாக நினைத்திருப்பார்கள்!!




உதாரணமாக,


1.தேவன் தான் மனிதனை பூமியில் படைத்தற்காக மனஸ்தாபப்பட்டார் -ஆதி 6:5-6 என்று சொல்கிறது.


தேவன் முக்காலமும் அறிந்தவர். அவர் படைக்க முன்பே மனிதன் அக்கிரமம் செய்வான் என்று அவருக்கு தெரியாமல் இருக்குமா? தெரிந்தும் தான் செய்ததை நினைத்து மனஸ்தாபப்படுவதற்காக படைத்தாரா என்ன?


நிச்சயம் இது பிற்காலத்தில் வந்த பேதமை கொண்ட ரபீகள் விளக்கமாக எழுதியிருக்க வேண்டும்..



2.விபச்சாரக்கதைகள் எழுதப்பட்டுள்ளது.


உதாரணமாக தந்தைக்கு மது கொடுத்து பிள்ளை பெற்ற புத்திரிகள் என்று லோத்தின் மகள்களை சித்தரிக்கிறது -ஆதி 19:30-36


இது லோத்தின் பிள்ளைகளோடு கொண்ட குரோதத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது தம் கற்பனை கதைகளை விளக்கமாக சொருகியிருக்கலாம்.


அதேபோல யூதாவின் மகன் ஓனான் என்பவர் தன் இறந்த சகோதரனின் மனைவியை சேர்ந்த போது விந்தை கீழே சிந்தியதற்காக தேவன் கொன்றார் என எழுதப்பட்டுள்ளது. (ஆதி 38:8-10)


இறந்த சகோதரனின் மனைவியை முடிக்கும் சட்டமே இதற்கு 400 வருடம் கழித்து தான் கொடுக்கப்பட்டது.


அதுவும் பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட சட்டத்திற்கமைய முற்காலத்திலேயே தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக எழுதியுள்ளார்கள்.


அதேபோல யூதா தன் மருமகளோடு அவளென அறியாமல் விபச்சாரம் செய்ததாகவும் அதற்கு மட்டும் தேவன் வாயே திறக்கவில்லை என்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது (அதே ஆதி 38)



3.தேவனது பெயரில் அநீதியான சட்டம்:


யூதன் தன் சகோதரனான சக யூதனிடம் வட்டி வாங்க கூடாது.. ஆனால் அந்நியனிடம் வட்டி வாங்கலாம் (உபாகமம் 23:19-20)


உன் சகோதரனிடம் வட்டி வாங்காதே என்ற போதனைக்கு விளக்கமாக அந்நியனிடம் நீ வாங்கினால் தப்பு கிடையாது என்பதை யாரோ புகுத்தியிருக்க வேண்டும்.



ஏனெனில் ஒட்டுமொத்தமாக வட்டிக்கு கொடுப்பதையே பாவமாக எசேக்கியேல் 18:8,13,17, 22:12 சொல்கிறது.


ஆகவே யாரோ இதில் விளக்கம் எனும் பெயரில் தம் மடத்தனமான கருத்தை எழுதியிருக்கிறார்.



4.மாட்டு கன்றின் சிலை செய்து வணங்குவித்த ஆரோன்:



ஆரோன் தான் மாட்டுக்கன்றின் சிலை செய்து வணங்குவித்த நபர் என்று இந்த தோரா சொல்கிறது. (யாத்திராகமம் 32:1-5, உபாகமம் 9:20)


ஆனால் சங்கீதம் 106:19, நெகேமியா 9:18 ஆகியவை மக்கள் தான் செய்தார்கள் என்கிறது. 


ஆரோன் அவர்களுக்கு பொறுப்பாக வைக்கப்பட்டிருந்ததால், ஆரோன் தான் இதை செய்வித்தார் என்று பேதமை கொண்ட ரபீகள் எழுதி வைத்திருக்கிறார்கள்.. அதுவும் இறுதியில் வேதத்தின் பகுதியாகிவிட்டது.




ஆகவே தோராவில் இவர்களது கற்பனைகளும் விளக்கங்களாக புகுத்தப்பட்டு அதுவும் வேதம் போன்றே காட்சியளிக்கின்றது.






ஊ. தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்பவேண்டும்?



இறைவன் அருளிய தவ்றாத்தில் நேர்வழியும் பேரொளியும் உண்டு.


இறைவன் இறக்கிய தவ்றாத்தின் பகுதிகளும் இவர்கள் கூறும் தவ்ராத்தில் உண்டு.



ஆகவே இறைவன் அருளியதை நம்புகிறோம் என கூறி, இறைவன் மூஸா நபியிற்கு தவ்ராத்தை கொடுத்தான் என்றும் அதில் நேர்வழியும் பேரொளியும் உண்டு என நம்பினாலே போதுமானது,


 


"வேதக்காரர்கள் (யூதர்கள்) தவ்ராத்தை எபிரேய பாசையில் ஓதி , முஸ்லிம்களுக்கு அதை அரபுமொழியில் விளக்கம் கூறுவோராக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேதக்காரர்களை உண்மைப் படுத்தி நம்பவும் வேண்டாம் மேலும் நிராகரிக்கவும் வேண்டாம்! மாறாக நாங்கள் அல்லாஹ்வையும் அவன் எங்களுக்கு இறக்கியதையும் உங்களுக்கு இறக்கியதையும் நம்பினோம் என்று கூறுங்கள் " என (முஸ்லிம்களுக்கு) சொன்னார்கள். (புகாரி 7362)




ஆகவே அதை அடிமட்டம் வரை அலச தேவையில்லை.. அல்லாஹ் தவ்ராத்தை இறக்கினான் என்பதை நம்பினாலே போதுமானது





எ.தவ்ராத்தை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமா?



நிச்சயமாக கிடையாது..


ஏனெனில் மூசா நபி உயிரோடிருந்தாலும் அவர் முகம்மது நபியை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை.



அதுமட்டுமின்றி ஈசா நபி வந்தாலும் அவரும் முகம்மது நபியின் ஷரீஅத் படியே தீர்ப்பளிப்பார்.



وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:81)




ஆகவே தவ்றாத்தை நாம் பின்பற்ற தேவை இல்லை... குர்ஆன் போதுமானது.



மேலும் தவ்றாத் இஸ்ராயீலியர்களுக்காகவே கொடுக்கப்பட்டதேயன்றி , அனைவருக்குமானதாக அல்ல...


இதையே பழைய ஏற்பாடும் சொல்கிறது (2 நாளாகமம் 33:8 , 2 இராஜாக்கள் 17:37).





சோ தவ்ராத் துல்லியமான நிலையில் தற்போது இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை... காரணம் அது நாம் பின்பற்றுவதற்கு மோசேயிற்கு தேவன் கொடுக்க வில்லை.



ஆகவே தவ்றாத் என்பது கடவுள் எழுதிக் கொடுத்ததை மோசே எழுதி அதை மீண்டும் பிறகு யோசுவா எழுதியதாகும்.


அதனோடு பிற கருத்துக்களும் விளக்கங்களும் பொய்களும் கலந்தே தற்போது உள்ளது.


அது தூய்மையான நிலையில் இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை!!!!




ஞாயிறு, 13 நவம்பர், 2022

சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்குமா

 சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்கிறதா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக ஆதிமுதலே கிறிஸ்தவர்கள் தம் நிலைப்பாட்டை சரி என காட்டுவதற்கு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என வசனங்களை திரித்து காட்டுவது வாடிக்கையாகவே இருந்துவந்தது. அந்த வகையில் மூன்றாம் நான்காம் நூற்றாண்டு கண்டுபிடிப்பே சங்கீதம் 22:16 சிலுவையில் கையும் காலும் உருவக்குத்தப்படுவதை குறித்த தீர்க்கதரிசனம் என்பதாகும்.



இதை உப பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம்.


1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆவி ஏன் இவ்வசனத்தை மேற்கோள் காட்ட உந்தவில்லை?




2.மூன்றாம் நான்காம் நூற்றாண்டு சபைப் பிதாக்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்? அல்லது உண்டாக்கினர்



3.இதன் சரியான அர்த்தம் என்ன?


4.சில பிரதிகளில் "யொத்" எழுத்துக்கு பதிலாக "வாவ் " எழுத்து எழுதப்பட்டுள்ளதா? அதனால் இவர்களுக்கு சார்பாக இது அமையுமா?



5.ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்லுவது போன்றே இருந்தால் கூட இயேசுவுக்கு பொருந்துமா?






********




1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆவி ஏன் இவ்வசனத்தை மேற்கோள் காட்ட உந்தவில்லை?





புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் பழைய ஏற்பாட்டை திரிப்பதில் வளைப்பதில் கைதேர்ந்தவர்கள். ஒரு வசனம் தம் கொள்கைக்கு சற்று பொருந்துவது போல் தோன்றினாலும் அதை மேற்கோள் காட்டிவிடுவார்கள்.



உதாரணமாக சிலுவையிலிருக்கும் இயேசுவை ரோம் சிப்பாயிகள் இருவர் பார்த்ததால், "அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கி பார்ப்பார்கள் என்று வேறோரு வேதவாக்கியம் சொல்கிறது " (யோ 19:37) என்று சொல்கிறார். ஆனால் சகரியா புத்தகமோ யூதர்களை குறித்து அவர்கள் கடைசிகால யுத்தத்தில் எதிரிகள் குத்தினவன் விசயத்தில் என்னை நோக்கி பார்ப்பார்கள், ஒரே பேரானவனுக்கு அழுவது போல் அழுவார்கள் என சொல்லப்பட்டிருப்பதை கூட விடாமல் இயேசுவை யார் பார்த்தார்கள் எப்போது பார்த்தார்கள் என்பதை கூட ஆராயாமல் தீர்க்கதரிசனம் என சொல்லிவிடுவார்கள்.


இவர்கள் தம் புதிய ஏற்பாட்டு நூல்களில் சங்கீதம் 22 இலிருந்து அநேக வசனங்களை இயேசுவின் விசயத்தில் தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக மேற்கோள் காட்டியுள்ளார்கள்.


உதாரணமாக "என் தேவனே! என் தேவனே! என்னை ஏன் கைவிட்டீர்?" (சங் 22:1) ஐ இயேசு சொன்னதாக மத் 26:46, மாற் 15:34 கூறுகின்றன. ஆனால் சங்கீதம் 22:1 இல், கடைசி காலத்தில் மேசியா இவ்வாறு கத்துவார் என சொல்லப்படவுமில்லை. ஆனாலும் அதை கூட விடாமல் பதிந்துள்ளனர்.




அதே சங் 22:8 "இவன் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தானே! அவர் இவனை விடுவிக்கட்டும். இவன் மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் இரட்சிக்கட்டும் என்கிறார்கள்" இதை கூட விடாமல் இயேசுவுக்கு நடந்ததாக மத் 27:43 எழுதப்பட்டுள்ளது. (ஆனால் இங்கு அது தீர்க்கதரிசனம் என கூறப்படவில்லை)



சங் 22:18 “"என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்."”


இதை கூட இயேசுவின் விசயத்தில் தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக மத் 27:35, மாற் 15:24,லூக் 23:34, யோ 19:24 கூறுகின்றன. அதாவது இவ்வசனத்தை பொருந்த செய்யும் விதமாக கதையையே எழுதியுள்ளனர்.



இதில் கூட மெசியாவின் ஆடை கடைசி காலத்தில் சீட்டுப்போட்டு பங்கு போடப்படும் என்று கூறப்படவே இல்லை. மாறாக என் ஆடைகளை பெற்றுக்கொள்ள சீட்டுப்போடுகிறார்கள் என்றே தாவீது சொல்கிறார். அவரது எதிரிகள் தனக்கு செய்யும் அநியாயங்களை கூறி ஜெபிப்பதை, ஏதோ இயேசு பாடுவது போல் எழுதியிருக்கிறார்கள்.



இப்பட்டவர்கள் இந்த 22:16 வசனத்தை கண்டால் விட்டுவிடுவார்களா என்ன?


"என் கால்களிலும் என் கைகளிலும் உருவ குத்தினார்கள் " என்பதை கண்டிருந்தால் அதை விட்டிருப்பார்களா?


என் கால்களையும் என் கைகளையும் உருவ குத்தினார்கள் என்று தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இது நடந்தது அல்லது நிறைவேறியது என கதை விட்டிருப்பார்களே.



ஆனால் வேடிக்கையாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் எவரும் தம் எழுத்துக்களில் இதை எழுதவில்லை..



ஆவியானவர் தூண்டி எழுதினார்கள் என இவர்களது நம்பிக்கை.. அப்படியிருந்தால் ஆவியானவர் இவ்வளவு முக்கியமான தீர்க்கதரிசன வசனத்தை விட்டுவிடுவாரா என்ன?


முந்திய பிந்திய வசனங்களை மேற்கோள் காட்ட தூண்டிய ஆவியானவர், 16வது வசனமான முக்கிய வசனத்தை விடுவாரா?


ஆகவே இதிலிருந்தே புரிகிறது இது பிற்கால கிறிஸ்தவர்களது திரிபு என்று.



*****"*"*



2.மூன்றாம் நான்காம் நூற்றாண்டு சபைப்பிதாக்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்? அல்லது உண்டாக்கினர்??




இது ஒன்றும் கண்டுபிடிப்பு அல்ல.. சங்கீத புஸ்தகத்தின் கிறிஸ்தவ கிரேக்க மொழியாக்கத்தில் "உருவக்குத்தினார்கள்" என மொழிபெயர்த்திருந்தார்கள். அதிலிருந்தே இந்த வசனத்தை மேற்கோள் காட்ட துவங்கினர். அல்லது இவர்களாக கிரேக்கத்தில் தவறாக மொழிபெயர்த்து விட்டு தீர்க்கதரிசனம் என வாதிட துவங்கினர் என்பதே உண்மையாகும்..



வேடிக்கையாக யூதர்கள் இயேசுவுக்கு முன்பே கிரேக்கத்தில் தோராவை மட்டும் மொழியாக்கம் (septuagint) செய்திருந்தனர்.. ஆனால் ஏனைய புத்தகங்களை கிரேக்கத்தில் மொழியாக்கம் செய்யவில்லை.. பிற்காலத்திலேயே யூதர்கள் செய்தனர்.. அவர்களுடைய மொழிபெயர்ப்பு இன்றும் Googleஇல் பெற்றுக்கொள்ளலாம்.. அதில் இவ்வாறு உருவக்குத்தியதாக இல்லை!



*****


3. இதன் சரியான அர்த்தம் என்ன?


உருவக்குத்தினார்கள் என்பதற்குரிய எபிரேய வார்த்தை "காரூ" (כָר֥וּ) என்பதாகும். 


כָ-காஃப்

ר֥-ரா

וּ-வாவ்


ஆகிய மூன்று எழுத்துக்களின் சேர்க்கை ஆகும் .


இதே வார்த்தை எரேமியா 18:20 இல் இடம்பெறுகிறது.




ஆனால் சங்கீதம் 22:16 இல் இருப்பதுவோ க-அரீ (כָּ֝אֲרִ֗י) என்பதாகும். அதாவது ஒரு சாங்கத்தைப்போல (இருக்கிறார்கள்) என்பதாகும்.


இதிலுள்ள எழுத்துக்கள்:


כָּ- காஃப்

אֲ - அலிஃப்

רִ֗- ரா

י- யொத்




அதாவது இங்கே காரூ (காஃப்-ரா-வாவ்) கிடையாது. மாறாக க-அரீ (காஃப்-அலிஃப்-ரா-யொத் ) உள்ளது. 


இவ்வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு:


நாய்கள் என்னை சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துக்கொண்டது. ஒரு சிங்கத்தை போல என் கைகள் கால்களண்டையில் இருக்கிறார்கள்."


“For dogs have encompassed me; a company of evil-doers have inclosed me; like a lion, they are at my hands and my feet.”

  — Ps 22:16 (JPOT) (இது யூதர்களது ஆங்கில மொழிபெயர்ப்பு)


ஆச்சரியப்படும்விதமாக ERV திருவிவிலிய மோளியாக்கத்தில் 'சிங்கத்தை போல" என்று சரியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள்


““நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன. தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன். சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித் தெறிந்தார்கள்.”

  — திருப் 22:16 (ERV-TA)


ஆகவே உருவக்குத்தினார்கள் என்பது தவறானதாகும்.. அதனால் தான் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இதை மேற்கோள் காட்டவில்லை!


*******


4.சில பிரதிகளில் யொத் (י ) எழுத்துக்கு பதிலாக வாவ் (ו) எழுதப்பட்டுள்ளதே?




 இதனால் "காரூ -உருவக்குத்தினார்கள்" என வருமா? 


நிச்சயமாக கிடையாது..


எபிரேயத்தில் வால் எழுத்தின் நடுப்புகுதியில நிக்குத் (புள்ளி) இருந்தால் மட்டுமே "ஊ" ஒலி வரும்.. அதே வாவ் எழுத்தில் புள்ளி இல்லாமல்  இருந்தால் அது யொத் (யா) உடைய உச்சரிப்பாகிய "ஈ" உச்சரிப்பையும் குறிக்க இடம் வரும். இது எபிரேய எழுத்துக்களை சற்று படித்தாலே அறியலாம்.


இதிலிருந்து வாவ் இருப்பதால் மட்டும் "ஊ" ஒலி வந்துவிடும் என சொல்வது ஏற்புடையதாகாது. அதற்கு "ஈ" உச்சரிப்பும் வர இடமுள்ளது.



ஏன் எங்கு "ஊ" உச்சரிப்பு வர இயலாது??


காரணம் "காரூ" என சொல் எபிரேயத்தில் உள்ளது. அதில் காஃப் எழுத்திற்கு அடுத்து அலிஃப் வராது. வந்தால் "க ஆரு" என்றே வரும்.. இப்படியொரு சொல் எபிரேய அகராதியிலேயே கிடையாது!!



ஆனாலும் வேடிக்கையாக வாவ் எழுத்து தான் உள்ளது என உறுதிப்படுத்த இயலாது. காரணம் யொத் எழுத்தை குறிக்க சிறு கோடு மேலிருந்து கீழ்நோக்கி இருக்கும்.. அந்த கோடு சற்று நீண்டிருந்தால் அது "வாவ்" எழுத்தாகும். எழுதப்பட்டிருப்பது வாவ் என உறுதிப்படுத்த அதே எழுத்தாளர் யொத் எழுத்தை எந்தளவு நீளமாக எழுதியிருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்!!



ஆகவே ஒரு பேச்சுக்கு யொத்க்கு பதிலாக வாவ் இருந்தாலும் இவர்கள் கூறிய அர்த்தம் வந்துவிடாது..


காரணம் இடையில் ஒரு அலிஃப் கூடுதலாக உள்ளது.. "கஅரூ" என்று எபிரேய சொல் இல்லாததால், அது நிச்சயம் "க அரீ" என்பதை தவிர வேறு எதுவாகவும் இருக்க இயலாது.




*****


5.ஒருபேச்சுக்கு கஅரீ கிடையாது.. மாறாக காரூ என்றே உள்ளது என வைத்தால் அது சிலுவைப்பலிக்கு ஆதாரமாகுமா??




நிச்சயம் கிடையாது.. காரணம் மேசியாவுக்கு இது நடக்கும் என்று அந்த வசனத்தில் கூறப்படவில்லை! மாறாக எனக்கு நடந்ததாகவே தாவீது சொல்கிறார்.. அவருக்கு நடந்தது எப்படி மேசியா பற்றிய தீர்த்கதரிசனமாக அமையும்??




ஆகவே இவை அடிப்படையற்ற வாதங்களாகும்... அனைத்துமே திரிபுகளாகும்?!!!




தானியேல் 9:26-27 சிலுவை மரணத்தை குறிக்குமா?

 தானியேல் 9 மேசியா மற்றவர்களின் பாவத்திற்காக மரிப்பார் என்கிறதா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பழைய ஏற்பாட்டை திரித்து தமது கற்பனைக் கதைகளை பழைய ஏற்பாட்டில் சொருகுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் எவ்வாறெல்லாம் தோராவையும் நவியீமையும் திரித்தார்களோ அதைவிட தற்போது திரிபு மேலோங்கி விட்டது.



அந்த காலத்திலாவது இஸ்ரேலை என் மகன் என்றதை இயேசுவை என் மகன் என்றதாகவும், ராகேல் தன் பிள்ளைகளான எப்ராயீமியர் சிறைபிடிக்கப்பட்டதற்கு அழுததாக வருவதை , ராகேலின் அக்கா லேயாளின் பிள்ளைகளான யூதாவின குழந்தைகள் கொல்லப்பட்டதற்காக ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுததாக மத்தேயு சொல்கிறார்.(மத்2:15-18)


ஆனால் தற்போது உள்ளவராகளோ எழுத்துக்கு எழுத்து கதை கட்டுகிறார்கள். ஒருவர் சொல்கிறார் வினைச்சொல்லின் செயற்படுபொருளின் அடையாளப்படுத்தும் எபிரேய உரிச்சொல்லை (ஏத்) கூச்சமே இல்லாமல் இயேசுவை குறிப்பதாக சொல்கிறார். அதையும் மக்கள் நம்பி தம் மதம் எவ்வளவு உண்மையானது என ஆச்சரியப்படுகிறார்கள் !! (இதன் மூலம் இவர்களது நிலையை கண்டு நானும் ஆச்சரியப்படுகிறேன்!)




அந்த வகையில் வந்ததே தானியேல் 9:25-27 இயேசு சிலுவையில் மற்றவர் பாவத்திற்காக மரணிப்பதை குறிக்கிறது என பச்சையாக சொல்கிறார்கள்.


இனி இதை ஆராய்வோம்.



உப பிரிவுகள்

1.தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கருதினார்களா?

2.பரிசுத்த ஆவி புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இதை எழுத தூண்டாதது ஏன்?

3.பிற்காலத்து (முதல் நூற்றாண்டிற்கு பின்னுள்ள) கிறிஸ்தவர்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்?

4.மேசியா என்று வந்தாலே அது இயேசுவையா குறிக்கும்?

5.தானியேல் 9:25-27 சரியான மொழியாக்கமும் விளக்கமும்!

***************************************

1.தானியேல் 9:25-27 ஐ இயேசுவை குறிப்பதாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கருதினார்களா?




புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு சம்பந்தமே இல்லாத வசனங்கள் கண்டுபிடித்து மேற்கோள் காட்டிய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் எவருமே தானியேல் 9:25-27 இயேசுவின் சிலுவை மரணத்தை குறிப்பதாக எங்குமே வாய்திறந்ததில்லை.




எந்தளவுக்கு என்றால், இயேசு நசரேத்தில் வாழ்ந்ததால் நசரேயன் எனப்படுவார் என தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறியது (மத் 2:23) என இல்லாத வசனத்தையே பழைய ஏற்பாட்டில் இயேசுவை குறித்து உள்ளதாக மத்தேயு சொல்கிறார்..


இவரது கண்ணுக்கு கூட இந்த தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக கண்ணில் படவில்லை.


பவுல் பழைய ஏற்பாட்டில் நுனிப்புல் மேய்ந்தவர். எங்கே தமக்கு சார்பாக வசனம் இருந்தாலும் அதை கொண்டுவந்து விடுவார். அவரது கண்ணிற்கும் இவ்வசனம் இயேசுவை குறிப்பதாக தெரியவில்லை .


இதெல்லாரையும் விட கற்பனைப் புயல் தான் எபிரேயர் (Hebrews) என்ற புதிய ஏற்பாட்டு கடிதத்தை எழுதியவர்.


இவர் தேவனை பற்றி நோயாளி பாடியதையும், ராஜாவை குறித்து பாடகர்கள் பாடியதையும் (எபி 1:5-13) இயேசுவை குறித்து தேவன் சொன்னதாக புகுத்தியவர். இவரது கண்ணிற்கு கூட இந்த தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக தெரியவில்லை!




பேதுரு இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து, தாவீது தன்னை குறித்து சொன்னதை தாவீது மேசியாவை குறித்து சொன்னதாக (அப்போஸ்தலர் 2:25-31) சொல்கிறார். வேடிக்கையாக சங்கீத புத்தகத்தை அலசி, அதிலே யூதாசை பற்றியும் உள்ளதாக தாவீது தன் துரோகிகளை குறித்து சொன்னதை திரித்து கூறினார் (அப் 1:16-20).


இப்படிப்பட்ட அடிமட்டம் வரை இறங்கி அலசக்கூடிய இவர்களின் கண்களில் இவ்வசனம் படாமல் போனது ஏன்??


காரணம் அவர்கள் அதை அவ்வாறு காணவே இல்லை!!! இதை தவிர வேறு என்ன காரணம்?? கண்டிருந்தால் அதை விட்டிருப்பார்களா??


****************************************

----



2.பரிசுத்த ஆவி இதை ஏன் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களுக்கு எழுத தூண்டவில்லை?




புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் தம் மனதுக்கு சரியென பட்டதை பொய் கலந்து அலங்கரித்தே எழுதினார்கள். 


உதாரணமாக நான் அவர்களுக்கு புருஷனாக (நாயகராக) இருந்தும் என் உடன்படிக்கையை அவமாக்கி போட்டார்கள் (எரேமியா 31:32) என உள்ளதை கூட திரித்து ஆவி தூண்டி "அந்த உடன்படிக்கையில் அவர்கள் நிலைநிற்கவில்லை. நானும் அவர்களை புறக்கணித்தேன்" (எபி 8:9) என எழுதியுள்ளார் எபிரேய ஆசிரியர்.



இப்படி "நான் அவர்களது நாயகராக (கணவனாக) இருந்தேன்" என்பதை "நான் அவர்களை புறக்கணித்தேன்" என மாற்றும் அளவுக்கு தூண்டிய ஆவியானவர் ஏன் இந்த தானியேல் 9:25-27 இயேசுவின் மரணத்தை குறிக்கிறதாக அவரது தியாகத்தை குறிக்கிறதாக சொல்லவில்லை??



ஆவியானவருக்கு கூட இது தெரியாமல் போனது ஏனோ?


ஆகவே ஆவியானவர் கூட இது இயேசுவை குறிப்பதாக பார்க்கவில்லை!



*****************************************



3.பிற்காலத்து (முதல் நூற்றாண்டிற்கு பின்னுள்ள) கிறிஸ்தவர்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்?




முதல் நூற்றாண்டில் இயேசுவோடு கூட இருந்தவர்களாக கருதப்பட்டவர்களுக்கு கூட இது தெரியவில்லை.. அவர்கள் அதை அவ்வளவு முக்கியமாக கருதி மேற்கோள் காட்டவுமில்லை.. 


ஏன்?, பேதுரு இயேசுவை தனியே அழைத்து சென்று உமக்கு இதெல்லாம் நேரிடக்கூடாது என கடிந்து கொண்டார் அப்போது இயேசு சாத்தானே எனக்கு பின்னால் போ என அதட்டி, நீ தேவனுக்கேற்றவைகளை சிந்திக்காமல் , மனுசனுக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய் என கடிந்து கொண்டார். (மத் 16:22-23).


அப்போது கூட இயேசு, பேதுருவே! "மேசியா தன் பாவத்திற்கல்லாமல் சாகுவார் என தானியேல் சொல்லியிருக்கிறாரே! அதை படிக்கவில்லையா?" என கேட்கவில்லை! ஏசாயா புத்தகத்தை கரைத்துக் குடித்த இயேசுவுக்கு தானியேல் புத்தகத்தில் தன்னை குறித்து உள்ளது தெரியாமல் போகுமா? சுட்டிக்காட்டவேண்டிய இடத்தில் கூட இதை குறிப்பிடாமல் விட்டுவிட்டாரே! காரணம் அது அவரை குறித்ததாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் காணவில்லை! அதனால் இயேசுவின் வாயில் அதை போடவில்லை!



ஆனால் பிற்காலத்தவர்கள் இயேசுவை வரிக்கு வரி பழைய ஏற்பாட்டில் தேடினார்கள். எங்கெல்லாம் மெசியா என்று வருகிறதோ, அதை இயேசுவுக்கு மேட்ச் பண்ணுவதற்கு முயற்சித்தார்கள். அதில் சிக்கியது தான் தானியேல் 9:25-27 ஆகும்.




அதுவும் இவர்களது சொந்த கற்பனையே ஆகும்.. அங்கு இரண்டு மேசியாக்களை பற்றி கூறும்போது, அதை ஒரே மேசியாவாக மாற்றியே கதை அளந்துள்ளனர்.


*******************************************



4.மேசியா என்று வந்தாலே அது இயேசுவையா குறிக்கும்?





பழைய ஏற்பாட்டில் மேசியா என்பது அபிசேகம் பண்ணப்பட்ட அனைவரையும் குறிக்கும்... அபிசேகம் பண்ணப்பட்டதாக கருதப்படும் அரசர்களையும், ஆசாரியர்களையும் இது குறிக்கும். 



1.சவுலை கூட சாமுவேல் தீர்க்கதரிசி தேவனுடைய மேசியா என்கிறார். அதாவது "மசீஹூ- அவரது மசீஹ் (his Messiah)" என்கிறார்.


"இதோ இருக்கிறேன். கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிசேகம் பண்ணிவைத்தவருக்கு (மசீஹூ -"מְשִׁיח֗וֹ-"-அவரது மசீஹ் )முன்பாகவும் எனனை குறித்து சாட்சி சொல்லுங்கள்! (1 சாமுவேல் 12:3)


மேலும் 12:5, இல் மீண்டும் சவுலை சாமுவேல் அவரது (தேவனது ) மசீஹ் -messiah என்கிறார்.




2.-1 சாமுவேல் 24:6 இல் தாவீது தன் வாயால் சவுலை -"மசீஹ் யாஹ்வே" - Messiah of Yhwh " என்கிறார்..


 எபேரேய வாசகத்தை செக் பண்ணுங்கள்.


-அதைவிட ஒருபடி மேலே போய் சிலுவை தாவீது, "அதோனி, மசீஹ் யாஹ்வே" அதாவது என் ஆண்டவரும், யாஹ்வேயின் மெசியாவும் என்று சவுலை குறித்து சவுலிடமே சொல்கிறார் - 1 சாமுவேல் 24:10


இப்படி சவுலை மெசியா என்று பல வசனங்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து "அபிசேகம் பண்ணப்பட்டவர்" என்று எழுதியுள்ளார்கள்.





3.-தாவீதை அபிசாய் யாஹ்வேயின் மசியாஹ் (மசியாஹ் யாஹ்வே) என்கிறார். 2 சாமுவேல் 19:21


மேலும் 2 சாமுவேல் 22:51 இலும் தாவீது மசீஹு (அவருடைய மசீயாக்) என சொல்லப்பட்டுள்ளது.





4.-கோரேசு ராஜாவை "மசீஹு" அவரது மசீயஹ் என தேவன் சொன்னதாக ஏசாயா 45:1 கூறுகிறது.





5.-பாபிலோனியரால் பிடிபட்ட ராஜாவையும் யாஹ்வேயின் மெசியாஹ் என்று புலம்பல் 4:20 சொல்கிறது.



"கர்த்தரின் அபிசேகம் பண்ணப்பட்டவனும் (மெசியாஹ் யாவே) , எங்கள் நாசியின் சுவாசமுமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான். அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனை குறித்து சொல்லியிருந்தோமே!" (புலம்பல் 4:20)





இப்படி மெசியாஹ் என வருமிடங்களிலெல்லாம் அதை மொழிபெயர்த்து விட்டு, சம்பந்தமே இல்லாமல் தானியேல் 9இல் மட்டும் மொழிபெயர்க்காமல் விட்டுவிட்டு மக்களை குழப்புகின்றனர்.



ஆனாலும் இது தவறான திரிபு என புரியும் நல்லுள்ளம் கொண்ட கிறிஸ்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


அவர்கள் அது வேறு அரசனையே குறிக்கின்றது என உணர்ந்து மொழிபெயர்த்துள்ளார்கள்.




5.தானியேல் 9:25-27 சரியான மொழியாக்கமும் விளக்கமும்!



கீழே ரோமன் கத்தோலிக்க திருவிவிலிய தமிழாக்கம்:


தானி 9 (ERV-TA)

¯¯¯¯¯¯¯¯¯¯

²⁵ “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது ⁶² வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும்.

²⁶ ⁶² வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.

²⁷ பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.


NRSV மொழிபெயர்ப்பு

Dan 9 (NRSV)

¯¯¯¯¯¯¯¯¯¯

²⁵ Know therefore and understand: from the time that the word went out to restore and rebuild Jerusalem until the time of an anointed prince, there shall be seven weeks; and for sixty-two weeks it shall be built again with streets and moat, but in a troubled time.

²⁶ After the sixty-two weeks, an anointed one shall be cut off and shall have nothing, and the troops of the prince who is to come shall destroy the city and the sanctuary. Its end shall come with a flood, and to the end there shall be war. Desolations are decreed.

²⁷ He shall make a strong covenant with many for one week, and for half of the week he shall make sacrifice and offering cease; and in their place shall be an abomination that desolates, until the decreed end is poured out upon the desolator."


விளக்கம்

இவ்வசனங்கள் தானியேல் எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்தை பார்க்கிறார். அதில் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு 70 வருடங்கள் செல்லும் எனசொல்லப்பட்டிருப்பதை காண்கிறார். (தானியேல் 9:2).


எரேமியா 25:11, 29:10 இல் இது கூறப்பட்டிருக்கிறது.. இதை படித்து அறிந்துகொண்ட தானியேல் தேவனிடம் ஜெபிக்க துவங்குகிறார்.


அதன் இறுதியில் தான் காபிரியேல் தூதர் வந்து தானியேலுக்கு தெளிவுபடுத்துகிறார்.






1. 70 வாரங்களை தேவன் யூதர்களுக்கு நிர்ணயித்தார். அதாவது 490 வருடங்களை தேவன் நிர்ணயித்திருக்கிறார். அக்காலத்தினுள் அவர்கள் கொடிய பாவங்களை நிறுத்திக்கொண்டு தம்மை திருத்திக்கொள்ளுவதற்காக அதை நிர்ணயித்திருக்கிறார். அதனுள் அவர்களுக்கான தீர்க்கதரிசனம் முத்திரிக்கப்படும். (அதன்பின் அவர்களில் தேவனிடமிருந்து தீர்க்கதரிசி வரமாட்டான்!)



“தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன.”

  — தானி 9:24 (ERV-TA)




*.இந்த 70 வாரங்களான 490 வருடங்களில் , முதல் 7 வாரத்தில் அதாவது 49 வருடத்தில் ஒரு மெசியா வருவார். . அவர் வந்து எருசலேமை கட்டுவார்.




இங்கே கூறப்பட்ட ராஜா தான் கோரேஸ் ராஜா ஆவான். இவரை "அவருடைய மெசியா" என்று தேவனே தன் வாயால் சொன்னதாக ஏசாயா 45:1 சொல்கிறது.


இவரே எருசலேமை கட்டுவதற்கு அனுப்பியவர். (2 நாளாகமம் 36:21-24)



இது கட்டப்பட்டு மீண்டும் 62 வாரங்களில் அதாவது (62+7 = 69 வாரங்களில் - 483 வருட முடிவில் மீண்டும் கட்டப்பட்டிருக்கும்.


 அப்போது அநேக துன்பங்கள் ஏற்படும்.





““தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும்.”

  — தானி 9:25 (ERV-TA)




அதாவது அப்போது எருசலேம் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.





3.இந்த 62 வாரங்களெனும் (62+முதல் 7 வாரங்கள்) 483 வருடங்களின் பின் அடுத்த மெசியா கொல்லப்படுவான். அவன் முற்றாகவே போய்விடுவான். இவனை கொன்றுவிட்டு பிறகு பரிசுத்த ஆலயத்தையும் எருசலேம் நகரத்தையும் அழிப்பார்கள்.


இந்த இடமான எருசலேம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.





“62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.”

  — தானி 9:26 (ERV-TA)



அதாவது 69 வாரம் முடிந்து 70வது வாரத்தில் தான் இது நிகழுகிறது.



கிறிஸ்தவ நம்பிக்கைப் பிரகாரம், இயேசு கொல்லப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்குள் அதாவது ஏழு வருடங்களினுள் ஆலயமும் எருசலேமும் அழிக்கப்பட்டதா??


இல்லையே..






4.அடுத்து அதை அழிக்க போகும் ராஜா இந்த 62 +7 வாரமான 483 வருடம் முடிந்த பின்பு, கடைசி ஒரு வாரத்தில் அதாவது இறுதி ஏழுவருசமான 70வது வாரத்தில் , ஜனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வான். அதாவது சமாதான உடன்படிக்கை செய்வான்.


பிறகு அந்த ஒரு வாரத்தில் அரைவாரம் முடியும்போது அதாவது 3.5 வருடம் முடியும்போது மொத்தமாக 486.5வது வருடத்தில் அவன் பலிகளையும் , காணிக்கைகளையும் ஒழியப்பண்ணுவான். அதன் பின் பாழாக்குபவன் வந்து முற்றாக அழிப்பான்.




“பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.”

  — தானி 9:27 (ERV-TA)



அதாவது 486.5 வது வருடத்தில் பிரதான ஆசாரியன் கொல்லப்பட்டான் அதாவது கி.பி. 66 இல் பிரதான ஆசாரியன் கொல்லப்பட்டான். அதன் மூலம் அப்போது பலிகளும் காணிக்கைகளும் முற்றாக ஒழிக்கப்பட்டன. அந்த கொல்லப்படும் இரண்டாவது மெசாயா இவனே.. இவன் போனதோடு அனைத்து பலிகளும் காணிக்கைகளும் முற்றாக போய்விட்டன. அந்த ராஜா செய்த உடன்படிக்கை 1 வாரம் இருக்கும். அதாவது ஆசாரியனான மெசியா 3.5 வருடத்தில் கொல்லப்பட்ட பின் அதாவது 69 வாரம் சென்றதன் பின்புள்ள வாரத்தில், மேலதிகமாக அரை வாரம் இருக்கிறது. அதாவது 3.5 வருடம் இருக்கிறது. அந்த மூன்றரை வாரம் முடிந்ததன் பின்பு   கி.பி. 70 இல்  எருசலேம் ஆலயம்  அழிக்கப்பட்டது. யூதர்களும் அடித்து துரத்தப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.



இந்த 490 வருடங்களே தானியேலிடம் சொல்லப்பட்டது.



அதாவது முதல் 7 வார முடிவின் பின் 49 வருடங்களின் பின் ஒரு மெசியா வந்து எருசலேமை கட்டுவான். - கோரேஸ் வந்து கட்டினான்.(2 நாளாகமம் 36:21-23.)  அவனை மெசியா என்று ஏசாயா 45:1 சொல்கிறது.



பிறகுள்ள 62 வார முடிவில் மீண்டும் எருசலேம் கட்டப்படும். அதன் பின் அடுத்த மெசியா கொல்லப்படுவான்.


அவன் கொல்லப்பட முன்பே ஒரு வாரம் (7வருடம்) உடன்படிக்கை செய்யும் ராஜா , 3.5 வருடத்தில் இந்த மெசியாவை கொல்வதன் மூலம் பலிகளையும் காணிக்கைகளையும் ஒழிப்பான். பின்பு மிகுதி அரைவாரம் முடிந்த பின் அதாவது 70வது வாரமான 490 வருடம் முடிந்த பின் , பாழாக்குபவன் நகரத்தை முற்றாக அழிப்பான்!!!



இதுவே நடந்தது!! 



யூதர்களுக்கு திருந்துவதற்கும் பாவமன்னிப்புகளை பெற்றுக்கொள்ளவும், தீர்க்கதரிசனங்களை அவர்களிடையே முத்திரிப்பதன் மூலம் அவர்களிடையே தீர்க்கதரிசிகள் வராமலிருப்பதுமான நிகழ்வு பூரணப்படவே இது கொடுக்கப்பட்டது.



ஆனால் அவர்கள் தம் பாவத்தை ஒழிக்கவுமில்லை, நன்மையை கொண்டுவரவுமில்லை! 



இதை சம்பந்தமேயின்றி இயேசுவுக்கு பொருத்துவதென்பது வேடிக்கை..


இவர்கள் நம்பிக்கை பிரகாரம் இயேசு இரண்டு தடவை வரவுமில்லை.. முதல் தடவை எருசலேமை கட்டுவதற்கு அனுப்பவுமில்லை.. இரண்டாவது தடவையில் இவரது மரணத்தோடு பலிகள் ஒழிக்கப்படவுமில்லை.. மாறாக 33 வருடங்கள் பின்பே அது நடந்தது.


அதாவது கடைசி வாரத்தில் கொல்லப்படவேண்டிய மெசியா 5 வாரங்கள் முன்னதாகவே கொல்லப்பட்டு விட்டார். அதாவது 64வது வாரத்திலேயே கொல்லப்பட்டு விட்டார்.



ஆகவே அது அவரை குறிக்கும் என்பது ஏற்க முடியாது.




இதனால் தான் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இதை மேற்கொள் காட்டவுமில்லை!!



ஆகவே கற்பனை கதைகளை நம்பி ஏமாற வேண்டாம்!





வெள்ளி, 11 நவம்பர், 2022

Echad-Yachid எகாத்- யகீத் கிறிஸ்தவ குழப்பம்

 ஏகத் vs யகீத் மற்றும் கிறிஸ்தவ போதகர்களின் அறியாமை திரிபும்!!

----------------------------------------------------------------------



கிறிஸ்தவ போதகர்கள் பொதுவாகவே கற்பனையையே நம்பிக்கையாகக் கொண்டிருப்பார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு வாயில் வந்ததை அடித்துவிடுவார்கள். அதை அப்படியே வேதவாக்கு போலவும் கடவுள் அவர் வாயால் பேசுவது போலவும் பாமர மக்கள் கருதுவார்கள்.. சிறிதும் ஆராய்வதில்லை..


 அதனால் போதகர்கள், " யார் தான் எதிர்த்து கேட்பார்? மூளையை யார் தான் பாவிப்பார்கள்?" என்ற தைரியத்தில் தான் இவ்வாறு கதைகட்டுவர்.



அந்த வரிசையில் வந்ததுவே ஏகாத் மற்றும் யகீத் பற்றி போதகர்களின் பிதற்றலாகும்.


உப பிரிவுகள்


1.எகாத் மற்றும் யகீத் பற்றி போதகர்களது கருத்து


2.எகாத் என்றால் உண்மையான அர்த்தம்


3 யகீத் என்றால் உண்மையான அர்த்தம்

 

4.எகாத் யகீத் பிரச்சினை ஏன்


5.தேவன் என்பவர் பன்மை கலந்த ஒருவரா?


6.ஒரே தேவன் மூன்றாக பிரிந்தாரா?


7.எலோஹீம் என்பது ஏன்?


*********

1.எகாத் (எஹத்) மற்றும் யகீத் (யஹீத்) பற்றி போதகர்கள் என்ன சொல்கிறார்கள்?




எகாத் (எஹத்) என்றால் ஒன்றுக்குமேற்பட்டவைகளினது கலவையான ஒன்று ஆகும்.


உதாரனமாக ஒரு நாள்.. இதில் இரவு பகல் என இரண்டு உள்ளது.


ஒரு குலை.. இதில் பல கனிகள் இருக்கலாம்.


ஆனால் யகீத் (யஹீத்) என்றால் வெறும் ஒன்றை மட்டுமே குறிக்கும். உதாரணமாக ஈசாக்கை ஒரே பையன் என்று சொல்வது போல்..


இது தான் இவர்கள் போலியாக கூறும் கருத்து!

****


2.எகத் என்றால் உண்மையாகவே என்ன அர்த்தம்?



எகத் என்றால் "ஒன்று" என்று அர்த்தம் ஆகும். அதாவது இது ஒரு பெயர்ச்சொல் (noun) ஆகும்.




இது ஒன்றுக்கு மேற்பட்ட கலவையான ஒன்றை தான் குறிக்குமா என்றால், அது பொய்யான வாதம் ஆகும்.


இதற்கு பைபிளிலிருந்தே ஆதாரம் காண்போம்:



1.ஒரே இரவு

“"எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்."”

  — ஆதியாகமம் 40:5 மேலும் 41:11


இங்கே உள்ள ஒரே இரவு என்பதிலுள்ள "ஒரே" என்பது "எஹத்" ஆகும்.


ஒரு இரவு என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட இரவுகளின் கலவை இருக்குமா?




2.ஒரே தகப்பன்


“நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.”

  — ஆதியாகமம் 42:11 மேலும் 42:13


ஒரே தகப்பன் என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட தகப்பன் இருப்பார்களா? 



3 .ஒரு கெரூபீன்


“"ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்."”

  — யாத்திராகமம் 25:19 


ஒரு கெரூப் என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட கெரூபீன்களின் கலவை இல்லையே.



4.ஒரே சாட்சி


“"எவனாகிலும், ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது."”

  — எண்ணாகமம் 35:30 



“சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலை செய்யப்படலாகாது.”

  — உபாகமம் 17:6 


“"ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்."”

  — உபாகமம் 19:15



இங்கே உள்ள ஒரே சாட்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பல சாட்சிகளா?



5.ஒரு தீர்க்கதரிசி


“"கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்."”

  — 1 இராஜாக்கள் 13:11 மேலும் 20:13


ஒரு தீர்க்கதரிசி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகளின் கலவை அல்லவே




இப்படி எகத் என்பது வெறும் ஒன்று என்பதை குறிக்க பாவிக்கப்படும்.



அது ஒரு கலவையாகவும் இருக்கலாம்.. அதே நேரம் தனித்ததானதாகவும் இருக்கலாம்.


ஒரு கலவை என்று வரும்போதும் அந்த கலவை ஒன்றாகவே இருக்கும்.




உதாரணமாக ஒரு கை என்றால் அதில் ஐந்து விரல்கள், தோல் நரம்புகள் என பல சேர்ந்ததாக காணப்பட்டாலும், ஒரு கை எனும்போது கையின் எண்ணிக்கை ஒன்று என்பதே அதன் அர்த்தம் ஆகும்.



ஒரு நாள் என்பதில் இரவு பகல் இருந்தாலும், இரவு பகல் இரண்டையும் சேர்த்தும் நாளின் எண்ணிக்கை ஒன்று என்பதாகும்.



மேலே உள்ள வசனங்களில் தனிமையாக உள்ளவைகளை குறிக்க "எகத் " பாவிக்கப்பட்டுள்ளதை காண்பீர்கள்.


அதில் எந்த கலவையும் இல்லை!



ஆகவே எகத் என்பது கலவையான ஒன்றையே குறிக்கும் என்பது பச்சை பொய்யானதாகும்.



எண்ணிக்கை ஒன்று என்பதே அதன் அர்த்தம்!


*****


3.யகீத் (யஹீத்) என்றால் என்ன?


யஹீத் என்பது அடைமொழி (adjective) ஆகும். அது ஒரு பெயர்ச்சொல் (noun) அல்ல.


எகத் என்பதே பெயர்ச்சொல்.



இதன் அர்த்தம் ஒற்றை (only) என சொல்லலாம்.


இது யஹீதக-உன் யஹீத் , அல்லது வெறும் "யஹீத்" ஒரே பிள்ளை என்பதை குறிக்க பாவிக்கப்பட்டுள்ளது. (எரேமியா 6:26, ஆதியாகமம் 22:2, சகரியா 12:10)


அதேபோல தனித்திருப்பன் என்ற அர்த்தத்தில் சங்கீதம் 25:16 இல் பாவிக்கப்பட்டுள்ளது.


இது அடைமொழி ஆகும். அடைமொழியையும் பெயர்ச்சொல்லையும் வேறுபடுத்த தெரியாமல் அதை வைத்து ஒரு நம்பிக்கையையே உருவாக்கிவிட்டனர்.




ஒருவன் என்பதை குறிக்க யஹீத் என்று வராது.. எகத் என்றே வரும்.



*****



4.இந்த எகத் யகீத் பிரச்சினை ஏன்?



இது ஏன் என்றால் பழைய ஏற்பாட்டில் தேவன் ஒருவன் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் பிதா தேவன், குமார தேவன் ,ஆவி தேவன் என மூன்று நபர்கள் இருப்பதாக நம்புகின்றனர்.  


கடவுள் ஒருவர் என சொன்னால், மற்ற இரண்டு நபர்களையும் விட்டுவிட வேண்டி வருகிறது.


அதை சமாளிக்க தான், தேவன் ஒருவன் (எஹத்) என்றால், பன்மை கலந்த ஒன்று.. தனி ஒன்று என்றால் யஹீத் என வரவேண்டும் என வாதிட்டனர்.


ஆனால் யஹீத் என்பது அடைமொழி, அதை அவ்விடம் பயன்படுத்த முடியாது என்பதை கூட அறியாமல்!!!


*****


5.தேவன் என்பவர் பன்மை கலந்த ஒருவரா?



பழைய ஏற்பாட்டில் தேவன் என்பவர் ஒரு நபரே ஆவார். (தேவதூதனையும் அவன் தேவனது கட்டளைப்படி நடப்பதால், அவன் செய்வதையும் தேவன் செய்தார் என சொல்லப்படும்.. அதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்!)



1.தேவன் தன்னை "நாம்" என்று சொல்லாமல், "நான்" என்றே சொல்கிறார். 




² உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

³ என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.


 …  

⁵ "நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்."

⁶ "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்." 

(யாத்திராகமம் 20:2,3,5,6)




⁶ "நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்."


 …  

²⁴ "உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்."

(ஏசாயா 44:6,24)






⁵ "நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை."

⁶ "என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை."

⁷ "ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்."

⁸ "வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்."


 …  

¹² "நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்."

(ஏசாயா 45:5-8,12)



“"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை."”

  — ஏசாயா 45:22 



இங்கே தன்னை தவிர வேறு தேவன் இல்லை என கூறும் போது, அங்கே ஒரே ஒரு நபரே உள்ளார்.. அந்த நபரை தவிர வேறு கடவுள் இல்லை என தெளிவாகிறது.



***


2.அவரை (ஹு) தவிர தேவன் இல்லை என மோசே சொல்கிறார்.. அவர்களை தவிர என்று ஒன்றுக்கு மேற்பட்டதை சொல்லவில்லை




³⁵ "கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது."


 …  

³⁹ "ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,"

(உபாகமம் 4:35,39) 





ஆகவே ஒரு தேவனே உள்ளார்.. அவருக்குள் மூன்று நபர்களெல்லாம் கிடையாது... அப்படி இருந்தால் மூன்று கடவுள்களாக தான் வரும்..

****



6.ஒரு தேவன் மூன்றாக பிரிந்துவிட்டாரோ?



ஒரு தேவன் மூன்றாக பிரிந்து விட்டால், அப்போதும் புதிதாக கடவுள் பிரிந்து தோன்றினார்.



*****

7.எலோஹீம் என்பது ஏன்?



எலோஹீம் என்பதன் நேரடி அர்த்தம் தேவர்கள் என இருந்தாலும், பழைய ஏற்பாட்டில் கண்ணியத்தின் நிமித்தமாக பன்மையில் பாவிக்கப்பட்டிருப்பதை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.



உதாரணமாக மோசேயை பார்வோனுக்கு தேவனாக ஆக்கியதாக தேவன் சொல்லுவதிலும் மோசேயை எலோஹீம் என்றே சொல்கிறார். (யாத்திராகமம் 7:1)



மோசே என்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலவை அல்ல.. ஒரு தனி மனிதன் ஆவார்..


அவரை எப்படி எலோஹீம் என சொன்னதோ அதுபோன்றே , தேவனை குறித்து கூறப்பட்டுள்ளது.



அந்த தேவன் கலவை அல்ல என்பதை 5இல் குறிப்பிடப்பட்ட வசனங்களே தெளிவாக்க போதுமானது




ஆகவே கற்பனை கதைகளை நம்பி ஏமாற வேண்டாம்

எலோஹீம் பற்றிய விரிவான அலசல்

பார்க்க ஆதியாகமம் தொடர்-1

*****



வியாழன், 10 நவம்பர், 2022

நானே -I AM எஹ்யே கடவுளின் பெயரா?

 எஹ்யே (I AM) என்பது கடவுளின் பெயரா?

--------------------------------------------------------------------------------



பொதுவாக கிறிஸ்தவர்கள் மொழியறிவின்றி கற்பனையிலேயே திளைத்தவர்களாக இருப்பார்கள். உதாரணமாக "எத்" என்று ஆதியாகமம் 1:1 இல் வருவது இயேசுவை குறிக்கும் என்றது போல.. அவ்வார்த்தை இலக்கணத்தில் நேரடி செயற்படுபொருளை அடையாளப்படுத்த வரும் வேற்றுமை உருபு (தமிழில் "ஐ") என்பதை அறியாமல் கற்பனையாக பேசுவார்கள்.



அந்த வகையில் வந்ததே "எஹ்யே" என்பதும்... கிறிஸ்தவ போதகர்கள் "ஹயா" என்று இதை சொல்வார்கள்.



இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், எபிரேய த்தில் "நான் I AM" என்பதை குறிக்க இரு வார்த்தைகள் உள்ளன.


1.அனோகி 

2.எஹ்யே (ஹயா என்று இவர்கள் சொல்வார்கள்)


இந்த எஹ்யே (ஹயா) என்பது கடவுள் மட்டுமே பாவிப்பதாகும்..


இதை தான் இயேசு யோவான் 8:58இல் "நான் ஆப்ரகாமுக்கு முன்பே இருக்கிறேன்" என்று சொல்ல இதே எபிரேய வார்த்தையை பாவித்தார்.. அதனால் அவர் தன்னை கடவுளென சொன்னதாக அர்த்தம் அமைகிறது. ஆகவே தான் யூதர்கள் கல்லெறிந்தனர் என்பர்.


வேறு சில போதகர்கள் ஆங்கிலத்தில் I am என்று இயேசு சொன்ன இடங்களை எல்லாம் இந்த "ஹயா" வை தான் பாவித்தார்.. சோ அவர் கடவுள் என்பார்கள்.


இவையெல்லாம் பச்சை மடத்தனமான வாதங்கள் ஆகும்.. மொழியறிவு இல்லாமையே இவ்வாதத்தின் அடிப்படை.



ஆங்கில மொழி எபிரேய மொழியிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்பதால், ஆங்கில போதகர்கள் இதை சொல்வதில் ஆச்சரியம் இல்லை.


ஆனால் தமிழ் பேசும் போதகர்கள் இதை சொல்வதென்பது, ஆங்கில போதகர்களை அப்படியே காப்பி அடிப்பதையே சித்தரிக்கிறது.



இனி நாம் இதை ஆராய்வோம்.



உப பிரிவுகள்

1.அனோகி vs எஹ்யே

2.இயேசு தன்னை எஹ்யே என்று சொன்னதால் யூதர்கள் கல்லெறிந்தனரா? (யோவான் 8:58)

3.இயேசு எஹ்யே என்று சொன்னதற்கு ஆதாரம் உண்டா?

4.யாத்தி 3:14 இல் தேவன் தன்னை எஹ்யே என சொன்னது ஏன்?

1.*அனோகி vs எஹ்யே*



எபிரேயத்தில் நான் என்பதை குறிக்க பழைய ஏற்பாட்டில் "அனோகி" என்பது பாவிக்கப்படுகிறது.


இதை ஆங்கிலத்தில் I or I am என்று இடத்திற்கேற்ப சொல்லலாம்.



எஹ்யே என்பது ஹயா என்ற வினைச்சொல்லில் இருந்து வந்த ஒரு வினைச்சொல் ஆகும்.


ஹயா என்றால் இருந்தான் (ஆண்பால்) என்று அர்த்தம் ஆகும். அதாவது ஆங்கிலத்தில் He Was என்று சொல்லலாம்.


ஆதியாகமம் 3:1 இல் "(மேஜிக்) பாம்பு காட்டுமிருகங்களிலேயே தந்திரமிகுந்ததாக இருந்தது"


வஹன்னாஹாஸ் (பாம்பு) ஹயா (இருந்தது/இருந்தான்) ஆரூம் (தந்திரமிக்கதாக) மின் கொல் ஹயாத் (எல்லா காட்டு மிருகங்களைவிடவும்)




இதன் பெண்பால் வார்த்தைகளும் ஆதியாகம புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.. அனைத்தையும் மேற்கோள் காட்ட இயலாது.



இதன் எதிர்கால வினைச்சொல் "யிஹ்யே" என்பதாகும்.


இதன் அர்த்தம் "இருப்பான் " என்பதாகும். ஆங்கிலத்தில் " he will be" ஆகும்.


இவ்வார்த்தை ஆதியாகமம் 16:12 இல் இஸ்மவேலை குறித்து பாவிக்கப்பட்டுள்ளது.


வஹு (அவன்) யிஹ்யே (இருப்பான்) பெரே ஆதாம் (ஒரு காட்டு மனிதனாக)


அவன் ஒரு காட்டு மனிதனாக இருப்பான். He shall be a wild man.



இந்த வகையில் தான் "எஹ்யே" என்பது "இருப்பேன்" என்பதாகும். அதாவது "I will be" .


யாத்திராகமம் 3:12 இல் மோசேயிடம்:


வயோமர் (அவர் கூறினார்) கி (நிச்சயமாக) எஹ்யே (இருப்பேன்) 'இம்மாக் (உன்னுடன்)


நான் நிச்சயமாக உன்னோடு கூட இருப்பேன் என்று (தேவன்) சொன்னார். He said "Surely I will be with you "






வேடிக்கையாக இதே எஹ்யே என்பது பாபிலோனை குறித்து பெண்ணாக உருவகித்து ஏசாயா புத்தகம் 47:7 கூறும்போது


வத்தோமரி (பெண்ணாகிய நீ சொன்னாய்!) லஓலம் (என்றென்றும்) எஹ்யே (இருப்பேன்) கபாரெத் (நாயகியாக)


"என்றென்றைக்கும் நாயகியாக இருப்பேன் என்று நீ சொல்லி..." ஏசாயா 47:7






அதேபோல யோனத்தான் , தான் தாவீதுக்கு அடுத்ததாக இருப்பேன் என்றதிலும் இதே எஹ்யே தான் உள்ளது.


வஅநோகி (நான்) எஹ்யே (இருப்பேன்) லக (உனக்கு) லமிஸ்நேஹ் (அடுத்தவனாக)


அந்த வசனம் முழுவதுமாக


"“நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.”

  — 1 Samuel 23:17 (TBSI)


இதேபோல் 2 சாமுவேல் 16:18  ஊசாயும் இதே வார்த்தையை பாவித்திருக்கிறார்.

இதுபோன்று இவ்வார்த்தையை மனிதர்கள் கூறுவதாக வரும் இடங்களிலுள்ள வசனங்கள்: ஏசாயா 3:7, 2 சாமுவேல் 22:24,16:18-19,15:34, 1 சாமுவேல் 18:18,23:17 நியாயதிபதிகள் 11:9,யோபு 17:6,12:4,10:19,7:20,3:16, உன்னதப்பாட்டு 1:7,  ரூத் 2:13,சங்கீதம் 102:7,  இதேபோல் உருவகங்களில் பாபிலோன் கூறுவதாக ஏசாயா 47:7 , ஞானம் கூறுவதாக நீதிமொழிகள் 8:30 இவ்வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது.  அதாவது பைபிளில் 18 இடங்களுக்கு குறையாமல் இவ்வார்த்தை கடவுள் அல்லாதவர்களுக்கு தான் பாவிக்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தையை மொழிவது தெய்வீகத்தை வாதிடுவதாக பிதற்றுவது அறிவீனம்.


ஆகவே எஹ்யே என்பது "இருப்பேன்" என்ற அர்த்தத்தை தரும் வினைச்சொல் வடிவமாகும்.




ஆங்கிலத்தில் அனோகி, எஹ்யே இரண்டையும் I am என்றே சொல்வதாலும், பைபிளை எபிரேய த்தில் படிப்பதில்லை என்பதாலும் ஆங்கில கிறிஸ்தவ போதகர்கள் இவ்வாறு கட்டிவிட்டனர்.






ஆகவே இவ்வாதம் அடிப்படையிலேயே தவறானதாகும்.. மொழியறிவின்மையின் வெளிப்பாடு ஆகும்.




2.இயேசு தன்னை எஹ்யே என சொன்னதால் யூதர்கள் கல்லெறிந்தார்களா?



இது அடிப்படையிலேயே அர்த்தமற்ற வாதமாகும்.. எஹ்யே என்றால் "இருப்பேன்" என்று அர்த்தமாகும்.


நான் இருப்பேன் என்று சொன்னதற்காக அவன் கல்லால் அடிப்பானா??


யோனத்தானும் தன்னை தாவீதுடன் இருப்பேன் என சொல்வதற்கு "எஹ்யே" என்று தான் சொன்னார். (1 சாமுவேல் 23'17)

ஊசாயும் நான் சேர்ந்து அவரோடே இருப்பேன் என்பதை கூறவும் "எஹ்யே" என்று தான் சொன்னாள்-(2 சாமுவேல் 16:18) அதேபோல் இதல்லாமல் 16 இடங்களிலும் கடவுள் அல்லாதவர்களுக்கு பாவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக யாரும் தேவ தூசனம் சொன்னதாக கருதவில்வையே.. காரணம் அவ்வாறு அது கிடையாது.


மொழியில் எஹ்யே என்று தான் அங்கு சொல்லவேண்டும்!!




பிறகு ஏன் கல்லெறிந்தனர்??



காரணம் தன்னை ஆப்ரகாமுக்கு முன்பு இருப்பதாக சொன்னதினால் தான் என்று அதே கட்டுக்கதை புத்தகம் சொல்கிறது.


யூதன் ஆப்ரகாமை தகப்பன் என சொல்லும்போது, அவரைவிட பெரிய ஆள் எனும் அர்த்தம் ஒருவரின் வாயிலிருந்து வந்தால், அவன் சும்மா இருப்பானா?



அதற்காக தான் கல்லெறிந்தான்.




3.. இயேசு எஹ்யே என்று தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா??


யோவான் சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. அங்கே இயேசு எஹ்யே என்று சொன்னதாக எப்படி இந்த கல்வியறிவற்ற போதகர்கள் கண்டுபிடித்தனர்??



 எஹ்யே என்றால் நான் இருப்பேன் என்பதாகும்.. ஆப்ராகமுக்கு முன்பே நான் இருப்பேன் என்பது அர்த்தமுள்ளதாக இருக்குமா?? இருந்தேன் என்று அல்லவா வரும்.அதாவது "ஹாயீதீ" என்று தான் சொல்லவேண்டும்.. எஹ்யே என வராது.




"ஹாயீதீ" என்பது கூட ஆதியாகமம் 31:40 இல் உள்ளது.



இதெல்லாம் அறியாமையின் உச்சம் ஆகும்..



ஆகவே எஹ்யே என்பது கடவுளை மட்டும் குறிப்பதல்ல... "நான் இருப்பேன்" என்பதை அவ்வாறு தான் சொல்வார்கள்!

இந்த வசனத்தை எபிரேயத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் கூட "எஹ்யே " என்று மொழிபெயர்க்கவில்லை.  மாறாக 

אני הוא- அனீ ஹூ (நானே அவன்) என்று தான் மொழிபெயர்த்திருக்கிறார்கள்

(அதே வார்த்தையை இயேசுவால் சுகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குருடனும் தன்னை இதே வார்த்தையால் அறிமுகப்படுத்துகிறார். (யோவான் 9:9). அப்போது யாரும் கல்லெறியவில்லையே. )

இதைவைத்து ஒரு நம்பிக்கையையே கட்டுவதென்பது வெள்ளம் வரும் இடத்தில் மணலால் வீடு கட்டுவதாகும்!!!!


வேடிக்கையாக இயேசு தன்னை I am என்று சொன்னதாக கூறும் இடங்களில் வரும் கிரேக்க வார்த்தை "Ego Eimi" என்பதாகும்.

இதே வார்த்தையை இயேசுவால் சுகப்படுத்தப்பட்ட குருடனும் யோவான் 9:9 இல் "நானே அவன்" என்று கூறுவதற்கு பாவித்திருக்கிறார் 



4..யாத்திராகமம் 3:14 இல் தேவன் தன்னை எஹ்யே என்று அறிமுகப்படுத்தியது ஏன்?


அதை சுருக்கமாக காண்போம்!






¹¹ "அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்."

¹² "அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்."

¹³ "அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்."

¹⁴ "அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்."

¹⁵ "மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்."



மோசேயிடம் தேவன் பேசியதாக வரும் நிகழ்வில்,


மோசேயோடு தேவன் இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறார் (எஹ்யே இம்மாக்) -யாத் 3:12


கடவுள் தான் அனுப்பினார் என்பதற்கு ஆதாரமாக , எகிப்திலிருந்து வெளியேறி இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள் என்பதை கூறுகிறார்.


அப்போது மோசே தேவனிடம், இதை நான் அவர்களிடம் சொன்னால் அவருடைய பெயர் என்ன என்று கேட்பார்களே என்கிறார்..


அதாவது இஸ்ரேல் புத்திரரும் தேவனது பெயரை அறிந்திருந்தனர்.. மோசேயை சோதிக்க அவர்கள் கேட்டால் என்ன சொல்வது என்கிறார்.





பழைய ஏற்பாட்டில் தேவனது பெயர் என்பது தேவனையே குறிப்பதாகும். 


உதாரணமாக


 "உன் தேவனாகிய கர்த்தர்" எனும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்கு பயப்படும்படிக்கு" -உபாகமம் 28:58



தேவனாகிய கர்த்தர் எனும் பெயர் பயங்கரமானதா? அல்ல.. 


அது தேவனையே குறிக்கும்.. அதாவது உன் தேவன் பயங்கரமானவர் என்பதே அதன் அர்த்தம் ஆகும்.



அந்த அர்த்தத்தில் தான் மோசே தேவனிடம் கேட்கிறார்.. அதாவது தேவன் எப்படிப்பட்ட தேவன் உன்னை அனுப்பினார் என்று கேட்டால் என்ன சொல்வது?





அதற்கு தேவன் "எஹ்யே ஆசேர் எஹ்யே" - இருப்பவராகவே இருப்பேன் என்று சொன்னார். 



அதோடு நிறுத்தாமல், எஹ்யே என்னை அனுப்பினார் என்று சொல் என்றார்.


தன்னை குறித்து உன்னுடன் இருப்பேன் (எஹ்யே இம்மாக்) -3:12 என்று சொன்னவர் அனுப்பியதாக சொல்ல சொல்கிறார்.

பழைய ஏற்பாட்டில் பெயர்கள் வினைச்சொற்களாக அதிகம் பாவிக்கப்பட்டுள்ளது.  இப்பெயர்கள் தேவனை விபரிப்பதாக கூறப்படுவதாகும்.

தேவன் மோசேயுடன் இருப்பார் என்பதை விபரிக்கும் விதமாக தான் "எஹ்யே" நான் இருப்பேன் என்பதை பெயராக சொல்லப்பட்டுள்ளது.


அதன் பின்னரே 3:15 இல் தலைமுறை தலைமுறையாக தன் பெயர் என்ன என்று சொல்கிறார்.. அதாவது ஆப்ராகாமின் தேவன் இஸ்ஹாகின் தேவன் யாக்கூபின் தேவன் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் என்பதை அப்பெயராக சொல்கிறார்.



நான் என்றும் உன்னோடு இருப்பவர் என்பதை விபரிக்கும் பெயராகவே எஹ்யே என மோசேயிடம் சொன்னார்.


மற்றபடி எஹ்யே என்பது யாரும் உச்சரிக்க கூடாத வார்த்தை என்றெல்லாம் கிடையாது.


அதை தான் பைபிளில் 18 இடங்களில் தேவன் அல்லாதவர்கள் அவ்வார்த்தையை தம்மை குறித்து கூறும் வசனங்களை பட்டியலிட்டுள்ளேன்.



இதை இயேசு பயன்படுத்த இயலாது.. காரணம் அது அர்த்தமற்றது.. ஒருவேளை பயன்படுத்தினாலும் அது தெய்வீகத்திற்கு ஆதாரமாகாது.


அது பொதுவாக பயன்படுத்தும் வார்த்தை தான் பைபிளில்.



சோ இப்படி கட்டுக்கதைகளை நம்பி ஏமாறாதீர்!



வெள்ளி, 16 செப்டம்பர், 2022

இயேசு பற்றிய தீர்க்கதரிசனங்கள்-திரிபுகள் (சுவிசேசங்கள்) பகுதி 2

 இயேசுவை பற்றி பழைய ஏற்பாடு முன்னறிவிப்பதாக சுவிசேசங்கள் போலியாக கூறுவது பற்றிய பதிவின் இரண்டாம் பாகம்

முதல் பாகத்தின் தொடர்ச்சி

9.தம்மை பிரசித்தம் பண்ண வேண்டாம் என கூறல்

¹⁵ "இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,"

¹⁶ தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

¹⁷ ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:

¹⁸ "இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்."

¹⁹ "வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை."

²⁰ "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்."

²¹ அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே. (மத்தேயு 12:15-21)

யேசு நோயாளிகளை சுகப்படுத்திவிட்டு, அதை வெளியில் சொல்ல வேணாம்னு சொன்னதால் அது நிறைவேறிவிட்டதாம்.

அதுவும் யேசுவுக்கு பொருந்தாத ஒன்று.

12:18 இல் அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை அறிவிப்பார். ஆனால் யேசு இவர்களது நம்பிக்கைப் பிரகாரம் இறக்கும் வரை இஸ்ரவேலருக்கு அறிவிக்குமாறு தான் சீடர்களை ஏவினார் (மத்தேயு 10:5 15:22-26)

12:19 அவர் பாதையில் சத்தம் போட மாட்டாராம். வாக்கு வாதம் பண்ண மாட்டாராம்.

ஆனால் யேசு பாதையில் கத்தி சத்தம் போட்டு போதனை செய்தார். 

“"பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்."”

  — யோவான் 7:37 

இதே ஏசாயா 42:1-4 இல், அவர்


4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை (சோர்வடையமாட்டார்), பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.(ஏசாயா 42:4)

அவர் கடைசிவரை சோர்வடையமாட்டாராம். தளர மாட்டாராம்.

ஆனால் யேசு தளர்ந்து போனார். ஏன் என்னை கைவிட்டீர் என்று தேவனிடம் கேட்டார்.

(மாற்கு 15:34 மத்தேயு 27:46)

எனவே இதுவும் யேசுவுக்கு பொருந்தாது

ஆகவே இதுவும் ஒரு திரிபே ஆகும்.

----------

10.உவமைகளால் பேசுதல்

³⁴ "இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை."

³⁵ என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. (மத்தேயு 13:34-35)

இயேசு உவமைகளை கூறியதால் , இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறிவிட்டதாம்.

ஆனால் உண்மையில் அது தீர்க்கதரிசனமே அல்ல!

தன் முன்னோரிடமிருந்து கேட்டவற்றை அறிவிப்பதாகவே சங்கீத புத்தகம் சொல்கிறது:

¹ "என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்."

² என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.

³ அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

⁴ "பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம்."

பழைய காலத்து கதைகளை முன்னோர் சொல்ல கேட்டதை அப்படியே அறிவிப்பதாக சொல்வதை அப்படியே இயேசு உவமைகளால் வாயை திறப்பதாக அடித்து விடுகிறார்.

-------------

11.கழுதைக் குட்டியில் ஏறிப்போதல்

²"உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்."”

  ³ "ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்."

⁴ "இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,"

⁵ தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. (மத்தேயு 21:2-5)

மெசியா கழுதை மீதும் கழுதைக்குட்டி மீதும் ஏறீ சீயோனுக்கு வருவார் என உள்ளதை அப்படியே இயேசுவுக்கு பொருத்துவதற்காக மத்தேயு கழுதையையும் அதன் குட்டியையும் அவிழ்த்து வருமாறு அனுப்பியதாகவும், சீடர்கள் வர இயேசு கழுதைமேலும் அதன் குட்டி மேலும் ஏறி வந்தது போன்று எழுதுகிறார்.

ஆனால் மாற்கு மற்றும் லூக்கா , யோவான் ஆகிய மூவரும் ஒரு கழுதையை அவிழ்த்து வர சொன்னதாகவும் , ஒரு கழுதையிலேயே ஏறி சென்றதாகவும் கூறுகிறார்கள்.

² "உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்."

⁴ "அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்."

⁷ "அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்." (மாற்கு 11:2,4,7)


³⁰ "உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்."

³¹ "அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்." (லூக்கா 19:30-31)

¹⁴ "அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,"

¹⁵ இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.(யோவான் 12:14-15)

இதிலிருந்து பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களிற்கேற்ப மத்தேயு போலியாக கதைகளை உண்டாக்கி எழுதுபவர் என்று புரிகிறது.

 ஒரு நபர் எப்படி இரு கழுதைகளில் பயணம் செய்ய இயலும் என்று கூட யோசிக்காமல் சகரியா 9:9 இல் இருப்பதற்கு ஒத்துப்போக இவ்வாறு எழுதியுள்ளார்.

ஆனாலும் இதுகூட இயேசுவுக்கு பொருந்தாது.

ஏனெனின், சீயோனுக்கு வரும் அந்த நபர் ஒரு ராஜா ஆவார்.

⁹ "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்."

¹⁰ "எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்." (சகரியா 9:9-10)

அந்த ராஜா பெரும் நிலப்பரப்பை ஆளுபவர் என்று சகரியா 9:10

 தெளிவாக கூறுகிறது.

கழுதை மேல் ஏறி போகிறதால் மட்டும் அந்த தீர்க்கதரிசனத்திற்கு பொருத்தமானவராக ஆகிவிடுவதில்லை!.. 

இரண்டாம் வருகையில் அது நிகழும் என கதை விட கூடாது. 

இறந்து போன போலி மெசியாக்கள் அனைவருக்கும் இவ்வாதத்தை பிரயோகிக்கலாம்.  அதாவது இரண்டாம் வருகையில் நிறைவேற்றுவார் என்று..

---------------------

12.ஆடைகளுக்கு சீட்டு போடுதல்

"அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."”

  — மத்தேயு 27:35 

அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்."”

  — மாற்கு 15:24 

“"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்."”

  — லூக்கா 23:34 

அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்."”

  — யோவான் 19:24

இயேசுவை சிலுவையில் அறைந்த பின்பு அவரது ஆடைகளை பெறுவதற்காக சீட்டுப்போட்டார்களாம்.

இயேசுவுக்கு அவரது ஆடைகளை மீண்டும் அணிவித்த பிறகு தான் அவரை வாரினால் அடித்தார்கள். அதாவது கிழிஞ்ச துணிக்காக சீட்டுக்குழுக்கி போட்டுப்பாங்களா?

சங்கீதம் 22:18 இல் தாவீது ராஜா தனக்கு ஏற்பட்ட துன்பத்தை குறித்து சொல்லும்போது, அவரது ஆடைகளை தங்களுக்குள்ளே பங்கிட்டு , என் உடையின் மேல் சீட்டு போடுகிறார்கள் என்கிறார்.

அங்கு தாவீதுக்கு ஏற்பட்ட இழிநிலையை தீர்க்கதரிசனம் போல் சித்தரித்து, அதற்கு பொருத்திப் போகும் விதமாக, வாரினால் அடிபட்ட பின்னாளுள்ள ஆடைக்கு சீட்டுப்போட்டதாக நான்கு சுவிசேஷங்களும் கதைவிடுகின்றன.

தாவீது ஒன்றும் ,"அவருடைய வஸ்திரங்களை தங்களிடையே பங்கிட்டு, அவருடைய உடையின் பேரில் சீட்டும் போடுவார்கள்" என்று சொல்லவில்லை!

மாறாக தன்னுடைய ஆடையை குறித்தே சொல்கிறார்.

 இவர்கள் தான் தாவீது எழுதும்போது பார்த்துக்கொண்டு இருந்தது போல் தீர்க்கதரிசனம் என புழுகுகிறார்கள்!

-----------

13.முப்பது வெள்ளிக்காசுக்கு குயவனுடைய நிலத்தை வாங்குதல்.

⁹ "இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,"

¹⁰ கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. (மத்தேயு 27:9-10)

இப்படி ஒன்று எரேமியாவில் இல்லை! 

மாறாக சகரியாவிலேயே உள்ளது. அதில் கூட இவர்கள் கூறுவது போல தீர்க்கதரிசனம் அல்ல!

¹² "உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்."

¹³ "கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்." (சகரியா 11:11-12)

சகரியாவுக்கு முப்பது காசு கொடுக்கப்பட்டது.

 அதை குயவனிடம் வீசிவிட சொன்னதும், அதை குயவனுக்காக கர்த்தருடைய ஆலயத்தில் எறிந்துவிட்டார்..

சகரியா செய்து முடித்தது எப்படி தீர்க்கதரிசனமாகும்??

 சகரியா செய்ததை யூதாஸ் செய்ததுபோல பில்டப் விடப்படுகிறது.

ஏதோ கர்த்தர் யூதாஸிடம் கூலி கேட்கும்படியும், அந்த கூலியை நிலத்தை வாங்குவதற்காக ஆலயத்தில் எறிந்துவிட சொன்னதுபோன்றும் இட்டுக்கட்டியுள்ளார் மத்தேயு.

வேடிக்கையாக யூதாஸ் அந்த நிலத்தை வாங்கி வில்லை.. 

அக்காசு தனக்கு தேவையில்லை என வீசிவிட்டான். அதை எடுத்து யூத ஆசாரியர் தான் குயவனிடம் அந்நியரை அடக்கம் செய்வதற்காக நிலத்தை வாங்கினார்கள்.(மத்தேயு 27:7)

ஆகவே இதுவும் தீர்க்கதரிசனம் அல்ல!!!

-----------

14.அவர் பல அற்புதங்களை செய்தும் நம்பவில்லை 

³⁷ "அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை."

³⁸ "கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது." (யோவான் 12:37-38)

இதுகூட தீர்க்கதரிசனம் அல்ல.. அதுவும் ஏசாயாவின் கூற்றும் அல்ல!

 நோய்வாய்ப்பட்ட ஒரு நபரைக் குறித்து அவரது ஜனங்கள் கூறும் வார்த்தையாகும். 

 ஏசாயா 53 இல் இது இடம்பெறுகின்றது. 

"எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?" (ஏசாயா 53:1)

இதில் "நாம்/அவர் செய்த அற்புதங்களை கண்டு விசுவாசித்தவன் யார்?" என்று கூறப்படவில்லை!

"விசுவாசித்தவன் யார்" என இருப்பதால், உடனே இயேசுவை விசுவாசிக்கவில்லை என்பதோடு லின்க் பண்ணுகிறார்கள்.!

ஆனால் இயேசுவை அநேகர் விசுவாசித்தார்கள் என அதே அதிகாரத்தில் முரண்பட்டு சொல்கிறார்

“"ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்."”

  — யோவான் 12:42 

இப்படி தான் எல்லா தீர்க்கதரிசனமும் உள்ளது. மதத்தைப் பரப்ப இப்படி திரிபு வேலை செய்ய வேண்டுமா?

------------

15.இயேசுவை விசுவாசிக்காததால் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக யோவான் கூறுகிறார்.

³⁹ ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:

⁴⁰ "அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்."

⁴¹ "ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்."“(யோவான் 12:39-41)

வசனத்தை நான் கீழே பதிகிறேன்.

அதற்கு முன் , இதே வசனத்தை மத்தேயு தீர்க்கதரிசனம் என கூறும்போது, இயேசு உவமையாக பேசியது அவர்களுக்கு புரியவில்லை என்பதால் இது நிறைவேறியது என்கிறார்.

¹³ "அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்."

¹⁴ ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

¹⁵ "இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." (மத்தேயு 13:13-15)

யோவானின் படி இயேசுவை விசுவாசாப்பதை குறிக்கிறது

 மத்தேயுவின்படி இது உவமை புரியவில்லை என்பதை குறிக்கிறது.

இந்த இருவருமே பொய்யாக தான் பேசுகிறார்கள் என்பதை ஏசாயா வசனத்தை படித்தால் புரிந்துவிடும்.

இவர்கள் அவ்வசனத்தில் கட்டிங் ஒட்டிங் செய்திருக்கிறார்கள் என்றும் புரியும்.

⁹ "அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்."

¹⁰ "இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்."

¹¹ "அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,"

¹² "கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே." (ஏசாயா 6:9-12)

ஏசாயாவுக்கு கர்த்தர் இட்ட கட்டளையை, இயேசு கால யூதர்களுக்கு உவமை புரியாததால் நிறைவேறியதாக அடித்துவிடுவதும், இயேசுவை நம்பாததால் நிறைவேறியது என்றும் கூறுவது மாபெரும் திரிபு அல்லவா???

------------------

16.அக்கிரமக்காரரில் ஒருவர் என எண்ணப்படல்.

அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.”

  — லூக்கா 22:37 

²⁷ "அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்."

²⁸ அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. (மாற்கு 15:27-28)

இயேசு அக்கிரமக்காரரில் ஒருவர் என எண்ணப்படுவது எப்படி என்று லூக்கா சொல்லாவிட்டாலும், மாற்கு சொல்கிறார். அதாவது இரு திருடர்களோடு இவரை சிலுவையில் அறைந்ததால் அக்கிரமக்காரரில் ஒருவர் என எண்ணப்படுவார் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியதாம்.

இதுவும் ஏசாயா 53இல் இடம்பெறும் ஒரு வசனமாகும்.

“"அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். "”

  — Isaiah 53:12 

ஏசாயாவில் கூறப்படுபவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவார் என்பதால், அது இயேசுவை குறிக்கும் என்பதாகாது.

அதற்கு முந்திய வசனத்தில்,

“"கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்."”

  — ஏசாயா 53:10 

அவர் தன் சந்ததியையும் கண்டு நீடித்த நாளாக இருப்பார் என்று உள்ளது.

இங்கே உள்ளது zera என்ற எபிரேய வார்த்தை ஆகும். இது சொந்த பிள்ளைகளை மட்டுமே குறிக்கும்.

ஆனால் இயேசுவுக்கோ இப்படியொரு சந்ததி இல்லை!!

 சம்பந்தமின்றி சங்கீதம் 22:30ஐ காட்ட வேண்டாம்.. அதிலுள்ளது "அதோர்" என்பதாகும். அது வேறு வார்த்தை

மேலும் அந்த நபர் ஆயுள் நீடிக்கப்படுவார் என்று உள்ளது. ஆனால் இயேசு 33வயதில் இறந்துவிட்டதாக இவர்கள் நம்புகின்றனர்.. சந்ததியும் இல்லை!

சோ பொருந்தாதை பொருத்திப் பார்ப்பது தவறு!!

----------------

17.அப்பம் புசிக்கிறவன் தன் குதிகாலை தூக்குதல்.

உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்."”

  — யோவான் 13:18 

இதுவும் ஒரு தீர்க்கதரிசனமே கிடையாது..

 மாறாக தாவீதுடன் இருந்த பகைவர்களை யும் துரோகிகளை குறித்து தேவனிடம் முறையிடுவதே அப்பாடல் ஆகும். (சங் 41:9)

⁷ "என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,"

⁸ தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

⁹ "என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்."

¹⁰ "கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்." (சங்கீதம் 41:7-10)

உற்ற நண்பரும் , அவர் நம்பியவருமான நபர் தன் மீது தன் குதிகாலை தூக்கினான் என்கிறார்.

ஆனால் இயேசு யூதாசை நம்பவே இல்லை என்று இதே யோவானில் இயேசு முன்னரும் சொல்லிவிட்டதாக எழுதப்பட்டுள்ளது.

“"ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:"”

  — யோவான் 6:64 

“இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.”

  — யோவான் 6:70 

ஆகவே இயேசு யூதாசை ஆரம்பம் முதலே நம்பவில்லை..

 பிறகு எப்படி சங்கீதம் 41:9 யூதாசுக்கு பொருந்தும்??

ஆகவே தம் இஷ்டம் போல எழுதி வைத்திருக்கிறார்..

--------------

18..அவரது எலும்புகளில் ஒன்றும் முறிக்கப் படுவதில்லை 

³⁶ அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. (யோவான் 19:36)

அதாவது இயேசு கொஞ்ச நேரத்திலேயே செத்துவிட்டதால், காலை உடைக்கவில்லையாம். (19:34) . இதனால் இது (சங் 34:20) நிறைவேறியதாம்!

இது சங்கீதம் 34இல் இடம்பெறுகிறது.

 அதாவது நீதிமான்களை கர்த்தர் காப்பாற்றுவார் துன்மார்க்கரை அழிப்பார் என்று கூறும் அதிகாரமே இது.

¹⁹ "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."

²⁰ அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.

²¹ தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

²² கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.(சங்கீதம் 34:19-21)

ஆனால் இங்கு கர்த்தர் அவனுடைய எல்லா எலும்பையும் காப்பாற்றுவார் என்றே கூறுகிறது.. கால் எலும்பை மட்டும் அல்ல!

சிலுவையில் கையை துளைத்து ஆணி அடித்தாலே கையில் உள்ள எலும்புகள் உடையும்! 

ஆகவே அது அவருக்கு பொருந்தாது.

22ம் வசனத்தில், அவரை நம்புவோர் ஒருவர் மீதும் குற்றம் சுமராது என்கிறது.

 ஆனால் இவரையோ குற்றம் சுமத்தி தான் சிலுவையில் அறைந்தனர் என எழுதப்பட்டுள்ளது.

------------

19..அவர்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்தல்

³⁷ அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. (யோவான் 19:37)

முதலில் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள் என்று எங்கும் இல்லை!

 சகரியா 12:10 இல் இடம்பெறும் வசனத்தை தனக்கு ஏற்றாற்போல் வளைத்து இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனம் போன்று கூறுகிறார்.

“And I will pour upon the house of David, and upon the inhabitants of Jerusalem, the spirit of grace and of supplication; and they shall look unto Me because they have thrust him through; and they shall mourn for him, as one mourneth for his only son, and shall be in bitterness for him, as one that is in bitterness for his first-born.”

  — Zech 12:10 (JPOT)

நான் தாவீது குடும்பத்தார்மீதும் எருசலேம் குடிகளின் மீதும் கிருபையின் ஆவியையும் , விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அவர்கள் (எதிரிகள்) #அவனை குத்தியதால், இவர்கள் (தாவீதின் குடும்பத்தாரும்,எருசலேம் குடிகளும்) #என்னை நோக்கி பார்ப்பார்கள். தன் ஒரே மகனுக்கு புலம்புகிறதுபோல #அவனுக்காக புலம்புவார்கள். தன் முதற்பேறானவனுக்கு துக்கிப்பது போல அவனுக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)

இந்த அதிகாரம் எருசலேமைச்சூழ யுத்தம் நடக்கும் போது நிகழுவதாகும்.(சகரியா 12:2-3)

இங்கே குத்தின நபரை பார்ப்பதில்லை!

 எதிரிகள் குத்தியதற்காக தேவனை நோக்கி பார்ப்பார்கள்.

அதில் குத்தியது எதிரிகள்.. பார்ப்பது தாவீதின் குடும்பத்தார்.

யோவான் பிரகாரம், பார்த்தது யூதர்கள் அல்ல! ரோமர்கள்.

எப்படியோ யாரோ யாரையோ பார்த்தாங்க என்பதால் யுத்தத்தின் போது நடப்பதை, சம்பந்தமற்ற நிகழ்வில் சொருகுவதென்பதை ஏற்க இயலாது!!

--------

20..மரித்தோரிலிருந்து எழ வேண்டும் .

அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.”

  — John 20:9 

இப்படி ஒரு வேதவாக்கியம் இல்லை! சும்மா போற போக்கில் அடித்துவிட்டிருக்கிறார்.






புதன், 17 ஆகஸ்ட், 2022

அப்போஸ்தலர் நடபடிகள் செய்த திரிபுகள்

1.யூதாசை பற்றிய தீர்க்கதரிசனம்

¹⁶ "சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது."

¹⁷ "அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான்."

¹⁸ "அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று."

²⁰ "சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது." (அப்போஸ்தலர் 1:16-20)

முதலிலியே யூதாசு அநீதத்தின் கூலியால் ஒரு நிலத்தை சம்பாதித்தார் என்று 1:18 கூறுகிறது.

ஆனால் உண்மையில் மத்தேயுவின் கூற்றுப்படி, யூதாசு நிலத்தை சம்பாதிக்கவில்லை! அவன் முப்பது காசை ஆலயத்தினுள் எறிந்துவிட, அந்நியனை அடக்கம் செய்வதற்கு யூத ஆசாரியர்கள் தான் நிலத்தை சம்பாதித்தனர்.(மத்தேயு 27:5-7)

இனி தீர்க்கதரிசனம் பற்றி பார்ப்போம்:

"அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது" என்று யூதாசை குறித்து கூறப்பட்டுள்ளதாம்!

ஆனால் உண்மையில் தாவீது ராஜா தன் எதிரிகளையே அவ்வாறு சபித்தார். ஒரே ஒரு நபரை சபிக்கவில்லை! மாறாக எதிரிகள் கூட்டத்தை சபிக்கிறார். அதன் ஒரு வரியை தூக்கியெடுத்து , அது யூதாசை குறித்து தாவீது சொன்னதாக அடித்து விடுகிறார்!

¹⁹ தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

²³ அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.

²⁴ உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.

²⁵ அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.(சங்கீதம் 69:19,23-25)

இதேபோல் "அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன்" என்றும் யூதாசை குறித்து தாவீது சொன்னதாக அடித்து விடுகிறார்.

அதுகூட தாவீதை கொல்ல நினைத்த பகைவனையே தாவீது சபிக்கிறார். அதை சம்பந்தமே இல்லாமல், யூதாசை குறிப்பதாக பொய்யாக புழுகியுள்ளார்கள்.

² "துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்."

³ "பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்."

⁸ அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.

¹⁶ "அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே."

²⁰ "இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்."

²² "நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது."(சங்கீதம் 109:2,3,8,16,20,22)

தாவீது தன் எதிரிகளை குறித்து சபித்து ஜெபித்த ஜெபத்தை, யூதாசை குறித்து சொன்னதாக எழுதுவது இலக்கிய மோசடி இல்லையா?? தம் மதத்தை பரப்புவதற்கு இப்படி பொய் பேசவேண்டுமா?

-------------------------------------------------

2.யோவேலின் தீர்க்கதரிசனம் பெந்தகோஸ்து 

¹⁶ தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.

¹⁷ "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;"

¹⁸ "என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்."

¹⁹ "அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்."

²⁰ "கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்."

²¹ அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 2:16-21)

இது யோவேல் 2:28-32 இல் உள்ளது.

இங்கு கூட, மாம்சமான அனைவரிலும் தன் ஆவியை ஊற்றுவதாகவும், குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இங்கு ஆவியானது அனைவர் மீதும் இறங்கவில்லை! சீடர்கள் மீது இறங்கியதாகவே கூறப்படுகிறது. 

மேலும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை!! மாறாக ஏனைய யூதர்களின் ஜென்மபாசைகளில் பேசினார்கள் அவ்வளவே. (அப்போஸ்தலர் 2:6-11)

ஆகவே இதுவும் போலியாக திரித்தே எழுதியுள்ளார்!

--------------------------------------------

3.இயேசு அழிவை காண்பதில்லை என்று தாவீது தீர்க்கதரிசனம் சொன்னானாம்!

²⁵ அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;


²⁶ "அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;"

²⁷ "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;"

²⁸ ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

²⁹ "சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது."

³⁰ "அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,"

³¹ "அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்." (அப்போஸ்தலர் 2:25-31)

தாவீது தன்னை குறித்து பாடியதை மீண்டும், இயேசுவை குறித்து சொன்னதாக பொய்யாக இட்டுக்கட்டி எழுதுகிறார்.

¹ "தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்."

⁸ கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

¹⁰ என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

¹¹ "ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. " (சங்கீதம் 16:1,8,10-11)

இங்கே தெளிவாக "என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்" என்று இருப்பதை அப்படியே "இயேசுவின் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர் " என்று பொய்யாக புழுகுகிறார்.

இது இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி சொன்னதாக வேறு கதை விடுகிறார்.

இவர்களது நம்பிக்கை படி, இயேசு இழிவான மரணத்தை பெற்றதாக நம்புகிறார்கள். பிறகு எப்படி அழிவை காணவிடமாட்டீர் என்பது இயேசுவை குறிக்கும்??

அழிவை கண்டுவிட்டாரே..

அடுத்து உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் உள்ள ஒன்று தான்.

மோசே இயேசுவை வந்து சந்தித்ததாக இதே லூக்கா எழுதி வைத்திருக்கிறார்.

ஆபிரகாமின் மடியில் லாசரு இருப்பதாக வேறு கதையை எழுதியும் வைத்திருக்கிறார்.

இப்படி எல்லாருமே உயிர்த்தெழுந்து இருக்கும்போது,, இவர்களது நம்பிக்கைப் படி இழி மரணத்தை சந்தித்த இயேசு அழிவை காணவில்லையாம். பாதாளத்தில் விடப்படவில்லையாம். எவ்வளவு வேடிக்கை??

தாவீது தன்னை குறித்து பாடியதை இயேசுவை குறித்து சொன்னதாக பொய்யாக பேசுவதால் பயன் இல்லை!!

தாவீதை பாதாளத்தில் விடவில்லை என இதே சங்கீதம் 30:3 கூறுகிறது.

இழிவான மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுவதையே இது குறிக்கும்.. மற்றபடி மரணித்து அடக்கம் செய்யப்பட்டார் என்பதை அல்ல!

ஆனால் இயேசுவுக்கோ அப்படி இல்லை!!

----------------------------------------------

4.இயேசு பரலோகத்துக்கு போவார் என தாவீது சொன்னதாக மீண்டும் பொய்யாக சொல்கிறார்.

³⁴ "தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,"

³⁵ நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

³⁶ "ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." (அப்போஸ்தலர் 2:34-36)

தாவீதுக்கு வலது பாரிசசத்தில் தேவன் இருக்கிறார் என்று சங்கீதம் 16:8 சொல்கிறதே.

அப்படி என்றால் தாவீது பரலோகத்தில் தேவனுடைய இடது பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்று அர்த்தமா? அல்லது தேவன் பூமியில் தாவீதுக்கு வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார் என்று அர்த்தமா?

தாவீதுடைய சங்கீதக்காரன் தாவீதைக்குறித்து சங்கீதம் 110:1-2 இல் பாடுவதை, தாவீது இயேசுவை குறித்து சொல்லியிருப்பதாக புழுகுகிறார்

-------------------------------------

5.மோசேயை போன்ற தீர்க்கதரிசி 

²² மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

²³ "அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்."(அப்போஸ்தலர் 3:22-23)

இது உபாகமம் 18:15-19ஐ திரித்து கூறியுள்ளார்.

“உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.”

  — உபாகமம் 18:15 

அந்த தீர்க்கதரிசி யின் சொல்கேளாதவன் நிர்மூலமாக்கப்படுவான் என்று அந்த புத்தகத்திலேயே கிடையாது..

மாறாக அவனை நான் விசாரிப்பேன் என்றே உள்ளது.

“என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.”

  — உபாகமம் 18:19 

பழைய ஏற்பாட்டு வசனங்களுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து தான் இயேசுவுக்கு அதை பொருத்துவதற்கு அப்போதே முற்பட்டுள்ளனர்.

சரி.. இது இயேசுவுக்கு பொருந்துமா?

இயேசு மோசேயை போன்ற தீர்க்கதரிசியாக இருந்தாரா?

1.மோசே புது சட்டத்தை (தோரா) கொண்டுவந்தார். இயேசு அதற்கு கீழ்படிந்தே வாழ்ந்தார். அப்படியாயின் இயேசுவை அதிகபட்சமாக ஆரோனை போன்ற தீர்க்கதரிசி என்று தான் சொல்லலாம்.. மோசேயை போன்றவராக மாட்டார்.

2.மோசேயின் பிறப்பு முதல் மரணம் வரை எதிலுமே இயேசு அவரை போன்றவராக இருக்கவில்லை! 

3.மோசே தன் இனத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு தலைவராக இருந்தார். அவரை ஏற்றுக்கொள்ளாதோர் அப்போதே அழிக்கப்பட்டனர். ஆனால் இயேசுவையோ அப்படி முழு இனத்தாரும் ஏற்றுக்கொள்ளவில்லை! 

சோ எந்த விதத்திலும் மோசேக்கு சமானமாக இயேசு இருக்கவில்லை! அவரை பின்தொடர்ந்தவராகவே இருந்தார்.

மேலும் யோவான் சுவிசேசத்தின்படி, அக்கால யூதர்கள் கூட "எலியா,மெசியா, தீர்க்கதரிசி ஆகிய மூவரும் வெவ்வேறானவர்கள் " என்றே நம்பியிருந்தனர். யோவான் கூட அதற்கு பதிலளிக்கும் போது அதை மறுத்து பேசவில்லை (யோவான் 1:19-22)

----------

6.கர்த்தருக்கு விரோதமாகவும், அவரது கிறிஸ்வுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் கூட்டம் கூடினார்கள்.

²⁶ "கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே."

²⁷ "அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,"

²⁸ "ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்."(அப்போஸ்தலர் 4:26-28)

இது சங்கீதம் 2:1-2 இல் இடம்பெற்றுள்ளது.

அதில் குறிப்பாக 2:7ஐ பார்க்கும்போது, 

“"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;"”

  — சங்கீதம் 2:7 (TBSI)

கர்த்தர் என்னை நோக்கி சொன்னார் என்று கூறி, என்னை அவரது குமாரன் என்று சொன்னதாக சொல்கிறார் தாவீது. அதாவது தாவீதை தான் தன் குமாரன் என தேவன் சொன்னதாக இங்கு கூறப்படுகிறது.

---------------------

7.ஆப்ரகாமின் வரலாற்றை மாற்றி பேசுதல்.

² "அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:"

³ "நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்."

⁴ "அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்." (அப்போஸ்தலர் 7:2-4)

அதாவது ஆப்ரகாம் காரான் என்ற ஊரிலிருந்து வெளியேறியது தனது தந்தை மரணித்த பின்னர் என்கிறார் ஸ்தேவான்.. அதுவும் பரிசுத்த ஆவியால் நிறைந்து சொன்னாராம்.

ஆனால் பழைய ஏற்பாட்டை போய் பார்த்தால், ஆப்ரகாம் தன் தந்தை மரணிக்க முன்பே காரான் ஊரிலிருந்து வெளியேறிவிட்டார்.

²⁶ "தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்."

³¹ "தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்."

³² தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான். (ஆதியாகமம் 11:26,31-32)

ஆப்ரகாமின் தகப்பன் 70 வயதில் ஆப்ரகாம் பிறந்துவிட்டார்.. (ஆதி 11:26)..

ஒரு பேச்சுக்கு இதை 80 என்று வைத்தாவது ஸ்தேவான் சொன்னதை காப்பாற்ற முடியுமா என பார்ப்போம்.

அவர்கள் ஆரான் (காரான்) எனும் ஊருக்கு வந்து அங்கு தங்கினார்கள். (ஆதி 11:31)

தேராகு 205 வயதில் இறந்தார்.(ஆதி 11:32)

அதாவது ஆப்ரகாமின் 145ஆவது வயதில் இறந்திருக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஆரானிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 7:4)

 என்று ஸ்தேவான் ஆவி தூண்டி பேசினாராம்.

ஆனால் பழைய ஏற்பாடு ஆப்ரகாம் 75 வயதில் ஆரானிலிருந்து வெளியேறி போய்விட்டார் என்கிறது.

“"கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்."”

  — ஆதியாகமம் 12:4 

அதாவது தன் தந்தை மரணிப்பதற்கு 70 வருடங்கள் முன்னரே ஆப்ரகாம் ஆரானிலிருந்து வெளியேறிவிட்டார்.

இது தான் இவர்களது பரிசுத்த ஆவி... பழைய ஏற்பாட்டில் இருப்பதை கூட சரியாக வாசித்து சொல்லாமல் தப்புதப்பாகவே கூறும்.

--------------------

8.யாக்கோபின் அடக்கத்தளம் பற்றி மாற்றி பேசுதல்.

¹⁵ "அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,"

¹⁶ "அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்."

¹⁷ "ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது," (அப்போஸ்தலர் 7:15-17)

அதாவது யாக்கோபும் கோத்திரபிதாக்களும் சீகேமில் அடக்கம் பண்ணப்பட்டார் என்று இதே ஸ்தேவான் சொல்கிறார்.

உண்மையில் சீகேமின் தகப்பனிடம் யாக்கோபு தான் நிலத்தை வாங்கினார். ஆப்ரகாம் அல்ல. (ஆதி 33:18) ,

 அங்கேயோசேப்பின் எலும்புகளை தான் 470+ வருடங்கள் கழித்து அடக்கம் செய்தார்கள். யாக்கோபை அல்ல!(யோசுவா 24:32) 

ஆனால் ஆப்ரகாம் ஏத்தியனான எப்ரோனிடம் தான் கல்லறைக்காக குகையை வாங்கினார். அங்கு தான் யாக்கோபு அடக்கப்பட்டார்.

“"அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்."”

  — ஆதியாகமம் 50:13 

அதாவது ஆவி தூண்டி பேசிய ஸ்தேவான் பழைய ஏற்பாட்டை சரியாக படிக்கவில்லை.. அவரிடம் இருந்த ஆவிக்கு கூட இது தெரியவில்லை!

-------------

9.எகிப்துக்குப்போன இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கையை மாற்றி பேசுதல்.

“"பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்."”

  — அப்போஸ்தலர் 7:14 (TBSI)

ஆனால் பழைய ஏற்பாட்டில் 70 பேர் என்றே உள்ளது.(ஆதி 46:27, யாத்திராகமம் 1:5)

இதுவும் ஆவி தூண்டி பேசிய ஸ்தேவான் தான் சொல்கிறார்... பாருங்கள் ஆவியின் இலட்சியத்தை!!!

------------------------

10.வரலாற்றை மாத்தி பேசும் ஆவிதூண்டிய ஸ்தேவான்.

⁴⁰ ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;

⁴¹ "அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்."

⁴² "அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,"

⁴³ "பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே."(அப்போஸ்தலர் 7:40-43)

மோசேயின் காலத்தில் மாட்டை வணங்கியதற்காக, ஆமோஸ் காலத்தில் நட்சத்திர கடவுளை வணங்க வைத்ததோடு லின்க் பண்ணுகிறார்.

குறிப்பாக அதில் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோக பண்ணுவேன் (ஆமோஸ் 5:27) என்று உள்ளதை அப்படியே ஆவி தூண்டியதால், குழம்பி "பாபிலோனுக்கு அப்பால் குடிபோக பண்ணுவேன் "(அப்7:43) என்று மாற்றி கூறுகிறார்.

இவர்களது பரிசுத்த ஆவியின் லட்சணம் இது தான்... பழையதை சரியாக வாசிக்கவே மாட்டார்கள்.

-------------

11.மோசேயிடம் சொன்னதை ஆப்ரகாமிடம் சொன்னதாக தப்பாக பேசும் ஆவி தூண்டிய ஸ்தேவான்.

“அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.”

  — அப்போஸ்தலர் 7:7 

ஆப்ராகமிடம் இதை தேவன் சொன்னதாக சொல்கிறார். ஆனால் ஆப்ராகமிடம் மிகுந்த பொருட்களுடன் புறப்பட்டு வருவார்கள் என்று தான் சொன்னார்.

“இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.”

  — ஆதியாகமம் 15:14 .

எனக்கு ஆராதனை செய்வார்கள் என்று இதே விசயத்தை மோசேயிடம் தான் சொன்னார்:

“"அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்."”

  — யாத்திராகமம் 3:12 

இதை கூட மாற்றியே சொல்கிறார்.

--------------------

11.அடிக்கப்படும் ஆட்டை போல இருந்தார். பழைய ஏற்பாட்டை மீண்டும் திரிக்கிறார்.

³² அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

³³ அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.(அப்போஸ்தலர் 8:32-33)

ஏசாயா 53இல் இடம்பெறும் வசனமே இது.

ஆனால் இது இயேசுவுக்கு பொருந்தாது. காரணம், அந்த நபருக்கு சந்ததி காணப்படும். 

அந்த சந்ததியை அவர் ஆயூள் நீடிக்கப்பட்டு காண்பார் என்று அதே ஏசாயா 53:10 இல் தெளிவாக உள்ளது.

பாவிகளால் பாதிக்கப்பட்டு பாவிகளின் இழிசொல்லுக்கு அகப்பட்ட நல்ல மனிதர்களை பற்றியே இவ்வதிகாரம் உவமையாக பேசுகிறது.

அந்த தன் ஆவியை குற்ற நிவாரண பலியாக கொடுக்கும்போது அவர் சாகாமல், ஆயுள் நீடிக்கப்பட்டு தன் சந்ததியை காண்பார்.

ஆனால் இயேசுவுக்கு சந்ததி கிடையாது. 

Zera என்பது மாம்ச சந்ததியையே குறிக்கும்.

தோர் என்பது அல்ல! சோ இயேசுவுக்கு சம்பந்தப்படாத வசனத்தை எத்தியோப்பியர் வாசிப்பார்கள். அதுக்கு பிலிப்பு விளக்கம் வேறு தப்பு தப்பாக கொடுப்பாராம்.

----------------------

12.தீர்க்கதரிசிகள் கூறாததை கூறியதாக கூறுதல்

“அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.”

  — Acts 10:43 (TBSI)

இப்படி பழைய ஏற்பாட்டில் எங்கே உள்ளது??

------------_----

13.தாவீது பேரில் மீண்டும் திரித்து பேசும் பவுல்.

³² "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,"

³³ இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

³⁴ இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.

³⁵ "அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது."

³⁶ "தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்."

³⁷ தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. (அப்போஸ்தலர் 13:32-37)

முதலில் "நீர் என்னுடைய குமாரன். இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன்" சங்கீதம் 2:7 தாவீதிடம் தேவன் சொன்னதாகும்.

அதாவது அதிலேயே, "அவர் என்னை நோக்கி சொன்னார்" என்றே இருக்கிறது. ஆகவே முதலாவதே பொய்.

இயேசுவை எழுப்பியதால் , இவர்களும் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டார்கள் என்று பவுல் இங்கு கதைவிடுகிறார்.

மீண்டும் தாவீது இறந்ததால் அழிவை கண்டதாகவும், இயேசு எழுந்து விட்டதால் அழிவை காணவில்லை என்றும் கதைவிடுகிறார்.

தாவீது இறந்தாலும், தீர்க்கதரிசி எவர் இறந்தாலும் தேவனிடம் பரலோகத்தில் உயிரோடு தான் இருப்பார்கள்..

இயேசுவை சந்திக்க எலியாவும் இறந்துபோன மோசேயும் வந்ததாக இதை எழுதிய அதே லூக்கா எழுதுகிறார். (லூக்கா 9:30)

இதே போன்றே ஆப்ரகாம் பரலோகத்தில் இருப்பதாகவும் , அவரது மடியில் லாசரு இருந்ததாகவும் இயேசு சொன்னதாக லூக்கா எழுதியுள்ளார் (லூக்கா 16:23)

அழிவை காணவொட்டீர் என்பது இழிவான மரணத்தை விட்டு பாதுகாப்பதையே குறிக்கும்.

ஆனால் இவர்கள் நம்பிக்கைப் படி இயேசு இழிவான மரணத்தை சந்தித்தார். அதாவது அழிவை கண்டுவிட்டார்..  

அழிவை கண்டவரை அழிவை காணாதவர் என்று சித்தரிப்பது திரித்து பேசுவதாகும்.

------------------------------

14.எகிப்திலிருந்து புறப்பட்டது முதல் தாவீது வரை உள்ள காலத்தை தப்பாக சொல்லும் பவுல்

¹⁸ "நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,"

¹⁹ "கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து,"

²⁰ பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

²¹ அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பதுவருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.

²² "பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்."(அப்போஸ்தலர் 13:18-22)

அதாவது 40 வருடம் வனாந்தரத்தில் அலைதல்

பிறகு 450 வருடம் சாமுவேல் வரை 

பிறகு 40 வருடம் சவுல் ஆட்சி. 

பிறகு தான் தாவீது வருகிறார். ஆக 40+450+40= 530 வருடங்கள்.

ஆனால் 1 இராஜாக்கள் 6:1 ஆனது, எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து சொலமோன் ராஜாவானதுவரை 476 வருடங்கள் என்கிறது. (480வது வருடம் சொலமோன் ராஜாவாகிய 4வது வருடம்).

தாவீது 40 வருடம் ஆண்டார். ஆகவே தாவீது ராஜாவாகும்வரை உள்ள காலம் வெறும் 436 வருடங்கள் ஆகும் .

ஆனால் பவுல் பரிசுத்த ஆவி தூண்டி 94 வருடங்களை கூட்டி சொல்கிறார்..

ஆவி தூண்டினாலே பழைய ஏற்பாட்டில் குழம்பி விடுவார்கள்.

----------

15.ஏதோம் என்பதை ஆதாம் (மனிதன்) என்று ஆவி தூண்டி தப்பாக வாசிக்கும் யாக்கோபு

¹⁶ "எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,"

¹⁷ "நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது."

(அப்போஸ்தலர் 15:16-17)

மனுசரில் (ஆதாமில்) என்று இவர் வாசிக்கிறார். ஆனால் உண்மையில் ஏதோமில் என்றே உள்ளது

¹¹ "ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,"

¹² "அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்." (ஆமோஸ் 9:11-12)

யூத ரபீயிடம் ஒழுங்காக க்ளாஸ் போயிருந்தால், ஏதோமை ஏதோம் என்று வாசித்திருப்பார்கள். இவர்களோ ஆதாம் என்று வாசித்து ஒட்டுமொத்த அர்த்தத்தையே மாற்றுகிறார்கள்

இவர்கள் தப்பாக வாசிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்களோ என்பதை நான் அறியமாட்டேன்.





அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...