1 & 2 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல

 1 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல

—————-


இது பேதுரு கிறிஸ்தவத்தை ஏற்ற பரதேசிகளுக்கு எழுதியதாக கருதப்படுகிறது (1:2)



1.பிதாவே தேவன் என்பதே இவரது கருத்து


² “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.”


³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; (1 பேதுரு 1:2-3)

——–_—–



2.இயேசு என்பவர் ஆட்டுக்குட்டி.. தேவன் வேறு அவர் வேறு என்பதே இவரது கொள்கை


¹⁹ குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

²⁰ “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.”


————


3.இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி மகிமையை கொடுத்தது தேவன் தான் என்பதே அவரது கருத்து


²¹ “உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.”(1 பேதுரு 1:21)


———–.


4.இயேசு மூலமாக தேவனுக்கு பலி செலுத்துவதற்காம்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு



“”ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.””

— 1 பேதுரு 2:5


————


4.கர்த்தராகிய தேவன் வேறு இயேசு வேறு…


இயேசு இவர்களை தேவனிடம் சேர்ப்பதற்காக கொலை செய்யப்பட்டாராம்.


இப்போது தேவனது வலது பக்கத்தில் இருக்கிறாராம்.. அதாவது தேவன் வேறு இயேசு வேறு.


¹⁵ கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.


¹⁸ “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.”


²² “அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. (1 பேதுரு 3: 15,18,22)

—————-


6.எல்லாவற்றிலும் இயேசு மூலமாக தேவன் மகிமைப்படும்படி செய்யவேண்டும் என்கிறார். அதாவது இயேசு வேறு தேவன் வேறு என கூறுகிறார்



¹¹ ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து  மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (1 பேதுரு 4:11)


———


7.இயேசு என்பவர் வேறு தேவன் வேறு.. என்று மீண்டும் வேறுபடுத்தி கூறுகிறார்

.


¹⁰ “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;” (1 பேதுரு 5:10)

—————-


2 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல

———————————————————

இது பேதுருவால் எழுதப்பட்ட இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது



1.இயேசுவை தேவன் என இவர் சொல்கிறாரா?


¹ “நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:”

² தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. (2 பேதுரு 1:1-2)



இரண்டாம் வசனத்திலேயே தேவன் வேறு இயேசு வேறு என தெளிவாக கூறும்போது, முதலாம் வசனத்தில் யேசுவை தேவன் என கூறியிருப்பார் என கருதுவது மடத்தனமாகும்.


ஆகவே முதலாம் வசனம் 2 தெசலோனிக்கேயர் 1:11(12) இல் கூறப்பட்டது போன்ற வசன அமைப்பே இங்கும் உள்ளது. ஆனால் அங்கே சரியாக இயேசு வேறு தேவன் வேறு தெளிவாக மொழிபெயர்த்திருப்பார்கள்.



ஆகவே முதலாம் வசனம், “நம் தேவனுடைய நீதியாலும், இரட்சகராக இயேசு கிறிஸ்துவுடைய நீதியாலும்” என்றே அமைய வேண்டும்.


ஏனெனில் அடுத்த வசனத்திலேயே தேவன் வேறு, இயேசு வேறு என வேறுபடுத்தி எழுதியிருக்கிறார்


அப்படி இருக்க, இயேசுவை தேவனென அவர் சொன்னதாக சொல்வது அவரது கருத்தை திரிப்பதாகும்


————


2 பிதாவே தேவன்.. இயேசு அவரது பையன் என்பதே இவரது கருத்து


¹⁷ “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,”


¹⁸ “அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.” (2 பேதுரு 1:17-18)


அதாவது இயேசு வேறு தேவன் வேறு



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்