2 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல
2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல
இது பவுல் கொரிந்தியருக்கு எழுதிய அடுத்த கடிதமாக கருதப்படுகிறது
கிறிஸ்தவர்களுடைய பிதாவும் இயேசுவும் பிதாவுமான நபர் தான் கடவுளாம். சோ இயேசு வேறு.. பிதா என்ற தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை
² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.”
³ “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.” (2 கொரிந்தியர் 1:2-3)
தேவன் என்பவர் தான் கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவர்களை ஸ்திரப்படுத்தி , பவுலையும் அவரது குழுவையும் அபிசேகம் பண்ணியவராம்.. சோ இயேசு வேறு தேவன் வேறு
²¹ “உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.” (2 கொரிந்தியர் 1:21)
3.சாத்தானை கூட பிரபஞ்சத்தின் தேவன் என கூறும் பவுல், இயேசுவை மட்டும் கடவுளென சொல்வதேயில்லை.. மாறாக பிதா என்பவரையே தேவன் என்கிறார்
⁴ “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:4)
4.இயேசுவை எழுப்பியவர் இயேசு மூலமாக பவுலையும் கிறிஸ்தவர்களையும் எழுப்புவாராம். அதாவது இயேசு வேறு.. எழுப்புபவரான தேவன் வேறு.
…
¹⁴ “கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம். (2 கொரிந்தியர் 4:14)
5 . தேவன் வேறு இயேசு வேறு.. தேவனானவர் இயேசு மூலமாக பவுலையும் கிறிஸ்தவர்களையும் தன்னோடு ஒப்புரவாக்கினாராம்.
…
¹⁸ “இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.”
¹⁹ “அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.” (2 கொரிந்தியர் 5:18-19)
6.தேவன் இயேசுவை பாவமாக ஆக்கினாராம்… சோ பாவமாக்கிய தேவனும் பாவமாக்கப்பட்டவரும் வேறு வேறு.. சோ இயேசு வேறு தேவன் வேறு.
…
²¹ “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)
7.தேவன் தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்..
”அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். “”
— 2 கொரிந்தியர் 6:18
இயேசு என்பவர் தேவனால் கர்த்தராக ஆக்கப்பட்டவர் -அப்போஸ்தலர் 2:36
8.என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவன் என்பவர் இயேசுவின் பிதா என்பதே பவுலின் நம்பிக்கை
“”என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.””
— 2 கொரிந்தியர் 11:31
இயேசு பலவீனத்தால் இறந்தார்.. ஆனால் தேவனது வல்லமையால் பிழைத்திருக்கிறாராம். இதேபோல் பவுலும் குழுவும் பிழைத்திருப்பார்களாம்.
⁴ “ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.” (2 கொரிந்தியர் 13:4)
சோ தேவன் வேறு இயேசு வேறு.
—————–
தேவன் என்பவர் வேறு.. பரிசுத்த ஆவி என்பவர் வேறு.. இயேசு என்பவர் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை.
அதாவது இயேசுவும் பரிசுத்த ஆவியும் தேவனல்ல.. வேறொருவரே தேவன் என்பதே அவரது கருத்து
…
¹⁴ “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். ” (2 கொரிந்தியர் 13:14)
கருத்துகள்
கருத்துரையிடுக