1 & 2 யோவான் படி இயேசு கடவுள் அல்ல
1 யோவான் படி இயேசு கடவுள் அல்ல
—————————-
இது யோவான் என்பவரால் எழுதப்பட்ட கடிதம்
இயேசு என்பவர் பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார்.. சோ அவர் பிதாவுக்கு சமமானவரல்ல!
¹ “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.”
(1 யோவான் 2:1)
————
…2. இயேசு என்பவர் ஜீவ வார்த்தை, அவர் பிதாவிடமிருந்து வந்ததாக இவர் கருதுகிறார்
¹ “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.”
² “அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.”
³ “நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.” (1 யோவான் 1:1-3)
———
3 இயேசு என்பவர் அந்த தேவனுடைய பையன் என்பதே இவரது கருத்து
⁷ “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)
————
4.. பிதாவே தேவன் என்பதே இவரது கருத்து
¹ நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. (1 யோவான் 3:1)
———
5.இயேசு என்பவர் அந்த தேவனது பையன் என மீண்டும் வேறுபடுத்தி கூறுகிறார்.
…
²³ “நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.”(1 யோவான் 3:23)
—————-
தேவன் என்பவர் பிதா தான் என்பதே இவரது கருத்து.. இயேசு என்பவர் அவருடைய ஒரே பையன் என்பதேயாகும்… சோ இயேசு வேறு தேவன் வேறு
¯
⁹ தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
¹⁰ “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.”(1 யோவான் 4:9-10)
——————
7.தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை என்கிறார்
அதாவது தேவன் எனப்படுபவர் வேறு இயேசு வேறு… அந்த தேவனை யாருமே கண்டதில்லை என்பதாகும்.
…
¹² தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
(1 யோவான் 4:12)
———–
8.இயேசுவை ரட்சகராக அனுப்பியதே தேவனாகிய பிதா, அவர் தேவனது பையன் என்பதே இவரது கருத்து…. அதாவது இயேசு வேறு தேவன் வேறு
…
¹⁴ பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
¹⁵ “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.”(1 யோவான் 4:14-15)
———————–
5:7 திரித்துவக்தை பேசுகிறார்?
.
⁷ “(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;”
⁸ “பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.”(1 யோவான் 5:7-8)
பிதா , வார்த்தை, ஆவி என்பன ஒன்றாக இருக்கிறார்கள் என்பது ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்பதல்ல!
எப்படி ஆவி, ஜலம், ரத்தம் ஆகியன ஒரே பொருள் இல்லையோ அதே போன்று தான்.
பிதா ஆவி வார்த்தை என்பன ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம்.
இது குறித்து தனியாக பதிவிடுகிறேன்
——-
10.மீண்டும் யேசு வேறு தேவன் வேறு.. இயேசு அவரது பையன் என்கிறார்
⁹ “நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.” (1 யோவான் 5:9)
————
.
11.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என கூறுகிறார்.
.
¹¹ “தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.”
¹² “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.” (1 யோவான் 5:11-12)
—————–
12.இயேசுவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாக இருக்கிறார் என இவர் சொல்கிறாரா?
…
¹⁹ “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.”
²⁰ “அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். (1 யோவான் 5:19-20)
இந்த புத்தகம் முழுவதும் பிதாவையே தேவன் என கூறிவிட்டு, இயேசுவை குமாரன் என்று கூறிவிட்டு, கடைசியில் இயேசுவை இவரே மெய்யான தேவன் என சொன்னால், அது முற்றிலும் முரண்பட்டதாக இருப்பதோடு, பிதா தேவனல்ல என கூறுவதாகும்…
இவரே மெய்யான தேவன் என கூறும்போது, இவர் அல்லாதவர் மெய்யான தேவன் அல்ல என தெளிவாகிறது.. ஆகவே பிதா தேவனல்ல என வரும். அதனால் இது முரண்பட்ட கருத்தாக அமையும்.
யோவான் சுவிசேசத்தில் பிதா ஒருவரே மெய்யான தேவன் என இயேசு கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 17:3). அப்படி எனின் பிதா தவிர மற்றவர்கள் மெய்யான தேவன் அல்ல என்பதாகும்.
ஆகவே 1 யோவான் 5:20 இலுள்ள இவரே என்பது இயேசுவை குறிக்காது.
மாறாக 5:19 இல் தேவனால் இவர்கள் உண்டாயிருப்பதாக சொல்லி, 20வது வசனத்தில் அந்த தேவனுடைய பையன் வந்து இவர்களுக்கு புத்தியை கொடுத்ததாகவும், அவருடைய பையன் சத்தியமுள்ளவர் என்றும் அவரது பெயர் இயேசு கிறிஸ்து என்றும் கூறுகிறார்.
அதன் பின்னர் தான், இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாக இருக்கிறார் என்கிறார்..
இங்கே உள்ள இவரே (houtos) என்பது மிக சமீபத்தில் கூறப்பட்டவரையே குறிக்க வேண்டிய அவசியமில்லை!
உதாரணமாக அப்போஸ்தலர் 7:18-19 இல், யோசேப்பை அறியாத ராஜா ஒருவன் எழுப்பியதாகவும், அவன் நம் ஜனங்களை வஞ்சனையாக நடத்தி , உபத்திரவப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இங்கே 7:18 இல் கடைசி வார்த்தை யோசேப்பு என்பதாகும். 19ம் வசனம் houtos என்றே ஆரம்பிக்கிறது. அது சமீபமாயிருக்கும் வார்த்தையையே குறிக்க வேண்டுமாயின் யோசேப்பு தான் ஜனங்களை வஞ்சனையாக நடத்தி உபத்திரவப்படுத்தினார் என்று அர்த்தம் வரும்.
ஆகவே அது மிகவும் சமீபத்தில் இருப்பதை குறிக்கவேண்டியதில்லை.. சொல்லவரும் மொத்த கருத்தையும் வைத்தே அதை தீர்மானிக்க வேண்டும்.
ஆகவே மெய்யான தேவன் என கூறப்படுவது இயேசுவாக இருக்க முடியாது. ஏனெனில் இயேசு வேறு தேவன் வேறு என இதே கடிதத்தில் 4:9-10,14-15 , 5:9, 5:11 வேறுபிரித்து கூறியுமுள்ளார்.
அதேபோல தேவனை யாரும் ஒருபோதும் கண்டதில்லை (4:12) என கூறியுமுள்ளார். ஆனால் இயேசுவை குறித்து, அவரை தொட்டு பார்த்ததாகவும், கண்ணால் கண்டதாகவும் ஆரம்பத்திலேயே எழுதுகிறார் (1:1-3).
சோ 5:20 இயேசுவை மெய்யான தேவன் என சொல்லவில்லை !!! மாறாக இயேசு யாரை ஒரே மெய்யான தேவன்-யோவான் 17:3 என சொன்னாரோ அவரையே குறிக்கும்… இயேசுவை அல்ல!!!
———————————-
2 யோவான் படி இயேசு கடவுள் அல்ல
——————————-
இது யோவான் எழுதின இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது
1.தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கருத்து.. அதாவது பிதாவே தேவன் ன்பதாகும்.
³ “பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.” (2 யோவான் 1:3)
——
2.தேவன் வேறு கிறிஸ்து வேறு என்பதே இவரது கருத்து
…
⁹ “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். (2 யோவான் 1:9
கருத்துகள்
கருத்துரையிடுக